Wednesday, December 24, 2008

யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
தீபச்செல்வன்


வாழ்வுக்கு தவிக்கிற குழந்தைகள்
மறைந்திருக்கிற தரையில்
சிலுவைகள் புதைக்கப்பட்டிருக்க
யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

உமக்கான மாட்டுத்தொலுவங்கள்
எம்மிடம் இல்லை.
வைக்கோல் பட்டறைகளும் இல்லை;.

நீர் அறிந்திருக்காத சிலுவைகளை
நாம் சுமக்கிறோம்.

மழைக்காலத்தில் ஏணைகள்
இல்லாமல் தடிகளில் உறங்குகிற
குழந்தைகளை
வெட்டிப்போட கத்திகளுடன் திரிகின்றன
ஏரோது மன்னின் படைகள்.

குதிரைகள் அலருகிற இரவில்
குழந்தைகளை நாம் கட்டுக்குள்
கொண்டு வைத்திருக்கிறோம்.

படுக்கைகளில் குருதி வழிந்தோடுகிறது
தூக்கத்தில் பறி எடுத்த
குழந்தையை விமானம் தின்று
வீசிவிட்டுப் போகிறது.

நீர் மீண்டும் ஒரு சிலுவையை
இங்கு விட்டுச் செல்ல வேண்டாம்.

உம்மால் தாங்கிக் கொள்ள முடியாத
வலிகளான தொலுவங்களில்
போரிடம் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன
நமது தேசத்தின் குழந்தைகள்.

நீர் இந்த தேசத்தில்
இப்போது பிறக்க வேண்டாம்.

கத்திகள் அலைகிற காடுகளில்
நம்முடன் எங்கு வரப் போகிறீர்?
வெட்டுப்பட்ட சொற்களுடன்
நாம் ஒரு பாடலை தேடுகிற போரில்
நீர் சுமந்திராத
சிலுவைகளை சுமக்கிறோம்.

ஏராது மன்னன் பெரும் பசியுடன் வாளுக்கு
இரை தேடுகிற நாட்களில்
இங்கு எண்ணிக்கையற்ற மரியாள்கள்
தமது குழந்தைகளை கொண்டு ஒளிகின்றனர்.

Monday, December 15, 2008

வான்புலிகள் எரிச்சலூட்டுகின்றார்கள் - இந்தியா

புலிகளின் வான்படை இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை.
ஆனால் எரிச்சலூட்டுகிறது.

கொரில்லா அமைப்புக்களோ, பயங்கரவாதிகளோ பயன்படுத்ததாக ஆயுதமான விமானத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் களஞ்சியங்கள் மீது நடத்தியிருக்கும் வான் தாக்குதல் குறித்து இந்தியா அக்கறை செலுத்தியிருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலமானது பிராந்திய விவகாரமாக நோக்கப்படுவதாக பாதுகாப்பு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் திறை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்துள்ளது என இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீவ் ஃபாலி ஹோமி மேஜர் கூறியிருப்பதாக அந்த இணையம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் புலிகளின் வான் தாக்குதல் பலத்தை இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லையென அவர் கூறியுள்ளார்.

இதனால், இஸ்ரேலிடம் கொள்வனவு செய்த அதிநவீன ரேடர் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்திருக்கும் தாக்குதல் பற்றி இந்தியப் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தியிருப்பதுடன் “இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் அதி நவீன ரேடர்கள் தாழப் பறக்கும் விமானங்களின் ஊடுருவல்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்று டெய்லி இந்தியா அண்மையில் செய்தி வெளியிட்டிருந்ததை அந்த இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், இந்திய கடற்படை இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஆளில்லாத உளவு விமானங்களைக் கூடுதலாகப் பயன்படுத்துவதற்கும், மேலும் இரண்டு கப்பல்களைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய விமானப்படை நகர்த்தக் கூடிய சிறிய ரஷ்யத் தயாரிப்பு ரேடார்களை கல்பாக்கம் அணுஉற்பத்தி நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பொருத்தியிருப்பதாக அந்த இணையச் செய்தி கூறுகிறது.

