Wednesday, September 13, 2006

ஈழ - தமிழக உருவாக்கத்தில் - திரைப்படம்

கொஞ்சக் காலத்துக்கு முதலில புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் ஒரு படப் பிடிப்பை வன்னியில ஆரம்பிச்சு வைச்சார். அந்த நிகழ்வில தமிழக முன்னணி கலைஞர்களான மகேந்திரன் பாரதிராசா எல்லோரும் கலந்து கொண்டிருந்தவை. அது தமிழக இயக்குனர் ஒருவரை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஈழத்திரைப்படம் ஒன்றிற்கான படப்பிடிப்பு.

இதோ மிக்க தத்துருபமாக வெளிவந்து விட்டது அந்த திரைப்படம் ஆணிவேர். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் (சச்சின் பட இயக்குனர்) திரைப்படத்தை இயக்க நந்தா மற்றும் குடைக்குள் மழை கதாநாயகி (யாராச்சும் பெயர் சொல்லுங்க) ஆகியோருடன் இன்னும் பல தமிழக- ஈழ கதை மாந்தர்கள் படத்தில நடிச்சிருக்கிறார்கள்.

இந்த படம் பண்ணுவதாக கேள்விப்பட்டு நந்தா இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்து இப்படத்தில் தனக்கொரு வாய்ப்புக் கொடுக்குமாறு கேட்டதாக இயக்குனர் ஒரு செவ்வியில் சொல்லியிருந்தார்.

ஆணிவேர் வெளிநாடுகளில் இம்மாத இறுதியில் வெளிவருகிறது. தமிழகத்தில் தணிக்கை செய்யப்படுமா அல்லது தடை செய்யப்படுமா என தெரியவில்லை. ஆயினும் இது புலிகளின் கதை அல்ல மக்களின் கதை என்கிறார் இயக்குனர்.

இங்கே இப்படத்தின் இரண்டு முன்னோட்டங்களை இணைக்கிறென். வீடியோ வடிவிலேயே பார்க்கலாம். தினம் தினம் செத்துப் பிழைக்கின்ற ஈழ மக்களின் வாழ்வினை ஆணிவேர் சரியாக பதிவு செய்திருக்கிறது என நம்பலாம்.

ஒரு வேளை இந்த திரைப்படமும் இணையங்களில் வெளிவரலாம். அப்போது இணையங்களில் புதிய படங்களை புலிகள்தான் வெளியிடுகிறார்கள் என்ற கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் முகங்களில் கரியை பூசட்டும்.





27 comments:

Anonymous said...

எதிர்பார்த்திருந்த படம்.. வெளிவந்து விட்டதா

வெற்றி said...

கொழுவி,
ஆணிவேர் படத்தின் முன்னோட்டங்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

குலுக்கல் நடனங்கள் கதாநாயகன் 10 பேரை பந்தாடுவது... அப்புறம் இன்னும் மசாலாக்கள்.. இதெல்லாம் இந்த படத்துல இருக்கா.. இல்லைன்னா தமிழ்நாட்டில இந்த படத்தை வெளியிட்டு கையை சுட்டுக்காதீங்க..

Anonymous said...

அட சொல்லவேயில்லை?
எப்ப விடுதலை கிடைச்சது?

படத்துக்கு நன்றி.

Anonymous said...

I think I will be good

ப்ரியன் said...

/*நந்தா மற்றும் குடைக்குள் மழை*/

Mathumitha

யாரோ - ? said...

எனக்கென்னவோ முன்னோட்டமே கண்ணீர் வரவழைக்கிறது. பார்க்க முடியுமோ தெரியவில்லை மறக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம்...... அனுபவித்தவர்களுக்கு நிச்சயம் அவஸ்தைதான்....

இணைப்புக்கு நன்றி

Anonymous said...

