Tuesday, September 19, 2006

ஈழப்போரில் தமிழக வீரன்

போராடும் தன் சகோதர தேசத்திற்காக கரும்புலியாகி தன் உடல்வெடித்த தமிழக வீரன் இவன்.

கருமபுலி லெப். செங்கண்ணன்.

சாத்தூர் சிவகாசியை சேர்ந்த இவன் 1993 நவம்பர் 11ம் திகதி பலாலி இலங்கை இராணுவ படைத்தளத்தினில் நடந்த ஊடுருவிய கருமபுலித்தாக்குதல் ஒன்றில் வீரகாவியமானான்.

அந்த இளைய வீரனுக்கு ஈழத்தமிழினத்தின் வீர வணக்கங்கள்.

Photobucket - Video and Image Hosting


10 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

கொழுவி அவர்களே,

என்பதிவில் சில கேள்விகள் எழுப்பியுள்ளேன்...பதிலளித்தால் இன்னும் தெளிவாக இருக்கும்.

Anonymous said...

இவர் பற்றிய விபரங்களை அறிய முடியுமா

Anonymous said...

//மெளல்ஸ், பெங்களூர் said...
கொழுவி அவர்களே,

என்பதிவில் சில கேள்விகள் எழுப்பியுள்ளேன்...பதிலளித்தால் இன்னும் தெளிவாக இருக்கும்.
//



அம்பி விடுங்கோ !

ரொம்பத்தான் குதிக்காதேள், ஓய் உம்ம வாஞ்சிநாதன் எனும் சாதி வெறி பிடித்த மிருகம் ஆஷ் துரையைக்கொன்று விட்டு தானும் "தற்கொலை" செய்துகொண்ட போது வயது 17 தான்.

ரொம்பத்தான் பொங்கி வழியறேள். துடைத்துகொள்ளும் வழியும் அசடை

இப்படி மனித உரிமை பேசறவா எல்லாம், சிங்கள காடையன் செய்யும் போது வாயையும்
அதையும் மூடிண்டு தானே இருப்பேள் அது போல இப்பவும் இரும்

மெளலி (மதுரையம்பதி) said...

திரு. சேரி,

என் கேள்விகளுக்கு பதில் உங்கள் பின்னுட்டத்தில் இல்லை, வெறும் சாதி வெறி மட்டுமே தெரிகிறது.

தவிர உங்களுக்கு இந்திய சுதந்திரத்திற்க்கு இந்தியன் சாவதற்க்கும், (அதனையும் நான் சரியென்று சொல்லவில்லை) ஈழத்தமிழர் தனிநாடு கோரிக்கையின் ஒரு பிரிவின் சார்பாக இந்தியன் கள்ளத்தோணியில் சென்று மடிவதற்க்கும் வித்தியாசம் தெரியவில்லயா?.

Anonymous said...

//இந்திய சுதந்திரத்திற்க்கு இந்தியன் சாவதற்க்கும், (அதனையும் நான் சரியென்று சொல்லவில்லை) //

இந்திய சுதந்திரத்தையே யாராவது தட்டில் வைத்து தூக்கி தந்தால் மட்டுமே வாங்குவதற்கு தயாராயிருந்த உங்களோடு பதிலாடுவதில் பயனில்லை. எனது பதிலிலும் உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. உண்மையில் எனது பதில்களுக்கேற்ற கேள்விகள் உம்மிடத்தில் இல்லை.

Anonymous said...

//திரு. சேரி,

என் கேள்விகளுக்கு பதில் உங்கள் பின்னுட்டத்தில் இல்லை, வெறும் சாதி வெறி மட்டுமே தெரிகிறது.

தவிர உங்களுக்கு இந்திய சுதந்திரத்திற்க்கு இந்தியன் சாவதற்க்கும், (அதனையும் நான் சரியென்று சொல்லவில்லை) ஈழத்தமிழர் தனிநாடு கோரிக்கையின் ஒரு பிரிவின் சார்பாக இந்தியன் கள்ளத்தோணியில் சென்று மடிவதற்க்கும் வித்தியாசம் தெரியவில்லயா?.//






திரு அக்ரஹாரம்,

இதன் பெயர் சாதி வெறியல்ல , ஒரு இனத்தின் மீதான வெறுப்பு. இவ்வெறுப்பு ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அறிவது உங்களுக்கு எங்களின் கோபம் புரியும். இன்று வரை மாறாமல் இருப்பதால்தான் பிரச்சினையே. யோசித்து பாருங்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள் 99% விழுக்காடு பார்ப்புகளும் மீதம் உள்ள 1% அவர்களின் சொம்பு தூக்கிகளாவும் இருப்பது ஏன் என்று ?