இதற்கும் மேலதிகமாக இந்திய விமானப்படை ‘எரோஸ்டட்’ ரேடார்களை தமிழகக் கரையோரங்களில் பொருத்தியிருப்பதுடன், இஸ்ரேலியத் தயாரிப்பான ஈ.எல்.ஃஎம்.-2083 எரோஸ்டட் ரேடர்கள் இரண்டும் தமிழகத்தில் பொருத்தப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வான்பரப்பிலிருந்து கட்டுப்படுத்தக்கூடிய இஸ்ரேலியத் தயாரிப்பு விமானங்களைக் கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Saturday, December 13, 2008

மும்பைத் தாக்குதலைக் கண்டிக்கிறாம் - புலிகள்

நிலவரம் இதழுக்கு அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் வழங்கிய செவ்வியிலிருந்து

அண்மையில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலால் இந்தியாவின் அரசியல் சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதன் பாதிப்பு மேலும் உணரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் புதிய சூழ்நிலை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்?

மும்பாய் மீதான குண்டுத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு சீரழிப்பு முயற்சியே அது. குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை இந்தியப் புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராகச் சில நாடுகள் திரைமறைவில் செயற்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான அந்தப் பகைமை நாடுகளுடன் சிங்கள அரசு உறவு பேணி வருகின்றது என்பது வெளிப்படை. இது இந்திய இராஜதந்திரிகளுக்கும் நன்கு தெரியும்.

ஒரு இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழம் போராடுகின்றது. இதுவொரு விடுதலைப் போராட்டம் காலங்காலமாக அடக்கப்பட்ட இனங்கள் விடுதலை கோரிப் போராடுவது வரலாற்று வழமை. தமிழீழ மண்ணில் தமிழரின் நலன்களை முன்வைத்து எமது போராட்டம் நடக்கின்றது.

கண்டனம் தெரிவிக்கவில்லையென கடிந்த இந்துவும் அதன் இளவல்களும்.. இவர்களுக்கென்ன தகுதியிருக்கிறது கண்டிப்பதற்கென இனி மறுவளத்தால் வருவார்கள். : )

Sunday, December 07, 2008

கடலோரக் காற்று - தமிழீழ முழு நீளத்திரைப்படம்

2002 இல் வெளியான இத்திரைப்படம் ஈழத்து கடலோர மக்களின் துயர் மிகு வாழ்வினையும் மக்களுக்கும் போராளிகளுக்குமான உறவுகளையும் போராளிகளின் கலகலப்பு மிக்க உணர்வு மிக்க வாழ்வினையும் இயல்பாக எடுத்து கூறுகிறது.

தாயக நிலவரம் - பிரபாகரனது உரை தொடர்பான அலசல்

Saturday, December 06, 2008

Since I left my motherland

எங்கெங்கோ கண்காணத தேசங்களில் போய்விட்ட பிறகும் அடுத்த தலைமுறை வேரை மறக்காதென்பதற்கு ஆங்காங்கே தெரிகின்றன ஒளிகள்.

இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் ஈழத்தமிழரின் குமுறல்
















Friday, December 05, 2008

Tuesday, December 02, 2008

நாங்களும் மனிசர்தானே..?

OFAB-500 ரக க்ளஸ்டர் (Cluster) குண்டுகள் ரஸ்யத்தயாரிப்பானவை. கொத்தணிக் குண்டுகள் என தமிழில் சொல்லப் படுகின்றன. பெரும் பீப்பாய் ஒன்றினுள் நூற்றுக்கணக்கான சிறு சிறு வெடிகுண்டுகளை அடைந்து அவை வானிலிருந்து வீசப்படுகின்றன. சாதாரண குண்டுகளை விட மோசமான விளைவுககைத் தரவல்ல இக்குண்டுகளை உலக அளவில் தடை செய்வது குறித்துப் பேசப்படுகிறது.

