Saturday, August 13, 2005

பேசாதிருப்போம்.

பேசிப் பேசி என்னத்தைக் கண்டோம்?
பேசாமலிருப்பது கடினமில்லை.
இயலாதது யாதெனில்,
நாம் பேசாமலிருக்கும் போது
பேசிப் பேசியே கொல்வதைக்
கேட்டுக் கொண்டிருப்பது.

பேசிப் பேசியே
பேசாமலிருப்பவனைப் பேச வைப்பதில்
கில்லாடிகள் அவர்கள்.

பேச்சும் மூச்சும் ஒன்றுதான்.
எதுகை எவ்வளவு அழகாக வருகிறது.
பேசும்போது இயல்பாகவே மூச்சு விடுகிறோம்
எனவே பேசாமல் இருந்தாலும்
மூச்சுவிட மறக்காதீர்கள்
பின்னர்,
பேச்சு மூச்சற்றுப் போய் வீடுவீர்கள்.

நீ பேசுவதைக் களவெடுத்து
இன்னொருவன் பேசுவானென்று
கவலை கொள்ளாதே.
நீ விடும் மூச்சைக் கூட
இன்னொருவன் எடுத்துச் சுவாசிக்கிறான்,
உன்னைப் போலவே.
ஆக
இன்னொருவனின் மூச்சை
எடுத்துவிடுவதைப் போல
பேச்சையும் எடுத்துவிடுவதில்
என்ன தப்பு?
இரண்டுமே உயிர்வாழத்
தேவை தானே?

ஆகவே,
பேசு பேசு பேசு.
நீ
பேசவில்லையென்றாலும்
பேசும் கலையை மறக்கவில்லையென்றாவது
பிறருக்குத் தெரிய(ப்) பேசு.

;-) ;-) ;-) ;-) ;-) ;-)

4 comments:

முகமூடி said...

"அது" அப்போ புரியல... இப்ப இதுவும் புரியுது... இதால அதுவும் புரியுது

;-)))

கொழுவி said...

முகமூடி,
அப்போ புரியாதது 'எது' என்பதைச் சொல்வீர்களா?

Anonymous said...

;-0

Anonymous said...

//ஆகவே,
பேசு பேசு பேசு.
நீ
பேசவில்லையென்றாலும்
பேசும் கலையை மறக்கவில்லையென்றாவது
பிறருக்குத் தெரிய(ப்) பேசு.//


இது மேத்தாவோடது போல இருக்கே.