Monday, March 26, 2007

புலிகளின் வான்படை - ஒரு நேரடி அனுபவம்

புலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு இடுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள்.
ஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின்முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ, கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகாரபூர்வமாகவே 1998 நவம்பரில் வெளிப்படுத்தியிருந்ததோடு மக்களின் காட்சிக்கும் கொண்டுவந்திருந்தார்கள். புலிகளின் விமானப்பறப்பைப் பார்த்தவர்களில் ஒருவனான எனது அனுபவமே இந்தப் பதிவு.

முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். முதன்முதலில் புலிகளால் வெளிப்படுத்தப்பட்ட பறப்பு, 1998 நவம்பர் மாவீரர் நாளுக்கு முள்ளயவளை மாவீரர் துயிலுமில்லத்தில் உலங்குவானூர்தி மூலம் பூத்தூவிய சம்பவமே. அதைக்கூட சிலர் மட்டுமே பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இந்தப் பகிரங்க அறிவித்தலுக்கு முன்பேயே சிலருக்குப் புலிகளின் பறப்பு முயற்சியைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நானுமொருவன்.

இதில் என்னபெரிய விசயமிருக்கிறது என்று நிறையப் பேருக்குக் கேள்வியெழும்பலாம். புலிகளின் விமானம் பற்றி இத்தனைபேர் (அரசாங்கங்கள் உட்பட) வயித்தால போற அளவுக்குப் பிதற்றும்போது அம்மாதிரியொரு முயற்சியைப் பற்றிக் கேள்விப்படும் ஓர் ஈழத்தமிழன் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியுமா? முதன்முதலில் ரைட் சகோதரர்கள் பறந்தபோது அதைப்பார்த்த ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்விற்குச் சற்றும் சளைத்ததன்று புலிகளின் பறப்பைப் பார்த்த ஈழத்தமிழனின் குதூகலிப்பு. அந்தக் குதூகலிப்பை இன்று ஏழு வருடங்களின் பின் மீட்டுப்பார்க்கிறேன். இப்போதும் புல்லிரிக்கிறது.

1998 செப்ரெம்பர் மாதம் நடுப்பகுதி. புலிகளின் வான்பறப்பு முயற்சி பற்றி மக்களிடையே குறிப்பாக இளமட்டத்தில் சிலரிடையே அரசல் புரசலாகக் கதைகள் இருந்த காலம். 19 ஆம் திகதி நான் முல்லைத்தீவை அடுத்துள்ள சிலாவத்தைக் கிராமத்தில் நிற்கிறேன். மாலை ஐந்து மணியிருக்கும். வானில் உலங்கு வானூர்திச் சத்தம். அதுவும் தாழ்வாக பறப்பது போன்ற உணர்வு. அப்போதெல்லாம் உலங்குவானூர்தி அங்கால் பக்கம் வாறதேயில்லை. அது அபூர்வமான நிகழ்வுதான். நீண்டகாலத்தின்பின் உலங்குவானூர்திச் சத்தத்தைக் கேட்டோம். என்னோடு இன்னுமிரண்டு பேர் நின்றார்கள். பார்ப்பதற்கு வசதியாக வெட்டைக்கு வந்தோம்.
என்ன ஆச்சரியம்? தாழ்வாக ஓர் உலங்குவானூர்தி. கரைச்சிக்குடியிருப்பை அண்டிப் பறந்து கொண்டிருந்தது. இது நிச்சயம் சிறிலங்கா அரசாங்கத்தினதாக இருக்க முடியாதென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அப்படியானால்????

நெஞ்சுக்குள் இனம்புரியாத உணர்வு. 5 நிமிசத்தின் மேல் அதைப்பார்க்கவில்லை. இதை யாரிடமாவது சொல்லியாக வேண்டும். அதுவும் மற்றவர்கள் வழியாக அறியமுதல் நான்தான் அவர்களுக்குச் சொல்லும் முதல் ஆளாக இருக்க வேணும். நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. அப்படியே சைக்கிளை மிதித்தேன் புதுக்குடியிருப்புக்கு. வரும்வழியில்தான் எத்தனை கற்பனைகள்?

"எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்; அடுத்தடுத்து விழும் முகாம்கள்; மிகக் குறைந்த இழப்புக்களுடன் மீட்கப்படும் எமது நிலங்கள்; என்று என் கற்பனை தறிகெட்டுப் போகிறது. இனியென்ன? நாங்களும் விமானப்படை வைத்துள்ள பலம் வாய்ந்த அமைப்புத்தான்."

புதுக்குடியிருப்புக்கு வந்துவிட்டேன். என் கூட்டாளிகள் யாரையும் உடனடியாகக் காணவில்லை. உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன். மெதுவாகக் கதை கொடுக்கிறேன்.
"உங்கால முல்லைத்தீவுப் பக்கத்தால ஏதும் அறிஞ்சனியளே?"
"இல்ல. என்ன விசயம்?"
"ஒண்டுமில்ல.... ஹெலி ஏதோ பறந்ததாமெண்டு சனம் கதைக்குது..."
"என்னது ஹெலியோ? என்ன துணிவில வந்தவன்? அடிச்சு விழுத்தாம விட்டவங்களே?"
"சீச்சீ.. உது ஆமியின்ர ஹெலியில்லயாம்..."
ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.
"இயக்கத்தின்ர ஹெலியாம்"
"டேய்! உனக்கார் சொன்னது? சனம் சும்மா தேவையில்லாம கதைகட்டிவிடும். உதுகளக் காவிக்கொண்டு இஞ்ச வாறாய். நீ இண்டைக்கு முல்லைத்தீவு தானே போனனீ? நீ பாக்கேலயோ?"
"இல்ல இல்ல. நான் பாக்கேல... சனம் தான் கதைச்சிது."
எண்டு அவசரப்பட்டுச் சொன்னேன். பொதுவாக எங்கட சனத்தின்ர செய்தி கடத்திற வேகம் அபாரமாயிருக்கும். ஆனா இந்த ஹெலி விசயம் பரவாதது எனக்கு ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. அதோட பயமும் வந்திட்டுது. அங்க ஒரு பிரச்சினை இருக்கு. கண்டபடி உந்தக் கதைகள் கதைச்சுக் கொண்டு திரிய ஏலாது. அப்பிடிக் கதைச்சாலும் ஆரேன் இனியில்லயெண்டு நம்பிக்கையான கூட்டாளியளோட தான். அதால நான் உந்தக்கதைய அதோட விட்டிட்டன். ஒருத்தரும் நம்பின மாதிரித் தெரியேல. எனக்கு உறுதியா அது புலிகளின்ர ஹெலிதான் எண்டு தெரிஞ்சிருந்திச்சு. சரி, எப்பவோ ஒருநாள் எல்லாருக்கும் தெரியவரத்தானே வேணும் எண்டு பேசாமல் பம்மிக்கொண்டு இருந்திட்டன்.

நான் ஹெலி பாத்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. சரியா அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திலீபன் அண்ணையின்ர நினைவுநாள். அண்டைக்குத்தான் ஓயாத அலைகள்-2 என்ற பெயரில் கிளிநொச்சி நகர மீட்புக்கான பெருஞ்சமர் புலிகளால் தொடக்கப்பட்டது. சண்டை இரவு தொடங்கியவுடனேயே நான் புலிகளின் விமானப்படைப் பயன்பாடு பற்றி எதிர்பார்த்தேன். அதிகாலை கூட்டாளிகளுக்குச் சாடைமாடையாகச் சொன்னேன்.
"இந்த முறை விசேசமான சாமானெல்லாம் இயக்கம் பாவிக்கப்போகுது"
எண்டு சொன்னன். ஒருத்தருக்கும் நான் சொன்னது விசேசமாத் தெரியேலப் போல. அவங்கள் அலட்டிக்கொள்ளேல.
"இந்த முறை மேலாலையெல்லாம் அடிவிழும் ஆமிக்கு" எண்டன்.
இப்பிடியிப்பிடி சொல்லி ஒரு கட்டத்தில
"இயக்கம் வான்படையப் பாவிக்குமெண்டு நினைக்கிறன்" எண்டன். விழுந்து விழுந்து சிரிச்சாங்கள். அதோட நானும் சத்தம்போடாம வாயப்பொத்திக் கொண்டு இருந்திட்டன். உண்மையில புலிகள் அப்படியெதுவும் பாவிக்கவில்லை. இன்றுவரையும் பாவித்ததாகத் தெரியவில்லை. நான் பார்த்த ஹெலி யுத்தத்துக்குப் பயன்படுத்த முடியாதென்பது என் கணிப்பாயிருந்தாலும் எதிலும் உச்சப் பயன்பாட்டைப் பெறும் புலிகளின் திறன் என்னை அப்படிச் சிந்திக்க வைத்தது.

அதன்பின் வேறிடத்தில் வேறு சந்தர்ப்பத்தில் வான்பறப்பைப் பார்த்தவர்களோடு கதைக்கும்போது நான் பார்த்ததுக்கும் அவர்கள் பார்த்ததுக்கும் வித்தியாசங்கள் இருந்தன. சிலர் ஹெலி அல்லாமல் கிளைடர் ரகத்தைப் பார்த்ததை அறிந்தேன்.

அதன் பின் நவம்பர் மாவீரர் நாளில் வான்படை பூத்தூவியதுடன் புலிகளின்குரலில் அன்றிரவே பகிரங்கமாக வான்படை பற்றி அறிவிக்கப்பட்டது.
"அமிர்தலிங்கம் ஏந்திய வாளும் பிரபாகரன் உயர்த்திய ஹெலியும்" என்ற தலைப்பில் மறுவாரமே தினமுரசு கட்டுரை எழுதியது. சிறிலங்காவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் இதுதான் பேச்சு. அலரிமாளிகைமுதல் கூட்டுப்படைத்தலைமையகம் வரை அனைத்திடங்களிலும் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தப்பட்டன.
இன்று புதுப்புதுப் பெயர்களிலெல்லாம் புலிகளின் விமானப்படைப்பலம் பற்றிக் கதைக்கிறார்கள். உண்மையோ பொய்யோ தெரியாது. நான் பார்த்தது ஆரம்பகட்ட முயற்சி. உள்ளூர் உற்பத்தி. என்ன இருந்தாலும் அதுவொரு பாய்ச்சல்தான். அதன் தொடர்ச்சியான முன்னேற்றமும் வளர்ச்சியுமே இறுதி வெற்றிக்கான திறவுகோல்.
----------------------------------------------------------------------------------
இன்னொரு விசயம். இன்று புலிகளின் விமானத்தளம் இருப்பதாகச் சொல்லப்படும் காட்டுப்பகுதியானது நீண்டகாலமாக புலிகளின் தளம். நானறிய 1997 இல் இருந்து அக்காட்டுப்பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் புலிகளால் தடை செய்யப்பட்ட பிரதேசம். வன்னி தெரிந்தவர்களுக்கு, பழைய கண்டிவீதி என்ற பெயரிலுள்ள இராமநாதபுரம்-கரிப்பட்ட முறிப்புப் பாதை முன்பே பாவனைக்குத் தடுக்கப்பட்ட பகுதி. இன்று அந்தப் பகுதியைத்தான் புலிகளின் ஓடுதளம் இருப்பதாகவும் அவற்றைத்தாம் பரிசோதிக்க வேண்டுமென்று கேட்கின்றனர்.

நான் ஆசிப்பது இதைத்தான். இன்று பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் புலிகளின் விமானப்படை பற்றிக் கூறும் அத்தனைக் கதைகளும் (இவற்றிலிருக்கும் புளுகுகளையும் சாத்தியப்பாடற்ற விசயங்களையும் உணர்ந்து கொண்டிருந்தாலும்) உண்மையாக இருக்க வேண்டுமென்பதே.

இப்பதிவு வன்னியனின் பூராயம் வலைப்பதிவில் இருந்து நன்றியுடன் மீளபதிவாக்கப் பட்டிருக்கிறது.
http://pooraayam.blogspot.com/2005/10/blog-post.html

"எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்;

இந்த கற்பனை நேற்று நனவானது

பார் பார் வானில் படையணி - பாடல்

வான் புலிகள் குறித்தான பாடல் இது.

நன்றி: வானுயரும் புலி வீரம்

சற்றுப் பின்: புலிகளின் வான் படை! வரவுள்ள செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையணி இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அமைந்துள்ள இராணுவ விமான நிலைகள் மீது தாக்குதலைத் தொடர்ந்து விரைவில் வெளியாக உள்ள செய்திகள் இவை.

அப்பாவிகளான இலங்கை விமானப்படை மீது புலிகள் குண்டு வீச்சு! அமெரிக்கா கண்டனம்.

புலிகளின் விமானக் குண்டு வீச்சு. இந்தியா கவலை

புலிகளின் விமானங்கள். தமிழக அணு மின் உலைகளுக்கு ஆபத்து . ஜெயலலிதா எச்சரிக்கை.

புலிகளின் விமானத் தாக்குதல் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல். - போர் நிறுத்த கண்காணிப்பு குழு

புலிகள் தாக்குதல்களை கை விட்டு விட்டு பேச்சுக்களுக்கு திரும்ப வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்.

இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கி புலிகளிடமிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டும் - சோ

இவை வெளிவர இருக்கின்ற சாத்தியமான செய்திகளே.. ஆனால் இவர்கள் இலங்கை அரசு நடாத்தும் குண்டுவீச்சுக்களில் தினம் தினம் சாகும் அப்பாவித் தமிழர்கள் குறித்து கவலையோ கண்டனமோ தெரிவிக்க மாட்டார்கள். யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு அரச படைகள் செய்து வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கையும் விட மாட்டார்கள்.

பிந்திக் கிடைத்த செய்தி - இந்தியா கவலை தெரிவித்து விட்டது.

வான்படை கண்ட தமிழன் - படங்கள்

கொழும்பு விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடாத்திவிட்டு மீண்டும் தளம் திரும்பிய புலிகளின் வான் படைப் படங்கள்.



கொழும்பு விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடாத்திவிட்டு மீண்டும் தளம் திரும்பிய புலிகளின் வான் படைப் படங்கள்.

Sunday, March 25, 2007

புலிகளின் விமானங்களே தாக்கின - புலிகளின் பேச்சாளர்

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தினுள் இன்று அதிகாலை மேற்கொள்ளப் பட்டிருக்கின்ற தாக்குதலில் தமது இரண்டு விமானங்கள் அங்குள்ள இலங்கை அரச விமானப்படைத் தளங்கள் மீது குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவை பத்திரமாக வன்னியில் உள்ள தமது தளத்துக்கு திரும்பி விட்டன என்றும் புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழ்நெற்றுக்கு தெரிவித்துள்ளார். தவிர தொடர்ந்தும் கட்டுநாயக்கா தளத்தில் தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் தமிழ்நெற் கூறுகின்றது.

கொழும்பு விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெறுகிறதா..?

இலங்கை நேரப்படி திங்கள் அதிகாலை முதல் கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.


COLOMBO (Reuters) - Suspected Tamil Tiger rebels attacked Sri Lanka's international airport north of the capital Colombo before dawn on Monday, the military said, and witnesses who live nearby told Reuters they could hear gunfire.

"There is an attack going on , but we don't have any details," said Flight Lieutenant Kanista Rajapakse of the Media Center for National Security. "There is fighting going on."

The attack comes in the wake of a series of deadly land and sea battles and amid an escalating new chapter in the island's two-decade civil war, which has killed around 68,000 people since 1983.

"I can hear gunfire from near the airport," said R.M. Gunasekera, an accountant who lives near the town of Katunayake around 23 miles north of Colombo, where the airport is situated.
Reuters Pictures
Photo

Editors Choice: Best pictures
from the last 24 hours.
View Slideshow

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) last attacked the airport in 2001, the year before a ceasefire deal which has since collapsed on the ground, in which half of the Sri Lankan airlines fleet of airplanes was destroyed.

President Mahinda Rajapakse's government aims to defeat the Tigers militarily within 2-3 years, and is pushing on with military offensives in the east and north despite pleas from the international community to stop.

The rebels, who are battling for an independent state for minority Tamils in the island's north and east, have warned of a bloodbath and analysts say a new chapter in a two-decade war that has killed around 4,000 troops, civilians and Tigers in the past 15 months alone is spreading

தமிழ்நெற்றும் உறுதிப் படுத்தியுள்ளது.

நாமளும் பாடுறம் சிவாஜிப் பாட்டு

வலைப்பதிவிலேயே சுமார் 2 வருடங்களுக்கு முன்பு கலந்துரையாடல் ஒலிப்பதிவொன்றை வெளியிட்டு இன்று பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் நாம். ஆனால் யாரும் அது பற்றி பேசாது வரலாற்றை மறைக்கிறார்கள். இப்போது சிலர் பாடியெல்லாம் வலைப் பதிகிறார்கள். சிலர் பாடப்போடுவதாய் பயமுறுத்துகிறார்கள். ஆக நாமும் பாட வேண்டாமா.. இதோ திரைக்கு இது வரை வராத.. அவ்வளவும் ஏன்.. இது வரை ஓடியோவே வெளியே வராத சிவாஜி படத்தில இருந்து நாமும் ஒரு பாடலை பாடியிருக்கிறோம்.

முக்கிய குறிப்கு : பாடலைக் கேட்டு விட்டு ஏதோ கொழுவி காலைக்கடன் கழிக்காத அவசரத்தில் பாடுவதாக நினைக்க கூடாது. அப்படி சொல்வது இன்னுமொரு பெருந்தலையை அவமதிப்பது போலாகும்.

