Friday, June 09, 2006

விரும்பாதவர்கள் வாசிக்க வேண்டாம்

என்ன செய்ய இப்போதெல்லாம் ஈழத்து செய்திகளை விரும்பாதவர்கள் வாசிக்க வேண்டாம் என்றும் செய்திப் படங்களை விரும்பாதவர்கள் பார்க்க வேண்டாம் என்ற குறிப்புடனும் தான் போட வேண்டியிருப்பது எங்களின் விதிஎன்றானது.

Photobucket - Video and Image Hosting

ஒஸ்லோவில் அரசும் புலிகளும் சந்திக்கிறதுக்குப் பிடுங்குப்பட்டு கொண்டிருக்கையில் வீடு புகுந்த பேய்கள் கொலை செய்து வெறிதீர்த்து தூக்கில் தொங்க விட்டுப் போயிருக்கிறார்கள்.

தமிழ்நெற்றின் செய்திகளின் படி மிகத்தெளிவாக நிதானமாக திட்டமிட்டு ஆணுறைகளுடன் அந்தப் பேய்கள் வந்து வெறி தீர்த்து சென்றிருக்கின்றன.

இது இன்னும் இன்னும் தொடரும்! மீண்டும் மீண்டும் தொடரும்!

ஆனாலும் இலங்கையில் அமைதியை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கை அரசினை இந்தியா மெச்சும்.

பயங்கர வாதத்தை ஒழிக்க அமெரிக்கா இலங்கை அரசிற்க துணை நிற்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசின் இதய சுத்தியுடனான அமைதிப் பேச்சுக்களுக்கான அதரவுக்கு நன்றி தெரிவிக்கும்..

ஆனாலும் அல்லைப்பிட்டியிலும் மன்னார் வங்காலையிலும் இன்னும் இன்னும் தமிழர் தேசமெங்கும் நாய்கள் வீடு புகும்!

பேய்கள் பிணந்தின்னும்!

ஆனாலும் அமைதிப்பேச்சுக்களுக்கு இலங்கை அரசு எப்போதும் தயாராக இருக்கும்.

பிறகும்

நாளைய விடியலில் நாமும் தூக்கில் தொங்குவோம் என குழந்தைகள் முன்னிரவில் பாடம் படிப்பார்கள்.

அப்போதும் அரசு பேச்சுக்களுக்கு வரும்படி புலிகளிடம் கேட்கும். அரசோடு சேர்ந்து அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் இந்தியா எல்லொரும் கேட்பார்கள்.

தயவு செய்து தமிழர்களை கொல்ல வேண்டாம் என்பதைக் கூட பேச்சு மேடையில் வந்து கேளுங்கள் என்கிறார்கள்.எங்கள் மக்களை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சத்தான் ஒரே மேடையில் பேச்சா?

இனியென்ன?

செத்துப்போன பிள்ளைகளின் புகைப்படம் ஏந்தி அடுத்த உரிமைக்குரல் நடக்கும். அதற்கடுத்த உரிமைக்குரலில் ஏந்துவதற்கு இன்னொரு பிள்ளை செத்துப் போக தயாராகும்.

போதும் எல்லாம்!

மக்களின் சாவு உலகக் கண்களில் மாற்றத்தை கொண்டு வரப்போவதில்லை.

பேய்களும் நாய்களும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணும் போது மட்டுமே மக்கள் உயிர்களை மறந்து போவார்கள்.

23 comments:

Sri Rangan said...

கொழுவி,

சிங்கள அரசுக்கு-தமிழ்க் கைக்கூலிகளுக்கு இருக்கும் அரசியலால் அது தமிழ் மக்களை இப்படிக் கொல்கிறது!அது சிங்கள ஆதிக்கப் பயங்கரவாத அரசு!

இதே போன்று புலிகளுக்கிருக்கும் அரசியிலும் தமிழர்களைக் கொல்கிறது!

இரண்டு அரசியலாலும் சாவதென்னவோ தமழ் பேசும் மக்கள்தாம்!

இந்த எல்லா அரசியலையும் மக்கள் நலனை முன்வைத்து விமர்சித்து,இதற்கெதிராகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை!.

கொழுவி said...

//அகதியாய் வந்திருக்கலாம்
அந்த சகோதரி//

சத்யம் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்து பின்னர் 2002 களில் இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட சொந்த மண்ணில் வாழுவோம் என தாயகம் திரும்பியவர்கள் இவர்கள்.

Anonymous said...

என்னத்தை சொல்வது :( நாளாந்தம் இணையச்செய்திகளில் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைகிறதாக இல்லை.

பொறுத்தது போதும் பொங்கியெழு தமிழா என்ற குரல்கள்... அமைதிக்காக்காக்க போய் இன்று கொல்லப்படும் மக்களை கணக்கெடுக்க வேண்டிய நிலை

சிறில் அலெக்ஸ் said...

