நடந்து முடிந்த பதிவர் பட்டறை பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியை பகிர்தலும் வாழ்த்துக்களும்!!
பதிவர் பட்டறையின் நிகழ்ச்சி நிரலில் ஈழத் தமிழர்கள் சிறிலங்கா அரசுடன் சண்டையிட்ட போதும் சிறிலங்கா பாஸ்போட்தான் இன்றுவரை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த ஆய்வரங்கு ஏதாவது உள்ளதா எனத் தேடியும் கண்ணுக்கு தென்படவில்லை.
ஆயினும் வலையுலகில் நன்னடத்தை என்னும் கருப்பொருளின் உரையாடலிலேயே இந்த ஈழத்தமிழரின் பாஸ்போட் விவகாரம் தொட்டுச் செல்லப்பட்டது. ( ஆய்வரங்கிற்கு சம்பந்தமில்லாதது என யாரும் மைக்கை பிடுங்கி தணிக்கை செய்யவில்லை :( )
ஈழத்தமிழர்களின் சிறிலங்கா அரசுடனான சண்டை இணையத்தில் நன்னடத்தை என்னும் உட்பொருளில் எங்கு வந்து குந்திக்கினது என்று எனக்கு கொஞ்சூண்டும் புரியவில்லை.
பொதுவான நன்னடத்தை குறித்து பேசினால் ஈழத் தமிழர்கள் சிறிலங்கா பாஸ்போட் வைத்திருப்பது குறித்தும் மண்டையில் போடும் அவர்களின் கலாசாரப் பின்புலம் குறித்தும் நிறைய பேசலாம். இணையத்தில் நன்னடத்தைக்கும் இவற்றுக்கும் என்ன உறவு.. ?
என்ன இழவு வேண்டுமானாலும் நடக்கட்டும்.. பதிவர் பட்டறையை பாராட்டியோ வாழ்த்தியோ பதிவெதனையும் இடாத எனது தவறினை உணர்ந்து சற்றுப் பிந்தியேனும் வாழ்த்துகிறேன். (கிடைத்த வாய்ப்புக்களை அவரவர் தமது பார்வையில் சரியாகத்தான் பயன்படுத்துகிறார்கள். ஙே என நாம் தொடர்ந்தும் விழிப்போம். )
22 comments:
இதில் இருந்து தெரிகிறது நீர் நன்நடத்தை அற்ற ஈழாத்தமிழர் என்று.
குட் பாட் எதுன்னு புட்டிசீவிங்க மட்டும் தான் சொலலிவாங்களாம் . மற்றவங்க அல்லாம் மணிக்கட்டிகிட்ட மாடுங்க போல கரெக்டா தலை ஆட்டிகிட்டா சரிங்களாம..
//ஆயினும் வலையுலகில் நன்னடத்தை என்னும் கருப்பொருளின் உரையாடலிலேயே இந்த ஈழத்தமிழரின் பாஸ்போட் விவகாரம் தொட்டுச் செல்லப்பட்டது. ( ஆய்வரங்கிற்கு சம்பந்தமில்லாதது என யாரும் மைக்கை பிடுங்கி தணிக்கை செய்யவில்லை :( )//
கொடும! கொடும!! எங்கிறதத் தவிர வேற என்னாத்த சொல்லுறது.:((((
நடந்தது இது தான்
இந்து ராம் இடதுசாரி கொள்கையுடையவராயினும் அவரது மகள் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிப்பது தொடர்பாக பெயரிலி ஒருமுறை எழுதியிருந்தார்.
இவ்வாறு குடும்ப விடயங்களை இணையத்தில் இழுப்பது நன்னடத்தை இல்லையென்ற மாலன் அதோடு நிறுத்தியிருக்கலாம்.
ஆனால் இடதுசாரி இந்து ராமின் மகள் அமெரிக்காவில் படிக்கும் முரணை சிறிலங்கா அரசுடன் போர் புரியும் ஈழத்தமிழர் அதே சிறிலங்காவின் பாஸ்போட்டினை வைத்திருக்கும் முரணோடு ஒப்பிட்டு சமன் செய்தார் மாலன்.
அப்போது ஐயா மாலன் இது பட்டறைக்கு தேவையில்லாதது என யாராவது மட்டுறுத்தியிருக்கலாம். மைக்கை புடுங்கியிருக்கலாம். ஆனால் பெரியவரு பேசுறாரு என்ற மனப் பயபக்தியில் சும்மா இருந்து விட்டார்கள். ஆனால் மாலனிடம் கேள்வி கேட்ட சிலர் மட்டுறுத்தப்பட்டார்கள்.
மாலனின் *********** (தணிக்கை -கொழுவி) இருக்கு, அதுதானே சிறிலங்கன் பாஸ்போட் எங்களுக்கு வேண்டாம் தமிழீழ பாஸ்போட்தான் எங்களுக்கு வேணும் என்கிறோம். சிறீலங்காதான் தர மறுக்கிறது, இந்து ராமிடம் சொல்லி மாலன் அய்யா கொஞ்சம் வாங்கித்தரலாம்தானே எமக்கு.