Monday, March 19, 2007

கொழுவியின் 2வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

வரும் ஏப்ரல் 2 அன்று இரண்டாவது வருடத்தை பூர்த்தி செய்ய உள்ள கொழுவி தற்போது வலையுலகில் நடைமுறையில் உள்ள வழி முறைகளைப் பின்பற்றி தனது ஆண்டு நிறைவு நாளினை மிக கோலாகலமாகக் கொண்டாட உள்ளது. விழா பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
இப்போது கொழுவியின் முதலாவது பதிவினைப் பாருங்கள்.

நான் அல்கொய்தா ஆதரவாளன்

அதோடு கஜகஸ்தான் துர்க்கிஸ்தான் அந்தஸ்தான் இந்தஸ்த்தான் நாட்டு ஆதரவாளனும் கூட.

இவ்வளவும் தான்.

Monday, March 12, 2007

ஒரு நரியின் முகமூடி கிழிகின்றது.

ஈழப் பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் பங்கு மிகப் பெரியது. இன்று வெளிவருகின்ற ஈழப் பாடல்கள் அவரது பாடல்கள் போல இல்லையென்று அங்கலாய்ப்போரும் உள்ளனர். ஏற்கனவே இவரது பாடல்கள் சிலவற்றை இங்கு வெளியிட்டிருக்கிறோம். இவரது மாங்கிளியும் மரங்கொத்தியும், தமிழா நீ பேசுவது தமிழா போன்ற பாடல்கள் உட்பட பல பாடல்கள் மிகப் பிரபலமானவை. அந்த வரிசையில் இது இன்னொரு பாடல்.

orunari.mp3


அறம் கொல்லும் இவன் நெஞ்சம் வருந்த மாட்டான்
ஆர் வந்து சொன்னாலும் திருந்த மாட்டான்
குரங்கு போல் நாளைக்கும் இவன் குதிப்பான்
குதித்தாலும் இவனைப் போய் எவன் மதிப்பான்.?

Sunday, March 11, 2007

பனங்காட்டு நரியின் வேசம் கலைந்தது

மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் நரிக் கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு பாடல். இப்போதெல்லாம் சிறுவர்களுக்கு கதை சொல்ல யாருமில்லை. முன்பென்றால் பாட்டி தாத்தா என்ற உறவுகளின் பெரும் பொழுது போக்கே சிறுவர்களுக்கான கதை சொல்லல் தான். இனிவரும் காலங்களில் இவ்வாறான பாடல்கள் தான் அந்தக் கடமையைச் செய்ய வேண்டும்.

Get Your Own Music Player at Music Plugin

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்
ராசா வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்
காட்டை விட்டே ஓடிப்போச்சு டும் டும் டும்

Tuesday, March 06, 2007

நாங்களும் பொம்பிளை பாக்கும் முறை

பொம்பிளை பாக்கும் முறை பற்றி அறம்புறமா அடிபடுகுது. ஏன் எங்களுக்கும் பொம்பிளை பாக்கும் முறை எதுவெண்டு தெரியாதா.. நன்றாகத் தெரியுமே..

Friday, March 02, 2007

இப் படை தோற்கின் எப்படை வெல்லும்

இந்தப் பாடல் திரைப்படப் பாடலா என்று கூட எனக்குத் தெரியாது. பல இடங்களில் தேடியிருக்கிறேன். அண்மையில் வலைப்பதிவில் மு.கார்த்திகேயன் அறிமுகப்படுத்திய தமிழ்ப் பாடல்கள் தேடுதல்ப் பொறி கொண்டு இதனைக் கண்டு பிடித்தேன். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றதாம் இப்பாடல். படம் பார்த்திருக்கிறேன். ஆனால் நினைவில்லை.

பாடல்களை இணைப்பது பற்றிய ஒரு உண்மையான ? நுட்பப்பதிவைப் பார்த்தவுடன் அதைப் பயன்படுத்திப்பார்க்கும் ஆசையில் இந்தப் பதிவு. musicplug.in தளத்தில் பழைய பாடல்கள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். play பொத்தானை அழுத்தி கேட்கவும்.


Get Your Own Music Player at Music Plugin

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும் - இதில்
நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவருக்கும் அழிவாகும்.

Flash News - திருப்பூரில் பதட்டம்

அரட்டை அரங்கத்தில் புகுந்தது கரடி
திருப்பூரில் பதட்டம்; மக்கள் பீதி
சம்பவத்தை நேரில் பார்த்தோர் சிதறி ஓட்டம்.

விரிவான செய்திகளுக்கு வரும் ஞாயிறு காலை 11 மணிக்கு உங்கள் சன் டிவியைப் பாருங்கள்.

Note: நண்பரிடம் இருந்து வந்த sms

Thursday, March 01, 2007

பதிவை கண்டிப்பாக பார்வையிடச் செய்வது எப்படி

இது ஒரு நுட்பம் சார்ந்த விடயம். ஒவ்வொருவருக்கும் தான் எழுதிய பதிவு படிக்கப் பட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதில் தவறில்லை. அது தானே மனித இயல்பு. நல்ல பதிவெழுதினால் எல்லாரும் வந்து படிப்பார்கள் தான். ஆனால் எல்லோராலும் முடிகிற காரியமா அது..? அதற்காகத் தான் இம்முறையை அறிமுகப் படுத்துகிறேன். இதன் மூலம் நீங்கள் உங்கள் பதிவுக்கு எவரெல்லாம் வரவேண்டும் என விரும்புகிறீர்களோ அவர்களை வரவைத்துக் கொள்ளலாம். அவர்களுடைய வலை முகவரிகளைத் தெரிந்து கொண்டு இங்கே நான் சொல்லும் வழி முறைகளைச் செய்தால் போதும்.

அதாவது உங்கள் பதிவினை அனைவரும் கண்டிப்பாக பார்வையிடச் செய்வது எப்படி..?

இப்போ நான் செய்தேனே ..அது மாதிரித்தான்.
(நாளை சந்திப்போமா..)

Monday, February 26, 2007

கொழுவியின் ஆண்டுப் பொதுக் கூட்டம்

சுருக்க அறிக்கை
கொழுவிக் கூட்டணியில் இருந்து ஏற்கனவே குழப்பி விருப்பில் வெளியேறிய பிறகு ஆங்காங்கு இருக்கிற நலன்விரும்பிகளையும் ஆர்வலர்களையும் விரட்டிப் பிடித்து அவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து ஒருவாறாக் காலத்தைக் கடத்தியாயிற்று.

இடைப்பட்ட காலத்தில் கொழுவியின் இடம் நகைச்சுவை மட்டுமே எனத்தீர்மானிக்கப்படும். ஆனாலும் அவ்வப்போது எங்களையும் நரி வெருட்டும். அதுவே மிரட்டும். விரட்டும்.

பிறகு சுதாகரித்து எழுந்து வண்டி ஓடும்.
இவ்வாறாக கொழுவிக்கு கிடைத்த வாசகர் வட்டத்தை நாமே ஓட விரட்டுகிற செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை வெட்கத்தை விட்டுச் சொல்லத் தான் வேணும்.
நேற்றைய பொதுகக் கூட்டத்தில் இது பற்றிக் கலந்துரையாடப்பட்டு நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
தன்னார்வத்தில் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர்களில் ஒருவரான சொதியன் பெரும் பொறுப்பு ஒன்றில் பலத்த கரகோசத்தின் மத்தியில் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இவர் கொழுவி நடாத்திய பல அகிம்சை மற்றும் வன்முறைப் போராட்டங்களில் தன்னார்வ அடிப்படையில் பங்கு பற்றியவர்.

நேற்றைய கூட்டத்தில் கொழுவி மீது பிரயோகிக்கப்படும் சர்வதேச அழுத்தங்கள் குறித்தும் விவாதிக்கப் பட்டது. அதன் அடிப்படையில் இனி எந்த வித உணர்வு பூர்வமான விடயங்களிலும் ஈடுபடுவதில்லையெனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் சர்வதேச உறவு சுமுகமான முறையில் தொடரும்.

பொறுப்புக்களை ஏற்ற சொதியன் கொழுவிக் குழுவோடு இணைந்து கொள்கிறார். இனிச் சொதியனும் பேசுவார்.

Thursday, February 22, 2007

உணர்வுகள் வலைப்பதிவில் பின்னூட்டமிட

உணர்வுகள் என்ற தமி்ழ் வலைப்பதிவாளர் ஈழத்தவரின் அரசியல்சார் பதிவுகள் பலவற்றை எழுதிவருவதும் அவை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதும் அனைவரும் அறிந்ததே.
அவருடைய வலைப்பதிவில் அவர் தனக்கேற்றபடி பின்னூட்டங்களை மட்டுறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக வந்துகொண்டுள்ளது. அதை அவரும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்.
பொதுவாக பின்னூட்டங்களை வெளியிடவில்லையென்பது தலைபோகிற சிக்கலாக இருப்பதில்லை. ஆனால் இதுவிடயம் தொடர்பாக வன்னியன் தனது தளத்தில் எழுதியது என் கவனத்தை ஈர்த்த்து.

பின்னூட்டங்களை வெளிவிடாத சிக்கல் மிகப்பாரதூரமானது.
அப்பதிவர் ஈழத்தவரின் ஒட்டுமொத்தக் குரலாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டும் கருதிக்கொண்டும்
கருத்துக்களை அள்ளிவீசிக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கான மறுப்புப்பின்னூட்டங்களை வெளிவிடாமல் தணி்க்கை செய்வது மிகக்பெரிய வன்முறை மட்டுமன்றி, ஈழத்தமிழர் அனைவரின்
சார்பாகவும் தான்சொல்வதே சரியென்று நிறுவமுயலும் ஒற்றைத்தன்மையைக் கொண்டது. இது ஈழத்தமிழர் அரசியலுக்கு மிகக்கேடானது.

ஆம்! இது ஈழத்தமிழர் அரசியலுக்கு மிகக்கேடானது. ஏற்கனவே அரைகுறை அறிவோடு ஈழத்தவர் பிரச்சினையை அணுகும் பதிவர்கள் (சிலர் இப்போதுதான் தொடக்கநிலையிலேயே இருக்கிறார்கள் என்பது வேறு) உணர்வுகள் போன்ற வலைப்பதிவூடாக அறிவது உண்மைக்குப் புறம்பாக அல்லது ஒற்றைத்தன்மையுடன் கூடிய விளக்கங்களையே. ஈழத்தமிழர் அரசியலில் அவ்வப்போது இடையில் குதித்து குரங்காட்டம் ஆடிவிட்டுப்போகும் நபர்களும் இப்படியானவர்களின் கூற்றுக்களை தமக்கேற்றபடி மேற்கோள்காட்டி ஏதாவது சொல்லிவிடப்போகும் நிலையை ஏற்படுத்தும்.

ஆகவே இவ்விடயத்தில் நாங்கள் ஏனோதானோ என்றிருக்காமல் கவனமாக இருக்கவேண்டிய தேவையுள்ளது. தான்மட்டும் எழுதிக்கொண்டு தனக்குப்பிடித்த கருத்துக்களை மட்டும் வெளியிட்டுக்கொண்டு சரியான எதிர்வினைகளை முடக்கி வலைப்பதிவுலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம்வரத் துடிக்கும் தனிப்பட்ட நபரொருவரின் நடவடிக்கை நேரடியாக ஈழத்தமிழர் அரசியலைத் தொடுவதால் நாங்கள் எங்கள் எதிர்வினைகளைப் பதிவாக்க வேண்டும்.

ஏற்கனவே சிலர் சொன்ன யோசனைப்படி ஓர் இடுகையை இங்கு இடுகிறேன்.
அதாவது அங்கு வெளியிடப்படாதென நினைக்கும் பின்னூட்டங்களை இவ்விடுகையில் பின்னூட்டமாகத் திரட்டுவதே அந்நோக்கம்.
அங்கு இடும் பின்னூட்டத்தை இங்கும் இடுங்கள். அங்கு அப்பின்னூட்டம் வெளியிடப்பட்டால் இங்கு அது வெளியிடப்பட வேண்டிய தேவையிருக்காது.
இங்கு வெளியிடப்படும் பின்னூட்டங்களும் 'தமிழ்மணத் திரட்டி தனது பின்னூட்டங்கள் திரட்டும் சேவையை இடைநிறுத்த ஏதுவாக இல்லாத" சந்தர்ப்பத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

பின்னூட்டமிடுவோர் கவனிக்க வேண்டியவை:
நீங்கள் பின்னூட்டமிடவேண்டிய உணர்வுகளின் இடுகைக்குரிய URL ஐக் குறிப்பிட்டு, அதன்கீழ் உங்கள் பின்னூட்டத்தை இடவேண்டும்.
அப்போதுதான் அப்பின்னூட்டம் எவ்விடுகைக்குரியது என்பதை மற்றவர்களால் அறியமுடியும்.
இப்படி பின்னூட்டங்கள் திரட்டும் செயற்பாடு எவ்வளவு காலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கொழுவியால் தற்போது உறுதியாகச் சொல்ல முடியாது.

Wednesday, February 21, 2007

விரல் சூப்பும் உணர்வுகள்.. விழிக்கக் கடவது

உணர்வுகள் என்ற போலிப்பதிவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோசத்தோடு சைவ வேளாள மனநிலையில் இருந்து விசம் கக்கும் பதிவுகளைத்தான் இடுகின்றார். மோசமான முறையில் முஸ்லிம் எதிர்ப்பு (முஸ்லீம்கள் தனி இனமாக இருப்பதில் அவருக்கு என்ன சிக்கலோ தெரியவில்லை) க் கொண்டு சைவச் சத்தி எடுக்கும் அவரது பதிவுகளில் அவரது கருத்துத் தளம்பல்களையோ, முரண்களையோ சுட்டிக் காட்டினாலோ, அவரது கருத்தின் முகமூடிகளை கிழித்தெறியும் விதமாய் எழுதினாலோ, அவர் ஒருபோதும் அதனை வெளியிடுவதில்லை.

விரல் சூப்பும் குழந்தைகள் வலைப் பதிய வருவதில் உள்ள சிக்கல்களில் இதுவும் ஒன்றாயினும் மொத்த ஈழத்தவரின் கருத்துக்கள் என்ற வகையில் கும்மியடிக்கும் அவரின் நச்சுக்களுக்கெதிராக சக ஈழத்தவர் என்ற வகையில் எமது மறுப்புக்களைச் சொல்வது அவசியம்.

ஆபாசமான அல்லது கருத்துக்களுடன் சம்பந்தப்படாத தனி நபர் மீதான தாக்குதல்க் கருத்துக்களை தவிர்த்தல் என்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர் தான் மாய்ந்து மாய்ந்து கிறுக்கித் தள்ளிய எழுத்துக்களை கேள்விக்குறியாக்கி விடுமோ எனக் கருதும், அவருக்கு இருக்கின்ற உளச் சிக்கலை தோலுரிக்கும், அவரின் யாழ்ப்பாண வேளாள மனோபாவத்தை அவரின் பதிவகளிலிருந்தே சுட்டும் கருத்துக்களை அனுமதிப்பதில்லை.

புலி ஆதரவுப் போர்வையை ஒருவர் போர்த்துக் கொண்டு விட்டார் என்பதற்காக அவரை அரவணைத்துப் போக வேண்டும் என்ற எண்ணம் ஈழ மக்களுக்கு கொஞ்சமும் கிடையாது.

மிக அண்மையில் தனது சைவத் திமிரைக் காட்ட பிரபாகரனையும் புலிகள் அமைப்பையும் உதாரணத்திற்கு இழுத்தபோதே இவர் இன்னொரு நிதர்சனம் .கொம் என்று புரிந்து விட்டது.

புலிகள் தமிழர் பண்டிகை என்ற முறையில் பொங்கல் கொண்டாடுவது தவிர வேறெந்த சைவப் பண்டிகைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

புலிகள் அமைப்பில் தமிழர் பண்பாடும் சைவமும் பிரித்தே நோக்கப்படுகின்றன. புலிகளின் திருமண நிகழ்வுகளில் சைவ ஆகம விதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தாலி கூட வரவேற்கப் படுவதில்லை. மணமகனுக்கு ஒரு கைக்கடிகாரம் அணிவதும் மணமகளுக்கு ஒரு மோதிரம் அணிவதுமே பொதுமை.இது பற்றி வன்னியன் எழுதிய பதிவினை இங்கே படியுங்கள்

இவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான். ஈழத்தை வெறும் யாழ்.கொம் ஊடாகவோ உணர்வுகள்.கொம் ஊடாகவோ நிதர்சனம் .கொம் ஊடாகவோ கண்டு கொள்ளாதீர்கள். அனுபவங்கள் எழுத்துக்களை தீர்மானிக்கின்றன என்ற பீலா அவரின் அனுபவம் எத்தகையது என்பதைச் சொல்கிறது.

இப்பதிவுக்கு எதிர்வினையாக விரைவில் உணர்வுகளில், கழுவியின் கழிவுகள் என்ற பெயரில் அவர் ஒரு பதிவு எழுதலாம். ஏற்கனவே உணர்வுகள் தளத்தில் கொழுவியை கழுவி என அவர் விளித்துள்ளார்.

விசமத்தனமும், விதண்டாவாதமும் நிறைந்த, காழ்ப்புணர்வுடன், காடைத்தனத்தால் கூட்டம் சேர்க்கத் துடிக்கும், கழுவிகளின் வலைப்பதிவில் என்பெயரில் பின்னூட்டம் இடுவேனா?

