Monday, July 04, 2005

இந்தியாவுக்கெதிரான பிரபாகரனின் உண்ணாவிரதம்

1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழகத்திலிருந்தபோது அவரது தொலைத்தொடர்பு சாதனங்களைப் பறித்ததோடு அவரை வீட்டுக்காவலிலும் வைத்தது இந்திய அரசு. இதை எதிர்த்து, தமது தொலைத்தொடர்பு சாதனங்கள் தமக்கு மீளக் கையளிக்கப்பட வேண்டுமென்று கேட்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்தார் பிரபாகரன். உணவோ எந்த நீராகாரமோ அருந்தாத போராட்டம் அது.

இதற்கு ஆதரவு தெரிவித்துத் தமிழீழ மக்களால் நடத்தப்பட்ட போராட்டமொன்றின் படப்பதிவை இங்கே காணலாம்.


இந்திய அரசு தொலைத்தொடர்பு சாதனங்களை மீளக் கையளித்ததோடும் வீட்டுக்காவலைத் தளர்த்தியதோடும் அவ் உண்ணாவிரதம் இருநாட்களின் பின் வெற்றிகரமாக நிறைவடைந்தது. (இதன் பின்னணியில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.)

வீரமணி அவர்கள்தான் மென்பானம் கொடுத்து அவ்வுண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். நிறைவு செய்தபின் பிரபாகரனோடு வீரமணி அவர்கள் அளவளாவும் காட்சி.


உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து ஆதரவாளர்களோடு கதைக்கும் பிரபாகரன்.

17 comments:

குழலி / Kuzhali said...

அரிய புகைப்படங்கள்

மாயவரத்தான்... said...

உண்மையில் காணக்கிடைத்தற்கரிய புகைப்படங்கள். அவ்வப்போது இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடவும்.

கொழுவி said...

நன்றி ஐயா நன்றி.
உங்கள் போன்றவர்களின் ஆதரவு இருக்கும் வரை, நான் தொடர்ந்து இப்படியான திருப்பணிகளைச் செய்வேன்.

காவலன் said...

இந்த படங்களை முந்தி பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கு, எப்போது எடுத்தவை என்று தெரியவில்லை... அறிய தந்தமைக்கு நன்றி!

Halwacity.Vijay said...
This comment has been removed by a blog administrator.
Spectator said...

இங்கு மேலே பின்னூட்டியுள்ளது போலி மூர்த்தி (இவர் பல இடங்களில் மூர்த்தி பேரில் பின்னூடுகிறார்), எலிக்குட்டியை வைத்து (Blogger) எண்ணைப் பார்க்கவும். இவர் மூர்த்தியின் படத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையான மூர்த்தியின் எண்: 2927658

http://www.blogger.com/profile/2927658

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Halwacity.Vijay said...
This comment has been removed by a blog administrator.
Dondu said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Hay is the above comment pasted here by Dondu? I mean Real Dondu.(Hmm.. eppellam thamiz manaththula thiru/thirumathi podurappula poli/orginalnnu poda vendiyathaap pocchu)
As usual i checked the Blogger number and link. It seams to be orginal. Also its not look like an anonymous comment.
Hayyyyyyyyy What the hellllllll going on here.........
Can anyone hack the Blogger to this much?????????

unmaiyelaye Prabhakaranin ariya padaththa pottrukkaru. Its really spl and good post. sampantham ellama enga vanthu eppadi asingam panringale.

கொழுவி இதற்கு முன் உள்ள பின்னூட்டத்தை யார் பதிவு செய்திருந்தாலும் தயவு செய்து நீக்கிவிடுங்கள். நல்ல பதிவில் நரகலை வைத்திருக்க வேண்டாம்.
(படிப்பவர்களின் குழப்பத்தை தவிர்க்க அந்த பின்னூட்டத்தை நீக்கும் போது எனது இந்த பின்னூட்டத்தையும் அழித்து விடவும்.)

--சோழநாடன்

Anonymous said...

சரி அந்த கடைசி புகைப்படத்தில் இருப்பது இப்போ உள்ள அமைச்சர் கே.வி.தங்கபாலு 'வா. (இப்போ அமைச்சரா இருக்கிறாரா என்று தெரியாது. ஆனா இப்போ இருந்து இந்த புகைப்படம் பத்திரிக்கையில வந்தா சங்குதான் :-) )

--சோழநாடன்

Anonymous said...

