Friday, February 27, 2009

சிறிலங்கா வான்படை விமானம் வன்னியில் விழுந்தது.

சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானமொன்று வன்னியில் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இன்று காலை 11.25 மணியளவில் சுட்டு விழுத்தப்பட்டதாகவும் விமானம் வான்பரப்பில் எரிவுற்று முல்லைத்தீவுப் பகுதியில் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ்நெட் இத்தகவலை தெரிவித்திருக்கிறது. இதே வேளை வன்னி வான்பரப்பில் நுழைந்த விமானம் பின்னர் ராடர் அவதானிப்பிலிருந்து விடுபட்டு விட்டதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, February 24, 2009

இலங்கையை ஆக்கிரமிக்கிறது இந்தியா - மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.

சொன்னது நீதானா சொல் சொல்..

1988 இல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில்

Monday, February 23, 2009

கலைஞரின் சிரிப்பொலி




சொல்வதற்கெதுவும் இல்லை. 
நன்றி - tamilnadutalk.com

Friday, February 20, 2009

தென் இலங்கையில் புலிகள் வான் கரும்புலித் தாக்குதல்.

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்கா வான்படைத் தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான

கேணல் ரூபன்

லெப்.கேணல் சிரித்திரன்

ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இந்த இரு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இந்த இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Friday, February 13, 2009

இலங்கை விவகாரத்தில் பிரிட்டிஸ் தூதர்! சிறிலங்கா நிராகரிப்பு! புலிகள் வரவேற்பு

இலங்கைத் தமிழர்களின் அவல நிலை பற்றிய விடயங்களைக் கையாள என பிரித்தானியா அரசாங்கம் நியமித்த சிறப்புத் தூதுவரை, அது தமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனக் கூறி சிறிலங்கா அரசு நிராகரித்து விட்டது.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண், தமது நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை, சிறிலங்காவின் தற்போதைய மனித அவல நிலை தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு தூதுவராக நேற்று வியாழக்கிழமை நியமித்தார்.

இந்த நியமனத்தை நிராகரித்த சிறிலங்கா அரசாங்கம், சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அவசியமற்ற தலையீட்டினை பிரித்தானியா அரசாங்கம் மேற்கொள்ள முயற்சிப்பதாகவும், சிறிலங்காவின் தன்னாட்சி அதிகாரத்திற்கு உள்ள கௌரவத்திற்கு இத்தகைய முயற்சி கேடு விளைவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவின் இத் தூதர் நியமனத்தை வரவேற்று புலிகள் பிரித்தானியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். புலிகளின் சர்வதேசங்களுக்கான இராஜாங்க உறவுப் பிரிவின் அதிகாரி செ. பத்மநாதன் பிரித்தானிய பிரதமமந்திரியால் நியமிக்கப்பட்ட இச் சிறப்புத் தூதருக்கு எழுதியுள்ள இக்கடிதத்தில் இம் முயற்சியை தாம் வரவேற்பதாகவும் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலைகளைத் தடுப்பதில் பிரித்தானியாவிற்கு தார்மீக கடமையிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் பேச்சு ஊடான தீர்வில் தாம் அக்கறையுடன் இருப்பதாகவும் 2002 பெப்ரவரி ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் கரிசனையுடன் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Sunday, February 08, 2009

யார் அந்த லசந்த ? கோத்தபாய கேள்வி

கோத்தபாயவின் கேள்வியில் நிருபர் கண்டிப்பாக திணறியிருப்பார். அண்மையில் ஒருவர் சொன்னார். இவனுகளை எப்படி கையாள்வதென்பதே மேற்குலகுக்கு பெரிய தலையிடியாக இருக்கிறது. சண்டியர்கள் மாதிரி சாரத்தை தூக்கி கட்டிவிட்டு கதைக்கிறவர்களோடு என்னத்த ராஜதந்திர ரீதியில் அணுகுவது என்றார் அவர்.

Saturday, February 07, 2009

தவளைகளே கிணற்றின் மேலேறி வாருங்கள்.

சந்திப்புவின் ஒரு பதிவிலிட்ட பின்னூட்டம். அவர் முதலாவதாய் குறிப்பிட்ட உண்மை இது!