சிறிலங்கன் பாஸ்போட் வைத்திருப்பவன்.
அவரா சொன்னார் அப்படி இருக்க முடியாது :)))
கருணாநிதி தனது குழந்தைகளை இந்தி படிக்க அனுப்புகிறார்; ராமதாஸ் ஆங்கிலம் படிக்க அனுப்புகிறார் என்று அவர்களது குழந்தைகளைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு துக்ளக் சோ நையாண்டீயாக வீட்டு விசயங்களை பத்திரிக்கையில் எழுதிய போது அதைக் கண்டித்து கொதித்தெழுந்து மாலன் எழுதிய கண்டனத்தை இங்கு யாராவது தந்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.
இதோ இந்தவாராம் கூட இட்லிவடை எடுத்துப்போட்டு மகிழும் கார்ட்டூனில் (http://www.thuglak.com/thuglak/curissue/images/homeattai1.jpg) கருணாநிதி மகளை குறித்து குடும்ப விசயங்களை அதுவும்பொய்யாகவும் எழுதும் சோவை ஒழுக்க விதிகள் (அதாங்க ஊடக எத்திக்ஸூ) அடிப்படையில் மாலன் கடுமையாக்க் கண்டித்து துக்ளக்கை புறக்கணிக்க சொல்லியிருப்பார் என்ன்று நம்புகிறோம்.
(அடுத்த) லங்கா ரத்னா மாலன் எல்லாம் கருத்துச் சொல்லி வலையுலகம் முன்னேறவேண்டியிருக்குதே? எங்கே போய் முட்டிகொள்ளலாம், என்ன கொடுமை சார் இது
கொழுவி,
மாலன் பேசியது ஒரு புறமிருக்கட்டும். அதை விளக்குமாறு விளக்குவோம். தன் பதிவிலே பின்னூட்டமிடாது வேறெங்கோ பதிவிலே கோவிந்தசாமி குறித்துப் பின்னூட்டிவிட்டேன் என்று சொல்லியவர், இணையத்திலேயே இல்லாமல் எங்கேயோ போய் (பதில் ஏற்கனவே தந்த) இராம் மகள் விவகாரம் பற்றி, எனக்குப் பதில்கூட அளிக்கமுடியாத இடத்திலே பேசிய இணைய/யாநெறியினை இங்கே ஒரு முறை விட்டுவிடுவோம்.
ஆனால், "பார்ப்பன் தன் தேள்வைக்காக எதையும் எதனுடனும் செருகுவான்" என்பதுபோன்ற பின்னூட்டங்களை அனுமதித்தீரோ, அவருக்கு அனுதாபத்தைத்தான் திருப்புவதாக முடியும். அதைவைத்தே மாலன் civic codes பற்றி விளக்கம் தர நாம் ஏதோ தவறிழைத்தவர்கள்போலக் கேட்டிருக்கவேண்டும்.. இப்படியான சரமாரியாக அடித்து ஆடும் "பார்ப்பன், வாய்ப்பன்" சுழிக்குள்ளே இறங்காமலிருப்பதே நமக்கு நல்லது. சொல்லுறதை நான் சொல்லிப்புட்டேங்க; இனி செய்யிறத செஞ்சுப்புடுங்க
வித்யா ராம் ஒரு பிரபலமான பத்திரிக்கையாளர். விமர்சிக்காலாம்.
http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2007052101982000.htm&date=2007/05/21/&prd=th&
JK
#மண்டையில் போடும் அவர்களின் கலாசாரப் பின்புலம் குறித்தும் நிறைய பேசலாம்# கருத்துச் சுதந்திரத்துக்கு தமிழீழத்தில் வேட்டு என்பதனை கொழுவி புரிந்து வைத்துள்ளாரே!
ஈழத்தமிழர்களின் சிறிலங்கா அரசுடனான சண்டை இணையத்தில் நன்னடத்தை என்னும் உட்பொருளில் எங்கு வந்து குந்திக்கினது என்பதைக் கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து
//கருத்துச் சுதந்திரத்துக்கு தமிழீழத்தில் வேட்டு என்பதனை கொழுவி புரிந்து வைத்துள்ளாரே!//
சந்தில சிந்து பாடும் கள்ளத்து மேட்டுக்காரரே.. மண்டையில் போடும் அந்த புகழ் பெற்ற வாக்கியத்திற்கு பின்னால் என்ன கதை உள்ளதென்பதுவும் அதை ஈழத்தமிழர் முழுமைக்கும் பொதுமைப்படுத்திச் சொன்னவர் யாரென்றும் உங்களுக்குத் தெரிந்திரிக்க வாய்ப்பில்லையென்ற படியால் பெருந்தன்மையுடன் உங்களை மன்னித்துக் கொள்கின்றேன்.
