Wednesday, October 04, 2006
கருணாநிதியும் சால்ஜாப்புக் கதைகளும்
இந்திய பிரதமரை இந்தா சந்திக்கிறம் அந்தா சந்திக்கிறம் எண்டு செய்தியள் வந்துது. பிறகு இல்லையாம் எண்டு வந்திட்டினம். ஏன் பிரதமர் சந்திக்க வில்லையெண்டு தெரியவில்லை. ஒருவேளை பிரதமரைச் சந்திக்க விருப்பதாக தமிழ்க் கூட்டமைப்பினர் சொல்லியிருந்ததும் வெறும் சால்ஜாப்புத் தானோ ?
கருணாநிதி அவர்கள் தெளிவாச் சொல்லிட்டார். கூட்டமைக் காரர் தன்னை சந்திக்க முயற்சித்ததா சொன்னது வெறும் சால்ஜாப்பு எண்டு. ஒருத்தர் ஒருத்தரை சந்திக்கிறதும் சந்திக்காமல் விடுவதும் அவையின்ரை விருப்பம் எண்டிட்டு இருந்தாலும் கருணாநிதி அப்பிடி சொல்லும் போது கூட்டமைக்குக் காரர் என்ன செய்திருக்க வேணும்?. நாங்கள் கருணாநிதியை சந்திக்க எவ்வாறான முயற்சிகள் செய்தோம் என்பதையும் அந்த ஒவ்வொரு முயற்சிகளுக்கும் எவ்வாறான எதிர்வினைகள் கிடைத்தன என்பதனையும் தெரியப் படுத்தியிருக்க வேணும். ஆனா அவை செய்தது என்ன? எனக்கென்னவோ அவையின்ர பதிலில வார்த்தைக்கு வார்த்தை வழியல் தான் தெரியுது.
பெரியண்ணா நீங்கள் என்னெண்டாலும் சொல்லுங்கோ.. உங்கடை காலைப் பிடிச்சுக்கொண்டுதான் நாங்கள் நிப்பம் எண்ட மாதிரி இருக்கு அவையின்ரை கதையள்.
இதைப்பற்றின கேள்வியொண்டுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் என்னெண்டு வளைஞ்சு நெளிஞ்சு பதில் சொல்லுறார் எண்டு பாருங்கோ.
எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.
நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.
இதன் சாரம்சம் இதுதான். அண்ணை.. எங்களை சந்திக்காமல் விட்டது உங்கடை பிழையில்லை. நாங்கள் வந்து நிண்டதும் உங்களை சந்திக்க கேட்டதும் உங்கடை காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கும். அவ்வளவும் தான். மற்றும்படி பிரச்சனையில்லை. இன்னொருமுறை வாய்ப்புத் தாங்கோ..
ஆனால் கருணாநிதியும் தான் ஏன் கூட்டமைப்பினரை சந்திக்கவில்லையெண்ட உண்மையைச் சொல்லியிருக்கலாம். பின்னையென்ன? அவர் ஒரு முதல்வர் எண்ட பெயரில இருக்க கூட்டமைப்புக்காரர் முதலில அவரிடமெல்லோ போய் குனிஞ்சு விழுந்து வணங்கி ஆசி பெற்று எழும்பியிருக்க வேணும். அதை விட்டுவிட்டு எப்பிடி வைகோவை முதலில சந்திப்பினம்?. அதுவும் வைகோவூடாக பிரதமரை வேறை சந்திக்க முயற்சி செய்தவையாம். இதென்ன வெளிநாடே..? கட்சி வேறுபாடில்லாமல் எல்லாரையும் சந்திக்க..? இங்கை நீங்கள் வைகோவை முதலில சந்திச்சால் நீங்களெல்லாம் அவரின்ரை ஆட்கள்தான்.
உண்மையில கருணாநிதி அவர்களுக்கு நேரமில்லையெண்டதோ அல்லது கூட்டமைப்புக்காரர் சந்திக்க முயற்சிக்கவில்லையென்பதோ இங்கே கவனத்திலெடுத்துக்கொள்ளக் கூடிய விடயங்கள் இல்லை. பட்டென்று நெற்றியடித்தால் போலான காரணம் கூட்டமைப்புக்காரர் முதலில் வைகோவை சந்தித்துக் கொஞ்சிக் குலவியதே. அந்த ஆத்திரத்தில் விளைந்த மூன்றாந்தரத்திற்கும் குறைவான அரசியல்ப் பண்பாடே..
இங்கே கூட்டமைப்புக்காரர் என்ன செய்திருக்க வேணும். முதலில கருணாநிதியைச் சந்திச்சிருக்க வேணும். ஆனா.. அதுக்கு பிறகு அவர்களை வைகோ சந்திப்பாரா எண்டது சந்தேகம் தான்.
எங்கடை சனம் தான் பாவம். கருணாநிதி சபையில இலங்கை அரசுக்கு எதிரா கண்டனத்தீர்மானம் கொண்டு வரும்போது அவரைப் போற்றிப் புகழுவதும் பிறகு சால்ஜாப்பு கதையள் சொல்லும் போது துரோகியெண்டுறதுமா குழம்பி போய் நிக்கினம். அதுவும் சரிதான்.. சனம் தெளிவா எப்பதான் இருந்திருக்கினம்?
Thursday, September 21, 2006
புலிகளுக்கு சீனா இராணுவ உதவி
நானும அப்பிடித்தான். எனக்கும் உந்த ஆய்வுகள் அரசியல் வியாக்கியானங்கள் செய்யிறதெண்டால் சரியான ஆசை. இப்ப சீனா புலிகளுக்கு உதவி செய்யிறதையும் அது ஏன் உதவி செய்யுது எண்டதையும் அதுக்கு பின்னாலை இருக்கிற பிராந்திய நலன்களையும் விரிவா உங்களுக்கு சொல்ல இருக்கிறன்.
முதலில இந்தப் படத்தைப் பாருங்கோ. இதில புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் திரு சு ப தமிழ்ச்செல்வன் ஒரு ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். இதைப் பாத்த உடனை சிலர் அரசியல்ப் பிரிவைச் சேந்தவரே ஆயுதம் தூக்கிட்டார். இனி புலிகள் தரப்பில சமாதானம் எண்ட பேச்சுக்கே இடமில்லை எண்டு அறிவு பூர்வமா முடிவெடுப்பினம். அதுவும் தமிழ்நாட்டில வாற உந்த ராணி தேவி மாதிரியான புத்தகங்கள் இப்பிடியும் தலைபெழுதலாம் - ஆயுதம் ஏந்தினார் புலிகளின் அரசியல்த்துறை தலைவர். புலிகள் தரப்பில் இனி பேச்சுக்கு இடமில்லை
இந்தப்படத்தில தமிழ்ச்செல்வன் வைச்சிருக்கிற ஆயுதம் என்ன வகையைச்சோந்தது.. இதை முதலில ஆராய்வம். இது PF-89, a portable 80mm light anti-tank weapon அதாவது இது ஒரு டாங்கி எதிர்ப்பு ஆயுதம். சோவியத்தின்ர RPG -7 வகைக்கு மாற்றீடாக செய்யப்பட்டிருக்கெண்டு ஒரு தகவல் சொல்லுது. இதைப்பற்றி இன்னும் தேடுவம் எண்டு வெளிக்கிட எனக்குக் கிடைத்தது இந்தப்படம்.
படத்தில பாருங்கோ.. சீன எழுத்தில ஏதோ எழுதிக்கிடக்கு. இதுதான் என்ரை ஆராய்ச்சியை மேலும் தூண்டினது. இது சீன ஆயுத வகைதான் எண்டதை உறுதிப்படுத்தினது இந்த தளம். அது மட்டுமில்லை.. இன்னும் ஆச்சரியத்தை தந்த தகவல் என்னெண்டால் இந்த வகை ஆயுதம் இந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதிச் செய்தியின் படி அத் திகதிக்கு கிட்டவா அறிமுகப்படுத்தியிருக்கிறது சீன இராணுவம்
March 1, 2006: The Chinese army has begun issuing the PF-89, a portable 80mm light anti-tank weapon, to replace obsolete Soviet-era RPG-7 type weapons
ஆக.. இந்த வருட ஆரம்பத்தில அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆயுதம் வருட முடிவிற்குள் புலிகளிடம் வந்தது எப்படி?
ஆம் சீனா.. புலிகளுக்கு இராணுவ உதவிகளை வழங்குகிறது. இப்போது இதன் பின்னணிகளைப்பார்ப்போம்.
ஆசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவிடம் பகைத்துக்கொண்ட புலிகள் அந்த உறவினை இனி ஒட்ட முடியாது என்று கருதுகின்றனர். இந்நிலையில் 2020 களில் உலக வல்லரசாக வருவதற்குரிய வகையில் இரகசியமாய் செயற்படும் சீனாவுடன் உறவுகளைப் பேண புலிகள் விரும்புகின்றனர். இதன் மூலம் வல்லரசு ஒன்றின் ஆதரவும் துணையும் அவர்களுக்கு கிடைக்கிறது.
சிறிலங்கா இந்திய ஆதரவு நிலையினை எடுத்ததாகவே சீனா கருதுகிறது. ஆகவே அந்த நாட்டின் அரசுக்கு எதிராகப் போராடும் புலிகளுக்கு ஆதரவு நிலையினை எடுத்துள்ளது.
இனி இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம்.
அமெரிக்காவும் பாகிஸ்தானும் சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவி வழங்குவது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் என்பதால் முன்பொருமுறை யாரோ ஒருவர் இந்தியாவே சிறீலங்காவிற்கு ஆயுத உதவிகள் வழங்க வேண்டும் என வலைப்பதிவில் சொல்லியிருந்தார்.
அதே போலவே புலிகளுக்கு சீனா உதவி வழங்குவது என்பதும் இந்திய இறையாண்மையை பாதிக்கின்றமையால் இந்தியா அந்த உதவியினை தடுத்து விட்டு தானே புலிகளுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்.
இந்த நேரத்தில் ... பிராந்தியமாவது வல்லரசாவது.. காசிருந்தா எங்கை குடுத்தும் ஆயுதம் வாங்கலாம் எண்ட உண்மை எனக்கு உறைக்க.. அது புலிகளால் முடியும் என்பதும் தெரிய வர.. என்னுடைய ஆய்வை இத்துடன் முடிக்கிறேன்.
அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து றொக்கெட் லோஞ்சர்கள் ஆந்திராவுக்கு போகாமல் இராமேஸ்வரப்பக்கம் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கற்பனையுடன்..
Tuesday, September 19, 2006
ஈழப்போரில் தமிழக வீரன்
கருமபுலி லெப். செங்கண்ணன்.
சாத்தூர் சிவகாசியை சேர்ந்த இவன் 1993 நவம்பர் 11ம் திகதி பலாலி இலங்கை இராணுவ படைத்தளத்தினில் நடந்த ஊடுருவிய கருமபுலித்தாக்குதல் ஒன்றில் வீரகாவியமானான்.
அந்த இளைய வீரனுக்கு ஈழத்தமிழினத்தின் வீர வணக்கங்கள்.
Monday, September 18, 2006
திலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ
திலீபனின் இறுதி நேர காட்சிகள் உள்ளடங்கிய வீடியோ பதிவு இது. அவரின் உண்ணா நோன்பிற்கான பின்னணியை விளக்குகிறது இப்படத்துண்டு.
"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."
இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் - திலீபன்
உலகிற்கே அகிம்சையை உணர்த்திய நாடு இந்தியா அந்த இளைஞனை அப்படி அநியாயமாக சாக விடும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.
12 நாட்கள் ஒரு சொட்டுத்தண்ணீரும் வாயில் படாமல் உடல் வருத்தி உயிர் உருகி அணுவணுவாக அவன் மரணித்த போது அவனுக்கு வயது கனவுகள் சுமக்கும் இருபதுகளே..
வெள்ளையனே வெளியேறு என்றது போல இந்தியனே வெளியேறு என அவன் ஒருபோதும் கேட்டதில்லையே..
அவன் என்ன தான் கேட்டான்?
அமைதி காக்க வந்தவர்களே.. தயவு செய்து அமைதி காருங்களேன் என்று தானே விண்ணப்பித்தான்..
அதற்காகவா இந்த விலை?
அதற்காகவா இந்த துயரம்?
வன்னியனின் இப்பதிவில் திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள் என்ற பதிவு இடம் பெறுகிறது. பன்னிரண்டு நாட்கள் திலீபனுடன் அருகிலேயே நின்றிருந்த மு.வே.யோ வாஞ்சிநாதன் அப்போ நடந்தேறிய அந்த துயரத்தை தன் எழுத்துக்களில் சொல்லியிருக்கின்றார். தான் நேசித்த மக்களுக்காக ஒரு இளைஞன் சொட்டுச் சொட்டாய்ச் செத்தானே அவனைப் படியுங்கள்
Friday, September 15, 2006
ஈழத்தமிழக திரைப்பட புகைப்படங்கள்
Wednesday, September 13, 2006
ஈழ - தமிழக உருவாக்கத்தில் - திரைப்படம்
இதோ மிக்க தத்துருபமாக வெளிவந்து விட்டது அந்த திரைப்படம் ஆணிவேர். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் (சச்சின் பட இயக்குனர்) திரைப்படத்தை இயக்க நந்தா மற்றும் குடைக்குள் மழை கதாநாயகி (யாராச்சும் பெயர் சொல்லுங்க) ஆகியோருடன் இன்னும் பல தமிழக- ஈழ கதை மாந்தர்கள் படத்தில நடிச்சிருக்கிறார்கள்.
இந்த படம் பண்ணுவதாக கேள்விப்பட்டு நந்தா இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்து இப்படத்தில் தனக்கொரு வாய்ப்புக் கொடுக்குமாறு கேட்டதாக இயக்குனர் ஒரு செவ்வியில் சொல்லியிருந்தார்.
ஆணிவேர் வெளிநாடுகளில் இம்மாத இறுதியில் வெளிவருகிறது. தமிழகத்தில் தணிக்கை செய்யப்படுமா அல்லது தடை செய்யப்படுமா என தெரியவில்லை. ஆயினும் இது புலிகளின் கதை அல்ல மக்களின் கதை என்கிறார் இயக்குனர்.
இங்கே இப்படத்தின் இரண்டு முன்னோட்டங்களை இணைக்கிறென். வீடியோ வடிவிலேயே பார்க்கலாம். தினம் தினம் செத்துப் பிழைக்கின்ற ஈழ மக்களின் வாழ்வினை ஆணிவேர் சரியாக பதிவு செய்திருக்கிறது என நம்பலாம்.
ஒரு வேளை இந்த திரைப்படமும் இணையங்களில் வெளிவரலாம். அப்போது இணையங்களில் புதிய படங்களை புலிகள்தான் வெளியிடுகிறார்கள் என்ற கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் முகங்களில் கரியை பூசட்டும்.
Tuesday, September 12, 2006
எல்லாருக்கும் இன்னொரு வணக்கம்
சரி திரும்ப வரேக்கை புதுசா வருவமெண்டுதான் ஏதோ என்ரை அறிவை பாவிச்சு வலையையும் புதுப்பிச்சிருக்கிறன். பாருங்கோ இனி தொடர்ந்து பொளந்து கட்டுவன்.. அடுத்த பதிவே பாருங்க ஒரு புலனாய்வுப் பதிவு தான்..
Sunday, July 02, 2006
நாங்க தான் செய்தம் ! ஆனா வருந்தக்கூட மாட்டோம்
இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் பாகம் 1
இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் பாகம் 2
யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 1
யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 2
யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 3
யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 4
--இன்னும் வரும் --
Tuesday, June 20, 2006
நான் எப்பிடியோ நீச்சலடிச்ச 'ஆறு'கள்
அந்தக்காலம் முதலே என்னை யாருமே கண்டு கொள்வதில்லை. அதனால் என்ன? சொல்லிச் செய்வர் மனிதர் சொல்லாாமல் செய்வர் பெரியர் எண்டதை மனசில வைச்சு -
எப்படியோ நான் நீச்சலடிச்ச ஆறுகள்
1- வழுக்கியாறு - யாழ்ப்பாணம்
2- பறங்கியாறு - மணலாறு
3- பேராறு - முத்தையன் கட்டு
4- பாலியாறு - வன்னி
5- பாலாறு - மன்னார்
இவ்வளவும் தான் எப்பிடியோ நான் நீச்சலடிச்ச ஆறுகள். என்ன 5 ஆறுதான் கிடக்கு ஆறாவது ஆறு எங்கையெண்டு கேக்கிற ஆக்களுக்கு -
வடிவா பாருங்கோ -
பறங்கியாறு - மணலாறு எண்டு இரண்டு ஆறு வருகுது -
இனி நான் அழைக்கும் ஆறு நபர்கள்
சிறீரங்கன்
ஜனநாயகம்
கருணாநந்தன்
வசந்தன்
சோ.தமிழவன்
ஈழநாதன்
Friday, June 16, 2006
தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி
வாய் திறப்பார் யாரும் இல்லை!
எங்களின் அழுக்குரல் யாரையும் எட்டுவதாய் இல்லை!
இந்தப் பாடல் கடல் தாண்டி சோகம் சுமந்து வருகிறது. சோதரரின் காதுகளில் எம் துயரச்செய்தி கொண்டு வருகிறது.
Wednesday, June 14, 2006
பற்றியெரியுது சிறீரங்கன் மனசு
வயிற்றெரிச்சல்கள்!
