வார்த்தைகளாகி வருகின்றன
வயிற்றெரிச்சல்கள்!
சிறீரங்கன் ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். இங்கு கிளிக்குக.
கொல்லப்பட்ட வங்காலைப் பிள்ளைகளின் மேல் அரசியல் நடத்தப்படுவதாய் அவர் சொல்கின்ற எங்களின் உணர்வுகள், எங்களின் கோபங்கள், வலைபதிந்த தமிழக உறவுகளின் ஆறுதல்களின் மேல் தனது அரசியலை நடத்தப் புறப்படுகின்றார்.
வருக! வருக!
உங்கள் வயிற்றெரிச்சல்களை வார்த்தைகளாக்கித் தருக!
பிணங்களின் மேல் நின்று தான் அழுகின்றோம் .
என்ன செய்ய?
செத்துப் போன அந்தச் சிறுவன் என்னைத் தேடும் ஆமி என்று எந்த இடத்திலும் எழுதி வைக்க வில்லையே!
தூக்கில் தொங்கிய அந்தச் சகோதரன் என்னைத் தமிழனை வாழ வேண்டாம் என மனைவியும் குழந்தைகளும் கதறுவதாய் எந்த இடத்திலும் எமக்குச் சொல்லவில்லையே..
இது என் கடைசி வார்த்தையென அந்தச் சகோதரி ஒரு சொல்த் தானும் சொல்லவில்லையே!
அவ்வாறெனின் ஆறுதல் சொல்லியிருப்போம்.
அவ்வாறெனில் பாதுகாப்பாய் இருக்க சொல்லிருப்போம்
அவ்வாறெனில் வாழும் உரிமை பற்றி சொல்லியிருப்போம்.
அவ்வாறெனில் சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லியிருப்போம்.
அவ்வாறெனில் இது தான் சாட்டு என்று ஆமிக்கும் அரசாங்கத்துக்கும் ஜனநாயகம் சொல்லித்தந்திருப்போம்.
அவ்வாறெனில் அவர்களின் வாழ்வுரிமைக்காக எங்களின் எழுத்தை நிறுத்தியிருப்போம்.
என்ன செய்ய?
அவர்கள் அப்பாவிகள்.
தங்களை வைத்து அரசியல் பண்ணத் தெரியாதவர்கள்.
இணையமொன்றில் வந்த செய்தியை வைத்து நீங்கள் அரசியல் செய்த போது அது அருவருக்கத்தக்கதாக தெரியவில்லையா?
(அந்தச் செய்தி தவிர்ந்து வேறெவரும் உங்கள் சகலனையோ உங்களையோ மிரட்டவில்லையென்பது உங்களுக்கு தெரிந்தது போலவே இன்னும் சிலருக்கும் தெரியும் . இணையத்தில் செய்தி வந்த பின்னர் மிரட்டல் நாடகத்தினை பொய்யாக அரங்கேற்றி பின்னர் அனுதாபம் தேடி, அதன் பின்னதாக எட்டப்பர் இணையச் செய்தியை பின்னூட்டங்களாக பலருக்கு இட்டு அவர்கள் அவையை மட்டுநிறுத்தி வெளியிடாத சமயம், உங்கள் வலையில் நீங்களாகவே அந்த எட்டப்பர் செய்தியை அநாமதேயமாக வெளியிட்டு அநாமதேயத்திற்கு நன்றி சொல்லி.. ஆஹா அடடா ..இது பற்றி ஆறுதலாக எழுத வேணும் )
உங்கள் உயிர் மீது ஏறி நின்று அழுதது எதற்காக?
புலிகளின் படுகொலைகளின் மீது ஏறி நின்று அழுவது எதற்காக?
உங்களுக்கான அனுதாபம் தமிழ்நாட்டிலிருந்து வரும் போது அதில் எங்கே போயிற்று திராவிட அரசியலின் திரு நோக்கு?
உங்கள் மீது அக்கறையுடன் ஆதரவு தந்த போது என் உயிர் மீது ஏறி நின்று எழுத்துரிமைக்கும் , ஜனநாயகத்திற்கும் இரங்கற்பா பாட வேண்டாம் என்று கவிதை பாடத் தோன்றவில்லையே உங்களுக்கு?
பற்றியெரியும் உங்கள் வயிற்றெரிச்சலின் பின்னுள்ள நோக்கு என்ன?
சிறு சிறு திரி மூட்டி நீவிர் வளர்த்த பேதங்கள் உடைவது கண்டா?
மக்கள் மீதான அனுதாபமும் அக்கறையும் Automatic ஆக புலிகள் பால் செல்லுதல் உணர்ந்தா?