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள்.

ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். //

என்னங்க..
கம்யுனிசம் மார்க்சியம் அது இது என பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க.. அதனால கொஞ்சம் விசயம் தெரிஞ்சவரா இருப்பீங்களோ என்று நினைச்சா..

ரொம்பவும் கூழ் முட்டையாக இருக்கிறீர்களே...

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டபோது சென்ற பத்திரிகையாளர்கள் அங்கு கட்டாகாலி நாய்களைத் தவிர யாரும் இல்லை. அனைவரும் கூண்டோடு இடம்பெயர்ந்து போய்விட்டார்கள் என சொல்லியிருந்தார்களே..

வெளியுலகத்தில என்ன ஏது நடக்குது என்றெல்லாம் பார்க்க மாட்டீர்களா... ?

மலையகத்தில் நடக்கும் கைதுகள் குறித்து ஏதாவது தெரியுமா? யாழ்பாணத்தில் நடக்கும் காணாமல் போதல்கள் குறித்து ஏதும் தெரியுமா..? அங்கே 600 பேருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்பதாவது தெரியுமா.. ?

தவளைகளே
கிணற்றின் மேலேறி வாருங்கள்.

புலிகள் வன்னியில் மக்களை தடுத்து வைத்துள்ளார்களா?

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தி்ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவரும் இலங்கை இராணுவத்திடம், வெள்ளிகிழமை மாத்திரம் 2700க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

வெள்ளிகிழமை காலையில் 1600க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் விடுதலைப்புலிகளின் பிரதேசத்திலிருந்து, தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் உள்ள இராணுவத்தினரிடம் வந்தடைந்ததாகவும், வெள்ளிகிழமை பிற்பகல் மேலும் 1100 பேர் விசுவமடுவில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

அந்தப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு இந்த சிவிலியன்கள் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவி்த்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவார்கள் என எதிர்பார்த்து, அவர்களைத் தங்க வைப்பதற்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய இடவசதிகளை வவுனியாவில் ஒழுங்கு செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் 2600க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு ஒரே நாளில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்து சேர்ந்தி்ருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி. பிபிசி தமிழ்-

ஒருவர் இரண்டு பேர் விடுதலைபுலிகளின் முன்னரங்க நிலைகளுக்கு தெரியாமல் வருவது சாத்தியமானதாயிருக்கலாம். ஆயிரக்கணக்கான மக்கள்..?


Friday, February 06, 2009

அது எனது மூஞ்சி

தேசக் கருச்சுமந்து
போராடச் செல்வோளே !
சிங்களக் கொடுங்கோன் கண்டு
கிளர்ந்தவளல்லவா நீ?


உனது பெற்றோரைப்
பூண்டோடு புணர்ந்த சிங்கள ஆட்சி,
உனது
கிராமத்தைக் கற்பழித்தபோது
ஆயுதந்தரித்தவள் நீ,


பாசிச அரசோ
அல்லப் பார்ப்பனப் பயங்கரவாதியோ அல்ல நீ!
புத்தனின்
பித்தர்கள் போடும் கொலைக் கூச்சல்
உனது தேசத்தைக் கற்பழிக்கின்றது இன்று!


மீளவும்
பாதகர்கள் தோழி,
பாதகர்கள் தோழி
பாரதஞ் சொல்பவர்கள் பாதகர்கள் தோழி!

என் தோழி,
இது கண்ணீர்த்தானம்
அநுராதபுரத்தில் உன் சிதையைக் கண்ட கண்ணீரோடு
இன்றுன் ஓர்மம் கண்டு கண்ணீர் சிந்துகிறேன் தோழி?
புரியவில்லைப் புலம்புகிறேன்-பொய்யில்லை!

நான் அழுகிறேன்,
என் இதயம் தினமும் ஓயாது நோகிறது
நான் யார்?
இனவாதியா,இடதுசாரியா?
எதுவுமே இல்லை!

