Wednesday, July 20, 2005
Sunday, July 17, 2005
என் விருப்பப் பாடல் இன்குலாப் எழுதி...
இன்குலாப்பை ஒரு கவிஞராய் எனக்குப் பிடிக்கும். அவரின் தனிப்பட்ட எளிமையான வாழ்வும் பிடிக்கும். அவரின் ஒரு கவிதைத் தொகுப்பைப் படித்துள்ளேன். சினிமாப் பாடல்கள் எழுதாத அவர் ஒரு பாடல் மூலம் என்னை மேலும் ஆகர்சித்துக்கொண்டார்.
என் சிறுவயதுப் பராயத்தில் ஒரு பாடல் மிகப்பிரபல்யமாயிருந்தது. அதன் இசையமைப்பு மற்றும் வரிகள் எம்மைக் கட்டிப்போட்டிருந்தன. தொன்னூறின் தொடக்கத்தில் எங்கும் அந்தப் பாட்டைக் கேட்கலாம். அப்போது அதை எழுதியவரோ பாடியவரோ எமக்குத் தெரியாது. பாடல் மட்டும் நிரந்தரமாக மனசில் கதிரைபோட்டு இருந்துகொண்டது.
பின்னர் அப்பாடலை எழுதியவர் தமிழகத்தைச் சேர்ந்த இன்குலாப் என்றும் பாடியவர் மனோ என்றும் (அப்போது தான் எங்கு பார்த்தாலும் சின்னத்தம்பிப் பாடல்கள்) அறிந்த போது ஆச்சரியம். இப்போது இன்குலாப்பின் கதை வந்தபோது அவர் எழுதிய மூன்று பாடல்களுள் எனக்கு மிகப்பிடித்த பாடலை இங்கே பதிகிறேன்.
கேட்டு, படித்து கருத்தைச் சொல்லுங்கள்.
பாடல் கேட்க இங்கே.
இனி பாடல் வரிகள்.
**********************************************
ஒப்புக்குப் போர்த்திய அமைதித் திரையின்
ஓரங்கள் பற்றியெரிகின்றன...
ஒடுக்க முடியாத உண்மையின் குரல்கள்
உலகின் முற்றத்தில் ஒலிக்கின்றன.
ஏழுகடல்களும் பாடட்டும் -இனி
எட்டாத வானமும் கேட்கட்டும் (2)
ஈழவிடுதலைப் புலிகளின் குருதியில்
எழுதப்படுகின்ற மானுட கானத்தை
ஏழுகடல்களும் பாடட்டும்.......
ஆயிரம் பறவைகள் எங்கள் கானக
மரங்களில் கூடுகட்டலாம்
அவைகள் உலகசமத்துவம் பாடி
எங்கள் தரைகளில் முட்டலாம்
போர்விமானம் எம் தலைக்கு மேலெனில்
புகையும் எங்கள் துப்பாக்கி
போர்க்கப்பல் எம் அலைக்கு மேலெனில்
கடலே எதிரிக்குச் சமாதி -இதை
ஏழுகடல்களும் பாடட்டும்......
**********************************************
பாடல் தந்த தளத்துக்கு நன்றி.
Sunday, July 10, 2005
மலேசியா வாசுதேவனின் குரலில் என் விருப்பப் பாடல்
கொழுவியால சும்மா இருக்க ஏலுமோ?நானும் வெளிக்கிட்டுட்டன்.
அந்த வரிசையில மலேசியா வாசுதேவன் பாடின பாட்டொண்டை இப்ப உங்களுக்காகத் தரப்போறன்.
*********************************************
தமிழகத்துப் பாடகர்களுக்குள்ளே என்னை மிகக்கவர்ந்த பாடகர்களுள் மலேசியா வாசுதேவன் ஒருவர்.
டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் உச்சரிப்புக்காக நான் விரும்புபவர் இவர்தான். கம்பீரமான அந்தக் குரல் ஒரு காலகட்டத்தில் தமிழ்த்திரையுலகில் தனக்கென ஓரிடத்தை நிலையாக வைத்திருந்தது. எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரின் சமகாலத்திலேயே தன் தனித்தன்மையையும் புகழையும் தக்க வைத்துக்கொண்டவர்.
தமிழத் திரையுலகைக் கடந்து அவர் பாடிய ஒரு பாடலை இங்கே பதிகிறேன்.
பலருக்கு உவப்பற்றதாக இருக்கலாம் என்று தெரிந்தாலும் இப்பாடலை இங்கே இடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
**********************************************
இஞ்ச கிளிக்கிக் கேட்டுப்பாருங்கோ.
எப்பிடியிருக்கெண்டு பின்னூட்டமும் குடுத்திட்டுப்போங்கோ.