கொழுவி!
நானும் நேற்றுத்தான் இக்காட்சிகளைப்பார்த்தேன். நிச்சயம் நல்ல திரைப்படமாக, தமிழீழத் திரைப்படமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை
இணைப்புக்கு நன்றி!

-நட்புடன்
மலைநாடான்

Anonymous said...

நரம்புகள் புடைக்கின்றன முன்னோட்டத்தைப் பார்க்கும் போதே!
ஈழத்தமிழர்கள் மட்டுமே அறிந்து ரண வலியை தமிழகத் தமிழர்களும் பார்க்கட்டும். தமிழக அரசு இதைத் தடைசெய்யக் கூடாது....

ஈழபாரதி said...

நல்லதொரு முயற்சி, மேலும் மேலும் தமிழீழதிரப்படதுறையும் வளரவேண்டும் என்பதே எமது அவா?நல்லதரமான படங்கள் வரவேண்டும், சினிமா என்னும் மாபெரும் சக்தியை எமது கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இலகுவில் மாக்களிடம் போய்சேரக்கூடிய மீடியா. பயன்படுத்துமுறையில் பயன்படுத்தினால் அதனால் உச்ச பயனை அடையலாம்.

கொழுவி said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.. இப்படம் பற்றிய சிறு குறிப்பொன்று..

உலகளாவிய சினிமா வெளியீடாகிறது இலங்கைத்தமிழ்க் காதல் கதை - ஆணிவேர்.

-04.08.2006 நியூடெல்லி, தமிழ்க் கனடியன்

வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி அன்று உலகளாவியரீதியில் வெளிவருகிறது இலங்கைக் காதலை மையப்படுத்திய இந்தியச்சினிமா. ஆனால் இது இந்தியாவில் தணிக்கைக்குழுவின் அனுமதி பெற்று அதே நாளில் வெளிவரும் என்பதை இதன் இயக்குநர் உறுதிப்படுத்தவில்லை.

‘ஆணிவேர்’ (Taproot) என்ற 90 நிமிடப்படம் இந்திய பெண் பத்திரிகையாளருக்கும் ஈழத்தமிழ் வைத்தியருக்கும் பிணைக்கப்பட்ட காதலை மையப்படுத்தியது. 1995 இல் யாழில் நுழைந்த இராணுவத்தின் கெடுபிடியால் வெளியேறிய தமிழ் மக்களின் வாழ்வினை தனக்கான ஒரு கோணத்தில் பதிவாக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

இதன் இயக்குநர் ஜோன் றோசான் (38) சென்னையில் பின்வருமாறு கூறினார், «இப்படம் முழுமையான காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. இது ஆவணப்படமல்ல. இதில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருக்கிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பகள் இலங்கைக் கிராமங்களிலேயே மேற்கொள்ளபட்டுள்ளன. மதுமிதாவும் நந்தாவும் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஐரோப்பாவில் வசிக்கும் தொலைக்காட்சி இணையத்தை நடாத்தும் இலங்கைத்தமிழரான பிரபாகரனின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இப்படத்தை இயக்கிய அனுபவம் சுவாரிசியமானது. எனக்கு ஆரம்பத்தில் இலங்கை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. இவர் வழங்கிய ஏராளமான நூல்களைப்(கதைகள் - கட்டுரைகள்) படித்தே அறிந்து கொண்டேன். இப்படத்தின் வெளியீட்டுக்கான பிரித்தானிய உரிமம் கிடைத்துவிட்டது. சுவிஸில் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. இப்படம் உலகமெங்கிலும் உள்ள இரசிகர்களை மையப்படுத்தியே தயாரிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இப்படம் பெறும்.»

இயக்குநர் ஜோன் 2005இல் வெளிவந்த -சச்சின்- படத்தை இயக்கியவர் என்பதும் தமிழர்களால் நன்கு அறியப்பட்ட உதிரிப்புக்கள் மகேந்திரன் அவர்களின் மகனுமாவார்.

Anonymous said...

