Wednesday, December 24, 2008

யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
தீபச்செல்வன்


வாழ்வுக்கு தவிக்கிற குழந்தைகள்
மறைந்திருக்கிற தரையில்
சிலுவைகள் புதைக்கப்பட்டிருக்க
யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

உமக்கான மாட்டுத்தொலுவங்கள்
எம்மிடம் இல்லை.
வைக்கோல் பட்டறைகளும் இல்லை;.

நீர் அறிந்திருக்காத சிலுவைகளை
நாம் சுமக்கிறோம்.

மழைக்காலத்தில் ஏணைகள்
இல்லாமல் தடிகளில் உறங்குகிற
குழந்தைகளை
வெட்டிப்போட கத்திகளுடன் திரிகின்றன
ஏரோது மன்னின் படைகள்.

குதிரைகள் அலருகிற இரவில்
குழந்தைகளை நாம் கட்டுக்குள்
கொண்டு வைத்திருக்கிறோம்.

படுக்கைகளில் குருதி வழிந்தோடுகிறது
தூக்கத்தில் பறி எடுத்த
குழந்தையை விமானம் தின்று
வீசிவிட்டுப் போகிறது.

நீர் மீண்டும் ஒரு சிலுவையை
இங்கு விட்டுச் செல்ல வேண்டாம்.

உம்மால் தாங்கிக் கொள்ள முடியாத
வலிகளான தொலுவங்களில்
போரிடம் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன
நமது தேசத்தின் குழந்தைகள்.

நீர் இந்த தேசத்தில்
இப்போது பிறக்க வேண்டாம்.

கத்திகள் அலைகிற காடுகளில்
நம்முடன் எங்கு வரப் போகிறீர்?
வெட்டுப்பட்ட சொற்களுடன்
நாம் ஒரு பாடலை தேடுகிற போரில்
நீர் சுமந்திராத
சிலுவைகளை சுமக்கிறோம்.

ஏராது மன்னன் பெரும் பசியுடன் வாளுக்கு
இரை தேடுகிற நாட்களில்
இங்கு எண்ணிக்கையற்ற மரியாள்கள்
தமது குழந்தைகளை கொண்டு ஒளிகின்றனர்.

Monday, December 15, 2008

வான்புலிகள் எரிச்சலூட்டுகின்றார்கள் - இந்தியா

புலிகளின் வான்படை இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை.
ஆனால் எரிச்சலூட்டுகிறது.

கொரில்லா அமைப்புக்களோ, பயங்கரவாதிகளோ பயன்படுத்ததாக ஆயுதமான விமானத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் களஞ்சியங்கள் மீது நடத்தியிருக்கும் வான் தாக்குதல் குறித்து இந்தியா அக்கறை செலுத்தியிருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலமானது பிராந்திய விவகாரமாக நோக்கப்படுவதாக பாதுகாப்பு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் திறை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்துள்ளது என இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீவ் ஃபாலி ஹோமி மேஜர் கூறியிருப்பதாக அந்த இணையம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் புலிகளின் வான் தாக்குதல் பலத்தை இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லையென அவர் கூறியுள்ளார்.

இதனால், இஸ்ரேலிடம் கொள்வனவு செய்த அதிநவீன ரேடர் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்திருக்கும் தாக்குதல் பற்றி இந்தியப் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தியிருப்பதுடன் “இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் அதி நவீன ரேடர்கள் தாழப் பறக்கும் விமானங்களின் ஊடுருவல்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்று டெய்லி இந்தியா அண்மையில் செய்தி வெளியிட்டிருந்ததை அந்த இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், இந்திய கடற்படை இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஆளில்லாத உளவு விமானங்களைக் கூடுதலாகப் பயன்படுத்துவதற்கும், மேலும் இரண்டு கப்பல்களைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய விமானப்படை நகர்த்தக் கூடிய சிறிய ரஷ்யத் தயாரிப்பு ரேடார்களை கல்பாக்கம் அணுஉற்பத்தி நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பொருத்தியிருப்பதாக அந்த இணையச் செய்தி கூறுகிறது.

இதற்கும் மேலதிகமாக இந்திய விமானப்படை ‘எரோஸ்டட்’ ரேடார்களை தமிழகக் கரையோரங்களில் பொருத்தியிருப்பதுடன், இஸ்ரேலியத் தயாரிப்பான ஈ.எல்.ஃஎம்.-2083 எரோஸ்டட் ரேடர்கள் இரண்டும் தமிழகத்தில் பொருத்தப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வான்பரப்பிலிருந்து கட்டுப்படுத்தக்கூடிய இஸ்ரேலியத் தயாரிப்பு விமானங்களைக் கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Saturday, December 13, 2008

மும்பைத் தாக்குதலைக் கண்டிக்கிறாம் - புலிகள்

நிலவரம் இதழுக்கு அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் வழங்கிய செவ்வியிலிருந்து

அண்மையில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலால் இந்தியாவின் அரசியல் சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதன் பாதிப்பு மேலும் உணரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் புதிய சூழ்நிலை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்?

