Tuesday, June 20, 2006

நான் எப்பிடியோ நீச்சலடிச்ச 'ஆறு'கள்

அந்தக்காலம் முதலே என்னை யாருமே கண்டு கொள்வதில்லை. அதனால் என்ன? சொல்லிச் செய்வர் மனிதர் சொல்லாாமல் செய்வர் பெரியர் எண்டதை மனசில வைச்சு -

எப்படியோ நான் நீச்சலடிச்ச ஆறுகள்

1- வழுக்கியாறு - யாழ்ப்பாணம்

2- பறங்கியாறு - மணலாறு

3- பேராறு - முத்தையன் கட்டு

4- பாலியாறு - வன்னி

5- பாலாறு - மன்னார்

இவ்வளவும் தான் எப்பிடியோ நான் நீச்சலடிச்ச ஆறுகள். என்ன 5 ஆறுதான் கிடக்கு ஆறாவது ஆறு எங்கையெண்டு கேக்கிற ஆக்களுக்கு -

வடிவா பாருங்கோ -

பறங்கியாறு - மணலாறு எண்டு இரண்டு ஆறு வருகுது -

இனி நான் அழைக்கும் ஆறு நபர்கள்

சிறீரங்கன்

ஜனநாயகம்

கருணாநந்தன்

வசந்தன்

சோ.தமிழவன்

ஈழநாதன்

11 comments:

Sri Rangan said...

சிறீரங்கன்

ஜனநாயகம்

கருணாநந்தன்

=நாங்கள் மிக விரைவாக வருவோம் கொழுவி!எவ்விடத்துக்கு?
சுவிசுக்குத்தானே?
ய+லிக்குள் ஒரு தேதி சொல்லும் உம்மைச் சந்திக்க விரும்புகிறேன்!

இந்த மின்னஞ்சலுக்கு உமது விலாசத்தைப் போடவும்:srirangan@t-online.de

வசந்தன்(Vasanthan) said...

ஏற்கனவே மயூரனும் அழைத்திருக்கிறார். நீங்களும் அழைத்துவிட்டீர்கள். இப்போதே எழுதுகிறேன்.

ஈழநாதன்(Eelanathan) said...

நீர் சரியான பிரதேசவாதி கிழக்கில் ஒரு ஆறில் நீச்சலடிக்கவோ அல்லது நீச்சலடித்ததாகக் கதைவிடவோ மலையகத்தின் ஒரு ஆறில் மகிழ்ந்து குலாவியதாய்க் குறிப்பிடவோ கூட உமது பிரதேசவாதம் இடம் தரவில்லை.

கொழுவி said...

//ய+லிக்குள் ஒரு தேதி சொல்லும் //

ய+லிக்குள் ??

You mean July..?

//சுவிசுக்குத்தானே?//

யாரோ ஒருத்தரை மனசில வைச்சு நடக்குது. நடக்கட்டும் நடக்கட்டும்

//இந்த மின்னஞ்சலுக்கு உமது விலாசத்தைப் போடவும்//

இனி கொழுவியெண்ட பேருக்கு மினக்கெட்டு மின்னஞ்சல் முகவரி எடுக்க பஞ்சியாயிருக்கு. எதெண்டாலும் பின்னூட்டமா போடுங்க. வெளியிட வேண்டாம் என்றால் சிறு குறிப்புடன் -

கொழுவி said...

தம்பிமார்,
நான் நீச்சலடிச்ச ஆறுகள் எண்டுதான் தலைப்பே போட்டிருக்கிறன்.

இதுக்குள்ள நான் பார்க்காத ஆறுகளைப்பற்றி என்னத்தை எழுதிறது?
அது எங்களுக்குப் பழக்கமில்லாத விசயங்கள்.
நானும் மட்டக்களப்பான்தான் எண்டுபோட்டு சும்மா வண்டில் விட்டுக்கொண்டிருக்கலாம் தான். ஆனா பிறகொரு நேரம் உண்மை தெரியவந்து நாறிப்போகும். வலைப்பதிவையே தூக்கி ஒழிச்சு வைக்க வேண்டி வந்திடும். உது தேவையோ?

