Saturday, November 19, 2005

வாழ்த்துக்கள் மகிந்த.. வாருங்கோ..

வாங்கோ மகிந்த.. வந்திட்டியள்.. வாழ்த்துக்கள்..

வாய் விட்டு சொல்லாட்டியும்.. நீங்கள் வாறது தான் எனக்கு விருப்பம்.

ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே.. யுத்த நிறுத்தம் ஆராயப்படும் எண்டு சொல்லுறியள், தமிழருக்கு ஆழிப்பேரலை நிதி கிடைக்க வழி செய்கிற பொதுக்கட்டமைப்பை தடுக்கப் போவதாகவும் சமஷ்டி முறையில் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும் சொல்லியிருக்கிறியள்.

நல்லது. முதலில அதுகளை செய்யுங்கோ.. பார்த்துக் கொண்டிருக்கிறன்.

Monday, November 14, 2005

வசனம் தேவையில்லை!!!!!!

Image hosted by Photobucket.com
பி.கு 'கட்டுடல் தலைவனின் மேற்கண்ட படத்துக்கு வசனம் தேவையில்லை.

Thursday, November 10, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை.-4

யாழ் மருத்துவமனைப் படுகொலை.-3
யாழ் மருத்துவமனைப் படுகொலை.-2
யாழ் மருத்துவமனைப் படுகொலை.-1

அக்டோபர் 22 ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை இக்குழுவினர் தங்களின் மனவிசாரங்கள் அனைத்தோடும் தன்னந்தனியாக இரவுபகலாய் காயமுற்றோருக்குத் தேவையான சிகிச்சைகளைத் தைரியமாய் அளித்துவந்தனர். ஓர் அறுவைச்சிகிச்சை நிபுணர் கூறியதுபோல்,
"என்னுடைய மனைவிக்கும் எனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்றுகூட எனக்குத் தெரியாது. அவர்களை அகதி முகாமில் விட்டுவிட்டு வந்திருந்தேன். முதல் இரண்டு நாட்களுக்குப்பிறகு நாங்கள் குரூரமாகக் கொலை செய்யப்படப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. அதுதான் பெரிய ஆறுதல். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில்... கத்தியின் மீது நடந்துகொண்டிருந்தோம் என்பது எங்களுக்குத் தெரிந்தது. எறிகணைகள் விழுந்து நோயாளிகள் தாக்குண்டபோது நான் முற்றாய் பொறுமை இழந்துபோனேன். ஆத்திரம் எனக்குள் பொங்கி வெடித்தது. நிலக்கண்ணி வெடிகளால் காயமடைந்த இந்திய இராணுவ வீரர்ரகளும் எங்கள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்டார்கள் பூரணமாய்ச் சிதைந்துபோன நிலையில். அவர்களுக்குச் சிகிச்சையளிக்குமாறு எங்களைக் கேட்டனர். மருத்துவர்களாகிய எங்களுக்கு அவர்கள் ஆஸ்பத்திரிக்குள் வந்த கணத்திலிருந்து அவர்கள் நோயாளர்கள் மட்டுமே. அவர்கள் சிகிச்சையை நாடி நிற்கின்றனர். எங்களது கடமையோ அளவிறந்த முக்கியம் கொண்டன."

தன் துயரக்கதையைக் கொட்டி அவருக்கேயுரிய நகைச்சுவையுணர்வு விரவ அவர் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது யுத்தத்தால் சிதையுண்டதுபோய்க்கிடக்கும் யாழ்நகரின் இந்த மருத்துவமனையில் மருத்துவ அக்கறை குறித்து உத்வேகம் வியாபித்து நிற்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

இலங்கை அரசபடைகள் எம்மைச் சூழ்ந்திருந்த வேளையில் யுத்தகாலங்களில் கூட ஒரு மருத்துவமனை எவ்வாறு இராணுவத்தால் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் முன்னர் விடுத்திருந்த பிரகடனங்களின் பின்னணியில் வைத்து நோக்கும்போது யாழ் மருத்துவமனைக்கு நேர்ந்த இந்த விஷப்பரீட்சை, இதற்குமுன் வேறு எங்குமே இப்படி நேர்ந்திராத ஒன்றாகும். பல கேள்விகள் விடைகளின்றி அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றன. நோயாளிகளையும் மருத்துவர்களையும் ஊழியர்களையும் எச்சரிக்கை செய்வதற்கோ, அவ்விடத்தை விட்டு அகற்றுவதற்கோ, தனியே ஒதுக்கிவிடவோ எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன்?
மருத்துவமனையைச் சுற்றிலும் ஏன் வளைத்து முற்றுகையிடவில்லை?
நோயாளர்களும் நோயாளர்களைக் கவனித்துக்கொண்டிருந்தவர்களும் கொல்லப்படுவதற்காகப் பின்தங்கி நின்றதுபோலிக்க, த்பி வெளியேறிக் கொள்ளக்கூடியவர்கள் ஆஸ்பத்திரியின் பின்வாயிலால் வெளியே சென்றுவிட வசதியாய் வெளிவாசல் திறந்துகிடக்க, இந்திய இராணுவம் முன்வாசல் வழியாக மட்டுமே நுழைந்தது ஏன்?

விடுதலைப் புலிகள் முன்பு அந்த மருத்துவமனையில் இருந்தார்கள் என்பது உண்மைதான். அவ்வாறே இருந்துவிட்டுப்போனாலும், ஒரு மகத்தான் தேசத்தின் தொழில் நுண்முறை மிகுந்த இராணுவம் சர்வதேச விதிமுறைகளைப் பற்றியோ, ஒருநாளுமே துல்லியமாக மதிப்பிட்டுக் கூறமுடியாத மனிதஉயிர்களின் பெறுமதியைப் பற்றியோ ஒருதுளிகூட அக்கறை காட்டாமல், எதிர்ப்புகள் எதுவுமே இல்லாத நிலையில் பொதுமக்களைக்கொண்ட ஒரு மருத்துவமனையைத் தாக்கிச் சிதறடித்தது ஏன்? இச்சம்பவம் குறித்து எந்தப் பொதுவிசாரணையும் இருக்க முடியாதென இந்திய அதிகாரிகள் தீர்மானித்துவிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

இச்சம்பவத்தின்போது இந்திய இராணுவம் செயற்பட்ட விதம் பற்றி நிதானமாகவே சொல்வதானாற்கூட, அது தன்னுடைய கடந்தகாலப் பிரகடனங்களிலெல்லாம் வகுத்துக்கொண்டதாகச் கூறப்படும் நெறிமுறைகளுக்கு மிக இழிவாக நடந்துகொண்டது என்று நிச்சயமாகக் கூறலாம். யாழ் மருத்துவமனைக்குள் கொலைகள் நடந்தேறிக் கொண்டிருந்த சமயங்களிலெல்லாம் இந்தத் தாக்குதல் நடவடிக்கையைப் பொறுப்பேற்று நடத்திய இந்திய இராணுவத்தின் உயரதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு எதிரேயிருந்த கட்டங்களில்தான் முகாமிட்டிருந்தனர் என்று நேரிற்பார்த்த சாட்சியங்கள் கூறுகின்றனர்.

இந்திய இராணுவத்தினரின் அத்துமீறிய பிழையான நடவடிக்கைகள் பற்றி வரும் புகார்களை எல்லாம் இதற்கு முந்திய சமயங்களிலெல்லாம் முரட்டுத்தனமாக உதறித்தள்ளிவிடும் ஓர் உயர்மட்ட இராணுவ அதிகாரி சில மாதங்களுக்கு முன் (மருத்துவமனைப் படுகொலை நடந்தபின்) அபூர்வமாக ஒன்றை ஒப்புக்கொண்டார். அந்த மருத்துவமனைத் தாக்குதல் தொடங்கப்பட்ட சமயம் இராணுவம் பலவீரர்களை இழந்துவிட்டிருந்ததென்றும், அவர்கள் மிகப்பயந்து போயிருந்தனரென்றும் அவர் தெரிவித்தார். "மாலை ஆகிக்கொண்டே வரவர வேகமாக இருள்சூழ ஆரம்பித்தது. வானத்தில் கருமுகில்கள் திரண்டு வந்துகொண்டிருந்தன. யாழ்நகர் இருண்ட விநோதமான தோற்றம் கொண்டிருந்தது" என்றார்.
அச்சங்கொண்டிருந்த - சரியான முறையில் அறிவுறுத்தப்படாத - பொறுப்பான யாருடைய வழிநடத்தலும் இல்லாத - தமிழோ ஆங்கிலமோ இந்த நபர்கள், ஆஸ்பத்திரிக்குள் உயிர்ப்பிச்சை கேட்டுநிற்கும் குரல்கள், வேதனை முனகல்கள், சத்தங்கள் அனைத்தையுமே தங்களுக்கு எப்படியெப்படி எல்லாம் சரியென்று அர்த்தப்படுத்த முடியுமோ அந்த மாதிரியெல்லாம் விளங்கிக்கொண்டு நினைத்தபடி நடந்துகொள்ளத் தக்கதாக தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இராணுவவீரர்களுக்கு அவர்களின் உள்ளுணர்ச்சிகள் இருக்கத்தானே செய்யும் என்று எடுத்துக்கொண்டாலும், அவர்களைவிட அதிகம் பயந்து, அனாதரவான அப்பாவி மக்களின் மனநிலையை - உணர்ச்சிளைச் சிந்தித்துப்பார்க்க அவர்களுக்கு யாருமே கற்றுக்கொடுக்கவில்லை போலிருக்கிறது. பயம் என்பது உயிர்வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று என்பதால், பெருந்தேசங்களின் நெறிசமைக்கும் தளபதிகளெல்லாம் பலநேரங்களில் பயந்துபோன தனிநபர்களே என்பதை ஒத்துக்கொள்வது இந்தியாவிற்கோ அல்லது வேறெந்த வலிமைவாய்ந்த நாட்டிற்கோ தலைகுனிவைத் தரும் ஒன்றாக நினைத்துக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.

