Wednesday, May 27, 2009

இழவு வீட்டில் சுண்டல் விற்கிறார்கள் - வந்து வாங்குங்கள்

என்னத்தை சொல்ல.. ? வியாபாரத்தில் இவர்களிடமிருந்து கற்க நிறைய இருக்கிறதென்பதைத் தவிர

Thursday, May 14, 2009

நேற்றைய கொழுவி செய்தி பொய்யானது. பித்தலாட்டமானது.

பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறையில் வவுனியா முகாம்களில் அடைக்கப்பட்ட இளைஞர்கள் காணாமல் போய் சிங்கள முகாம்களில் உடலுறுப்புக்கள் வெட்டப்படுவதாக அதை ஒரு பாதிரியார் கண்டு புகைப்படம் எடுத்ததாக படங்களோடு செய்திகள் வெளியாகி பரபரப்பு உருவாயிருந்தது.

ஆனால்.. ஒரு செய்தியை வெளியிடுவதிலுள்ள தார்மீகம் பொறுப்பு எதுவுமில்லாமல் சகட்டுமேனிக்கு தமிழில் டைப் செய்யத்தெரிந்தால் இணையத்தளங்களை உருவாக்கி செய்திகளை எழுதி வெளியிடும் இத்தகையவர்களால் ஏற்படும் பின்னடைவுகளை யாரும் யோசிப்பதில்லை.

ஒன்றிரண்டு செய்திகளில் உருவாகும் நம்பகத்தன்மைச் சீரழிவு.. மொத்தமான துயரங்களையே.. பொய் எனச் சொல்லவைத்துவிடும்.
http://escapefromindia.wordpress.com/2008/...ges_from_india/

மேற்குறித்த இணைப்பில் இந்திய ஆஸ்பத்திரிகளில் தலித் உடலகங்களை எலிகளும் நாய்களும் தின்னவிடப்பட்டிருப்பதாக எழுதப்பட்ட செய்தியின் கட்டுரையில் படங்களைப் பாருங்கள்.

2008 இல் அந்தசெய்தி எழுதப்பட்டிருக்கிறது.

இந்தவகையான பிரசாரங்கள் சிங்களத்திற்கே வாய்ப்பாக போகும். இந்தமாதிரி முட்டாள்களால் எழுதப்படும் ஒன்றிரண்டு செய்திகளை வைத்து அவற்றை ஆதாரத்துடன் முறியடித்து மொத்தமான செய்திகளையே பொய் என்று விடுவார்கள். உரு உதாரணத்திற்கு இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக ஊடகங்களுக்கு அனுப்பி.. அவர்கள் இதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து அதை பகிரங்கப்படுத்தினால்.... என்னாகும்?

இணையத்தில் படங்கள் பரவலாக கிடைக்க.. அதன் வீச்சை அறியாமல் செய்தி எழுதும் முட்டாள்களை என்ன சொல்வது..?
--

சிங்கள பயங்கரவாதம் இதனைவிடக் கொடுமையானவற்றை செய்திருக்கிறது. அதற்கான உண்மையான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை பொய்யாக்கும் இத்தகைய சொறித்தனமான செய்தி வெளியிடல்களை மேசைச் செய்தியாளர்கள் கைவிட வேண்டும்.

Friday, May 08, 2009

கனரக ஆயுதம் பயன்படுத்துவதில்லை என சொன்னோமா..? கோத்தபாய...

"வடபகுதியில் இடம்பெறும் போரில் விடுதலைப் புலிகளின் தடைகளைத் தகர்த்து முன்னேறுவதற்கு சிறிலங்கா படையினர் எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள். அந்தவிடயத்தில் அவர்களுக்கு எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்படவில்லை" என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

"விடுதலைப் புலிகளைத் தாக்குவது என்பது வேறு. அப்பகுதியில் உள்ள மக்களை மீட்பது என்பது வேறு. இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வெவ்வேறான ஆயுதங்களைத்தான் படையினர் பயன்படுத்துவார்கள். அத்துடன், இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வெவ்வேறான இராணுவ உபாயங்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்" எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டிருக்கின்றார்.

சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியான 'ரூபவாஹினி'யில் இடம்பெற்ற பேட்டியொன்றிலேயே இந்தத் தகவல்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் முக்கியமாக குறிப்பிட்டிருப்பதாவது:

"போர் நடைபெறும் பகுதியில் உள்ள மக்களை குறைந்தபட்ச இழப்புக்களுடன் மீட்பதுதான் எமது நோக்கமாகும். நாடு, அரசு என்ற வகையில் எமக்கு பொறுப்பு உள்ளது. பொதுமக்களைக் கொன்று இதனைச் செய்ய முடியாது. இந்தவிடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகள் பற்றியும் கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கின்றது. இவ்வாறான தலையீடுகளை ஏற்படுத்தும் நோக்கிலேயே விடுதலைப் புலிகளும் தங்களுடைய இணையத் தளங்களில் படங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

போர் முனையில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கான அனைத்தையும் நாம் செய்யும் அதேவேளையில் இந்தத் அந்நியத் தலையீடுகளைத் தவிர்த்துக்கொள்வதற்கும் வழிவகைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. இதன் காரணமாகவே கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற அறிவிப்பை அரச தலைவர் வெளியிட்டார். இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் மண் அணைகள் மற்றும் பதுங்குகுழிகளைத் தகர்ப்பதற்கு அவர்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

அரச தலைவர் மற்றும் முப்படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அனைத்துலக சமூகம் என பலர் உரத்துக் குரல் கொடுத்தாலும் நாம் ஒரே நம்பிக்கையுடன் செயற்பட்டதால்தான் எம்மால் இங்கு வர முடிந்தது. எந்த நம்பிக்கையுடன் தொடர்ந்தும் இருந்தால்தான் ஏனைய பகுதிகளையும் மீட்டெடுத்திருக்க முடியும்" என அவர் தெரிவித்தார்.

//////
இங்கே எங்கே கலைஞர் வந்தார் என தலையைக் குடைகிறேன்.
கலைஞருக்கு சனி.. கோத்தபாயவின் வாயில் உள்ளதெனில் யார் என்ன செய்ய முடியும்?

Sunday, May 03, 2009

மகிந்தவிற்கு எதிராக கலைஞர் கடுமையான சட்ட நடவடிக்கை

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்ட பிறகும் அங்கு போர்நிறுத்தம் ஏற்படவில்லை என சொல்லிக்கொண்டிருக்கும் அனைவரின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைத் தமிழர் நல பேரவை சென்னையெங்கும் போஸ்டர் ஒட்டி வருகிறது.

இலங்கையில் போர்நிறுத்தமேதும் ஏற்படவில்லையென இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் தம்பி கோத்தபாய இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அவர்கள் மீதும் கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயமா என இலங்கைத் தமிழர் நல பேரவையிடம்..( இந்தப் பிரசாரம் செய்யவா.. இந்த பெயரை வைச்சாங்க..? ) அறிந்து கொள்ள அனைவரும் காத்திருக்கிறார்கள்.

Saturday, May 02, 2009

இந்த காமெடியைப் பார்த்தீர்களா..


இலங்கைத் தமிழர் நல பேரவை - கடைசியில் இந்த போஸ்டர் அடிக்கவா உருவாக்கப் பட்டது..?