Thursday, September 08, 2005

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் -3

கடந்த இரண்டு பதிவுகளுக்கும் வந்த எதிரிவினைகள் பார்த்தேன். புலிகளின் ஐனநாயக விரோத செயல்கள் படுகொலைகள் குறித்து எழுதினால், வரும் ஆபாச அருவருக்கத்தக்க பின்னூட்டங்கள் போலல்லாது(அவற்றையும் அவற்றை விட்டுவைப்பதையுமே புலி எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள் என்பது வேறு விடயம். ) இந்த பதிவு குறித்து எழுதினவர்கள் பண்பாக பொறுமையுடன் எழுதியிருந்தார்கள்.

ஆயினும் கொழுவிக்கு ஒரு ஆதங்கம் இருக்கிறது. இதுவரை நாளில் புலிகள் கடந்த காலங்களில் செய்த படுகொலைகள் ஐனநாயக விரோத செயல்கள் குறித்து எத்தனை பதிவுகள் வந்திருக்கின்றன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.

புலிகள் முஸ்லீம்களை கொலை செய்தார்கள், புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள், புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தார்கள்.. என இப்படி எத்தனை பதிவுகள்...

அப்போதெல்லாம் யாருமே எதற்காக நடந்த முடிந்தவற்றை மீண்டும் கிளறுகிறீர்கள்? இதனால் என்ன நேர்ந்து விடப் போகிறது? என கேட்கவில்லை.

இந்திய ராணுவத்தினரின் படுகொலைகள் குறித்த இந்த பதிவினை நிறுத்தச் சொன்னவர்களின் நேர்மை எங்கே வெளிப்பட்டிருக்குமென்றால், புலிகளின் நடந்து முடிந்த விரோத செயல்கள் குறித்த பதிவுகளையும் நிறுத்த சொல்லுமாறு கேட்டிருக்கும் போது மட்டுமே!

தவிரவும் பின்னூட்டம் ஒன்றில் இந்தியா எல்லாவற்றையும் மறந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது என ஒருவர் சொல்லியிருந்தார். இன்றைக்கும் இந்திய றோ வாய்ப்புக் கிடைத்தால் பிரபாகரனை போட்டுத்தள்ள தயாராக இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அதிகார பலம் அதிகரித்தவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

இந்தப் பதிவினை இங்கே மீளவும் இட்டதன் நோக்கம் இன்னும் பல இந்திய சகோதரர்களுக்கு 'அமைதி காக்க' சென்ற எங்கள் படையினரை ஏன் ஈழத்தமிழர்கள் வெறுக்கிறார்கள்? ஏன் புலிகள் யுத்தத்திற்கு இழுத்தார்கள் என்ற கேள்வி இருக்கிறது.

ஆகக் குறைந்தது அவர்களுக்கு ஒரு Out Line ஆவது கிடைக்கும் என்ற நோக்கில் இதை வெளியிட்டேன். தவிரவும் இது ஒன்றும் இணையத்திற்கு புதிய பதிவல்ல.

எனக்கும் எங்களுக்கும் எல்லாவற்றையும் மறந்து போக விருப்பம். ஆனால் நீங்கள் மட்டும் நாங்கள் செய்த கொடூரங்களை மறந்து போங்கள். ஆனால் நாங்கள் உங்களின் கொடூரச் செயல்களை நினைவு வைத்திருப்போம் என்பது என்ன நியாயம்!

எவ்வாறெனினும் எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள், எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள் எங்கள் தலைவனை நீங்கள் கொன்றீர்கள் என விடாது தொடர்பவர்களுக்கும் எனக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும் என்பதால் இதனை இந்தப் பதிவினை நிறுத்தி விடுகிறேன்.

இனி வராது.

நண்பர்களுக்கு மீண்டும் ஒரு விடயம். இப்பதிவின் நோக்கம் இந்தியாவை மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கேட்பதல்ல!

இப்படியாக எங்களுக்கு நடந்தது. இத்தனை கொடுமைகளை நாம் அனுபவித்தோம் எங்களுக்கு உண்டாகியிருக்கக் கூடிய கோபத்தை ஆதங்கத்தை கொஞ்சமாவது புரிந்து கொள்ளுங்களேன் என்பதை வெளிக்காட்டவே!

மறக்கலாம். முதல் மனிதனாக கை நீட்டுகிறேன். பதிலுக்கு நீங்களும் பற்றிக் குலுக்குவீர்களா?


13 comments:

Sri Rangan said...

கொழுவி,வணக்கம்!நேர்மையான பதிவு.

சதயம் said...

கொஞ்சம் வருத்தம்தான்.....உங்கள் முடிவில்.....