பலமாதங்கள் கழித்து சமயச்சடங்குகள் சகிதம் தாகூரின் வந்தே மாதரம் என்ற பாடலைப்பாடி இராணுவம் தங்கள் முகாம்களைக் கலைத்துக் கொண்டிருந்த சமயம் கப்டன் டாக்டர் சித்தத் டே விடைபெற்றுச் செல்லும் முகமாகத் தனக்குப் பரிச்சயமான ஒரு பழைய நண்பரைப் பார்க்க வந்திருந்தார். பார்ப்பதற்கு இளைய, நிதானமான, மென்மையாகப் பேசும் சுபாவத்தினராக அவர் காணப்பட்டார். இராணுவ மருத்துவரான இவர் மருத்துவமனை நிகழ்ச்சியில் இவர் வகித்த பங்குபற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவரைப் பொறுத்தவரை அவர் ஆற்றிய பங்கு நிந்திப்பதற்குரியதல்ல.

நண்பரொருவரைப் பார்க்க வந்தநேரம் அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக தானியங்கி இயந்திரத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். "உங்களுடைய மருத்துவப் பணிக்கான கருவிகளில் ஒன்று அல்ல இது என நான் நம்புகிறேன்" என்று அவரின் நண்பர் தமாஷாகக் குறிப்பிட்டார். வெட்கத்தோடு மிகவும் தர்மசங்கடப்பட்டுப்போன அவர், "இல்லையில்லை. என்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காகத்தான் இதை வைத்திருக்கிறேன். என்னுடைய தொழில் சார்ந்த கருவிகளெல்லாம் பேக்கில் வைத்திருக்கிறேன்" என்று சீரியசாகப் பதிலளித்தார். அவரோடு உரையாடிக்கொண்டிருந்தவர், தான் வேடிக்கையாக ஏன் அப்படிச் சொல்லப்போனோம் என்று மனம் வருந்தினார். இதை யாருக்காவது சொல்லியிருந்தால் அவர் மனம் புண்பட்டுப்போயிருப்பார். நெஞ்சை வருத்தும் யுத்தத்தின் கரும்புகையினூடே மற்றவர்களின் மத்தியில் மனிதாபிமானத்தைத் தரிசிப்பதென்பது ஒரு வினோதமான அனுபவம்தான்.



--------------------------------------
நன்றி:- "முறிந்த பனை"
--------------------------------------
நேரமில்லாத காரணத்தால் இறுதிப்பகுதி தக்க காலத்தில் போடப்படவில்லை. நினைவு நாளின் காலம் கடந்துவிட்டாலும் தொடங்கப்பட்ட கட்டுரையை முடிக்க வேண்டுமென்ற காரணத்தால் போடப்படுகிறது.

இவை முறிந்தபனைப் புத்தகத்தின் 323 ஆம் பக்கத்திலிருந்து 333 ஆம் பக்கம் வைரயுமான பகுயிலிருந்து எடுக்கப்பட்டவை.

Wednesday, October 26, 2005

ஐரோப்பிய ஒன்றியத் தடை இல்லை.

விடுதலைப் புலிகள் ஐரோப்பாவுக்கு வர ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கவில்லை - சட்டவல்லுனர் உருத்திரகுமார்

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் ஜரோப்பாவிற்கு வருவதற்கு எந்த விதமான தடைகளும் ஜரோப்பிய யூனியன் போடவில்லையென்றும் சிங்கள அரச ஊடகங்களும் அவர்களுடன் தொடர்புள்ள ஊடகங்களும் போலியான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ்சில் இயக்கிக் கொண்டிருக்கும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிர பல சட்டவல்லுனர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 நாள் பெல்ஜியத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றிய பிதிநிதிகளிடம் மனுக் கையளித்து விட்டு திரும்புகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சுமார் 2.30 மணி நேரம் இந்த பேச்சுக்கள் இடம்பெற்றன. தமிழர் தரப்பில் 10 பிரதிநிதிகள் கலந்து தமிழர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர்.

விடுதலைப் புலிகளுக்கு ஜரோப்பிய நாடுகளும் ஜரோப்பிய ஒன்றியமும் பயணத்தடை விதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பூர்வ சந்திப்புக்களை மட்டும் மறு அறிவித்தல் வரை தவிர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்களே தவிர அவர்கள் எந்த ஒரு பயணத்தடையும் விதிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை சமாதான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இலங்கை சமாதான முயற்சிகளில் தாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர் என்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்புக்களை ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ப்பதானது சமாதானப் பேச்சுகளில் ஈடுபடும் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளின் சமனிலைத் தன்மையினைப் பாதிக்கும் என்றும் சமாதானப் பேச்சுக்களைப் பாதிக்கும் அரச இனவாதிகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் எதிர்காலத்தில் இத்தகைய நகர்வுகள் இருக்கக்கூடாது என்பதனையும் தமிழர் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி பதிவு இணையம்
www.pathivu.com

Saturday, October 22, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை-3.

யாழ் மருத்துவமனைப் படுகொலை 1
யாழ் மருத்துவமனைப் படுகொலை 2

பகுதி 3
ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த இன்னொரு மருத்துவர் தொடர்ந்து கூறினார்.

"கதிரியக்கப் பகுதியிலிருக்கும் ஓய்வறையை விட்டு விலகிச்செல்லும் நடைபாதையில் நான் கிடந்தேன். என் கால்கள் வெளியே நீண்டு கிடந்தன. அவற்றின்மீது திறந்திருந்த ஜன்னலொன்றின் வழியே வந்துகொண்டிருந்த மாலைச் சூரியஒளி பட்டுக்கொண்டிருந்தது. பயத்தில் உறைந்துபோயிருந்த நான் என்னிடம் எந்தவித அசைவும் தெரிந்துவிடக்கூடாதே என்பதற்காக மரக்கட்டைபோலப் படுத்துக்கிடந்தேன். உண்மையில் நான் உயிர்தப்பியது பெரிய அதிஸ்டம்தான். அந்த இராணுவவீரர்கள் ஒரு கிரனைற்றை வீசி எறிந்திருந்தார்கள். அக்குண்டு வெடித்ததில் எனக்கு முன்னால் படுத்துக்கிடந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டதைக் காலையில்தான் பார்த்தேன். குண்டுகள் வெடிப்பதைப்போல கிறனைற்றுக்கள் வெடித்துச் சிதறும்போது பயங்கரச் சத்தத்தை எழுப்பியது. பின் கட்டிடச் சிதறல்களும் பெருஞ்சத்தத்துடன் எங்கள் மீது படிந்தன. இறந்தவர்களிடமிருந்தும் காயமுற்றவர்களிடமிருந்தும் பெருகிவழியும் இரத்தத்தில் தோய்ந்து கட்டியாகும்.

"அந்த இரவுமுழுவதும் விழித்துக்கொண்டே படுத்துக்கிடந்த நான் பல்வேறு சத்தங்கள், குரலோசைகள், அவ்வப்போது எங்கள் தலைக்கு மேலால் சீறிப்பாயும் வேட்டுக்கள் அல்லது கிரனைற் எறியப்படும் சத்தம் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மா டீ,...டீ...டீ... என்று ஒரு குழந்தை அழுவது கேட்டது. இன்னொரு குழந்தை கதறி அழுதது. ஒருவேளை அதன் தாய் இறந்திருக்கக்கூடுமென நினைத்தேன்.

"'என் கால்கள் விறைத்துப்போயிக்கிறது. நல்லாய்க் குளிர்ந்து போயிருக்கிறது. என் கால்களின் மேல் ஒரு பிணம் கிடக்கிறது. தயவு செய்து அதை யாராவது எடுத்துவிடுங்கள்' என்று ஒரு பெண்மணி கேட்டுக்கொண்டிருந்தார்.
"அப்பெண்மணியின் வலி முனகலைப்பொறுக்க முடியாமல்,
'யாராவது அவருக்குப் பக்கத்திலிருப்பவர்கள் அப்பிணத்தை எடுத்துதவினால் என்ன? உங்களுக்குக் காது செவிடா?'
என்று கத்தினேன். அந்தப் பெண்மணி தொடர்ந்து முனகிக்கொண்டிருந்தார். காலையில் அங்கு நிலவிய அமைதிக்கான காரணத்தை நான் அறியும்போது சுற்றியிருந்த எல்லோரும் அந்தப் பெண்மணி உட்பட இறந்துபோயிருந்தனர். ஒருவர் சிவபுராணத்தை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருந்தார். கூடவே ராஜீவ் வாழ்க, இந்திரா வாழ்க என்றும் கூவிக்கொண்டிருந்தார். காலையில் அவரும் கிரனைட் குண்டுக்குப் பலியாகக் கிடப்பதைக் கண்டோம். வேறுசிலர் கழிப்பறைக்குள் போய் உயிர்பிழைத்திருப்பதைக் கண்டோம். பின் எங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டோம்:
"இதையெல்லாம் கேள்விப்பட்டதும் மருத்துவமனை இயக்குநரும் மற்றவர்களும் உடனடியாக வந்து எங்களை ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்துச் செல்வார்கள். அவர்களெல்லாம் அகதி முகாமில் இருப்பார்கள். அநேகமாய் அவர்களெல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து முறையிட்டு சிலவேளை ஒருகுழுவாக வெள்ளைக்கொடிகள் ஏந்திக்கொண்டு வெளியே வரக்கூடும். அவர்கள் நம்மை மீட்பார்கள். நாங்கள் காலைவிடியும்வரை அவர்களுக்காகக் காத்திருப்போம்."

"எப்போது விடியுமென்று ஆவலாய்ப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கையோடு இருந்தோம்.

"22 ஆம் திகதி காலை 8.00 மணி அல்லது 8.30 மணியிருக்கும். வைத்தியர் சிவபாதசுந்தரத்தின் குரலைக் கேட்டேன்.
"நாங்கள் அப்பாவி டாக்டர்கள் நர்சுகள். நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் சரணடைகிறோம்."
என்று உரக்கக் கத்தியவாறு அவர் வந்துகொண்டிருந்தார். அந்த ஓய்வறைக்கு அவர் திரும்பியதும், ஓய்வறையிலிருந்து செல்லும் மாடிப்படிகளின் மேல் நின்றுகொண்டிருந்த இராணுவவீரனொருவன் அவர் மீது விடாமல் தொடர்ந்து சுடுவதை நாம் பார்த்தோம். வைத்தியர் சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டுவிட்டார். தன்கூட வந்த தாதியரை தானே தன் இருபக்கமும் தள்ளிவிட்டதால் அத்தாதியர் காயங்களுடன் தப்பிவிட்டனர். எங்களுடைய தலைவிதி அவ்வளவுதான் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டு அங்கு கிடந்தோம்.

