Wednesday, August 15, 2007

கொழுவியும் கொண்டோடியும்

வலைப்பதியும் தமிழர்கள் பலருக்கு மகிழ்ச்சியான, சிலருக்குத் துக்கமான செய்தி.
கொழுவியும் கொண்டோடியும் இணைகிறார்கள்.

இதுவரை, கொழுவி என்ற பெயரூடாக வலைப்பதிந்து வந்தவரும் கொண்டோடி என்ற பெயரூடாக வலைப்பதிந்து வந்தவரும் ஒன்றாக இணைந்து வலைப்பதிய உள்ளார்கள்.

இனி கொழுவியின் 'கொழுவலும் தழுவலும்' வலைப்பதிவில் இருவரும் இணைந்து எழுதுவார்கள். இனிமேல் இந்த வலைப்பதிவு ஒரு கூட்டு வலைப்பதிவு.

கொண்டோடி பற்றிய சிறு பின்குறிப்பு.
______________________

தொடக்கத்தில் கொண்டோடியின் வலைப்பதிவு இதுதான்.

'ஆழிப்பேரலை' என்ற பெயரோடு தொடங்கப்பட்ட வலைப்பதிவு, பின்னர் 'நிகழ்வுகள்' என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்போது கவிஷன் போன்றோர் செய்வதைப்போல - ஆனால் முக்கியமான சில ஈழத்து நிகழ்வுகள் பதிவாக்கப்பட்டன. மற்றும்படி பெரிதாக எதுவுமில்லை. சிலவிடங்களில் பின்னூட்டங்களில் கொண்டோடியின் பங்களிப்பு இருந்தது.

பின்னர் கடவுச்சொல்லை மறந்த காரணத்தாலோ வேறு யாராவது ஊடுருவி மாற்றிய காரணத்தாலோ தொடர்ந்தும் கொண்டோடியால் தளத்துள் புகமுடியவில்லை. இந்நிலையில் 'ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது'' என்பதைப்போல பின்னூட்டங்கள் போடாமல் கொண்டோடியால் இருக்க முடியவில்லை. கையெல்லாம் உதறத் தொடங்கியது. எனவே பின்னூட்டங்கள் இடுவதற்காக கொண்டோடி என்ற பெயரில் புதிதாக கணக்கொன்று தொடங்கப்பட்டு ஆங்காங்கே பின்னூட்டங்கள் இடப்பட்டன. தற்போது உள்ள சூழலில், தனியே பின்னூட்டங்களில் மட்டும் எமது கருத்தைச் சொல்லிச் செல்வது சாத்தியமல்லை என்பதோடு போதாமையும் உணரப்பட்டது. இனி, தனியொரு தளம் தொடங்கி, திரட்டியில் இணைந்து எழுதுவதும் 'பஞ்சி பிடிச்ச' வேலையாக உணரப்பட்டது. இடுகைகள் எழுதத் தொடங்கி, அதற்குரிய கவனிப்புக்கள் பெற்று, ஒரு கும்பலைச் சேர்க்கும் வரையான காலப்பகுதிவரை இருக்கும் சங்கடங்கள் உணரப்பட்டன. இந்தநிலையில் ஏற்கனவே பிரபலமான வலைப்பதிவொன்றினூடு கருத்தைச் சொல்வது சாலச் சிறந்ததென்ற முடிபு கொண்டோடியால் எடுக்கப்பட்டு அதற்குரிய வலைப்பதிவு எது என்பது பற்றி தீவிரமாக ஆராயப்பட்டது.
இதில் வெற்றிபெற்றது கொழுவியின் வலைப்பதிவு.

கொண்டோடியின் விருப்பத்தை, கொழுவியும் ஏற்ற நிலையில் இன்று உங்கள் முன் இப்புதியகூட்டணி தோன்றியுள்ளது.

பின்குறிப்பு முற்றிற்று.
_____________________

இனி, கொழுவியும் கொண்டோடியும் இரட்டைக்குழல் பீரங்கிகளாகச் (கவனிக்க: பீரங்கிதான், துப்பாக்கியன்று) செயற்படுவார்கள்.

இப்புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பை உங்களெல்லோருக்கும் அறிவிப்பதில் நாங்கள் பெருமிதமடைகிறோம்.

(மேடையொன்றில், இரண்டுபேர் தங்களின் ஒவ்வொரு கையைப் பற்றியபடி உயர்த்தி நின்று சிரிப்பது போன்ற படமொன்றை இவ்விடத்தில் கற்பனை செய்து கொளள்வும்.)

குந்த ஓரடி நிலம் தந்த கொழுவிக்கு கொண்டோடியின் நன்றிகள் பல.

நன்றி வாசகர்களே.
இனி களத்தில சந்திப்போம்.

கொழுவி(க்) கொண்டோடி அடிக்கும் அடியில் -சிலர்
நழுவி(த்) திண்டாடிப் போவது உறுதி.

9 comments:

சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள்

பங்காளி... said...

நீலச் சாயம் வெளுத்துப் போச்சு..

டும் டும் டும்....

இந்த பாட்டுக்கும் உங்களுக்கும் ஏதும் தொடர்பில்லையே...ஹி..ஹி...ஏதோ தோணிச்சி அதான் கேட்டேன்....

Anonymous said...

அப்பாடா அரைவாசி தொல்லை குறைந்தது

Anonymous said...

மத்தியகுழுவில் கலந்து ஆலோசிக்காமல் எடுத்த இந்த முடிவை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

-மத்தியகுழுவுக்கு தேத்தண்ணி பரிமாறும் கோமளக்கா

Anonymous said...

என்னத்தைப் பெரிசா கொண்டோடிவரப் போறியள். ரெண்டு பேரும் கொழுவாமல் விட்டால் சரி.

Anonymous said...

அப்ப பேரை கொழுவிக்கொண்டோடி எண்டு மாத்தலாமெல்லே?

Anonymous said...

நானு வரட்டா?

நானு எங்கே போவேன், உங்கள விட்டா?

கொழுவி said...

//நீலச் சாயம் வெளுத்துப் போச்சு..

டும் டும் டும்....

இந்த பாட்டுக்கும் உங்களுக்கும் ஏதும் தொடர்பில்லையே...ஹி..ஹி...ஏதோ தோணிச்சி அதான் கேட்டேன்....//

நமக்கும் இந்த பாட்டுக்கும் தொடர்பில்லை. ஆனா இன்னொருவருக்கு தொடர்பிருக்கு :)))

வவ்வால் said...

இனிமேல் இரட்டை தலைவலி ஆரம்பம் என்று சொல்றிங்களா? எது எப்படியோ மொக்கை போடுவது என்று முடிவு பண்ணியாச்சு எத்தனை பேரா சேர்ந்து போட்டா என்ன? வாழ்க இரட்டை வளமுடன்!

(கொழுவியும் ,கொண்டோடியும் ஒருவரே தான் என வலையில் பேசிக்கொள்ளும் வதந்தியை நான் கேட்கவில்லை)