சிறீரங்கன் ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். இங்கு கிளிக்குக.
கொல்லப்பட்ட வங்காலைப் பிள்ளைகளின் மேல் அரசியல் நடத்தப்படுவதாய் அவர் சொல்கின்ற எங்களின் உணர்வுகள், எங்களின் கோபங்கள், வலைபதிந்த தமிழக உறவுகளின் ஆறுதல்களின் மேல் தனது அரசியலை நடத்தப் புறப்படுகின்றார்.
வருக! வருக!
உங்கள் வயிற்றெரிச்சல்களை வார்த்தைகளாக்கித் தருக!
பிணங்களின் மேல் நின்று தான் அழுகின்றோம் .
என்ன செய்ய?
செத்துப் போன அந்தச் சிறுவன் என்னைத் தேடும் ஆமி என்று எந்த இடத்திலும் எழுதி வைக்க வில்லையே!
தூக்கில் தொங்கிய அந்தச் சகோதரன் என்னைத் தமிழனை வாழ வேண்டாம் என மனைவியும் குழந்தைகளும் கதறுவதாய் எந்த இடத்திலும் எமக்குச் சொல்லவில்லையே..
இது என் கடைசி வார்த்தையென அந்தச் சகோதரி ஒரு சொல்த் தானும் சொல்லவில்லையே!
அவ்வாறெனின் ஆறுதல் சொல்லியிருப்போம்.
அவ்வாறெனில் பாதுகாப்பாய் இருக்க சொல்லிருப்போம்
அவ்வாறெனில் வாழும் உரிமை பற்றி சொல்லியிருப்போம்.
அவ்வாறெனில் சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லியிருப்போம்.
அவ்வாறெனில் இது தான் சாட்டு என்று ஆமிக்கும் அரசாங்கத்துக்கும் ஜனநாயகம் சொல்லித்தந்திருப்போம்.
அவ்வாறெனில் அவர்களின் வாழ்வுரிமைக்காக எங்களின் எழுத்தை நிறுத்தியிருப்போம்.
என்ன செய்ய?
அவர்கள் அப்பாவிகள்.
தங்களை வைத்து அரசியல் பண்ணத் தெரியாதவர்கள்.
இணையமொன்றில் வந்த செய்தியை வைத்து நீங்கள் அரசியல் செய்த போது அது அருவருக்கத்தக்கதாக தெரியவில்லையா?
(அந்தச் செய்தி தவிர்ந்து வேறெவரும் உங்கள் சகலனையோ உங்களையோ மிரட்டவில்லையென்பது உங்களுக்கு தெரிந்தது போலவே இன்னும் சிலருக்கும் தெரியும் . இணையத்தில் செய்தி வந்த பின்னர் மிரட்டல் நாடகத்தினை பொய்யாக அரங்கேற்றி பின்னர் அனுதாபம் தேடி, அதன் பின்னதாக எட்டப்பர் இணையச் செய்தியை பின்னூட்டங்களாக பலருக்கு இட்டு அவர்கள் அவையை மட்டுநிறுத்தி வெளியிடாத சமயம், உங்கள் வலையில் நீங்களாகவே அந்த எட்டப்பர் செய்தியை அநாமதேயமாக வெளியிட்டு அநாமதேயத்திற்கு நன்றி சொல்லி.. ஆஹா அடடா ..இது பற்றி ஆறுதலாக எழுத வேணும் )
உங்கள் உயிர் மீது ஏறி நின்று அழுதது எதற்காக?
புலிகளின் படுகொலைகளின் மீது ஏறி நின்று அழுவது எதற்காக?
உங்களுக்கான அனுதாபம் தமிழ்நாட்டிலிருந்து வரும் போது அதில் எங்கே போயிற்று திராவிட அரசியலின் திரு நோக்கு?
உங்கள் மீது அக்கறையுடன் ஆதரவு தந்த போது என் உயிர் மீது ஏறி நின்று எழுத்துரிமைக்கும் , ஜனநாயகத்திற்கும் இரங்கற்பா பாட வேண்டாம் என்று கவிதை பாடத் தோன்றவில்லையே உங்களுக்கு?
பற்றியெரியும் உங்கள் வயிற்றெரிச்சலின் பின்னுள்ள நோக்கு என்ன?
சிறு சிறு திரி மூட்டி நீவிர் வளர்த்த பேதங்கள் உடைவது கண்டா?
மக்கள் மீதான அனுதாபமும் அக்கறையும் Automatic ஆக புலிகள் பால் செல்லுதல் உணர்ந்தா?
இந்த ஒரு விடயத்தில் புலிகள் பெரும் பேசுபொருளாகினர் என்ற விரக்தியா?
அல்லது
உங்கள் மீது விடுக்கப்பட்ட இணைய அச்சுறுத்தலின் (கவனிக்க இணைய அச்சுறுத்தல் மாறாக சகலையூடானதல்ல) போது உங்களுக்கு வந்த அனுதாபப் பின்னூட்டஙகளை விட அதிகளவான தனிப்பதிவகளும் கூடிய கவனமும் இந்த விடயத்திற்கு வந்ததையிட்ட எரிச்சலா?
அப்படியாயின் அப்படிப்பட்ட ஒரு மனிதரா நீங்கள்
Sunday, June 11, 2006
என்னைத் தேடுது சாவு
தமிழ்ச் சின்னப்பிள்ளையெண்டதை நான் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கு.
ஏனெண்டால் தமிழ் எண்ட படியாலைதான் நான் சாகப் போறனாம். ஆனா எனக்கு அது ஏனெண்டு விளங்கேல்லை. பள்ளிக்குடத்தில எனக்கு கணக்குப் பாடத்தை விட, விஞ்ஞான பாடத்தை விட தமிழ்ப் பாடம் நிறைய விருப்பம். இதனாலை ஏன் சாகப்போறன் எண்டும் இதுக்காக என்னை எதுக்கு அவையள் சாக்கொல்ல வேணும் எண்டும் எனக்கு விளங்கேல்லை.
எனக்கு சாகிறதெண்டால் சரியான பயம். செத்தால் பேயா வந்து அலைவனாம்.
எனக்கு பேயெண்டாலும் சரியான பயம். ஆனால் அம்மா சொல்லுறா பேய்கள் தானாம் உந்தப் படங்களில இருக்கிற மாதிரி மனிசரை கொல்லுமாம். அதோடை அம்மா இன்னொண்டையும் சொல்லுறா..
சாகிறதெண்டால் நான் இப்பவே செத்துப் போக வேணுமாம். ஏனெண்டால் பொம்பிளைப்பிள்ளையா பிறந்த நான் பெரியாளா வளந்த பிறகு பேய் பிசாசுகள் என்னை கதறக் கதறக் கொல்லுமாம். ஆனா என்ரை அம்மா நான் கவலைப் படக் கூடாது எண்ட படியாலை அம்மாவையும் அந்தப் பேய்கள் கொல்லும் எண்டதை சொல்லாமல் மறைச்சுப் போட்டா.
எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். இன்னும் பள்ளிக்குடம் போகேல்லை. கதைக்கவும் மாட்டான். எண்டாலும் அவனும் தமிழன் தானே. அவனை மாதிரித்தான் ஒரு தம்பியை அம்மாக்கும் அப்பாக்கும் இடையில படுத்துக் கொண்டிருந்தவனை நித்திரைப்பாயிலையே வைச்சு கொலை செய்து போட்டாங்கள்.
எனக்கு பயமாக்கிடக்கு. நானும் என்ரை தம்பியும் அம்மாக்கும் அப்பாக்கும் இடையில தான் படுக்கிறனாங்கள். என்ர கனவிலையெல்லாம் என்ர தம்பி குடல் வெளியில தெரிய தூக்கில தொங்கிற மாதிரி வருகுது. அதை நான் அம்மாக்கு சொல்ல அம்மா என்னைக் கட்டிப்பிடிச்சு ஓவெண்டு கத்தி அழுகிறா. ஆனா தம்பி அதைப்பாத்துச் சிரிக்கிறான். அவனுக்கு ஒண்டும் விளங்கேல்லை.. இப்பிடித்தானே அம்மாக்கும் அப்பாக்கும் நடுவில செத்துக்கிடக்கிற அந்தத் தம்பியும் சிரிச்சு விளையாடியிருப்பான். ஒரு வேளை சாகிற நேரத்திலும் ஒண்டும் விளங்காமல் சிரிச்சுக் கொண்டிருந்திருப்பானோ?
எனக்கு சிலது விளங்கிற மாதிரியும் சிலது விளங்காத மாதிரியும் ஒரே குழப்பாமாக்கிடக்கு.
நான் பிறக்கேக்கை இங்கை சண்டை நடந்ததாம். ஆனால் தம்பி பிறக்கும் போது சண்டை இல்லை. அம்மா சொல்லுவா அவனைப் பாத்து நீ அதிஸ்டக்காரன் எண்டு. ஆனா செத்துப் போன இந்த தம்பி பிறக்கும் போதும் சண்டை இல்லாமல் தான் இருந்திருக்கும். அப்ப அவன் ஏன் அதிஸ்டக்காரனா இல்லை. ஒரு வேளை என்ர தம்பியும் அதிஸ்டக்காரனா இருந்து இப்படிச் செத்துப் போடுவானோ? எனக்கு கவலையாக் கிடக்கு.
எனக்கும் அவனுக்கும் சின்னச் சின்ன சண்டையள் வந்தாலும் அவனில நான் நல்ல பாசம். கடவுளே அவன் இந்த மாதிரி செத்துப் போன கோலத்தில இருக்கிறதை என்னாலை கண் கொண்டு பாக்கவே முடியாது.. எனக்கிப்ப அழுகையா வருது.. ஆனா.. தம்பி இப்பிடி செத்துப் போனால் கடைசியா நான் அவனைப் பாக்கத்தானே வேணும். என்ரை தம்பியெல்லோ அவன்?
எனக்கு சாகிறதுக்கு சரியான பயம்தான் எண்டாலும் தம்பி சாகிறதெண்டால் என்னையும் சாக்கொல்லட்டும். ஒரு வேளை என்னப்போலத்தான் தூக்கில தொங்கிற அக்காவும் கேட்டிருப்பாவோ? அவவைப் பாக்க எனக்கு அழுகையா வருது. அவக்கு என்ரை வயசுதானே இருக்கும்.
அவவுக்கும் தன்ரை தம்பியில நல்ல பாசம் வைச்சிருப்பா தானே என்னை மாதிரி!
எனக்கு வடிவாத் தெரியாது. ஆனா கேள்விப்பட்டனான். ஏதோ சில நாடுகளில மிருகங்களை கொன்றால் கூட பொலிஸ் பிடிக்குமாம். நீதி மன்றம் எல்லாம் கொண்டு போவினமாம். ஆனால் இங்கை நாங்கள் குடும்பம் குடும்பமாக் கொல்லுப்படுறம். ஒருத்தரையும் பிடிக்கிறதுமில்லை. ஏன் எண்டும் கேக்கிறதில்லை.
சரி அந்த மிருகங்களாவது சந்தோசமா உயிரோடை வாழட்டும்
நான் ஒரு படம் பாத்தனான். இதில அம்மாக்கும் அப்பாக்கும் நடுவில செத்துக்கிடக்கிற தம்பியின்ர படத்தைப் பிடிச்சுக்கொண்டு வெளிநாட்டில - அது நல்ல வடிவான நாடு - ஒரு தங்கச்சி - அவ நல்ல வடிவான தங்கச்சி - இருந்தவ. அவ குளிர்சட்டையெல்லாம் போட்டு காலுக்கு சொக்ஸ் சப்பாத்து எல்லாம் போட்டிருந்தவ. அவவக்கும் என்ர வயசுதான் இருக்கும். அவ சந்தோசமா இருக்கிறது எனக்கும் சந்தோசமாத்தான் கிடக்கு. ஆனா நாளைக்கு செத்துப் போன என்ரை படத்தையும் அவயள் தூக்கிப் பிடிப்பினமோ எண்டதை நினைக்க பயமாக்கிடக்கு.
அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது எண்டு அப்பா சொல்லுறவர். எண்டாலும் எனக்கு சொல்லாமல் இருக்க முடியேல்லை. அந்த வெளிநாட்டுத் தங்கச்சி மாதிரியே நானும் காலுக்கு சொக்ஸ் சப்பாத்து போட்டு நல்ல உடுப்புப் போட்டு பள்ளிக்குடம் போக வேணும் எண்டு ஆசையாக் கிடக்கு. என்ன செய்ய எல்லாத்தக்கும் முதலில உயிரோடை இருக்கத்தானே வேணும்..
எனக்கு இந்த இடத்தில என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை.. நான் உயிரோடை இருப்பனா எண்டது எனக்கு தெரியேல்லை. உங்களில ஆருக்காவது தெரியுமா ? நானும் தம்பியும் அம்மாவும் அப்பாவும் இன்னும் என்னைப்போல இருக்கிற எல்லாரும் உயிரோடை இருப்பமா?
எனக்கு ஆரிட்டை கேட்கிறது எண்டு தெரியேல்லை . எண்டாலும் கெஞ்சிக் கேக்கிறன் ! எங்களுக்கு உயிர்ப்பிச்சை போடுறியளா?.. தம்பிக்கு கதைக்க தெரியாது. அவனுக்காக நான் கெஞ்சிக் கேட்கிறன்.. எங்களை உயிரோடை வாழ விடுவியளா..?
Friday, June 09, 2006
விரும்பாதவர்கள் வாசிக்க வேண்டாம்
ஒஸ்லோவில் அரசும் புலிகளும் சந்திக்கிறதுக்குப் பிடுங்குப்பட்டு கொண்டிருக்கையில் வீடு புகுந்த பேய்கள் கொலை செய்து வெறிதீர்த்து தூக்கில் தொங்க விட்டுப் போயிருக்கிறார்கள்.
தமிழ்நெற்றின் செய்திகளின் படி மிகத்தெளிவாக நிதானமாக திட்டமிட்டு ஆணுறைகளுடன் அந்தப் பேய்கள் வந்து வெறி தீர்த்து சென்றிருக்கின்றன.
இது இன்னும் இன்னும் தொடரும்! மீண்டும் மீண்டும் தொடரும்!
ஆனாலும் இலங்கையில் அமைதியை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கை அரசினை இந்தியா மெச்சும்.
பயங்கர வாதத்தை ஒழிக்க அமெரிக்கா இலங்கை அரசிற்க துணை நிற்கும்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசின் இதய சுத்தியுடனான அமைதிப் பேச்சுக்களுக்கான அதரவுக்கு நன்றி தெரிவிக்கும்..
ஆனாலும் அல்லைப்பிட்டியிலும் மன்னார் வங்காலையிலும் இன்னும் இன்னும் தமிழர் தேசமெங்கும் நாய்கள் வீடு புகும்!
பேய்கள் பிணந்தின்னும்!
ஆனாலும் அமைதிப்பேச்சுக்களுக்கு இலங்கை அரசு எப்போதும் தயாராக இருக்கும்.
பிறகும்
நாளைய விடியலில் நாமும் தூக்கில் தொங்குவோம் என குழந்தைகள் முன்னிரவில் பாடம் படிப்பார்கள்.
அப்போதும் அரசு பேச்சுக்களுக்கு வரும்படி புலிகளிடம் கேட்கும். அரசோடு சேர்ந்து அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் இந்தியா எல்லொரும் கேட்பார்கள்.
தயவு செய்து தமிழர்களை கொல்ல வேண்டாம் என்பதைக் கூட பேச்சு மேடையில் வந்து கேளுங்கள் என்கிறார்கள்.எங்கள் மக்களை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சத்தான் ஒரே மேடையில் பேச்சா?
இனியென்ன?
செத்துப்போன பிள்ளைகளின் புகைப்படம் ஏந்தி அடுத்த உரிமைக்குரல் நடக்கும். அதற்கடுத்த உரிமைக்குரலில் ஏந்துவதற்கு இன்னொரு பிள்ளை செத்துப் போக தயாராகும்.
போதும் எல்லாம்!
மக்களின் சாவு உலகக் கண்களில் மாற்றத்தை கொண்டு வரப்போவதில்லை.
பேய்களும் நாய்களும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணும் போது மட்டுமே மக்கள் உயிர்களை மறந்து போவார்கள்.
Monday, May 29, 2006
பின்லாந்து உரிமைக்குரல் நிகழ்வு
நன்றி: சங்கதி
Wednesday, May 24, 2006
சர்வதேச சமூகமெண்டால் நாங்கள் தான் மச்சான்
குசினிக்குள்ளை இண்டைக்கு நிறையக் கோப்பைகள் வந்துகொண்டே இருந்தன. சுந்தர மூர்த்தி சரியா களைச்சுப் போட்டான். இந்த வசனத்தில இருந்து அவனை நான் சுந்து எண்டு தான் கூப்பிடுவன். ஏனெண்டால் அவன் அந்தப் பெயரினூடாகவே எல்லாருக்கும் அறிமுகம். சுந்து பக்கத்தில நிண்ட குமரேசன் தனக்கு கோப்பயளைக் கழுவியடுக்க உதவுவான் எண்டு எதிர்பாத்துக்கொண்டு நின்றான். ஆனால் குமரேசு நாளைக்காரோ காது குத்துப் பார்டிக்கு இண்டைக்கே போய் கொத்துரொட்டி போட வேணும் எண்டு போட்டு போயிட்டான். அவன் கொத்து ரொட்டி போடுறதில பெரிய விண்ணன். இங்கை ஆருக்கு கல்யாண வீடெண்டாலும் பிறந்த நாள் விழா எண்டாலும் ஏன் வெடிங் அனிவெர்சிறி எண்டாலும் அவனைத்தான் கொத்து ரொட்டி போட கூப்பிடுறது. அது அவனுக்கு ஒரு சைட் வருமானமும் கூட. ஆனால் இயக்கக்காரரின்ர ஏதாவது எழுச்சி ஊர்வலங்களுக்கும் நிகழ்ச்சியளுக்கும் கொத்துரொட்டி போடேக்கை அவன் ஒரு சல்லிக் காசும் வாங்கிறதில்லை.