அணுகுண்டிற்கடுத்த பேரழிவு ஆயுதமானதென்னும் பின்னணியில் அதனைத் தடைசெய்வது குறித்து நாளை புதன் கிழமை 100 க்கும் அதிகமான நாடுகள் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கூடுகின்றன.





----------------------------

கடந்த சனிக் கிழமை இந்தவகையான குண்டுகளை சிங்கள அரசு தமிழர் வாழிடங்களில் வீசியிருக்கிறது. கேட்பார் யாருமில்லை ஆடடா தம்பியென்ற நிலைப்பாட்டில் தொடரும் அவர்களின் அட்டூழியத்தை யாரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

அன்று வீசப்பட்ட அன்றைய குண்டு வீச்சில் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமுமற்றனர். கீழ் வரும் படங்கள் அகோரமானவை.





உலகத்தின் பெரும் பெரும் ஊடகக் காரரே .. இந்த மக்கள் ஐந்து நட்சத்திர Hotel இல் இல்லையென்பதற்காக கண்டு கொள்ளாதிருந்து விடுவீர்களா..? 24 மணிநேரம் கூட வேண்டாம். சிறு மணித் துளிகள்.. ?

நாங்களும் மனிசர்தான்

for more news
http://tamilnet.com/art.html?catid=79&artid=27633

Thursday, November 27, 2008

தாயகத்தில் இருந்து நேரடி தொலைகாட்சி ஒளிபரப்பு ஆரம்பம்

தமிழீழ தாயகத்தில் நடைபெறும் இன்றைய மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று தாயக நேரம் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை (ஜி.எம்.ரி நேரம் காலை 11.00 முதல் மாலை 5.00 மணி வரை) இந்த ஒளிபரப்பை நேரடியாகப் பார்வையிடலாம்.
இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் இந்த ஒளிபரப்பினை நேரடியாகப் பார்வையிட முடியும். கீழே குறிப்பிட்டுள்ள செய்மதி ஊடாக இந்நிகழ்வுகளை நேரடியாகப் பார்வையிட முடியும்.

Satellite - ASIASAT2 C Band
Downlink - 3895.5 V
S.R. - 5.632
FEC - 3/4

Tuesday, November 25, 2008

எடே இந்தியா டுடே or 60 துப்பாக்கியும் புலிகளும்

வாயில கெட்ட கெட்ட வார்த்தைகள் தான் வருகிறது. வாசகர்கள் எல்லாம் வடி கட்டின முட்டாள்கள் என்று இந்தியா டுடே நினைத்துக் கொண்டிருக்கிறது போல. ஈழ களத்தில இருந்து பிரேத்திய ரிப்போட் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள் அவர்கள். அதில இராணுவ புலிகள் ஆயுத பலத்தை பற்றி ஒரு பெட்டி செய்தி போட்டிருக்கிறார்கள். பார்த்தால் அசந்து போவீர்கள்.

அடடே முன்னணி பத்திரிகையாயிற்றே இப்படியெல்லாமா சொல்வார்கள் ? அதனால் அந்த புத்தகம் 70 களின் இறுதியில் வந்த புத்தகமா என தேடினேன். இல்லை. அது போன மாதமோ அதற்கு முதல் மாதமோ வந்ததுதான்.

அவர்களின் ஆயுத விபரங்களின் படி
புலிகளிடம் தற்போது உள்ளவை 60 துப்பாக்கிகள் தான். இராணுவத்திடம் 400 துப்பாக்கிகள்தான் என்பதும் கொடுமையான செய்திதான். ஐயா இந்த கட்டுரையை களத்திலிருந்து பிரேத்தியமாக எழுதிய கனவானே ? உண்மையைச் சொல்லும் நீர் எந்த களத்துக்கு போயிட்டு வந்திருக்கிறீர் ?

பீரங்கிகள் இராணுவத்திடம் 200. புலிகளிடம் எதுவும் இல்லையாம். ஆட்லறியெல்லாம் எதுவென்று தெரியாதோ அவருக்கு. சுத்தம் !

