Friday, June 10, 2005

சோதினையுடன் விடைபெறுகிறேன்.

பிள்ளைகளுக்கு summer சோதினை நடக்கிறது. சோதினை முடிந்தவுடன் எங்காவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு செல்லலாம் என்று எண்ணம். இனி விசா கூட தேவையில்லையாம் பக்கத்து நாடுகளுக்கு போவதற்கு. (எப்ப அது நடைமுறைக்கு வருதோ தெரியவில்லை)

ஆகவே அடுத்த வாரத்திலிருந்து நான் சோதினையுடன் விடைபெறுகிறேன்.

இது தற்காலிக விடைபெறுதல் தான். மற்றம் படி.. தற்போது இணையத்தில் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த.. என்னைச் சிலரோடு இணைக்க நடக்கும் முயற்சிகளுக்கு அஞ்சி வேதனையுடன் விடைபெறவில்லை.

உண்மையில் அது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அது எனது பிரச்சனையும் இல்லை.
நன்றி

6 comments:

துளசி கோபால் said...

விடுமுறைக்குச் சந்தோஷமாப் போயிட்டு வாங்க!!!
வந்ததும், போய்வந்த நாட்டைப் பத்தி எழுதுங்க.

இதையெல்லாம் வீ மஸ்ட் டு.
என்றும் அன்புடன்,
துளசி.

Anonymous said...

துளசி.

இங்கே இணையத்தில வசந்தன் தான் மஸ்ற்டு என்றும் சயந்தன் தான் வசந்தன் என்றும் ஆகவே சயந்தன் தான் மஸ்ற்டு என்றும் நிறையவே ஆர்க்யூமென்ட்டுகள் நடக்குது. அது தெரியாதா உங்களுக்கு..

துளசி கோபால் said...

ஆமாம், நானும் சில விஷயங்கள் 'கேள்விப்பட்டேன்'

இது ஒரு விளையாட்டா? நம்ம புத்தக மீமீ போல!

ஆனாலும் சொல்றேன் இது கொஞ்சம் கூட நல்லால்லே!
இப்படி மத்தவங்க பேருலே அசிங்கமான பின்னூட்டம் விடறது(((((((

கொழுவி said...

என்னங்க துளசிக்கா.. நான் எங்கேங்க அசிங்கமா பின்னூட்டம் விட்டேன்..? அட போங்கக்கா.. நீங்களே இப்டி சொன்னதுக்கப்புறம் எனக்கே ஒரு மாதிரி போயிடுத்து.
நான் என் பேரில தான் நாகரீகமா பின்னூட்டம்லாம் விடுறேன்...
ஆமா இதுக்கு முன்னாடி கூட நான் வைச்சிருந்த ஒரு பதிவில யாரோ ஒரு மனிதன் அசிங்கமா எழுதிட்டான் என்கிறதுக்காக.. (எல்லாரும் அந்த பின்னூட்டத்தை தான் தூக்குவாங்க..) நான் அந்த வலைப்பதிவையே தூக்கிட்டு புதுசா இதை தொடங்கினேன். என்னை போய் இப்பிடி சொல்லிட்டீங்களே..

:-( (நான் அழுகிறேன்)

மத்தும் படி வசந்தனும் சயந்தனும் ஒண்ணு இதை அறியாதவர் வாயில மண்ணு

துளசி கோபால் said...

ஐய்யோ, நான் உங்களைச் சொல்லலை. அந்த பின்னூட்டம் விட்ட ஆக்களைச் சொல்றேன்.

அது கிடக்கட்டும்,

மெய்யாலுமா வசந்தனும் சயந்தனும் ஒண்ணு என்கிறது?

இப்பத்தானே சயந்தன் அவரோட பதிவுலே இதைப் பத்தி எழுதியிருக்கார்.

Anonymous said...

அனோனிமாசு சொல்வதாவது:
|துளசியம்மா மற்றவர்களைப் புறம் சொல்லலாமா?|