உங்கள் வாதத்தின் படி இந்திய விடுதலைக்கு இந்தியன் உயிரைக்கொடுக்கலாம் என்றால், வல்லாதிக்க கொடுங்கரங்களினால் குதறி வீசப்பட்ட எம் தமிழருக்கு எம்மாலான உதவிகளை செய்வதும், " தமிழனுக்காக தமிழன் உயிரைக்கொடுப்பதும் " குற்றம் இல்லை ஓய் .

தோழர் செங்கண்ணன் இந்தியனா தமிழனா என்பது அவர் முடிவு செய்யவேண்டிய விடயம். அதை முடிவு செய்துதான் அவர் களம் ஏகினார். தமிழனுக்காக களம் புக முடிவு செய்த பின் அது"கள்ளதோணியா" இல்லை நல்ல தோணியா என்பதல்லாம் ஒரு பொருட்டல்ல.

நமது இந்திய ராணுவத்தில் சேருவதற்கும் ஏற்ற வயது 18 தான் என்பதும், கார்கில் போரில் இறந்த 9 வீரர்களின் வயது 18 ம் சில மாதங்களுமே என்று இந்த இடத்தில் உங்களுக்கு தெரிவிக்கிறேன்

இன்றைக்கும் அந்த வெறும் மலைப்பகுதியை காக்க மாதம் 100 கோடிக்குமேல் செலவு செய்து மாதம் 50 வீரர்களை பலியிட்டும் கொண்டிருக்கிறோம். இதனை போய் கேள்விகேளுங்கள். என்னிடம் உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. எதிர் கேள்விகள் மட்டுமே உள்ளது. வெரி ஸாரி

மெளலி (மதுரையம்பதி) said...

திரு. சேரி,

புலிகளின் எதிர்ப்பாளர்களை எல்லாம் பார்பனராக பார்க்கும் உங்களை கண்டு நகைக்க மட்டுமே தோன்றுகிறது.

புலிஆதரவு மட்டுமே ஈழதமிழர் ஆதரவு என்று நீங்கள் இருக்கும்வரை உங்களுடன் பேசி பயனில்லை...தவிரவும் சம்மந்தமில்லாது சாதீயம் பேசுவதால் நான் இத்துடன் நிருத்திக்கொள்கிறேன்.

Anonymous said...

//மெளல்ஸ், பெங்களூர் சைட்...
திரு. சேரி,

புலிகளின் எதிர்ப்பாளர்களை எல்லாம் பார்பனராக பார்க்கும் உங்களை கண்டு நகைக்க மட்டுமே தோன்றுகிறது.

புலிஆதரவு மட்டுமே ஈழதமிழர் ஆதரவு என்று நீங்கள் இருக்கும்வரை உங்களுடன் பேசி பயனில்லை...தவிரவும் சம்மந்தமில்லாது சாதீயம் பேசுவதால் நான் இத்துடன் நிருத்திக்கொள்கிறேன். //


திரு அக்ரஹாரம்,உங்கள் கோபம் நியாயமானதுதான்,ஏனெனில் "இப்பிரச்சினையை எப்படி உங்களுக்கு சாதகமாய் கொண்டு செல்லலாம்" என்கிற உங்களின் முதலைக்கண்ணீர் பதிவுகளில் வந்து கும்மியடிக்கவில்லை என்கிற கோபம். முதலில் உங்களின் கழிசடை பதிவை பாருங்கள் . ஒரு நினைவஞ்சலி பதிவை அரசியாலாக்கி அதன் மூலம் உங்கள் சொறி சிரங்குகளை சொறிந்து கொள்ள முனையும் மோசடிப்பார்ப்பனிய தன்மை தெளிவாகவே தெரியும்.

நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமானதுதான். புலி எதிர்ப்பாளர்கள் அனைவரையும் ஏன் பார்ப்பனர்களாக பார்க்கறீர்கள் என்பது ஒரு நல்ல கேள்விதான். அதையே நானும் கேட்கிறேன் ஒரு "உஞ்சவிருத்தி பார்ப்பான்" கூட ஈழப்பிரச்சினையில் அன்றிலிருந்து இன்று வரை புலிகளையோ அல்லது அந்த மக்களின் துயரில் கூட முறையே ஆதரிக்கவும் இல்லை,அனுதாபப்படவும் இல்லையே ஏன்?

