Sunday, May 14, 2006

இந்த பாலகனுக்கு பதில் என்ன?

யாழ்ப்பாணத்தில் தூக்கத்திலிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்றினை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய பாதுகாப்புப் படைகள் குதறித் தள்ளியிருக்கின்றன. தாயுக்கும் தந்தைக்கும் இடையில் தாலாட்டில் உறங்கிய அந்த தளிரின் மீது கொப்பளித்துக் கிடக்கின்ற இரத்தம் எந்தப் பேய்களின் பசியாற்றியது..?

இன்னும் தமிழ் கூட சரியாக உச்சரிக்க தெரியாத அந்த தளிர், இலங்கையின் தேசிய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் பயங்கரவாதிகளோடு எப்படி தொடர்புற்றது?

இது எவ்வகையான மட்டுப் படுத்தப்பட்ட நடவடிக்கை?

பயங்கர வாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் என்பது பாலகரின் உயிர் குடித்தலா?

கடற்படை தாக்கப்பட்டால் கண்ணீர் வடிக்கின்ற,

இராணுவம் தாக்கப்பட்டால் கண்டனம் சொல்லுகின்ற,

அமெரிக்க இந்திய இன்னும் உலக பெரியண்ணன், பெரியப்பு நாடுகளே..

இந்தப் பாலகனின் மரணத்திற்க பதில் சொல்வீர்களா..?Photobucket - Video and Image Hosting

17 comments:

வெற்றி said...

கொழுவி,
வசந்தன் அவர்களின் பதிவில் இட்ட எனது பின்னூட்டத்தை தேவை கருதி மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
-----------------------------
புலம் பெயர்ந்து பல நாடுகளிலும் வாழும் என் உறவுகளே!

தயவு செய்து இச் செய்திகளையும் படங்களையும் நீங்கள் வசிக்கும் நாடுகளின் நாடளுமன்ற உறுப்பினர்கள், செனற்றர்கள், பிரதம மந்திரி, எதிர்க்கட்சிகள் என சகல அரசியல்வாதிகளுக்கும் அந்தந்த நாட்டு ஊடகங்களுக்கும் உடனடியாக fax மூலமோ அல்லது email மூலமோ அனுப்பி வைக்குமாறு உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம். காலம் தாழ்த்தாது உடனடியாகச் செய்யுங்கள் உறவுகளே.

Sri Rangan said...

//கடற்படை தாக்கப்பட்டால் கண்ணீர் வடிக்கின்ற,

இராணுவம் தாக்கப்பட்டால் கண்டனம் சொல்லுகின்ற,

அமெரிக்க இந்திய இன்னும் உலக பெரியண்ணன், பெரியப்பு நாடுகளே..

இந்தப் பாலகனின் மரணத்திற்க பதில் சொல்வீர்களா..?//
கொழுவி நீங்கள் குறிப்பிடும் இந்த நாடுகளில் மக்கள் நலன் சார்ந்தா அரசபரிபாலனம் நடக்கிறது?


இந்தியாவென்பது உலகத்திலேயே மிகப்பெரிய ஒடுக்குமுறைமிக்க வன்கொடுமை நாடு,இதைவிடப் பல்லாயிரம் மடங்கு கொடுமையான அமெரிக்கா,இந்தியாமற்றும் ஐரோப்பா இலங்கைக்குக் கண்ணீர்வடிப்பது அவர்தம் வர்க்க நலனால்.


தமிழ்பேசும் மக்களின் அழிவுகளுக்குக் கண்ணீர் வடிப்பதற்கு நாமேதாம்(உலகத்தில் வாழும் தமிழ் மக்கள்) இருக்கிறோம்.எனவே, எமது மக்களோடு நாம்தாம் இணைந்து அவர்களின் நலன்களைக் காக்கும் போரைச் செய்தாகணும்.