"பின்னர் காலை 10.30 அல்து 11.00 மணியளவில் எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் பெண் வைத்தியரொருவர் உயிரோடிருப்பவர்களையும் காயமடைந்தவர்களையும் கைகளைத் தூக்கிக்கொண்டு எழுந்து நிற்குமாறு கூவியழைப்பதைக் கேட்டோம். எங்கள் அறையில் ஆறுபேர் மாத்திரமே உயிரோடு இருப்பதாக நான் நினைத்திருந்தேன். அனால் எங்களில் குறைந்தது பத்துப்பேராவது உயிரோடு இருக்கிறோமென்பது அப்போது புரிந்தது. நாங்களெல்லோரும் கைகளை மேலே உயர்த்தியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தோம். எங்களின் முன்னால் கிடந்த பிணங்களின் மீதெல்லாம் ஏறி நடந்தோம். அச்சடலங்கள் ஒருமைல் தூரத்துக்கு மேல் பரவிக்கிடந்தது போல் அப்போது தோன்றியது. இந்தியப் படை எங்களை நெருங்கிவர முடியாமல் அவை பெருந்தடை போலச் செயற்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் தப்பிப் பிழைத்திருக்கிறோம். அப்போது எங்களில் சிலர் அழ ஆரம்பித்தார்கள். எங்கள் மத்தியில் அப்போதிருந்த ஒரு மருத்துவ நிபுணர்தான் எங்களைச் சாந்தப்படுத்தினார்.

"அழாதீர்கள். நாம் அழுதுகொண்டிருக்கும் நேரமல்ல இது. நாம் நிறைய, மிக நிறைய இழந்துவிட்டிருக்கிறோம். அனால் நாம் செய்ய வேண்டிய பணிகள், பெரும்பணிகள் நிறைய இருக்கின்றன. நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுக்காக உழைப்போம்." என்று அவர் கூறினார்.

"அவர் மட்டும் அந்த வார்த்தைகளை எங்களிடம் கூறியிராவிட்டால் நாங்கள் நிச்சயம் ஒரேயடியாய் இடிந்து போயிருப்போம். யாழ் மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதியர்கள மற்றும் ஊழியர்கள் அடங்கிய இச்சிறு அணியினரின் அபாரமான துணிச்சலும் மகத்தான அர்ப்பணிப்பும் தான் முற்றுகை, பீதி, விரக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்ட நிலையிலும் கூட இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனைகளில் யாழ் மருத்துவமனையைத் தனித்துவத்தோடும் பெருமையோடும் நிலைநிறுத்துகிறது. இமால் முற்றுகையின் கீழ் பெய்ரூட் இருந்தபோது போர்ஜ் அல் பராஜ்னே என்ற முகாமில் இருந்த மருத்துவமனை என் நினைவுக்கு வந்தது."
தொடரும்....
----------------------------------------------
நன்றி: முறிந்தபனை.
மிகுதியை இதன் அடுத்த பகுதியிற் படிக்கவும்.


Friday, October 21, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை.-2

யாழ் மருத்துவமனைப் படுகொலைகள் பாகம் 1.

பாகம் இரண்டு. தொடர்ச்சி......

இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.

"நாங்கள் அப்போது கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றனர். ஏழாம் இலக்க விடுதியைக் காலி செய்துவிட்டு நோயாளிகளும் அங்கிருந்தனர். சூட்டுச்சத்தம் எங்களுக்குக் கிட்டவாக வந்துகொண்டிருப்பது கேட்டது. 'இந்திய இராணுவம் உள்ளே நுளைந்தாலும் அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுக்கு நாங்கள் விசயங்களை விழங்கப்படுத்தலாம்' என்று நாங்கள் நிச்சயமாக நம்பிக்கொண்டிருந்தோம். எங்களோடிருந்த வைத்தியர் கணேசரட்ணம் அறையை விட்டு வெளியே சென்றார். எங்களின் சகஊழியர்கள் சிலர் இன்னமும் தங்கள் விடுதிகளில் தான் இருந்தனர். சூட்டுச் சத்தங்கள் இப்போது எங்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. எங்களைச் சுற்றிலும் ஒரே சூட்டுச்சத்தம். எங்களைச் சுற்றியுள்ள அபாயத்தை எல்லோரும் அப்படியே தரையில் படுத்துவிட்டோம். சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவுக்குள் வந்த இராணுவம் அங்கே நெருக்கியடித்துக்கொண்டிருந்த மக்கள்கூட்டத்தின்மீது கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளியது. நோயாளிகள் இறந்துவீழ்வதைக் கண்களால் கண்டோம். விரலைக்கூட அசைக்காமல் செத்துப்போனவர்களைப்போல நாங்கள் தரையில் கிடந்தோம். இறந்துபோனவர்களின் சடலங்களை அகற்ற வரும்போது எங்களையும் அவற்றோரு போட்டு எரித்துவிடுவார்களோ அல்லது சுட்டுவிடுவார்களோ என்று முழுநேரமும் நடுங்கிக்கொண்டிருந்தோம். இரவில் மேலும் சில வெடிச்சத்தங்களைக் கேட்டோம். எங்களுடைய குவாட்டர்ஸ் அமைந்திருந்த மேல்மாடியில் அவர்கள் அங்குமிங்கும் போய்வந்துகொண்டிருக்கும் சத்தம் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருந்தது. மறுநாட்காலை 11.00 மணிவரை கிட்டத்தட்ட 18 மணிநேரம் பிணங்களோடு பிணங்களாக அப்படியே கிடந்தோம்."

இந்த இடத்திலிருந்து இன்னொருவர் விவரிக்கிறார்:

"இந்திய இராணுவம் வேளிகேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது. மேற்பார்வையாளரின் அலுவலகத்துக்குள்ளும் வேறு அலுவலகங்களுக்குள்ளும் அவர்கள் சுட்டார்கள். என்னோடு பணிபுரிந்த பலர் இறப்பதை நேரிற்கண்டேன். இன்னொரு சகஊழியர் என்னிடம் கிசுகிசுத்தார், 'அப்பிடியே அசையாமல் படுத்துக்கிடவுங்கோ' என்று.

"எனவே நாங்கள் அன்றிரவு முழுவதும் இம்மிகூட அசையாமல் அங்குகிடந்த சடலங்களின் அடியிற் படுத்துக்கிடந்தோம். ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்தவர்களில் ஒருவருக்கு இருமல் வந்தது. அவர் இரவில் அவ்வப்போது முனகியவாறு மெதுவாக இருமிக்கொண்டிருந்தார். ஓர் இந்தியவீரன் அப்போது அவர்மீது கிரனைற்றை (கைக்குண்டு) வீசினான். அவரோடு வேறு பலரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் சாரதி அதில் இறந்தது எனக்குத் தெரியும். இன்னொரு இடத்தில் ஒருவர் தன் கைகளை மேலே உயர்த்தியபடி எழுந்து நின்று இரத்துக்கூவினார்:
"நாங்கள் அப்பாவிகள், நாங்கள் இந்திராகாந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு"
அவர்மீதும் ஒரு கிரனேற் வீசப்பட்டது. அவரும் அவரோடு கூட படுத்துக்கிடந்த சகோதரரும் கொல்லப்பட்டார்கள்".
---------------------------------------

அன்றிரவு கடந்துபோய் காலையாகிவிட்டது. நிலைமை பயங்கரமாகவே இருந்தது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் சிவபாதசுந்தரம் அவர்கள் மூன்று தாதிகளுடன் தாழ்வாரம் வழியாக நடந்துவந்தார். தாம் யாரென்று காட்டிக்கொண்டு இராணுவத்திடம் சரணடைந்துவிடுவது உசிதமென்று அவர்களிடம் சிவபாதசுந்தரம் எடுத்துரைத்திருக்கிறார். கைகளை மேலே உயர்த்தியபடி,
'நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் ஒன்றுமறியாத டாக்டர்களும் நர்சுகளும்தான்.'
என்று உரத்துக்கூறியவாறு அவர்கள் நடந்து வந்தனர்.

வைத்தியர் சிவபாதசுந்தரத்தை அவர்கள் வெகுகிட்டத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். நர்சுகள் காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிக்கிக்கொண்ட குழந்தைகளையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த அந்த உன்னத மனிதன் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். சமாதானத்தினதும் அகிம்சையினதும் காவலன் என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒரு தேசத்து இராணுவத்தின் கரங்களிலிருந்து அம்மருத்துவனுடைய தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு வன்முறையும் மரணமுமே பதிலாகக் கிடைத்தன.

உயிர் பிழைத்தவர்கள் மறுநாட்காலை 11.00 மணிவரையும் இறந்துபோனவர்களின் பிணங்களுக்கிடையில் தாமும் இறந்துவிட்டவர்கள்போல் அப்படியே கிடந்தனர். இராணுவ அதிகாரியொருவர் அந்த ஆஸ்பத்திரி விடுதியொன்றுக்கு வந்தபோது அங்கிருந்த பெண் வைத்தியர் ஒருவர் அவரை இடைமறித்து நேர்நின்று வாதாடிய பின்புதான் தாங்கள் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்தோர் அனைவரும் கூறினர். அந்த டாக்டர் அவ்வதிகாரிக்கு நிலைமையை விளக்கிக்கூறி தனது இருகைகளையும் மேலுயர்த்திவாறு அவர்கள் இராணுவத்தாரோடு இருக்கும் பகுதிக்கு வந்தார். தன்னுடன் பணிபுரிபவர்களையும் காயுமுற்றுக் கிடந்தோரையும் அவர் குரல் கொடுத்து அழைத்தார். தங்களின் சகமருத்துவர் டாக்டர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் கீழே இறந்துகிடப்பதைக் கண்டார். ஆஸ்பத்திரியில் தங்கியிருப்பவர்கள் மேலே தங்களின் அறைகளுக்குச் சென்று பார்த்தபோது முழுப்பகுதியும் சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டனர். தரையிற் சிந்திக்கிடந்த அவர்களின் துணிமணிகள் ரத்தம்தோய்ந்த பூட்ஸ்களின் தடங்கள் காணப்பட்டன. அவர்களின் விலைமதிப்புள்ள உடைமைகள் அனைத்தும் பறிபோய்விட்டன. அதற்குப்பின்னர் அவர்கள் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர்களின் கதவருகில் ஒரு இராணுவவீரன் நின்றுகொண்டிருந்தான். அந்த நாட்களில் அவர்கள் பயங்கரப் பீதிக்குள்ளாகியிருந்தனர்.