படம் பார்க்கவே பதை பதைக்கிறது...
இந்தக் குழந்தைகளுக்கு என்ன அரசியல் தெரியும்?

காத்து said...

எதோ ஒரு முடிவை நாங்கள் தெளிவாக எடுக்க வேண்டிய நிலையில் இருந்தாலும் ஜனநாயகம் எண்று குரல் கொடுக்கும் சிலர்... இன்னும் இந்த கொலைகளுக்கான காரணங்களை புலிகளும் பாசிசமும் எண்று மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடும்வரை யாருமே தெளிவாக சிந்திக்க போவது கிடையாது...

இந்த பிஞ்சுகளுக்காக கனக்கும் இதயம் நாளை கொல்லம்படப்போகும் பிஞ்சுகளுக்காக பதறுகிறது... சிறுவர் உரிமை எண்று வாய் கிளிக்கும் இராணுவ அடிவருடிகள் இந்த கொளைகளுக்கான காரணமாக புலிகளை சொல்வார்கள்... இந்த பிஞ்சில் ஒண்று பயந்து பாதுகாப்புக்காய் அடைக்கலம் கேட்டு செஞ்சோலை போனால் அது இளைம் புலியாக வர்ணிக்கப்படும்...

கொலைக்கான காரணம் வேறு எவையும் இல்லை எங்களுள் இருக்கும் புல்லுருவிகள்தான்... புலிகளை காட்டிக்கொடுத்து போய் இப்போ பெண்களை கூட்டி கொடுக்க புறப்பட்டவரகளாய் இருப்பதுதான்... காரணங்களை வெளியில் தேடாதீர்கள்...!

Sivabalan said...

மிக வருத்தமகா உள்ளது.

மனம் மிகவும் வேதனைப்படுகிறது..

Anonymous said...

என்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தியா என்றைக்குமே அதன் சுய நலத்தின் காரணமாக இலங்கைப் பிரச்சனையைக் கையாண்டு வந்தது என்பதே சரி.

ஆனால் ஈழத் தமிழர்களின் மேல் மனிதாபனம் இந்தியத் தமிழர்களிடம் இந்திய அரசாங்திடமிருந்தும் குறைந்து வருவது மிகவும் வருத்தம் தரக்கூடிய விசயம்.

யாராவது வலைத் தளத்தில் இலங்கை தமிழர்களின் மனித உரிமைய மீறல் பற்றி U.N. மனித உரிமை கமிஷனிடம் Petition சமர்ப்பிக்க வழிவகை செய்யலாமே

Santhosh said...

என்ன சொல்வதேன்றே தெரியவில்லை. மனித மிருகங்கள் எங்கும் நிறைந்து இருக்கின்றன இதற்கு ஒரு விடிவு வராதா மக்கள் என்றைக்கு சுதந்திரமாக தூங்குவார்கள்.

Anonymous said...

PLEASE ALL BLOGERS

CRY FOR US

TALK FOR US

ALL OF THEM WRITE FOR US ATLEAST THIS BLOG

" EELATHAMILAR ELAPATHUKUU ONDUMM ILLAI EMATHUU SAVA PEITTEKALAI THAVIRA"

Anonymous said...

விரும்பாதவர்கள் மட்டுமில்லை. ஜனநாயக வாதிகள், மாற்றுக்கருத்தாளர்கள், இன்னும் இன்னும் எல்லாரும் வாசிக்க வேண்டாம்

துளசி கோபால் said...

அடப்பாவிகளா....
இப்படியாப் பிஞ்சுகளை அழிச்சுப்போட்டீங்க.

நீங்க ஒருநாளும் நல்ல கதிக்குப் போக மாட்டீங்க.

Anonymous said...

மக்கள் பாதுகாப்பினை முன்வைத்துப் போராட்டம் நடத்தும் புலிகளுக்கு இதனை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்று தெரியும்.

மாறாக இதனையும் இனி இது போல நடக்க இருக்கும் கொடுமைகளையும் வைத்து உலக அரங்கில் அனுதாபம் தேடுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா என அவர்கள் முயல்வார்களாயின் மக்களின் சாவும் புலிகள் மீதான மக்களின் அவநம்பிக்கையுமே எஞ்சும்.

இப்போது ஊர்வலங்களும் போராட்டங்களும் யாரை நோக்கியும் வேண்டாம். புலிகளை முன்வைத்தே செய்வோம்.

உலக நாடுகளை விடுங்கள்.

புலிகளே.. புலிகளின் தலைவரே.. மக்களை கொடும் அரக்கர்களிடம் இருந்து பாதுகாக்க என்ன செய்ய போகிறீர்கள்..

இன்னொரு முறையும் பொறுமையின் விளிம்பில் நிக்கிறோம் என்ற சொல்வீர்களாயின் சின்னக்குழந்தைக்கும் சிரிப்பு வரும்

Anonymous said...