மனிதன்
மகத்துவமாக வாழ்வதற்காக-நீ
போராடும் பொழுதில் நான் பார்வையாளன்
என் கரங்களில் தாங்கிய சுடுகலம் பறிக்கப்பட்ட அன்று
உன்னைக் கொன்றோம்

தோழி,
தனித்தா போராடுகிறாய்?
உனக்கு யாருமே இல்லையா?
எனது இதயமும்,என் விருப்பமும் துணையாகட்டும்
திடமான உனது நெஞ்சுக்கு துணிவையும்
துன்பமான சூழலையும் தந்தவர்கள் நாம்!

எனக்குப் பசிபோக்கிய பனை
உனக்கு அரணாகவரும் பாக்கியம்கூட
எனக்கு வாய்க்கவில்லை!

ஓ...
தற்குறியான என் சுயமே
என் உடலை
அவளுக்கு -அவனுக்கு அரணாக்கு
நான் மற்றவரைக் கொல்லேன்
என்னைக் கொல்பவரையும் விடேன்
நீ
என் சுயத்தைக் கொண்டாய்
நான் தனித்திருக்கிறேன்,அழுகின்றேன்!

அர்ப்பணிப்புடையவளே தோழி
தமிழச்சி நீ என்பதற்காக நான் கண்ணீர் சிந்தவில்லை
நாம் ஒடுக்கப்பட்டவர்கள்
தொடர்ந்தும் உலகங்களாலும்
இந்திய வஞ்சகத்தாலும் ஒடுக்கப்பட முதலில்
உன்னைக் கொல்வதற்கு கூடுகிறார்கள் அவர்கள்
நான் அறிவேன் நீ பயங்கரவாதியல்ல!

நான் அறிவேன்
நீ பாசிஸ்டு இல்லை
எனது மாமியன் மகனும்
அக்காளின் மகனும் நீ
உன்னைக் கொல்வதற்கு எனக்கு எந்தத் தத்துவம் தேவை?
போடு குப்பையில் என் புரிதல்களை
மக்கள் உன்னையும் என்னையும் தவிர்த்தாகப் புரிய
நான் கருத்துவளையத்துள் மாட்டிய விலங்கு இல்லை!

உன் வாழ்வுக்காக அழுகிறேன்
வா,வந்து என் முத்தத்தில் உச்சி மோந்த வீர சுகத்தைத் தா!
என் புதல்வியே !,தோழியே ,மருமகளே ,சோதரியே
சும்மா சொன்னார்கள்
"தன் கையே தனக்கு உதவி" என?

இன்னொரு
வாழ்வுக்காக நான்
உனது அழிவை விரும்பேன்
நீ இந்த மண்ணின் மகள்
என்னை உனக்குள் புதைத்துவிட்டு
நான் உனக்காகக் கிறுக்குவேன்
இனி உனது அழிவைப் பற்றியே எழுதுவேன்

பார்வையாளனக இருக்கும் நான்
உன்னைக் கொல்வதற்கான முதற் கல்லைப் பதித்தேன்
கட்டிலில் புணர்வதற்கான எனது ஏற்பாட்டிற்குப் பளிங்குப் பத்திரிகை
என் உறவுகளுக்காகப் பார்வைக்கு வைக்கிறேன்
பாவி நான்,வஞ்சகன்
வியாபாரத்துக்காக உன்னை விளம்பரப் படுத்தினேன்
உன் இறப்பை மௌனித்து வரவேற்கிறேன்
கொடுமையானவொரு இனத்தின் வீரப் புதல்வி-மகள் நீ
எனது குருதியின் துளியே
உன் மார்பினில் துளைக்கும் அந்நிய ரவைக்கு
நானே வியர்வை சிந்தி நிதியளித்துள்ளேன்
உன்னைக் கொன்றுபோட முனைபவர்களுள்
என் நிழலும் இருக்கிறது

என் தோழி
உனது அழகான புன்னகையைக் கொல்வதற்கும்,
உன் தேசக் கனவை அழித்தெறியவும்
உன் திடமான உறுதியைக் குலைத்துப் போடுவதற்கும்
நானும் உடந்தையாகிப் பார்வையாளனானேன்

கைகட்டி,வாய் மூடி
வருகின்ற பெருநாட்களுக்குக் கொண்டாடும் மனதோடு
உனக்கும் எனக்கும் தொடர்பற்ற
உலகத்தைத் நான் சிருஷ்டித்துக் கொண்டேன்,
எனது மக்களின் மண விழாவுக்கு
வரவேற்பிதழ் பல்லாயிரம் யூரோவில் பதிப்பிக்கிறேன்
நீ,என்றும்போலேவே பனைமரத்தை அரணாக்கி
எமது மண்ணுக்கு உடலை விதைக்கின்றபோதும்