//நல்லதொரு முயற்சி, மேலும் மேலும் தமிழீழதிரப்படதுறையும் வளரவேண்டும் என்பதே எமது அவா?நல்லதரமான படங்கள் வரவேண்டும், சினிமா என்னும் மாபெரும் சக்தியை எமது கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.//

இப்படி பேசி, பேசித்தான் எல்லொரயும் சாக அடிக்கிரிர்..அதுக்கு தமிழகத்திலிருந்தும் சிலர் எடுப்பெடுக்கிறார்கள்....

படம் தமிழகத்த பொறுத்தவரை ஒரு காதல் படமாகத்தான் இருக்கும்...இருக்க வேண்டும்.

Chandravathanaa said...

நன்றி.

Sri Rangan said...

கொழுவி,இது மற்றொரு சிறப்பான படம்-புத்தரின் பெயரால் போன்றதென்று கூறமுடியுமா?,நமது மக்களின் துயரம் பொதிந்த வாழ்வைப் படமாக்கும்போது இங்கு சிறப்பென்று கூறமுடியாத நிலை.எனினும் இப்படங்கள்போன்று பற்பல படங்கள் நமது வாழ்வைச் சொல்லவேண்டும்.தமிழகம் அதைச் செய்யவில்லை.இப்படத்தை நான் கட்டாயம் திரையில் பார்ப்பேன்.துண்டுகள் இணைத்துத் தந்தற்கு நன்றி.

யாழ்கோபி said...

நல்ல திரைப்படம் தமிழக மக்கள் பலருக்கு எமக்கு நடக்கும் அவலங்களை சரியான முறையில் கொண்டு செல்ல தமிழக ஊடகங்கள் (பிரதான) தவறி விட்டன அதை சரியான முறையில் ஈது நிவர்த்தி செய்யும் என நினைக்கிறேன் பதிவுக்கு நூறு முறை நன்றிகள்

யாழ்கோபி said...

ஈழபாரதி மாக்கள் என குறிப்பிட்டது எனக்கு மிக வருத்தத்தை அளிக்கிறது நல்ல பதிவுகள் இடும் நீங்களே இப்படி பொறுப்பில்லாமல் வசனத்தை வீசுவது விரும்பத்தக்கது அல்ல தமிழக மக்கள் இன்று பலர் பழையதை மறந்து எமக்காக தம்மால் இயன்றதை செய்ய தொடங்கிவிட்டார்கள் எமது ஈழமக்களே பலர் வெளிநாட்டில் சுகபோகம் வாழ்ந்து கொண்டு பிறந்த மண்ணையும் மக்களையும் மறந்து வாழ்கிறார்கள் அவர்களை விடுத்து இவர்களை நேவதில் எதிரிகளை மீண்டும் சம்பாதிப்பமே ஒழிய வேறு நடக்கப்போவது எதுவுமல்ல ஈழபாரதி எனது கருத்திலும் பிழையிருக்கலாம் சுட்டிக்காட்டுக

கொழுவி said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

Anonymous said...

ed;wp nfhYtp
,g;NghJjhd; jkpopdk; tpspg;Gw;wUf;fpwJ.
,e; epiy nkd;NkYk; njhluNtz;Lk;.

கொழுவி said...

நன்றி கொலுவி
இப்போதுதான் தமிழினம் விளிப்புற்றருக்கிறது.
இந் நிலை மென்மேலும் தொடரவேண்டும். -zaira

ஈழபாரதி said...

At 12:27 PM, Anonymous said…

//நல்லதொரு முயற்சி, மேலும் மேலும் தமிழீழதிரப்படதுறையும் வளரவேண்டும் என்பதே எமது அவா?நல்லதரமான படங்கள் வரவேண்டும், சினிமா என்னும் மாபெரும் சக்தியை எமது கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.//

இப்படி பேசி, பேசித்தான் எல்லொரயும் சாக அடிக்கிரிர்..அதுக்கு தமிழகத்திலிருந்தும் சிலர் எடுப்பெடுக்கிறார்கள்....

