Sunday, July 02, 2006

நாங்க தான் செய்தம் ! ஆனா வருந்தக்கூட மாட்டோம்

இந்திய அமைதி காக்கும் ? படைகள் ஈழத்தில நடத்திய கொலைகள், கொள்ளைகள், அட்டுழியங்கள், ஈவிரக்கமற்ற ஈனச்செயல்கள், வன்புணர்வுகள் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளை கீழ் இணைப்புக்களில் காணலாம்.

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் பாகம் 1

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் பாகம் 2

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 1

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 2

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 3

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 4

--இன்னும் வரும் --

5 comments:

சதயம் said...

ஏற்கனவே முன்பு ஒரு முறை இதேமாதிரியான பதிவொன்றில் தங்களுடன் தர்க்கம் செய்ததாய் நினைவு.

வருத்தம் தெரிவிப்பதென்பது மனதார மனம் வருந்தி சொல்வதாய் இருக்கவேண்டுமென நிணைக்கிறேன். சமீபத்தில் யாரோ எதற்காகவோ வருத்தம் தெரிவித்த மாதிரியான போலியான, சந்தர்ப்பவாத வருத்தங்கள் தெரிவிக்கப் படவேண்டுமென நீங்கள் எதிர்பார்த்தால் இந்தியாவின் சார்பில் முதல் ஆளாய் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்.

நடந்த நிகழ்வுகளில் நம் இரு தரப்பினருக்குமே ஒப்புதல் இல்லை....இழப்பு இருவருக்குமே பெரியதும், ஈடு செய்யமுடியாததுமாகும்.அப்படியிருக்கும் பட்சத்தில் காலம்தான் இந்த காயங்களை ஆற்றவேண்டுமேயொழிய மீள் விமர்சனம் என்கிற பெயரில் கிளறிக் கொண்டிருப்பதால் ரணம் ஆறாமல் போகவே வாய்ப்புள்ளது.

ஈழபாரதி said...

சதயம் அண்ணா உது நாயம், வலைப்பதிவுகளை பார்த்தால் உந்த ஞாயம் கதக்கிறமாதிரி தெரியவில்லையே.

"இப்படியிருக்கும் பட்சத்தில் காலம்தான் இந்த காயங்களை ஆற்றவேண்டுமேயொழிய மீள் விமர்சனம் என்கிற பெயரில் கிளறிக் கொண்டிருப்பதால் ரணம் ஆறாமல் போகவே வாய்ப்புள்ளது."

இது எங்களுக்கும் பொருந்தும்தானே.

கானா பிரபா said...

இணைப்புக்களுக்கு நன்றிகள் கொழுவி,

இந்திய இராணுவத்தால் தனிப்பட்ட ரீதியில் என் குடும்பத்தில் நடந்த பயங்கரச் சம்பவம் பற்றிப் பின்னர் எழுத இருக்கிறேன்.

Sri Rangan said...

கொழுவி,

சும்மா"நாங்கதான் செய்தம்"என்று வீம்பு பேசாமல்,இக்கொலையை யாரினது ஒத்துழைப்புடன்-யாருக்கு அவசியமாகச் செய்யப்பட்டதெனப் பார்ப்பதும் அவசியம்.

நாம் புலிகளின் போராட்ட-யுத்த தந்திரோபாயத்தை-பொருளாதாரக் கொள்கைகளை,வர்க்கப் பிரதிநிதித்துவத்தை,பாசிப்படுகொலைகளைக் எதிர்ப்பதும்,அதற்கெதிராகப் கருத்து வைப்பதும் எல்லோரும் அறிந்தது.எனினும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்தையும்,எமது மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளையும் எதற்காகவும்-எவருக்காகவும் விட்டுக் கொடுப்பதற்குத் தயாரில்லை.ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டியென்பதைக்கூட ஒரு ஷோசலிசச் சமுதாயத்தில்தாம் "எந்த நேரமும் பிரிந்து போகக்கூடிய" சுயநிர்ணயச் சமஷ்ட்டியென்கிறோம்.


இதுதாம் எமது மக்களின் அரசியல் அபிலாசையின் நியாயமான கோரிக்கைக்குத் தீர்வாக இருக்கமுடியும்.


முதலாளிய அரசான இலங்கையில் மற்றெல்லாத் தீர்வுகளும் தமிழர்களுக்கு விலங்கே.

இங்கே புலிகள் அரசியலால் எமது மக்களின் சுயநிர்ணயப் போரை எவரும் கொச்சைத் தனமாக மறுக்கமுடியாது.


அங்ஙனம் மறுப்பவரோடு கருத்தாட உமது இந்தப் பதிவினூடாக தமிழகத்து அன்பர்களை அழைப்பு விடுகிறேன்.