சுந்து இப்பவும் கோப்பையளை தேய்ச்சுக்கொண்டிருந்தான். எண்டைக்கோ ஒரு நாளைக்கு குமரேசு அம்பிடுவர் தானே.. அப்ப வைக்கிறன் அரிவாளை எண்டு அவன் மனசுக்கள்ளை நினைச்சான்.
ஒரு பன்னிரண்டு வருசமா இதைத்தான் சுந்து செய்யிறான். வந்த புதுசில உது மாதிரி கன வேலையளை அவன் செய்திருக்கிறான். வேலைக்கு கொண்டு போய்ச் சேத்து விடுங்கோடா எண்டு முன்னுக்கும் பின்னுக்கும் திரிஞ்சால் அப்ப அவனைக் கொண்டு போய் உப்பிடியான வேலையளில தான் சேத்து விட்டாங்கள்.
சரியா கவலைப்பட்டுப்போனான். நான் படிச்ச படிப்புக்கு எண்டு அவன் ஒருக்காலும் நினைக்கேல்லையெண்டாலும் இந்த வேலையள் அவனை சரியா பாதிச்சிட்டுது. பிறகு பழகப் பழக அதுவே பழகி.. செய்யிறது என்ன வேலையெண்டாலும் அதை நிறைவாச் செய்யதால் போதும் எண்ட மனப்பக்குவம் அவனுக்கு வந்திட்டுது.
எண்டாலும் ஊர்ப்பக்கம் கடைசியா போகேக்கை.. சிலர் நக்கலா என்ன வேலை செய்யிறியள் எண்டும் கேட்டவை. அவனுக்கு தெரியும் அப்படி கேட்டவையின்ர ஆரோ ஒரு உறவு எங்கேயோ இப்பிடி ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும் எண்டு.
சுந்துவுக்கு சரியா நாரி நொந்தது. வீட்டை வரவும் நேரம் செண்டு போட்டுது. எண்டாலும் சம்மர் தானே.. இன்னும் பகல் மிச்சமிருந்தது. றூமுக்கு வந்து கட்டிலில விழுந்தான். கட்டிலும் றுமும் அலங்கோலமாக் கிடந்திச்சு. ஊத்தை உடுப்பக்கள் நிறைஞ்சு மணத்தால் சென்ற் அடிச்சுப்போட்டுப் படுப்பான். இல்லாட்டி தனக்கு தண்ணியடிச்சுப்போட்டுப் படுப்பான்.
எல்லாம் கொஞ்ச நாளுக்குத்தானே. பிறகு அவ வந்த பிறகு வீட்டை ஒரு கட்டுக்குள்ளை வைச்சிருப்பா தானே.. அவ வந்த கையோடை தமிழச்சனம் இல்லாத ஒரு வீட்டைப்பாத்து குடியேற வேணும் எண்டு சுந்து நினைக்க.. நீங்கள் சுந்துவுக்கு இன்னும் கல்யாணம் ஆகேல்லையோ எண்டு நினைப்பியள்.
ஓம்.. சுந்துவுக்கு இன்னும் கல்யாணம் ஆகேல்லை.. ஆனா ஆகப்போவுது. அது பெரிய கதை.. கொஞ்சம் பொறுங்கோ ஆற அமர இருந்து முதலேயிருந்து தொடங்கிறன்..
சும்மா பம்பலுக்கு
Saturday, May 20, 2006
இவன் கோவக்காரன்!
இது தான் அந்த வலைப்பதிவு
www.kovam25.blogspot.com
Sunday, May 14, 2006
இந்த பாலகனுக்கு பதில் என்ன?
இன்னும் தமிழ் கூட சரியாக உச்சரிக்க தெரியாத அந்த தளிர், இலங்கையின் தேசிய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் பயங்கரவாதிகளோடு எப்படி தொடர்புற்றது?
இது எவ்வகையான மட்டுப் படுத்தப்பட்ட நடவடிக்கை?
பயங்கர வாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் என்பது பாலகரின் உயிர் குடித்தலா?
கடற்படை தாக்கப்பட்டால் கண்ணீர் வடிக்கின்ற,
இராணுவம் தாக்கப்பட்டால் கண்டனம் சொல்லுகின்ற,
அமெரிக்க இந்திய இன்னும் உலக பெரியண்ணன், பெரியப்பு நாடுகளே..
இந்தப் பாலகனின் மரணத்திற்க பதில் சொல்வீர்களா..?
Sunday, April 30, 2006
ஒட்டுப்படை முகாம் தாக்கியழிப்பு
பொலநறுவைப் பகுதியில் அமைந்திருந்த 'கருணா குழு' எனப்படும் துணைஇராணுவக் குழுவின் முகாம் இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் கவனத்தைப் பெற்ற விடயம் இதுவாகும். ஒரு செய்திநிறுவனம் நேரடியாகச் சென்றுகூட முகாமைப் பார்வையிட்டதுடன் பகிரங்கமாக வெளிப்படுத்தியும் இருந்தது. ஆனால் இன்றுவரை அரசதரப்பு அதை மறுத்தே வந்துள்ளது.
தமிழர் தரப்பில் பத்திரிகையாளர்கள், புத்திசீவிகள் கொல்லப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளில பலர் கொல்லப்பட்டதற்கும் இக்குழுவே காரணமென்று கூறப்பட்டுவந்ததுடன், பலவற்றை அவர்களே ஒப்புக்கொண்டும் இருந்தனர்.
இவ்வளவு நாளும் இம்முகாம் மீது தாக்குதல் நடத்தப்படாதது பலருக்கு ஆச்சரியமாகவே இருந்திருக்கும். ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதற்காகப் பொறுத்திருக்கலாம். அண்மைய சம்பூர் முப்படைத் தாக்குதலின்பின் நிலைமை மாறிவிட்டது போல் தோன்றுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை இம்முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலதிக செய்திகள் கிடைக்கவில்லை.
செய்தி: புதினம்
Saturday, April 15, 2006
சிறிலங்காவை இந்திய பிரதமர் எச்சரிக்க வேண்டுகோள்
ஓவியர் புகழேந்தியின் "தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும்" நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த சில ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொதுக்கூடங்களில் உரையாற்றுவதற்கும் ஊடகங்களில் நேர்காணல் அளிப்பதற்கும் இந்திய, தமிழக அரசாங்கங்கள் தடைவிதித்து வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டிருந்தன.
அண்மையில் குறிப்பிட்ட காலத்துக்கு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற பழ.நெடுமாறனுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்ற அனுமதிக்குப் பின்னர் நேற்றைய நிகழ்வில் பழ. நெடுமாறன் பங்கேற்றார்.
ஓவியர் புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழா நிகழ்வுக்குத் தலைமை வகித்து பழ.நெடுமாறன் ஆற்றிய முழு உரையின் எழுத்து வடிவம்:
நமக்கு அருகாமையில் 20 மைலுக்கு அருகில் இருக்கும் நம்முடைய சகோதரர்கள், நம்முடைய தமிழீழ மக்கள் அங்கே நடத்தி வருகிற போராட்டத்தை, அதனது விளைவுகளை அந்த மக்களின் சொல்லொண்ணாத் துயரங்களை ஓவியங்களாக வடித்து இங்கே தமிழகத்திலும் இந்தியாவின் பிற்பகுதிகளிலும் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் கண்காட்சிகளாக நடத்தி இருக்கிறார் ஓவியர் புகழேந்தி.
ஆனாலும் எந்த மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை ஓவியங்களாக வரைந்தாரோ அந்த மக்கள்- தமிழீழ மக்கள் அவரது ஓவியங்களைப் பார்த்து மகிழக் கூடிய வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையும் சென்ற ஆண்டு தீர்ந்தது.
இங்கிருந்து தமிழீழத்துக்கு அந்த ஓவியங்களை எடுத்துச் சென்று, எந்த மக்களின் துயரங்களை ஓவியமாக வடித்தாரோ எந்த மக்களினது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தை ஓவியங்களாக வடித்திருக்கிறாரோ அந்த மக்கள் முன்னாலே அவர் வைத்து அவர்களின் ஆதரவைப் பெற்றுத் திரும்பியிருக்கிறார்.
அந்த மக்களின் போராட்டத்தை நேரில் சென்று பார்த்து முழுமையாக அறிந்து கொண்டதோடு சமூகப் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டு வந்து நூலாகவும் வடித்திருக்கிறார்.
20 ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடந்தன. அந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியமானது வியட்நாம் விடுதலைப் போராட்டம். அந்தப் போராட்டம் பற்றி ஆங்கில மொழியிலும் பிறமொழியிலும் ஏராளமான நூல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல் சீனத்திலே மாபெரும் தலைவர் மாவோவின் தலைமையில் நடைபெற்ற மகத்தான போராட்டம் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன. எத்தனையோ வெளிநாட்டவர்கள் வியந்து அதைப் பற்றி எழுதி இருக்கின்றனர்.
யாசீர் அரபாத் தலைமையிலேயே பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றியும் அதனது விளைவுகள் பற்றியும் ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன.
அதைப் போலவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஏராளமான நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளன.
ஆனால் அந்த நூல்களை எல்லாம் இந்த தமிழ்நாட்டு மக்கள் அறியாதபடி இங்கே சட்டங்கள் தடுக்கின்றன.
நான் எழுதிய நூல்களுக்கும் தடை- வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கெடுபிடிகளுக்குக் கொஞ்சமும் அஞ்சாமல் அந்த மண்ணிற்குச் சென்று, அந்த வீரஞ்செறிந்த மண்ணிலே சுற்றி வந்து, மக்களைப் பார்த்து, அவர்களது துயரங்களையெல்லாம் அறிந்துவந்து அதையெல்லாம் ஒரு நூலாக இந்தக் கால கட்டத்திலே வடித்திருப்பது என்பது சிறப்பானது மட்டுமல்ல-துணிவுமிக்கதும் ஆகும்.
எந்தத் தமிழீழ மக்களுக்காக அங்கு சென்று ஓவியக் கண்காட்சிகளை நடத்தியதோடு அந்த மக்களினது நிலைமைகளைப் பற்றிய உண்மைகளையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று அவர் வெளியிட்டிருக்கிற இந்தத் தருணத்தைவிட, அங்கே தமிழீழத்தில் இருந்து வரக்கூடிய செய்திகள் நம்முடைய நெஞ்சைப் பிளக்கின்றன.
தமிழீழத்தின் திருகோணமலையில் சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தின் விளைவாக 19 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல எது எது தமிழரின் வியாபார, வணிக நிலையங்களோ அதையெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
அங்கே ஒரு பெரிய இனவெறிக் கலவரம் இராணுவத்தினாலும் அரசாங்கத்தாலும் அங்கே ஏற்பட்டிருக்கிறது. அங்கே மக்கள் சொல்லொண்ணா பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
ஜெனீவாவிலே பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தை விளைவாக சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை 19ஆம் நாள் நடைபெறக் கூடிய நிலையில் இனவெறிக் கலவரத்தை மீண்டும் திட்டமிட்டுத் தொடங்கியிருக்கிறார்கள் எனில் அவர்களுக்கு சமாதானத்தில் நம்பிக்கை இல்லை என்பதுதான் இதன் மூலம் தெரிகிறது.
உலக நாடுகளை ஒரு பக்கம் ஏமாற்றிக் கொண்டு மற்றொரு பக்கத்தில் திட்டமிட்ட இனவெறிப் படுகொலைகளை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். உலகம் இதை உணர வேண்டும்.
குறிப்பாக
இந்திய அரசு இதை உணர வேண்டும்.
அதிலும் நீங்கள் பார்த்தால் திருகோணமலையில் மட்டுமல்ல- அருகிலே உள்ள சம்பூரில் சிங்களக் கடற்படையினர் ஏவுகணைகளை ஏவி கிராமத்தைத் தாக்கியுள்ளது. வீடுகள் பற்றி எரிந்திருக்கின்றன. 2 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்தக் கலவரச் சூழ்நிலையில் அங்கே திருகோணமலையிலே தமிழ் மக்கள் பேரவைத் தலைவராக இருக்கக் கூடிய வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், இலங்கை வங்கிக்குப் போகிறார்.
திருகோணமலையில் அந்த வங்கி எங்கே அமைந்திருக்கிறது எனில்-
இரண்டு பக்கமும் இராணுவ சோதனைச் சாவடிகள்-
அந்த வங்கிக்கு எதிரே திருகோணமலை துறைமுக காவல்நிலையம்-
அதற்கு பக்கத்திலே கடற்படைத் தலைமை அலுவலகம்-
இவ்வளவும் இருக்கக் கூடிய அந்த இடத்தில் அவர் வங்கிக்குப் போகிறார்- வங்கியிலே நுழைகிறார்- வங்கியிலேயே வைத்து அவரை சுட்டுத் தள்ளுகிறார்கள்.
வெளியே இராணுவம், காவல்துறை இருக்கிறது. எதிரிலே காவல்நிலையம் இருக்கிறது. ஆனால் சுட்டவர்கள் வங்கிக்குள்ளேயே ஓடுகிறார்கள். வங்கிக்குப் பின்னாலே சிங்கள இரகசியப் பிரிவு காவல்துறையின் அலுவலகம் உள்ளது. அதற்குள் ஓடி ஒளிகிறார்கள்.
இன்று வரை அந்தக் கொலையாளிகளைப் பிடிப்பதற்கோ யார் என்று அறிவதற்கோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
திட்டமிட்டு சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்கிறது.
எதனால் விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்படுகிறார்?
அண்மையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் அன்று தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருக்கும்போது அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்திற்கு வன்னியசிங்கம் விக்னேஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட இருந்தது. அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள்.
திருகோணமலை முழுவதுமே தமிழர் பகுதியிலே அமைந்திருக்கக் கூடிய இயற்கையான துறைமுகம். நீண்ட நெடுங்காலமாக அந்தத் திருகோணமலை துறைமுகத்தின் மீது அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு ஒரு கண் இருந்துகொண்டே இருக்கிறது.
அமெரிக்காவின் கடற்படையை அங்கே நிறுவ தொடர்ந்து முயற்சிகள் நடந்தன.
ஒருகாலத்திலே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கடற்படைத் தளமாக அது இருந்தது-அவர்கள் ஆண்ட காலத்தில்.
ஆனால் அதற்கு முன்னால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இராசேந்திர சோழனின்-சோழர்காலத்தில் திருகோணமலை கடற்படைத் தளமாக இருந்தது.
நமக்குச் சொந்தமான அந்தத் துறைமுகத்தை ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறது. அன்று இந்தியாவின் எதிர்ப்பு இருந்த காரணத்தால் அமெரிக்க கடற்படைத் தளம் அங்கே வரவில்லை.
சிங்கள அரசு என்ன நினைக்கிறது?
இந்தக் கடற்படைத் தளம் நமக்கு உபயோகப்படாது- இது தமிழர் பகுதியில் இருக்கிறது. ஆகவே இதை அமெரிக்காவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அங்கே வந்து உட்காரும்.
அதன் பின்னர் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு வசதியாக இருக்கும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.
அன்று ஜெயவர்த்தனா அந்நாட்டின் அதிபராக இருந்தபோது திட்டமிட்டு திருகோணமலைப் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றினார்.
அவர்கள் எத்தகைய சிங்களவர்கள் தெரியுமா?
சிங்களச் சிறைகளிலே பெரிய கிரிமினல் குற்றங்களைச் செய்து நீண்டகாலம் சிறைவாசம் விதிக்கப்பட்டவர்களையெல்லாம் விடுதலை செய்து அவர்களுக்கு நிலம் கொடுத்து நிதி கொடுத்து அங்கே குடியேறச் செய்தனர்.
அவர்களைக் கொண்டு ஊர்க்காவல் படை என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆயுதங்களையும் வழங்கினார்கள்.
அவர்களுக்கு வேலை என்ன? அங்கிருக்கக் கூடிய தமிழர்களை எல்லாம் தாக்கி அங்கிருந்து வெளியேற்றுவது, ஓட ஓட விரட்டுவது என்பதுதான்.
இந்த வேலைக்காக சிங்களக் குண்டர்கள் அங்கே குவிக்கப்பட்டார்கள்.
அதுமட்டுமல்ல நண்பர்களே-
திருகோணமலையில் மூன்றில் ஒருபகுதியில் இன்று சிங்களவர்கள் குடியேறியிருக்கிறார்கள்.