இது கூட, உவன் சீவுறவன், உவன் மீன்பிடிக்கிறவன் என்பது போல உவன் கழுவுறவன் என, மனிதரைத் தொழில் முறையில் இழிவு படுத்தி வக்கிரத்தை வெளிச்சிந்துகின்ற யாழ்ப்பாண வெள்ளாள சாதித் திமிரின் ஒரு நீட்சிதான்.

Monday, February 19, 2007

காதலை மறுக்கும் கூகுள்

கூகுளில் தமிழ் சொற்பிழை திருத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக சிலர் சொல்லக் கேட்டு நானும் ஓடிச் சென்று உலகத்தின் உயர் சொல்லாம் நமக்கெல்லாம் உயிர்ச் சொல்லாம் காதல் என்னும் சொல்லை தட்டச்சு செய்து சோதித்தேன்.

அந்தோ பரிதாபம். கூகுள் காதலை தவறு என்கிறது. காதலை விட்டு விட்டு காவல் தாலி ஊதல் நுதல் போன்றவையே சரி எனச் சொல்கிறது.
கடைசியாக காதலை கூகுளும் தவறு என்கிறது. தவறு என்று சொன்னாலாவது பரவாயில்லை.. உனக்கு காவல் தான் இனி என வேறு எச்சரிக்கிறது. தாலி என்பது கட்டாயத் திருமணத்தைக் குறிக்கிறதோ என்னவோ..?

சொல்லுங்க.. காதல் தப்பா
காதல் தப்பா..

Tuesday, February 13, 2007

காதலென்ன.. மாலையென்ன.. இந்த வேளையில்

காலக் கரையோரம் நீள நடந்த பின்னும் நினைவுகளில் ஒலிக்கும் ஒரு பாடல். 16 வருடங்கள் தாண்டிய பின்னும் மனசில் ஒலிக்கின்றது.
Kalathil kedkum(9)...

Thursday, February 08, 2007

தமிழ்மணத்தில் யுத்தப் பிரகடனம்

சமருக்கெல்லாம் தாய்ச்சமர் என பல ஆய்வாளர்களாலும் நோக்கப்படும் Operation Dondu என்ற பெயரிலான யுத்தம் தமிழ்மணத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. தாக்குதல் முன்னெடுப்புக்கள் வியூக அமைப்புக்கள் அனைத்து வழி தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் என இருதரப்புமே மிகக் கடுமையாக மோதி வருவதனால் தமிழ்மணமே ரத்தக் களரியாக காட்சி தருகிறது.

இந்நிலையில் யுத்தத்தை தீவிர முன்னெடுப்புடன் நடத்துபவரான திரு டோண்டு அவர்கள் எனக்கு உள்ள ஒரே தெரிவு சண்டையிடுவதுதான். அதை நான் என்னால் முடிந்த அளவு செய்து விட்டு போகிறேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளமையால் தொடர்ந்தும் யுத்தம் தமிழ்மணத்தில் நடைபெறுவதங்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன.

மாதம் முழுமைக்கும் செய்வதற்கு தொழில் வாய்ப்புக்கள் உள்ள போதும் அவற்றைப் பின் நகர்த்தி முழு நேரத்தையும் இணையத்தில் அடகு வைத்து முழு மூச்சுடன் திரு டோண்டு களத்தில் நிற்பதாக கள முனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராத நேரத்தில் தொடுக்கப்பட்ட இப் பாரிய சமருக்கு டோண்டு அவர்களின் தவறான அரசியல் நகர்வுகளே காரணம் என இணையச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இருப்பினும் பல முனைகளில் முன்னேறும் எதிராளிகளுக்கு சளைக்காமல் பதிலடிகளை திரு டோண்டு அவர்கள் செய்து வருவதாக அவரது ஆதரவு இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்ட போதும் அவரது பல ஏவுகணைத் தாக்குதல்கள் புஸ்வாணமாகி கடலில் விழுவதாகவும் நேரில்க் கண்ட பலர் தெரிவித்தனர்.

சமரில் ஈடுபட்டிருக்கும் இருதரப்பினரிடையேயும் பலமான வெளிச் சக்தி ஒன்று அழுத்தங்களைப் பிரயோகிக்காத வரையும் யுத்தம் தொடர்ந்தும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

இந்த யுத்தத்தில் அப்பாவிப் பதிவர்களின் நிலை மிகக் கவலைக் கிடமாயுள்ளது. தமிழ்மணத்தில் இடப்படும் யுத்தம் சாராத வழமையான பதிவுகள் சிதறிச் சின்னாபின்னமாக்கப் படுகின்றன. நடைபெறும் யுத்தம் தன் கோரக் கரங்களை தமிழ்மணமெங்கும் விரித்துள்ளமையால் வழமையான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை.

இந் நிலை தொடருமானால் யுத்தப் பகுதிகளில் இருந்து விலகி இருப்பதை தவிர வேறு வழியில்லை என அப்பாவி குடிமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். எண்டைக்கு சண்டை நின்று நாம் என்றைக்கு பதிவு போடுவது என ஒருவர் சலித்துக் கொண்டார்.

யுத்தமற்ற அமைதிப் பூங்காவாக தமிழ்மணம் திகழ வேண்டுமென்பதே அனைவரினதும் விருப்பம்.

களத்திலிருந்து கொழுவி..

Photobucket - Video and Image Hosting


Wednesday, February 07, 2007

டோண்டு : வாங்கியதும் திருப்பிக் கொடுத்ததும்.

"நடப்பது யுத்தம்; இதில் எதுவும் நடக்கலாம்; யுத்தத்தில் நடப்பவற்றுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது."

இதைச் சொன்னவர் டோண்டு என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஆனால் பல மாதங்களுக்கு முன்பு டோண்டுவைப் பார்த்து இதே வசனம் சொல்லப்பட்டது பலருக்கு ஞாபகம் வராமல் போகலாம்.

ராஜீவ் காந்தி கொலைக்காக பிரபாகரன் இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று டோண்டு எழுதிய காலத்தில் இப்பதில் யாரோ ஒருவரால் அவருக்குச் சொல்லப்பட்டது.
இன்று அப்பதில் டோண்டுவால் மற்றவர்களுக்குச் சொல்லப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் நடந்தது யுத்தம். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்தி்ல்லை.
ஆனால் டோண்டு செய்வது யுத்தமா என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இங்கு இவ்வொப்பீட்டைச் சொன்னது, டோண்டு செய்வது யுத்தம் என்று சொல்வதற்காகவன்று.
அப்படிச் சொன்னால், கடுகு உருட்டுவதை மலை பிரட்டுவதாக தனக்குத் தானே கற்பனை பண்ணிக்கொண்டு 'நடப்பது யுத்தம்' என்று ஸ்டண்ட் வசனம் பேசிககொண்டிருக்கும் டோண்டுவை நியாயப்படுத்துவதாக முடிந்துவிடும்.

ஒரே வசனம் இருதடவை இருவேறு தரப்பால், இருவேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டவே.

"அந்த நேரத்தில் எனக்கு இதைத்தவிர வேறு தெரிவுகளிருக்கவில்லை" என்று டோண்டு சொன்னபோதும்கூட பழைய கருத்தொன்று ஞாபகம் வந்தது.


குறிப்பு:
நடந்து கொண்டிருக்கும் டோண்டு பிரச்சினையில் எனக்கு எக்கருத்துமில்லை.
சொல்லப்போனால் டோண்டு மாற்றுப்பெயரில் எழுதியதுதான் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைக்கு மூலம் என்பதைக்கூட நான் ஒப்பவில்லை.
அடிப்படை பிரச்சினை வேறு என்றே படுகிறது.

ஆனால், டோண்டுவைப் பற்றி ஒருபதிவும் போடாதவர்களின் வலைப்பதிவுகள் தமிழ்மணத் திரட்டியில் திரட்டப்படாது என்ற கதை காதோரம் வந்தபோது (முன்பு சந்திரமுகி திரைப்படம் வந்தபோதும் இவ்வாறான ஒரு நிலைமை வந்தது) இப்பதிவை எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

Monday, February 05, 2007

ஆரம்பிச்சிட்டாங்கய்யா..

கொழுவி பேரில நேற்றொரு பின்னூட்டம் பார்த்தேன்.
ம்..
யாரோ ஆரம்பித்து விட்டார்கள் எண்டது விளங்கீட்டுது. இன்றும் யோகனின் பதிவில் ஒரு கீழ்த்தரப் பின்னூட்டம் எனது பெயரில்..

அப்பிடியே தமிழ் வலைப்பதிவுகளில் உலாவினால் பெயரிலியின் பெயரிலும் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்து விட்டன.

ஈழபாரதியின் பதிவொன்றில் வசந்தன், கானாபிரபா, தீவு ஆகியோர் பெயரிலும் இப்படியான போலிப் பின்னூட்டங்கள் வந்திருந்தன.

-/பெயரிலி.. கொழுவி.. வசந்தன்.. தீவு... கானா பிரபா இந்த வரிசையில் அடுத்ததாக டிசே மற்றும் சோமி இவர்களின் பெயர்களில் பின்னூட்டங்கள் எங்காவது வந்திருக்க வேண்டும் அல்லது வரவிருக்கின்றன.

குறிப்பிட்ட பதிவர்களுக்குள் என்ன "சீல"ம்பாய் உறவெண்டு நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட பதிவர்களில் பெரும்பாலானவர்கள் தமக்கான தொடர்பு வசதியைத் தெரியப்படுத்தி வலைப்பதிபவர்கள். சிக்கலான சந்தேகமான பின்னூட்டங்கள் வந்தால் அவர்களுடன் தொடர்புகொண்டு பின் பிரசுரிக்கலாம்.
கொழுவிக்கான தொடர்பு முகவரி ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தாலும் இங்கும் தருகிறேன்.
koluvi@gmail.com

தயவு செய்து பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்வோர் கொஞ்சம் யோசிக்கவும்.
அப்படி யோசிக்கவும், சந்தேகம் வந்தால் மின்னஞ்சல் போட்டு தெளிவுபடுத்தவும் நேரமின்றியிருப்போர் அல்லது பஞ்சி பிடித்திருப்போர் தயவு செய்து உங்கள் வலைப்பதிவுகளுக்கு அனாமதேய பின்னூட்டும் வசதியை நீக்கிவிடுங்கள்.

இப்பிடி விளையாட்டு விளையாடுறவங்களின்ரை உணர்வுகளை நாங்கள் நல்லா புரிஞ்சு கொள்ளுறம். இதே ஆடடத்தைத் திருப்பி ஆடுவதொன்றும் பெரிய காரியமில்லை. இந்தப்பிரச்சினை வலைப்பதிவுகளில் தோன்றிய காலத்திலிருந்தே நாங்கள் வலையில் குப்பைகொட்டி வருபவர்கள்.
என்ன செய்ய?
பதிலுக்குத் தொடங்கு எண்டு மனசு அலைபாய்ந்தாலும்.. புத்தியும் மனசும் அடங்கு அடங்கு எண்டு அடக்குது.. பிழைச்சுப் போங்கோடா பொடியங்களா..

Friday, February 02, 2007

என்ன ஒரே இருட்டாக இருக்கிறது..?

என்னடா இது ஒண்ணுமே தெரியல்லை.. இருட்டாகவே இருக்கிறது.. சரி சரி படமெடுக்கிறாங்கள் போல.. ஏதோ பாக்கிறது போல போஸ் குடுப்பம்..

Photobucket - Video and Image Hosting


Tuesday, January 30, 2007

திரிக்கப்பட்ட வரலாறும் இழைக்கப்பட்ட அநீதியும்

வலைப்பதிவுகளில் முதன்முறையாக புதிய முயற்சியென வித்தியாசமான சிந்தனையென்ற பல்வேறு அடைமொழிகளோடு சில பதிவுகள் வந்திருக்கின்றன. வானொலி நிகழ்ச்சிகளாக கலந்துரையாடல் ஒலிப்பதிவுகளாக மலைநாடன் வசந்தன் சயந்தன் சோமிதரன் ஆகியோர் இட்டிருக்கும் ஒலிப் பதிவுகளை ஆகா ஓகோ என்று பாராட்டி எழுதுகின்றனர் பலர். அதில் எமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் வரலாற்றை மறந்தவர்களாக இந்த முயற்சி வலையுலகில் இப்போது தான் அறிமுகப்படுத்தப் படுகிறது என்று இவர்கள் எழுதுவதைத்தான் திரிக்கப் பட்ட வரலாறு என்கிறோம்.

2005 யூன் மாதத்திலேயே நாம் இவ்வாறான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிப்பதிவை முதன் முயற்சி புது முயற்சி என்ற எந்த ஆலவட்டமும் இன்றி வெளியிட்டமையை மறந்து நடப்பது திட்டமிடப்பட்ட அநீதி.

நீர் ர
ொம்பக்கெட்டிக்காரன்.அற்புதமாகவிருக்கின்றன காட்சியும்,கானமும்!இதை எப்படியும் வளர்த்துச் செல்லுதல் மிகவும் ஆரோக்கியமானது.போலித்தனங்களைப் போட்டுடைக்க இப்படியான முயற்சிகள் நல்ல பயனைத் தரும்.மனிதர்களுள் ஊடாடும் வஞ்சகத்தனத்தை புஷ்ணவி மூலம் சாட்டையடி கொடுத்த, எழுத்து வடிவம் சிறப்பாகச் செல்கிறது.மௌனித்த மகளிரெனும் மடமைக்கு, புஷ்ணவி ஆப்புவைத்து,இல்லை நாம் பாரதிகண்ட புதுமைப் பெண்களெனும் பிரகடனத்தைச் செய்கிறார்.அற்புதமான வரிகள்! இந்தச் சின்னன்கள் சிறப்பாய் வளர,என் வாழ்த்துக்கள்.நாளைய உலகம் உங்கள் கரங்களில் வந்தாடும்.இதில் எனக்குச் சந்தேகமில்லை.


நிறைந்த பெருமிதத்தோடு

ப.வி.ஸ்ரீரங்கன்

அப்பொழுதே நாம் இந்தப் பாராட்டையும் பெற்றிருந்தோம்.இதோ உங்களுக்காக உண்மையாகவே தமிழ் வலைப் பதிவில் முதன் முறையாக கலந்துரையாடல் ஒலிப்பதிவு. இதுவே இன்று புது முயற்சி செய்வோருக்கெல்லாம் முன்னோடி.






Sunday, January 28, 2007

புளொக்கரை எச்சரிக்கிறேன்

புளொக்கர் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்துதாம். வலுக்கட்டாயமாக அலற அலற ஆட்களைப் பிடிச்சுத் தன்ர புது புளொக்கரில சேர்க்கிறதாம். என்னதான் நடந்தாலும் புது புளொக்கர் பக்கம் போகவே மாட்டம் எண்டிருந்த ஒரு சிலரை கதறக் கதறத் தூக்கி புது புளொக்கரில ஏத்தினதாக் கேள்வி. அதுவும் பெரிய பெரிய தலையளாப் பாத்துத்தான் உந்தப் பதிவர் பிடி வேலை நடக்குது. உதை நான் கடுமையாக் கண்டிக்கிறன்.

என்னை ஒருபோதும் வலுக் கட்டாயமாக அவர்களால் புது புளொக்கரில் தள்ள முடியாது என எச்சரிக்கிறேன்.

ஏனெனில் மனப்பூர்வமாக சுய அறிவோடு நானே இதோ இந்த நிமிடம் முதல் மாறி விட்டேன். புதுப் புளொக்கர் வாழ்க

கொழுவியோடே கொழுவலா?

இண்டைக்குக் கதை சொல்லப்போறன். அதுவும் மூண்டு கதைகள்.
கதைகள் எண்ட உடன 'கற்பனை' எண்டு நினைக்காதையுங்கோ. எல்லாம் உண்மைகள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"கொழுவிக்கு மண்டைக்க ஒண்டுமில்லை"
"கொழுவிற இடம் தெரியாமல் கொழுவினால் இதுதான் நடக்கும்"
[என்ன நடந்ததெண்டு எனக்கும் விளங்கேல;-)]

மேற்கோளிடப்பட்ட வசனங்களை ஒருத்தர் எழுதியிருக்கிறார்.
இவருக்கும் கொழுவிக்கும் அந்த இடத்தில எந்தப்பிரச்சினையும் நடக்கேல. ஆனா சரியான இடத்தில பூந்து தக்கநேரத்தில கொழுவிக்கு ஒரு குத்து விட்டிருக்கிறார் பாருங்கோ...
அதுக்கு என்ன காரணம்?
கொழுவிக்குக் குத்த தருணம் பாத்திருக்கிற அளவுக்கு என்ன நடந்தது?
அந்த இடத்தில வாசிக்கிற ஆக்களுக்கு சம்பந்தமில்லாமல் இவனேன் கொழுவியோட கொழுவிறான் எண்டு தோன்றியதா?
நானும் யோசிக்கிறன். முடிஞ்சால் நீங்களும் கண்டு பிடியுங்கோ பாப்பம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்மணத் திரட்டியில் பின்னூட்டங்களைத் திரட்டும் வசதியைப் பெற வேண்டுமாயின் வலைப்பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்பட வேண்டும் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டு இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த அறிவித்தல் வருவதற்கு முன்னரே கொழுவி பின்னூட்ட மட்டுறுத்தலைச் சிலகாலம் செய்ய வேண்டியிருந்தது. அது ஏன்?