எமது மக்களுக்கு இதைவிட மோசமான அழிவுகளை வரலாற்றில் சிங்களவரசு செய்து முடித்தது.


இது புதிதல்ல!


எனினும் இப்படிச் செய்வதால் சிங்கள அரசு புலிகளுக்கானவொரு மனோவியல் யுத்தத்தைச் செய்வது மட்டுமல்ல.இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களைப் புலிகளுக்கெதிராகத் திருப்புவதும் கூடவே இராணவக்கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மக்களையும் கொன்றுவிடுவதற்கான நிலைமையில் மக்கள் இருப்பதால், புலிகளுக்கான எச்சரிக்கையாகவும் இது இருக்கிறது.


சிங்கள இராணுவம் மட்டக்களப்பில் கோணேஸ்வரிக்கு என்ன செய்தது?


பெண்ணுறுப்பில் குண்டைத் தணித்துக் கொன்ற கூலிப்படைக்குக் குழந்தைகள்மீது கருணையா வரும்?தாய்மையைப் புரியாதவர்களுக்கு மற்றெதையும் புரியுங் குணமெப்படி வரும்?


இராணுவத்தோடு வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மக்களுக்கு.


அவர்களுக்கு இத்தகைய நிலை தோன்றுமென்பது நாமறிந்தது.இதற்கான காரணங்கள்,பக்கவிளைவுகள் குறித்து நான் விவாதித்தால் அது தேவையற்ற சர்ச்சைகளைக் கொண்டுவரும்.இந்தவிடத்தில் நான் எதையும் விவாதிக்க வரவில்லை.என்னைப் பொருத்தவரை கொலைக்கான தேவைகளை மலினப்படுத்தும் அரசியலை இல்லாதாக்கும்வரை அழிவுகளை நிறுத்தமுடியாது என்பதே என் கருத்து.


என்றபோதும் நாம் குமுதினிப்படகை மறக்க முடியாதுதாம் இருக்கிறோம்.


எத்தனை மழலைகளைச் சிங்களச் சியோனிச இராணுவத்தான்கள் கொன்றாங்கள்!


இத்தகைய பாசிச இலங்கையரசின் பாசிப்படைக்குத் தீனியாக மீண்டும் காரணங்கள் நடந்தேறும்போது நாம் வாகையாலாகாது நிற்கிறோம்.


மக்களின் அழிவைக்காட்டி நமது விடுதலைக்கு நாம் உலகத்தை உதவிக்கு அழைக்கமுடியாது.உலக அரசுகள் யாவும் அனைத்து மக்களுக்குமான சிறைக்கூடங்களே!


நமது மக்களைச் சரியான வகையில் அரசியல் மயப்படுத்தி நாமே நமது விடுதலைக்குப் போராடியாகவேண்டும்.அதுவும் தொடர்ந்து பழைய பாணியிலில்லை.நேரிய வழியில்...


துயரங்கள் தொடர்கதையாவது...


நமது தேசத்தில் எவரெவர் நலன்களுக்காகக் கொலைகள்?என்ற கேள்வியோடு மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய நிலைமையுருவாக வேண்டும்.

vimala said...

padu kolaikaikal enru netu thodankija onralla. plot sunthatam muhalavathu padukolaijil palijanar.athatku naam kaadija enrum kaadukinka paka sarpana mowname enraija emathu nilaijakum.ataijampathijil Naveena, vavunijavil thakapanodu poona kulanthai, kanakampulijadijil kollapada Vathanan avanathu petotukaka naam enna sejthom?kolaijai puli sejthal athu viduthalai, etanuvam sejthal enalipu! entha arivudan than thami sammokam etukinrathu.

வசந்தன்(Vasanthan) said...

இப்படிப் படங்களை வலைப்பதிவில் நேரடியாகத் தெரியும் வண்ணம் இணைப்புக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

Anonymous said...