என் தோழி
நான் வஞ்சகன்!
எனக்காக நீ உயிர் தருகையில்
உன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்
எனது குலத்தின் வீரமே,விழுதே,வியங்கோளே,
விலைமதிப்பற்ற எனது தேசமே!
ஏன் நான் பார்வையாளன் ஆனேன்?
உன்னைக் கொல்வதற்கு ஒப்படைத்து
நான் மட்டும் தப்பினேனா?

மகத்துவம் என்பதை
உனது வாழ்வினோடு சொல்பவளே
உனது மக்களின் மௌனத்தைக் கலைக்கின்ற உன் வீரம்
இங்கு கண்டேன்
வா,வந்து என்னை நீ மன்னித்துவிடு
நான் உன்னைக் கொன்றுவிட்டேன்
உனது வீரத்தால் என்னைக் கொல்,கொய்துவிடு எனது சிரசை!

உன்னைச் சுற்றி வளைத்த
பாரதஞ் சொல்லும் பார்ப்பனியக்கூட்டம்,புத்தர் தர்மம்
உலகத்தைத் தமக்கிசைவாக்கி
ஒவ்வொரு திசையிலிருந்தும்
உன்னைக் குறிவைத்திருக்கையில்
நீயோ
திடமான நெஞ்சை முன் நிறுத்தித்
தேசத்துக்காக
உனது உடலைக் காணிக்கை செய்து
என்னை எள்ளி நகையாடுகிறாய்!

என் உயிரே,உத்தம பெண்ணே !
உணர்வுடையவள் நீ
உனது நரம்புகளில்
எனது கோழைத் தனம் தீயாக வீரக் குருதியைக் கொட்டட்டும்
போ,போரிடு,போரிடு
வஞ்சகர்களின் வலை அறுபடும் வரை நீ போரிடு
என் தேசமானவளே
உன்னை விட்டவொரு தேசம் எனக்கில்லை!

நீ எனது தேசம்,
நீ,எனது மொழி,
நீ,எனது மதம்,
நீ,எனது உடல்,
நீ,எனது வேர்,
நீ,எனது பூர்வீகம்!
நீ,எனது மகள்,
உன்னைக் கொல்வதில் நான் மகிழ்ந்திருக்கேன்
உனது அழிவை மகிழ்வாக்கிப் பணம் கொண்டவன் நான் அல்ல மகளே

என் தேசத்தின் வீரமே!
உனக்கு ஒரு பனைமரமாக இருந்து
அரணாக வருவதற்குக்கூட அருகதையற்றவன் நான்
உன்னைப்பேணி ஒரு குவளை சோறிட முடியாத எனது உழைப்பு
எனது பிள்ளைக்குப் பூமா மார்க் சோடி சப்பாத்து வேண்டுகிறது
என் போலித்தனம் உன்னைக் கொல்வதற்கு முகவுரை எழுதுகிறது

அழுவதால் நான் கழுவப் படுகிறேன்
உனது வீரத்தால் எனது கோழைத் தனம் கொல்லப்படுகிறது
உனது உயிர் தியாகத்தால் என் பிழைகள் அழிக்கப்படுகிறது
உனது உடற்சிதைவால் எனது முகம் இழக்கப்படுகிறது
இதயம் நோகிறது-நீ
போரிடும் ஆற்றலோடு தனித்திருக்கிறாய்
உனக்காக வழி நெடுக உனது தேசக் கனவு மட்டுமே துணையாக இருக்கிறது
உன் தேகத்தில் துளைபோடும் ரவைக்கு எனது மனமிருந்தால்
நிச்சியம் எய்தவனையே வேட்டையாடும்

தோழி
உன்னைக் கொல்பவர்கள் கூடுகிறார்கள்
ஐந்து நட்சத்திரக் கோட்டல்களில்
ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன
உனது காலடியின் தடங்களை அழித்து வளங்களை அள்ளுவதற்கு
நீ
முதலில் அழிக்கப்படுகிறாய்
உன் கோப்பையில் பங்கிட்டுக் கொண்டவன் கருணா
பணத்தோடு பாரதஞ் சொல்கிறான் கிழக்கில்!

