சிலர் பாட்டுக்கள தளத்தில போட்டுப் பதிவு எழுதிக்கொண்டிருந்தீச்சினம். அதுக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சுது.
கொழுவியால சும்மா இருக்க ஏலுமோ?நானும் வெளிக்கிட்டுட்டன்.
அந்த வரிசையில மலேசியா வாசுதேவன் பாடின பாட்டொண்டை இப்ப உங்களுக்காகத் தரப்போறன்.
*********************************************
தமிழகத்துப் பாடகர்களுக்குள்ளே என்னை மிகக்கவர்ந்த பாடகர்களுள் மலேசியா வாசுதேவன் ஒருவர்.
டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் உச்சரிப்புக்காக நான் விரும்புபவர் இவர்தான். கம்பீரமான அந்தக் குரல் ஒரு காலகட்டத்தில் தமிழ்த்திரையுலகில் தனக்கென ஓரிடத்தை நிலையாக வைத்திருந்தது. எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரின் சமகாலத்திலேயே தன் தனித்தன்மையையும் புகழையும் தக்க வைத்துக்கொண்டவர்.
தமிழத் திரையுலகைக் கடந்து அவர் பாடிய ஒரு பாடலை இங்கே பதிகிறேன்.
பலருக்கு உவப்பற்றதாக இருக்கலாம் என்று தெரிந்தாலும் இப்பாடலை இங்கே இடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
**********************************************
இஞ்ச கிளிக்கிக் கேட்டுப்பாருங்கோ.
எப்பிடியிருக்கெண்டு பின்னூட்டமும் குடுத்திட்டுப்போங்கோ.
**********************************************
நடடாராசா மயிலைக்காளை
நல்லநேரம் வருகுது
நடடாராசா சிவலைக்காளை
நாளைவிடியப் போகுது
பொழுதுசாயும் நேரம்-இது
புலிகள்வாழும் தேசம்
ஈழக்கடலில் மோதுமலைகள் என்னசொல்லிப் பாடும்
இந்தநாட்டில் வீசும்காற்று என்னசொல்லிப் பேசும்
நீலமேகம் எங்கள்நாட்டில் நின்றுபார்த்துப் போகும்
நீங்கள்வெற்றி சூடவேண்டும் என்றுவாழ்த்துக் கூறும்
வென்றுவாழ வாழ்த்தும்
ஊரிலெங்கும் புலியைத்தேடி ஊர்வலங்கள் வாரும்
கூரையெங்கும் ஏறிநின்று குண்டுபோட்டுப் பாரும்
போரிலெங்கள் புலிகள்செய்த புதுமைகேட்டுப் பாரும்
புலரும்காலை தலைவன்மீது பரணியொன்று பாடும்
தரணியெங்கும் கேட்கும்
காடுமேடு வீதியெங்கும் கண்விழித்துக் கொள்வார்
காட்டிற்கூட எங்கள்வீரர் கண்ணிவெடிகள் வைப்பார்
போற்றிபோற்றி பிள்ளையாரே புலிகள்வாழ வேண்டும்
பேய்கள்ஓடிப் போகவேண்டும் புலிகள்ஆழ வேண்டும்
நாங்கள்வாழ வேண்டும்.
பாடல்- புதுவை இரத்தினதுரை.
இசையமைப்பு- எல்.வைத்தியநாதன் (என்று நினைக்கிறேன்)
இணைப்பு வேறொரு தளத்திலயிருந்து எடுக்கப்பட்டது.
தமிழ்ப்பதிவுகள்
8 comments:
நல்ல பாடல். ஒரு காலத்தில் அலுக்காமல் சலிக்காமல் மீண்டும் மீண்டுமாய் கேட்டோம்.
அதை வரிகளிலும் தந்ததற்கு நன்றி.
அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி...
பாடல் உங்களிடம் இருக்கிறதா?
சந்திரவதானா அக்கா!
நீங்கள் கேட்ட பாடல் இப்போது என்வசமில்லை. எங்காவது இணையத்திலிருந்தால் அடுத்து ஒரு பதிவாகப் போடுகிறேன்.
மலேசியா வாசுதேவன் எண்டு தலைப்புப் போட்டுக்கூட ஒருத்தனும் வாறானில்ல.
மஸ்டூ ,வணக்கம்!இதோ நான் வந்துவிட்டேன்.மலேசியா வாசுதேவன் நீங்கள் ஓடியாடிய வயதில் நம்மைக் கொள்ளைகொண்ட பாடகர்.இளையராசாவின் அற்புதமான மெட்டுக்கு வீரியம்சேர்த்தவர்.இந்தப்பாடலை அற்புதமாகப் பாடியுள்ளார்.புலிகள் பற்றிய பாடல்!புலிகளின் செயற்பாடுகளில் உடன் பாடில்லாத நான் அடிமட்டப் புலிகள் பற்றிய உணர்வில் பெருமிதம் உடையவன் என்பதால் அற்புதமாக இருக்கும் பாடலை அற்புதம் என்று கூறுவதில் தயக்கமில்லை!
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
மலேசியா வாசுதேவன் எண்டு தலைப்புப் போட்டுக்கூட ஒருத்தனும் வாறானில்ல.
;-))
///சந்திரவதானா அக்கா!
நீங்கள் கேட்ட பாடல் இப்போது என்வசமில்லை. எங்காவது இணையத்திலிருந்தால் அடுத்து ஒரு பதிவாகப் போடுகிறேன்.///
நன்றி கொழுவி
It is good song, and I always like Vasu's voice.
Thanks.
நல்ல பாடல்..பாடல் கிடைத்தால் சொல்லுங்கள்..நன்றி
Post a Comment