எதிர்கருத்துகள் ஜனநாயகத்தில் வைக்கப்படுவது ஆரோக்கியமானது.....அதற்கான மதிப்பையும் வாய்ப்பையும் யாரும் மறுக்கவோ மறைக்கவோ கூடாது....

மீள் பதிப்புக்கான தேவை பற்றிய ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன்......

ஒரு சின்ன யோசனை....இந்த வலைப்பதிவர்கள் எல்லாம் சேர்ந்து.....ஏன் ஈழத்தில் ஒரு சின்ன கிரமத்தை தத்தெடுத்து....அதன் வளர்ச்சிக்கு....அங்குள்ள்வரின் வாழ்க்கைக்கு.....வருமானத்துக்கு வளம் செய்யும் ஒரு திட்டத்தை இங்கே பேசி உருக்கொடுத்து செயல் படுத்த கூடாது.....திட்டம் செயல் படுமானால்.....அடுத்தடுத்த இடங்களிலும் செய்யலாமே.....சின்ன தீப்பொறி பிழம்பாய் மாறுவது போல்....

Selvam (Indian Tamil) said...

கொழுவி,வணக்கம்

Many thanks for your decision and this nice message.

கடந்த இரண்டு பதிவுகளுக்கும் வந்த எதிரிவினைகள் பார்த்தேன். புலிகளின் ஐனநாயக விரோத செயல்கள் படுகொலைகள் குறித்து எழுதினால், வரும் ஆபாச அருவருக்கத்தக்க பின்னூட்டங்கள் போலல்லாது(அவற்றையும் அவற்றை விட்டுவைப்பதையுமே புலி எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள் என்பது வேறு விடயம். ) இந்த பதிவு குறித்து எழுதினவர்கள் பண்பாக பொறுமையுடன் எழுதியிருந்தார்கள்.

very good judgement. see the people those who were written about anti LTTE article were very clear. they don't want any welfare about us. they are not only anti LTTE. they are anti tamils. their policy is oppose anything blindly linked or favour to tamil.(From DK to new coming tamil cinema leric writer. they are the supportors of rajinikanth and now they started to support vijyakanth (before not because he was seen as a Tamil movments sypthyser).).

their motto is clear.

But your case is bit clear. you are one of our tamil & wellwisher. so only i asked you to stop. it donsn't mean that i am supporting that 'erayagaran' or others.

I know well. eigther they belonging from Tamilnadu or Eeelam their motto is more or less clear. to distroy the life struggle. we have seen and seeing such media people and other personalites here. so I know they won't to be changed their views and writings.

So don't make any other meaning for not asking them to stop. I know that is meaningless. and they are cruel people. I beleive the most happiest news for them will be the distruction of Tamil identity(regardless the orgin. neigther here or elsewhere).

Few weeks back I red one of the readers(by name seens is a tamilian) comment in 'The hindu' about the sethu samudram project govt. advertisement.(it states the century long desire of tamils). he wrote why govt. mechinery allowed to use such secatrian words. should write indians. (and he was so worried about srilankas economy's bad impacts also. ask to get approvel from SL govt.). so message is very clear. the DMK minister took intiation. and all tamil parties are supporting. see he can't even digest the word 'tamil'.

We can write thse IPKF related articles later. still i am feeling your languages are good. but see the comments. how badly these will divide and setback us?

Thank you again.(sorry for not written in Tamil). i will try later, now i am so busy.

anbudan
fellow tamilian

Anonymous said...

கொழுவி! உன்னையும் வாங்கி விட்டார்களா?

Anonymous said...

புலிகளை விமர்சித்து வரும் பதிவுகளில்
இடப்படும் ஆபாசபின்னூட்டங்கள் பற்றி
எனக்கென்னவோ சந்தேகம் இருப்பது
உண்மை.அது ஏன் புலி ஆதரவளர்களால் இடப்பட்டது என்று
கொள்ளவேண்டும்.எனக்கென்ன்வோ
இதில் சந்தேகம் தான்.

நடந்தவைகளை மறந்து நேசக்கரம் நீட்டத்தான் புலிகளும் சரி,ஈழத்தமிழர்களும் சரி விரும்ம்புகின்றனர். ஆனால் இந்தியா?
இப்போதும் எதிரியாகவே பார்க்கின்றன்ரே.

இது கருத்துக்களை சுதந்திரமாக் வெளிப்படுத்தும் இடம்.புலிகளை ஆதரித்தும் எழுதலாம் எதிர்த்தும் எழுதலாம்.இந்தியாவை எதிர்த்தும் எழுதாலம் ஆதரித்தும் எழுதலாம்.கருணாநிதிக்கு ஆதரவாகவும்'
எழுதாலாம் எதிராகவும் எழுதலாம்.அது போலவே,ஜெயலலிதா,
ராம்தாஸ்,திருமாவளவன்,வைகோ
இன்னபிறதமிழர்களைப்பற்றியும் விமர்சிக்கலாம்.
அது அவரவர் விருப்பம்.சுதந்திரம்.