முன்னர் சில வலைப்பதிவுகளில் சகட்டுமேனிக்கு தூசணங்கள் பின்னூட்டமாக இடப்படும். இதைச்சிலர் தமது அரசியல் நோக்கங்களுக்குப் பாவித்தனர். பாதிக்கப்படும் நிலையிலிருப்பவர் மகிழ்ச்சியடையும் நிலைகூட இருந்தது.

இப்படிப்படியாக இருந்துவரும் காலத்திலே,
தூசணம் கொட்டிவிட்டுச் சொல்லும் ஓர் அனாமதேயத்துடன் கொழுவி பொருதும் நிலை தற்செயலாக வந்துவிட்டது. பொருதிய கொழுவிக்கு உடனேயே புரிந்தது இது ஒரு கழண்ட கேஸ் என்று. எந்த அரசியலுமின்றி ஆங்காங்கே துப்பிவிட்டுச் செல்வதே அந்த விசரின் வேலையென்று விளங்கிவிட்டது. கொழுவியை மிகத்தீவிரமான புலியெதிர்ப்பாளன்/ள் எண்டு சொல்லியது.
விசருகளோடு சண்டைபிடித்தால் நாமும் விசர்ப்பட்டம் வாங்கிவிடுவோமோ என்ற பயத்தில் கொழுவி பின்வாங்கினாலும் அந்த விசர் விடுவதாக இல்லை.
கொழுவியின் பதிவுகளுக்கும் தூசணப்பின்னூட்டங்கள் வரத் தொடங்கின. ஆனால் மற்றவரைப் போல் அவற்றை வைத்து அரசியற்பிழைப்பு நடத்தும் கேவல எண்ணம் கொழுவிக்கில்லை. [ஏற்கனவே யாரோ எழுதிய ஆபாசப்பின்னூட்டத்துக்காக தமிழ்மணத் திரட்டியிலிருந்து தூக்கப்பட்டவன் கொழுவி.;-(]எனவே பின்னூட்ட மட்டுறுத்தல் உடனடியாகவே செயற்பாட்டுக்கு வந்தது கொழுவியின் வலைப்பதிவில். அந்த விசரும் கொஞ்சநாள் விடாமல் துப்பிவிட்டு களைத்து ஓய்ந்துவிட்டது.

இதுதான் கொழுவி மட்டுறுத்தற் கட்டாயத்துக்கு முன்பே பின்னூட்டம் மட்டுறுத்திய கதை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில கோமாளிகள் இருக்கிறார்கள். தம்மீது வெளிச்சம் விழவும், தானும் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளவும் புலிக்கு வால்பிடிக்கும் கூட்டமது. புலத்தில் பெருமளவுக்கு இக்கூட்டம் இருக்கிறது. போராட்டம் பற்றி தகவல் பூர்வமாகவோ - அறிவுபூர்வமாகவோ - தர்க்கபூர்வமாகவோ ஒரு கோதாரியும் தெரியாதவர்கள், புலிக்கு வால்பிடிப்பதால் தாம் பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இயல்பில் என்ன இருக்கிறதென்ற விளக்கமின்றி கற்பனையில் புரட்டுக்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
வால்பிடிப்பதிற்கூட தாம்தான் முன்னுக்கு நிற்கவேண்டுமென்று நினைப்பவர்கள். எங்கே தமதிடம் போய்விடுமோ என்ற அச்சத்தில் மற்றவால்பிடிகளைத் தள்ளிவைக்க, முடிந்தால் துரோகியாக்கிவிடவும் நினைப்பவர்கள்.

இக்கோமாளிக் கூட்டத்துக்கும் கொழுவிக்கும் கூட கொழுவலுண்டு.

கொழுவிக்குக் கொழுவிற இடம் தெரியாதெண்டு சொல்லிறது ஒருபக்கமிருக்கட்டும்; கொழுவியோட கொழுவிறதாலதானோ என்னவோ மேற்சொன்ன கோமாளிக்கூட்டத்துக்கும் கோழுவிற இடம் தெரியாமலிருக்கு.

Friday, January 26, 2007

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பெயரில் புதிதாய் ஒரு வலைப்பதிய எண்ணியுள்ளேன். எல்லாம் ஒரே உலகமே எல்லாரும் உறவினரே என அர்த்தம் தொனிக்கும் இத் தலைப்பின் கீழ் நான் எழுத நினைத்துள்ள பதிவுகளின் முன்னோட்டம் இது.

எங்கடை பலாப் பழத்துக்கு அடுத்த வீட்டில விலை பேசுறான் வடக்கத்தையான்.

தமிழ் ஆண்களின் வேட்டியை விழுங்கிய வட இந்தியரின் குர்தார்.

ஆ.. கொப்புரானே.. முஸ்லீம்கள் எங்களை அடுத்துக் கெடுத்தனர்..

சில ஊளையிடும் தமிழரும் அவர்களின் உணர்வுகளும்

இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிடவும் சிலரைத் தயார் செய்துள்ளேன். பிறரின் பின்னூட்டங்கள் எனது கருத்துக்களை கேள்விக் குறியாக்கினால் ஒருபோதும் வெளியிட மாட்டேன்.

Thursday, January 25, 2007

சேலை கட்டணும் சிங்குச்சா..

ஆரூரன் மாதுளன் மாதிலன் மற்றும் திவ்யா எனச் சிலர் அல்லது ஒருவர் அவரது மொழியில் வடக்கத்தையானின் உடையான பஞ்சாபியை அணிவது தமிழ் பெண்களின் கலாசாராத்திற்கு உகந்தது அல்ல என்று எழுதியதும் அதற்கு வரும் எதிர்வினைகளுக்கு விரல் சூப்பும் சின்னப் பிள்ளைகள் மனநிலையில் நின்று பதிலதிப்பதனையும் பார்த்திருக்கிறீர்களா..?

அதற்காக நான் எழுதிய பின்னூட்டம் ஒன்று வெளியிடப் பட வில்லை. எந்த வித ஆபாச ஆசாபாசத் தாக்குதலும் அற்று எழுதப் பட்ட அந்தப் பின்னூட்டம் வெளியிடப் படாமைக்கு ஒரே காரணம் அதில் கேட்கப் பட்டிருந்த கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லாமையே..

தன்னால் (பட்டிமன்றத்தைப் போல ) வெட்டிச் சளாப்பக் கூடிய கருத்துக்களை அவர் அனுமதிப்பதுவும் தன்னால் பதில் சொல்ல முடியாத கருத்துக்களை அமுக்கித் தான் மட்டும் வாசித்து விட்டு அனுமதியாமலும் விடுவது அவரிஸ்டம் எனச் சொல்ல முடியாது.

தனது கருத்துக்களுக்கு பதில் தேவையில்லையெனில் பின்னூட்டப்பகுதியை அவர் மூடி விடலாம். தனது பதிவில் அவர் அனுமதித்து இருக்கும் கருத்து எல்லாமே மிதுளனோ மிதிலனோ அல்லது திவ்யாவோ வந்து பதில் சொல்ல முடியும் என நம்புகின்ற கருத்துக்கள். அவ்வாறு மிதிலனாலோ மிதுளனாலோ அல்லது திவ்யாவாலோ பதில் சொல்ல முடியாத கருத்துக்களை அவர் அனுமதிப்பதில்லைப் போலும்.

எனினும் இவ்வாறு கருத்து வீச்சைக் கம்மியாக்கிக் கொண்டோருக்கு பதில் எழுதும் போது எங்கிருந்தோ கேட்கும் அசரீரிக்கு ஏற்ப அவற்றைப் படியெடுத்து வைப்பது உண்டு.

தொடக்கத்தில் இருந்தே வருகிறேன்.
இங்கே நீலக் கலரில் உள்ளவை எல்லாம் மிதுளன் எழுதியவை. சிவப்புக் கலர் கொழுவி எழுதியது.

ஏனென்றால் சேலை இந்தியாவின் தேசிய உடை என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்

பிறகெப்பிடி.. தமிழ் பொம்பிளையளும் சேலை அணிந்தால் அவ இந்தியா எண்டு தானே அறியாத ஆட்கள் நினைப்பினம்..

சரி உந்தப் பாரம்பரியம் எல்லாம் எப்ப தோன்றினது..? மனிதன் தோன்றி எத்தினை வருசத்தக்கு பிறகு அவை அவை தங்களுக்கான பாரம்பரிய உடைகளை தேர்வு செய்தவை..? என்ன என்ன காரணங்களை முன்னிட்டு தங்களுக்கான உடைகளை தேர்வு செய்தவை..? அப்பிடி தமக்கான உடைகளை தேர்வு செய்யும் போது என்ன என்ன காரணிகளை முன்னிறுத்தியவை எண்டு ஏதாவது தெரியுமோ..?

அது சரி வேட்டி எப்ப தமிழரின் பாரம்பரிய உடையானது. வேஸ்டி என்பது தானே அதனது மூலச்சொல்..
அதை தானே நாம் ட்... சேர்த்து வேட்டியாக்கினோம்.. நிமிஸத்தை நிமிடம் என்றாக்கியது போலவும்.. விஸயத்தை விடயம் ஆக்கியது போலவும்..

வேஸ்டியம் தமிழன் ஏதோ ஒரு மோகத்தில் அல்லது அவனது காலநிலைக்கு வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தனது பாரம்பரிய உடையாக்கியதாகத் தான் இருக்க வேண்டும். அப்பவும் உம்மைப் போல சிலர் அதற்கெதிராக குதித்திருப்பார்கள். ..

சப்பையான முகமுள்ளவர்கள் அனைவரையும் சீனர்கள் என்று நாம் எடைபோடுவதில்லையா? வெள்ளைக்காரன் என்று வெளுத்த தோலுடைய எல்லோரையும் நம்மவர்கள் சொல்வதில்லையா? கருப்பாக இருந்தால் எல்லாம் கறுவல்கள் என்று நாம சொல்வதில்லையா? அதுபோன்றுதான் சேலை அணிந்தவர்களை இந்தியர்கள் என்று பிற நாட்டுக்காரர் தவறாகக் கருதுவார்கள். அப்போது நீங்கள் விளக்கலாம், அய்யா, அம்மா நான் இந்தியனல்ல, தமிழன் என்று.

தமிழர் தமது அடையாளத்தை உணர்த்த சேலை அணிய வேண்டும் எனச் சொல்லும் நீங்கள் பின்னர் சேலை அணிந்தால் அவர்கள் இந்தியர்களாக தவறாக நோக்கப் படுவர் எனவும் அப்போது நாமாகச் சென்று அய்யா அம்மா நான் இந்தியன் இல்லை தமிழன் எனவும் விளக்க வேண்டும் எனவும் சொல்லுகிறீர்கள். பஞ்சாபியை அணிந்து விட்டும் யாராவது தவறாக வட இந்தியப் பெண் என நினைத்தால் நாமாகச் சென்று அய்யா அம்மா நான் வட இந்திய பெண் இல்லை. தமிழிச்சி என விளக்கலாம். என்ன அணிந்தாலும் நாமாக விளக்கினால்த் தான் நாம் யாரென்று புரியுமென்றால் எது அணிந்தால்த் தான் என்ன..?

கொழுவி, வேஷ்டியில் இருந்து வேட்டி வந்தது என்று கூறுகின்றீர். அந்த வேஷ்டிக்கு வேர்ச்சொல் தருவீரோ? உம்முடைய அறிவின்படி வர்ஷசத்திலிருந்துதான் வருடம் வந்தது என்றும் சொல்வீர். ஏனென்றால் நீர் படித்த இடம் அப்படிப்பட்டது.

அரைகுறை அறிவாளிகள் சிலர் ஊரிலையும் வெளிநாடுகளிலும் கவிதை தமிழில்லை, சன்னல் தமிழில்லை என்று தங்களுக்குத் தெரியாதவற்றைத் தமிழல்ல என்றுசொல்ல அதுபோல நூல்களும் அச்சிட்டு வெளிவருகின்றன. அவர்களிடம் வகுப்பெடுத்த உங்களை மீட்டெடுப்பது கடினம்.

வேஸ்டிக்கு வேர்ச் சொல்லா.. வேட்டிக்கு வேர்ச்சொல் வேஸ்டி என்பது தெரியும் . வேஸ்டிக்கு எது வேர்ச்சொல் என அறிய நான் வடமொழி அறிந்திருக்க வேண்டும். ஜன்னல் என்பதில் இருந்து மருவியது சன்னல். இதற்கு தமிழில் அழகான சாளரம் என்ற சொல் உள்ளது.

அன்றாடம் வீட்டில் சாரம் கட்டும் நம் தமிழர்கள் அதற்குப் பதிலாக வேட்டி கட்டினால் குறைந்துபோக மாட்டார்கள

வேட்டிக்கும் சாரத்திற்கும் இடையில் நிறம் ( சில வெள்ளை நிற சாரமும் உள்ளன) மற்றும் துணி வேறுபாடு தவிர நன்றாக காற்றுப்புகும் என்பதில் ஒற்றுமை ஒன்று தான். வேட்டி கட்டினால் எந்த விதத்தில் தமிழர் கூடிப் போவார்கள். ?

முஸ்லீம்களின் வருகையுடன் வந்த சாரம் தமிழர்களிடம் நிலைத்திருக்கும்போது, தமிழர்களின் ஆடையான வேட்டி நிலைத்திருக்க வேண்டும்,

முஸ்லீம்களின் வருகையோடு சாரம் வந்தது போலவே வேட்டியும் வந்தது. இரண்டையும் வசதி கருதியும் கால நிலை கருதியும் ஏற்றுக் கொண்டோம். அது போலவே தமிழனின் வெளியேறுகையோடு பஞ்சாபியும் ஜீன்சையும் வசதி கருதியும் இலகு கருதியும் ஏற்றுக் கொள்ளலாம்.

சேலையும் வேட்டியும் தமிழரின் பாரம்பரிய உடையென்று ஆரூரனுக்கு சொன்னவர் யார்..?

இத்தனை முரண்கள் உள்ள போதும் நான் உமது தாய் தந்தையரையோ அல்லது படித்த இடத்தையோ இங்கே இழுத்து வரவில்லை. அதற்க காரணமும் நான் படித்த இடம் தான் என நீர் சொன்னால் மகிழ்வுறுவேன்.-

அனைத்து வகைப் பின்னூட்டங்களும் ஏற்கப் படும் (ஆபாசாப் பின்னூட்டங்களை என்ன செய்வாய் என ஒர அசரீரி கேட்கிறது.)

Tuesday, January 23, 2007

LIC யின் பரபரப்பு அறிவிப்பு

தமிழகத்தின் LIC காப்புறுதி நிறுவனம் திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. தமது நிறுவனத்தில் காப்புறுதி பெற்றிருக்கும் யாராவது வீராசாமி திரைப்படத்தினைப் பார்த்த பின்னர் மரணமடைந்தால் அவர்களுக்கான காப்புறுதி வழங்கப்பட மாட்டாது என அவ்வறிக்கை கூறுகிறது.

ஏனெனில் இவ்வகையான மரணங்கள் தற்கொலைப் பிரிவின் கீழ் வருவதாலும் தற்கொலைக்கு தமது நிறுவனம் காப்புறுதி வழங்காது என்பதாலும் இந்த முடிவினை எடுக்க நேர்ந்ததாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Saturday, January 06, 2007

வக்கிரம் பிடித்த கொழுவி - சிறீரங்கன்

இந்த நிலையில் பேடித்தனமாகக் கொழுவியும்,பெடியன்களும் பதிவிட்டு,நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.இதற்கு மேலால் இத்தகைய தலைமுறையால் என்னத்தைப் புதிதாகச் சிந்தித்திருக்க முடிந்தது?பெடியன்களின் பெயரால் சுவிஸ்,சிங்கப்ப+ர்,அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேடிகள் எழுதுவதற்கு வக்கற்று மற்றவர்களைக் கேலி பேசுவது ஒரு வகை மாபியத்தனத்தின் திமிர்தான்.இத்தகைய திமிரில் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது ஊரறிந்த விடையம்.

சிறிரங்கன் அவர்கள் கொழவி குறித்து எழுதிய மேற்படி விடயம் பற்றிய சில எண்ணங்கள் இவை.
இதிலே பேடித்தனமாக கொழுவி என்ன எழுதினார் என்பதை அவர் தெளிவாக குறிப்பிட வில்லையாயினும், கொழுவியில் வெளியான அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும் என்ற பதிவு தொடர்பாகவே தனக்கேற்பட்ட சூட்டை இவ்வாறு தணித்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. பேடிகள், வக்கிரம், மாபியா, திமிர் இத்தகைய வார்த்தைகள் எல்லாமே அவருக்குள் கிளர்ந்தெழுந்த சூட்டின் வெளிப்படுத்தல்கள் தான்.

அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும் என்ற பதிவு, சிறிரங்கன் தனது பதிவில் ஏலவே எழுதிய அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற அவரது பதிவின் நீட்சிதான். தொடர்ச்சி தான். தழுவல் தான்.

இதில் எங்கிருந்து மன வக்கிரம் எழுகிறதோ, அல்லது எங்கு கொழுவிக்கு திமிர் பிடிக்கிறதோ தெரியவில்லை. அவ்வாறேதும் இருப்பின், அது அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற பதிவினை எழுதும் போது சிறிரங்கனுக்குள் இருந்த மன வக்கிரம், மற்றும் மாபியாத்தனம் ஆகியவற்றின் நீட்சியே பின்னர் அது தொடர்பான பதிலெழுதும் போதும் எனக்குள்ளும் எழுந்திருக்கும்.

