Wednesday, April 12, 2006

போலி டோண்டுவும் சில உண்மைகளும்

நேற்று இரவு எங்கள் சக வலைப்பதிவாளர் திரு டோண்டு அவர்களை பத்திரிகையாளர் ஒருவர் சந்தித்து உரையாடுகிறார். அப்போது நடந்த உரையாடலின் ஒரு பகுதிமட்டும் இங்கு.

பத்திரிகையாளர்: வணக்கம் ஐயா,
டோண்டு: வணக்கம் தம்பி.

பத்திரிகையாளர்: நேற்று மதியத்துக்குப்பின் பல நாடுகளில் தமிழ்மணத்திரட்டி வேலை செய்யவில்லை. ஏதோ சிக்கல் நடந்துள்ளது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

டோண்டு: ஆம்! நானும் பார்த்தேன். இது நிச்சயம் அந்த மனம்பிறழ்ந்தவனின் வேலைதான். அவனை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

பத்திரிகையாளர்: யாரைச் சொல்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லையே?

டோண்டு: அவன்தான் போலிடோண்டு. உங்களுக்குத் தெரியாதா? பிரபல முன்னணி பின்னணிப் பத்திரிகையிலெல்லாம் வந்ததே. என்னோட போட்டோவைக் கூடப் போட்டிருந்தார்களே? நீங்கள் படிக்கவில்லையா?

பத்திரிகையாளர்: இல்லை. நான் படிக்கவில்லை.
டோண்டு: அச்சச்சோ! நீங்கள் வாழ்க்கையின் கால்வாசியை இழந்துவிட்டீர்கள்.

பத்திரிகையாளர்: அப்படியென்ன விசேசம்? சரி. அதைவிடுங்கள். அவன்ஏன் தமிழ்மணத்தை நிறுத்துகிற அளவுக்குப் போகவேண்டும். இது சரியாகப்படவில்லையே?

டோண்டு: இல்லை. சரிவரும். தமிழ்மண காசிகூட அவனுக்கெதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்தக் கோபத்தில் அந்த மனம் பிறழ்ந்தவன் அப்படிச் செய்திருக்கக்கூடும். அதுமட்டுமல்ல. இப்போது வேறுபல இணையத்தளங்களிலும் அவன் ஆபாசமாக எழுதுகிறான். அது அந்தப் போலிடோண்டுதான். எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆறு வருடங்களுக்கு முன்பேயே அவன் தன் வேலையைத் தொடங்கிவிட்டான். கொழும்பில் சக்தி எப்.எம் என்ற பண்பலை வானொலியில் ஒருவன் தொலைபேசி உரையாடலில் வந்து கெட்ட வார்த்தைகள் பேசிச் சென்றான். நினைவிருக்கிறதா? அவன்தான். அவனேதான் அந்தப் போலிடோண்டு. அப்போதே அவனைப்பிடித்த்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது. அதைவிட.....

பத்திரிகையாளர்: போதும்போதும். எனக்குத் தலைசுற்றுகிறது. பிறகு சந்திப்போம்.
**********************************

கொழுவியும் இன்னொரு சகவலைப்பதிவாளரும் நேற்றிரவு தூதுவனில் அரட்டையடித்தார்கள். அதிலிருந்து ஒரு சம்பவம்.

வழக்கமாக எப்போதுமே ஒருங்குறியில் தட்டச்சும் கொழுவி நேற்று பாமினியில் தட்டச்சுகிறான். அப்போது,

வலைப்பதிவாளர்: என்ன கொழுவி, உம்மட யுனிக்கோட்டுக்கு என்ன நடந்தது?
கொழுவி: என்ன கோதாரியோ தெரியேல. இகலப்பை சரியா வேலை செய்ய மாட்டன் எண்டுது.

பிறகு சிலநேர அரட்டைக்குப்பிறகு அந்த வலைப்பதிவாளர் ஒரு ஒலிக்கோப்பு ஒன்றை அனுப்புகிறார். அதைக்கேட்டுக் கருத்தைச் சொல்லும்படி கேட்கிறார்.