இது திருகோணமலை முழுமையாக சிங்களர்களின் சிக்கினாலும் அமெரிக்க கடற்படை தளம் அங்கு அமைந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு வருகிற அபாயத்தை விட இந்தியாவுக்குப் பேராபயம் என்பதை டில்லியில் உட்கார்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
யாருக்கோ நடக்கிறது? அங்கிருக்கிற ஈழத் தமிழர்களுக்குத்தானே இந்த சங்கடம் என்று எண்ணி டில்லியில் இருப்பவர்கள் பேசாமலிருப்பார்களேயானால்
அது
இந்தியாவுக்கே ஆபத்தாக முடியும் என்பதை நான் எச்சரிக்க விரும்புகிறேன்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1982 ஆம் ஆண்டு நான் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு வந்தேன்.
அதற்கு முன்னர் ஆண்டு யாழ்ப்பாணத்திலே மிகப் பெரிய நூலகத்தை சிங்கள இராணுவம் கொளுத்தியது. அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களைக் கொல்லலாம். ஆனால் எதற்காக நூல் நிலையத்தைத் திட்டமிட்டு கொளுத்தினார்கள்? அழித்தார்கள்? அதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் இங்கிருந்து இலங்கைக்குப் போனேன்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் என்னை அழைத்துக் கொண்டு போய் எரிந்து போன நூல் நிலையத்தைச் சுற்றிக் காட்டினார்.
ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையமாக அது திகழ்ந்தது. மறைந்த அறிஞர் ஆனந்தகுமாரசாமி பற்றி எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் சிலருக்காவது தெரிந்திருக்க வேண்டும்.
அவர் மிகப் பெரிய அறிஞர்- உலகம் முழுமையும் சுற்றியவர். அமெரிக்காவின் அருங்காட்சியகம் ஒன்றுக்கு அதிகாரியாகப் பணியாற்றியவர். அவர் உலகம் முழுமையும் சென்று சேகரித்த அரிய ஓலைச்சுவடிகள், நூல்களை அந்த நூலகத்துக்குக் கொடுத்திருந்தார்.
8 இரும்பு பீரோக்கள் நிறைய அவர் கொடுத்த ஓலைச்சுவடிகளும் நூல்களும் நிறைந்திருந்தன. நான் சென்று பார்த்தபோது அவ்வளவும் பொசுங்கி சாம்பலாகிக் கிடந்தது.
அவர்களுக்கு தமிழர்களை இனப்படுகொலை செய்வதை விட தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை அழிப்பதில் வெறி இருந்தது. அதன் விளைவாக அந்த நூலகம் அடியோடு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.
இதை ஏன் சொல்லுகிறேன் எனில்-
அதைப் பற்றி அறிந்துவந்து பிரதமர் இந்திராகாந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.
"திருகோணமலையில் நான் சென்று பார்த்தபோது பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எதற்காக என்பதற்கு எனக்குத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக கட்டடங்கள் கட்டப்படுவதாக அந்த மக்கள் சொல்லுகிறார்கள்- அமெரிக்கா மெதுவாக அங்கே நுழைய முயற்சிக்கிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அதிலே கூறினேன்.
அப்போது மதிப்பிற்குரிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் இதைப் பற்றி சொன்னேன். என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டார்.
இங்கிருந்து ஒரு அனைத்துக் கட்சி தூதுக் குழு டில்லிக்குச் சென்று பிரதமர் இந்திரா காந்தியிடம் இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும் என்று நான் சொன்ன போது அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் அவர் தலைமையிலேயே ஒரு தூதுக்குழுவாக டில்லி சென்றோம். பிரதமர் இந்திராகாந்தியிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்தோம்.
அதிகாரப்பூர்வமாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்ட மனு ஒன்று இந்திராவிடம் கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திராகாந்தி அறிவிக்கிறார்-
இலங்கையின் எந்தப் பகுதியிலும் இந்து மா சமுத்திரத்தின் எந்தப் பகுதியிலும் எந்த வல்லரசு முயற்சி செய்தாலும் அது இந்தியாவுக்கு விரோதமான செயலாக நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று எச்சரித்தார்.
அதற்குப் பின்னால் அம்முயற்சி நின்றது. ஆனால் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்கள். அதற்கு சிங்கள அரசு ஒத்துழைக்கிறது.
நான் நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை மிக்க பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
திருகோணமலையில் ஏற்பட்டுள்ள இந்த கலவரம்- அதுவும் சமாதான பேச்சுவார்த்தை- சர்வதேச சமூகத்தின் உதவியோடு வற்புறுத்தலின் பேரில் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னால் இப்படி ஒரு கலவரத்தை நடத்துவார்கள் என்று சொன்னால்,
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட இருந்தவரை சுட்டுக்கொலை செய்வார்கள் என்று சொன்னால்-
சமாதானப் பேச்சுவார்த்தையை இந்தச் சூழலில் எப்படி நடத்த முடியும்?
ஏதாவது ஒரு வேண்டாத சூழ்நிலையை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகள் எப்போதும் இப்படித்தான்-அவர்கள் எப்போதும் சமாதானத்துக்கு வரமாட்டார்கள் என்று அவர்கள் மீது பழியைப் போட திட்டமிட்ட இனப்படுகொலையைத் தொடர முயற்சிக்கிறார்கள்.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தப் பிரச்சனையிலே ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.
இந்தக் குரல் கொடுத்தால் இந்திய அரசு இந்தப் பிரச்சனையிலே எந்த அளவு கவனம் செலுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்திய அரசு இந்தப் பிரச்சனையிலே அது இரண்டும் கெட்டான் நிலைப்பாடாக இருக்கிறது. அது ஈழத்தமிழர்களுக்கும் உதவாது. இந்தியாவுக்கும் உதவாது.
அங்கே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மூன்று ஆண்டுகாலத்துக்கும் மேலாக இப்பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நோர்வே நாட்டு மத்தியஸ்த்துடன் நடக்கிறது.
யார் இந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்கிறார்களோ அந்த நார்வே நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் இங்கே டெல்லிக்கு வருகிறார்கள். பிரதமரைச் சந்திக்கிறார்கள்- வெளிநாட்டு அமைச்சரைச் சந்திக்கிறார்கள்- அதிகாரிகளைச் சந்திக்கிறார்கள். இவர்களது ஆலோசனகளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் கொழும்புக்குப் போகிறார்கள்.
இந்தியாவின் சம்பந்தம் இல்லாமல் நாம் தனியாக இந்தப் பிரச்சனையில் செயற்படக் கூடாது என்று நோர்வே நினைத்து ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது? நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள்? எனக் கேட்டு அவர்கள் செய்கிறார்கள்.
கொழும்பிலிருந்து சிங்கள அரசு தலைவர்கள் சந்திரிகாவாக இருந்தாலும் ரணிலாக இருந்தாலும் ராஜபக்சவாக இருந்தாலும் டில்லிக்கு வருகிறார்கள். பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்கள். அவர்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லுகிறார்கள்.
அதுமட்டுமல்ல நண்பர்களே-
இந்தியா இந்த பிரச்சனையிலேயே என்ன செய்திருக்க வேண்டும்?
நோர்வே தரப்பு அவர்களது கருத்தைச் சொல்லிவிட்டார்கள்-
சிங்களத் தரப்பு அவர்களது கருத்தைச் சொல்லிவிட்டார்கள்-
இன்னொரு தரப்பு இருக்கிறதே.. தமிழர் தரப்பு.. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டா? இல்லையா?
சரி விடுதலைப் புலிகளைத்தான் சந்திப்பதில் தயக்கம் இருக்கிறது. சரி அந்த இயக்கத்துக்குத் தடை விதித்து இருக்கிறீர்கள். எப்படி அழைத்துப் பேசலாம் என்று ஒரு சாக்கு சொல்லலாம்.
அதுகூட உண்மை அல்ல.
நாகாலாந்திலும் காசுமீரிலும் இந்திய அரசு தடை செய்த இயக்கங்களின் தலைவர்களை இந்திய இராணுவ விமானங்களிலே அழைத்துக் கொண்டு வந்து அவர்கள் சுவிட்சர்லாந்துக்கோ ஜப்பானுக்கோ உங்கள் விமானத்திலே அழைத்துச் சென்று இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது நீங்கள் பேசவில்லையா?
இந்தியாவுக்குள்ளேயே அவர்களை அழைத்துப் பேசவில்லையா?
இதே மன்மோகன்சிங் பேசவில்லையா?
ஏன் இவர்கள் விடயத்தில் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயற்படுகிறீர்கள்?
சரி, விடுதலைப் புலிகளுடன் நீங்கள் பேசுவதில் உங்களுக்குப் பல சிக்கல்கள் இருக்கின்றன.
ஆனால்
இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 20 பேருக்கும் மேல் இருக்கிறார்கள்.
கடந்த இரண்டாண்டு காலத்துக்கும் மேலாக இந்தியாவின் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்கிறார்கள். கடிதம் எழுதுகிறார்கள்.
இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து முறையிடுகிறார்கள். இந்தியாவின் பிரதமரைச் சந்திக்க வேண்டும்- மற்ற தலைவர்களையெல்லாம் சந்திக்க வேண்டும்- எங்களுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இரண்டாண்டுகாலமாக நீங்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன?
நியாயம்தானா?
சிங்களத் தரப்பு யார் வந்தாலும் பேசுகிறீர்கள்-
அண்மையிலே சிங்கள அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜபக்ச முதன் முதலாக இந்தியாவுக்கு வருகிறார்- 30-க்கும் மேற்பட்ட பெரிய குழுவுடன் வருகிறார்.
அந்தக் குழுவில் இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகிற ஜே.வி.பி. இயக்கத்தைச் சேர்ந்தவரும் அந்தக் குழுவிலே வருகிறார். அதாவது 30 பேரில் அவரும் ஒருவர்.
இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவது-
இந்தியா பிராந்தியத்திலே வல்லாதிக்கப் போக்கிலே நடக்கிறது என்று இந்தியாவை எதிர்க்கிறவர் இங்கே வருகிறார்.
அவரையும் நம்முடைய பிரதமரும் மற்றவரும் சந்தித்துப் பேசுகிறீர்கள்.
சரி, அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அந்த நாட்டுக் குழுவிலே அவரை சேர்த்துக் கொண்டு வரும்போது நீங்கள் தடுக்க முடியாது.
ஆனால்-
சிங்களத் தரப்பு நியாயத்தைக் கேட்ட நீங்கள்-
மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள்- மக்களிடத்திலே வாக்கு பெற்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாகியிருப்பவர்கள்.
அவர்கள் உங்களை சந்திப்பதற்கு இரண்டாண்டு காலம் முயற்சி செய்கிறார்கள். நீங்கள் எந்த அனுமதியும் கொடுக்க மறுக்கிறீர்களே?
அப்படியானால் நீங்கள் நடுநிலையோடு செயற்படுவதாக எப்படி நாங்கள் நம்ப முடியும்?
அதுமட்டும் அல்ல-
சார்க் நாடுகள்- தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இந்த சார்க் நாடுகளுக்குள்ளேயே சுற்றுப் பயணம் செய்வதற்கு விசா தேவையில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். இன்றைய வரைக்கும் அமுலில் உள்ளது.
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய நண்பர் ஈழவேந்தன் இந்தியாவுக்கு வந்தபோது, பெங்களுரிலே நாங்கள் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டை நடத்திய போது- அதில் பங்குபெறுவதற்காக வந்த போது சென்னை விமான நிலையத்திலேயே அவரை மடக்கி திருப்பி அனுப்பினீர்களே?
என்ன நியாயம் இது?
எதற்காக அப்படிச் செய்தீர்கள்?
ஏதாவது ஒரு நியாயமான காரணத்தைச் சொல்ல முடிந்தது?
சார்க் நாடுகளின் முடிவையும் மீறி இங்கே இருக்கிற உளவுத்துறை அதிகாரிகள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றால்
டெல்லியிலே இருக்கக் கூடிய அமைச்சர்கள் எதற்காக அந்தப் பதவிகளிலே ஒட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்?
ஒரு தமிழன்- ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர் இங்கே உள்ளே தமிழர்கள் நடத்துகிற ஒரு மாநாட்டுக்கு வரும்போது அவரை திருப்பி அனுப்புகிறீர்கள் என்று சொன்னால் என்ன காரணம்?
பக்கத்திலே ஆந்திரா இருக்கிறது.
ஆந்திராவின் தலைநகர் ஐதராபத்திலே உலகத் தெலுங்கு மாநாடு நடத்தினார்கள். தென்னாப்பிரிக்கா உட்பட உலகம் முழுவதிலிருந்தும் தெலுங்கு பேசும் மக்களின் பிரதிநிதிகள் அம்மாநாட்டில் கலந்து கொள்ள வந்தார்கள்.
யாரையாவது திருப்பி அனுப்பினீர்களா நீங்கள்?
பஞ்சாப்பிலே உலக பஞ்சாபி மாநாடு நடைபெற்றது. இத்தனைக்கும் பஞ்சாப் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற மாநிலம்.
அமெரிக்காவிலே, கனடாவிலே, ஐரோப்பாவிலே, ஆசிய நாடுகளிலே உள்ள சீக்கியர்களின் பிரதிநிதிகள் எல்லாம் அம்மாநாட்டிற்கு வந்தார்கள்.
யாரையாவது நீங்கள் திருப்பி அனுப்பியது உண்டா?
பக்கத்தில் பெங்களுரிலே உலக கன்னட மாநாடு நடத்தினார்கள். உலகம் முழுவதும் எந்த நாட்டில் வசித்தாலும் கன்னட மொழி பேசுகிறவர்கள் வந்தார்கள். இந்தியாவின் பிரதமரும் போனார்.
அவர்களில் யாரையாவது ஒருவரை நீங்கள் திருப்பி அனுப்பியது உண்டா?
இப்படி வரிசையாகச் சொல்லிக் கொண்டு போகலாம்.
அப்படியென்றால்-
இந்தியாவில் வழக்குடிய பிற மொழியினருக்கு- பிற தேசிய இனங்களுக்கு வழங்கப்படுகிற உரிமைகள் ஏன் தமிழனுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது?
அப்படியென்றால்
தமிழர்கள் இந்தியாவின் இரண்டாம்தர குடிமக்களா?
இரண்டாம்தர குடிமக்களா நாங்கள்?
எங்களின் இரத்தத்தின் இரத்தங்கள்- உறவினர்கள்-வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறவர்கள் இங்கே உள்ளவர்களைச் சந்திக்க வருவது என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?
இந்தியா ஒரு நாடு என்று எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?
இதுதான் தேசிய ஒருமைப்பாடா?
பக்கத்திலே கர்நாடகத்திலே நடிகர் ராஜ்குமார் இறந்துபோனார்- வருத்ததிற்குரிய ஒன்று. அவர் இறந்து போனதற்கும் அங்கே வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?
அன்று நானும் நண்பர் கொளத்தூர் மணியும் கல்யாணியும் நக்கீரன் கோபாலும் சுகுமாரும் போயிருக்காவிட்டால்....
இந்த தமிழர்களுக்கு என்றுதானே ராஜ்குமார் உயிரை மீட்டுக் கொண்டு வந்தோம்.
அதற்கு நீங்கள் செலுத்துகிற நன்றிக் கடன் இதுதானா? என்ன நியாயம் இது?
இந்திய அரசாங்கத்தில் இருக்கிறவர்கள் எத்தனை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்-
கோவாவிலே பல ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு மொழிக் கலவரம் நடந்தது. கொங்கணி பேசுகிற மக்களுக்கும் மராட்டிய மற்றும் கன்னட மொழி பேசுகிற மக்களுக்கும் அங்கே மோதல் வந்தது.
அம்மோதலில் கன்னட மொழி பேசியவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
அப்போது கர்நாடகத்தின் முதல்வராக இருந்த குண்டுராவ், பிரதமர் இந்திராகாந்திக்கு அன்று என்ன சொன்னார்?
நீங்கள் உடனடியாக இராணுவத்தை அனுப்பி பாதுகாக்காவிட்டால்- நான் என் காவல்துறையை அனுப்புவேன் என்றார். பதறிப்போன இந்திராகாந்தி அடுத்த நாள் இராணுவத்தை அங்கே அனுப்பினார்-கலவரம் ஒடுக்கப்பட்டது.
இன்று பெங்களுரிலே தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்- திருகோணமலையிலே நம்முடைய தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்.
ஏன் என்று கேட்க வேண்டிய இந்தியரசு வாளாதிருக்கிறது என்று சொன்னால்
அதை எத்தனை நாள் நம்முடைய தமிழ்ச் சமுதாயம் சகித்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்கிறேன்.
இதையெல்லாம் நாங்கள் கேட்டால் உனக்கு வாய்ப்பூட்டு என்று சொல்கிறீர்கள்.
சரி, வாய்ப்பூட்டு போடுங்கள்.
என்று வாய்ப்பூட்டுத் திறக்கப்படுகிறதோ அன்றும் இதையேதான் பேசுவோம்.
அதனால் நாங்கள் ஓய்ந்துபோய்விடுவோம் என்று நினைப்பீர்களானால் நீங்கள் ஏமாளிகளாவீர்கள்.
ஓவியர் புகழேந்தி தனது நூலில் தமிழீழப் பகுதிகளில் அம்மக்கள் படுகின்ற துயரங்களைப் பதிவு செய்துள்ளார்.
அந்தத் துயரங்கள் குறைவதற்கு பதிலாக மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்- எத்தனையோ வேறுபாடுகளும் மோதல்களும் இருந்தாலும் அதற்கு அப்பாலும் ஒன்றுபட்டு நின்று நம்முடைய தமிழர்களுக்காக குரல் கொடுக்க தயராக வேண்டும்.