Special probe ordered over Kayts killings
Mon, 2006-05-15 04:33
By Colombo Correspondent

A special police investigation has been ordered into the killing of eight civilians, the members of an extended family in Kayts, Jaffna Saturday night.

“A special investigation is underway to get the correct picture of the whole incident. We will bring the killers to justice,” a senior Defence Ministry official told the Asian Tribune.

The Navy, which controls the islands, has denied the involvement, despite allegations by local civilians of a possible Navy involvement.

A middle level army officer told the “Asian Tribune” this incident would be a serious set back on the human right records of the security forces, stressing that the security forces should come up clean, nabbing the assassins and bringing them to justice.

“Targeting terrorists is one thing, but what happened last night was not that,” told the officer who under the condition of anonymity.

The Navy has, however, denied the involvement and said sailors heard an explosion followed by gunfire from the scene of the crime last night.

“We didn’t go to the scene as there are restrictions on our movement as roads had not been cleared. Next morning we cleared the road and assisted the police to go to the scene where they found several bodies,” a Naval officer told the “Asian Tribune.”

- Asian Tribune -

Anonymous said...

தம்பி!!!தமிழனாய் பிறந்தது தான்
நீ செய்த தவறு!!!!
கரங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில்,
கண்ணீர் விட்டு கதறும்
கனத்த இதயத்தோடு
துபாய் ராஜா.

Anonymous said...

ஈழத்தமிழனுக்காக இரத்தக்கண்ணீர் வடிக்கும் இந்தியத்தமிழனின் இந்த கவிதைதான் பதில்!!!!!!!

ஒருநாள் அத்தனையும் மீறப்படும்!!!!

வீதி மங்கைகள்..
விளையாடிய
பல்லாங்குழிகளில்,
புளியங்கொட்டைக்குப்பதிலாக...
மனித இரத்தங்கள்!

கடற்கரைச் சிறுவர்களின்..
மணல் வீட்டில்
எலும்புகள்தான்..
கூரைகள்!

வீதிகளில் விட்டுவந்த
பம்பரங்கள்...
இன்னமும்
இதயத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது!

நாங்கள்
பாயில் தூங்கிய ...
நாட்களை விடவும்,
பயத்தில் தூங்கிய ..
நாட்கள்தான் அதிகம்!


வாழப்போகிற தலைமுறைக்காய்
சாவை விரும்பும் ..
சந்ததிகள் நாங்கள்!
அழியப்போகும் ஆதிக்கமே! - உன்
சாவுக்கு ஊதுகிற
சங்கொலிகள் நாங்கள்!

உங்களுடைய
வாழ்க்கையெல்லாம்..
மரணத்தோடு முடிகிறது!
எங்களுடைய
வாழ்க்கையோ..
மரணத்தில் விடிகிறது!

சற்று உற்றுப்பாருங்கள்
எங்கள்
தலையில் சுமந்திருப்பது
கோணிகளா இல்லை
கோபத்தின் கொப்புளங்களா..?

நாங்கள்
விட்டுவந்தது ..
தாய் மண்ணைத்தான்
தைரியத்தை அல்ல..

நாங்கள்
அகதிகள் அல்ல ..
உங்களை
புதைக்க வரப்போகிற..
சகதிகள்!

புறநானூற்று தமிழ் - இனி
புல்லட்டுகளோடு வரும்

காத்திரு!
அத்து மீறியவனே - ஒருநாள்
அத்தனையும் மீறப்படும்!!!!!

மாயவரத்தான்... said...
This comment has been removed by a blog administrator.
♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அய்யோ..கொழுவி..
வசந்தனின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்..

வவ்வால் said...

வணக்கம் கொழுவி!

மிகவும் கண்டிக்க தக்க கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை தாண்டவம்! நெஞ்சைக் கனக்க செய்யும் ஒன்றாக உள்ளது.