நன்றி: முறிந்த பனை.

-----------------------------------------------------
அடுத்த பகுதியில் இன்னொரு மருத்துவரின் வாக்குமூலம் தொடரும்.


யாழ் மருத்துவமனைப் படுகொலை.

இன்று பாரதப் படைகளால் யாழ்மருத்துவமனையில் நடத்தப்பட்ட படுகொலையின் பதினெட்டாம் ஆண்டு நினைவுநாள். அதையொட்டி, அச்சம்பவம் பற்றி 'முறிந்த பனை'யில் எழுதப்பட்ட பத்திகளை இங்கே தருகிறோம். 'முறிந்த பனை' பற்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லையென்றே நினைக்கிறேன். 'அழ வேண்டாம் சோதரி' யின்போதோ வேறு சந்தர்ப்பங்களிலோ றாஜனி திரணகம பற்றிய விவாதங்களில் தாராளமாக இந்நூல் பற்றிக் கதைக்கப்பட்டதுண்டு. இனி அந்நூல் சொல்லும் அப்படுகொலை பற்றிய பத்திகளைப் பார்ப்போம். நீளம் கருதி பகுதிகளாக இடப்படுகிறது.

யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்துகொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவனைக்கு வந்து கொண்டிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமலிருந்தது. எழுபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தன. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள் அரச அதிபரின் அலுவலகத்திலிருந்து இந்தியத் தூதரகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டதையடுத்து எறிகணைத் தாக்குதலின் தீவிரம் குறைந்துவிட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததால் பாதுகாப்புப் பற்றிய ஒரு பிழையான உணர்வு மக்கள் மத்தியில் வியாபித்திருந்தது. அவர்கள் அக்டோபர் 13 ஆம் திகதி எறிகணைத்தாக்குதலும் வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுவது குறித்துத் தொலைபேசியில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆனால் அப்பாவி மக்களுக்குப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தாக்குதல்கள் பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாதென்று இந்தியத் தூதரகம் மறுத்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்டோபர் 21 ஆம் திகதி - தீபாவளி தினத்தன்று காலை 11.00 மணியளவில் யாழ் மருத்துவனையின் சுற்றுப் பகுதிகள் அனைத்தும் கோட்டை இராணுவ முகாமிலிருந்தும் ஹெலிகொப்டர்களிலிருந்தும் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானது. காலை 11.30 மணியளவில் புறநோயாளர் சிகிச்சைக் கூடத்தின்மேல் ஓர் எறிகணை விழுந்தது. பிற்பகல் 1.00 மணியளவில் சாந்தி தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத்துருப்புக்கள் காணப்பட்டதாக அங்கிருந்த மருத்துவ நிபுணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1.30 க்கு 8 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் ஓர் எறிகணை விழுந்ததில 7 பேர் கொல்லப்பட்டனர். நிலவரத்தைக் கண்டறிய இன்னொரு வைத்தியருடன் வெளியில் சென்ற இம் மருத்துவ நிபுணர் 2.00 மணியளவில் ஆயுதம் தாங்கிய சில விடுதலைப்புலிகள் அங்கு நிற்பதைக் கண்டிருக்கிறார். பின் அவர் மருத்துவர் கணேசரட்ணத்தையும் அழைத்துக்கொண்டு போய் புலிகள் அங்கே நிற்பதால் ஆஸ்பத்திரிக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிடுமாறு விடுதலைப்புலிகளைக் கேட்டுக்கொண்டார். அங்கிருந்த புலித்தலைவன் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து குழுவினரோடு வெளியேறிவிட்டான். சற்று நேரத்தின் பின் வேறொரு புலிகளின் கோஸ்டி அவ்விடத்துக்கு வந்தது. அவர்களிடமும் நிலைமையை விளக்கிய பின் அவர்களும் அங்கிருந்து சடுதியில் காணாமற்போயினர்.

பிற்பகல் 2.00 மணிக்குப்பின் அங்கு சற்று அமைதி நிலவியது.
"ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவது பாதுகாப்பானது என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்குமானால் அவ்வாறே சொல்லியிருப்பேன். அப்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததாலும் இராணுவம் மிகக்கிட்டத்தில் இருந்ததாலும் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. எனக்குச் சரியாகப் பசித்தபடியால் வீட்டுப்போகலாம் என முடிவெடுத்தேன். என்கூட வேலை செய்யும் இன்னொரு வைத்தியருடன் பிற்பகல் 2.30 க்கு ஆஸ்பத்திரி பின்வாசல் வழியாக ஒரு பிரச்சினையுமில்லாமல் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டேன். பிற்பகல் 4.00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதியில் பெற்றோல் ஷெட் பக்கத்திலிருந்து 15, 20 நிமிடங்களுக்குத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரிப் பக்கமிருந்து திருப்பிச் சுடும் சத்தமேதும் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில் எங்கள் அறிவுக்கெட்டியவரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப் புலிகளும் இல்லை"
என்று அம்மருத்துவ நிபுணர் கூறினார்.

இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.

நன்றி : முறிந்தபனை.
----------------------------------------------------------------------------
இதன்பின்தான் அந்த அதிபயங்கரக் கொடூரம் இந்தியப்படைகளால் நடத்தப்பட்டது. மருத்துவர்கள், தாதியர், நோயாளிகள் எனப் பலர் அம்மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் இறப்பை இயன்றவரை உறுதிப்படுத்தும் அத்தனை வேலைகளும் செய்யப்பட்டன. மயிர் கூச்செறியும் அந்த அனுபவம் அடுத்த பகுதியாக வருகிறது.



Wednesday, October 19, 2005

தமிழ்மணம் - ஒரு கருத்துக்கணிப்பு

இங்க நா சொல்லப்போறது எதிர்மறையான விமர்சனமோ அல்லது மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயமோ இல்லைங்கிற துணிவோட, (ஆமா இனி என்ன பதிவு எழுதினாலும் அங்கே ஏதாவது எதிர்மறையான விசயம் வந்திருக்காண்ணு ஒண்ணுக்கு ரண்டுவாட்டி செக் பண்ணிடணும்)

பெருசா ஒண்ணும் இல்லங்க! இங்கே காசியின் முடிவில் அதிருப்தி உள்ளவங்க இந்தப் பதிவுக்கு அதாவது என் பதிவுக்கு ஒரு - குத்தும் அதை ஆதரிக்கிறவங்க ஒரு + குத்தும் போட்டிட்டு போயிட்டே இருங்க! அம்புட்டும்தேன்...

ஆமா.. விடுதலைப்புலிகள் பயங்கர வாதிகள் என்கிறது எதிர்மறையான விமர்சனமா?

Friday, September 16, 2005

ஊரோடின் ஒத்தோடு!

எல்லாரும் அமோகமாப் படம் காட்டிக்கொண்டிருக்கிறாங்கள்.
உந்த நேரத்தில நான் பேசாமக்கிடந்தா வலைப்பதிவுகளிலயிருந்து அடிச்சுக் கலைச்சுப் போடுவாங்களோ எண்டு பயந்து போனன்.
உடன என்ர கமராவ எடுத்துக்கொண்டு ஓடினன், ஓடினன், ஓடினன்.
வாத்துக்களைக் காணுமட்டும் ஓடினன்.
கடசியல இதுகள் தான் அகப்பட்டிச்சு.













அப்பாடி ஒருமாதிரிப் பொருத்தமான படங்கள் போட்டாச்சு.
சின்னவனின்ர போட்டியில பங்குபற்றிற தகுதி இந்தப் படங்களுக்கிருந்தா இதுகளைச் சேத்துக் கொள்ளலாம்.
ஒருபடத்தில மட்டும் வேற ஆக்கள் நிக்கினம்.
அவயளக் கணக்கில எடுக்காதையுங்கோ.

அவசரத்தில எடுத்த படங்கள்.
கொஞ்சம் அப்பிடியிப்பிடித்தான் இருக்கும்.
சலிச்சுக் கொள்ளாதையுங்கோ.

Wednesday, September 14, 2005

அறிந்தும் அறியாமலும்- ஓர் அதிகாலை விடியல்



அறியாதார் செய்த நெகிழத்தில் விடிகிறது காலை.
அறியாதாரின் தாளினால் துடைத்தலுடன்
அறியாதார் கழுவிப் -பின்
அறியாதார் சுத்திகரித்த நீரின் கழுவலுடன்
விடிகிறது காலை.

அறியாதானின் கட்டுரை வாசிக்கலாம் கழியும்வரை.
அறியாதார் செய்தவைதான் எல்லாமென்றாலும்
அறியாதான் ஒருவன் போகான் எனக்காய்க் கழிவறை.
அறிந்தோ அறியாமலோ விடிகிறது காலை இப்படியே.
------------------------------------------------------------

நெகிழம்: பிளாஸ்ரிக்

Sunday, September 11, 2005

இரயாகரனுக்கு பதில்

வணக்கம். இரயாகரன்! தங்கள் பதிவில் இது பற்றி உங்கள் கருத்தென்ன எனக் கேட்டவிட்டு அங்கு பதிலிட உங்கள் team members இவர்களை மட்டும் அனுமதித்திருக்கிறீர்கள். நான் உங்கள் team member இல்லாத படியால் என்னால் அங்கு பின்னூட்டம் இட முடியவில்லை.

Comments on this blog are restricted to team members.
You're currently logged in as
கொழுவி who is not a team member of this blog.

ஆகவே இங்கு எனதில் பதிகிறேன்.

ராயகரன்! நான் அறிந்த வரை நிதர்சனத்தின் செய்தி கப்சா! முன்பே செய்தி வெளிவந்த மாதிரி நடந்த சம்பவம் தான் உண்மை. அதனை புலிகளின் ஊடகங்களை சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நிதர்சனம் ஒரு லூசுத்தனமான இணையம். அதனை இணையம் என்று ஏற்றுக்கொள்வதே முடியாத காரியம். அதிலும் அதனை நீங்கள் புலிகளின் மைய ஊடகம் என்கிறீர்கள்.