கொழுவி: ஐசே. இப்ப என்னால கேக்க ஏலாது. நாளைக்குக் கேட்டிட்டுச் சொல்லிறன்.
வலைப்பதிவாளர்: என்னப்பா? யுனிகோட் வேலைசெய்யுதில்லையெண்டு சொன்னீர். இப்ப கேக்க ஏலாது எண்டுறீர். உந்தப் போலி டோண்டுவின்ர வேலைதான் உதெல்லாம். அவனிட்டக் கவனமாயிரும். கண்டபடி அங்க இஞ்சயெண்டு போய் பின்னூட்டம் போடாதையும்.

எண்டு பெரிய அட்வைஸ்.
*********************************
டோண்டுவுடனான சந்திப்பு கற்பனையே. ஆனால் இரண்டாவது அரட்டைச் சம்பவம் முற்றிலும் உண்மை. அச்சம்பவத்தின்பின்தான் இப்படியொரு பதிவுபோட வேண்டுமென்று தோன்றியது.

பத்தாயிரக்கணக்கில் (இலட்சக்கணக்கில்?) விற்பனையாகும் வெகுசனப் பத்திரிகையிலேயே வந்துவிட்ட, சர்வதேச மட்டத்தில் தோண்டித்துருவப்படப் போகிற(தாகச் சொல்லப்படும்), வலைப்பதிவுகளில் கிழிந்து நாராகிப்போன-போய்க்கொண்டிருக்கிற ஒரு விசயத்தைப் பற்றி நானும் என் பங்குக்கு ஒரு பதிவாவது போடாட்டி என்ன பெரிய கொழுவி நான்? பேருக்கே மரியாதையில்லாமப் போயிடும்.

நன்றியுடன்
-கொழுவி-

7 comments:

Pavals said...

:)..
வேற ஒன்னும் சொல்லுறதக்கில்லை..

Anonymous said...

thamaasu... thamaasu...

sivan koyil kula naasam!!!

dondu(#11168674346665545885) said...

மஸ்ட் டூ மருமகனே,
நலமா? பிரச்சினை ஆரம்பிதப் பதிவு நினைவிருக்கிறதா? "இரண்டு செய்திகள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை".

இந்தப் பதிவு நினைவிருக்கிறதா? பார்க்க: http://doanddo.blogspot.com/2005/05/blog-post_20.html

அதன் பின்னூட்டங்களையும் பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கொழுவி said...

கருத்திட்டோருக்கு நன்றி.
டோண்டு,
எல்லாமே ஞாபகமிருக்கு. நானெழுதின பதிவையே எனக்கு ஞாபகப்படுத்துகிறீர்களே? அந்தப்பதிவு போட்டதாலும் அதற்கு வந்த பின்னூட்டங்களாலும் தான் அந்தப் வலைப்பதிவு தமிழ்மணத் திரட்டியிலிருந்து நிறுத்தப்பட்டது.

(பழைய தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்ட முதலாவது பெருமை எனக்குத்தான்)!

நான் மாமா என்று கூப்பிடாததற்கும் இப்படியொரு அநாமதேயப் பிரச்சினைதான். இரயாகரனின் பதிவில் உங்களை யாரோவொரு அநாமதேயம் மாமா என்று அழைக்க, அது கொழுவிதான் என்று சிறிரங்கன் என்னோடு சண்டைபிடித்தது தான் மிச்சம்.

Anonymous said...

;)

Sri Rangan said...

கொழுவி,வணக்கம்!உங்களை நினைக்கப் பயமாக இருக்கிறது.வலைப்பதிவில் நிகழும் அனைத்தையும் புள்ளி விபரப்படி வைத்திருக்கிறீரே கொழுவி! நாம் படிப்பதும் மறப்பதுமாக...

Anonymous said...

திருகோணமலை கிளைமோர்த்தாக்குதலுக்கும் போலி டோண்டுதான் காரணமாம்..இலங்கையில் பேச்சுவார்த்தை கூட தடைப் படபோகிறதாம்.. எல்லாம் அந்த மகர நெடுங்குலையப்பன் பாத்தது கொள்வான்..