இதுவரை புலிகளின் ஆட்லறிகளை அழித்ததாய் சிரிலங்கன் ஆமி கூட சொன்னதில்லை. கனவு கண்டு எழுதுகிறாரோ?

இதெல்லாம் ஒரு செய்தி பத்திரிகை ? இதெல்லாம் உண்மைத் தகவல்களை மக்களுக்குத் தருகிறது.. ? த்தூ..

Friday, November 21, 2008

இந்தியக் கடற்படையின் பதிலடி

பல தேசத் துரோகிகள் இந்தியக் கடற்படையின் கையாகாலாத்தனம் என நையாண்டி செய்தும் சொரணையை சுரண்டிப் பார்க்கும் வகையிலும் பதிவுலகில் எழுதி வந்திருக்கிறார்கள். அந்த வாய்களுக்கு பெரிய இரும்பு பூட்டு போட்டுள்ளது இந்திய கடற்படை. சோமாலியா வரை சென்ற கடற்படையினர் சோமாலியா கடற்கொள்ளையரை பதம் பார்த்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரிய பெரிய கப்பற் கொம்பனிகளின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறது இந்திய கடற்பேர்ப்படை.

இதற்கிடையே சில புல்லுருவிகள் சோமாலியாவில் அரசாங்கமே இல்லையென்ற துணிவில்த்தான் கடற்படை அந்தப் பக்கமாகச் செல்கிறது என்றும் சிறிலங்காவில் மகிந்த அரசு போன்ற சோமாலியா அரசொன்று அங்கிருந்தால் கடற்படை சோமாலியா பக்கம் தலைவைத்தும் படுக்காதெனவும் தலையில் அடித்து சத்தியம் செய்கின்றனர். அவர்களுக்கு மீனவர் வேசமிட்டு ராமேஸ்வரம் கடலுக்குள் அனுப்புவோம். அதனை விட சிறந்த தண்டனையை அவர்களுக்கு யாரும் கொடுக்க முடியாது.

Friday, November 14, 2008

மகிந்தவுக்கு நன்றி

இந்தியாவில் வைத்து யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையென்பதை மகிந்த ராஜபக்சா உரத்து கூறியிருக்கிறார். ஈழத்தில் யுத்தம் தொடர வேண்டுமென்பதை இதை அங்கீகரிப்பதன் ஊடாக அண்டை அயல் நாடுகளும் ஏற்றுக் கொள்கின்றன.
இனியொரு பொழுதில் ஈழத்தில் யுத்த நிறுத்தம் ஒன்றைக் கோரும் தார்மீக உரிமையையும் அவை இழந்து விட்டிருக்கின்றன. தொடரும் யுத்தத்தில் இனி ஈழத்தில் எந்த இடி விழுந்தாலும் இப்போதைய ஆன்மீக அமைதியை தொடர்ந்தும் காத்து மோனத்திலிருக்க ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டும்.
போர் நிறுத்தம் ஒன்றை மறுத்ததன் மூலம் அவ்வாறான மறுக்கும் ஒரு வாய்ப்பை புலிகளுக்கும் மகிந்த வழங்கியிருக்கிறார்.


Tuesday, November 11, 2008

ஆத்தா நாங்க வல்லரசாயிட்டோம்....

சிங்கள பத்திரிகைகளின் கற்பனைக்கு அளவேயில்லாமல் போய் விட்டது. புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடாத்திய பிறகு எங்கு சென்று தரையிறங்குகின்றன என்பதற்கு திவயின சிங்கள பத்திரிகை நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறது.

முடியல...