**********************************************
நடடாராசா மயிலைக்காளை
நல்லநேரம் வருகுது
நடடாராசா சிவலைக்காளை
நாளைவிடியப் போகுது
பொழுதுசாயும் நேரம்-இது
புலிகள்வாழும் தேசம்
ஈழக்கடலில் மோதுமலைகள் என்னசொல்லிப் பாடும்
இந்தநாட்டில் வீசும்காற்று என்னசொல்லிப் பேசும்
நீலமேகம் எங்கள்நாட்டில் நின்றுபார்த்துப் போகும்
நீங்கள்வெற்றி சூடவேண்டும் என்றுவாழ்த்துக் கூறும்
வென்றுவாழ வாழ்த்தும்
ஊரிலெங்கும் புலியைத்தேடி ஊர்வலங்கள் வாரும்
கூரையெங்கும் ஏறிநின்று குண்டுபோட்டுப் பாரும்
போரிலெங்கள் புலிகள்செய்த புதுமைகேட்டுப் பாரும்
புலரும்காலை தலைவன்மீது பரணியொன்று பாடும்
தரணியெங்கும் கேட்கும்
காடுமேடு வீதியெங்கும் கண்விழித்துக் கொள்வார்
காட்டிற்கூட எங்கள்வீரர் கண்ணிவெடிகள் வைப்பார்
போற்றிபோற்றி பிள்ளையாரே புலிகள்வாழ வேண்டும்
பேய்கள்ஓடிப் போகவேண்டும் புலிகள்ஆழ வேண்டும்
நாங்கள்வாழ வேண்டும்.
பாடல்- புதுவை இரத்தினதுரை.
இசையமைப்பு- எல்.வைத்தியநாதன் (என்று நினைக்கிறேன்)
இணைப்பு வேறொரு தளத்திலயிருந்து எடுக்கப்பட்டது.
தமிழ்ப்பதிவுகள்
Saturday, July 09, 2005
Wednesday, July 06, 2005
“இந்தோ”வின் ஆயுத வளர்ச்சியும் அசட்டுத்தனங்களும்
அண்மைக்காலங்களில் “இந்தியோ நேசியா” தன் ஆயுத, இராணுவக் கட்டமைப்பைப் பெருக்கி வருகிறது. புதிது புதிதாக ஏவுகணைகளைப் பரீட்சித்துப் பார்க்கிறது. விமானங்களைக் கொள்வனவு செய்கிறது. அயல் நாடுகளுடன் புதிதாக இராணுவ ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறது. அண்மையிற்கூட பிரிட்டனிடமிருந்து சில கடற்கலங்களை வாங்கும் முயற்சியில் உள்ளது.
இவையெல்லாம் மிக அருகிலிருக்கும் “ஈழத்தோ”வருக்கு மிக ஆபத்தானதாகும். அவர்களை நம்ப முடியாது. என்றாவது குண்டுகளைத் தலையில் போட்டுவிட்டு sorry சொல்வார்கள். இது அமேதி ஏற்படுத்தத் தான் என்றும் சொல்லிவிடுவார்கள். யாரோ ஒரு அவில்தார் தான் அவற்றைக் கொட்டினான் என்றும் சொல்லிவிடுவார்கள். ஆகவே இந்நேரத்தில் “ஈழத்தோ”வர்கள் கவனமாயிருக்க வேண்டும். அயல் நாட்டின் இந்த ஆயுதப் பெருக்கம் (என்று ஊடகங்களால் சொல்லப்படுவது) எப்போதும் “ஈழத்தோ”வருக்கு ஆபத்தானதே. (தாங்களே ஒன்றைப் பத்தாக்கி ஊதிப்பெருக்கிவிட்டு அதை வைத்தே புலம்பி மக்களைக் குழப்புபவர்கள் என்று எம்மை யாரும் சொல்லாதீர்கள்)
இருபது நிமிடப் பறப்புத் தூரம் தான் “இந்தியோ” நேசியாவிலிருந்து “ஈழத்தோ”வரின் வாழ்விடங்களுக்கான தூரம். சும்மா ஜாலியாகப் பறந்து போய் வரும் தூரம். அதுவும், “ஈழத்தோ”வரின் கள்ளுக்கொட்டில்களும், அகதி முகாம்களும், உப்பளமும், கிடுகு உற்பத்தித் தொழிற்சாலைகளும் அவர்களின் முக்கிய இலக்காக இருக்கக் கூடும். இப்போது அவர்கள் வைத்திருக்கும் “ஜோதிகா” ஏவுகணை கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடியதென்றாலும் “ஈழத்தோ”வரை நோக்கித்தான் திருப்பி வைத்துள்ளார்கள். மேலும் “பொம்பிளத் தூக்கி” (இது ஒரு ராசாவின் பெயர்) ஏவுகணையும், “நெருப்பு” ஏவுகணையும் எந்த நேரமும் ஆயத்த நிலையிலேயே இருப்பதாகக் கேள்வி.
இப்போது தானே ஒன்று இரண்டாகச் சோதிக்கிறார்கள் என்று யாரும் கேட்கலாம். இப்படித்தான் தொடங்குவார்கள். பிறகு ஒன்று பத்தாகி பத்து நூறாகி வந்து விடும். நாளைக்கு “ஈழத்தோ”வர்கள் தங்கள் கள்ளுக்கொட்டில்களையும் கக்கூசுகளையும் அகதி முகாம்களையும் உப்பளத்தையும் பணயப் பொருட்களாய் அவர்களிடம் கொடுத்துவிட்டு முளுசக் கூடாது. அதற்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.