அடுத்த பந்திக்குள் செல்வதற்கு முன் இந்த இடைச்செருகல் அவசியமாகிறது. சிறிரங்கன் அகரன் போன்ற பதிவர்களுக்கிடையிலும் இராயகரன் போன்ற பதிவர்களுக்கிடையில் என்னளவில் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இராயகரனின் எழுத்துக்களில் நேர்மை இருக்கும். வாசிக்கும் போது அதனை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் மற்றவர்கள் தாம் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கும் வரை காத்திருந்து நடந்ததும் அது பற்றி காரசாரமாக எழுதுகிறவர்களாகத் தான் தோன்றுகிறார்கள். இதோ கிழக்கில் புலிகளுக்கு, அல்லது ஒட்டு மொத்தமாகவே புலிகளுக்கு இராணுவத் தோல்வி ஏற்பட்டு விடும் என்பதனை முன் கூட்டியே இவர்கள் தீர்மானித்த பிறகு மிகுந்த மன உற்சாகத்துடன் எழுதித் தள்ள காத்திருக்கும் இவர்கள் இது போலவே இன்னும் நிறைய விடயங்களில் ஒன்று படுகிறார்கள்.

சிறிரங்கன் ஆரம்பம் முதலே குழப்பான கருத்துக்களை அந்த, அந்த நேரத்து உணர்ச்சிகளுக்கு அமைய எழுதிவருபவர் என்பது நான் எனக்குள் தீர்மானித்து விட்ட ஒன்று. குறிப்பாக சில காலங்களுக்கு முன்னர் புலிகளின் தொண்டரடிப்பொடிகள் சிலரின் இணையத்தில் வெளிவந்த அவருடைய படத்துடனான ஒரு செய்தியை மட்டும் (அது மன உளைச்சலைத் தரக்கூடிய செய்தியே என்பதில் மறுப்பேதும் இல்லை) வைத்துக் கொண்டு மிக அழகாக திரைக்கதை அமைத்து தன் மீதான நேரடிக் கொலை மிரட்டல் நாடகத்தினை அரங்கேற்றியவர். கூடவே ஜேர்மனியில் உள்ள இணைய மையங்களில் தனது புகைப்படத்துடன் கூடிய நோட்டிஸ் அச்சடித்து விநியோகிக்கப்படுவதாக வேறு கூறியவர்.

அது போலவே பொடியன்கள் என்ற இலக்கற்ற பதிவொன்றின் தொடக்கத்தில், அது ஈபிடிபி என்னும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினது என்றும், இதய வீணைக் காரரின் வலை, என்றும் டக்ளசின் பதிவு என்றும் பயமுறுத்திய அதே சிறிரங்கன் தான் இப்போது அதற்கு வேறு முகவர்களை நியமித்திருக்கிறார்.

(சிறிரங்கன் ஜனநாயகம் கருணா பரமுவேலன் நிர்மாணம் என பல்வகை பதிவுகளின் சொந்தக்காரர் ஆயினும் அதில் ஏதும் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் அவை அனைத்துமே அவரது சொந்தக் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. )

அவருக்குள் இயல்பாக எழும் உணர்ச்சிகளை சில சமயங்களில் வார்த்தைகளாக அவர் ஆக்கி விடுவது சில சமயங்களில் அவரை தெளிவாக இனம் காட்டும். அவ்வாறான ஒரு பதிவை இங்கு படியுங்கள்

இத்தனைக்குப் பிறகும் சிறிரங்கன் பிரபாகரனை மோடன், முட்டாள் என்பதையோ அல்லது அன்ரன் பாலசிங்கத்தை தனது எரிந்த வார்த்தைகளால் நாற்றமடிக்க அர்ச்சிப்பதையோ நான் எந்த வித கோப தாப எழுச்சி உணர்ச்சிகளும் அற்று வாசிக்கிறேன்.

ஆனால் அவ்வாறு எழுதுவதற்கு அவருக்கு உள்ள அதே சுதந்திரத்தையும் உரிமையையும் நானும் கொண்டிருக்கிறேன். அவ்வாறே நானும் எழுதுவேன். ஆனால் அப்போது மட்டும் அவர் ஓடிவந்து உது வக்கிரம், மாபியா தனம், திமிர் என்று சொல்வது மீளவும் அவரைத்தான் முகமுரித்துக் காட்டுகிறது.

புலிகள் தொடர்பான முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று அவர்கள் மீதான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாத போது வேறு வழிகளில் கேள்வியை நிறுத்துவது என்பது. அதுவே சிறிரங்கனிடமும் உள்ளது. அடிப்படையில் அனைவரிடமும் உள்ளது.

அன்ரன் பாலசிங்கத்தை கிண்டலடிக்க அவர் பயன்படுத்திய அதே வார்த்தைகளை அதே வசனங்களை அவர் மீது பிரயோகித்தவுடன் பொறுக்க முடியாமல் பொங்கியெழும் அவரைத்தான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் வார்த்தைகளாகப் பார்த்தோம்.

அவர் தொடர்ந்தும் பிரபாகரனைப் பற்றியும் பாலசிங்கத்தைப் பற்றியும் இன்னும் எல்லோர் பற்றியும் தொடர்ந்து எழுத வேண்டும் . ஏனெனில் எமக்கும் எழுத நிறைய இருக்கிறது.

சிறிரங்கன் எழுதிய அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற பதிவை வாசித்த பின்னர் இதோ அவர் எழுதிய அவரது சொந்த வார்த்தைகளையும் வாசியுங்கள்.
நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.

Friday, December 29, 2006

இந்தியா அமெரிக்காவின் மாநிலமாக

ஜடாயுவின் ஒரு பதிவினை இன்னு தான் பார்க்க நேர்ந்தது. அதில் இடம் பெற்றிருந்த ஒரு பின்னூட்டம் இலங்கையில் கொழுந்து விட்டெரியும் தமிழர் பிரச்சனைக்கு இது வரை சொன்ன சாத்வீக ஆத்வீக சமாதானத் தீர்வுகள் அனைத்திலும் ரொம்ப (நகை)ச் சுவையானது.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது. தனிக்காட்டு ராஜாவாக இருக்க விரும்பு ராஜப§க்ஷ, ஈழத்தலைவர்களுக்கு அது உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம்.


ஆனால், இலங்கையில் இருக்கும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் அதுதான் நல்லது.

இன்றில்லையேல் இன்னும் சில வருடங்களில் அதுதான் நடக்கும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது.

எட.. இப்பிடியொரு தீர்வு இவ்வளவு நாளும் எங்கடை தலைவர்மாருக்கும் எங்களுக்கும் தெரியாமல்ப் போட்டுதே. இதில மிகப் பெரும் பகிடி என்னெண்டால் அப்படி நாங்கள் மாநிலமா இணைஞ்ச பிறகு அதைப் பாத்து நேபாளம் பூட்டான் நாடுகளும் இந்தியாவோடு வந்து இணைவினமாம். பச்சையாச் சொன்னா உது அந்தக் காலச் சோழ சேர பாண்டியரின் நாடு பிடிக்கும் எண்ணத்தின்ர மிச்ச சொச்ச எண்ணம் தான்.

இதைப் படித்த உடனை எனக்கும் சில தீர்வுகள் தோன்றியது.
இந்தியாவில் வறுமை ஒரு முக்கிய பிரச்சனை. இதிலிருந்து விடுபட இந்திய மக்கள் தங்களை அமெரிக்காவுடன் இணைக்கச் சொல்லி கேட்கலாமே..Green Card ம் இலகுவாக கிடைக்கும். அவ்வளவும் ஏன் அடிமையாயிருந்தால் என்ன குறைஞ்சா போயிடுவம்.. இங்கிலாந்துக்கு கீழையே தொடர்ந்தும் இருந்திருந்தால் எல்லா வசதிகளும் கொண்ட (உண்மையாகவே) ஊழல் அற்ற ஆட்சியொன்று கிடைத்திருக்குமே..

இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இந்தியா இலங்கை சிங்கப்பூர் அவுஸ்திரேலியா முதலான எல்லா நாடுகளும் அமெரிக்காவோடு இணைந்தால் நாடுகளுக்கு இடையில் ஒரு பிரச்சனையும் வராது. உலகத்துக்கு ஒரு நாடு உண்மையில நல்ல விசயம் தான். முதலில இந்தியா போய் இணைந்தால் வறுமைப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காணலாம். அதனைப் பார்த்து நேபாளம் பாகிஸ்தான் முதலிய நாடுகளும் அமெரிக்காவோடு இணைய முன்வரும்.

ஆகக் குறைந்தது காஸ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காவது இந்தியா பாகிஸ்தானின் 15 மாநிலங்களானால் அது நல்ல ஒரு தீர்வைத் தரும்.

இறுதியாக

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இந்தக் கேள்வியின் படி கட்டாயமான ஒரு சூழ்நிலை வருமென்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோமே.. கண்டிப்பாக இந்தியாவுடன் தான் இணைந்து கொள்ள வேண்டுமா..?
அவுஸ்திரேலியாவுடன் இணையலாமே..

Thursday, December 28, 2006

ஈழம் வீடியோ பாடல்

பச்சை வயலே என்ற இந்தப் பாடலுக்காக பிரத்தியேகமாக எந்தக் காட்சியையும் ஒளிப்பதியாமல் தினம் தினம் ஈழத்தின் காட்சிகளை மட்டும் கொண்டு பாடலுக்கு காட்சியமைத்திருக்கிறார்கள்.
காட்சியில் இடம் பெற்றிருக்கும் குண்டு வீச்சு காட்சிகளும் மக்களின் அவலச் சாவும் நிதம் நிதம் ஈழத்தில் நடக்கும் காட்சிகள்.
தேனிசை செல்லப்பாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலின் வீடியோ பதிவு இது


Friday, December 22, 2006

அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும்

டேய் ரங்கா வாடா வா!என்னமாதிரிப் போகுது பாடு?

மணியண்ணை! என்னத்தைச் சொல்லிறது? வயிறெரியுது.

ஏன்ராப்பா, மனுசி ஏதும் உறைப்பாத் தந்திட்டாளோ?

சும்மா விசர்க்கதை கதைக்காதையுங்கோண்ணை. நாட்டில உலகத்தில நடக்கிறதுகளைப் பாத்து எரியுது எண்டுறன்.

எட, அதையோ சொல்லிறாய். அப்பிடி எரியிறதுக்கு புதுசா என்ன தான் நடந்தது?

என்னண்ணோய் இப்பிடிச் சொல்லுறியள்?
அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் கூட்டமெண்டு பெரிய கூட்டமெல்லோ? உலகப்புகழ்பெற்ற டயானாவுக்கே இப்பிடியில்லையெண்டு வெள்ளையளே சொல்லுதுகளாம்.


நீ எதைச்சொல்லிறாய், எதுக்கு வயிறெரியிறாய் எண்டு எனக்குச் சரியாத் தெரியேல. சரி அதைவிடு... வாற ஞாயிறு வீட்டில கூழ் காய்ச்சிறன். வாவென் ஒருபிடி பிடிப்பம்.

அண்ணை, நீங்கள் கதைய மாத்தாதையுங்கோ. விளங்கியும் விளங்காத மாதிரி நடியாதையுங்கோ.

உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?

ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?

அதுதான் நீயாய்ச் சேர்த்து ஏற்கனவே நாறிப்போயிட்டியே. நக்கலுக்கு மட்டும் குறைவில்லை. அவங்களெண்டாலும் கலாநிதிக்குப் படிச்சு கடசிவருசத்தை முடிக்காமல் விட்டாங்கள்.. அதுவும் ஏலாமல் விடேல, இடையில போராட்டப் பாதையைத் தெரிவுசெய்து படிப்பை முடிக்காமல் வந்திட்டாங்கள். எண்டாலும் அவங்களுக்கு கலாநதிக்கும் மேல அறிவும் திறமையும் இருந்தது.
நீ என்னத்தைக் கிழிச்சுப்போட்டு இங்கிலீசில இருவத்தாறு எழுத்தையும் அங்க இஞ்சையெண்டு மாத்திப்போட்டு டாக்குத்தர் எண்டு பட்டம் போட்டுக்கொண்டு அலம்பித் திரிஞ்சனி?

பத்ததாததுக்கு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிறனெண்டும் சிலருக்கு டோஸ் விட்டுக்கொண்டிருந்தாய். டாக்குதர் வேலைக்குரிய மாதிரி ஒரு துரும்பாவது படிச்சனியோ? நீர் ஊருக்க உப்பிடி புழுகித் திரியேக்க அதையும் நம்பிக்கொண்டு, உன்னை ஆரோ வெருட்டினவங்கள் எண்டு நீ கதைவிடேக்க, உனக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு பெரிய கூட்டமே வந்ததுதான்.
உந்தளவுக்கு 'ஓட்டு மாட்டு' வேலைகள் செய்த உனக்கு மற்றவங்கள் பட்டம் குடுக்கிறதைப்பற்றி, அதுவும் தகுதிக்குரிய பட்டம் குடுக்கிறதைப்பற்றி நக்கலடிக்க என்ன அருகதை மோனே கிடக்கு?


சரிசரி, எதுக்கண்ணை இப்ப உதுகளைக் கிழறுறியள். நான் என்ன கதைச்சாலும் உதைச்சொல்லி குத்திக்காட்டிக்கொண்டிருக்கிறியள். நான்தான் பழசுகளையெல்லாம் மறைச்சுப்போட்டேனே?

அடடா! பழசுகளை மறைச்சுப் போட்டால் மட்டும் நீ அப்பாவியோ?
இந்த ஊருக்குப் புதுசா வந்த மனுசருக்கு வேணுமெண்டால் அதுகள் தெரியாமல் இருக்கும். ஆனா பழய மனுசருக்குத் தெரியாமலிருக்குமோ? மறந்துதான் போயிருப்பினமோ?


சரியண்ணை, அதை விடுங்கோ. அதுவொரு துன்பியல் சம்பவம். உவங்கள் ரெண்டொருபேர் உதைப்பற்றிக் கதைக்காமல் விட்டால் பிரச்சினைவராது.

அதுதான்ராப்பா பிரச்சினை. நீயும் உப்பிடி பட்டம் குடுக்கிறதைப்பற்றி வயித்தெரிச்சலில விழல்தனமா உளறாமல் இருக்கும்வரைதான் உன்ரபேர் சந்திசிரிக்காது.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

என்னடாப்பா சத்தத்தைக் காணோம்.
சரி, வாற ஞாயிறு மறக்காமல் கூழுக்கு வந்திடுது.
அங்க மிச்சத்தைத் தொடருவம்.


இல்லையண்ணை, நீங்களும் நாசுக்கா, பம்பல் பம்பலாக் குத்துறதில விண்ணன்.

ஏன்ராப்பா, உனக்கு மட்டும்தான் உப்பிடிக் குத்தத் தெரியுமெண்டோ இவ்வளவுநாளும் நினைச்சுக்கொண்டிருந்தனி?

*****************************
இங்கு நாசுக்காகக் குத்துவது மட்டுமே அனுமதிக்கப்படும்.
சிலவசனங்கள் அப்படியே திருடப்பட்டவை.

Friday, December 15, 2006

பாலாண்ணை நினைவுப் பாடல்

பாடல் இசை வர்ண இராமேஸ்வரன்
நன்றி தமிழ்நாதம் இணையம்


பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் 2

தேசத்தின் குரல் பாலாண்ணையின் மறைவையொட்டி தமிழகத்தின் அரசியல் பிரமுகர்களின் இரங்கல் செய்திகளின் இரண்டாவது பதிவு
நன்றி பதிவு இணையம்
தியாகு



ராமகிருஸ்ணன்



இல கணேசன்



வைகோ


பரிசோதனை

பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் என்ற பதிவை தமிழ்மணத்தில் இணைத்தால் புதிய இடுகைகள் எதுவுமில்லை என செய்தி வருகிறது. அதனால் இந்தப் பரிசோதனை.

பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் 1

தேசத்தின் குரல் பாலாண்ணையின் மறைவையொட்டி தமிழக அரசியல் சமூக பிரமுகர்களின் கண்ணீர் அஞ்சலிகளை கீழே தொகுத்திருக்கிறேன்.
நன்றி பதிவு இணையம்

பழ நெடுமாறன்



சுப வீரபாண்டியன்



திருமாவளவன்



குளத்தூர் மணி


Thursday, December 14, 2006

மதியுரைஞர் பாலா அண்ணை நினைவாக

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று லண்டனில் காலமாகினார். தமிழீழ தேசிய விடுதலைப் போரில் கடந்த 30 வருடங்களாக பக்கத் துணையாக இருந்து வந்த அவரது இழப்பு நிரப்பிக் கொள்ள முடியாத இழப்பாகும்.

பாலா அண்ணையின் நினைவாக அவர் கடந்த 2005 மாவீரர் தின நிகழ்வில் லண்டனில் ஆற்றிய உரையின் வீடியோ வடிவம் இது.


Thursday, December 07, 2006

மீள்பதிவு இடுவது எப்படி?

இதோ இப்படித்தான்

தரகு முதலாளித்துவமும் மனைவியும்.

அப்பப்பா என்ன வெயில்?
இதோ, இதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைப்பீராக.