இராஜீவ் கொலையை இந்திய மனதோடு பார்ப்பதைவிட பஞ்சாப் மனதோடு- இந்திரா அம்மையார் படுகெதலை செய்யப்பட்ட மனதோடு-சஞ்சீவைக் கொன்ற-காந்தியைக் கொன்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல் விய+கத்தின் மனதோடு ஆழ்ந்து ஆராயவேண்டும். இந்திய ஆளும் வர்க்கப் பிளவுகளும்,அவர்களின் நலன்களுமே இத்தகைய கொலைகளுக்குக் காரணமாக இருக்கிறது.


எமது மக்களைக் படுகேவலாமாகக் கொன்ற இந்திய இராணுவத்தின் முதல் பொறுப்பாளர் இராஜீவ்தான்.


எந்தவுலகத்திலும் இராணுவம் அரசியல்-நாட்டின் தலைவரின்,பாதுகாப்பு அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள்ளேதாம் காவடி எடுக்கிறது-கொலை,பாலியல் பயங்கர வதைகளைச் செய்கிறது.எனவே நாட்டின் தலைவன்தாம் முதலில் பொறுப்பாளியாகிறார்.


"அண்ணா,அண்ணா-மகனே என்னைக் காப்பாத்தடா"தம்பி ஓடியா,இவன்களிடமிருந்து என்னைக் காப்பாத்தட"எண்ட எங்கள் தங்கை,தாய்மார்கள்,அக்காமார்களை காப்பாத்த முடியாது, தவித்த தேச பக்தச் சிறார்கள்-தம்மால் இந்தியப் பாசிச இராணுவத்தை எதிர்கொள்ள முடியாதென்று தெரிந்தும் எதிர்த்துச் செத்தார்கள்.இது வரலாறு.இட்லிவடைபோன்ற எருமைகளுக்கு இது ஒருபோதும் உறைக்க முடியாது.


இராஜீவ் கொலைக்கு முதலில் வி.பீ.சிங்கிடம் ஒத்திகையைச் செய்விக்க ராவ் உடந்தையாக இருந்தது.பின்பு இராஜீவைக் கொல்வதற்கு உலகத்துக்கே தண்ணிகாட்டும் இந்திய உளவுப்படை ஒத்தாசை புரிந்தது.


இங்கே தமிழ்நாடே தேர்ந்தெடுக்கப்பட்டது.இதை ஒழுங்காகக் கவனிக்கவும்.


இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் இப்படியொரு சதியை ராவ் உளவுப்படை இங்ஙனம் செய்கிறது.


இந்தியாவின் ஆளும் வர்கத்தின் நலனும்-இந்தி இந்தியாவின் தேசிய ஒருமைப்(!!!???)பாடும் ஈழத்தின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கிறது.எங்கே ஈழம் மலர்ந்தால்,அது தமது அடக்கு முறைத் தேசிய ஒருமைப்பாட்டுக் ஆப்பு வைத்து-இந்தியத் தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் பிரிந்து போய்விடுமென்ற இந்தியத் தரகு முதலாளியம் பெரும் சதியை "பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மனதினூடாகச்" செய்து முடித்தது.இங்கே புலிகளின் அரசியல் புரட்சிகரமற்றதால் இதற்குச் சோடைபோனது.


ராவ் உளவுப்படையின் திட்டம் இப்படி அமைந்தது:


1:அதாவது தமிழ் நாட்டில் இராஜீவ் கொல்லப்படும் போது தமிழகத்து மக்களின் தொப்புள்கொடி உறவை அறுத்தெறிதல்,எப்போதும் ஒரு வரலாற்று வடுவை-குற்றுவுணர்வைத் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தித் தமிழகத்தை,அதன் விடுதலையைப் பின் தள்ளுவது.திரவிடக் கருத்தியலை வலுவிழக்க வைத்தல்-இந்திய தேசியத்தை மிக வலுவாக்கிக் கொள்ளும் வகையில் கருத்தியல் வலுவைத் தக்கவைத்தல்.


2:இந்திய ஆளும் வர்ககங்களுக்குள் ஒரு சாரரைக் காக்கும் காந்தி குடும்ப பரம்பரை அரசை உடைக்க முனையும் மற்றப் பிரிவு ஆளும் வர்க்க நலனை முன்னிறுத்துதல்-பி.ஜே.பி.அதிகாரத்துக்குவர வழிகளைத் திறத்தல்


3:ஈழமக்களின் சுய நிர்ணயப்போரை உலகுக்குப் பயங்கர வாதப் போராகக் காட்டல்.


4:தமிழகத்தில் பெருகிவரும் ஈழத் தமிழ் மக்கள் ஆதரவைப் ப+ண்டோடு அழித்தல்.