ஆனால் தங்கள் வலைப்பதிவில் ரங்கன் என்பவர் பின்னூட்டம் என்ற பெயரில் இந்தியா மீது நஞ்சைக் கக்கியுள்ளார்.முடிந்தால் அந்த பின்னூட்டதினை தணிக்கை செய்யவும்.

//இந்தியாவென்பது உலகத்திலேயே மிகப்பெரிய ஒடுக்குமுறைமிக்க வன்கொடுமை நாடு//

இந்தியா பற்றி குறை சொல்ல எந்த ஒரு இலங்கை தமிழனுக்கும் தகுதியில்லை! அமிர்த லிங்கம் முதலான தம் இனத்தலைவர்களையும்,இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ராஜிவ் காந்தி போன்றோரை கொன்று குவித்த இரத்த வெறி மிக்கவர்களுக்கு எப்படி இந்திய அரசு ஆதரவுக்கரம் நீட்டும்! தம் தவறுகளை உணராமல் பிதற்றும் மக்களை என்ன சொல்வது!

Thangamani said...

நடுநிலைவாதிகள், பாசிச எதிர்ப்பாளர்கள், ஜனநாயகவாதிகள், மார்க்சிய அறிஞர்கள், மனித உரிமை மகாத்மாக்கள், எல்லோருக்கும் நல்லவர்கள் இவர்கள் எல்லோரும் மனங்குளிரவும், அதே சமயம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கண்ணீர் சிந்தி, உலகு தழுவிய, மார்ச்சியம் சார்ந்த விடுதலையோ, அல்லது ஜனநாயகத் தென்றலோ வீசும் போதுதான் இத்தகைய படுகொலைகள் நிற்கும் என்று இரங்கற்பா எழுத இன்னுமொரு சந்தர்ப்பம்.

கொழுவி said...

வவ்வால்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிறிரங்கனின் பின்னூட்டத்தை நீக்க முடியாது. அதற்கான எந்தத் தேவையுமில்லை.
அவர் சக வலைப்பதிவாளர்தான். நீங்கள் அவரது வலைப்பதிவிலோ அல்லது இங்கேயோகூட இதுபற்றி அவருடன் வாதிடலாம்.

மேலும் அவரின் பின்னூட்டத்தைவைத்து இந்தியாவை விமர்சிப்பதற்கான ஈழத்தவருக்குரிய தகுதியைப் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. (அமிர்தலிங்கத்தின் பிரச்சினையை இங்கு விட்டுவிட்டு ராஜீவைத் தூக்கிக்கொள்கிறேன்) எங்கள் தரப்பை ஏதோ இரத்த வெறிபிடித்தவர்கள் போலக் காட்டி, உங்கள் தரப்பை கனவானாகக் காட்டிவிட்டதாய் உங்கள் புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொள்ளாதீர்கள். உங்களால் அற்புதமாக இராஜீவ் கொலையைப் புகுத்த முடிந்திருக்கிறது. விமர்சிப்பதற்கு எங்களுக்கில்லாத தகுதி வேறெந்தக் கொம்பனுக்கு இருக்க முடியும்?

நாங்கள் இரத்தவெறிபிடித்தவர்களாகவே இருந்துகொள்கிறோம்.
கீழே தரப்படும் இணைப்பில் சொல்லப்படுபவர்கள் எந்த வெறிபிடித்தவர்கள் என்று சொன்னால் நல்லது.
தொடர் ஒன்று
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு
இணைப்பு மூன்று
இணைப்பு நான்கு

தொடர் இரண்டு
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு
இணைப்பு மூன்று

இத்தொடர், தொடர முடியாமல் "இந்திய ஈழ நல்லிணக்கம்" என்ற பேரில் இடையில் கைவிடப்பட்டது.
பொறுமையாகப் படித்துவிட்டுப் பதில் தரவும்.