புலிகளின் நிதர்சனம் பிரிவைச் சேர்ந்த சேரலாதன், அந்த இணையம் தவறான செய்திகளை பரப்புவதாகவும் தங்களுக்கும் அந்த இணையத்திற்கும் தொடர்பேதும் இல்லை எனவும் சில காலங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

என்னைப் பொறுத்தவரை நிதர்சனம் ஒரு சின்னப்புள்ளை விளையாட்டுத்தளம்.

பாருங்கள், பேராசியருக்கு சப்போட் பண்ணுகிறோம் என புறப்பட்டு அந்தச் சிறுமி இதற்கு முன்பே 3 நபர்களுடன் தொடர்புற்றிருந்தாள் என எவ்வளவு வக்கிரமாக எழுதியிருக்கின்றனர்.

திரும்பவும் சொல்கின்றேன்.. நிதர்சனம் புலிகளுக்கு ஆதரவாக எழுதுகிறது என்பதற்காக அது புலிகளின் மைய ஊடகமாகி விடாது. அது ஒரு லூசுத்தளம்.

தவிரவும் உலகளாவிய ஊடகங்கள் நிதர்சனத்தில் இருந்து தான் செய்தியினை பெறுகிறன என்று எழுதியிருக்கிறிர்கள். நான் அறிந்த வரை என்னவோ நிலைமை தலைகீழாகத்தான் இருக்கிறது.

நிதர்சனத்தின் தற்போதைய செய்தி வெறும் கப்சா என்கிறார் வன்னியிலுள்ள புலிகளின் மைய ஊடகத்தை சேர்ந்த ஒருவர்.

Thursday, September 08, 2005

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் -3

கடந்த இரண்டு பதிவுகளுக்கும் வந்த எதிரிவினைகள் பார்த்தேன். புலிகளின் ஐனநாயக விரோத செயல்கள் படுகொலைகள் குறித்து எழுதினால், வரும் ஆபாச அருவருக்கத்தக்க பின்னூட்டங்கள் போலல்லாது(அவற்றையும் அவற்றை விட்டுவைப்பதையுமே புலி எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள் என்பது வேறு விடயம். ) இந்த பதிவு குறித்து எழுதினவர்கள் பண்பாக பொறுமையுடன் எழுதியிருந்தார்கள்.

ஆயினும் கொழுவிக்கு ஒரு ஆதங்கம் இருக்கிறது. இதுவரை நாளில் புலிகள் கடந்த காலங்களில் செய்த படுகொலைகள் ஐனநாயக விரோத செயல்கள் குறித்து எத்தனை பதிவுகள் வந்திருக்கின்றன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.

புலிகள் முஸ்லீம்களை கொலை செய்தார்கள், புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள், புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தார்கள்.. என இப்படி எத்தனை பதிவுகள்...

அப்போதெல்லாம் யாருமே எதற்காக நடந்த முடிந்தவற்றை மீண்டும் கிளறுகிறீர்கள்? இதனால் என்ன நேர்ந்து விடப் போகிறது? என கேட்கவில்லை.

இந்திய ராணுவத்தினரின் படுகொலைகள் குறித்த இந்த பதிவினை நிறுத்தச் சொன்னவர்களின் நேர்மை எங்கே வெளிப்பட்டிருக்குமென்றால், புலிகளின் நடந்து முடிந்த விரோத செயல்கள் குறித்த பதிவுகளையும் நிறுத்த சொல்லுமாறு கேட்டிருக்கும் போது மட்டுமே!

தவிரவும் பின்னூட்டம் ஒன்றில் இந்தியா எல்லாவற்றையும் மறந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது என ஒருவர் சொல்லியிருந்தார். இன்றைக்கும் இந்திய றோ வாய்ப்புக் கிடைத்தால் பிரபாகரனை போட்டுத்தள்ள தயாராக இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அதிகார பலம் அதிகரித்தவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

இந்தப் பதிவினை இங்கே மீளவும் இட்டதன் நோக்கம் இன்னும் பல இந்திய சகோதரர்களுக்கு 'அமைதி காக்க' சென்ற எங்கள் படையினரை ஏன் ஈழத்தமிழர்கள் வெறுக்கிறார்கள்? ஏன் புலிகள் யுத்தத்திற்கு இழுத்தார்கள் என்ற கேள்வி இருக்கிறது.

ஆகக் குறைந்தது அவர்களுக்கு ஒரு Out Line ஆவது கிடைக்கும் என்ற நோக்கில் இதை வெளியிட்டேன். தவிரவும் இது ஒன்றும் இணையத்திற்கு புதிய பதிவல்ல.

எனக்கும் எங்களுக்கும் எல்லாவற்றையும் மறந்து போக விருப்பம். ஆனால் நீங்கள் மட்டும் நாங்கள் செய்த கொடூரங்களை மறந்து போங்கள். ஆனால் நாங்கள் உங்களின் கொடூரச் செயல்களை நினைவு வைத்திருப்போம் என்பது என்ன நியாயம்!

எவ்வாறெனினும் எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள், எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள் எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள் என விடாது தொடர்பவர்களுக்கும் எனக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும் என்பதால் இதனை இந்தப் பதிவினை நிறுத்தி விடுகிறேன்.

இனி வராது.

நண்பர்களுக்கு மீண்டும் ஒரு விடயம். இப்பதிவின் நோக்கம் இந்தியாவை மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கேட்பதல்ல!

இப்படியாக எங்களுக்கு நடந்தது. இத்தனை கொடுமைகளை நாம் அனுபவித்தோம் எங்களுக்கு உண்டாகியிருக்கக் கூடிய கோபத்தை ஆதங்கத்தை கொஞ்சமாவது புரிந்து கொள்ளுங்களேன் என்பதை வெளிக்காட்டவே!

மறக்கலாம். முதல் மனிதனாக கை நீட்டுகிறேன். பதிலுக்கு நீங்களும் பற்றிக் குலுக்குவீர்களா?


Wednesday, September 07, 2005

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும்-2

எங்காவது இணையத்தளங்களிலிருந்து வெட்டி ஒட்டுவதும், ஒரு கட்டத்தில் ஒரு விவாதத் தளத்தினை உருவாக்கவே அவ்வாறு செய்தேன் என அறிக்கை விடுவதும், இப்பொதைய Style என்ற காரணத்தினால் கொழுவியும் வெட்டுகிறான் பின்னர் ஒட்டுகிறான். இதுவும் ஓர் திறந்த விவாத தளத்தினை உண்டாக்கவே என கூறிக் கொள்கிறான். யாராவது இதனை தக்க ஆதாரங்களுடன் மறுத்தால்( ஏதோ ஒரு பதிவை ஈழநாதன் வெட்டு ஒன்றாய் துண்டு இரண்டாய் மறுத்திருந்தாரே) அதனையும் வெளியிடுவோம். இதனை எழுதியவர் பழ.நெடுமாறன்.

இப்போதைக்கு இது தொடராக இங்கே வரும்.

இந்த நிகழ்ச்சி நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ பிரிகேடியர் சங்கர் பிரசாத் என்பவர் மக்கள் குழு உறுப்பினர்களைக் கூட்டிப் பின்வருமாறு கொக்கரித்தாராம்.

'இந்திய இராணுவம் மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் உங்கள் ஊரை அடியோடு எரிப்பேன். நு}ற்றுக்கணக்கில் மக்களைச் சுட்டுத் தள்ளுவேன். இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்டதைப் போல மீண்டும் இலங்கை எரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உலகின் 4 ஆவது பெரிய இராணுவம்"

அவர் மிரட்டியதைப் போலவே விரைவில் நடந்தது. அழகிய வல்லை நிகரம் சுடுகாடானது. அந்த சோக வரலாற்றினைக் கீழே தந்துள்ளேன்.

மினி வீடியோ சினிமா கொட்டகை ஒன்றில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சுமார் 30 பேரை வெளியே கொண்டுவந்து நடுத்தெருவில் உச்சி வெயிலில் உட்கார வைத்தார்கள். அங்கு நின்ற ஒரு சீக்கிய சிப்பாய் திடீர் என இயந்திரத் துப்பாக்கி மூலம் படபடவென்று சுட்டான். அண்மையில் திருமணம் செய்துகொண்ட இராஜரத்தினம் என்பவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டார்.

அவர் அருகில் இருந்த கருணாநந்தராஜா என்பவர் படுகாயத்துடன் கீழே விழுந்தார். அவர் மார்பில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பயங்கரங்களைக் கண்டு மற்றவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

மற்றொரு இந்திய இராணுவ சிப்பாய் அங்கிருந்த கடைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீயை வைத்தான். இதற்கிடையில் சடையாண்டி கோயிலுக்குள் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேரை வேறு சில சிப்பாய்கள் அடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

அவர்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது ஒரு ஜீப் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து கீழே குதித்த சிப்பாய்கள் திடீர் என்று நாலாபுறமும் தானியங்கித் துப்பாக்கிகளினால் சடசடவெனச் சுட்டார்கள். 40 வயதான சிவபாக்கியம், 60 வயதான தங்கராஜா ஆகியோர் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார்கள்.

முப்பதுக்கும் அதிகமானவர்கள் பலத்த காயத்துடன் கீழே சரிந்து விழுந்தார்கள். காயம் அடைந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என்று கதறிக்கொண்டு இருந்தார்கள்.

இரத்த வெறி பிடித்த இந்தியச் சிப்பாய்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மேலும் மேலும் தங்கள் நரவேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சிவபுர வீதி என்னும் தெருவை நான் பார்வையிட்டேன். அங்கு 10 வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசம் ஆகிக் கிடப்பதைக் கண்டேன். கோட்சேயின் மறுபிறவி இந்திய இராணுவ சிப்பாய்கள் வெறிக்கு இந்தியத் தலைவர்களின் படங்கள் கூடத் தப்பவில்லை.

நெடியகாடு என்னும் பகுதியில் கணபதி படிப்பகம் ஒன்று உள்ளது. அதில் ஐந்து அடி உயரமான மகாத்மா காந்தியின் உருவப்படம் தொங்க விடப்பட்டு இருந்தது. இந்திய சிப்பாய்கள் அந்தப் படிப்பகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்கள் தேசத் தந்தையின் படத்தையும் உடைத்து எரித்துவிட்டுச் சென்றார்கள். காந்தி அடிகளின் எரிந்து கிடந்த அலங்கோலமான படத்தை நானும் பார்த்தேன். காந்தியைச் சுட்ட கோட்சே மறுபிறவி எடுத்து வந்து காந்தியின் படத்தைக்கூட விட்டுவைக்கவில்லை.