அப்போதுதான் டில்லியிலே இருப்பவர்களின் செவிகளிலே அது ஒலிக்கும். அப்போதுதான் செயற்படுவார்கள். இல்லையெனில் செயற்படமாட்டார்கள். அவர்களுக்கு அக்கறை இல்லை.
நான் மீண்டும் நம் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நீங்கள் தயவு செய்து அங்கே திருகோணமலையிலே நடைபெறுகிற இந்தக் கலவரம் என்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் வேண்டும் என்று எச்சரிக்க வேண்டும்.
உடனடியாக நம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அழைத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் செவிசாய்க்க வேண்டும். இது உங்கள் கடமை. அந்தக் கடமையை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் பழ. நெடுமாறன்.
தமிழீழத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகள் மற்றும் தமிழீழ நிலைமைகளை தனது புத்தகத்தில் ஓவியர் புகழேந்தி பதிவு செய்துள்ளார். இந்நூலை இயக்குநர் மணிவண்ணன் வெளியிட்டார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் பெ. மணியரசன், தமிழ் தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, இயக்குநர் சீமான் ஆகியோர் நூல் பற்றி கருத்துரை ஆற்றினர்.
Wednesday, April 12, 2006
போலி டோண்டுவும் சில உண்மைகளும்
பத்திரிகையாளர்: வணக்கம் ஐயா,
டோண்டு: வணக்கம் தம்பி.
பத்திரிகையாளர்: நேற்று மதியத்துக்குப்பின் பல நாடுகளில் தமிழ்மணத்திரட்டி வேலை செய்யவில்லை. ஏதோ சிக்கல் நடந்துள்ளது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
டோண்டு: ஆம்! நானும் பார்த்தேன். இது நிச்சயம் அந்த மனம்பிறழ்ந்தவனின் வேலைதான். அவனை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
பத்திரிகையாளர்: யாரைச் சொல்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லையே?
டோண்டு: அவன்தான் போலிடோண்டு. உங்களுக்குத் தெரியாதா? பிரபல முன்னணி பின்னணிப் பத்திரிகையிலெல்லாம் வந்ததே. என்னோட போட்டோவைக் கூடப் போட்டிருந்தார்களே? நீங்கள் படிக்கவில்லையா?
பத்திரிகையாளர்: இல்லை. நான் படிக்கவில்லை.
டோண்டு: அச்சச்சோ! நீங்கள் வாழ்க்கையின் கால்வாசியை இழந்துவிட்டீர்கள்.
பத்திரிகையாளர்: அப்படியென்ன விசேசம்? சரி. அதைவிடுங்கள். அவன்ஏன் தமிழ்மணத்தை நிறுத்துகிற அளவுக்குப் போகவேண்டும். இது சரியாகப்படவில்லையே?
டோண்டு: இல்லை. சரிவரும். தமிழ்மண காசிகூட அவனுக்கெதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்தக் கோபத்தில் அந்த மனம் பிறழ்ந்தவன் அப்படிச் செய்திருக்கக்கூடும். அதுமட்டுமல்ல. இப்போது வேறுபல இணையத்தளங்களிலும் அவன் ஆபாசமாக எழுதுகிறான். அது அந்தப் போலிடோண்டுதான். எனக்கு நன்றாகத் தெரியும்.
ஆறு வருடங்களுக்கு முன்பேயே அவன் தன் வேலையைத் தொடங்கிவிட்டான். கொழும்பில் சக்தி எப்.எம் என்ற பண்பலை வானொலியில் ஒருவன் தொலைபேசி உரையாடலில் வந்து கெட்ட வார்த்தைகள் பேசிச் சென்றான். நினைவிருக்கிறதா? அவன்தான். அவனேதான் அந்தப் போலிடோண்டு. அப்போதே அவனைப்பிடித்த்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது. அதைவிட.....
பத்திரிகையாளர்: போதும்போதும். எனக்குத் தலைசுற்றுகிறது. பிறகு சந்திப்போம்.
**********************************
கொழுவியும் இன்னொரு சகவலைப்பதிவாளரும் நேற்றிரவு தூதுவனில் அரட்டையடித்தார்கள். அதிலிருந்து ஒரு சம்பவம்.
வழக்கமாக எப்போதுமே ஒருங்குறியில் தட்டச்சும் கொழுவி நேற்று பாமினியில் தட்டச்சுகிறான். அப்போது,
வலைப்பதிவாளர்: என்ன கொழுவி, உம்மட யுனிக்கோட்டுக்கு என்ன நடந்தது?
கொழுவி: என்ன கோதாரியோ தெரியேல. இகலப்பை சரியா வேலை செய்ய மாட்டன் எண்டுது.
பிறகு சிலநேர அரட்டைக்குப்பிறகு அந்த வலைப்பதிவாளர் ஒரு ஒலிக்கோப்பு ஒன்றை அனுப்புகிறார். அதைக்கேட்டுக் கருத்தைச் சொல்லும்படி கேட்கிறார்.
கொழுவி: ஐசே. இப்ப என்னால கேக்க ஏலாது. நாளைக்குக் கேட்டிட்டுச் சொல்லிறன்.
வலைப்பதிவாளர்: என்னப்பா? யுனிகோட் வேலைசெய்யுதில்லையெண்டு சொன்னீர். இப்ப கேக்க ஏலாது எண்டுறீர். உந்தப் போலி டோண்டுவின்ர வேலைதான் உதெல்லாம். அவனிட்டக் கவனமாயிரும். கண்டபடி அங்க இஞ்சயெண்டு போய் பின்னூட்டம் போடாதையும்.
எண்டு பெரிய அட்வைஸ்.
*********************************
டோண்டுவுடனான சந்திப்பு கற்பனையே. ஆனால் இரண்டாவது அரட்டைச் சம்பவம் முற்றிலும் உண்மை. அச்சம்பவத்தின்பின்தான் இப்படியொரு பதிவுபோட வேண்டுமென்று தோன்றியது.
பத்தாயிரக்கணக்கில் (இலட்சக்கணக்கில்?) விற்பனையாகும் வெகுசனப் பத்திரிகையிலேயே வந்துவிட்ட, சர்வதேச மட்டத்தில் தோண்டித்துருவப்படப் போகிற(தாகச் சொல்லப்படும்), வலைப்பதிவுகளில் கிழிந்து நாராகிப்போன-போய்க்கொண்டிருக்கிற ஒரு விசயத்தைப் பற்றி நானும் என் பங்குக்கு ஒரு பதிவாவது போடாட்டி என்ன பெரிய கொழுவி நான்? பேருக்கே மரியாதையில்லாமப் போயிடும்.
நன்றியுடன்
-கொழுவி-
Thursday, February 23, 2006
சங்கிலிப் பதிவு.. நானும் சொல்லவா?
எனக்கு பிடித்த நான்கு விடயங்கள்:
1) கொழுவுதல்
2) தழுவுதல்
3) சாப்பிடுதல்
4) தூங்குதல்
(--தூங்குதலுக்கு பிறகு மறுபடியும் கொழுவுதல், தழுவுதலைப் படிக்க வேண்டாம்--)
அடிக்கடி செல்லும் இடங்கள்
1) குசினி (குசினி சோறு போடுகிறது என்பது என்னளவில் இரண்டு அர்த்தப்படும்.குசினி என்றால் சமையலறை எனப்படும்)
2) கள்ளுக்கொட்டில்
3)மலசல கூடம் (அதனால் நான்காவதாக..)
4) கிணற்றடி
வசித்த நான்கு இடங்கள்
உதுதானே வேண்டாமெண்டிறது.
அடிக்கடி உண்ணும் உணவுகள்
1) பாண்
2) வறுத்த விசுக்கோத்து
3)ஆட்டுக்கால் விசுக்கோத்து
4) ரோஸ் பாண்
விரும்பும் 4 வலைப்பதிவர்கள்..
1) என்றும் நம்பர் 1: பாலச்சந்தர் கணேசன்-
2) ஈழபாரதி
3) எஸ் பாலபாரதி (அன்பே சிவம் பற்றின அவரின் பதிவுக்காக)
4) கொழுவி
பிடித்த 4 திரைப்படங்கள்
1) சந்திரமுகி - 325 தடவை பார்த்து விட்டேன்
2) பாபா - ஒரு தடவை கூட பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை
3) சிவாஜி - 365 தடவைகள் பார்ப்பேன் - (எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லையென்பதற்கும் இதற்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை)
4) ஜக்குபாய் -
Sunday, February 19, 2006
வலதுசாரி - இடதுசாரி.
நான் வலது சாரியா? இடது சாரியா? இந்தக் கேள்வி எனக்குள் பலநாட்களுண்டு. எனக்கு மட்டுமன்றி நிறையப் பேருக்கும் இருக்கும். அக்குழப்பத்தைத் தீர்ப்பதற்காக இப்பதிவு.
முக்கியமான விடயம்,
"யாருமே நிரந்தர இடதுசாரியுமில்லை வலதுசாரியுமில்லை"
இதை விளங்கிக்கொள்ள நீங்களொன்றும் கால்மார்க்சையோ, ஏங்கெல்சையோ, லெனினையோ அல்லது (எனக்குப்) பேர் தெரியாத அறிஞர்களையோ அறிந்திருக்க வேண்டிய தேவையில்லை. மூலதனத்தைப் படித்திருக்க வேண்டியதுமில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதெல்லாம் சாலை விதிகளே. (இடது, வலது என்று இரு பக்கங்களிருப்பதையும் அவற்றைவிட வேறு பக்கங்களில்லையென்பதையும் கட்டாயம் தெரிந்து வைத்திருப்பீர்கள் தானே?)
இந்தியா, இலங்கை உட்ப பெரும்பாலான ஆசியநாடுகளின் சாலைவிதிகளைப் பாருங்கள்.
வாகனசாரிகள் வீதியின் இடப்பக்கமாகவும் பாதசாரிகள் வீதியின் வலப்பக்கமாகவும் செல்லவேண்டும். (கனடா, மெரிக்கா போன்றவற்றில் இவை மாறியிருக்கும். அத்தோடு வளர்ந்த நாடுகளில் வீதியின் இருபக்கமுமே பாதசாரிகள் நடப்பதற்குரிய நடைபாதை இருக்குமென்று சொல்கிறார்கள். அவ்விடங்களில் பாதசாரிகளுக்கு ஒருபக்கம் மட்டுமே என்பது பொருந்தாது.)
நான் இன்று நினைத்துப்பார்க்கிறேன். என் வாழ்நாளில் நான் எந்தச் சாரியாக இருந்திருக்கிறேன்?
சொல்லப்போனால் இரு சாரியாகவும் இருந்திருக்கிறேன்.
பெரும்பாலான சமயங்களில் நான் பாதசாரியாகவே இருந்திருக்கிறேன். ஆகவே அந்தத்தருணங்களில் நான் வலதுசாரி.
சைக்கிள் வந்தபின்புதான் நான் இடதுசாரியானேன்.
இருந்தும் கிட்டிய தூரங்களுக்கும், சைக்கிள் காத்துப்போய் அல்லது பழுதாப்போயிருந்த காலங்களிலும் வலதுசாரியாகவே நடந்து போயிருக்கிறேன்.
சைக்கிளிலோ வாகனத்திலோ போகும்போது அவ்வப்போது சாலை விதிகளை மீறின சந்தர்ப்பங்களில் வலதுசாரியாக இருந்திருக்கிறேன்.
அரசியலில் இடதுசாரி, வலதுசாரி என்ற சொற்றொடர்களைக் கேட்கும்போது அவ்வவ் நாட்டுச் சாலைவிதிகளின்படி வாகனத்தில் திரிபவர்கள், நடந்து திரிபவர்கள் என்று விளக்கம் கண்டிருக்கிறேன்.
எனவே தோழர்களே!
(சாரிகளைப் பற்றிக் கதைக்க வந்திட்டு தோழர்களே எண்டு விளிக்காமலிருந்தால் எப்படி?)
நீங்களும் இச்சொற்றொடர்களைக் கண்டு பயப்படவோ குழம்பவோ தேவையில்லை.
அந்தந்த நாட்டுச் சாலைவிதிகளைக் கொண்டு சாரியைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இப்போது சொல்லுங்கள்.
**நீங்கள் இப்போது வலதுசாரியா? இடதுசாரியா?
____________________
இங்கே 'சாரி' என்று நான் சொன்னது, தமிழகத் தமிழில் சாரி என்று எழுதப்படும் sorry ஐப் பற்றியில்லை.
Wednesday, February 15, 2006
சந்திரிக்காமுகி! காணத் தவறாதீர்கள்
Thursday, February 09, 2006
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
எண்டு ஆரோ போறபோக்கில பறைஞ்சது காதில விழுந்திச்சு.
"அந்த வினை" விதைக்கப்படக் காரணமான வினையெது?
அதற்குக் "காரணமானவர்கள்" மூன்றாண்டுகளாக விதைத்தது வெறும் "தினை" தானா?
அவர்களிடத்தில் விதைக்கப்பட்ட வினை, அவர்கள் விதைத்த வினையின் ஆயிரத்திலொரு பங்காவது வருமா?
மீண்டும் சொல்கிறேன்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். அதுதான் நடந்தது. மீண்டும் வினைகள் விதைக்கப்படாமலிருக்கவும் தான்.
தாங்கள் விதைத்தது வினையல்ல, தினைதான் என்று தினவெடுத்துத் திரிபவர்களைக் குறித்துக் கருத்தில்லை.
மறைக்கப்பட்ட என் பின்னூட்டம்.
"என்ன கனநாளா ஒண்டையும் எழுதக்காணேல?" எண்டு ரசிகர்கள் ஆரவாரித்தபடியாலும் என்னத்தை எழுதிறதெண்டு எனக்கு எதுவும் புலப்படாததாலயும்தான் இந்தப்பதிவேயன்றி வேறெதற்குமில்லை.
பாலச்சந்தர் கணேசனின் மொத்தப்பதிவே இதுதான்.:
"போலியான டோண்டுவிற்கு நான் பொழுது போக்க ஆலோசனை சொன்னேன். அதன் பின்னர் அவருடைய பதிவுக்கு சென்று பின்னோட்டம் இட்டு வந்தேன். உங்களிடம் ஏதெனும் ஆலோசனை இருந்தால் போலி டோண்டுவின் பதிவிற்கு சென்று பின்னோட்டம் இடுங்கள். அல்லது இந்த பதிவில் பின்னோட்டம் இடுங்கள்."
எனது பதில்:
நீங்கள் என்ன சொல்லவாறியளெண்டு விளக்கமாச் சொன்னா நல்லது. உங்கள் பத்திரிகையின் தலைப்பைப் போல (ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு)எல்லோருக்கும் விளங்கிறமாதிரி சொல்லலாம் தானே? கட்டாயம் இத்தினை சொற்களுக்குள்ளதான் பதிவெழுத வேண்டுமெண்டு எந்தக் கட்டாயமுமில்லைத்தானே?
நீங்கள்தான் போலிடோண்டு எண்டு சொல்ல வாறியளோ?
ஆனா "ராம் வோச்சர்" வெளியிட்ட தகவல்களில போலி டோண்டு வேற ஓராள் எண்டெல்லோ காட்டினது?
சரி, நீங்களில்லையெண்டால், நீங்கள் பின்னூட்டமிட்ட அந்தப் போலி டோண்டுவின்ர தளத்தையாவது தந்திருக்கலாமெல்லோ? அதவிட முதலொருக்கா போலிடோண்டுவுக்கு எச்சரிக்கை விட்டு ஒரு பதிவு போட்டியள். அதில அவரை இன்னார் எண்டு தெரியுமெண்டும், அவரை வெளிப்படுத்துவேன் எண்டும் வெருட்டினியள். ஆனா ஒண்டையும் காணேல.
நீங்கள் அடுத்த பதிவெழுதிறதுக்காக விடுதியில் அறையெடுத்து யோசிப்பதாக ஒருவர் எங்கோ பின்னூட்டமிட்டிருந்தார். அது உண்மையா அல்லது நக்கலா என்று என்னால் *உணர* முடியவில்லை. அப்பிடி அறையெடுத்துத் தங்கி எழுதும் பதிவுகளா இவை? ஆனால் ஏதாவது எழுதியே ஆகவேண்டுமென்ற கட்டாயத்தில் நீங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். அதனால்தான் இப்படியான பதிவுகள் உங்களிடமிருந்து வருகின்றன.
ஒண்டில், இதைப்பற்றிப் பேசாம இருக்கலாம். அல்லது வேற விசயங்களைப் பற்றி எழுதலாம் (ரெண்டு பெண்டாட்டிக்காரன், ஏன் கணவன் மனைவிக்கிடையில் சண்டை போன்ற பதிவுகள்மாதிரி). ஆனால் இப்படி போலி டோண்டு என்ற விசயத்தை வைத்துப் பதிவோட்டுவது தேவையா?
***************
இதைத்தான் எழுது எண்டு ஆரும் ஆருக்கும் சொல்லும் அதிகாரமற்றவர்கள் எண்டதைத் தெளிவாகத் தெரிந்துவைத்துக்கொண்டு இதையெழுதுகிறேன், ஒரு ஆலோசனையாக.
***************
(இ)ரசிகர்களே!