அதவிட உங்க கொஞ்சப்பேர் உப்பிடித்தான் தெரியாத விசங்களையும் தெரிஞ்சமாதிரிப் புலம்பிக்கொண்டு இருக்கிறது. அங்க இஞ்சயெண்டு கேள்விப்பட்ட வாயிலையே நுழையாத நாலைஞ்சு இயக்குநர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களின்ர பேரைப் பொறுக்கிவைச்சுக்கொண்டு பிறகொரு நேரம் அந்தப்பேருகளை சும்மா எடுத்துவிடுறது. இப்பகூட இப்பிடி நடக்கிற விளையாட்டுக்களில வாற பேருகள் உப்பிடித்தான்.
நான் செய்திகளில மட்டுமே கேள்விப்பட்ட கஞ்சிக்குடிச்சாறு தொடக்கம், தென்தமிழீழ ஆறுகளைச் சொல்ல வெளிக்கிட்டால் உந்தப் போலிப் பதிவாளர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?
கொழுவி சுத்த மனசுக்காரன் கண்டியளோ? எப்பவும் உண்மையே பேசுவான்.

கொழுவி said...

//நாங்கள் மிக விரைவாக வருவோம் கொழுவி!எவ்விடத்துக்கு?
சுவிசுக்குத்தானே?
ய+லிக்குள் ஒரு தேதி சொல்லும் உம்மைச் சந்திக்க விரும்புகிறேன்!

இந்த மின்னஞ்சலுக்கு உமது விலாசத்தைப் போடவும்:srirangan@t-online.de
//

கொஞ்சம் யோசித்தபிறகு (எல்லாரோடும் கலந்து ஆலோசித்த பிறகு என்று எழுதத்தான் ஆசை. ஆர் இருக்கினம் கலந்து ஆலோசிக்க..)
சந்திக்க றெடி!

ஆனால் பாருங்கோ - எங்கையோ இயந்திரத்தோடை போராடிற நீங்களும் குசினிக்குள்ளை வேகிற நானும் சந்திக்கிறதுக்கு கூட சுவிசுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.

ஒரு வேளை நானும் நீங்களும் குட்டி முதலாளிகளாக இருப்பமோ? மெயில் பண்ணுறன்..

ஈழநாதன்(Eelanathan) said...

//குட்டி முதலாளிகளாக//
ஓய் அதுக்கு சரியான Term குட்டி பூர்ஷ்வா.மூன்றாம்தரப்பு மத்தியஸ்தரா நானும் வரட்டோ -உங்கடை செலவிலை விமானச் சீட்டு அனுப்பவேணும்

Anonymous said...

//நாங்கள் மிக விரைவாக வருவோம் கொழுவி!எவ்விடத்துக்கு?
சுவிசுக்குத்தானே?
//

போன பிறகு சண்டை பிடிச்சு மூஞ்சையை நீட்டிக்கொண்டு திரும்பி வராமல் ஒழுங்கா பேசிட்டு வாங்க

Anonymous said...

:)

இளங்கோ-டிசே said...

/நானும் மட்டக்களப்பான்தான் எண்டுபோட்டு சும்மா வண்டில் விட்டுக்கொண்டிருக்கலாம் தான். ஆனா பிறகொரு நேரம் உண்மை தெரியவந்து நாறிப்போகும். வலைப்பதிவையே தூக்கி ஒழிச்சு வைக்க வேண்டி வந்திடும். உது தேவையோ?/
நீர் பார்த்த ஆறு எண்டு தலைப்பைப் போட்டுவிட்டு ஏதோவேதோயெல்லாம் பூடகமாய்க் கதைக்கிறீர் போல. நடத்துமய்யா நடத்தும் :-).

கொழுவி said...

அப்பிடியொண்டுமில்லை டிசே தமிழன். நீங்கள் வேறை.. ஈழநாதனும் தமிழவனும் ஏன் கஞ்சிக்குடிச்சாறை எழுதேல்லை. ஏன் மகாவலி ஆறை எழுதேல்லையெண்டு கேட்கினம். (எனக்கு ஈகோ இல்லாதபடியாலை அதுகளை அனுமதித்திருக்கிறன்)

பேசாமல் பதிவை அழிச்சிட்டு மன்னிப்புக் கேட்டு இன்னொரு பதிவெழுதலாமோ எண்டு யோசிக்கிறன். ஆனா என்ரை மனச்சாட்சி சொல்லுது இப்ப எழுதினது பிம்பம்.. இனி எழுதுறது பிம்பத்தின் பிம்பம் எண்டு.. என்ன செய்ய..?

எதுக்கும் சிறிரங்கன் அண்ணையோடை பேச்சுவார்த்தையை முடிப்பம்.