அதைப் போல வர்ணகுலசிங்கம் அரசரத்தினம் என்னும் ஒரு வணிகன் பெரிய வீடு ஒன்றும் நாசப்படுத்தப்பட்டு இருந்தததை நான் பார்த்தேன். அவர் ஓர் இந்திய பக்தர். இந்தியத் து}துவராக இருந்த தீட்சித்தின் நெருங்கிய நண்பர்.

தமிழீழ மக்களின் பிரச்சினைகளை இந்தியாவினால்தான் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்பியவர். 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்தம் மனைவி பத்மலோசினி, தம் 5 பெண் குழந்தைகளுடன் தனியாக இருந்து குடும்பத்தை எப்படியோ சிரமப்பட்டு நடத்திக் கொண்டிருந்தார்.

அந்தப் பெரிய வீட்டில் வரவேற்பறையில் இந்திரா காந்தியின் ஆளுயர மூவர்ணப்படம் தொங்கவிடப்பட்டு இருந்தது. அந்த வீட்டிற்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அதைப் பார்த்துக்கூடத் தங்கள் கொடுஞ்செயலை நிறுத்தவில்லை. வீட்டையே கொளுத்திவிட்டுச் சென்றார்கள். வித்தனை ஒழுங்கை என்னும் தெருவில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கண்டபடி சுட்டு 8 பேரைப் படுகொலை செய்து, ஏராளமானவர்களைப் படுகாயப்படுத்தி விட்டுச் சென்றார்கள். இறந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நடுவே மற்றவர்கள் அன்று நாள்கள்வரை அப்படியே பதுங்கி இருக்க வேண்டியிருந்தது.

வல்வெட்டித்துறை கிராமிய வங்கி முற்றிலுமாக எரிந்து சாம்பல் மேடாகிக் கிடந்தது. எந்தத் தெருவுக்கு நான் சென்றபோதிலும் அந்தந்த தெருக்களில் இந்திய இராணுவம் இழைத்த அட்டூழியங்களைப் பற்றியும், படுகொலைகளைப் பற்றியும் கண்ணீர்க் கதைகளை மக்கள் கூறினார்கள். வல்வெட்டித்துறையில் மட்டுமில்லாமல் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரணி, பொலிகண்டி ஆகிய இடங்களிலும் இந்திய இராணுவத்தினர் வன்முறை வெறியாட்டம் நடத்தினார்கள்.

ஊரணி அரசு மருத்துவமனையில் நு}ற்றுக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். இந்திய இராணுவம் அந்த மருத்துவமனையைச் சுற்றி வளைத்துக்கொண்டு யாரையும் வெளியே செல்லவிடவில்லை. அதே நேரத்தில் வீடுகளில் இருந்தும் கோயில்களில் இருந்தும் பலர் இராணுவத்தினரால் இழுத்து வரப்பட்டு மருத்துவமனைக்கு முன்னால் உள்ள தார்ச் சாலையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். மருத்துவமனைக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் உட்கார வைக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைவரும் முகாமுக்குக் கொண்டு போகப்பட்டனர். வல்வெட்டித்துறை சந்தையில் இருந்து 100 மீட்டர் தெற்கே தெணிய அம்பை என்ற இடத்தில் பல வீடுகள் எரிக்கப்பட்டு அந்தத் தீ மேலும் பரவிக்கொண்டே இருந்தது.

(இன்னும் வரும்)

Tuesday, September 06, 2005

இந்தியா எப்பொழுது மன்னிப்பு கேட்கும்?-1

எங்காவது இணையத்தளங்களிலிருந்து வெட்டி ஒட்டுவதும், ஒரு கட்டத்தில் ஒரு விவாதத் தளத்தினை உருவாக்கவே அவ்வாறு செய்தேன் என அறிக்கை விடுவதும், இப்பொதைய Style என்ற காரணத்தினால் கொழுவியும் வெட்டுகிறான் பின்னர் ஒட்டுகிறான். இதுவும் ஓர் திறந்த விவாத தளத்தினை உண்டாக்கவே என கூறிக் கொள்கிறான். யாராவது இதனை தக்க ஆதாரங்களுடன் மறுத்தால்( ஏதோ ஒரு பதிவை ஈழநாதன் வெட்டு ஒன்றாய் துண்டு இரண்டாய் மறுத்திருந்தாரே) அதனையும் வெளியிடுவோம்.

இதனை எழுதியவர் பழ.நெடுமாறன். இப்போதைக்கு இது தொடராக இங்கே வரும்.

1975 ஆம் ஆண்டு நிடத்தப்பட்ட அவசரகாலக் கொடுமைகளுக்கு 1980ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா மன்னிப்புக் கேட்டார்.

1984 ஆம் ஆண்டு நிடைபெற்ற சீக்கியர்கள் படுகொலை நிகழ்ச்சிக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார்.

1989ஆம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்கு யார் எப்போது மன்னிப்பு கேட்பது?

1989 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 2-4 வரையுள்ள ன்று நாள்களிலும் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகள் வரலாறு காணாத துயர நகழ்ச்சி ஆகும்.

தம்பி பிரபாகரன் அவர்களையும் மற்றும் பல புலிகளையும் பெற்றெடுத்த ஊர் என்பதனாலும், இவ்வுூர் மக்கள் அனைவருமே புலிகளுக்கு முழுமையாக ஆதரவு தந்தவர்கள் என்பதனாலும் வல்வெட்டித்துறை மீது இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு மிகுந்த கோபம் இருந்தது.

அந்தக் கோபத்தை அவர்கள் தீர்த்துக் கொண்ட விதம் மிகக் கொடூரமானது. 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் நாள் இந்தியாவில் அமிர்தசரஸ் நகரத்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. மைதானத்தில் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்களைப் பிரித்தானிய இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்தது. அந்தப் படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய பிரித்தானிய ஜெனரல் டையர் 'சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும்வரை சுட்டேன்" என்று கொக்கரித்தான்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய மக்களை அன்று கொதித்தெழ வைத்தது. ஆனால், இன்று அதே இந்திய நாட்டைச் சேர்ந்த இராணுவம் வல்வெட்டித்துறையில் மற்றொரு ஜாலியன் வாலாபாக்கை நடத்திக் காட்டியது.

ஜனதாதள தலைவர்களுள் ஒருவரும் என்னுடைய நண்பருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தப் படுகொலையை வியட்நாமில் நிடைபெற்ற 'மயிலாய்" படுகொலைக்கு ஒப்பிட்டார்.

வியட்நாமில் மயிலாய் என்ற இடத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் பற்றி அறிய நேர்ந்த போது உலகெங்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்காவிலேயே பத்திரிகையாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு இந்தக் கொடூரமான கொலைகளைப் பகிரங்கமாகக் கண்டித்தனர்.

ஆனால், வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகளை இந்திய அரசு திட்டமிட்டு மறைத்தது. இந்தியப் பத்திரிகைகளுள் பெரும்பகுதி இச்செய்தியை மறைப்பதில் ஒத்துழைப்புக் கொடுத்தன.

ஆனால், வல்வெட்டித்துறையில் இச்சம்பவம் நடந்த 13 நாட்களுக்குப் பிறகு அங்கு சென்ற இலண்டன் 'பைனான்ஸியல் டைம்ஸ்" பத்திரிகையின் டெல்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ இச்சம்பவத்தைப் பற்றிய விவரங்களை முதன் முதலாக ஆகஸ்ட் 17 ஆம் நாளன்று அவரது பத்திரிகையின் வாயிலாக அம்பலப்படுத்தினார்.

அதையடுத்து இலண்டன், 'டெலிகிராப்" பத்திரிகையின் டெல்லி நிருபர் ஜெரமி கங்ரான் என்பவரும் இச்செய்தியை வெளியிட்டார். இந்தியப் பத்திரிகைகள் இச்செய்தியை அடியோடு மூடி மறைத்தன.

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் இச்செய்தி பரபரப்பாக வெளிவந்த பிறகு செப்டம்பர் 3 ஆம் நாள் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்" சிறிய அளவில் இச்செய்தியை வெளியிட்டது.

இந்த முறை வல்வெட்டித்துறைக்கு நான் சென்றபோது இந்தப் படுகொலைகள் பற்றிய முழு விவரத்தையும் அறிந்துகொள்ள முயற்சி செய்தேன். வல்லை மக்கள் குழுவின் தலைவர் எஸ்.செல்வேந்திரா, செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் நடனசிகாமணி உட்பட பலரை நான் சந்தித்துப் பேசினேன். இப்படுகொலைகள் நடைபெற்று ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பிறகு கூட அந்த அதிர்ச்சியில் இருந்து வல்லை மக்கள் மீளாததை நான் பார்த்தேன்.

1989 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 2 ஆம் நாள் வல்வெட்டித்துறை சந்தைச் சதுக்கத்தில் காலை 11 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதில் 6 இந்தியப் படை வீரர்கள் இறந்ததுடன் 11 பேர் காயம் அடைந்தனர். இந்நகழ்ச்சியைத் தொடர்ந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி இருந்த அன்று இராணுவ முகாம்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் வெறியுடன் புறப்பட்டு வந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி வளைத்தனர்.

உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். தொடர்ச்சியாக அன்று நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியே வராமல் அச்சத்துடன் பதுங்கியிருந்த மக்களை வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பதறப் பதறச் சுட்டுக் கொன்றார்கள்.

மொத்தம் 63 பேர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டனர். நுற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு முன்வந்த பிரான்சு மருத்துவக் குழுவினரை ஊருக்குள் நுழையவே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து அன்று நாள்களாக இராணுவத்தினர் ஊரைச் சுற்றி முற்றுகையிட்டு இருந்ததால் இறந்து போனவர்களின் பிணங்களைக்கூட அப்புறப்படுத்த முடியவில்லை. பிணங்கள் அழுகிப்போன நிலையில் அந்தந்த வீடுகளுக்குள்ளேயே வைத்து உறவினர்களால் எரிக்கப்பட்டன.