மும்பாய் மீதான குண்டுத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு சீரழிப்பு முயற்சியே அது. குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை இந்தியப் புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராகச் சில நாடுகள் திரைமறைவில் செயற்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான அந்தப் பகைமை நாடுகளுடன் சிங்கள அரசு உறவு பேணி வருகின்றது என்பது வெளிப்படை. இது இந்திய இராஜதந்திரிகளுக்கும் நன்கு தெரியும்.

ஒரு இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழம் போராடுகின்றது. இதுவொரு விடுதலைப் போராட்டம் காலங்காலமாக அடக்கப்பட்ட இனங்கள் விடுதலை கோரிப் போராடுவது வரலாற்று வழமை. தமிழீழ மண்ணில் தமிழரின் நலன்களை முன்வைத்து எமது போராட்டம் நடக்கின்றது.

கண்டனம் தெரிவிக்கவில்லையென கடிந்த இந்துவும் அதன் இளவல்களும்.. இவர்களுக்கென்ன தகுதியிருக்கிறது கண்டிப்பதற்கென இனி மறுவளத்தால் வருவார்கள். : )

Sunday, December 07, 2008

கடலோரக் காற்று - தமிழீழ முழு நீளத்திரைப்படம்

2002 இல் வெளியான இத்திரைப்படம் ஈழத்து கடலோர மக்களின் துயர் மிகு வாழ்வினையும் மக்களுக்கும் போராளிகளுக்குமான உறவுகளையும் போராளிகளின் கலகலப்பு மிக்க உணர்வு மிக்க வாழ்வினையும் இயல்பாக எடுத்து கூறுகிறது.

தாயக நிலவரம் - பிரபாகரனது உரை தொடர்பான அலசல்

Saturday, December 06, 2008

Since I left my motherland

எங்கெங்கோ கண்காணத தேசங்களில் போய்விட்ட பிறகும் அடுத்த தலைமுறை வேரை மறக்காதென்பதற்கு ஆங்காங்கே தெரிகின்றன ஒளிகள்.

இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் ஈழத்தமிழரின் குமுறல்
Friday, December 05, 2008

Tuesday, December 02, 2008

நாங்களும் மனிசர்தானே..?

OFAB-500 ரக க்ளஸ்டர் (Cluster) குண்டுகள் ரஸ்யத்தயாரிப்பானவை. கொத்தணிக் குண்டுகள் என தமிழில் சொல்லப் படுகின்றன. பெரும் பீப்பாய் ஒன்றினுள் நூற்றுக்கணக்கான சிறு சிறு வெடிகுண்டுகளை அடைந்து அவை வானிலிருந்து வீசப்படுகின்றன. சாதாரண குண்டுகளை விட மோசமான விளைவுககைத் தரவல்ல இக்குண்டுகளை உலக அளவில் தடை செய்வது குறித்துப் பேசப்படுகிறது.

அணுகுண்டிற்கடுத்த பேரழிவு ஆயுதமானதென்னும் பின்னணியில் அதனைத் தடைசெய்வது குறித்து நாளை புதன் கிழமை 100 க்கும் அதிகமான நாடுகள் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கூடுகின்றன.

----------------------------

கடந்த சனிக் கிழமை இந்தவகையான குண்டுகளை சிங்கள அரசு தமிழர் வாழிடங்களில் வீசியிருக்கிறது. கேட்பார் யாருமில்லை ஆடடா தம்பியென்ற நிலைப்பாட்டில் தொடரும் அவர்களின் அட்டூழியத்தை யாரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

அன்று வீசப்பட்ட அன்றைய குண்டு வீச்சில் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமுமற்றனர். கீழ் வரும் படங்கள் அகோரமானவை.

உலகத்தின் பெரும் பெரும் ஊடகக் காரரே .. இந்த மக்கள் ஐந்து நட்சத்திர Hotel இல் இல்லையென்பதற்காக கண்டு கொள்ளாதிருந்து விடுவீர்களா..? 24 மணிநேரம் கூட வேண்டாம். சிறு மணித் துளிகள்.. ?

நாங்களும் மனிசர்தான்

for more news
http://tamilnet.com/art.html?catid=79&artid=27633