இருந்தும் இந்தியாவை விமர்சிப்பது ப்லரையும் மனத்தாங்கலடையவைக்கும்
என்பதன் காரண்மாக இந்த பதிவை
நிறுத்துவதாக கொழுவி சொல்லியிருக்கிறார்.அவரின் கருத்து
அவரின் சுதந்திரம்.

//எனக்கும் எங்களுக்கும் எல்லாவற்றையும் மறந்து போக விருப்பம். ஆனால் நீங்கள் மட்டும் நாங்கள் செய்த கொடூரங்களை மறந்து போங்கள். ஆனால் நாங்கள் உங்களின் கொடூரச் செயல்களை நினைவு வைத்திருப்போம் என்பது என்ன நியாயம்//

அப்படி போடுங்கள்.
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.
காஸ்மீரிலிருந்தோ,அசாமிலிருந்தோ,மணிப்பூரிலிருந்தோ,தெலுங்கானாவிலிருந்தோ
ஒரு பதிவு வந்தால் இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் நாற்றம் தெரியவரும்.அதுவரையில் பிழைத்துப்
போங்கள்.

இந்திய அம்மணமாக்கும் படையின்
நடவடிக்கைகளுக்கு ஆதாரம் வேண்டும்
எனில் சில முன்னாள் தளபதிகள் வெளியிட்ட நூல்கள்,ஏன் முன்னாள்
பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஸின் இது தொடர்பான புத்தகம் போன்றவற்றை புரட்டிப்பாருங்கள்.இது புலிகளின் புரட்டு
இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை
சொல்பவர்களுக்காக

Nanjil Stephen said...

dear koluvi vanakkam

very good move.

me too the same thougths of selvam.(how we both are in same magnitude???)

i been in Baroda few years back. most of my colleauges admitted IPKF aggression. but beleived rajiv made it for india safety.(by that he avoided america getting triconamalai port - i don't know wether it is true?). i am not accept that to sacrifice tamils for india's south asia super power.

selvam why can't you share your views?

we need such praticle leaders and forthfronters now.

madhamatraven said...

nanba kozhuvi.........
neenga oru sirandha banbalarnu ongal mudivu therya paduthudhu, ongaludaya warapra katturaikala padikka awala irukkan nanri

nanba selvam... ongaludaya karuthukal migaum seriyanawainu nan ninaikren. nama pirappal thamizhar dhan irundhalum nammudaya onarvugalala, pinaipala indian dhanu solliteenga (kozhuvi gavanikkaum ennudaya thalaivan yeppaum prabakar dhan edhil sandhegamey illa) 2nd mudindhavaikalai marandhu pudhiyavaikalai varawerpom nanri selvam.

Anonymous said...

கொழுவி உன்னைப் போல ஆட்களாலை தான் அவங்கள் ஏறி மிதிக்கிறாங்கள்.. நீ இந்தியரிடம் பாராட்டுப் பத்திரம் பெறுவதற்காக எங்கடை துன்பத்தை மறந்திட்டாய்.

கொழுவி said...

நாஞ்சில், மதமற்றவன், சத்யம் உங்களுக்கு நன்றி .. விரிவாக எழுதுகிறேன்..

Nambi said...

Hi,
I think you should continue to write.

Selvam said...

ஒரு சின்ன யோசனை....இந்த வலைப்பதிவர்கள் எல்லாம் சேர்ந்து.....ஏன் ஈழத்தில் ஒரு சின்ன கிரமத்தை தத்தெடுத்து....அதன் வளர்ச்சிக்கு....அங்குள்ள்வரின் வாழ்க்கைக்கு.....வருமானத்துக்கு வளம் செய்யும் ஒரு திட்டத்தை இங்கே பேசி உருக்கொடுத்து செயல் படுத்த கூடாது.....திட்டம் செயல் படுமானால்.....அடுத்தடுத்த இடங்களிலும் செய்யலாமே.....சின்ன தீப்பொறி பிழம்பாய் மாறுவது போல்....

yes. think about this

Tamil Circle said...