சோழ நாட்டாரே, அது போலி டோண்டு தான். போலியா உண்மையா என அறிய இரண்டு சோதனைகள் செய்ய வேண்டும். 1) பிளாக்கர் எண் சரியானதா? 2) பின்னூட்டமிடும் பொழுது, ஏற்கனவே பின்னூட்டியவர்களின் படங்கள் அவர்கள் பின்னூட்டங்களுக்குப் பக்கதிலிருக்கும். அப்படி இருக்கின்றதா என சரிபார்க்க வேண்டும். (டோண்டு அவருடைய படத்தைப் போட்டுள்ளார்!)

முதலில் போலி மூர்த்தியாக வந்து இதே அசிங்க பின்னூட்டத்தை ஒட்டிவிட்டுப் போனார்கள். அதைக் கொழுவி அழிக்க, இப்ப மீண்டும் வந்து போலி டோண்டுவாக ஒட்டுகிறார்கள்:( விடாமுயற்சியாளர்களாக் உள்ளார்கள்).

அதுசரி, 'நரகல்' என்பது திருநெல்வேலிச் சொல் என்று கேள்விப்பட்டேன், நீங்கள் சோழ்நாடு என்கிறீர்கள்?!

Anonymous said...

நம்ம ஊர் பகிட்டும் அப்படித்தாங்க சொல்லுவோம்.
(போலி dondo விளக்கத்திற்கு நன்றி)

--சோழநாடன்

கொழுவி said...

நன்றி சோழநாடன் மற்றும் காவலன் அவர்களே!

இறுதிப்படத்திலிருப்பது நீங்கள் கேட்டவர் தானா எனத்தெரியாது. அதில் பிரபாகரனையும் பின்னால் நிற்கும் பொன்னம்மானையும் தவிர வேறு யாரையும் தெரியாது.

செல்வமணி said...

அரிதான படங்கள். அது தங்கபாலுவேதான். அப்போது அனைத்து தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் ஈழப் பிரச்சனையில் அக்கறை காட்டியே ஆகவேண்டிய கட்டாயச்சூழ்நிலை.அப்போதைய தமிழ்நாட்டு மக்களின் அழுத்தம் அந்த அளவில் இருந்தது.அத்தகைய சூழ்நிலையில் எல்லா அரசியல்வாதிகளும் பிரபாகரனை சந்திப்பது வழக்கம்தான்.

பொன்னமானுக்கு அடுத்து நிற்பவர் 'குண்டர்' என்று 'பொடியன்'களால்அழைக்கப்பட்டார் என நினைக்கிறேன்.மற்றவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள். இந்த படத்தில் உள்ள வீடு சென்னை அடையாறு இந்திரா நகரில் பாலசிங்கம் அவர்கள் வசித்த வீடு.

இன்னொறு படம் இருக்கும்...முடிந்தால் அதை பிரசுரிக்கவும்.'Brothers in Arms' என்று தலைப்பிட்டு பிரபாகரன்,ஸ்ரீசபாரத்தினம்,பத்மனாபா,பாலகுமாரன் ஆகிய நால்வரும் கைகோர்த்து நிற்ப்பதுபோல் அந்த காலகட்டத்தில் வெளியானது.அதை பார்த்துவிட்டு அடுத்த நாளே 'தமிழீழம்' மலரப் போகிறது என்று பலரும் நினைத்தார்கள். ஆனால்...ம்ம்..அதில் ஒருவர்தான் இப்போது உயிருடன் உள்ளார்.

அந்த படம் கிடைத்தாலும் நீங்கள் வெளியிடப்போவதில்லை.புகைப்படங்கள் பேசத்தொடங்கினால் பலகதைகள் வெளிவரும்.

இந்த பதிவை தாமதமாக பார்த்தால் தாமதமான பின்னூட்டம்.

கொழுவி said...

செல்வமணி,
விளக்கத்துக்கு நன்றி.

நீங்கள் கேட்ட புகைப்படம் ஏற்கனவே வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.
பொடியன்கள் என்ற பேரில் வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் அப்படத்தை வெளியிட்டார்கள். இப்போதும் அப்பதிவு இருக்கும் என்று் நினைக்கிறேன்.