பாவம்.. உங்களுக்கோ வாய்ப்புக்கள் தேவை.. தேடியலைகையில் மாட்டியது கொழுவி. பதிவில் சொன்னது போலவே எல்லோருமே தமது பார்வைக்கேற்ப கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாகத்தான் பயன்படுத்துகிறார்கள்..
களத்து மேடையா .. இதில மினக்கெடுறதை விட தமிழீழ மக்கள் தலைவரைப் பற்றி என்னசொல்லுகினம் எண்டதை கற்பனை செய்து நீங்கள் எழுதினீர்கள் என்றால் இதை விட பலன் அடைய வாய்ப்புண்டு..
அதெல்லாம் சரி..
சார்லஸ் அன்ரனி என்ற ஈழத்தமிழர்,அமெரிக்காவின் Johns Hopkins University-யில் படிப்பதாக சொல்லப்படுகிறதே..அது உண்மையா?அப்படி அவர் அங்கு படிப்பாரானால் அவர் எந்த நாட்டு passport வைத்திருப்பார்? Canada?USA? அவர் இலங்கை passport வைத்திருந்தால் மிகப் பெரிய முரண்பாடு இல்லையா?
இப்படி எதாவது கேட்டால் மண்டையில் போடுவார்களோ?
செல்வமணி நீங்க ஆர்கே செல்வமணியா?
சார்லஸ் அன்ரனியைப் பற்றி உளவறிய இந்திய 'ரா' அமைப்பு அனுப்பிய ஆள் இந்த செல்வமணி.
விவரமெல்லாம் சொல்லணும் என்கிற அவசியம் கிடையாது.
செல்வமணி,
ஜோன் ஹொப்கின்ஸ் இல் சாள்ஸ் அன்ரனி படிக்கிறாரோ இல்லையோ தெரியாது ஆனால் உலகமே சோசலிசம் வந்தால் தான் உய்யும் என்றும் புலிகள் சோசலிச பாதை தெரியாதபடியால் தான் பாசிசபுலியாகிப்போனார்கள் என்றும் கதை (காவியம்) எழுதுபவர்கள் தான் தமது பிள்ளைகளுக்க்கு ஜோன் ஹோப்கின்சில் இடம் தேடி அமெரிக்கா போனவை என்று கேள்வி.
பதிவிட்ட கொழுவிக்கு செவ்வனே பதிலிறுக்கத் தெரியாதது தான் வேடிக்கை.
தமிழீழத்தின் வரலாற்றைத் திருப்பிப் பாரும் விடை தெரியும்.
//தமிழீழத்தின் வரலாற்றைத் திருப்பிப் பாரும் விடை தெரியும்.//
சரி.. ஆறுதலாக எனக்கு நேரம் கிடைக்கும் போது திரும்பிப் பார்க்கின்றேன். அதுவரை பொறுத்தருள்க..
இத பற்றி பட்டறையில் கலந்து கொண்ட சில பதிவர்களை கேட்ட போது ஆமாய்யா ஆமா.. ஆனா சரியா கேட்டகலையே என கழுவுற மீனில் நழுவுற மீனாட்டம் நகர்ந்து கொண்டனர். மாலன் போன்ற பெரிய மனுசரை எதற்கு வம்புக்கிழுப்பான் என அவர்கள் நினைக்கிறார்களோ தெரியலை. ஒருவேளை இது பெயரிலிக்கும் மாலனுக்கும் இடையிலான பிரச்சனை நமக்கெதுக்கு வம்பு என்றும் நினைக்கலாம்.
அப்படி இது பெயரிலிக்கும் மாலனுக்கும் இடையிலான பிரச்சனை எனில் பெயரிலி எப்போ ஈழத்தமிழரின் பிரதிநிதியானார்.. ?
பதிவுலகில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விடயத்தை முதன்முதலில் முந்தித் தந்த அண்ணன் கொழுவிக்கும் அவரது இந்திய பெரும் துணைக்கண்ட செய்தியாளருக்கும் ஒரு ஜே..
பாஸ்போட்டை கிழித்தவர்:)
பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமெண்டதுக்காக எழுத நான் ஒன்றும் விகடன் குமுத இதழ்களோ இல்லாட்டி எங்கடை பரபரப்போ நடத்தவில்லை.
பட்டறைக்குச் சற்றும் சம்பந்தமற்ற விடயத்தை அங்கு பேசியதும் அது அனுமதிக்கப்பட்டதும்.. இவை தான் பதிவுக்கு காரணம். இது பற்றி நிறைய பதிவுகள் வந்தாயிற்று. பேசியாயிற்று. இத்துடன் நிறுத்துவோம்..
எனினும் இவ்விடயத்தை பதிவில் முதன்முதலில் கொண்டு வந்ததற்கு நீங்கள் கூவிய ஜே வை தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். :))
Post a Comment