Sunday, April 30, 2006

ஒட்டுப்படை முகாம் தாக்கியழிப்பு

எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது.
பொலநறுவைப் பகுதியில் அமைந்திருந்த 'கருணா குழு' எனப்படும் துணைஇராணுவக் குழுவின் முகாம் இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் கவனத்தைப் பெற்ற விடயம் இதுவாகும். ஒரு செய்திநிறுவனம் நேரடியாகச் சென்றுகூட முகாமைப் பார்வையிட்டதுடன் பகிரங்கமாக வெளிப்படுத்தியும் இருந்தது. ஆனால் இன்றுவரை அரசதரப்பு அதை மறுத்தே வந்துள்ளது.

தமிழர் தரப்பில் பத்திரிகையாளர்கள், புத்திசீவிகள் கொல்லப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளில பலர் கொல்லப்பட்டதற்கும் இக்குழுவே காரணமென்று கூறப்பட்டுவந்ததுடன், பலவற்றை அவர்களே ஒப்புக்கொண்டும் இருந்தனர்.

இவ்வளவு நாளும் இம்முகாம் மீது தாக்குதல் நடத்தப்படாதது பலருக்கு ஆச்சரியமாகவே இருந்திருக்கும். ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதற்காகப் பொறுத்திருக்கலாம். அண்மைய சம்பூர் முப்படைத் தாக்குதலின்பின் நிலைமை மாறிவிட்டது போல் தோன்றுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை இம்முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலதிக செய்திகள் கிடைக்கவில்லை.

செய்தி: புதினம்

2 comments:

Anonymous said...

புதினம் ெசான்னா சரிதான் அது அந்த ஆண்டவான்
ெசான்னமதிரி
ேபாட்டு தள்ளு உங்கதா எங்கதா புலிகளுக்கு ஆபத்ேத
புலிகளால்தான்

கொழுவி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனாமதேயம்.
புதினத்தின் செய்திமீது இவ்வளவுதூரம் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?