படம் தமிழகத்த பொறுத்தவரை ஒரு காதல் படமாகத்தான் இருக்கும்...இருக்க வேண்டும்."

ஜயா அனானி திரைப்படத்துறையில் பின் தங்கியிருக்கும் தமிழீழம் முன்னுக்கு வளர வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு. தமிழ்நாட்டில் திரைப்படத்துறையை தவறாகப்பயன் படுத்துகிறார்கள் என்பதுதான் எனது கருத்து. ஒரு சில நல்ல படங்கள் வந்தாலும் பெருமளவு குப்பைகள்தான். அணுநுட்பமும் சரி திரை நுட்பமும் சரி பயன் படுத்தும் விதத்தில் பயன் படுத்தினால் உச்சநற்பயனைபெறலாம், இதுதான் உண்மை.

ஈழபாரதி said...

யாழ்கோபி Hat gesagt…
ஈழபாரதி மாக்கள் என குறிப்பிட்டது எனக்கு மிக வருத்தத்தை அளிக்கிறது நல்ல பதிவுகள் இடும் நீங்களே இப்படி பொறுப்பில்லாமல் வசனத்தை வீசுவது விரும்பத்தக்கது அல்ல தமிழக மக்கள் இன்று பலர் பழையதை மறந்து எமக்காக தம்மால் இயன்றதை செய்ய தொடங்கிவிட்டார்கள் எமது ஈழமக்களே பலர் வெளிநாட்டில் சுகபோகம் வாழ்ந்து கொண்டு பிறந்த மண்ணையும் மக்களையும் மறந்து வாழ்கிறார்கள் அவர்களை விடுத்து இவர்களை நேவதில் எதிரிகளை மீண்டும் சம்பாதிப்பமே ஒழிய வேறு நடக்கப்போவது எதுவுமல்ல ஈழபாரதி எனது கருத்திலும் பிழையிருக்கலாம் சுட்டிக்காட்டுக"

யாழ்கோபி இது தட்டும்போது ஏற்பட்ட தவறுதான், சொற்குற்றம் பொருட்குற்றத்தை ஏற்படுத்திவிட்டது மன்னிக்கவும். எனக்கும் நிறைய தமிழ்நாட்டு நண்பர்கள் இருக்கிறார்கள்.நாம் யாரையும் வெறுப்பதில்லை, சுட்டிக்காடியமைக்கு நன்றிகள்.

Anonymous said...

இப்படத்திற்கு தமிழகத்தில் தடையயேதும் இருக்கக்கூடாது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

பாரதி said...

இது போன்ற தமிழீழத்திரைப்படங்களை தமிழகத்தில் கண்டிப்பாக திரையிட வேன்டும்,அப்படி செய்தால் தான் ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கும் நம் தமிழக இளைஞகர்களுக்கு தெரியவரும். அவர்கள் படும் பெரும் இன்னல்களை நம் மக்கள் அறிவார்கள்.
அந்த திரைப்படத்தில் மதுமிதா சொல்வதைபோல் தமிழத்தில் இருந்துகொன்டு நாம் தொலைகாட்சி அது இதுவென்று நாம் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துக்கொன்டு இருக்கிறோம்,ஆனால் நமக்கு சில கடல் மைல் தொலைவில் உள்ள நம் இனத்தவர்படும் துயரங்கள் நமக்கு தெரிவதில்லை,
ஆகயால் நிச்சயம் இத்திரைப்படத்தை தமிழத்தில் திரையிட வேன்டும். எந்தவித இடைஞ்சல்களும் இல்லாமல் திரையிட வேன்டும்.

thattAan poochi said...

iNaippukku NandRi..

Anonymous said...

நிறைய எதிர்பார்க்கிரேன்!

Anonymous said...

Australiavukkum varumo?

Anonymous said...

I like the movie...