இந்த ஒரு விடயத்தில் புலிகள் பெரும் பேசுபொருளாகினர் என்ற விரக்தியா?
அல்லது
உங்கள் மீது விடுக்கப்பட்ட இணைய அச்சுறுத்தலின் (கவனிக்க இணைய அச்சுறுத்தல் மாறாக சகலையூடானதல்ல) போது உங்களுக்கு வந்த அனுதாபப் பின்னூட்டஙகளை விட அதிகளவான தனிப்பதிவகளும் கூடிய கவனமும் இந்த விடயத்திற்கு வந்ததையிட்ட எரிச்சலா?
அப்படியாயின் அப்படிப்பட்ட ஒரு மனிதரா நீங்கள்
21 comments:
பல சந்தர்ப்பங்களில் மிக வக்கிர புத்தியுள்லவராகவே சிறிரங்கன் வெளிப்பட்டுள்ளார். என்னதான் சன நாய் அகம், பொதூடமை, மாத்து கறுத்து மாணிக்கமாக சொல்லிகொண்ட்டாலும், பானையில் இருப்பது தான் அகப்பையில் வரும்
இப்படியான கேவலாமா பிழைப்பை நாடத்தி தன்னை ஒரு பிரபலாமான மனிதனாக காட்ட முனையும் இவரை கூழௌ குத்தாடி என சொல்வது தகும்.
கொழுவி,
நீங்கள் குறிப்பிடும் நபர் ஒரு வடிகட்டின முட்டாள் என்பது பலருக்குத் தெரியும். உலக போராட்ட வரலாறுகளையோ அல்லது யதார்த்தத்தையோ அறியாத முட்டாளின் கருத்துக்கெல்லாம் நீங்கள் தனிப்பதிவு போட்டு ஏன் உங்களின் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?
"Wise men talk because they have something to say; fools talk, because they have to say something."
- Plato
"அறிவுள்ளவர்கள் ஏதாவது சொல்ல இருக்கும் போது தான் கதைப்பார்கள், ஆனால் முட்டாள்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக கதைப்பார்கள்"
சொல்ல வரும் விடயத்தை அலசி ஆராயாது, சும்மா ஏதாவது சொல்லும் முட்டாள் தான் நீங்கள் குறிப்பிடும் நபர்.
"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி"
-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆள் வளர்ந்தும் , ஒரு குழந்தைக்கு இருக்கும் அறிவுவளர்ச்சி கூட இல்லாதவர் தான் நீங்கள் குறிப்பிடும் அந்த உலக மகா முட்டாள் என்பது அவரது பதிவுகளில் இருந்தே புரியும்.
நன்றி.
அன்புடன்,
வெற்றி.
சிறி ரங்கன் அண்ணை, உங்க கவிதையைப்பார்த்து சிரியா சிரிச்சுப்புட்டோம்ணே, உங்களுக்கு மிரட்டலும் கவிதையும் இப்பிடி பக்கத்து பக்கத்துலயா வ்ரோணும்?
ஆளும் வளரனும் அறிவும் வளரணும் அதுதாண்டோய் வளர்ச்சி
he needs sympathy. he is a cheapst
man. forget him.
என்னத்தை சொல்ல....
காஞ்சு கிடக்குற நிலத்திலை தண்ணி வாத்தமாதிரி ஒருகவிதை போட்டு இருக்கிறார் ஸ்ரீரங்கன்.. அதில அவரின் கோர முகம் தெரியிறதை தவிர்க்க முடியாமல் தவித்து இருக்கிறார்...
போலிக்கூத்து ஆட எண்டு வெளிக்கிட்டுட்டார்... தூக்கின காவடிய இறக்காமல் ஆடுறார் பாருங்கோ அதுக்காகவாவது அவரை பாராட்ட வேணும்...
தனக்குக் கிடைத்ததைவிட அதிக அனுதாபம் இதில்கொலை செய்யப்பட்டவர்களுக்குக் கிடைத்ததுதான் பிரச்சினை.
தனக்காகப் பதிவு போடாதவர்கள், பின்னூட்டமிடாதவர்களெல்லாம் இதற்காகப் பதிவுகளும் பினனூட்டங்களும் இட்டதுதான் பிரச்சினை.
இது எந்தச் சாதாரண மனிதனுக்கும் வரக்கூடிய உணர்வுதான்.
அதை இவ்வளவுக்குப் பெரிதுபடுத்த வேண்டுமா?