என்னவளே
எனது காதலி,கண்ணைக் கசக்குவதால்
நான் கடுகளவுகூட உனக்கு உதவேன்
எனது அழுகை எனக்கானதே!
நீ, என்னை மன்னிக்காதே
எதிரியைச் சுடும் அந்தக் கணத்தில் எனது துரோகத்தையும் நினை
உனக்கு அதுவே துணையாகவும்,நெஞ்சுரத்தையும் தரும்!

ஒருவேளை நீ,வென்றுவிட்டால்
உனது சுய வீரமேதான் அதன் அடித்தளம்
எவருமே உனக்கு உறுதி தரவில்லை,
உனது மனத்தைத் திடமாக்கி
அழிக்கப்படுவதற்கு முன் காறி உமிழ்ந்து
எதிரியின் மூஞ்சியில் துப்பு
அது எனது மூஞ்சி.

- நன்றியுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மற்றும் மன்னங்கண்டல் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினரரின் ஊடறுப்பு அதிரடித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான படையப் பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:

கடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாங்கண்டல் பகுதில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களுகம் குவிக்கப்பட்டிருந்தன.

1ம் நாள் தொடக்கும் 3ம் நாள் வரை இடம்பெற்ற புலிகளின் ஊடறுப்பு தாக்குதல்கள் மற்றும் கரும்புலி வீரர்களின் தாக்குதல்களில் 1000க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்

81 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 2000 வரையில்
81 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 8000 வரையில்
துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல

என இன்னும் பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவர் இணைந்து நிற்கும் புகைப் படங்கள் ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்துள்ளன.

புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலையடுத்து படையினர் வசம் இருந்து 3.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு விடுதலை புலிகளால் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் படையினருக்கான படையப் பொருள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட 20 வாகனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேடியழிக்கும் பிரிவினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

Monday, February 02, 2009

திமுக நாளை முக்கிய முடிவு! நாராயணனை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை?

திமுக செயற்குழுக் கூட்டம் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. இலங்கை விவகாரம் தொடர்பாக இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இறுதிக்கும் கடைசிக்கும் இடையிலான ஒரு வேண்டுகோளை (கடைசி வேண்டுகோள் பின்னர் பயன்படுத்தப்படும்) கலைஞர் மத்திய அரசிடம் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் நாராயணனை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையொன்றை கலைஞர் கோராக்கூடும் என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். உடனடியாக அல்லாது விடினும் எதிர்காலங்களில் மகிந்த ராஜபக்சவோ அல்லது அவரது தம்பிகளோ அழைக்கும் சமயங்களிலாவது நாராயணன் சென்று வந்தால் போதுமென கலைஞர் கருதுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாராயணனின் பயணத்தின் போது இலங்கையில் கால்மணி நேரமோ அரைமணி நேரமோ போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்துமாறு கலைஞர் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அதனை விடுதலைபுலிகள் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.

நாராயணன் பயணத்தின் பின்னர் இருவார காலம் கலைஞர் கழுத்துப் பிடிப்புக்கு வைத்தியம் செய்ய ஆஸ்பத்திரியில் சென்று படுப்பார் எனவும் அதன்பின்னர் யாரை இலங்கைக்கு அனுப்ப கோருவது என்பதன் இறுதி முடிவும் நாளைய கூட்டத்தில் எடுக்கப்படவிருப்பதாக திமுக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது - மாலன்

ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும். அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது. - பத்திரிகையாளர் மாலன்.






புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது சிறிலங்கா இனஅழிப்புப் படைகள் நேற்று இரவு எறிகணைத் தாக்குதலை நடாத்தின. இதில் ஏற்கனவே காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அப்பாவிப் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப் படுத்தியுள்ளது. (இதற்காக கோத்தபாயவிடம் வாங்கி கட்டப் போகிறார்கள் என்பது வேறு விடயம்)

தட்டிக் கொடுக்க ஆளிருந்தால் தம்பி சண்டப்பிரசண்டன்.