Sunday, May 29, 2005

கவிதைத் தவறணை

இன்றைய கவிதைத் தவறணையில் புதிதாக வடிகட்டி வந்திருக்கும் கவிதைக் கள்ளு புதியவனுடையது. மிக அருமையாக கவி வடிக்கும் அவரது எழுத்துக்கள்

அற்புதமானவை.

ஆச்சரியமானவை.

இயல்பானவை..

ஈ...ஈ...ஈ... (ஈயன்னாவில ஒரு சொல்லும் மாட்டுப்படேல்ல எண்ட படியாலை..)

உயர்வானவை..

ஊக்கம் தருபவை..

எழுச்சி கொள்ள செய்பவை..

ஏக்கம் தருவன..

இப்படி அவரது கவிதைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தமது கவிதைகளை அனுப்பி இன்று முதல் எமது கவிதைத் தவறணையில் இணைந்து கொள்கிறார். வாருங்கள் அவரது கவிதைக் கள்ளைக் குடிச்சு மயங்கி கிறங்கி போவோம்.

இதோ அவரது காதல் ரசம் சொட்டும் கவிதை. தொடர்ந்தும் அவரை எமது கவிதைத் தவறணைக்கு வரவேற்போம்.

(இந்த கவிதையை மன்னவனின் குரலில் ஒலிப்பதிவு செய்ய முயற்சித்தும் முடியவில்லை)

மீண்டும் சாவேன்

Image hosted by Photobucket.com

நீ இல்லையென்றால்..
நான் செத்து விடுவேன்..

நான் செத்துவிட்டால்
நீ அனாதையாகி விடுவாய்..
நீ அனாதையாகினால்..
நான் மீண்டும்
செத்து விடுவேன்.

(இக் கவிதைத் தவறணையில் கள்ளுக்குடித்தவர்கள் கீழே நட்சத்திரக்குறி இருக்கிறது. அதில சக என்பதை அமத்தி செல்லவும்.)

29 comments:

Anonymous said...

//நீ அனாதையாகினால்..
நான் மீண்டும்
செத்து விடுவேன்//

உண்மையிலேயே இந்த வரிகளை படித்த போது கண்களில் நீர் முட்டிவிட்டது அண்ணா. உங்கள் காதல் நிறைவேற வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்..

Anonymous said...

//அற்புதமானவை.

ஆச்சரியமானவை.

இயல்பானவை..

ஈ...ஈ...ஈ... (ஈயன்னாவில ஒரு சொல்லும் மாட்டுப்படேல்ல எண்ட படியாலை..)

உயர்வானவை..

ஊக்கம் தருபவை..

எழுச்சி கொள்ள செய்பவை..

ஏக்கம் தருவன..
//

இதுவே நல்ல ஒரு கவிதை வாசித்த திருப்தி தந்தது. தொடருங்கள் அண்ணா..

Anonymous said...

தங்கையே உங்கள் ஊக்கம் என்னை மேலும் மேலும் இவ்வாறான கவிகளை எழுத ஊக்கம் தருகிறது. நன்றி உங்களது வாழ்த்துக்களுக்கு

Anonymous said...

இது கவித தோட்டம் இல்லயா?

Anonymous said...

உங்கள் கவி வரிகளின் ஆழம் அழகாக இருக்கிறது....ஆனால் இது கற்பனையின்றி நிஜமான உணர்வு என்றால் மிகவும் வேதனையாகவும் இருக்கிறது....ஆனால் கலங்காதீங்க புதியவன் அண்ணா....ஓசோ சொல்லியிருக்கிறார் எந்த ஒரு காரியத்திலும் ஒருவனின் நம்பிக்கையுடன் கூடிய அயராத உழைப்பை பார்த்து அந்த ஆண்டவனே விதியை மாற்றுவானாம்.......மனம் தளராது முழு நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்..உங்கள் நம்பிக்கை வீண் போகாது....

Anonymous said...

ஈ:- ஈரமானவை.