இன்னும் உங்களைப் போல எத்தனை பேர் வரப்போகிறீர்கள்? உங்களது ஜனநாயகம், அகிம்சை எல்லாத்தையும் நேரிலேயே பார்த்து அனுபவித்தவர்கள் நாங்கள். இப்ப சிங்களவன் செய்யிறதெல்லாம் பெரிய விசயமேயில்லை.

"தம் தவறை உணராமல்" என்று யாருக்குச் சொல்கிறீர்கள்? பயங்கரவாதியாக உங்களால் அறிவிக்கப்பட்டவர்களுக்கிருக்கும் 'தவறை உணரும் தன்மை" கூட உலகத்துக்கு அகிம்சை போதித்ததாகப் பீற்றிக்கொள்ளும் உங்களுக்கிருக்கிறதா? வருத்தமாவது இருக்கிறதா?

இவைல்லாம் ஏற்கனவே வலைப்பதிவுகளில் அடிபட்டுக் கிழித்து ஆறுப்போட்ட விசயங்கள். இப்போதே அதே மரத்த மண்டைகளோடு வருகிறீர்கள்.
*********************************
இனி பின்னூட்டத்தில் ஈழத்தவர் சார்பாக (சிறிரங்கனைத் தவிர்த்து) யாரும் வவ்வாலுக்கு எதிராகப் பதிலளிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நிறையக் கதைக்கலாம். ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் புதிதாக பழைய சண்டையைத் தொடங்க வேண்டாமென்று பார்க்கிறேன். ஏற்கனவே சில கேள்விகள், வாதங்கள் எங்கள் தரப்பால் பலவிடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

கருத்திட்ட மற்றவர்களுக்கு ஆறுதலாக வந்து பதலளிக்கிறேன்.

Sri Rangan said...

//இந்தியா பற்றி குறை சொல்ல எந்த ஒரு இலங்கை தமிழனுக்கும் தகுதியில்லை! அமிர்த லிங்கம் முதலான தம் இனத்தலைவர்களையும்,இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ராஜிவ் காந்தி போன்றோரை கொன்று குவித்த இரத்த வெறி மிக்கவர்களுக்கு எப்படி இந்திய அரசு ஆதரவுக்கரம் நீட்டும்! தம் தவறுகளை உணராமல் பிதற்றும் மக்களை என்ன சொல்வது!//
உண்மைதாம் வவ்வால்!


இந்தியாபற்றி நாம் கருத்துச் சொல்ல முடியாதுதாம்.


அதுபோல இந்தியாவை எந்த ஈழத்தவன் அழைத்தான்"ஐயோ" எங்களைக் காத்துக் கடைந்தேற்றென்று?


இந்தியாவுக்கு என்ன அருகதையுண்டு, எனது தேசத்தில் சிங்களவனுக்காகப் கப்பல் அனுப்ப?


எமக்குத் தெரியும் அவனைக் காத்து அனப்புவதா அல்லது காடாத்தி அனுப்புவதாவென்று!


இந்தியாவென்பது உமக்குத் தாயகமானால் எனக்கு விரோதி.(உண்மையில், நாம் நமது தாயகமாக-நட்பு சக்தியாக,தொப்புள் கொடியுறவாகத் தழிகத்தையேதாம் எண்ணுகிறோம்.நீருணரும் இந்தியதவையல்ல).


என் தேசத்தின் இதுவரையான அரசியற் குழிதோண்டலுக்கு இந்திய வெளிவிவகார-பொருளாதார ஆர்வமே காரணமாகும்.இதையெல்லாம் நீர் அறிவதற்குமுன் உம்"பித்தாலாட்ட தேசியவாதத்தைக்" கடைத்தேற்றும்.


அந்நிய அமெரிக்காவுக்கு இந்தியாவையே அடகு வைக்கும் உன் அரசுக்கு இலங்கையைத் தடுதாட்கொள்வதும் அவசியமாம்!


வேடிக்கையான"கொலைக்க"கதைவேறு உம்முடைய மனதில் குடைகிறது.