ஆனால் அவர் இந்தக் கவிதையை அவரது மற்றப் பெயர்களான வைத்தியக்கலாநிதி கருணாநந்தன் அல்லது ஜனநாயகம் பெயர்களில் எழுதியிருந்தால் இப்படிப் பிரச்சினை வந்திருக்காது. சிறிரங்கனின் பெயரிலேயே எழுதியது அவரது நிதானமின்மையைக் காட்டுகிறது. வந்த வயிற்றெரிச்சலில் அவசரப்பட்டுவிட்டாரென்றே நினைக்கிறேன்.
mm.. true will come out
அவரது பக்கச்சார்புக்கு இது ஒரு சான்று
//ஆனால் அவர் இந்தக் கவிதையை அவரது மற்றப் பெயர்களான வைத்தியக்கலாநிதி கருணாநந்தன் அல்லது ஜனநாயகம் பெயர்களில் எழுதியிருந்தால் இப்படிப் பிரச்சினை வந்திருக்காது//
எனக்கும் இந்த சந்தேகம் முதலேயிருந்து இருந்தது. ஓ.. இவர்தானா அவர்
எட.. யாழ்ப்பாணத்துக்கு வன்னியூடாக மருத்துவ குழுவாகச் சென்ற கருணாநந்தன் .a.b.c.d.e.f.g.h. m b b s இவர் தானோ? ஜனநாயகம் தான் இவரெண்டுடு எனக்கு தெரியும்.. கருணாந்தனும் இவர் எண்டுறது எனக்குப் புதுசு.
எத்தனை பேர எத்தனை நாளுக்கு பேக்காட்டி இருக்கான், ஆனால் பாவம் இவருக்காக பதிவு போட்ட நண்பர்கள், வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் நண்பர்கள் அவர்கள், அவரது டாக்டர் பட்டம்தான் எனக்கு விழங்க இல்ல உண்மையிலேயே இப்படி ஒரு டாக்டர் உலகில் இருக்காரா?
ஏனப்பு உந்த துள்ளு துள்ளின சிறி அரங்கன் தன்னை கொல்ல தேடின எண்டு ஒப்பாரி வச்சவர்... செருமனி புலி பொறுபாளர் எண்டு ஒரு பயரையும் சொன்னாவர்....
சேருமனு பொலிசிலை போய் ஒரு என்ரிய போட்டுருக்கலாமே
இணையத்திலை அரைச்ச மாவை அரைக்கிறது போல ஒரு பத்து பதினைஞ்சு சொல்லை அனுகையும் இங்கையுமா திருப்பி திருப்பி போட்டு புசத்துற நேரம் அத செய்திருக்கலாம்.
அத விட்டிட்டு வலைப்பதிவிலை சவால் விட்டு பெரிய தமிழ் பட ஹீரோ (Zero) மாதிரி நடிச்சு பெரும் நாடகமே அடிட்டார்.
கருத்தை திரிக்கிறதிலை ஆள் விண்ணன் கண்டியளோ.
மணிகண்டனின் பதிவிலை கன கொலையளை பற்றி எல்லாம் பிலம்பு வச்சிருந்தார் ஏன் த்னோட பதிவிலையும் தான் எழுது தள்லுறார். என்ன பகிடி எண்டா 80 களிலை செருமனிக்கு ஓடி வந்திட்டு இங்கை இருந்து கொண்டு கணக்கு வழக்குகள் காட்டி படிப்பிக்கிறார்.
ஈழநாதன் எப்ப வந்தனியள் இலகைய விட்டு எண்டு கேட்டதுக்கு மூச்ச காணம்.
உந்தக் கேள்விக்கெல்லாம் சிறிரங்கத்தார் பதில் சொல்ல மாட்டார். ஆனால் அவரின்ர இணையத்தில எழுதின கேள்விக்கெல்லாம் ஜேர்மன் பொறுப்பாளர் பதில் சொல்ல வேணும் எண்டு எதிர் பார்ப்பார்.
கொழுவி,
தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. சூரியனைப் பார்த்து குரைக்கும் நாயை கண்டுகொள்ளாததுதான் நமக்கும் நல்லது. நாய்க்கும் நல்லது.
பரபரப்பு தேடும் மனிதர்கள் எங்கும் இருக்கத்தான் செய்வர்.
நான் அவருக்கு எதிராக பதிவு போட்டது கூட தேவையற்ற செயல் எனத் தோன்றியது. நாமாகவே ஏன் ஒரு பைசாவுக்கு பிரையோஜனப் படாத மனித ஜடங்களை(பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது) குறித்தெல்லாம் எழுதி அவர்களின் மீது சிறு ஒளியைப் பாய்ச்ச வேண்டும்?