அண்ணா உங்கள் கவிதை நெஞ்சத்தை உருக்குகிறது.
மேலும் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

மிக அருமையான கவிதை. இதே போன்ற மனநிலையில் தான் நான் கடந்த சில நாளாக உள்ளேன்

Anonymous said...

என்ன அண்ணா காதலை பொத்தி வைக்காதீர்கள். சொல்லிவிடுங்கள். இவ்வாறான கவிதைகளை எழுதி எம்மை அழ வைக்காதீர்கள்-

Anonymous said...

பதிவைப்பார்த்த போது என்ன ஏதென்று புரியவில்லை. ஆனால் பின்னூட்டங்களைப் பார்த்தபோது புரிந்துவிட்டது எங்கே இடி விழுகிறதென்று. தவறணை என்றால் டாஸ்மார்க் கடைகள் தானே?

Anonymous said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கவிதையை.
ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் போக வேண்டாம். ஏனென்றால் வாழ்க்கை ஒருமுறைதான்.
உங்கள் காதல் கைகூட வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு அன்புத்தங்கை
புஷ்ணவி.

Anonymous said...

நன்றி தழலை, சந்திரன், பூஜா, புஷ்ணவி!
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் ஊக்கம் இப்படியான ஆக்கங்களை எழுத மேலும் உற்சாகப்படுத்தும்.

இன்னும் பல கவிதைகள் எழுதும் எண்ணமுண்டு.

புஷ்ணவி!
நீங்கள் சொன்னதுபோல் எந்த ஆபத்தான முடிவுக்கும் செல்ல மாட்டேன்.
உங்கள் கரிசனைக்கு நன்றி.
உங்கள் அன்பை நினைக்க கண்களில் நீர் முட்டுகிறது. இப்படியொரு அன்பான உள்ளத்தை காணக்கிடைத்தது நான் செய்த பாக்கியம்.

Anonymous said...

என்ன அண்ணா பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லிக் கொண்டு! உண்மையில் காதல் எவ்வளவு வலியானது என்பதை நான் அறிவேன் அண்ணா..
ஆபத்தான எந்த முடிவுக்கும் போக மாட்டேன் என்று சொன்னதே எனக்கு போதுமண்ணா.
உங்கள் கனவு காதல் தேவதை உள்ளம் திறப்பாள் என்ற நம்பிக்கையுடன் தங்கை

Anonymous said...

இந்த கவிதையில் எந்த படிமங்களோ குறியீடுகளோ இல்லை. வெறும் வார்த்தைக் கூட்டத்திற்கு எதற்காக எல்லோரும் விழுந்தடித்து அண்ணா தங்கை என்று வாழ்த்துச் சொல்கிறார்கள் என புரியவில்லை. புதியவன் முதலில் நல்ல கவிதைகளை வாசியுங்கள். பின்னர் உணர்வுகள் பேசும் கவிதையை தாருங்கள். நன்றி

Anonymous said...

என் சோகத்தை நினைத்து வருந்தவா? இல்லை உங்கள் முக்கியமா புஷ்ணவியின் ஆறுதலை நினைத்து சந்தோஷப்படவா என புரியாமல் தவிக்கிறேன்.

Anonymous said...

ஒருவன் உம்மை யாரும் வந்து விமர்சனம் பண்ணும் படி கேட்கவில்லை. நாம் சிறுவர்கள் எம்மால் மடிந்த அளவிற்கு கவிதைகளை எழுதி வருகிறோம். அவை பலரது பாராட்டுக்களையும் பெறுகின்றன எனன்பதற்கு இதற்கு வந்த கருத்துக்களே சாட்சி.

அது தவிர இந்த கவிதைகள் வானொலிகள் தொலைக்காட்சிகளிலும் இடம் பெற்று பலரது பாராட்டையும் பெற்றவை.