"Twin மடு" சர்வதேச விமான நிலையத்தில் (அதில் இப்போது தண்ணீர் நிரம்பியிருக்குமென்று நினைக்கிறேன்) நிறுத்தி வைத்திருக்கும் தம் "அதியுயர் வேகப் போர் விமானங்ளை" அனுப்பி அந்த ஏவுகணை நிலையங்களை அழிக்க வேண்டும். ஒரு “இத்தினி” நாடாக இருந்து கொண்டு ஒரு பிராந்திய வல்லரசான “ஈழத்தோ”வரையே எதிர்க்கும் எண்ணத்தோடு (தம் பரம எதிரியை விட்டுவிட்டு) காய்களை நகர்த்தி வரும் அந்தச் ‘சுண்டெலி’க்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
செப்ரெம்பர் 11 தாக்குதலின் பின் மாற்றப்பட்ட உலக ஒழுங்கில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதே மாதிரியான ஒரு தாக்குதல் கூட நடத்தப்படலாம். “ஈழத்தோ”வரின் கள்ளுக்கொட்டில்கள் அழிக்கப்பட்டால் இனி அந்த நாட்டால் எழுந்து நிற்பதை நினைத்தும் பார்க்க முடியாது. புத்திசாலித்தனமாக "ஈழத்தோ"வர்கள் பெரிய கட்டடங்களோ வசதியான வீடுகளோ இல்லாமல் ஓலைக் கொட்டில்களையே வசிப்பிடமாக வைத்திருந்தாலும் தொழிற்சாலைகள் அழிக்கப்படுதலைத் தவிர்க்க வேண்டும். முன்பாகவே மின்சாரமோ இணையமோ இல்லாமல் வாழ்ந்து வருபவர்களென்றாலும் எதிரியின் இந்த அழிப்பு நடவடிக்கையையிட்டுக் கவனமாகவிருக்க வேண்டும். இதற்கிடையில் அமெரிக்கா முதல் ஏனைய வல்லரசுகளும் இந்தத் திட்டத்துக்கு அனுசரணையாளராய் இருக்கின்றனர். அவர்கள் ஒரு தரப்பை வலுப்படுத்துவதன் மூலம் மறுதரப்பையும் தம்மிடம் வந்து ஆயுதங்கள் வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.
இதைவிட வெளியிலிருக்கும் “இந்தியோ” நேசிய மக்கள் பெருவாரியான பணத்தைக் கொடுக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி பதினான்கு கோடியே எழுபத்து மூன்று லட்சத்து முன்னூற்றுப் பதினொரு ரூபாய் எழுபது காசு வருடந்தோறும் அவர்களுக்கு வெளிநாட்டில் வாழும் “இந்தியோ” நேசிய மக்களால் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் “ஈழத்தோ” மக்களும் அரசும் என்ன செய்யப்போகின்றனர்?
ஓடியொழியப் போகின்றனரா?
எங்கே போவீர்கள்? காடுகளுக்குள் ஒழிவீர்களா?
அல்லது உங்கள் விமானப்பலம், கடற்பலம் எல்லாவற்றையும் கொண்டு எதிரியை அழிப்பீர்களா?
எழுமின் எழுமின்,
இல்லையென்றால்
விழுமின் வழுமின்.
*****
இந்த இராணுவ ஆய்வுக் கட்டுரையை வாசிக்கையில் சிரிப்போ கோபமோ வருகிறதா? அப்படியாயின் இங்கேயும் ஒருமுறை சென்று சிரித்து அல்லது கோபித்துச் செல்லுங்களேன்.
*****
உசாத்துணை நூல்கள்:
"இந்தியோ" நேசியா இன்று.
பேராசிரியர் ரத்தினத்தின் குணச்சித்திரங்கள்
செப்ரெம்பர் 11-உள்ளதும் உசாவலும்.
இப்படிக்கு,
"இராணுவ, அரசியல் ஆய்வாளர்"
மண்டூர் மஸ்ட் டூ.
Monday, July 04, 2005
இந்தியாவுக்கெதிரான பிரபாகரனின் உண்ணாவிரதம்
இதற்கு ஆதரவு தெரிவித்துத் தமிழீழ மக்களால் நடத்தப்பட்ட போராட்டமொன்றின் படப்பதிவை இங்கே காணலாம்.
இந்திய அரசு தொலைத்தொடர்பு சாதனங்களை மீளக் கையளித்ததோடும் வீட்டுக்காவலைத் தளர்த்தியதோடும் அவ் உண்ணாவிரதம் இருநாட்களின் பின் வெற்றிகரமாக நிறைவடைந்தது. (இதன் பின்னணியில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.)
வீரமணி அவர்கள்தான் மென்பானம் கொடுத்து அவ்வுண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். நிறைவு செய்தபின் பிரபாகரனோடு வீரமணி அவர்கள் அளவளாவும் காட்சி.
உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து ஆதரவாளர்களோடு கதைக்கும் பிரபாகரன்.
தமிழ்ப்பதிவுகள்