சத்தியமாக நமக்கு புதிய திரட்டியெதுவும் ஆரம்பிக்கும் நோக்கம் எதுவும் இல்லை
2007 இன் சிறந்த வலைப் பதிவுகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கிலும் நடுவர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் (காட்டி..? ) எண்ணத்திலும் 2007 இன் சிறந்த 17 நடுவர்களை தெரிந்தெடுத்து அறிவிக்கும் பணியில் கொழுவி குழாம் ஈடுபட்டிருக்கிறது.
இவ்வாறு சிறந்த 17 நடுவர்களை தேர்தெடுப்பதனால்... (ஏதாவது காரணத்தைச் சொல்லியாகணும். ஆனா ஒண்ணும் தோணலையே.. :(
போட்டிக்கான விதிமுறைகள்
பரிந்துரைக்கப்படும் நடுவர் தமிழில் செய்தி கும்மி ஜோக்ஸ் என் எதையாவது பதிவுலகில் எழுதவேண்டும் என்பதற்கும் அப்பால் அவர் நாலு பேருக்கு அறியப்பட்டவராக இருக்க வேண்டும். (இங்கு குறிப்பிடப்பட்ட நாலு பேர் என்பது 17 பேர் என்பது போன்ற ஒரு எண்ணிக்கை அல்ல. )
நடுவர்கள் 17 பேரையும் தேர்ந்தெடுப்தற்கு 17 நடுவர் குழுவை நாம் தெரிவு செய்துள்ளோம். கொழுவி கொண்டோடி உவங்கள் பொடியன்கள் மற்றது எங்கடை டொக்டர் கருணானந்தன் பிறகு ஜனநாயகம் இவையோட அவர்.. பிறகு தமிழ்பித்தன் இப்பிடி அந்த லிஸ்ட் நீளும். முதன்மை நடுவராக மோகனதாஸ் அவர்கள் இருப்பார்ககள்.
போட்டியில் தாங்களாகவும் கலந்து கொள்ளலாம். மற்றவர்களும் பரிந்துரைக்கலாம். அல்லது மற்றவர்களிடம் சொல்லியும் பரிந்துரைக்கப் பண்ணலாம்.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானதும் உறுதியானதும்.