கொண்டைக்குடுமிக்கார பார்ப்பனரின் வாந்தியாய் வெளிப்படும் முன்டை முழியன் "சோ" விலிருந்து பொதுவுடமைக்கார பார்ப்பான் இந்து "என்.ராம்" தொடங்கி சர்வதேச மாமா சுப்பிரமணியசாமிவரை அனைவருக்கும் புலிகள் என்றால் பத்திண்டு வருதே அது ஏன் ஓய்?

இத்தனைக்கும் புலிகளிடம் பார்ப்பன எதிர்ப்பும் கிடையாது.

தமிழ்நாட்டில் "வீர துறவி" என்று பட்டம் போட்டுக்கொண்டு உயர்ந்தபட்ச Z பிரிவு பாதுகாப்போடு வலம் வரும் நபர்கள் அங்கு கொல்லப்படும் தமிழர்கள் மதத்தால் பெரும்பாலும் இந்துக்கள் என்கிற எண்ணம் தோன்றவில்லையா?

போகவேண்டியதுதானே கோவனத்தை அவிழ்த்து கொடியாய் பிடித்து கொண்டு அங்கே, குறைந்த பட்சம் ஒரு கள்ளத்தோணி கூடவா கிடைக்கவில்லை ?

ஆம் நண்பரே நெஞ்சு நிறைய நம்பிக்கையோடு சொல்கிறேன், புலிகள் என்றால் ஈழம்,ஈழம் என்றால் புலிகள். ஈழத்தமிழரையும் புலிகளையும் பிரித்து பார்க்கவேண்டிய அவசியம் எனக்கில்லை.அதுதான் உண்மையும் கூட உங்களின் நம்பிக்கையின் படி மக்களை காப்பது கடவுளின் வேலை என்றால், தன் உயிரைக்கொடுத்து மக்களை காக்கும் அவர்கள் கடவுளினும் உயர்ந்தோர்.

நான் சாதீயம் பேசவில்லை, உங்கள் இனத்துக்கும் எங்கள் இனத்துக்கும் உள்ள முரண்களை பேசுகிறேன்.

Anonymous said...

//ஈழத்தமிழர் தனிநாடு கோரிக்கையின் ஒரு பிரிவின் சார்பாக இந்தியன் கள்ளத்தோணியில் சென்று மடிவதற்க்கும் வித்தியாசம் தெரியவில்லயா?. //
மலேசியா, சிங்கப்பூரில் இருந்தவர்கள் பலர் சுபாசு சந்திரபோஸின் படையில் சேர்ந்தர்களாமே? அவர்களும் இந்தியா வந்து போராடியிருந்தால் கள்ளத்தோணியென மதிப்புக்குரிய மெளல்ஸ் பட்டம் சூட்டியிருப்பார்?

கொழுவி said...

பதிவைப் படித்துச் சண்டைபோட்டுச் சென்ற அனைவருக்கும் நன்றி.
மெளல்ஸ்,
இம்மாவீரன் மட்டுமன்றி வேறும் சிலர் தொடக்க காலத்தில் தமிழீழ விடுதலைக்காகப் போராடி வீரச்சாவடைந்துள்ளார்கள். விவரங்கள் கிடைத்தால் வெளியிடுகிறேன்.
எண்பதுகளின் தொடக்கத்தில் புலிகள் அமைப்பில் இருந்த சக வலைப்பதிவாளர் + எழுத்தாளர் சோபாசக்தியும் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் உங்கள் பார்வை யாரைக் குற்றம் சொல்கிறதென்று தெரியவில்லை, எதைக் குற்றம் சொல்கிறதென்று தெரியவில்லை.
தமிழகத்தமிழன் ஈழத்துக்காகப் போராடுவதை விமர்சிக்கிறீர்களா?
அல்லது அப்போராளியி்ன் வயதுதான் பிரச்சினையா?
என்ன சொல்ல வருகிறீர்கள்?

பார்பனப் பிரச்சினையை ஈழத்தில் பொருத்தி நான் பார்ப்பதில்லை. இங்கு வலைப்பதியும் மற்ற ஈழத்தவரும் பார்ப்பனியப்பிரச்சினை பற்றி முக்கியமாகக் கதைப்பதாகத் தெரியவில்லை.
எனவே மேற்கொண்டு யாரும் பார்ப்பனப் பிரச்சினையை ஈழப்பிரச்சினையில் செருக வேண்டாமென்று கேட்கிறேன்.