Friday, December 22, 2006

அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும்

டேய் ரங்கா வாடா வா!என்னமாதிரிப் போகுது பாடு?

மணியண்ணை! என்னத்தைச் சொல்லிறது? வயிறெரியுது.

ஏன்ராப்பா, மனுசி ஏதும் உறைப்பாத் தந்திட்டாளோ?

சும்மா விசர்க்கதை கதைக்காதையுங்கோண்ணை. நாட்டில உலகத்தில நடக்கிறதுகளைப் பாத்து எரியுது எண்டுறன்.

எட, அதையோ சொல்லிறாய். அப்பிடி எரியிறதுக்கு புதுசா என்ன தான் நடந்தது?

என்னண்ணோய் இப்பிடிச் சொல்லுறியள்?
அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் கூட்டமெண்டு பெரிய கூட்டமெல்லோ? உலகப்புகழ்பெற்ற டயானாவுக்கே இப்பிடியில்லையெண்டு வெள்ளையளே சொல்லுதுகளாம்.


நீ எதைச்சொல்லிறாய், எதுக்கு வயிறெரியிறாய் எண்டு எனக்குச் சரியாத் தெரியேல. சரி அதைவிடு... வாற ஞாயிறு வீட்டில கூழ் காய்ச்சிறன். வாவென் ஒருபிடி பிடிப்பம்.

அண்ணை, நீங்கள் கதைய மாத்தாதையுங்கோ. விளங்கியும் விளங்காத மாதிரி நடியாதையுங்கோ.

உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?

ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?

அதுதான் நீயாய்ச் சேர்த்து ஏற்கனவே நாறிப்போயிட்டியே. நக்கலுக்கு மட்டும் குறைவில்லை. அவங்களெண்டாலும் கலாநிதிக்குப் படிச்சு கடசிவருசத்தை முடிக்காமல் விட்டாங்கள்.. அதுவும் ஏலாமல் விடேல, இடையில போராட்டப் பாதையைத் தெரிவுசெய்து படிப்பை முடிக்காமல் வந்திட்டாங்கள். எண்டாலும் அவங்களுக்கு கலாநதிக்கும் மேல அறிவும் திறமையும் இருந்தது.
நீ என்னத்தைக் கிழிச்சுப்போட்டு இங்கிலீசில இருவத்தாறு எழுத்தையும் அங்க இஞ்சையெண்டு மாத்திப்போட்டு டாக்குத்தர் எண்டு பட்டம் போட்டுக்கொண்டு அலம்பித் திரிஞ்சனி?

பத்ததாததுக்கு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிறனெண்டும் சிலருக்கு டோஸ் விட்டுக்கொண்டிருந்தாய். டாக்குதர் வேலைக்குரிய மாதிரி ஒரு துரும்பாவது படிச்சனியோ? நீர் ஊருக்க உப்பிடி புழுகித் திரியேக்க அதையும் நம்பிக்கொண்டு, உன்னை ஆரோ வெருட்டினவங்கள் எண்டு நீ கதைவிடேக்க, உனக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு பெரிய கூட்டமே வந்ததுதான்.
உந்தளவுக்கு 'ஓட்டு மாட்டு' வேலைகள் செய்த உனக்கு மற்றவங்கள் பட்டம் குடுக்கிறதைப்பற்றி, அதுவும் தகுதிக்குரிய பட்டம் குடுக்கிறதைப்பற்றி நக்கலடிக்க என்ன அருகதை மோனே கிடக்கு?


சரிசரி, எதுக்கண்ணை இப்ப உதுகளைக் கிழறுறியள். நான் என்ன கதைச்சாலும் உதைச்சொல்லி குத்திக்காட்டிக்கொண்டிருக்கிறியள். நான்தான் பழசுகளையெல்லாம் மறைச்சுப்போட்டேனே?

அடடா! பழசுகளை மறைச்சுப் போட்டால் மட்டும் நீ அப்பாவியோ?
இந்த ஊருக்குப் புதுசா வந்த மனுசருக்கு வேணுமெண்டால் அதுகள் தெரியாமல் இருக்கும். ஆனா பழய மனுசருக்குத் தெரியாமலிருக்குமோ? மறந்துதான் போயிருப்பினமோ?


சரியண்ணை, அதை விடுங்கோ. அதுவொரு துன்பியல் சம்பவம். உவங்கள் ரெண்டொருபேர் உதைப்பற்றிக் கதைக்காமல் விட்டால் பிரச்சினைவராது.

அதுதான்ராப்பா பிரச்சினை. நீயும் உப்பிடி பட்டம் குடுக்கிறதைப்பற்றி வயித்தெரிச்சலில விழல்தனமா உளறாமல் இருக்கும்வரைதான் உன்ரபேர் சந்திசிரிக்காது.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

என்னடாப்பா சத்தத்தைக் காணோம்.
சரி, வாற ஞாயிறு மறக்காமல் கூழுக்கு வந்திடுது.
அங்க மிச்சத்தைத் தொடருவம்.


இல்லையண்ணை, நீங்களும் நாசுக்கா, பம்பல் பம்பலாக் குத்துறதில விண்ணன்.

ஏன்ராப்பா, உனக்கு மட்டும்தான் உப்பிடிக் குத்தத் தெரியுமெண்டோ இவ்வளவுநாளும் நினைச்சுக்கொண்டிருந்தனி?

*****************************
இங்கு நாசுக்காகக் குத்துவது மட்டுமே அனுமதிக்கப்படும்.
சிலவசனங்கள் அப்படியே திருடப்பட்டவை.

8 comments:

Anonymous said...

என்ன கொழுவி யாரையோ தாகிறியள் போல கிடக்கு.. .... நடத்துங்கோ....

என்ர பேர போடமல் பின்னூட்டமிடுறன்.
எதுக்கு வம்பு ஆளாளுக்கு வேலை வெட்டியில்லாமல் பேசிக்கொண்டிருகிறியள்

கானா பிரபா said...

:-))))

Anonymous said...

இதப் படிச்சபிறகுதான் ஆதிமூலத்தைத் தேடிப்போனன்.
சும்மா சொல்லக்கூடாது கொழுவி.
நல்ல சாத்துக் குடுத்திருக்கிறியள்.

Anonymous said...

ada ada.. athu thaan.. ithuthaan jananayagam..

கரிகாலன் said...

ஆகா கொழுவி.
போட்டுத்தாக்கிட்டியள்.நல்ல மாட்டுக்கு
ஒரு சூடு.

Anonymous said...

நடத்துங்கோடா தம்பிமார் நடாத்துங்கோ

பரமுவேலன்

Anonymous said...

நீர் ஒரு பேடி.. இப்படி மன வக்கிரம் உள்ளவர்களால் தான் எழுத முடியும்.. திரும்பவும் சொல்லுறன் இந்த மாதிரி மன வக்கிரமும் விகாரமும் உள்ளவர்களால் மட்டும் தான் எழுத முடியும்..

2ண்டாவது அநாநி said...

//Anonymous said...
நீர் ஒரு பேடி..//

நீயும் ஒரு பேடி, 2ண்டாவது முறையும் சொல்லுறன் நீயும் ஒரு பேடி