அடுத்து ஏதாவது எழுதக்கிடைத்தால் எழுதுவேன்.
Saturday, January 28, 2006
தூசணப் பின்னூட்ட வியாபாரம்
இதில பாத்தீங்கண்ணா.. எல்லாரும் எப்போதும் கம்பியுட்டருக்கு முன்னாலேயே தவமாய்த் தவமிருந்து கிடக்குறதில்ல.. ஆபிசில வேலை பாக்கிறாங்களே.. அவங்களுக்கு வேணுமுன்னா ஓ.கே.. அல்லது.. ரிடையர் ஆனாப்புறம் வேற வேலையே இல்லைன்னு கிடந்து எழுதுறவங்களுக்கு ஓ.கே.. எல்லாருக்கும் இது சரிப்பட்டு வருமா..?
எழுதுற ஒருத்தன் தன்னோட எழுத்தை எல்லாரும் வாசிக்கணுன்னு விரும்புறது தப்பே கிடையாது.. அதுக்கு என்னா இருக்கணும்? அது தமிழ்மணத்தில ஒரு ரண்டு மூணு நாளைக்கு இருக்கணும்.. அதுக்கு என்னா பண்ணணும்..? அப்பப்போ யாராச்சும் பின்னூட்டம் போட்டாங்கண்ணா அது அப்பப்போ தமிழ் மணத்தில இருக்கும்.. ஆளுங்களும் வாசிப்பாங்க..
ஆனா.. நம்மாளு நாளில ஒரு தடவை அவனுக்கு வாற எல்லா பின்னூட்டத்தையும் பப்ளிஷ் பண்ணினா.. அது அடுத்த ஐஞ்சோ பத்து நிமிசத்துக்கு தமிழ்மணத்தில இருந்துட்ட பறந்திடும்..
அப்புறம் அடுத்த நாளைக்கு அவன் வரும் வரைக்கும்.. அவனொடை எழுத்தை யாரு பாப்பாங்க..? ஆபிசில வொர்க் பண்ணுறவங்க அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தடவ பப்ளிஷ் பண்ணிட்டே இருப்பாங்க.. ஆனா.. நம்மாளு என்னா பண்ணுவான் பாவம்.. என்னங்கண்ணா.. நான் சொல்லுறது நியாயம் தானுங்களே..
சரி விட்டுத் தொலைங்கண்ணா.. நடந்தது நடந்து போச்சி.. ஆனா.. போலிப் பின்னாட்டங்களை வைச்சே சிலரு பிழைப்பு நடத்திட்டிருந்தாங்க.. அவங்க வாயில தான் மண்ணு விழுந்திருச்சு..
ஆனா எனக்கொரு சந்தேகம் சொல்லட்டுமா..?
நமக்கொரு பின்னூட்டம் வருகுதன்னா.. அது போலியா.. இல்லயா.. உண்மையா.. எப்பிடிங்க கண்டு பிடிக்கிறது.. ? வலைப்பதியிற எல்லாரோட பதிவு எண்ணையும் ஒரு லிஸ்டு போட்டு வைச்சிருந்து ஒவ்வொண்ணா எலிக்குட்டியை பிடிச்சுப் பாத்து.. இது இவரோடதா.. அது அவரோடதா.. .... அடப் போங்கப்பா.. வேறு வேலையில்ல..?
ஆபாசப் பின்னூட்டங்களை தடுக்கலாம்.. ஆனா.. ஒருத்தரோடை கருத்துக்கு எதிரான கருத்தில பின்னூட்டம் வந்தால்... இப்போ உதாரணத்திற்கு சாதியென்ற ஒன்றே இல்ல எண்ணு டோண்டுவின் பெயரில் ஏதாச்சும் வந்தால் நான் என்னா பண்ணுறது..? அடடா.. ஐயா மனசு மாறிட்டாராக்கும் அப்பிடின்னு நினைச்சுக்கிட்டு பப்ளிஷ' பண்ணவா.. இல்லைண்ணா..
பேசாமல்.. நம்மோட வலைப்பதிவுக்கு மாடரேட் பண்ணுற உரிமையை சர்ச்சைக்குரிய அந்தக் கொஞ்சப் பேர் கையில கொடுத்தால்.. அவங்களே பாத்து.. இது நான் இல்ல.. இது அவரு இல்ல எண்ணு மாடரேட் பண்ணலாம்..
இன்னும் ஒரு முக்கியமான விசயம் சொல்ல வேணும்.. உங்கை கொஞ்ச பேர் தூசணப் பின்னூட்டங்களை தங்கடை பதிவில வைச்சுக் கொண்டு நல்லா வியாபாரம் செய்யினம்.. அப்பிடித் தூசணப் பின்னூட்டம் போடுறவைக்கும் அதை தங்கடை பதிவில வைச்சிருந்து வியாபாரம் பாக்கிறவையளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை..
உந்த மொடரேட் பண்ணுறதாலை தூசணப் பின்னூட்டங்களை கட்டுப் படுத்துறது ஒரு நல்ல விசயம்.. இல்ல.. நாங்கள் தூசணப் பின்னூட்டங்களையும் மொடரேற் பண்ணி எல்லாரும் பாக்க விடுவம் எண்டுறவை ஒரு வேளை அது ஜனநாயகத்தின் குரல்.. நசுக்கக் கூடாது எண்டு நினைக்கினமோ தெரியேல்லை.. எண்டாலும் அப்பிடிப் பின்னூட்டங்கள் விடுறவை அதைக் காட்டி நல்லா வியாபாரம் நடத்தத் தான் எண்டது தெளிவு.. அப்பிடி வியாபாரத்துக்கத்தான் அப்பிடித் தூசணப் பின்னூட்டங்களை போடுகினம் எண்டால்.. அந்த தூசணப் பின்னூட்டங்களை கட்டாயம் அவைக்கு எதிரான ஆக்கள் தான் போட வேணுமெண்டில்லை.. அவையும் போடலாம்.. இதை நான் என் சொல்லுறன் எண்டால் ஜனநாயகத்தில எல்லாப் பக்கத்தையும் எல்லாப் பக்கங்களிற்கான சாத்தியங்களையும் ஆராய வேணும்..
காசியண்ணர் சொல்லியிருக்கிறார்.. இனி தரக்குறைவான பின்னூட்டங்களை தங்கடை பதிவில ஆரும் அனுமதித்தால்.. அதை தூக்குவம் எண்டு.. அதைச் செய்ய வேணும்... நாங்கள் ஒண்டு சொல்லறம்.. அப்பிடி யாரும் தங்கடை பதிவில ஆபாசப் பின்னூட்டங்களை அனுமதித்தால்.. ஆபாசப் பின்னூட்டப் பதிவுகள் எண்டொரு பக்கம் தொடங்கி அதில தொடர்ந்து வெளியிடுவம்.. எந்தப் பதிவில எந்தப் பக்கத்தில எத்தினையாவது பின்னூட்டம் ஆபாசம் எண்டதை வெளியிடுவம்..
அதே நேரம் தமிழ்மணமும்.. சொன்னதை நிறைவேற்ற வேணும்.. அப்பிடி ஆபாச பின்னூட்டங்கள் இருந்தால் அந்த வலைப்பதிவை உடன.. உடன தூக்க வேணும்..
Friday, January 27, 2006
மட்டுறுத்தல் நிபந்தனையும் வாசகர் கருத்தும்
இவ்விதியை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்வதோடு வரவேற்கிறேன். இது கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இதிலெல்லாம் வாதம் செய்யவும் பின்னூட்டச் சண்டை பிடிக்கவும் என்ன இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. பெரிய தலைகள் கூட இச்சண்டையிற் பங்கேற்பதைப் பார்க்கும் போது எனக்கு ஒரேயொரு காரணம் மட்டுமே புரிகிறது.
அப்படி மட்டுறுத்தல் செய்யாதவர்கள் பின்னூட்டம் திரட்டப்படும் வசதியை மட்டுமே இழக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் தாம்தூம் என்று குதிப்பவர்களையிட்டு எனக்குக் கருத்தில்லை.
இப்போது இப்பதிவு ஏனென்றால்:
இந்தப் பிரச்சினையை, பின்னூட்டங்கள் அதிகம் பெறுவதற்காக சகவலைப்பதிவர்கள் பயன்படுத்தும்போது நானேன் தனித்து நிற்கவேண்டுமென்ற தெளிவில் எழுதப்பட்டதே இப்பதிவு.
சந்தடி சாக்கில் தங்கள் பதிவுக்கு அதிக பின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடும், பார்வையிடப்பட்ட எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கோடும் சக வலைப்பதிவாளர்கள் ஆடும் கூத்தைப் பார்த்தபின் எனக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. நானும் இதைப்பயன்படுத்தி அதிக பின்னூட்டங்களையும் பெறவும், என்பதிவு பார்வையிடப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்கவும் வாசகர்கள் அருள்புரிய வேண்டும்.
பேர் போன சில புத்திசீவிப் பதிவாளர்களே இந்த "அற்பமான" வேலையைச் செய்யும்போது நான் மட்டுமேன் ஒதுங்க வேண்டும்?
ஆகவே சனங்களே,
முகம்பாராது, பேர் பாராது, மற்ற பதிவாளர்களின் பதிவிலிட்டதுபோல் என் பதிவிலும் அதிகப் பின்னூட்டங்கள் இடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
Tuesday, January 03, 2006
விடுதலைப்புலிகள் மீது தாக்குதல்
இன்று மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய அணியொன்று நடத்திய தாக்குதில் புலிகளின் வவுனியா மேற்கின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் மேஜர் ஜெயானந்தன் அவர்களும் அவருடன் கூடச்சென்ற நாட்டுப்பற்றாளர் தேவராசா வினோதன் என்பவரும் இத்தாக்குதலிற் கொல்லப்பட்டனர்.
மன்னார் வலையன்கட்டு - முள்ளிக்குளப்பகுதியில் இத்தாக்குதல் இன்று (03.01.2005) மாலை நடைபெற்றது.
வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெற்ற முதலாவது தாக்குதல் இதுவாகும்.
------------------------------
நன்றி: புதினம், தமிழ்நெற்
Wednesday, December 28, 2005
விஜயகாந்துக்குச் செய்யப்பட்ட துரோகம்
சினிசெளத் என்ற இவ்விணையத் தளத்தில் நடிகர்களின் புகைப்படங்கள் இருக்கும் பகுதியில் 'கப்டனின்' பெயர் 'சாயாசிங்' என்று எழுதப்பட்டுள்ளது.
சாயாசிங் என்பவர் நடிகை என்று தெரிந்திருந்தும் 'கப்டனின்' படத்துக்கு அவர்பெயரைப் பயன்படுத்தியதில் நிச்சயம் ஏதாவது உள்நோக்கம் இருக்க வேண்டும்.
வீரமிக்க, அஞ்சாநெஞ்சன் விஜயகாந்துக்கு பெண்ணின் பெயரைப் போடுவதூடாக என்ன சொல்ல வருகிறார்கள்?
இதன்பின் ஆழமான அரசியற்சதியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
இதையெதிர்த்து கடும் போராட்டம் நடத்த எண்ணியுள்ளோம்.
விரைவில் அதற்கான அறிவித்தல்கள் வரும்.
இதேவேளை, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு எதுவுமே செய்யாமல் 'ஜல்லி'யடித்துக்கொண்டிருக்கும் "மதுரைத் தருமி"யையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் 'தருமி'யென்ற பெயரென்னத்துக்கு?
'சிறை சென்ற செம்மல்' தருமியா இப்படி?
'மதுரைத் தமிழ'னின் மானம் காக்க
மீண்டுமொரு போருக்கு தருமியை அழைக்கிறோம்.
Sunday, December 04, 2005
இலங்கை நிலைமை மோசமடைகிறது.
இவ்வளவுநாளும் கிழக்குப் பகுதிதான் சிக்கல் நிறைந்ததாய் இருந்துவந்தது. இருதரப்பிலும் மாறிமாறி கொலைகள் நிகழ்ந்துவந்தன. இப்போது அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது.
கைக்குண்டுத் தாக்குதல்களாக இருந்துவந்தவை இன்று கண்ணிவெடித்தாக்குதலாக மாறியுள்ளதுடன் இராணுவத்தினர் கொல்லப்பட்டுமுள்ளனர். 3 தினங்களுக்கு முன் இரு இளைஞர்கள் (இராணுவப் புலனாய்வுத் துறையால் என்று மக்கள் சொல்கிறார்கள்) சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நிலைமை கடுமையானது. மக்கள் வீதிகளை அடைத்துப் போராட்டம் நடத்தினர். தென்மராட்சியில் இராணுவ வாகனத் தொடரணி மறித்து திருப்பி அனுப்பப்பட்டது.
பின் கடந்த 3 நாட்களில் தென்மராட்சி, வடமராட்சியில் சில கைக்குண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன. சில இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர். இன்று கோண்டாவிலில் உழவுஇயந்திரத்தில் சென்ற இராணுவத்தினர் கண்ணிவெடியில் சிக்கியுள்ளனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் குறைந்தது 3 பேர் காயமடைந்துள்ளனர்.
நிற்க, திருகோணமலையில் தமிழர் - முஸ்லீம் தரப்பில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான அச்சம் நிலவுவதாக அறியப்படுகிறது.
நிலைமை வரவர மோசமடைகிறதென்றே படுகிறது. இதுபற்றி போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவிக்கையில்,
"There is a real danger that these disturbances and hostilities can spread and result in an irreparable deterioration of security
சீச்சீ. இந்தப் பழம் புளிக்கும்.
இது தொடர்பாக அனுரா பண்டாரநாயக்க கூறியுள்ளதாவது:
சிறிலங்கா பிரதமர் பதவியை எனக்கு மகிந்த ராஜபக்ச அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் நடைமுறையை உணர்ந்தவன். முட்டாள் அல்ல.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எனது பெயர்தான் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறிலங்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக கட்சியின் மத்தியக் குழு பரிந்துரைத்த நபர் அல்லாத வேறு நபருக்கு பிரதமர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீண்டும் மத்தியக் குழுவில்தான் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை.
ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக நியமித்ததில் எனக்கு வருத்தம் இல்லை. யாராக இருந்தாலும் பிரதமர் என்பவர் பயனற்றவர். வாகன வசதிகளோடு ஆடம்பரமாகச் சென்று திறப்பு விழாக்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்லத்தான் அந்தப் பதவி பயன்படும். அந்த வகையான பதவியை நான் விரும்பவில்லை. அதிகாரத்துடன் இயங்கக் கூடிய பதவிதான் நான் விரும்புவது.
எனக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நான் செயற்படவில்லை. கம்பஹாவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த வெற்றி பெறுவார் என்று அவரிடம் உறுதியளித்திருந்தேன். அதுதான் நடந்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளும் சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுக்களும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுதான் மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தில் என்னை முழுமையாக ஈடுபட விடாமல் தடுத்தது.
ஒருகாலத்தில் ஜே.வி.பி.யை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைத்தது நான் தான். ஆனால் அவர்கள் எப்போதே ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலக முடிவெடுத்தார்களோ அப்போதே தனக்கும் ஜே.வி.பிக்குமான உறவு முறிந்துபோய்விட்டது.
சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு சந்திரிகா மீண்டும் வருவாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அது தொடர்பில் முன்பு என்னோடு கதைத்திருக்கிறார். பின்னர் அது குறித்து கதைப்பதில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் வரைதான அவருடன் தொடர்பில் இருந்தேன். அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ளவில்லை. சாதாரணமாக தொலைபேசியில் பேசுவதை சந்திரிகா தவிர்ப்பார். அது பாதுகாப்பற்றது என்றும் கருதுபவர் அவர். அதனால் அவரை நேரில்தான் சந்திக்க வேண்டும். அவரைச் சந்திப்பதற்கு காத்திருக்க வேண்டும்.
தென்னிலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை இனப்பிரச்சனை தொடர்பாக பெறுவதை விட அரசாங்கம் முதலில் தனது கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். தென்னிலங்கையின் லங்கா சம சமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இனப்பிரச்சனை தொடர்பான கொள்கைகள் நல்ல முற்போக்கானவை என்றார் அனுரா பண்டாரநாயக்க.
---------------------------------------
பிரதமர் பதிவி கிடைத்திருந்தால் கடைசிப்பத்தியல்
சொல்லப்பட்டவை எப்படியிருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
---------------------------------------
நன்றி:- புதினம்.
Saturday, November 19, 2005
வாழ்த்துக்கள் மகிந்த.. வாருங்கோ..
வாய் விட்டு சொல்லாட்டியும்.. நீங்கள் வாறது தான் எனக்கு விருப்பம்.
ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே.. யுத்த நிறுத்தம் ஆராயப்படும் எண்டு சொல்லுறியள், தமிழருக்கு ஆழிப்பேரலை நிதி கிடைக்க வழி செய்கிற பொதுக்கட்டமைப்பை தடுக்கப் போவதாகவும் சமஷ்டி முறையில் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும் சொல்லியிருக்கிறியள்.
நல்லது. முதலில அதுகளை செய்யுங்கோ.. பார்த்துக் கொண்டிருக்கிறன்.