உலகமே "மகாத்மா"என்ற காந்திக்கு கருமாரி செய்து,அன்னையென்று அழைத்து மதித்த இந்திராவுக்கு இதயத்தைத் துளைத்து-பல்லாயிரம் அப்பாவி, ஏழை மக்களைச் சாதிசொல்லி வெட்டிப் புதைக்கும் உன் தேசத்தை எப்படித்தாம் அழைப்பது?


இதுவெல்லாம் உன்வீட்டுச் சமாச்சாரம்.எனக்கு அதுவல்ல முக்கியம்.


இந்தியாவின் அடவாடித்தனமான இராணுவ அட்டூழியத்தை நாம்-நமது பெண்கள் எதற்காக அனுபபவிப்பது?


இந்த வடுவை நீர் அநுபவித்திருக்கமுடியாது.இது பழைய கதை.


புதிய கதையோ நீ-உனது நாடு எதற்காக எனது தேசத்தில் எனது மக்கள் சாவதற்கு ஆயுதங்களைக் கொட்டுகிறாய்-கொட்டுகிறது?


சாதாரணச் சங்கதிகளையே புரிய முடியாத நீர்,எமது குருதி வெறியைப் பற்றி வம்பளக்காது-எங்கள் பிரச்சனையில் உமது"குருதியிலுறைந்து"பாழும் தேசிய இந்தியாவை"அகற்ற வழியைப்பாரும்.நீர் "இந்தியாவைக்" கட்டித் தழுவினாலும்சரி இல்லைக் கண்ணீர்-குருதி சிந்திக் காத்தாலும் எனக்கு ஒன்றுமில்லை.ஆவது உமக்குத்தாம்!


நான் உலகத்தின் குழந்தை!


இந்தப் புவிப்பரப்புப் பெற்றெடுத்த உயிரி.


எனக்கு இந்தியாவை மட்டுமல்ல எந்தக் கொம்பு வைத்த "அரசையும்" கேள்வி கேட்கும்-விமர்சிக்கும் உரிமையுண்டு.


நாம் இவ்வளவு காலமாகக் குருதி சிந்துவதற்கு முதற்காரணமே இந்தியாதாம்.(இதையெல்லாம் உமக்கு நாம் விபரமாகச் சொல்லியாச்சு) அதன்பிறகே அந்நிய உலகம். அடுத்த வீடாக இருந்துகொண்டு, எம் தேசத்தவர்களின் உயிரோடு விளையாடும் இந்தியாவுக்கு விமர்சனம் நாம் வைக்காது-உம்மைப்போல் சொகுசாக அடுத்தவர்களின் கண்ணீரில் கப்பலோடும் நீரா(நீ) வைக்க முடியும்?


இந்த வலைப்பதிவில் நாம் நமது நிலைப்பாடுகளைச் சொல்லியாச்சு.நமது விடுதலைகுறித்து நாம் பார்ப்பதும் உலகுக்குத் தெரியும்.எனினும் ஈழத்தவனின் சுயநிர்ணயத்தை எந்த வங்கோலை(உங்கட பாஷையில்:கஸ்மாலம்)நாடுகளும் தீர்மானிக்கத் தேவையில்லை.நமது பிரச்சனையை நாம் பார்த்துக்கொள்வோம்.


எமகுத் தெரியும்-இயலும் எங்ஙனம் நமது விலங்கொடிப்பதென்று.


முதலில் சிங்கள அரசுக்கு "வர்க்க"நலனுக்காகப் கப்பல் கப்பலாக ஆயுதங்களையும் அடியாட்ப்படையையும்,உளவுத் திட்டங்களையும்,உளவாளிகளையும் அனுப்புவதை நிறுத்துங் காணும்.