என்னப்பா? சந்தைக்கெண்டு போய் எங்க சுத்திப்போட்டு வாறியள்?

நாம் எவ்விடமும் சுத்தவில்லை. நேரே சந்தைக்கு மட்டுமே போய் வருகிறோம். மனிதர்கள் நாங்கள் படும் வேதனை உங்களுக்கெங்கே தெரியப் போகிறது? சந்தைக்குச் செல்வதிலுள்ள இடர்பாடுகளும், குட்டி முதலாளிகளுடன் பேரம்பேசிப் பொருட்கள் வாங்க நாங்கள் படும்பாடுகளும் சொல்லுந்தரமன்றென்று நாம் அடிக்கடி இயம்புவது உங்கள் செவிட்டுக்காதுகளுக்கு ஒருபோதும் விளங்காதென்பது எமக்குத்தெரியாததல்லவென்பது நன்றாகத் தெரிந்தும் வேண்டுமென்றே சீண்டவும் கோபமேற்றவும் இயம்பப்படும் வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் பொருளென்னவென்பது தெரியாமல் வினவுவதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் வஞ்சகப்புத்திகளிற்றாம் நாம் தெளிவுறுகிறோமென்பதைச் சொல்….

போதுமப்பா. நான் என்ன கேக்க நீங்கள் என்ன சொல்லிறியள்?

நீங்கள் கேட்பதன் பொருளை முற்றிலுமாகப்புரிந்துதாம் நாம் பதிலிறுக்கிறோம்.

நிப்பாட்டுமப்பா.. என்ன நாம் தாம் தூம் எண்டு குதிக்கிறியள். அதுசரி நீங்கள் தனியத்தானே சந்தைக்குப் போனனியள்? இல்லாட்டி வேற ஆரோடயும்…?

ஆம். நாம் தனியேதாம் போய் வந்தோம். ஒரு மனிதனின் துன்பத்தைப் புரியாமல் அவன்மீது சந்தேகப்பட்டு துரோகிப்பட்டம் கட்டப்பார்க்கும் உம்போன்றவர்களினாற்றாம் நாம் பேச்சுச் சுதந்திரத்தையே இழந்துள்ளோமென்பதோடல்லாமல் தரகுமுதலாளிகளையும் குட்டி பூர்சுவா வர்க்கத்தையும் எதிர்க்கத்திராணியற்று…

போதும். போதும்…
அதுசரி, என்ன காய்கறியெல்லாம் இப்பிடி வாடிக்கிடக்கு?

இதுதாம் தொழிலாள வர்க்கத்தின் சாபக்கேடு. உழைக்கும் தொழிலாளிகளின்மேற்சவாரி செய்யும் தரகுமுதலாளிகளின் இயந்திரமான அடக்குமுறைகளினாற் கட்டுண்டுபோன வாழ்க்கையை வாழும் இருப்பிழந்த-உளமிழந்த-நிம்மதியிழந்த நிலையாகிப்போன வாழ்க்கையின் கொடிய பக்கங்களில் வாழ்ந்துவரும் தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை முடக்கும் தரகுமுதலாளிகளின் பினாமிகளான குட்டிப்பூர்சுவாக்களனினையெதிர்த்துச் செய்ய வேண்டிய போராட்டத்தின் ஓர் அங்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைக்கொள்ளப்போகும் இவ்வர்க்கம் தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலையின் வெளிப்பாடே இந்தச் சோகங்கள்.

எனக்கொண்டும் விளங்கேலயப்பா. சந்தையில ஏதும் பிரச்சினையே?

பிரச்சினைகள் எங்குதானில்லை? மனித இனம் தோன்றினதிலிருந்தே தொடங்கிவிட்ட உற்பத்திகளின்மீதான சொந்தம் கொண்டாடும் சண்டைகளின் தொடர்ச்சியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் உற்பத்திகளின் மீதான வன்முறையின் தொடர்ச்சியே தாம் இத்தகைய பிரச்சினைகள் என்று நாம் சொல்லும்போது, இப்பிரச்சனையின் வேர்களையும் அறிந்தாற்றான் நிவர்த்திகளும் செய்யமுடியுமென்பதைத் தெளிவாகப்புரிந்துகொண்டு புதிய ஜனநாயகப்புரட்சிக்குப் புத்தொளிபாய்ச்சி அப்போராட்டத்தை தரகுமுதலாளிகளை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய தேவையையும் எம் தோழர்களுக்கு நாம்தாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொருள்முதல்வாதக்கொள்கைளைச் சரியாகப்புரியாமற்றான் இன்று தரகுமுதலாளிகளுக்கெதிரான போராட்டத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட முடியாமற்றுன்பப்படுகிறோம். மூலதனமுடக்கலென்பதுத் திட்டமிட்டு பாட்டாளிகள்மேற் செலுத்தப்படும் வன்முறையென்பது தெரிந்தும் எம் தோழர்கள் காக்கும் மௌனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதென்றாலும் இது பாசிசத்தின் விளைவானவொன்றென்பது தெரிந்தாலும் மானுடத்துக்கெதிரானவொருவுத்தியென்பதுப் புரிந்தாலும் தொழிற்றுறைக்கும் மானுடத்துக்குமெதிரான நிலையென்பதறிந்தாலும் பொருளாதாரப்பொறிமுறையின் மீதான அடக்குமுறைக்கெதிரானதென்பதுணர்ந்தாலும் கனிவளச்சுரண்டலையும் இத்தோடிணைத்துப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதாலும் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவையுண்டு.

நீங்கள் கதைச்சு முடியிறதுக்குள்ள நான் கறி வைச்சு முடிச்சிடுவன்.
நாம், தாம் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிறியள். ஆரப்பா உங்களோட சேந்த மற்றாக்கள்?

நாமென்பது நயமுள்ள வார்த்தை. அது இப்போது என்னையே குறிக்கும்.
நானென்பதை எப்போதொழிக்கிறோமோ அப்போதே மானுட விடுதலை பிறக்குமென…

ஆராவது சொல்லியிருப்பினம்.
எனக்கெதுக்கு அதெல்லாம்.
நீங்கள் ஏதாவது தமிழ்ப்பேச்சாளராய் இருந்திருக்கலாம்.
சொல்லிப்போட்டன், இனி என்னோட இப்பிடி நாம் தாம் தூம் எண்டு குதிச்சுக்கொண்டு நிண்டியளெண்டா இனி சாப்பாடு கிடைக்காது.

ஆம். இதுதாம் தரகுமுதலாளிகளினதும் பூர்சுவாக்களினதும் பொறிமுறை. உழைக்கும் மக்களுக்கு உணவை மறுத்து அவர்களை அடிப்பணிய வைத்து அவர்களின் சிந்தனையை முடக்கும் பொறிமுறை, மனித விழுமியங்களைப் பொசுக்கும் பாசிசம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம். இதைத் தீர்த்துக்கட்டத்தான் அறிவுஜீவிகள் எல்லாரும் சேர்ந்து உளமொப்பிய புதிய ஜனநாயகப்புரட்சி தொடங்கு.. க்கே…க்கே…க்கே...

என்னப்பா விக்குதோ? இந்தாங்கோ. சோடாவக்குடியுங்கோ.

இல்லை. இது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட க்கே.... திட்டமிட்ட சந்தைப்படுத்தற்பொறி க்கே.. பொறிமுறைப்பண்டம். ஏழைகளின் க்கே.. மேலேவப்படும் அராஜகம்.. க்கே.. பச்சைத்தண்ணியிருந்தாத் க்கே.. தாரும்.

Sunday, December 03, 2006

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?

யாழ்ப்பாணத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என அகரனும் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என சூரமணியும் பதிவிட்டிருந்தனர். என் பங்குக்கு நானும் ஒரு பதிவிட விரும்புகிறேன். யாழ்ப்பாணத்தில் இப்போது ஆடு மாடு நாய் கோழி என்பன நடக்கின்றன. அது தவிர நடப்பன வகையைச் சேர்ந்த அனைத்து விலங்குகளும் நடக்கின்றன. இப்ப வாகனங்களுக்கு பெற்றோல் மண்ணெண்ணையில்லாததால் சனமும் நடக்கினம்.


Wednesday, November 29, 2006

நன்றி இந்தியா..

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள்இ பொருளாதாரத் தடை மற்றும் பட்டினி அவலங்களைக் கண்டித்து ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தக் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐப்பான் நியூசிலாந்து சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை முன்வைத்தனர்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் உரிமைகளுடன் வாழ்வதற்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர்கள் இரும்புச் சிறைக்குள் தமிழ் மக்களை சிறிலங்கா வைத்திருக்கின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவாதத்தின் போது சிறிலங்கா அரசுக்கு சார்பாகப் பேசிய பிரித்தானிய நாட்டுப் பிரிதிநிதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை முன்வைத்தார். அவரின் கருத்தை மறுத்துப் பேசிய சுவிற்சர்லாந்தின் ஐ.நா. பிரதிநிதி தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தார். பின்னர் பிரித்தானியப் பிரதிநிதியின் கருத்து நிராகரிக்கப்பட்டு சுவிற்சர்லாந்துப் பிரதிநிதியின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்து பேசிய நியூசிலாந்து நாட்டுப் பிரதிநிதி தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாக இருக்கின்ற போதும் அவர்கள் உறுதி குலையாதவர்களாக இருப்பதாகவும் அவர்களுக்கு மனித உரிமைகள் என்ற அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனையடுத்து ஜப்பானியப் பிரதிநிதி தமிழ் மக்களின் நியாயமான குரல்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இதற்கான முழு உத்தரவாதத்தை சிறிலங்கா அரசு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்கா விட்டால் சிறிலங்கா அரசு மீது பாரிய பொருளாதாரத்தடையை ஜப்பான் கொண்டு வர நேரிடும் என்ற எச்சரிக்கையையும் ஜப்பானியப் பிரதிநிதி விடுத்தார்.

இனிதான் நாம் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆம் இந்தக் கண்டனத்தீர்மானத்தில் இந்தியா சிறிலங்கா அரசு சார்பான நிலையை எடுத்து சிறிலங்காவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறது. அதாவது சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மதிக்கிறது என பக்கத்து நாடு பரிந்து பேசியிருக்கிறது.

நன்றி இந்தியா..
கோடி நன்றி

மாவீரர்நாள் உரையில் ஏமாற்றிய பிரபாகரன்

உலகத் தமிழரையும் ரஜனி ரசிகர்களையும் ஏமாற்றிய தலைவர்.

'உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும்' என்ற அடைமொழியுடன் கொஞ்சநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மாவீரர்நாள் உரை முடிந்துவிட்டது.
பலதரப்பட்டவர்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்கள். பலருக்கு நிறைவையளித்து அவர்களின் எதிர்பார்ப்புக்களை ஓரளவாவது தீர்த்து வைத்துள்ளது அவ்வுரை. சிலருக்கு எரிச்சலையும் விசனத்தையும் கொடுத்துள்ளது.
பலதரப்பட்டவர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகள் இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு விடயத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது பிரபாகரனின் இவ்வருட உரை.

அது என்ன விடயம்?

எதிர்பார்க்கப்பட்டபடி இலங்கையின் இப்போதைய நிலைவரம், அரசியற்சூழல், போர் நிலைமை என்பவற்றைச் சொல்லி, தமிழரின் பாடுகள், வேதனைகள் என்பவற்றைச் சொல்லி, இன்னும் பன்னாட்டு அரசியலையும் அவர்களின் கண்ணாமூச்சி விளையாட்டையும் குறிப்பிட்டு இறுதியில் புலிகளின் நிலைப்பாட்டையும் சொல்லியவிதத்தில், அவரின் உரை சரியானதே. ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய விடயமொன்றைப் பற்றி வாயே திறக்காமல் விட்டுவிட்டார்.

அது என்ன விடயம்?

உலகத் தமிழர்கள் அனைவரும் பிரபாகரனிடமிருந்து எதிர்பார்த்த கருத்து ஒன்றுண்டு.
கடந்த மாவீரர் நாள் உரையிலேயே தெளிவுபடுத்தவேண்டியிருந்தும் தவறவிட்ட 'சந்திரமுகி' படம் பற்றிய பிரபாகரனின் கொள்கை விளக்கவுரையை இவ்வருட மாவீரர் உரையிலாவது தருவார் என்ற 'உலகத் தமிழர்களின்' எதிர்பார்ப்பில் அவர் மண்ணைப்போட்டுவிட்டார்.
மேலும் வெளிவரவிருக்கும் 'சிவாஜி' படம்பற்றியும் எந்தவொரு சொல்தானும் சொல்லவில்லை என்றளவில் தமிழர்களை இன்னும் கடுப்பில் ஆழ்த்திவிட்டார்.

அந்தவகையில் 'சந்திர முகி' பற்றியும் இனி வெளிவரவிருக்கும் 'சிவாஜி' பற்றியும் எந்தவொரு குறிப்பையையும் சொல்லாமல் விட்டதன்மூலம் உலகத்தமிழர்களை ஏமாற்றியுள்ளார் பிரபாகரன்.

இதன்பின்னாலுள்ள அரசியல் சூட்சுமங்களை இனிவரும் காலத்தில்தான் நாம் அறிந்துகொள்ள முடியும்.


கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்
விளங்கப் புத்தியுள்ளவன் விளங்கட்டும்

Monday, November 27, 2006

விரைவில் எதிர்பாருங்கள்

விரைவில் எதிர்பாருங்கள்.

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் உலக நாடுகள் புலிகளின் தலைவரின் உரையை கண்டிக்க இருக்கின்றன. அது தவிர புதிய ஜனநாயகப் புரட்சியை வேண்டுவோர் மற்றும் மாற்று (இயக்கக் காரர்) கருத்தாளர்களும் பிரபாகரனின் உரையை வரிக்கு வரி ஆராய்ந்து முட்டையில் மயிர் பிடுங்க இருக்கிறார்கள்.

ஆகவே நண்பர்களே அனைத்தையும் படித்து இன்புற இப்போதே தயாராகுங்கள்.

தனியரசை நிறுவுவோம் - வே.பிரபாகரன்

இலங்கை அரசின் கபடத்தனத்திற்கு நாம் பலியாகப் போவதில்லை

மகிந்தவிற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டது.

சுதந்திர தனியரசை நிறுவுவதென தீர்க்கமாக இன்றைய நாளில் உறுதியெடுக்கிறோம்

உலக நாடுகள் தமிழீழ தனியரசை அங்கீகரிக்க வேண்டும்.

தமிழக மக்களுக்கும் மற்றும் தலைவர்களுக்கும் நன்றி

உரையினை முழுமையாகக் கேட்க

என்ர அப்பா எதுவும் கொண்டு வாறேல்லை

கடைகளில எதுவுமில்லையெண்டு அப்பா சொன்னார். ஏன் எதுக்காக எண்டு காரணங்கள் சொல்லுகினம். ஆனா எனக்கெதுவும் விளங்கேல்லை. இனிப்புக்கள், பிஸ்கற்கள், பட்டர், பால்மா.. ஏன் முட்டை, மீன் இவையெல்லாம் எங்கை போயிட்டுதுகள்..

என்னை விரும்பிற ஆக்கள் எனக்கென்ன வேணும் எண்டு போனில கேட்கினம். என்னட்டை ஒரு பெரிய லிஸ்ற் இருக்கு. ஆனா அதை அனுப்பத்தான் ஒரு வழியும் இல்லை.

மூண்டு நாளைக்கு முன்னாலை என்ர நண்பன் தன்ரை அன்ரி தனக்கு பார்சல் அனுப்பியிருக்கிறதா வகுப்பறையில வைச்சு சொன்னான். அதுக்குள்ளை பால் மா, சீனி, பிஸ்கற், சவர்க்கார பவுடர் எல்லாம் இருந்ததாம்.அதை திறந்து பாக்க சீனியும் சவர்க்கார பவுடரும் ஒண்டா கலந்து கிடந்ததாம். எண்டாலும் பிஸ்கற்றும் பால்மாவும் தாங்கள் எடுத்தவையாம்.

என்ர அன்ரியும் நாங்கள் எப்பிடி இருக்கிறமெண்டு அறிய போன் பண்ணினவ. நான் அவவிட்டை பிஸ்கற்றும் பால்மாவும் அனுப்ப சொன்னனான். ஆனா சவக்கார பவுடர் அனுப்ப வேண்டாம் எண்டும் சொல்லியிருக்கிறன். இப்ப ஒவ்வொரு நாளும் தபால்க்காரனை பாத்துக்கொண்டிருக்கிறன்.

நேற்று என்ர அப்பா பாண் வாங்கிற கியுவில நிக்கிறதுக்கு போக பிந்திட்டார். அவருக்கு பாண் கிடைக்கவில்லை. நான் காலை எதுவும் சாப்பிடாமல்த்தான் பள்ளிக்குடம் போனன். இடைவேளைக்கும் எதுவும் சாப்பிட இல்லை.

இண்டைக்கும் வழமை போல காலமை 5 மணிக்குத்தான் ஊரடங்குச் சட்டம் எடுத்தவை. சனம் எல்லாக் கியுவிலையும் நிக்கினம். கப்பல்ல கொழும்பு போறதுக்கு ஒரு கியு, சாமான் வாங்க ஒரு கியு, மண்ணெண்ணை வாங்க ஒரு கியு. என்ரை அப்பாவும் விடிய பாண் வாங்கிறதுக்கு கியுவில நிக்கப் போனார். அவர் ஒரு பாண்துண்டோடை வந்தார்.