5:தமிழகத்து அரசியல் கட்சிகளின் ஈழ ஆதரவுத் தீர்மானங்களை-எதிர்ப்புப் போராட்டங்களைச் சட்டப+ர்வமாகத் தடை செய்து பயங்கரவாத முன்னெடுப்பாகக் காட்டுதல்.


6:புலிகளை இந்தியாவால் தடை செய்வதற்கும்,தமிழகத்து மக்களை எதிர்ப்பின்றி கிடப்பதற்கான அரசியில் நெருக்கடிக்குள் தள்ளுவதும் கூடவே மாறிவரும் இந்தியப் பிராந்திய அரசியல் விய+கத்தில் இலங்கையின் பிளவில் ஈழத்து அரசு இந்தியாவைச் சாரும்போது இலங்கை எதிர் நிலைக்குப் போகும்.அங்ஙனம் போவதும் ஒரு கோடி சிங்களச்சனங்களின் சந்தை இழப்பதும் இந்நிய ஆளும் வர்க்கத்துக்கு எதிரானது-அதைத் தடுப்பதற்கும்.


இப்படிப்பல நலன்கள் இருக்கிறது.இராஜீவ் கொலையின் அவசிமென்பது இந்திய உளவுப்படையின்-ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்கு அவசியமாக இருந்தது.இதை கோட்சேயின் மொழியில் சொன்னால்:" இராஜீவ் காந்தி இல்லாத அரசியில் ஆர் .எஸ்.எஸ்-பாரதிய ஜனதாவுக்கும் அவர்கள் பிரிநிதப்படுத்தும் ஆளும் வர்க்கத்துக்கும் நிச்சியமாகக் காரிய சித்தியுடையதாகவும்,எதிரடி கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்,பிரியப் போகும் இந்தியத் தேசிய இனங்களை மீளவும் கட்டிப்போட்டுப் புதிய தலைமையின் கீழ் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சிறைக் கூடமாக்க முடியும்."

இது கோதாரிபுடிச்சது நீண்டுபோகிறது.

இத்துடன் முடித்து விவாதம் தொடரும்போது தொடர்வோம்.

இராஜீவ் கொலையைச் செய்விதது இந்திய ஆளும் வர்க்க ஒரு பிரிவே!இதற்குப் பலியானது இராஜீவ் மட்டுமல்ல புலிகளும்தாம்-ஈழத்தமிழ் மக்களும்தாம்.

இங்கே இட்லி வடை எழுதுவது சூழ்ச்சி மிக்கது.

இவரினது அரசியல் காலா காலமாகத் தொடரும் "இந்து-இந்தி.இந்தியா"எனும் பார்ப்பனியக் கருத்தியல் மற்றும் இராணுவ மேலாண்மையின் வெளிப்பாடே.

இங்கே பார்ப்பனியமென்பது இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் மேல்மட்டக் கருத்தியல் பண்பாட்டு மேலாண்மையாகும்.இது சாதியை இழுப்பதல்ல.இந்தப் பார்ப்பனிய மேலாண்மை இந்தியத் தொங்கு சதை நாடுகளான இலங்கை,நேபாளம் முதல் தொடர்கதையே.

மீளவும் சொல்வோம்:இராஜீவைக் கொன்றது இந்திய ஆளும் வர்கத்தின் ஒரு பிரிவின் செல்வாக்குக்குட்பட்ட ராவ் உளவுப் படையே.இதற்கு அடியாளான நிலையே புலிகள்.

பாலசிங்கம் பகிரங்கமாக ஒத்துக்கொள்வது காரணத்தோடுதாம்.இதைப் புரிந்துகொண்ட இந்திய ஆளும் வர்க்கம்,உளவுப்படை தம்மைப் புலிகள் அம்பலப்படுத்தி விடுவார்களோவென அஞ்சுகிறார்கள்.

இங்கே புலிகளை இந்தியா அணைத்துக்கொள்வது காலப் போக்கில் நிகழ்வதற்குப் பாலசிங்கம் விளையாடும் அரசியில் சதுரங்கம் இது.

இதுதாம் புலிகளின் இறுதி ஆஸ்த்திரம்.நாகாஸ்திரத்தை ஒரே ஒருமுறைதாம் எய்யும்படி வேண்டுமென தாய்ப்பாசத்தை வைத்துச் சூதாடினான் கண்ணன்.இங்கே இந்திய ஆளும் வர்க்கம் இதையே உதாரணமாகப் பின் பற்றுமா அல்லது தூங்கிற மாதிரி நடிக்குமாவென்பது புலிகளின் கைகளில்தாம் இருக்கிறது.


இட்லி வடை,பேசாமல் இட்லி வடை விற்பது நன்று.

Anonymous said...

சிறிரங்கன், நல்ல பதில்