//அந்தச் செய்தி தவிர்ந்து வேறெவரும் உங்கள் சகலனையோ உங்களையோ மிரட்டவில்லையென்பது உங்களுக்கு தெரிந்தது போலவே இன்னும் சிலருக்கும் தெரியும் . இணையத்தில் செய்தி வந்த பின்னர் மிரட்டல் நாடகத்தினை பொய்யாக அரங்கேற்றி பின்னர் அனுதாபம் தேடி, அதன் பின்னதாக எட்டப்பர் இணையச் செய்தியை பின்னூட்டங்களாக பலருக்கு இட்டு அவர்கள் அவையை மட்டுநிறுத்தி வெளியிடாத சமயம், உங்கள் வலையில் நீங்களாகவே அந்த எட்டப்பர் செய்தியை அநாமதேயமாக வெளியிட்டு அநாமதேயத்திற்கு நன்றி சொல்லி.. ஆஹா அடடா ..இது பற்றி ஆறுதலாக எழுத வேணும்//
கொழுவி இதுபற்றி நீங்கள் விரிவாக எழுத வேண்டும். விரைவில் எழுதுங்கள்.
//கொழுவி இதுபற்றி நீங்கள் விரிவாக எழுத வேண்டும். விரைவில் எழுதுங்கள்//
Yes
////கொழுவி இதுபற்றி நீங்கள் விரிவாக எழுத வேண்டும். விரைவில் எழுதுங்கள்//
Yes//
yes eNdu sonnaa maddum kaaNathappu seyyavum veeNum
//உங்கள் உயிர் மீது ஏறி நின்று அழுதது எதற்காக?
புலிகளின் படுகொலைகளின் மீது ஏறி நின்று அழுவது எதற்காக?
உங்களுக்கான அனுதாபம் தமிழ்நாட்டிலிருந்து வரும் போது அதில் எங்கே போயிற்று திராவிட அரசியலின் திரு நோக்கு?
உங்கள் மீது அக்கறையுடன் ஆதரவு தந்த போது என் உயிர் மீது ஏறி நின்று எழுத்துரிமைக்கும் , ஜனநாயகத்திற்கும் இரங்கற்பா பாட வேண்டாம் என்று கவிதை பாடத் தோன்றவில்லையே உங்களுக்கு?
//
நியாயமான கேள்விகள்.
பதில்கள்..?
////அந்தச் செய்தி தவிர்ந்து வேறெவரும் உங்கள் சகலனையோ உங்களையோ மிரட்டவில்லையென்பது உங்களுக்கு தெரிந்தது போலவே இன்னும் சிலருக்கும் தெரியும் . இணையத்தில் செய்தி வந்த பின்னர் மிரட்டல் நாடகத்தினை பொய்யாக அரங்கேற்றி பின்னர் அனுதாபம் தேடி, அதன் பின்னதாக எட்டப்பர் இணையச் செய்தியை பின்னூட்டங்களாக பலருக்கு இட்டு அவர்கள் அவையை மட்டுநிறுத்தி வெளியிடாத சமயம், உங்கள் வலையில் நீங்களாகவே அந்த எட்டப்பர் செய்தியை அநாமதேயமாக வெளியிட்டு அநாமதேயத்திற்கு நன்றி சொல்லி.. ஆஹா அடடா ..இது பற்றி ஆறுதலாக எழுத வேணும்//
When will you write about it?
///இன்றைய இலங்கை எங்கே செல்கிறது?
இது நவீனப் பண்பாடுடைய மக்கள் வாழும் நாடுதாமா அல்லது காட்டுமிராண்டிக் கூட்டம் வாழும் கற்கால இலங்கையா?
அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொலைகாரர்களால் செயற்படுத்தப்படும் காட்டுமிராண்டிப் படுகொலைகளுக்கு நிகராகப் ..../
அப்படியானால் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் காட்டுமிராண்டிகள் வாழும் நாடா? லொஜிக் உதைக்கிறதே!
அவருக்கு வயிற்றெரிச்சலில், முன்னுக்குப் பின் முரணாகவும் எழுத ஆரம்பித்துவிட்டார். இவ்வாறான முரண்களை முன்பெல்லம் பத்தியின் நடுவில் வார்த்தை ஜாலங்களுக்கு நடுவில் புதைப்பார் ஆனால் இன்றோ முதல் பந்தியிலேயே காணமுடிகிறது.
எங்கையப்பா? சிறிரங்கனின் கதை எழுதுறனீர் எண்டு சொன்னீர்.. ? எப்ப எழுதுவீர்? இல்லாட்டி நீரும் படம் காட்டினீரோ?
Post a Comment