Friday, May 30, 2008

சக்கடத்தார் ஏறிச் சறுக்கி விழுந்த குதிரையில..

இலங்கையின் சிங்கள மொழிப் படங்களுக்குத் தனித்துவமான ஒரு அடையாளம் உண்டு. நல்ல சினிமா என்பதற்கான பெயர் உண்டு. அவ்வளவும் ஏன் - விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத் திரைப்படங்கள் நல்ல சினிமாவிற்கான அடிப்படைகளைக் கொண்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது. காற்று வெளி உயிர்ப்பு உறங்காத கண்மணிகள் என பலவற்றைச் சொல்ல முடியும். அவற்றிற்கான தனித்துவ அடையாளங்களும் இருந்தன.

இதே காலகட்டத்தில்- புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் - திரைப்படம் என்ற பெயரில் - தென்னிந்திய சினிமாக்களை அடியொற்றியே - படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள். காலத்தின் சோகம் - அவர்களுக்கும் தாயகத்திற்கும் தொடர்புகளை ஏற்படுத்தி விட - அசல் சினிமாத் தனம் நிரம்பிய மசாலாக்கள் - இப்போது அங்கிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

விடுதலை மூச்சு என்ற அண்மைய திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி போதும் இதற்கான சான்றாய் அமைந்து விட. என்னவோ செய்து தொலையட்டும். பாடலைப் பாடுபவர் திப்பு

Tuesday, May 20, 2008

பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் சாவடைந்துள்ளார்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்

இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ்மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, May 09, 2008

திருமலையில் கப்பல் அழிப்பு

சற்று முன்னர் இலங்கை நேரப்படி அதிகாலை 2.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் விசேட நீரடித் (underwater)தாக்குதல் பிரிவினர் நடாத்திய தாக்குதலில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நின்ற சிறிலங்கா கடற்பபடையினரின் துருப்புக்காவியும் விநியோகக் கப்பலுமமான A -520 தாக்கி தகர்க்கப்பட்டுள்ளது.

ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?

என்னுடன் நேருக்கு நேர் சண்டை போட தயாரா? என்று விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுக்கு இலங்கை அதிபர் ராஜ பக்சே வினோதமான சவால் விடுத்துள்ளார்.

இலங்கையில் கிழக்கு மாகாண சபை கவுன்சிலுக்கான தேர்தல்கள் வரும் 10ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Imageஅம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் என்ற இடத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதிபர் மகிந்த ராஜபக்சே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சிங்கள மொழியில் அவர் பேசியதாவது:-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அப்பாவி பொதுமக்களையும், மந்திரிகளையும், எம்.பி.க்களையும் குறி வைத்து கொன்று வருகிறார். அவர், இதுபோன்று கொலைகளில் ஈடுபடாமல் என்னுடன் நேருக்கு நேராக சண்டை போட தயாரா?.

தீவிரவாதத்தின் பிடியில் இருந்து கிழக்குப் பகுதியை எனது அரசு விடுவித்து உள்ளது. இதுபோல வடக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்குவோம். வடக்குப் பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண கவுன்சிலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அமைதி முயற்சியை சீர்குலைத்தவர்கள் யார் என்று கிழக்குப் பகுதி மக்களுக்கு நன்கு தெரியும். மக்கள் பிரார்த்தனை செய்யக் கூட விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. ஒரு மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 160க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்து விட்டனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிகளுக்கோ அல்லது பல்கலைக்கழகங்களுக்கோ செல்ல முடியவில்லை.

தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சியில் இருந்தும், அமைதியை ஏற்படுத்தும் பயணத்தில் இருந்தும் அரசு ஒருபோதும் பின்வாங்காது.

இவ்வாறு ராஜபக்சே பேசினார்.