அப்பாவி இஸ்லாமியர்களைக் குஜராத்தில் உயிருடன் வெட்டிப் புதைத்த "கரடிகளா" நமது குருதிவெறியை விமர்சிக்க! தலித்து மக்களுக்குப் "பீ"தீத்தும் சாதியத் தடிப்பா ஈழத்தவனுக்கு இந்தியா பற்றிக் கதைகத் "தகுதி" இல்லையென்பது?


தேசத்தையும்,மக்களையும் நேசித்த "நாம்" கட்டி வளர்த்த விடுதலையைச் சிதறடித்து,இயக்கங்களை ஒன்றுடனொன்று மோதவைத்து,அவைகளை மக்கள் விரோதிகளாக்கி,இந்தியாவின் கூலிப்படையாக்கிய "இந்திய" நலன் என்னவோய்?


தென் கிழக்காசியாவில் பொலிஸ்காரன் வேலை பார்ப்பது எதற்கென்று புரியாத"மேட்டுக்குடி"மனத்தோடு நமது பிரச்சனையில் இந்தியாவின் "பங்கு"புரியாது.


மீளவுஞ் சொல்கிறேன்: மகாத்மாவை-இந்திராவை,சஞ்சாய் காந்தியை(இவர்களைத்தாம் உதாரணமாக்கணும்-இவர்களைவிடப் பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொல்லும் இந்தியாவை உதாரணப்படுத்த முடியாது.அந்த மக்கள் மக்களில்லை.அவர்கள் பரமனின் காலால் பிறந்த"கக்கூசுகள்!) நாம் கொல்லவில்லை. உமது "இராம ராஜ்ஜியமேதாம்" கொன்றது!


எனவே இந்தியவென்பது வவ்வாலின் வளையல்ல,தொங்குவதற்கு.அது இந்தியச் சிறு தேசிய-ஈழத்து மற்றும் தென்கிழக்காசியச் சிறுதேசங்களின் சிறைக்கூடமே.


எம்மையும்,எமது குருதியையும் வீணாக்கும் இந்தியாவை"வன்கொடுமை நாடு"என்று பல்லாயிரம் மையில் தொலைவுக்குப் பீறிட்டுக் கத்துவேன்!


வவ்வாலுக்கு ஒரு வளை தேவையாகலாம்.


எமக்கோ ஒரு குடில் அவசியமாகும்.


அதை நாம் இந்தியாவிலருந்து பிரித்திட முனையவில்லை.மாறாக நமது முற்றத்திலேயே முனைகிறாம்.


தள்ளி நில்-தடுக்காதே!அந்தவுரிமை உனக்கில்லை வவ்-வால்!


ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

சர்வதேச சமூகம் எண்டால்..

Nambi said...

So sad...

I was told that Prabhakaran said that if there is another war, it will not be Tamils want liberation from Sinhaleese govt it would be other way round.

Is it possible? If so, then go for it. I want to see fully recognised Thamizh Ezham.

-Nambi

செல்வமணி said...

வவ்வாள்..ஏற்க்கனவே சிலர் ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டு தமிழரையும் பிரித்து விடுவது என்று முடிவில் உள்ளார்கள்.இதில் நீர் வேறு எரியும் தீயில் எண்ணை ஊற்றுகிறீர்.

tamilnathy said...

வணக்கம் கொழுவி,

எனது வலைப்பக்கம் வந்து கருத்துத் தெரிவித்திருந்தீர்கள். உங்கள் வலைப்பதிவு பார்க்கக் கிடைத்தது. ஓரளவிற்கு எனக்கு இயைபான விடயங்கள் என்பதால் மிகவும் பிடித்தது. கூடுதல் தரவுகள் அறியமுடிந்தது. தொடர்ந்து எழுதுங்கள். எங்கு வாழ்ந்தாலும் வாழ்வு குறித்த கேள்விகள் எழும்போது இப்படி சிலதைப் பற்றிக்கொண்டிருப்பதுதானே வாழ்வின் அர்த்தமாக இருக்கிறது.

தமிழ்நதி