Monday, November 14, 2005
Thursday, November 10, 2005
யாழ் மருத்துவமனைப் படுகொலை.-4
யாழ் மருத்துவமனைப் படுகொலை.-2
யாழ் மருத்துவமனைப் படுகொலை.-1
அக்டோபர் 22 ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை இக்குழுவினர் தங்களின் மனவிசாரங்கள் அனைத்தோடும் தன்னந்தனியாக இரவுபகலாய் காயமுற்றோருக்குத் தேவையான சிகிச்சைகளைத் தைரியமாய் அளித்துவந்தனர். ஓர் அறுவைச்சிகிச்சை நிபுணர் கூறியதுபோல்,
"என்னுடைய மனைவிக்கும் எனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்றுகூட எனக்குத் தெரியாது. அவர்களை அகதி முகாமில் விட்டுவிட்டு வந்திருந்தேன். முதல் இரண்டு நாட்களுக்குப்பிறகு நாங்கள் குரூரமாகக் கொலை செய்யப்படப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. அதுதான் பெரிய ஆறுதல். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில்... கத்தியின் மீது நடந்துகொண்டிருந்தோம் என்பது எங்களுக்குத் தெரிந்தது. எறிகணைகள் விழுந்து நோயாளிகள் தாக்குண்டபோது நான் முற்றாய் பொறுமை இழந்துபோனேன். ஆத்திரம் எனக்குள் பொங்கி வெடித்தது. நிலக்கண்ணி வெடிகளால் காயமடைந்த இந்திய இராணுவ வீரர்ரகளும் எங்கள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்டார்கள் பூரணமாய்ச் சிதைந்துபோன நிலையில். அவர்களுக்குச் சிகிச்சையளிக்குமாறு எங்களைக் கேட்டனர். மருத்துவர்களாகிய எங்களுக்கு அவர்கள் ஆஸ்பத்திரிக்குள் வந்த கணத்திலிருந்து அவர்கள் நோயாளர்கள் மட்டுமே. அவர்கள் சிகிச்சையை நாடி நிற்கின்றனர். எங்களது கடமையோ அளவிறந்த முக்கியம் கொண்டன."
தன் துயரக்கதையைக் கொட்டி அவருக்கேயுரிய நகைச்சுவையுணர்வு விரவ அவர் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது யுத்தத்தால் சிதையுண்டதுபோய்க்கிடக்கும் யாழ்நகரின் இந்த மருத்துவமனையில் மருத்துவ அக்கறை குறித்து உத்வேகம் வியாபித்து நிற்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.
இலங்கை அரசபடைகள் எம்மைச் சூழ்ந்திருந்த வேளையில் யுத்தகாலங்களில் கூட ஒரு மருத்துவமனை எவ்வாறு இராணுவத்தால் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் முன்னர் விடுத்திருந்த பிரகடனங்களின் பின்னணியில் வைத்து நோக்கும்போது யாழ் மருத்துவமனைக்கு நேர்ந்த இந்த விஷப்பரீட்சை, இதற்குமுன் வேறு எங்குமே இப்படி நேர்ந்திராத ஒன்றாகும். பல கேள்விகள் விடைகளின்றி அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றன. நோயாளிகளையும் மருத்துவர்களையும் ஊழியர்களையும் எச்சரிக்கை செய்வதற்கோ, அவ்விடத்தை விட்டு அகற்றுவதற்கோ, தனியே ஒதுக்கிவிடவோ எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன்?
மருத்துவமனையைச் சுற்றிலும் ஏன் வளைத்து முற்றுகையிடவில்லை?
நோயாளர்களும் நோயாளர்களைக் கவனித்துக்கொண்டிருந்தவர்களும் கொல்லப்படுவதற்காகப் பின்தங்கி நின்றதுபோலிக்க, த்பி வெளியேறிக் கொள்ளக்கூடியவர்கள் ஆஸ்பத்திரியின் பின்வாயிலால் வெளியே சென்றுவிட வசதியாய் வெளிவாசல் திறந்துகிடக்க, இந்திய இராணுவம் முன்வாசல் வழியாக மட்டுமே நுழைந்தது ஏன்?
விடுதலைப் புலிகள் முன்பு அந்த மருத்துவமனையில் இருந்தார்கள் என்பது உண்மைதான். அவ்வாறே இருந்துவிட்டுப்போனாலும், ஒரு மகத்தான் தேசத்தின் தொழில் நுண்முறை மிகுந்த இராணுவம் சர்வதேச விதிமுறைகளைப் பற்றியோ, ஒருநாளுமே துல்லியமாக மதிப்பிட்டுக் கூறமுடியாத மனிதஉயிர்களின் பெறுமதியைப் பற்றியோ ஒருதுளிகூட அக்கறை காட்டாமல், எதிர்ப்புகள் எதுவுமே இல்லாத நிலையில் பொதுமக்களைக்கொண்ட ஒரு மருத்துவமனையைத் தாக்கிச் சிதறடித்தது ஏன்? இச்சம்பவம் குறித்து எந்தப் பொதுவிசாரணையும் இருக்க முடியாதென இந்திய அதிகாரிகள் தீர்மானித்துவிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.
இச்சம்பவத்தின்போது இந்திய இராணுவம் செயற்பட்ட விதம் பற்றி நிதானமாகவே சொல்வதானாற்கூட, அது தன்னுடைய கடந்தகாலப் பிரகடனங்களிலெல்லாம் வகுத்துக்கொண்டதாகச் கூறப்படும் நெறிமுறைகளுக்கு மிக இழிவாக நடந்துகொண்டது என்று நிச்சயமாகக் கூறலாம். யாழ் மருத்துவமனைக்குள் கொலைகள் நடந்தேறிக் கொண்டிருந்த சமயங்களிலெல்லாம் இந்தத் தாக்குதல் நடவடிக்கையைப் பொறுப்பேற்று நடத்திய இந்திய இராணுவத்தின் உயரதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு எதிரேயிருந்த கட்டங்களில்தான் முகாமிட்டிருந்தனர் என்று நேரிற்பார்த்த சாட்சியங்கள் கூறுகின்றனர்.
இந்திய இராணுவத்தினரின் அத்துமீறிய பிழையான நடவடிக்கைகள் பற்றி வரும் புகார்களை எல்லாம் இதற்கு முந்திய சமயங்களிலெல்லாம் முரட்டுத்தனமாக உதறித்தள்ளிவிடும் ஓர் உயர்மட்ட இராணுவ அதிகாரி சில மாதங்களுக்கு முன் (மருத்துவமனைப் படுகொலை நடந்தபின்) அபூர்வமாக ஒன்றை ஒப்புக்கொண்டார். அந்த மருத்துவமனைத் தாக்குதல் தொடங்கப்பட்ட சமயம் இராணுவம் பலவீரர்களை இழந்துவிட்டிருந்ததென்றும், அவர்கள் மிகப்பயந்து போயிருந்தனரென்றும் அவர் தெரிவித்தார். "மாலை ஆகிக்கொண்டே வரவர வேகமாக இருள்சூழ ஆரம்பித்தது. வானத்தில் கருமுகில்கள் திரண்டு வந்துகொண்டிருந்தன. யாழ்நகர் இருண்ட விநோதமான தோற்றம் கொண்டிருந்தது" என்றார்.
அச்சங்கொண்டிருந்த - சரியான முறையில் அறிவுறுத்தப்படாத - பொறுப்பான யாருடைய வழிநடத்தலும் இல்லாத - தமிழோ ஆங்கிலமோ இந்த நபர்கள், ஆஸ்பத்திரிக்குள் உயிர்ப்பிச்சை கேட்டுநிற்கும் குரல்கள், வேதனை முனகல்கள், சத்தங்கள் அனைத்தையுமே தங்களுக்கு எப்படியெப்படி எல்லாம் சரியென்று அர்த்தப்படுத்த முடியுமோ அந்த மாதிரியெல்லாம் விளங்கிக்கொண்டு நினைத்தபடி நடந்துகொள்ளத் தக்கதாக தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.
இராணுவவீரர்களுக்கு அவர்களின் உள்ளுணர்ச்சிகள் இருக்கத்தானே செய்யும் என்று எடுத்துக்கொண்டாலும், அவர்களைவிட அதிகம் பயந்து, அனாதரவான அப்பாவி மக்களின் மனநிலையை - உணர்ச்சிளைச் சிந்தித்துப்பார்க்க அவர்களுக்கு யாருமே கற்றுக்கொடுக்கவில்லை போலிருக்கிறது. பயம் என்பது உயிர்வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று என்பதால், பெருந்தேசங்களின் நெறிசமைக்கும் தளபதிகளெல்லாம் பலநேரங்களில் பயந்துபோன தனிநபர்களே என்பதை ஒத்துக்கொள்வது இந்தியாவிற்கோ அல்லது வேறெந்த வலிமைவாய்ந்த நாட்டிற்கோ தலைகுனிவைத் தரும் ஒன்றாக நினைத்துக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.
பலமாதங்கள் கழித்து சமயச்சடங்குகள் சகிதம் தாகூரின் வந்தே மாதரம் என்ற பாடலைப்பாடி இராணுவம் தங்கள் முகாம்களைக் கலைத்துக் கொண்டிருந்த சமயம் கப்டன் டாக்டர் சித்தத் டே விடைபெற்றுச் செல்லும் முகமாகத் தனக்குப் பரிச்சயமான ஒரு பழைய நண்பரைப் பார்க்க வந்திருந்தார். பார்ப்பதற்கு இளைய, நிதானமான, மென்மையாகப் பேசும் சுபாவத்தினராக அவர் காணப்பட்டார். இராணுவ மருத்துவரான இவர் மருத்துவமனை நிகழ்ச்சியில் இவர் வகித்த பங்குபற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவரைப் பொறுத்தவரை அவர் ஆற்றிய பங்கு நிந்திப்பதற்குரியதல்ல.
நண்பரொருவரைப் பார்க்க வந்தநேரம் அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக தானியங்கி இயந்திரத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். "உங்களுடைய மருத்துவப் பணிக்கான கருவிகளில் ஒன்று அல்ல இது என நான் நம்புகிறேன்" என்று அவரின் நண்பர் தமாஷாகக் குறிப்பிட்டார். வெட்கத்தோடு மிகவும் தர்மசங்கடப்பட்டுப்போன அவர், "இல்லையில்லை. என்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காகத்தான் இதை வைத்திருக்கிறேன். என்னுடைய தொழில் சார்ந்த கருவிகளெல்லாம் பேக்கில் வைத்திருக்கிறேன்" என்று சீரியசாகப் பதிலளித்தார். அவரோடு உரையாடிக்கொண்டிருந்தவர், தான் வேடிக்கையாக ஏன் அப்படிச் சொல்லப்போனோம் என்று மனம் வருந்தினார். இதை யாருக்காவது சொல்லியிருந்தால் அவர் மனம் புண்பட்டுப்போயிருப்பார். நெஞ்சை வருத்தும் யுத்தத்தின் கரும்புகையினூடே மற்றவர்களின் மத்தியில் மனிதாபிமானத்தைத் தரிசிப்பதென்பது ஒரு வினோதமான அனுபவம்தான்.
--------------------------------------
நன்றி:- "முறிந்த பனை"
--------------------------------------
நேரமில்லாத காரணத்தால் இறுதிப்பகுதி தக்க காலத்தில் போடப்படவில்லை. நினைவு நாளின் காலம் கடந்துவிட்டாலும் தொடங்கப்பட்ட கட்டுரையை முடிக்க வேண்டுமென்ற காரணத்தால் போடப்படுகிறது.
இவை முறிந்தபனைப் புத்தகத்தின் 323 ஆம் பக்கத்திலிருந்து 333 ஆம் பக்கம் வைரயுமான பகுயிலிருந்து எடுக்கப்பட்டவை.
Wednesday, October 26, 2005
ஐரோப்பிய ஒன்றியத் தடை இல்லை.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் ஜரோப்பாவிற்கு வருவதற்கு எந்த விதமான தடைகளும் ஜரோப்பிய யூனியன் போடவில்லையென்றும் சிங்கள அரச ஊடகங்களும் அவர்களுடன் தொடர்புள்ள ஊடகங்களும் போலியான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ்சில் இயக்கிக் கொண்டிருக்கும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிர பல சட்டவல்லுனர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 நாள் பெல்ஜியத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றிய பிதிநிதிகளிடம் மனுக் கையளித்து விட்டு திரும்புகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சுமார் 2.30 மணி நேரம் இந்த பேச்சுக்கள் இடம்பெற்றன. தமிழர் தரப்பில் 10 பிரதிநிதிகள் கலந்து தமிழர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர்.
விடுதலைப் புலிகளுக்கு ஜரோப்பிய நாடுகளும் ஜரோப்பிய ஒன்றியமும் பயணத்தடை விதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பூர்வ சந்திப்புக்களை மட்டும் மறு அறிவித்தல் வரை தவிர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்களே தவிர அவர்கள் எந்த ஒரு பயணத்தடையும் விதிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை சமாதான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இலங்கை சமாதான முயற்சிகளில் தாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர் என்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்புக்களை ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ப்பதானது சமாதானப் பேச்சுகளில் ஈடுபடும் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளின் சமனிலைத் தன்மையினைப் பாதிக்கும் என்றும் சமாதானப் பேச்சுக்களைப் பாதிக்கும் அரச இனவாதிகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் எதிர்காலத்தில் இத்தகைய நகர்வுகள் இருக்கக்கூடாது என்பதனையும் தமிழர் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி பதிவு இணையம்
www.pathivu.com
Saturday, October 22, 2005
யாழ் மருத்துவமனைப் படுகொலை-3.
யாழ் மருத்துவமனைப் படுகொலை 2
பகுதி 3
ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த இன்னொரு மருத்துவர் தொடர்ந்து கூறினார்.
"கதிரியக்கப் பகுதியிலிருக்கும் ஓய்வறையை விட்டு விலகிச்செல்லும் நடைபாதையில் நான் கிடந்தேன். என் கால்கள் வெளியே நீண்டு கிடந்தன. அவற்றின்மீது திறந்திருந்த ஜன்னலொன்றின் வழியே வந்துகொண்டிருந்த மாலைச் சூரியஒளி பட்டுக்கொண்டிருந்தது. பயத்தில் உறைந்துபோயிருந்த நான் என்னிடம் எந்தவித அசைவும் தெரிந்துவிடக்கூடாதே என்பதற்காக மரக்கட்டைபோலப் படுத்துக்கிடந்தேன். உண்மையில் நான் உயிர்தப்பியது பெரிய அதிஸ்டம்தான். அந்த இராணுவவீரர்கள் ஒரு கிரனைற்றை வீசி எறிந்திருந்தார்கள். அக்குண்டு வெடித்ததில் எனக்கு முன்னால் படுத்துக்கிடந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டதைக் காலையில்தான் பார்த்தேன். குண்டுகள் வெடிப்பதைப்போல கிறனைற்றுக்கள் வெடித்துச் சிதறும்போது பயங்கரச் சத்தத்தை எழுப்பியது. பின் கட்டிடச் சிதறல்களும் பெருஞ்சத்தத்துடன் எங்கள் மீது படிந்தன. இறந்தவர்களிடமிருந்தும் காயமுற்றவர்களிடமிருந்தும் பெருகிவழியும் இரத்தத்தில் தோய்ந்து கட்டியாகும்.
"அந்த இரவுமுழுவதும் விழித்துக்கொண்டே படுத்துக்கிடந்த நான் பல்வேறு சத்தங்கள், குரலோசைகள், அவ்வப்போது எங்கள் தலைக்கு மேலால் சீறிப்பாயும் வேட்டுக்கள் அல்லது கிரனைற் எறியப்படும் சத்தம் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மா டீ,...டீ...டீ... என்று ஒரு குழந்தை அழுவது கேட்டது. இன்னொரு குழந்தை கதறி அழுதது. ஒருவேளை அதன் தாய் இறந்திருக்கக்கூடுமென நினைத்தேன்.
"'என் கால்கள் விறைத்துப்போயிக்கிறது. நல்லாய்க் குளிர்ந்து போயிருக்கிறது. என் கால்களின் மேல் ஒரு பிணம் கிடக்கிறது. தயவு செய்து அதை யாராவது எடுத்துவிடுங்கள்' என்று ஒரு பெண்மணி கேட்டுக்கொண்டிருந்தார்.
"அப்பெண்மணியின் வலி முனகலைப்பொறுக்க முடியாமல்,
'யாராவது அவருக்குப் பக்கத்திலிருப்பவர்கள் அப்பிணத்தை எடுத்துதவினால் என்ன? உங்களுக்குக் காது செவிடா?'
என்று கத்தினேன். அந்தப் பெண்மணி தொடர்ந்து முனகிக்கொண்டிருந்தார். காலையில் அங்கு நிலவிய அமைதிக்கான காரணத்தை நான் அறியும்போது சுற்றியிருந்த எல்லோரும் அந்தப் பெண்மணி உட்பட இறந்துபோயிருந்தனர். ஒருவர் சிவபுராணத்தை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருந்தார். கூடவே ராஜீவ் வாழ்க, இந்திரா வாழ்க என்றும் கூவிக்கொண்டிருந்தார். காலையில் அவரும் கிரனைட் குண்டுக்குப் பலியாகக் கிடப்பதைக் கண்டோம். வேறுசிலர் கழிப்பறைக்குள் போய் உயிர்பிழைத்திருப்பதைக் கண்டோம். பின் எங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டோம்:
"இதையெல்லாம் கேள்விப்பட்டதும் மருத்துவமனை இயக்குநரும் மற்றவர்களும் உடனடியாக வந்து எங்களை ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்துச் செல்வார்கள். அவர்களெல்லாம் அகதி முகாமில் இருப்பார்கள். அநேகமாய் அவர்களெல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து முறையிட்டு சிலவேளை ஒருகுழுவாக வெள்ளைக்கொடிகள் ஏந்திக்கொண்டு வெளியே வரக்கூடும். அவர்கள் நம்மை மீட்பார்கள். நாங்கள் காலைவிடியும்வரை அவர்களுக்காகக் காத்திருப்போம்."