இந்நிலையில் புலிகளின் விமானத்தாக்குதல் சம்பந்தமாகவும் அவற்றில் வெளிநாடுகளின் உதவிகளின் சாத்தியம் பற்றியும் உடனடியாக ஆராய்ந்து மேற்படி சந்தேகங்களுக்கு விடை காண்பது நமது நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமாகும். அரசியல் தீர்வுக்காக அலையும் மேற்கு நாடுகளும் மற்றும் அயல்நாடுகளும் புலிகளுக்கு எதிரான அரசின் யுத்தத்தை நிறுத்தவோ அல்லது முறியடிக்கவோ இரகசியமாக முயற்சி செய்து வருவதாகவே தெரிகிறது. இந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டாலன்றி இறுதியில் வெற்றிபெறப்போவது அரசும் அரச படையினரும் அல்ல எமது நிலைப்பாட்டுக்கு எதிராக இடத்துக்கு இடம் யுத்த நிறுத்தம் பற்றியும் புலிகளுடன் பேச்சுப்பற்றியும் அரசியல்தீர்வுபற்றியும் பேசிவரும் அமெரிக்க தூதுவரும் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு சக்திகளுமே ஆகும்.

விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானங்கள் நிறுத்தி வைப்பதற்கோ அல்லது புறப்பட்டுவந்து தாக்குதல் நடத்துவதற்கோ அல்லது தாக்குதல் நடத்தியபின் பாதுகாப்பாகச் சென்று இறங்குவதற்கோ இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பெரும் பகுதி வன்னிப்பிரதேசதத்தில் பாதுகாப்பான இடம் இருக்கமுடியாது. ஆனால் விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய, தாக்குதலுக்காக புறப்பட்டுவரக்கூடிய , தாக்குதலின் பின்னர் பாதுகாப்பாக திரும்பிச் சென்று இறங்கக்கூடிய அனைத்துவசதிகளும் கொண்ட வெளிநாட்டுக் கடற்படைக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தக்கப்பல்கள் எந்த நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களாக இருக்கும் என்பதை விடயம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

திவயின, தெக்ம பாதுகாப்பு விமர்சனம்: 2/11/2008.

யாருப்பா அந்த விடயம் அறிவிந்தவர்கள் ? சொல்லுங்கப்பா ? எந்த நாட்டு கடற்படை கப்பல்கள் அவை?

Saturday, November 08, 2008

புலிகளின் நிலைப்பாடு தெரியாமல் எங்ஙனம் போர் நிறுத்தம் ? புலிகளின் பதில்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அண்மையை அறிக்கையொன்றில் புலிகளின் நிலைப்பாடு தெரியாமல் எவ்வாறு இலங்கையில் போர் நிறுத்தமொன்றினை மேற்கொள்ள இயலும் என கேள்வியெழுப்பியிருந்தார். அவரது அக்கூற்று குறித்து கேள்வியெழுப்பிய ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பதில் அளித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் ஒன்றிற்கு எமது தரப்பில் எந்தவிதமான தடங்கல்களும் இல்லை. எப்போதும் போர் நிறுத்தம் ஒன்றிற்குத் தயாராகவே இருக்கின்றோம். இருதரப்பு போர் நிறுத்தம் ஒன்றிற்கான ஏற்பாடுகளைச் செய்வது இலங்கை அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது எனவும் புலிகள் இன்றுவரை தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப் படும் தாக்குதல்களுக்கான தற்காப்புச் சமரிலேயே ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும் என்று இந்திய மக்களும், தமிழ் மக்களும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ள மனிதாபிமான கோரிக்கையை பொதுவாக பலரும் ஆதரிக்கின்றனர்.

இந்த பின்னணியில் மத்திய அரசும், தமிழக முதல்வரும் சிறிலங்கா அரச தரப்பில் மட்டும் போரை நிறுத்துவது எவ்வாறு சாத்தியப்படும். மறுதரப்பும் (விடுதலைப் புலிகள்) போரை தொடர மாட்டோம் என்று அறிவிக்க வேண்டாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். பொதுமக்களிடமும் இது குறித்த ஐயப்பாடு இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களின் ஜனநாயக உரிமைக்காக போராடி வருபவர்களும் குறிப்பாக இதில் விடுதலைப் புலிகளின் சார்பாக அதன் பொறுப்பாளர்களும், தாங்களும் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி வழியில் தீர்வுகாண தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் - 2002 இல் நோர்வே அனுசரணையோடு உருவாகிய போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதும் புலிகள் அப்போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதான அதிகாரபூர்வ அறிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவிற்கு அடிமையாக நான் தயார்

நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

நாகை : நாகை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அந்த மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டதில், பாபு என்ற மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை அங்கிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்திற்குள்ளாயினர். இதுகுறித்து, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் தூதர், டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தபோது, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்று உறுதியளித்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
குமுதம்

------------------

போனால் போகட்டும் - தமிழ்த்தேசியத்தை தூக்கி கடாசி விட்டு சிறிலங்காவிற்கு அடிமையாகத் தன்னும் இருந்து விடலாம் என எண்ணத் தோன்றுகிறது. பின்னே தெற்காசிய பிராந்திய வல்லரசு நாடொன்றின் அடிமைச் சிட்டிசன் எனச் சொல்லிக் கொள்வது எவ்வளவு பெருமையானது.?

Friday, October 31, 2008

ராடர்களை இயக்கும் இந்தியர்கள் மீது சந்தேகம்!

இந்திய கதுவீ (ராடர்) கருவிகளை இயக்கும் தொழில்நுட்பவியலாளர்கள் மீது சந்தேகம் தெரிவித்துள்ள ஜே.வி.பி. கட்சி, வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் வானூர்தியை படையினர் சுட்டு வீழ்த்தியது என்பது பொய்யான தகவல் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் இடம்பெறுகின்றமையினால் கதுவீ கருவிகளை இயக்கும் இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாகவும் ஜே.வி.பி குற்றம் சாட்டியிருக்கின்றது.

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலை புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய வானூர்தி தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜே.வி.பி கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித கேரத், இந்தியா வழங்கிய கதுவீ கருவிகள் தரமற்றவை என்றும் கூறினார்.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் நவீன கதுவீ கருவிகளை பெறுவதன் மூலமே புலிகளின் வானூர்தி தாக்குதல்களை நிறுத்த முடியும். இந்தியா போலியான கதுவீ கருவிகளை வழங்கி ஏமாற்றுகின்றது எனவும் விஜித கேரத் தெரிவித்துள்ளார்.

வவுனியா படைத்தளம் மீது புலிகள் வானூர்தி தாக்குதல் நடத்தியபோது புலிகளின் வானூர்தி ஒன்றை சுட்டு விழுத்தியதாக படையினர் தெரிவித்திருந்தமை பொய்யான தகவல் என்றும் கூறிய அவர், அவ்வாறு சுட்டு விழுத்தப்பட்டிருந்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னாரிலும் கொழும்பிலும் வானூர்தி தாக்குதலை ஒரே நேரத்தில் புலிகள் நடத்தியிருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, October 27, 2008

சளைத்தவர்கள் இல்லை. இந்தியாவிற்கு இலங்கை சவால்

கையடக்கத் தொலைபேசியூடாக குறுஞ்செய்தியொன்றை அனுப்பியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு தெகிவளையை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டயலொக் நிறுவனத்தில் கடந்த இருமாதங்களாகப் பணிபுரியும் கணேசமூர்த்தி பிரதீப் என்ற தமிழ் இளைஞனே வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளதாக அவரது உறுவினர்கள் முறையிட்டுள்ளதாக கொழும்பு மாநகரைசபை உறுப்பினரும் மக்கள் கண்காண்ப்புக் குழு செயற்பாட்டாளர்களில் ஒருவருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன், அஜித் ஆகிய தமிழக நடிகர்களின் திரைப்படங்களை பாhப்பதை தவிர்க்குமாறு கோரி குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக முறையிடப்படடுள்ளது.

Sunday, October 26, 2008

Thursday, October 23, 2008

சீமான் அமீரும் கைது ?

இயக்குனர்களான சீமான் அமீர் ஆகியோரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. உறுதிப் படுத்த இயலவில்லை