நான் அதில ரண்டு துண்டைச் சாப்பிட்டு விட்டு ஒரு துண்டைப் பள்ளிக்குடம் கொண்டு போனன்.

இன்ரெர்வெல் நேரம் நான் என்ர பாண் துண்டு வைச்சிருக்கிற பெட்டியை திறந்தன். அதை பக்கத்தில இருக்கிற என்ர நண்பி எட்டிப் பாத்தா.. பாவம் அவ.. அவ இன்ரெர்வெலுக்குச் சாப்பிட ஒண்டும் கொண்டு வரேல்லை. அதோடை அவ காலையும் ஒண்டும் சாப்பிடேல்லையாம்.

அவவின்ர அப்பாவை ஆமிக்காரன் சுட்டுப் போட்டான். அதாலை காலைமை எழும்பிப்போய் கியுவில நிண்டு பாண் வாங்க அவவுக்கு ஆருமில்லை.

நான் என்ர பாண் துண்டை ரண்டா பிய்த்தேன். பிறகு என்ன நினைச்சனோ தெரியாது. முழுவதையும் அவவுக்கே குடுத்திட்டன். பாவம் இன்று முழுதும் சாப்பிட வில்லைத்தானே..

எனக்கு இப்ப பசிக்குது. எனக்கு பசித்தாலும் பரவாயில்லை. அவவின்ர அப்பாவை சுட்ட மாதிரி என்ர அப்பாவையும் ஆமி சுட்டுவிடக் கூடாது கடவுளே..

Tuesday, November 21, 2006

குழப்பியின் கதை - கதையின் கதை

இதோ.. மாபெரும் மானுட சாசனம் என்றவாறொன்றும் அல்லாத உண்மைக்கதையை உங்களுக்கு சொல்ல விளைகிறேன்.

இந்தக் கதை ஒரு கறுப்புச் சரித்திரம்..

வரலாறு இப்போதே குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டிய (இப்போதில்லாவிட்டாலும் இன்னொரு நாளைக்கு) கதையிது.

வாருங்கள்..

சோதனைகளும் வேதனைகளும் நட்புக்களும் துரோகங்களும் நிறைந்த கொழுவி குழப்பி என்ற இருவரினது வாழ்க்கையையும் படியுங்கள்.

கதைக்கு முன்பாக கொஞ்சம் கதைக்கலாமா?

சமீபத்தில்..( நிஜமாகவே சமீபத்தில்) இலங்கையில் சண்டைநிறுத்தம் நிலவிய காலமது.

யுத்தத்தில் சனம் நித்தம் செத்துப்போக வில்லை..

எந்தச் செய்தி கேட்டும் மனசு வறண்டு விடுவதில்லை.. எப்போது யார் செத்தார் என்ற செய்தி வருமோ எண்ட கவலையில்லை..

அது கொஞ்சம் சந்தோசமாய் இருந்து விட்டுப் போங்கள் என கடவுள் கஞ்சத்தனத்துடன் கிள்ளி வீசிய காலம்..

சாவு பற்றிய எந்த சிந்தனையும் இன்றி இறங்கி நடந்த நேரம்..

இன்புற்றிருத்தல் என்ற ஒரு நோக்கில் மட்டுமே குழப்பி (அப்போது இந்த வலையின் பெயர் குழப்பி) உதயமாகிறான்.

மற்றவரைக் கலாய்ப்பது மட்டுமே முழுநேரத் தொழிலாயிருந்தது.

குழப்பி ஆரம்பித்த காலங்களில்த்தான் வலைப்பதிவுகளில் மிக மோசமான பின்னூட்டங்கள் வரத் தொடங்கியிருந்தன. அது பற்றிய ஒரு தொகுத்தலே குழப்பியின் முதற்பாகம் முடிவுற காரணமாயிருந்தது என்பதை கதையில் பார்க்கலாம். ஏனெனில் இது கதைக்கு முந்திய கதையல்லவா.

அப்போதைய காலத்தில் திரு டோண்டு அவர்கள் என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் என்ற ஒரு பதிவு இட்டிருந்தார். இற்றை வரையும் தமிழ் வலையுலகில் ஓடிக்கொண்டிருக்கிற சுப்பர் டுப்பர் காவியம் அது. அவரது பெயரில் வேறும் சிலர் பின்னூட்டங்களை இட அது தொடர்பான எச்சரிக்கைப் பதிவு அது.

நாமும் ஒரு எச்சரிக்கை பதிவு இட்டோம். அது இது தான்..

Thursday, May 26, 2005
என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன.

அந்த பின்னூட்டங்களை நான்தான் இட்டேன் என்பதையும் எனது பெயரை பாவித்து எவரும் அவற்றை இடவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


(டோண்டு அவர்களே குழப்பியை ஆரம்பிக்க ஒரு தூண்டுகோலாக இருந்தார். அது எவ்வாறென்பதை பின்னர் கதையில் பார்ப்போம். )

கதையின் கதை நீளும்..

Sunday, November 19, 2006

சின்னப்பெடியனா நான்?

பெடியங்கள் எண்ட யாரும் வாசிக்காத ஒரு பதிவில் கொழுவியை சின்னப்பெடியன்கள் எண்டு விளித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் கள்ள ஓட்டுப் போட்ட புலிகள் என்ற அவர்களது செய்தியை நாம் கிண்டலடித்தது குறித்து அவர்கள் அப்படி சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் தீவிரவாதிகள் எண்டும், வலைப்பதிவுகளை முடக்குவோம் எண்டும் புறப்பட்ட, பொடியங்கள் இப்ப பாசிசம் பற்றியும் புதிய ஜனநாயகப் புரட்சி பற்றியும் பேசுவது நல்ல வேடிக்கை. பாக்கப்போனால் இன்றைய நாளில் சனநாயகம், மக்கள் புரட்சி, பாசிச எதிர்ப்பு பற்றியெல்லாம் பேசுபவர்கள் முன்னாளில் தீவிரவாதத்தில் ஏதோ ஒரு வகையில் அங்கம் வகித்தவர்களே என்பதனால் பெடியங்களும் அதற்கு விதிவிலக்கல்லத்தானே.

கருத்து வெளியிடும் சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதென்பத்திற்கூடாக, அவர்கள் பாசிச எதிர்ப்பு, புதிய ஜனநாயகப் புரட்சி, கூகிளில் கைவைத்த புலிகள், அமெரிக்காவில் கை வைத்த புலிகள், பிரபாகரனுக்கு உணவு அனுப்பும் இலங்கையரசு என பலதும் எழுதுவார்கள். ஆயினும் இவர்களின் எழுத்தினூடு மறைந்திருக்கும் நச்சினையும் வாசிப்பவனை முட்டாளாக்கும் நடவடிக்கையையும் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் என்பது பொடியங்களுக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து தெளிவாகிறது.

மக்களே யதார்த்தத்தினையும் நடைமுறை வாழ்வியலையும் புரிந்து கொள்ளுங்கள் .
பட்டினியாலும் பசியாலும் துடிப்பவனிடத்தும் அடுத்த வினாடி செத்துவிடலாம் என்ற நிலைக்குள் வாழ்பவனிடத்தும் சித்தாந்தங்களும் தத்துவங்களும் செல்லாது.

பெடியங்களே.. நாம் சின்னப்பெடியள் தான்.

Thursday, November 16, 2006

என்னைச் செருப்பால் அடிக்கவும்

என்னை எல்லோரும் செருப்பால் அடிக்கவும் ஏனெனில் நான் இன்று வல்லவன் படம் பார்த்தேன்.

Thursday, November 09, 2006

அமெரிக்காவில் புலிகள் கள்ள ஓட்டு

மாற்றுக்கருத்து இணையமொன்றில் வெளிவந்த இச்செய்தியினை இங்கே இணைத்திருக்கிறேன். இதுதாம் இவர்களுடைய மாற்றுக்கருத்து வெளியிடுவதற்கான உரிமையாம்.

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வன்னிபுலி ஆதரவாளரான டேனிஸ் டேவில் 87 வீத கள்ளவாக்குகளை பெற்றுள்ளார். திருட்டுவாக்குகள் போடுவதில் கில்லாடிகளான வ.புலிகள், அமெரிக்காவிலும் அதனை நிலைநாட்ட தயங்கவில்லை. இலங்கையின் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தமது அடிவருடிகளான தமிழ்கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வடகிழக்கின் ஜனநாய நடைமுறையை வ.புலிகள் மறுத்ததுடன், தமது பினாமிகளை கள்ளவாக்குகள் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பெருமைக்குரியவர்கள். அமெரிக்காவிலும் தமது ஆதரவாளரான டேனி டேவிஸ் என்பவரை வெற்றியீட்ட வைப்பதற்காக அங்குள்ள தமது பினாமிகள் மூலம் கள்ளவாக்கு வாங்கியை அமெரிக்காவிலும் வ.புலிகள் திறந்து வைத்துள்ளதாக தெரிவிக்கின்றன. இவரை எதிர்த்து போட்டியிட்டவர். டேனி டேவிஸின் புலி ஆதரவு நிலைப்பாட்டினை முன்நிலைப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால். வன்னிபுலிகள் தமது ஆதரவாளரை வெற்றியீட்ட வைக்கவேண்டும் என்பதற்காகவே இவ் கள்ளவாக்கு வங்கியை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியதாகவும், இவ் வாக்கு வங்கியானது இலங்கையை கடந்து கனடாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது அங்கே தமது ஆதரவாளர்களிற்காக வ.புலிகள் அறிமுகப்படுத்தியிருந்தனர், அடுத்தவாரம் கனடாவின் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடவுள்ள தமது ஆதரவாளர்களான, இலகுப்பிள்ளை, சாண் தயாபரன், நீதன், தர்சிகா, லோகன் கணபதி, நடராஜ்குமார் போன்ற தமது பினாமிகளை வெற்றியீட்ட வைப்பதற்காக இவ் கள்ளவாக்குகளை இவ் முறையும் அதிகளவில் கனடாவில் புலிகள் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளமையால் கனடா அதிகாரிகள் இது விடயமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதே ஜனநாயகமாக தேர்தல் நடைபெறுவதற்கு சிறந்ததாகும் என எமது அமெரிக்கச் செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியின்ர திறத்தில அமெரிக்காவில இருந்து செய்தியாளர் வேறை! ம்.. செய்திப்படி பார்த்தால் 87 வீத வாக்குகள் பெற்று வெல்கின்ற அளவுக்கு கள்ள ஓட்டு போடும் திறமை அமெரிக்காவிலும் புலிகளுக்கு உள்ளது என்பது தான்.
செய்தி நன்றி - நெருப்பு

கண்காணிப்பாளரை காப்பாத்த வேணும்

மட்டக்களப்பில் வாகரைப் பகுதிகளில் இலங்கை அரசு (அரசுதான்) நடத்திய எறிகணைத்தாக்குதலில் சிறுவர்கள் முதியவர்கள் உட்பட 45 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இலங்கையில் இப்போதெல்லாம் இது வழமையான செய்திகளாகி விட்டது. நோர்வேயோ அல்லது சமாதானவழி மூலம் தீர்வு காணச் சொல்கின்ற வேறு உலக நாடுகளோ இது பற்றி அரசிடம் விளக்கம் கேட்பதுமில்லை. கண்டனம் தெரிவிப்பதும் இல்லை.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இது துரதிஷ்ட வசமானது என்கிறார். துரதிஷ்ட சம்பவம் என அவரே ஒப்புக்கொண்ட பின்னர் அங்கு யுத்தத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிற (யுத்த நிறுத்தத்தை அல்ல) போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவோ இந்தத் தாக்குதல்களுக்கு காரணம் யாரென இது வரை சரியாக தெரியவில்லை. அநேகமாக இது அரசாங்கத்தின் வேலையாக இருக்கலாம். இருந்தாலும் அரசாங்கத்திடமிருந்து விளக்கம் ஏதும் வரவில்லை என மென்று விழுங்குகிறது.

வலிந்த இராணுவ நடவடிக்கை காரணமாக மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வாகரைப்பகுதியில் பாடசாலை ஒன்றில் தங்கியிருந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களே இந்த அவலத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரும் விமானப்படையினரும் இணைந்து மேற்கொண்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோரின் 40 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் 125-க்கும் மேற்படடோர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர் என்றும் அவசரகால மீட்பு அணியினரும் மருத்துவமனை பணியாளர்களும் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் ஆறு மாதத்திற்கு உட்பட்ட ஆறு குழந்தைகளும் அடங்குவர் என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என விரும்புகின்ற இணைத்தலைமை நாடுகள் துணைத்தலைமை நாடுகள் பெரிய நாடுகள் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்ற போதெல்லாம் அமைதியை கடைப்பிடிக்கின்றமை இப்போதெல்லாம் ஆச்சரியம் தருவதில்லை.



உண்மையில் யுத்த நிறுத்தத்தினை கண்காணிக்க சென்றவர்களே தங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அரசிடம் கோரிக்கை வைக்கின்ற இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் என்ன செய்து விட முடியும்? புநகரிப் பகுதிகளுக்கு சென்றிருந்த போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் மீது இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். பாவம்.. தனக்கான பாதுகாப்பையே அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. மக்களுக்கான பாதுகாப்பை அவரிடம் எப்படி கேட்க முடியும்..

Monday, October 30, 2006

சர்வதேசத்தை ஏமாற்றுவோம்.

1
யாழ்ப்பாணம் இலங்கையின் இதர பகுதிகளிலிருந்து A 9 என்ற வீதியினூடாக இணைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணளவாக 4 லட்சம் மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர்.

இலங்கை அரச இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தை இணைக்கும் A 9 வீதியானது புலிகளின் பகுதிகளினூடாகவே செல்கிறது.

யாழ்ப்பாணத்திற்கான ஒரேயொரு தரைவழிப்பாதையான இந்த வீதியை 2002 ம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி மக்கள் பாவனைக்கும், உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்வதற்குமாக, திறந்து விடுவதென புலிகள் தரப்பிலும் இலங்கை அரச தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

1995 புலிகள், யாழ்ப்பாணத்தை விட்டு வெளியெறிய பின்னர் 2002 வரை யாழ்ப்பாணம் தரைவழித் தொடர்பேதுமற்ற, இலங்கையின் இதர பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாக இருந்தது.

இக்கால கட்டத்தில் உணவுப்பொருட்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவியது. கப்பலினூடாகவே உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து இதர பகுதிகளுக்கு விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் பயணிப்பதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியும், பாதுகாப்பு அனுமதியை இராணுவத்திடமிருந்து பெறவேண்டியும் இருந்தது.

2002 புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் A 9 வீதி திறக்கப்பட, அது மக்களின் போக்குவரத்துக்கும், அவர்களின் உணவுத்தேவைக்கும் மிகுந்த வசதியாக அமைந்தது.

2
பாதையை மூடிவிடுவதானது ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும்.

இவ்வருட நடுப்பகுதியில், இலங்கை இராணுவம் இந்தப் பாதையினை மூடியது. மீண்டும் யாழ்ப்பாணம் ஒரு சிறைச்சாலையானது. உணவுப் பொருட்களுக்கு அங்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதை மூடப்பட்டதாக இலங்கை இராணுவம் சொல்லியிருக்கிறது.

அதென்ன பாதுகாப்புக் காரணம்..?

இந்த வீதியின் முன்னரங்க புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாக இராணுவம் எறிகணைத்தாக்குதல்களையும் அவ்வப்போது முன்னேற்ற முயற்சிகளையும் மேற்கொள்கிறது. (யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி இராணுவ முன்னகர்வுகளும் இடங்களைக் கைப்பற்றுதலும் ஒப்பந்த மீறலாகும்.)

இன்னொரு காரணம் மக்கள் மீது பட்டினியை ஏவி விட்டு உளவியல் ரீதியாக அவர்களை மழுங்கடித்தல்.

3
சுவிற்சர்லாந்துக்குப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மனிதாபிமான பிரச்சனைகள் பற்றி, மக்களின் பட்டினி பற்றி தாம் பேசப்போவதாய் புலிகள் அறிவிக்க..

மக்களின் பட்டினி பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்காமல் இறுதித் தீர்வு பற்றி பேசப்போவதாக இலங்கை சொன்னது.

சர்வதேசமோ ஏதாவதென்றாலும் பேசுங்கள்.. ஆனால் பேசுங்கள் என்ற நிலையைத்தவிர வேறெதனையும் எடுத்ததாய் தெரியவில்லை.

பேச்சுவார்த்தையின் போது அரசு இறுதித் தீர்வு பற்றிப் பேசுவதே பொருத்தம் என சொல்ல, அப்படியானால் உங்களிடம் என்ன இறுதித் தீர்வு உள்ளது என புலிகள் தரப்பில் கேட்கப்பட்டதாம். அதற்கு அரசின் பதில் -

இப்போதுதான் இலங்கையில் இரு கட்சிகளும் ஒன்றாய்ச் சேர்ந்திருக்கின்றன. இனித்தான் இறுதி தீர்வு பற்றி நாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்றார்களாம்.ஆக அவர்கள் என்ன பேசுவது என்ற தெளிவே இல்லாமல்த்தான் பேச்சுக்கு வந்துள்ளார்கள் போல..