சண்டையை தொடங்க சொல்லுறீங்களா? பிறகு அதையும் புலிகள் தலையில்தான் போடுவீர்கள்.

Anonymous said...

:(

Anonymous said...

/*செத்துப்போன பிள்ளைகளின் புகைப்படம் ஏந்தி அடுத்த உரிமைக்குரல் நடக்கும். அதற்கடுத்த உரிமைக்குரலில் ஏந்துவதற்கு இன்னொரு பிள்ளை செத்துப் போக தயாராகும்.*/

சரியாகச் சொன்னீர்கள் கொழுவி

/*சண்டையை தொடங்க சொல்லுறீங்களா? பிறகு அதையும் புலிகள் தலையில்தான் போடுவீர்கள்.*/

ஆயுதம் தூக்கித்தான் மக்களை காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறவர்கள் மூளையை உபயோகிக்கத்தெரியாதவர்கள்.

Anonymous said...

அப்புறம் எதுக்கப்பு ஆயுதப்போராட்டத்தை தொடங்கினீர்கள், காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தவர்களையும், யாழ்பாணத்தில் தமிழராட்சி மாநாட்டை நடத்திய தமிழரையும், துரத்தி துரத்தி அடித்தபோதும் ஓடி ஓடி அடுத்த ஊர்வலங்களை நடத்தி இருக்கலாம்தானே, பிறகு எதற்கு வட்டுக்கோட்டை தீர்மாணங்கள்.

இதற்கு ஒரு மருந்து இருக்கிறது.

முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்,
எப்படி மீண்டும் ஒரு யூலைக்கலவரம் உருவாகாமல் இருக்கிறதோ, மீண்டும் அநுராதபுர சந்தியில் வைத்து புகையிரதத்தில் பயணித்த தமிழ்பயணிகள் படுகொலை செய்யப்படாமல் இருக்கிறார்களோ, மீண்டும் எல்லைகிராமங்களில் தமிழ்கிராமங்களில் மக்கள் படுகொலை செய்யப்படாமலும், இன அழிப்பும் செய்யப்படாமல் இருக்கிறார்களோ, மீண்டும் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பயனிகள் பேருந்து பயணிகளுடன் சேர்த்து எரிக்கப்படாமல் இருக்கிறார்களோ, அதே மருந்தை மீண்டும் பாவிக்கவேண்டும், இதை எமது முண்ணோர்கள் சொல்கிறார்கள் "முள்ளை முள்ளால் எடுத்தல்" என்று.

பொன்ஸ்~~Poorna said...

சின்னக் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?!!.. இத்தனை கொடூரம்!! இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறோம்!!! :(((. என்றைக்கு மாறப் போகிறது இதெல்லாம்!!

மணியன் said...

எனக்குப் பின்னூட்டம் போட வார்த்தைகளே இல்லை. சோகமும், ஆத்திரமும், கையாலாகாத தன்னிரங்கலும் ஒருசேர வாட்டி வதைக்கின்றன.

பரஞ்சோதி said...

இறைவா!

இப்பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.

இக்கொடிய செயலை செய்த பாதகர்களை உலகம் மன்னிக்கவே மன்னிக்காது, இறைவனிடம் கட்டாயம் தண்டனை உண்டு.

இராம்/Raam said...

இறைவன் இருக்குறான் நமக்கும் இந்த கொடுஞ்செயல் மறுப்படியும் நடக்கக்கூடாது என வேண்டிக்கொள்ள...

Osai Chella said...

நெஞ்சு பொறுக்குதிலையே!நெஞ்சு பொறுக்குதிலையே!

இங்லகுள்ள சமாதானப் புறாக்களின் பாதுகாவலர்கள் தூக்கிலுட்டுக் கொள்வார்களா என்ன! முட்டாள் தமிழினமே, புத்தன் பேரைச் சொல்லும் எத்தர்களை அழிக்க ஒவ்வொரு ஈழத்தமிழச்சியும் புலிக்குட்டியைத்தான் பெற்றெடுப்பாள்! இது விதி. காலங்கள் மாறும்... கடமைகள் மாறும்... அந்த நாளில் உங்கள் ஆன்மாக்கள் அமைதி பெறும்.

அன்புடன்
ஓசை செல்லா

மங்கை said...

வார்த்தைகளே வரவில்லை...

இரண்டு முறை செத்திருப்பாள் அந்த தாய்..

மனிதர்களாய் பிறந்து நாம் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை... குற்ற உணர்ச்சிதான் வருகிறது இதைப்பார்தால்

podakkudian said...

வார்த்தை இல்லை ஆறுதல் சொல்ல. இக் கொடுமையினை யாரிடம் முரையிடுவது உடனடியாக இந்த அவலத்தை நிறுத்த?