கணவர் உடலை மனைவியும், மனைவியின் உடலைக் கணவரும், பெற்றோரின் உடலைப் பிள்ளைகளும், பிள்ளைகளின் உடலைப் பெற்றோரும் எரிக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாயினர். மொத்தம் 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் முழுமையாக எரிக்கப்பட்டுச் சாம்பலாயின. 12 மீன்பிடி படகுகள் நாசம் செய்யப்பட்டன. 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டன. பல வீடுகளில் தங்க நிகைகள், பணம், மின்னணுப் பொருள்கள் இந்திய இராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் மிக மோசமான முறையில் கற்பழிக்கப்பட்டார்கள்.

---- இன்னும் வரும்---


Saturday, September 03, 2005

காணாமற் போனோர் பட்டியல்

தமிழ்வலைப்பதிவுக் கூட்டத்தில் அண்மைக்காலத்திற் காணாமற்போனோரின் பட்டியலொன்றை இங்கே வெளியிடுகிறேன்.
இவர்களைக் கண்டுபிடிப்பவர்கள் எனக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சன்மானம் பேசித் தீர்க்கப்படும்.

சிப்பிக்குள் முத்து. (முத்தெடுக்கப் போயிருப்பாரோ?)
அல்வாசிட்டி விஜய் (அல்வா குடுத்திட்டாரோ?)
மரம் (யாராவது தறித்துவிட்டார்களோ?)
பெடியன்கள்(உள்ளே போட்டுவிட்டார்களோ?)

இவர்களைத் திரும்பி வரச்சொல்லி ஆராவது கண்ணீர்க் கவிதைகள் எழுதியனுப்பலாம்.
எனக்குக் கவித வராதுங்கோ.

இவர்களைவிட இன்னும் பலர் காணாமற்போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
கூட்டாகத் தேடுவோம்.

Thursday, September 01, 2005

கிளின்ரன் அடித்த வங்கிக் கொள்ளை.

உங்களுக்குக் கிளின்ரனைத் தெரிந்திருக்கும். அவர் செய்த வங்கிக் கொள்ளையொன்று அண்மையில் வெளிப்பட்டுள்ளது. ஜோர் காலிம் என்பவன் கிளின்ரனோடு முன்பு ஒன்றாக வேலை செய்தவன். அதைவிட ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த நட்பு அவர்கள் வளர்ந்தபின்னும் இருந்தது. கிளின்ரன் அரச நிர்வாகத்தைச் செய்தபோதும் சாதாரண பிரஜை என்ற உறவும், ஜோர் செய்யும் தொழில் நிமித்தமான உறவும் அவர்களுக்குள் இருந்தது.

ஒருநாள் கிளின்ரனின் அந்தக் கொள்ளை அம்பலமானது. அவரின் நண்பனான ஜோர் காலிம் வங்கியொன்றை ஆயுதமுனையில் பலவந்தமாகக் கொள்ளையடித்தான். பின் பிடிபட்டுவிட்டான். இதில் ஏன் கிளின்ரன் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்று கேட்கிறீர்களா? பின்னே? அவருடைய நண்பர்(தொழில்முறை நண்பர்) செய்த பலவந்தக் கொள்ளைக்கு அவர் காரணமில்லாமற் போகமுடியுமா? இது என்ன லாஜிக் என்று கேட்டால், அது அப்படித்தான். அப்படித்தான் சொல்கிறார்கள். இந்தக் கொள்ளையை வைத்தே கிளின்ரன் கொள்ளையிட்டார் என்று தலையங்கம் தீட்டி ஊடகங்கள் கட்டுரைகள் எழுதின.

இந்த வாதத்தை இன்னும் வலுவாக்க அந்த ஊடகங்கள் (அதாவது நாங்கள்) என்ன செய்தன தெரியுமா? கிளின்ரனே பல கொள்ளைகளை நேரடியாக நடத்தினார் என்ற ஒரு கதையை அவிழ்த்துவிடுவது. கிளின்ரனை அறிந்த யாருமே இதைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்ற கவலை எங்களுக்கில்லை.(எங்கள் பெயரோடு ஒரு முனைவர் பட்டத்தையும் போட்டால் சிலர் எங்களைப் புத்திசாலிகள் என்று நினைக்கக்கூடும் என்பதற்காக அதையும் செய்தோம்) எங்களுக்குத் தேவை கிளின்ரனை எப்படியாவது மட்டந்தட்ட வேண்டும். அவ்வளவுதான்.

ஆக, கள்ளனைப் பற்றியோ, களவைப் பற்றியோ கட்டுரை எழுதாமல், நாம் யாரைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறோமோ அவனோடு இவன்(கள்ளன்) ஒருநாள் தேத்தண்ணி குடித்தான் என்று ஒரு கதை உருவாக்கி(அது உண்மையாகவுமிருக்கலாம்) நாம் நினைத்தவனைத் தாக்கிக் கட்டுரை வரையலாம். இதுவொரு ஊடக தர்மம். கிளின்ரன் விசயத்தில் அதுதான் நடந்தது.

குறிப்பு: கிளின்ரன் (சிலர் கள்ளன் என்றும் வாசிக்கலாம்)பற்றிப் பத்து வசனம் எழுதச் சொல்லிக் கேட்டதுக்கிணங்க, எழுதப்பட்டது இப்பதிவு.

பாத்திரங்கள் கற்பனையானவை.

Sunday, August 28, 2005

இசையும் அரைமணிக் கதையும்

ஈழநாதன் சிலநாட்களின் முன் இசை பற்றிய ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் நான், என்னால் அரைமணித்தியாலம் ‘தகரமடிப்பதை’ப் பற்றி பேச முடியுமென்று பின்னூட்டம் இட்டுவிட்டேன். அதைக்கண்ட சயந்தன், அப்படி அரைமணித்தியாலம் கதைப்பதென்பது அபூர்வமான விசயம் போலச் சொல்லி அதைப் பதிவாக இடும்படிக் கேட்டுக்கொண்டார். அதனால் இந்தப் பதிவு.
(அரை மணித்தியாலம் கதைக்கக் கூடிய விசயத்தையெல்லாம் பதிவாகப் போடலாமா என்பதில் எனக்கு ஐயமுண்டு. இன்று காலை நான் சாப்பிட்ட இடியப்பமும் சொதியும் பற்றிக்கூட என்னால் அரைமணித்தியாலம் கதைக்க முடியும்.)

சரி, விளையாட்டுப் போட்டிகளுக்கு வெறுமனே ஒரு பார்வையாளனாக மட்டும் போகாமல் குறிப்பிட்ட அணியொன்றின் விசிறியாகப் போயிருந்தீர்களென்றால் உங்களுக்கு இப்பதிவு புரியும். குறிப்பாக உதைபந்தாட்டப் போட்டிகளுக்குச் சென்றிருந்தால்.

எனது பாடசாலையணி விளையாடியபோது உற்சாகமூட்டுவதற்காக நாங்கள் சிலர் நிறைய வேலைகள் செய்வோம். அதிலொன்று விளையாட்டின்போது (அதற்குப்பின்னும்கூட) தகரம் தட்டி, கோசம் போடுதல்.

முதலில் நல்ல கறள் பிடிச்ச ஒரு மண்ணெண்ணெய் உருளையை எடுத்துக்கொள்ள வேணும். பெரும்பாலும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்திலும் ஒரு மூலையில் குறைந்த பட்சம் இரண்டு அரை உருளைகளாவது இருக்கும் (அணிக்கு ஒரு உருளையாக). அதில் நல்லதை எடுப்பதற்குப் போட்டிகளுமுண்டு. அதிஸ்டமுள்ளது அதிஸ்டம் கெட்டது எண்டுகூட இந்தத் தெரிவில பாக்கிறதுண்டு. ஒரு மணித்தியாலத்துக்கு முதலேபோய் நல்ல தகரத்தை எடுத்துவச்சு, அதிகமான நேரம் நிழல் விழக்கூடிய இடமாப் பாத்து, சகல ஆயத்தங்களோடயும் இருப்பம்.

நல்ல தடிகள் 4 தேவை. பொதுவாகப் பூவரசம் தடிகள்தான் பாவிப்பம். ஆனா சவுக்கந்தடி கிடைச்ச நல்லம். அதின்ர ‘நாதம்’ அந்த மாதிரியிருக்கும். தடிகளை முறச்சு எடுக்கக்கூடாது. முறிச்ச தடியின்ர நுனி தும்பு போல இருக்கிறதால சரியான ‘நாதம்’ வராது. ஜங், ஜங் எண்ட ஒரு ஒலிதான் வரும். அதால நுனிய மட்டமா வெட்டி வச்சுக்கொள்ள வேணும்.


விளையாட்டு வீரர்கள் மைதானத்துக்குள்ள போகேக்க தகரத்தைத் தட்டத் துவங்க வேணும். முதல் ஒருத்தர் தான் தட்டவேணும். சூடுபிடிக்கப் பிடிக்க இன்னொராள் சேரலாம்.
பந்து எங்கட ஆக்களின்ர காலுக்குள்ள நிக்கேக்க, அதுவும் எதிர்ப்பக்கத்தின் கோல்போஸ்டுக்குக் கிட்டவா நிக்கேக்க தட்டலாம். தனிய தகரம் மட்டும் தட்டுறது காணாது. அதோட பக்கத்தில ஒரு கோஸ்டி நிண்டு கத்த வேணும். அதுவும் இசைநயத்தோட கத்த வேணும். இதுக்கெல்லாம் நிரந்தரமா சில ‘ராகங்கள்’ இருக்கு. நான் பாக்கத்தக்கதா பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் ஒரே மெட்டைத்தான் இப்படிக் கத்துறதுக்கு பாவிக்கிறவை. "ஏழு ஸ்வரங்களுக்குள்ள தானே முழு இசையும் இருக்கு?"


ஒரு கோல் எமது அணியால் போடப்பட்டுவிட்டால் தகரமடி உச்சஸ்தாயியில இருக்க வேணும். கூடவே கத்துற வரிகளும்.


அதில வாற ஒரு வரி,

இந்த அடி போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?’

இந்த வரிகளையும் மெட்டையும் அப்படியே ‘களவெடுத்து’ கில்லி படத்தில பாவிச்சிட்டாங்கள். (பாட்டுவரியில மட்டும் சின்ன மாற்றம் செய்திருக்கிறாங்கள். ‘இந்த அடி’ எண்டு திரிசாவும் விஜயும் பாடினா அர்த்தம் பிசகிப்போடும் எண்டாக்கும்)

மேலும், பொதுவான நேரங்களில்,
கொலிஜ் கொலிஜ் எண்டு ஒருத்தர் கத்த, மற்றவர்அந்தப் பள்ளிக்கூடத்தின்ர பேரச் சொல்லுவார்.எப்பிடிக் கத்தினாலும் நாகரிகம் குறையாமல் இருக்கும்.