முடிந்தால் எம்மை ஊக்குவியுங்கள். இல்லையென்றால் பேசாமல் போங்கள். உங்கள் விமர்சனத்தை கெஞ்சி இங்கு யாரும் நிற்க வில்லை. தனிப்பட்ட விரோதங்களை இங்கு காட்ட வேண்டாம். மஸ்ற் டு அண்ணா இவ்வாறான கருத்துக்கள் வந்தால் நான் கவிதை எழுதுவதையே நிறுத்தி விடுவேன் என எச்சரிக்கிறேன்.

கொழுவி said...

ஐயோ புதியவன்,
இப்பிடி சில வேலையத்த பண்டிதர்கள் சொல்வதைக்கேட்டு ஏன் நீங்கள் கவிதை எழுதுவதை நிறுத்த வேண்டும்? அவர்களுக்குக் குற்றம் சொல்லியே பழகிவிட்டது. அவர்கள் மனநோய் பிடித்தவர்கள். நீங்கள் தொடர்ந்து இப்படியான அருமையான கவிதைகளைத் தாருங்கள். தமிழுலகம் உங்களை வாழ்த்தும், போற்றும், நன்றி கூறும்.

Anonymous said...

நேரவே கெக்கிறன். கவிதை டொட்டத்தொட என்ன பிர்ச்சினை....:)
yaro

கொழுவி said...

யாரோ சொன்னது:
//நேரவே கெக்கிறன். கவிதை டொட்டத்தொட என்ன பிர்ச்சினை....:)//

"டொட்டம்" என்றால் என்னவென்று சொல்ல முடியுமா?

Anonymous said...

கவிதை தொட்டம்.......பிரச்சினை

Sri Rangan said...
This comment has been removed by a blog administrator.
Sri Rangan said...

அற்புதமான கவிதை!

அன்பர் மஸ்ற் டூ போன்று கம்பீரமான வசனங்களோடு கவிதையாகி...
கம்பனின் கவிதா அனுபவத்தை இந்தத் தவறணையிற் கண்டேன் மஸ்ற் டூ!

வளரும் பயிரை முளையில் தெரியும்.

ஆகா! நான் செத்தபின்னும்,சாவேன்!

காதலென்றேல் யாவும்தாம்...

அற்புதமான கவிதை,தொடருங்கள் புதியவன்.

உங்களுக்கு மஸ்ற் டூ வின் துணையிருப்பதால் நிச்சியம் நல்ல எதிர்காலமுண்டு!

கொழுவி said...

ஆகா!!!
சிறிரங்கன்!
நீங்களும் இந்தத் தவறைணையில் கள்ளருந்தி விட்டீர்களா?
இப்படியான "கவி" தைகளை ஆதரித்து வளர்ப்பதே எம் உயரிய நோக்கம்.
கூடவே 'கவி' களையும்.

உங்கள் பின்னூட்டத்துக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
புதியவன் நேரங்கிடைக்கும் போது 'கவி' தைகள் புனைவார்.

Anonymous said...

நன்றி சிறீரங்கன்

Anonymous said...

எங்கே இடிக்கிறீர்கள் என்று புரிகிறது. பின்னூட்டங்களைத்தான் உங்களால் அவர்கள் போல் போட முடியும். ஆனால் நட்சத்திரக்குத்துக்களை அடைய முடியுமோ?

Muthu said...

அழகாக கவிதை எழுதுகிறீர்கள்.
நிறைய எழுதுங்கள்.

Anonymous said...

ஹி ஹி புரிஞ்சா சரி :-))

Anonymous said...

ayyo ayyo ungalai ninaiththaal pavamaga erukku pithiyavan

Anonymous said...

புதியவன்
உங்கள் கவிதையிலிருந்து என்னால் எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் கவிதை சோகத்தில் பிழிந்து எழுதப்பட்டுள்ளது. என்ன இழந்தீங்கள் யாரை இழந்தீங்கள் முடிந்தால் கொஞ்சம் தெளிவுபடுத்துகோவன்

Anonymous said...

naaykaL