Thursday, May 14, 2009

நேற்றைய கொழுவி செய்தி பொய்யானது. பித்தலாட்டமானது.

பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறையில் வவுனியா முகாம்களில் அடைக்கப்பட்ட இளைஞர்கள் காணாமல் போய் சிங்கள முகாம்களில் உடலுறுப்புக்கள் வெட்டப்படுவதாக அதை ஒரு பாதிரியார் கண்டு புகைப்படம் எடுத்ததாக படங்களோடு செய்திகள் வெளியாகி பரபரப்பு உருவாயிருந்தது.

ஆனால்.. ஒரு செய்தியை வெளியிடுவதிலுள்ள தார்மீகம் பொறுப்பு எதுவுமில்லாமல் சகட்டுமேனிக்கு தமிழில் டைப் செய்யத்தெரிந்தால் இணையத்தளங்களை உருவாக்கி செய்திகளை எழுதி வெளியிடும் இத்தகையவர்களால் ஏற்படும் பின்னடைவுகளை யாரும் யோசிப்பதில்லை.

ஒன்றிரண்டு செய்திகளில் உருவாகும் நம்பகத்தன்மைச் சீரழிவு.. மொத்தமான துயரங்களையே.. பொய் எனச் சொல்லவைத்துவிடும்.
http://escapefromindia.wordpress.com/2008/...ges_from_india/

மேற்குறித்த இணைப்பில் இந்திய ஆஸ்பத்திரிகளில் தலித் உடலகங்களை எலிகளும் நாய்களும் தின்னவிடப்பட்டிருப்பதாக எழுதப்பட்ட செய்தியின் கட்டுரையில் படங்களைப் பாருங்கள்.

2008 இல் அந்தசெய்தி எழுதப்பட்டிருக்கிறது.

இந்தவகையான பிரசாரங்கள் சிங்களத்திற்கே வாய்ப்பாக போகும். இந்தமாதிரி முட்டாள்களால் எழுதப்படும் ஒன்றிரண்டு செய்திகளை வைத்து அவற்றை ஆதாரத்துடன் முறியடித்து மொத்தமான செய்திகளையே பொய் என்று விடுவார்கள். உரு உதாரணத்திற்கு இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக ஊடகங்களுக்கு அனுப்பி.. அவர்கள் இதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து அதை பகிரங்கப்படுத்தினால்.... என்னாகும்?

இணையத்தில் படங்கள் பரவலாக கிடைக்க.. அதன் வீச்சை அறியாமல் செய்தி எழுதும் முட்டாள்களை என்ன சொல்வது..?
--

சிங்கள பயங்கரவாதம் இதனைவிடக் கொடுமையானவற்றை செய்திருக்கிறது. அதற்கான உண்மையான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை பொய்யாக்கும் இத்தகைய சொறித்தனமான செய்தி வெளியிடல்களை மேசைச் செய்தியாளர்கள் கைவிட வேண்டும்.

9 comments:

ராஜ நடராஜன் said...

தயவு செய்து பொய்கள் பரப்பாதீர்கள்.

ISR Selvakumar said...

உருப்படியான உரக்கச் சொல்லவேண்டிய பதிவு

Subi said...

கனடாவில் மாபெரும் 'அடங்காப்பற்று' பேரணி: ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு

பேரணியில் தாங்கி வரப்பட்ட சில சவப்பெட்டிகளில், கடத்திச்செல்லப்பட்ட தமிழர்கள் சிலரின் உடல் உறுப்புக்கள் களவாடப்பட்ட பின்னர் அவர்களின் சிதைந்த உடலங்களை குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருக்கின்ற படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

Suresh Kumar said...

நானும் அந்த செய்திக்கு இணைப்பு கொடுத்திருந்தேன் உங்கள் பதிவை பார்த்த பின்னர் நீக்கி வ்ட்டேன் . செய்திகள் உண்மையாக இருக்கலாம் போலியான படங்களின் மூலம் அந்த செய்திகளின் உண்மை தன்மை அடி படுகிறது .

மதிபாலா said...

சர்வ நிச்சயமாக தவறான செய்திகளை பரப்புவது மிகமிக ஆபத்தானது.

Anonymous said...

how do u prove ur statement.
If we have to believe u, we must beleive them too.
mau be u r a paid servant of the barbarious sinhala regime !!!

கொழுவி said...

mau be u r a paid servant of the barbarious sinhala regime !!!//

ஆமா.. முன்னாடி புலிகளிடம் வாங்கினேன். இப்போ 100 ரூபா கூடப்போட்டு சிறிலங்கா தர்றாங்க..

ஒரிரு செய்தியில் எல்லாம் அடிபட்டு போயிடக்கூடாதென்ற அக்கறைக்கு இது தேவைதான்.

சிங்கள கருத்துகளங்களில் இரண்டு செய்தியையும் போட்டு என்னமாதிரி கிழித்து நாறடிக்கிறதோடு.. மற்றயை எல்லா செய்திகளுமே.. பொய்கள்தான் என்று எழுதுறாங்கள்.

நடத்துங்க..

பாரதி.சு said...

வணக்கம் கொழுவி,
நன்றி...தவறான செய்திகளை தயங்காமல் தோலுரித்துக் காட்டியதற்கு.

எங்கட ஊடக நண்பர்கள் என்ன எண்டாலும் அநியாயத்துக்கு உணர்ச்சிவசப்பட்டு எதனையும் தீர அறிய முயற்சிக்காது எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்தி வெளியிடுவார்கள்.

ஒரு செய்தி வெளியானால் அதனை சுயபரிசோதனை செய்யாது பரப்பினால் அது எவ்வளவு தூரம் எதிர்காலத்தில் அவர்கள் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என்பதை அறியாது தான் இருக்கின்ற்ர்களா??.

இறுதியில் உண்மையை உரக்க சொன்னாலும் யாரும் கேட்க போவதில்லை.
புரிந்துகொள்ளுங்கள்.

கிரி said...

//இந்தமாதிரி முட்டாள்களால் எழுதப்படும் ஒன்றிரண்டு செய்திகளை வைத்து அவற்றை ஆதாரத்துடன் முறியடித்து மொத்தமான செய்திகளையே பொய் என்று விடுவார்கள். உரு உதாரணத்திற்கு இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக ஊடகங்களுக்கு அனுப்பி.. அவர்கள் இதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து அதை பகிரங்கப்படுத்தினால்.... என்னாகும்?//

வழிமொழிகிறேன்