தள்ளுங்கராஜா
உள்ளுக்க போடா
எட்டு கோல்
எண்ணியடி

எண்டும் வரிகள் வரும்.

உந்த 'தள்ளுங்கராஜா' எண்டது ஆரெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எங்கட பள்ளிக்கூடத்துக்கான கோசத்திலதான் இந்தப்பேர் வரும். மற்றப் பள்ளிக்கூடத்துக்கானதில வேறயொரு பேர் வரும். ஆக அது அந்தந்தப் பள்ளிக்கூடத்துக்கான ஒரு வீரனின்ர பேர நிரப்பிற இடம். ஆனா எங்கட பள்ளிக்கூடத்தில அப்பிடியொருத்தன் விளையாடினதா எனக்குத் தெரியேல. விசாரிச்சுப்பாத்ததில ஒரு வாத்தி சொன்னார், 15 வருசத்துக்கு முந்தி, தான் படிக்கேக்கயும் இந்தப்பேரத்தான் கத்திறனாங்களெண்டு. அப்ப இது ஆரோ ஒரு மூத்த விளையாட்டுவீரனின்ர பேராத்தான் இருக்கோணும். எவ்வளவு பேரும் புகழும் பாத்தியளோ அந்த வீரருக்கு?

எதிரணி பந்து கொண்டந்து கோலடிக்க முடியாமல் போனாலும் தகரமடிக்க வேணும். இதில தகரமடிக்கிறவனுக்கு இருக்கிற கஸ்டம் என்னெண்டா விளையாட்ட சரியா ரசிக்க முடியாது. ஆனா மற்றவங்கள் அவ்வளவு நல்லா அடிக்கவும் மாட்டாங்கள். சரியான ‘ராகதாளத்தோட’ அடிக்கிற கலை சிலருக்குத்தான் வரும். ஆனா அந்தக் கலைஞனுக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும். ஒரு சிறந்த விளையாட்டு வீரனுக்கு நிகரான மரியாதை கிடைக்கும். முக்கியமான போட்டியில வெண்ட பிறகு எங்கயாவது ஒரு சாப்பாட்டுக்கடைக்கு அந்த அணியக் கூட்டிக்கொண்டு போவினம். அப்ப விளையாடின வீரர்கள், பயிற்சியாளர் தவிர உள்ள போற ஒரேஆள் இந்த தகரமடிக்கிறவன் தானெண்டா அதுக்கு இருக்கிற மரியாதையைப் பாருங்கோவன். பின்னேரம் போட்டி எண்டா, கடைசி ரெண்டு பாடத்துக்கு இருக்கத் தேவையில்லாமல் விளையாட்டு வீரர்கள வெள்ளன வீட்டை விடுவினம். அதோட இந்த தகரமடிக்கிறதெண்டு 3 பேரையும் வெள்ளன பள்ளிக்கூடத்தியிருந்து போக அனுமதிப்பினம்.

ஒருக்கா ஒரு பள்ளிக்கூடத்தில நடந்த மாவட்ட மட்ட உதைபந்தாட்டப் போட்டியில எங்கட பள்ளிக்கூடம் வெண்டிட்டுது. சந்தோசம் தாங்க முடியேல. அப்ப ஒரு வாகனம் பிடிச்சுத்தான் திரும்பவும் எங்கட இடத்துக்கு வாறம். அப்ப வாறவழயில சும்மா வரலாமோ? அதுக்காக அந்தப் பள்ளிக்கூட மைதானத்திலயிருந்த தகரத்தையும் தூக்கி வாகனத்தில ஏத்திக்கொண்டு வெளிக்கிட்டாச்சு.

பள்ளிக்கூடத்தைவிட்டு வாகனம் தாண்டின உடன ஒரே கும்மாளம்தான். தகரம் தட்டி கோசம் போடுப்படுது. நிறையச் சனம் பாதையில போய்வந்ததால வாகனம் நல்ல மெதுவாத்தான் வந்துது. ஒரு அரை மைல் வந்திருப்பம், பின்னால சைக்கிளில கலைச்சுக்கொண்டு வந்த பொடிப்பிள்ளையள் மறிச்சுப்போட்டாங்கள். என்ன பிரச்சினையெண்டா அந்த மைதானத்துக்குரிய தகரத்தைத் தூக்கிக்கொண்டு வந்திட்டமெண்டதுதான் பிரச்சினை. அவங்கள் விடுறமாதிரித் தெரியேல. கடசியா தகரத்தைத் தாரை வாத்திட்டு வந்தது தான்.

ம்… இந்தக் காலத்தில அந்தக் கலைஞர்களை எங்க மதிக்கப் போயினம்?




Saturday, August 13, 2005

பேசாதிருப்போம்.

பேசிப் பேசி என்னத்தைக் கண்டோம்?
பேசாமலிருப்பது கடினமில்லை.
இயலாதது யாதெனில்,
நாம் பேசாமலிருக்கும் போது
பேசிப் பேசியே கொல்வதைக்
கேட்டுக் கொண்டிருப்பது.

பேசிப் பேசியே
பேசாமலிருப்பவனைப் பேச வைப்பதில்
கில்லாடிகள் அவர்கள்.

பேச்சும் மூச்சும் ஒன்றுதான்.
எதுகை எவ்வளவு அழகாக வருகிறது.
பேசும்போது இயல்பாகவே மூச்சு விடுகிறோம்
எனவே பேசாமல் இருந்தாலும்
மூச்சுவிட மறக்காதீர்கள்
பின்னர்,
பேச்சு மூச்சற்றுப் போய் வீடுவீர்கள்.

நீ பேசுவதைக் களவெடுத்து
இன்னொருவன் பேசுவானென்று
கவலை கொள்ளாதே.
நீ விடும் மூச்சைக் கூட
இன்னொருவன் எடுத்துச் சுவாசிக்கிறான்,
உன்னைப் போலவே.
ஆக
இன்னொருவனின் மூச்சை
எடுத்துவிடுவதைப் போல
பேச்சையும் எடுத்துவிடுவதில்
என்ன தப்பு?
இரண்டுமே உயிர்வாழத்
தேவை தானே?

ஆகவே,
பேசு பேசு பேசு.
நீ
பேசவில்லையென்றாலும்
பேசும் கலையை மறக்கவில்லையென்றாவது
பிறருக்குத் தெரிய(ப்) பேசு.

;-) ;-) ;-) ;-) ;-) ;-)

Wednesday, July 20, 2005

உருமறைக்கப்பட்ட விமானமும் இன்னும்..

இரவுப்பார்வை கருவியினால் எடுக்கப்பட்டதல்ல!
Image hosted by Photobucket.com

Sunday, July 17, 2005

என் விருப்பப் பாடல் இன்குலாப் எழுதி...

"கவிப்பேரரசு" வைரமுத்து காசி ஆனந்தனையும் இன்குலாப்பையும் அழைத்துக் கெளரவித்துள்ளதாகச் செய்தி. அக்கெளரவத்தை ஏற்றிருக்கக் கூடாது என்று ரவி அவர்கள் எழுதியுள்ளார்.

இன்குலாப்பை ஒரு கவிஞராய் எனக்குப் பிடிக்கும். அவரின் தனிப்பட்ட எளிமையான வாழ்வும் பிடிக்கும். அவரின் ஒரு கவிதைத் தொகுப்பைப் படித்துள்ளேன். சினிமாப் பாடல்கள் எழுதாத அவர் ஒரு பாடல் மூலம் என்னை மேலும் ஆகர்சித்துக்கொண்டார்.

என் சிறுவயதுப் பராயத்தில் ஒரு பாடல் மிகப்பிரபல்யமாயிருந்தது. அதன் இசையமைப்பு மற்றும் வரிகள் எம்மைக் கட்டிப்போட்டிருந்தன. தொன்னூறின் தொடக்கத்தில் எங்கும் அந்தப் பாட்டைக் கேட்கலாம். அப்போது அதை எழுதியவரோ பாடியவரோ எமக்குத் தெரியாது. பாடல் மட்டும் நிரந்தரமாக மனசில் கதிரைபோட்டு இருந்துகொண்டது.

பின்னர் அப்பாடலை எழுதியவர் தமிழகத்தைச் சேர்ந்த இன்குலாப் என்றும் பாடியவர் மனோ என்றும் (அப்போது தான் எங்கு பார்த்தாலும் சின்னத்தம்பிப் பாடல்கள்) அறிந்த போது ஆச்சரியம். இப்போது இன்குலாப்பின் கதை வந்தபோது அவர் எழுதிய மூன்று பாடல்களுள் எனக்கு மிகப்பிடித்த பாடலை இங்கே பதிகிறேன்.

கேட்டு, படித்து கருத்தைச் சொல்லுங்கள்.

பாடல் கேட்க இங்கே.

இனி பாடல் வரிகள்.

**********************************************
ஒப்புக்குப் போர்த்திய அமைதித் திரையின்
ஓரங்கள் பற்றியெரிகின்றன...
ஒடுக்க முடியாத உண்மையின் குரல்கள்
உலகின் முற்றத்தில் ஒலிக்கின்றன.

ஏழுகடல்களும் பாடட்டும் -இனி
எட்டாத வானமும் கேட்கட்டும் (2)
ஈழவிடுதலைப் புலிகளின் குருதியில்
எழுதப்படுகின்ற மானுட கானத்தை
ஏழுகடல்களும் பாடட்டும்.......

ஆயிரம் பறவைகள் எங்கள் கானக
மரங்களில் கூடுகட்டலாம்
அவைகள் உலகசமத்துவம் பாடி
எங்கள் தரைகளில் முட்டலாம்

போர்விமானம் எம் தலைக்கு மேலெனில்
புகையும் எங்கள் துப்பாக்கி
போர்க்கப்பல் எம் அலைக்கு மேலெனில்
கடலே எதிரிக்குச் சமாதி -இதை
ஏழுகடல்களும் பாடட்டும்......
**********************************************

பாடல் தந்த தளத்துக்கு நன்றி.