--நோர்வேக்கு ஒரு கோரிக்கை: இனி புலிகளை சுவிசுக்கு அழைத்து வராமல் ரணில் கட்சியையும் மகிந்த கட்சியையும் ஒரு தரப்பாகவும் எதிர்த்தரப்பில் JVP கட்சியையும் அழைத்து வந்து இறுதி தீர்வு குறித்து பேச விட்டு வேடிக்கை பாருங்கள். அவர்களுக்குள் ஒரு இணக்கம் வருகிறதா என..--

இரு பிரதான கட்சிகளும் ஒன்றாய் இணைந்திருக்கின்றன என்பது உண்மைதான். இனி அவர்களுக்குள் பிக்கல்கள், பிடுங்கல்கள், முரண்கள் உண்டாகி அது தீர்ந்து, அப்படியே ஒரு தீர்வை உண்டாக்கினாலும், இருக்கவே இருக்கிறது நீதிமன்றம்.. அது தீர்வை முடக்க.. பிறகு முதலிடத்திலிருந்து பேச ஆரம்பிக்க..

அதுவரை மக்களின் பட்டினிக்கு என்ன தீர்வு?

நாள்தோறும் சாகும் பத்துக்கு மேற்பட்ட உயிர்களுக்கு என்ன தீர்வு..?

4
சுவிசில் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே இலங்கையில் இராணுவம் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தது. இராணுவ முன்னகர்வுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தன.

ஒப்பந்தத்தின் படி இராணுவ முன்னகர்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என சர்வதேசத்தினால் இலங்கை அரசை அழுத்த முடியவில்லையா?

சர்வதேசத்தின் அழுத்தங்களை மீறித்தான் இலங்கை அரசு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா..?

வரும் நாட்களில் வடக்கில் இன்னொரு பாரிய இராணுவ நடவடிக்கையொன்றினை மேற்கொள்ள இராணுவம் தயாராவதாக சொல்லப்படுகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நகர்வுகளுக்கும் படுகொலைகளுக்கும் சர்வதேசத்திடம் ஏதாவது பதில் உள்ளதா..?

5
இது ஒரு சந்தேகம்

புலிகள் இராணுவ வலிமை பெற்றிருக்கும் வரை மட்டுமே சர்வதேசம் விழுந்தடித்து புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. உண்மையில் புலிகள் ஒரு பலமிழந்த அமைப்பாக இலங்கை அரசால் இலகுவாக வெற்றி கொள்ள முடிகிற ஒரு அமைப்பாக இருப்பின் இவ்வளவு ஈடுபாடு காட்டுவார்களா..?

அல்லது இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என சொல்லி விட்டு இருந்திருப்பார்களா..?

இனியும், ஒருவேளை இராணுவம் புலிகள் அமைப்பைத் தோற்கடித்து விட்டால், புலிகளைச் சர்வதேசம் பேச்சுக்கு அழைத்து வருமா? வராது..

6
புலிகள் தாம் தயாரித்து விட்ட நிகழச்சி நிரலில் தேவையான மாற்றங்களோடு பயணிக்கப் போகின்றார்கள். அவ்வப்போது சர்வதேசம் அழைத்தால் பேச்சுக்கு போவது உட்பட இலங்கை அரசின் பொருளாதார இராணுவ மையங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கி விட்டார்கள். சர்வதேசம் பற்றிய தெளிவான முகம் தெரிந்த பிறகு அதனை ஏமாற்றினால் தவறென்ன..? அவர்கள் ஏமாற்றவில்லையா..

Monday, October 23, 2006

தீபாவளிப் படுகொலை

எல்லோரும் தீபாவளி கொண்டாடியபோது நாங்கள் பலரைப் பலிகொடுத்துத் துக்கம் கொண்டாடினோம்.
அப்பாவி மக்கள் பத்தொன்பது பேரைக்கொன்று வெறியாட்டமாடியவர் என்ன நினைத்திருப்பர்?

அம்மக்களை நரகாசுரன்களாக நினைத்திருப்பரோ?

1987 ஓக்டோபர் 21 இல் யாழ்ப்பாண மருத்துவமனையில் நடைபெற்ற 'தீபாவளிப் படுகொலை'யின் நினைவு விரைவிலேயே அகன்றுவிட்டதா?
அக்கொடிய தீபாவளி நாளின்பின் இம்முறைதான் யாழ்ப்பாணம் தீபாவளி கொண்டாடவில்லை.
அன்று படுகொலை காரணம்; இன்று படுகொலைகளுடன் பட்டினியும் காரணம்.



யாழ் மருத்துவமனைப் படுகொலை பற்றி முன்பு எழுதிய பதிவுகள்.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 1.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 2.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 3.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 4.



படம்: யாழ்க்களம்

Wednesday, October 11, 2006

பலவீனப்பட்டுத்தான் போனோமா - 1

என்றுமில்லாத என்று சொல்ல முடியாதவாறான ஒரு இக்கட்டான நெருக்கடி நிலையில் ஈழத்தமிழர்களின் போராட்டம் சிக்கி நிற்பதானது ஈழ அபிமானிகள் அனைவரையும் குழப்பத்திலும், மனச்சோர்விலும், ஒரு விரக்தி நிலையிலும் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.

இந்த ஒருவருட காலமாகவே யுத்தமொன்றே தீர்வாகுமெனவும், புலிகள் காலவரையொன்றைச் சொல்லி போரினை ஆரம்பிக்க வேண்டும் எனவும் எழுதிய, பேசிய, ஆயினும், யுத்தத்திற்கு வெளியில் வாழ்கின்ற சிலர், தற்போது தமிழ்த்தேசியம் பலவீனமடைந்து விட்டதாயும், வேறொரு போராட்ட வடிவம் குறித்துச் சிந்திக்க வேண்டியவர்களாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இன்னும் சிலர், இந்த ஒருவருட காலமாக புலிகளின் யுத்தத்தை எதிர்பார்த்து ஏமாந்து போனதாய் சொல்கிறார்கள். பலர் இதனை ஒரு மானப் பிரச்சனையாக நோக்குகின்றனர்.

இவர்களில் பலர் யுத்தத்திற்கு வெளியில் வாழ்கின்றவர்கள். ஒவ்வொரு தடவையும் புலிகளின் தோல்விகளின் போதெல்லாம் இவர்களிடம் ஏற்படும் சலிப்பானது, இவர்களின் குத்தகைக்கார மனநிலையைச் சொல்கிறது. நிலத்தை குத்தகைக்கு கொடுத்து விட்டு வெளியிலிருந்து விளைச்சலை எதிர்பார்ப்பவராயும், எதிர் பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லையெனில் குத்தகைக்கு கொடுத்தவன் மேல் சினப்பவர் போலவும் இவர்களை உருவகித்துக் கொள்ளலாம். அல்லது ஒப்பந்த காரராயும் நோக்கலாம்.

இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இவர்களை இத்தகையை ஒரு மனநிலையில் வளர்த்து விட்ட பெருமை புலத்தில் இயங்கும் தமிழ் ஊடகங்களையும் சாரும். புலிகள் என்பவர்கள் எமக்கு வெற்றிச் செய்திகளை மட்டுமே தரவேண்டுமென்ற இவர்களது எதிர்பார்ப்பு சரிவுறும் போதெல்லாம் சலித்துக்கொள்வதும், சினப்படுவதும் இவர்களின் இயல்பாகி விடுகிறது.

இன்னொரு வகையினர் ஈழப்போரின் பலவீனம் இதுவென வாதிட்டு இதற்கான காரணங்களை ஆதி முதல் விளக்குபவர்கள். ஈழப்போர் எப்போதெல்லாம் பின்னடைகிறதோ அப்போதெல்லாம் இவர்கள் எழுச்சியுறுவர்.

உண்மையில் ஈழப்போரின் இன்றைய நிலை என்ன?

பலரும் சொல்வது போல அரசியல் ரீதியாக இன்றைய திகதியில் பெரிதாக எதனையும் சாதித்து விடவில்லைத்தான். அல்லது தமிழரின் அரசியல் ரீதியான செயற்பாட்டிற்கான நேர் விளைவுகள் எதுவும் நடந்து விட வில்லைத்தான். இங்கே அரசியல் ரீதியான செயற்பாடென்பது இலங்கை அரசுடனானதாகவோ அல்லது இலங்கைக்குள் உட்பட்டதாகவோ அல்லாமல் சர்வதேசம் நோக்கிய செயற்பாடுகள் என அர்த்தப்படுகின்றன. இலங்கையின் உண்மையான கண்காணிப்பாளர்களாக மாறி விட்ட அமெரிக்கா யப்பான் இணைத்தலைமை நாடுகள் நோர்வே ஆகியவற்றுடனான நேரடித் தொடர்பொன்றை புலிகள் பெற்றுக்கொண்டமையானது அரசியல் ரீதியாக எந்தப் பலாபலனையும் தரவில்லை. மாறாக அவ்வாறு ஏற்பட்டுவிட்ட தொடர்புகளே புலிகளைக் கட்டி வைக்கும் கயிறுகளாகவும் மாறிவிட்டன.

இது தவிர வெளிநாடுகளில் தமிழர்கள் நடாத்துகின்ற பேரணிகள், ஊர்வலங்கள் உலக செவிகளில் உறைத்ததாகவோ ,அல்லது கண்டுகொள்ளப்பட்டதாகவோ இல்லை. இதனை இன்னொரு வகையில் சொல்லப்போனால் தமிழர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதினாலும், கவனமெடுப்பதனாலும் உலகத்திற்கு எந்தவகையிலும் தனிப்பட்ட விதத்தில் அரசியல், பொருளாதார இலாபங்கள் கிடைக்கப் போவதில்லை. ஆக இது தமிழர்களின் தவறாகாது.

அதுதவிர இலங்கை அரசுடன் அரசியல் ரீதியாக பேசி தீர்வுகளைப் பெறலாம் என எவராவது எழுதின், பேசின் அவர்களைப் பற்றி இரண்டு வாக்கியமாவது எழுதுவது விசர் வேலை.

அரசியல் நிலையில் சார் விளைவெதனையும் பெறாத நிலையில் இராணுவ நிலையில் தமிழர் தரப்பு பலவீனப்பட்டு விட்டதா?

அண்மைய சம்பூர் மாவிலாறு தவிர வடபகுதி போர்முனைகளில் புலிகளின் பின்வாங்கல்கள் அவர்களது இராணுவ ரீதியான பலவீனத்தை உணர்த்துகிறதா?

புலிகள் இதுவரை படைகளுக்கெதிராக வலிந்த பாரிய தாக்குதல்கள் எதனையும் என் செய்ய வில்லை.?

Tuesday, October 10, 2006

குழப்பியின் கதை

புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதையை நாராயணசுவாமி எழுதுகிறார். மாத்தையாவின் கதையை திருவடியான் எழுதுகிறார். விட்டால் எனது கதையையும் யாரேனும் எழுதி அதை படிக்க எனக்குக் கிடைக்கின்ற வேளைகளில் சொல்லொணாச் சிரிப்பையும் அழுகையையும் ஒருங்கே பெறுகின்ற துர்ப்பாக்கிய நிலை எனக்கு வாய்த்துவிடலாகாது என்ற அவசரத்தில் எனது கதையை எழுதத் தொடங்குகிறேன். ஆயின் கொழுவியின் கதை என்றுதானே தலைப்பிடுதல் பொருத்தம் எனினும் குழப்பியின் கதை என்பதே எனது தெரிவாகிறதெனில் அது ஏன்?

யார் அந்த குழப்பி?

அவருக்கும் கொழுவிக்கும் என்ன தொடர்பு?

கொழுவி யார்..? இது வரை யார் யார் மீது இவர் தொடர்பான சந்தேகங்கள் விழுந்துள்ளன?

தமிழ்மணத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட முதல் வலைப்பதிவு என்ற பெருமை ஏன் கிடைத்ததது.?

குழப்பிக்கும் கொழுவிக்கும் எங்கே ஏன் எப்படி தெறித்தது?

இவை பற்றிச் சொல்வதே குழப்பியின் கதை.

இதனை குழப்பிக்கு அர்ப்பணிப்பதே இதன் பெயரில் குழப்பி வர காரணம்.

இனி வரும் நாட்களில் குழப்பியின் கதை..

Wednesday, October 04, 2006

கருணாநிதியும் சால்ஜாப்புக் கதைகளும்

இந்தியாவுக்கு போன எங்கடை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கொஞ்சப்பேரை சந்திச்சும் சில பேரை சந்திக்காமல் சால்ஜாப்பு கதையள் சொல்லிக்கொண்டும் சிலரை சந்திக்க கால் கடுக்க நிண்டு போட்டும் வந்திருக்கினம்.
இந்திய பிரதமரை இந்தா சந்திக்கிறம் அந்தா சந்திக்கிறம் எண்டு செய்தியள் வந்துது. பிறகு இல்லையாம் எண்டு வந்திட்டினம். ஏன் பிரதமர் சந்திக்க வில்லையெண்டு தெரியவில்லை. ஒருவேளை பிரதமரைச் சந்திக்க விருப்பதாக தமிழ்க் கூட்டமைப்பினர் சொல்லியிருந்ததும் வெறும் சால்ஜாப்புத் தானோ ?

கருணாநிதி அவர்கள் தெளிவாச் சொல்லிட்டார். கூட்டமைக் காரர் தன்னை சந்திக்க முயற்சித்ததா சொன்னது வெறும் சால்ஜாப்பு எண்டு. ஒருத்தர் ஒருத்தரை சந்திக்கிறதும் சந்திக்காமல் விடுவதும் அவையின்ரை விருப்பம் எண்டிட்டு இருந்தாலும் கருணாநிதி அப்பிடி சொல்லும் போது கூட்டமைக்குக் காரர் என்ன செய்திருக்க வேணும்?. நாங்கள் கருணாநிதியை சந்திக்க எவ்வாறான முயற்சிகள் செய்தோம் என்பதையும் அந்த ஒவ்வொரு முயற்சிகளுக்கும் எவ்வாறான எதிர்வினைகள் கிடைத்தன என்பதனையும் தெரியப் படுத்தியிருக்க வேணும். ஆனா அவை செய்தது என்ன? எனக்கென்னவோ அவையின்ர பதிலில வார்த்தைக்கு வார்த்தை வழியல் தான் தெரியுது.

பெரியண்ணா நீங்கள் என்னெண்டாலும் சொல்லுங்கோ.. உங்கடை காலைப் பிடிச்சுக்கொண்டுதான் நாங்கள் நிப்பம் எண்ட மாதிரி இருக்கு அவையின்ரை கதையள்.

இதைப்பற்றின கேள்வியொண்டுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் என்னெண்டு வளைஞ்சு நெளிஞ்சு பதில் சொல்லுறார் எண்டு பாருங்கோ.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.
நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

இதன் சாரம்சம் இதுதான். அண்ணை.. எங்களை சந்திக்காமல் விட்டது உங்கடை பிழையில்லை. நாங்கள் வந்து நிண்டதும் உங்களை சந்திக்க கேட்டதும் உங்கடை காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கும். அவ்வளவும் தான். மற்றும்படி பிரச்சனையில்லை. இன்னொருமுறை வாய்ப்புத் தாங்கோ..

ஆனால் கருணாநிதியும் தான் ஏன் கூட்டமைப்பினரை சந்திக்கவில்லையெண்ட உண்மையைச் சொல்லியிருக்கலாம். பின்னையென்ன? அவர் ஒரு முதல்வர் எண்ட பெயரில இருக்க கூட்டமைப்புக்காரர் முதலில அவரிடமெல்லோ போய் குனிஞ்சு விழுந்து வணங்கி ஆசி பெற்று எழும்பியிருக்க வேணும். அதை விட்டுவிட்டு எப்பிடி வைகோவை முதலில சந்திப்பினம்?. அதுவும் வைகோவூடாக பிரதமரை வேறை சந்திக்க முயற்சி செய்தவையாம். இதென்ன வெளிநாடே..? கட்சி வேறுபாடில்லாமல் எல்லாரையும் சந்திக்க..? இங்கை நீங்கள் வைகோவை முதலில சந்திச்சால் நீங்களெல்லாம் அவரின்ரை ஆட்கள்தான்.

உண்மையில கருணாநிதி அவர்களுக்கு நேரமில்லையெண்டதோ அல்லது கூட்டமைப்புக்காரர் சந்திக்க முயற்சிக்கவில்லையென்பதோ இங்கே கவனத்திலெடுத்துக்கொள்ளக் கூடிய விடயங்கள் இல்லை. பட்டென்று நெற்றியடித்தால் போலான காரணம் கூட்டமைப்புக்காரர் முதலில் வைகோவை சந்தித்துக் கொஞ்சிக் குலவியதே. அந்த ஆத்திரத்தில் விளைந்த மூன்றாந்தரத்திற்கும் குறைவான அரசியல்ப் பண்பாடே..

இங்கே கூட்டமைப்புக்காரர் என்ன செய்திருக்க வேணும். முதலில கருணாநிதியைச் சந்திச்சிருக்க வேணும். ஆனா.. அதுக்கு பிறகு அவர்களை வைகோ சந்திப்பாரா எண்டது சந்தேகம் தான்.

எங்கடை சனம் தான் பாவம். கருணாநிதி சபையில இலங்கை அரசுக்கு எதிரா கண்டனத்தீர்மானம் கொண்டு வரும்போது அவரைப் போற்றிப் புகழுவதும் பிறகு சால்ஜாப்பு கதையள் சொல்லும் போது துரோகியெண்டுறதுமா குழம்பி போய் நிக்கினம். அதுவும் சரிதான்.. சனம் தெளிவா எப்பதான் இருந்திருக்கினம்?