"எப்போது விடியுமென்று ஆவலாய்ப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கையோடு இருந்தோம்.
"22 ஆம் திகதி காலை 8.00 மணி அல்லது 8.30 மணியிருக்கும். வைத்தியர் சிவபாதசுந்தரத்தின் குரலைக் கேட்டேன்.
"நாங்கள் அப்பாவி டாக்டர்கள் நர்சுகள். நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் சரணடைகிறோம்."
என்று உரக்கக் கத்தியவாறு அவர் வந்துகொண்டிருந்தார். அந்த ஓய்வறைக்கு அவர் திரும்பியதும், ஓய்வறையிலிருந்து செல்லும் மாடிப்படிகளின் மேல் நின்றுகொண்டிருந்த இராணுவவீரனொருவன் அவர் மீது விடாமல் தொடர்ந்து சுடுவதை நாம் பார்த்தோம். வைத்தியர் சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டுவிட்டார். தன்கூட வந்த தாதியரை தானே தன் இருபக்கமும் தள்ளிவிட்டதால் அத்தாதியர் காயங்களுடன் தப்பிவிட்டனர். எங்களுடைய தலைவிதி அவ்வளவுதான் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டு அங்கு கிடந்தோம்.
"பின்னர் காலை 10.30 அல்து 11.00 மணியளவில் எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் பெண் வைத்தியரொருவர் உயிரோடிருப்பவர்களையும் காயமடைந்தவர்களையும் கைகளைத் தூக்கிக்கொண்டு எழுந்து நிற்குமாறு கூவியழைப்பதைக் கேட்டோம். எங்கள் அறையில் ஆறுபேர் மாத்திரமே உயிரோடு இருப்பதாக நான் நினைத்திருந்தேன். அனால் எங்களில் குறைந்தது பத்துப்பேராவது உயிரோடு இருக்கிறோமென்பது அப்போது புரிந்தது. நாங்களெல்லோரும் கைகளை மேலே உயர்த்தியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தோம். எங்களின் முன்னால் கிடந்த பிணங்களின் மீதெல்லாம் ஏறி நடந்தோம். அச்சடலங்கள் ஒருமைல் தூரத்துக்கு மேல் பரவிக்கிடந்தது போல் அப்போது தோன்றியது. இந்தியப் படை எங்களை நெருங்கிவர முடியாமல் அவை பெருந்தடை போலச் செயற்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் தப்பிப் பிழைத்திருக்கிறோம். அப்போது எங்களில் சிலர் அழ ஆரம்பித்தார்கள். எங்கள் மத்தியில் அப்போதிருந்த ஒரு மருத்துவ நிபுணர்தான் எங்களைச் சாந்தப்படுத்தினார்.
"அழாதீர்கள். நாம் அழுதுகொண்டிருக்கும் நேரமல்ல இது. நாம் நிறைய, மிக நிறைய இழந்துவிட்டிருக்கிறோம். அனால் நாம் செய்ய வேண்டிய பணிகள், பெரும்பணிகள் நிறைய இருக்கின்றன. நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுக்காக உழைப்போம்." என்று அவர் கூறினார்.
"அவர் மட்டும் அந்த வார்த்தைகளை எங்களிடம் கூறியிராவிட்டால் நாங்கள் நிச்சயம் ஒரேயடியாய் இடிந்து போயிருப்போம். யாழ் மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதியர்கள மற்றும் ஊழியர்கள் அடங்கிய இச்சிறு அணியினரின் அபாரமான துணிச்சலும் மகத்தான அர்ப்பணிப்பும் தான் முற்றுகை, பீதி, விரக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்ட நிலையிலும் கூட இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனைகளில் யாழ் மருத்துவமனையைத் தனித்துவத்தோடும் பெருமையோடும் நிலைநிறுத்துகிறது. இமால் முற்றுகையின் கீழ் பெய்ரூட் இருந்தபோது போர்ஜ் அல் பராஜ்னே என்ற முகாமில் இருந்த மருத்துவமனை என் நினைவுக்கு வந்தது."
தொடரும்....
----------------------------------------------
நன்றி: முறிந்தபனை.
மிகுதியை இதன் அடுத்த பகுதியிற் படிக்கவும்.
தமிழ்ப்பதிவுகள்
Friday, October 21, 2005
யாழ் மருத்துவமனைப் படுகொலை.-2
பாகம் இரண்டு. தொடர்ச்சி......
இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.
"நாங்கள் அப்போது கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றனர். ஏழாம் இலக்க விடுதியைக் காலி செய்துவிட்டு நோயாளிகளும் அங்கிருந்தனர். சூட்டுச்சத்தம் எங்களுக்குக் கிட்டவாக வந்துகொண்டிருப்பது கேட்டது. 'இந்திய இராணுவம் உள்ளே நுளைந்தாலும் அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுக்கு நாங்கள் விசயங்களை விழங்கப்படுத்தலாம்' என்று நாங்கள் நிச்சயமாக நம்பிக்கொண்டிருந்தோம். எங்களோடிருந்த வைத்தியர் கணேசரட்ணம் அறையை விட்டு வெளியே சென்றார். எங்களின் சகஊழியர்கள் சிலர் இன்னமும் தங்கள் விடுதிகளில் தான் இருந்தனர். சூட்டுச் சத்தங்கள் இப்போது எங்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. எங்களைச் சுற்றிலும் ஒரே சூட்டுச்சத்தம். எங்களைச் சுற்றியுள்ள அபாயத்தை எல்லோரும் அப்படியே தரையில் படுத்துவிட்டோம். சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவுக்குள் வந்த இராணுவம் அங்கே நெருக்கியடித்துக்கொண்டிருந்த மக்கள்கூட்டத்தின்மீது கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளியது. நோயாளிகள் இறந்துவீழ்வதைக் கண்களால் கண்டோம். விரலைக்கூட அசைக்காமல் செத்துப்போனவர்களைப்போல நாங்கள் தரையில் கிடந்தோம். இறந்துபோனவர்களின் சடலங்களை அகற்ற வரும்போது எங்களையும் அவற்றோரு போட்டு எரித்துவிடுவார்களோ அல்லது சுட்டுவிடுவார்களோ என்று முழுநேரமும் நடுங்கிக்கொண்டிருந்தோம். இரவில் மேலும் சில வெடிச்சத்தங்களைக் கேட்டோம். எங்களுடைய குவாட்டர்ஸ் அமைந்திருந்த மேல்மாடியில் அவர்கள் அங்குமிங்கும் போய்வந்துகொண்டிருக்கும் சத்தம் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருந்தது. மறுநாட்காலை 11.00 மணிவரை கிட்டத்தட்ட 18 மணிநேரம் பிணங்களோடு பிணங்களாக அப்படியே கிடந்தோம்."
இந்த இடத்திலிருந்து இன்னொருவர் விவரிக்கிறார்:
"இந்திய இராணுவம் வேளிகேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது. மேற்பார்வையாளரின் அலுவலகத்துக்குள்ளும் வேறு அலுவலகங்களுக்குள்ளும் அவர்கள் சுட்டார்கள். என்னோடு பணிபுரிந்த பலர் இறப்பதை நேரிற்கண்டேன். இன்னொரு சகஊழியர் என்னிடம் கிசுகிசுத்தார், 'அப்பிடியே அசையாமல் படுத்துக்கிடவுங்கோ' என்று.
"எனவே நாங்கள் அன்றிரவு முழுவதும் இம்மிகூட அசையாமல் அங்குகிடந்த சடலங்களின் அடியிற் படுத்துக்கிடந்தோம். ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்தவர்களில் ஒருவருக்கு இருமல் வந்தது. அவர் இரவில் அவ்வப்போது முனகியவாறு மெதுவாக இருமிக்கொண்டிருந்தார். ஓர் இந்தியவீரன் அப்போது அவர்மீது கிரனைற்றை (கைக்குண்டு) வீசினான். அவரோடு வேறு பலரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் சாரதி அதில் இறந்தது எனக்குத் தெரியும். இன்னொரு இடத்தில் ஒருவர் தன் கைகளை மேலே உயர்த்தியபடி எழுந்து நின்று இரத்துக்கூவினார்:
"நாங்கள் அப்பாவிகள், நாங்கள் இந்திராகாந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு"
அவர்மீதும் ஒரு கிரனேற் வீசப்பட்டது. அவரும் அவரோடு கூட படுத்துக்கிடந்த சகோதரரும் கொல்லப்பட்டார்கள்".
---------------------------------------
அன்றிரவு கடந்துபோய் காலையாகிவிட்டது. நிலைமை பயங்கரமாகவே இருந்தது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் சிவபாதசுந்தரம் அவர்கள் மூன்று தாதிகளுடன் தாழ்வாரம் வழியாக நடந்துவந்தார். தாம் யாரென்று காட்டிக்கொண்டு இராணுவத்திடம் சரணடைந்துவிடுவது உசிதமென்று அவர்களிடம் சிவபாதசுந்தரம் எடுத்துரைத்திருக்கிறார். கைகளை மேலே உயர்த்தியபடி,
'நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் ஒன்றுமறியாத டாக்டர்களும் நர்சுகளும்தான்.'
என்று உரத்துக்கூறியவாறு அவர்கள் நடந்து வந்தனர்.
வைத்தியர் சிவபாதசுந்தரத்தை அவர்கள் வெகுகிட்டத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். நர்சுகள் காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிக்கிக்கொண்ட குழந்தைகளையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த அந்த உன்னத மனிதன் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். சமாதானத்தினதும் அகிம்சையினதும் காவலன் என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒரு தேசத்து இராணுவத்தின் கரங்களிலிருந்து அம்மருத்துவனுடைய தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு வன்முறையும் மரணமுமே பதிலாகக் கிடைத்தன.
உயிர் பிழைத்தவர்கள் மறுநாட்காலை 11.00 மணிவரையும் இறந்துபோனவர்களின் பிணங்களுக்கிடையில் தாமும் இறந்துவிட்டவர்கள்போல் அப்படியே கிடந்தனர். இராணுவ அதிகாரியொருவர் அந்த ஆஸ்பத்திரி விடுதியொன்றுக்கு வந்தபோது அங்கிருந்த பெண் வைத்தியர் ஒருவர் அவரை இடைமறித்து நேர்நின்று வாதாடிய பின்புதான் தாங்கள் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்தோர் அனைவரும் கூறினர். அந்த டாக்டர் அவ்வதிகாரிக்கு நிலைமையை விளக்கிக்கூறி தனது இருகைகளையும் மேலுயர்த்திவாறு அவர்கள் இராணுவத்தாரோடு இருக்கும் பகுதிக்கு வந்தார். தன்னுடன் பணிபுரிபவர்களையும் காயுமுற்றுக் கிடந்தோரையும் அவர் குரல் கொடுத்து அழைத்தார். தங்களின் சகமருத்துவர் டாக்டர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் கீழே இறந்துகிடப்பதைக் கண்டார். ஆஸ்பத்திரியில் தங்கியிருப்பவர்கள் மேலே தங்களின் அறைகளுக்குச் சென்று பார்த்தபோது முழுப்பகுதியும் சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டனர். தரையிற் சிந்திக்கிடந்த அவர்களின் துணிமணிகள் ரத்தம்தோய்ந்த பூட்ஸ்களின் தடங்கள் காணப்பட்டன. அவர்களின் விலைமதிப்புள்ள உடைமைகள் அனைத்தும் பறிபோய்விட்டன. அதற்குப்பின்னர் அவர்கள் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர்களின் கதவருகில் ஒரு இராணுவவீரன் நின்றுகொண்டிருந்தான். அந்த நாட்களில் அவர்கள் பயங்கரப் பீதிக்குள்ளாகியிருந்தனர்.
நன்றி: முறிந்த பனை.
-----------------------------------------------------
அடுத்த பகுதியில் இன்னொரு மருத்துவரின் வாக்குமூலம் தொடரும்.
தமிழ்ப்பதிவுகள்
யாழ் மருத்துவமனைப் படுகொலை.
யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்துகொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவனைக்கு வந்து கொண்டிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமலிருந்தது. எழுபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தன. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள் அரச அதிபரின் அலுவலகத்திலிருந்து இந்தியத் தூதரகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டதையடுத்து எறிகணைத் தாக்குதலின் தீவிரம் குறைந்துவிட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததால் பாதுகாப்புப் பற்றிய ஒரு பிழையான உணர்வு மக்கள் மத்தியில் வியாபித்திருந்தது. அவர்கள் அக்டோபர் 13 ஆம் திகதி எறிகணைத்தாக்குதலும் வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுவது குறித்துத் தொலைபேசியில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆனால் அப்பாவி மக்களுக்குப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தாக்குதல்கள் பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாதென்று இந்தியத் தூதரகம் மறுத்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
அக்டோபர் 21 ஆம் திகதி - தீபாவளி தினத்தன்று காலை 11.00 மணியளவில் யாழ் மருத்துவனையின் சுற்றுப் பகுதிகள் அனைத்தும் கோட்டை இராணுவ முகாமிலிருந்தும் ஹெலிகொப்டர்களிலிருந்தும் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானது. காலை 11.30 மணியளவில் புறநோயாளர் சிகிச்சைக் கூடத்தின்மேல் ஓர் எறிகணை விழுந்தது. பிற்பகல் 1.00 மணியளவில் சாந்தி தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத்துருப்புக்கள் காணப்பட்டதாக அங்கிருந்த மருத்துவ நிபுணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1.30 க்கு 8 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் ஓர் எறிகணை விழுந்ததில 7 பேர் கொல்லப்பட்டனர். நிலவரத்தைக் கண்டறிய இன்னொரு வைத்தியருடன் வெளியில் சென்ற இம் மருத்துவ நிபுணர் 2.00 மணியளவில் ஆயுதம் தாங்கிய சில விடுதலைப்புலிகள் அங்கு நிற்பதைக் கண்டிருக்கிறார். பின் அவர் மருத்துவர் கணேசரட்ணத்தையும் அழைத்துக்கொண்டு போய் புலிகள் அங்கே நிற்பதால் ஆஸ்பத்திரிக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிடுமாறு விடுதலைப்புலிகளைக் கேட்டுக்கொண்டார். அங்கிருந்த புலித்தலைவன் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து குழுவினரோடு வெளியேறிவிட்டான். சற்று நேரத்தின் பின் வேறொரு புலிகளின் கோஸ்டி அவ்விடத்துக்கு வந்தது. அவர்களிடமும் நிலைமையை விளக்கிய பின் அவர்களும் அங்கிருந்து சடுதியில் காணாமற்போயினர்.
பிற்பகல் 2.00 மணிக்குப்பின் அங்கு சற்று அமைதி நிலவியது.
"ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவது பாதுகாப்பானது என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்குமானால் அவ்வாறே சொல்லியிருப்பேன். அப்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததாலும் இராணுவம் மிகக்கிட்டத்தில் இருந்ததாலும் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. எனக்குச் சரியாகப் பசித்தபடியால் வீட்டுப்போகலாம் என முடிவெடுத்தேன். என்கூட வேலை செய்யும் இன்னொரு வைத்தியருடன் பிற்பகல் 2.30 க்கு ஆஸ்பத்திரி பின்வாசல் வழியாக ஒரு பிரச்சினையுமில்லாமல் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டேன். பிற்பகல் 4.00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதியில் பெற்றோல் ஷெட் பக்கத்திலிருந்து 15, 20 நிமிடங்களுக்குத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரிப் பக்கமிருந்து திருப்பிச் சுடும் சத்தமேதும் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில் எங்கள் அறிவுக்கெட்டியவரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப் புலிகளும் இல்லை"
என்று அம்மருத்துவ நிபுணர் கூறினார்.
இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.
நன்றி : முறிந்தபனை.
----------------------------------------------------------------------------
இதன்பின்தான் அந்த அதிபயங்கரக் கொடூரம் இந்தியப்படைகளால் நடத்தப்பட்டது. மருத்துவர்கள், தாதியர், நோயாளிகள் எனப் பலர் அம்மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் இறப்பை இயன்றவரை உறுதிப்படுத்தும் அத்தனை வேலைகளும் செய்யப்பட்டன. மயிர் கூச்செறியும் அந்த அனுபவம் அடுத்த பகுதியாக வருகிறது.
தமிழ்ப்பதிவுகள்
Wednesday, October 19, 2005
தமிழ்மணம் - ஒரு கருத்துக்கணிப்பு
பெருசா ஒண்ணும் இல்லங்க! இங்கே காசியின் முடிவில் அதிருப்தி உள்ளவங்க இந்தப் பதிவுக்கு அதாவது என் பதிவுக்கு ஒரு - குத்தும் அதை ஆதரிக்கிறவங்க ஒரு + குத்தும் போட்டிட்டு போயிட்டே இருங்க! அம்புட்டும்தேன்...
ஆமா.. விடுதலைப்புலிகள் பயங்கர வாதிகள் என்கிறது எதிர்மறையான விமர்சனமா?