இக்கட்டுரை 1992 இல் சமர் 4 இல் எழுதியவை இதற்கு முன் சமர் ராஜீவ் கொலை தொடர்பாக எழுதியது. அது இணையத்தில் பொடக் கூடிய வகையில் கைவசம் இல்லை. அதை சமரில் பார்க்க முடியும். கட்டரைக்கு வந்த கடிதம் ஒன்றுக்கு எழுதிய பதிலே இது

ராஜீவ் கொலை தொடர்பாக


ராஜீவ் கொல்லப்பட்டது வெறும் பழிவாங்கல் நடவடிக்கையல்ல, அதே நேரம் அந்தக் கொலையை செய்தது புலிகள் தான் என்று நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள் எனப் புரியவில்லை? என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இக் கொலை தொடர்பாக இந்திய ஆளும்வர்க்கத்தின் முதலாளித்துவ தொடர்பு சாதனங்களினூடாகவே பொதுவான தகவல்கள் வெளிவந்த போதிலும.; விடுதலைப் புலிகள் தான் இக்கொலையைச் செய்திருக்கின்றனர் என்பதிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் பலதற்போது இந்தியாவில் வெளியாகியிருகிறன. இங்கு கொல்லப்பட்ட ராஜிவ் காந்தியும், கொலையாளியும் ஆயிரகனக்கணக்கான மக்களை கொலைசெய்தும், அவர்களின் ஆதிக்கதிற்ற்கு கீழ் உள்ள மக்களை மரணத்திற்கு தள்ளி தாம் ஏகபோகத்தை அனுபவித்தார்கள். ராஜிவைக் கொலைசெய்தது விடுதலைப்புலிகள் தான் என்பதை பிரபாகரன் உரிமை கோரினால் தான் ஏற்றுக்கொள்ளலாம் என்பதில்லை. ராஜீவ் காந்தியை கொலை செய்ய வி-பி-சிங்கின் தேர்தல் பிரச்சாரகூட்டத்திலேயே சிவராசன் ஒத்திகை பார்த்ததையும் ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில்,பிரச்சார மேடையருகில் விடுதலைப்புலிகளின் சிவராசனும் அவனது சகாக்களும் நின்றதும், குண்டுவெடித்ததும்,இந்தியபுலனாய்வுத் துறையால் வெளியிடப்பட்ட தகவல்களும்,இறுதியாக கொலையாளிகளின் மறைவிடம் பெங்களுரில் முற்றுகைன்கு உள்ளான போது அவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் உண்மை.ஏன் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கள் இல்லை என்று அறிவித்ததும் உண்மைதான். ஆனால் கொலையை செய்து முடித்த சிவராசன்,சுபா போன்றோர் தமது அமைப்பு இல்லை என்று எந்த சந்தர்பத்திலும் பாலசிங்கமோ-பிரபாகரனோ குறிப்பிடவில்லை.

ராஜீவ் கொலைக்கு அரசியல் காரணம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளீர்கள் விடுதலைப்புலிகள் என்ற தரகுமுதலாளித்துவ பாசிசக்கும்பலுக்கும் ராஜீவ்காந்திக்கும் இடையிலான முரண்பாடு என்பது பல்வேறு அரசியல் .பூகோள, இராணுவ நலங்களுக்கு உட்பட்டதே! இலங்கை-இந்தியா இந்தியா-பாக்கிஸ்தான் ஆகியவற்றிற்கிடையிலான முரண்பாடுகளுடைய அரசியல் அடிப்டையும் விடுதலைப்புலிகள்-இந்திய அரசு ஆகியவற்றின் நலங்களுக்கு இடையிலான அரசியல் அடிப்படையும் ஒரே பிரச்சனைத்தளத்திருந்தே பார்க்கபட முடியும். இது தவிர புலிகளின் இராணுவ நலங்களும் இதற்கு உட்பட்டதே! இந்தியாவின் பிராந்திய வல்லரசு மனேபாவம், ஏகாதிபத்தியங்களுடனான இந்தியாவுற்கு இருந்த சுயதீனமுள்ள உறவும், இந்திய புலிகள் முரண்பாட்டுக்கு மேலும் வலுவுள்ள காரணங்களாக அமைந்திருந்தன. இது தவிர ராஜீவ் கொலையினூடாக சாதிக்கக்கூடியதாக இருந்ததும் குறிப்பிட தக்கது.

இந்திய தேசியத்தை கட்டிகாத்து வரும் நேரு பரம்பரையின் இறுதி நாயகன் தெற்காசிய தேசியத்தின் கவர்ச்சி மிகுந்த தலைவன், இவரை கொலை செய்வதன் மூலம் மேலும் இந்திய தேசியத்தையும், தெற்காசியாவில் இந்தியாவின் உறுதியான ஆதிக்கத்தையும் குலைக்க முடியும்... உங்களது இந்தக்கூற்றை சரியென்று கூறினால் துரோகத்தனம் பிழையென்று கூறினால் வரட்டுத்தனம். இந்தியாவானது, தனதுதேவைக்கு அதிகமான சந்தையை கொண்டுள்ள ஒரு நாடு. இந்த
ஒரு காரணம் இந்தியாவுற்கு வலுவையும், சுயாதீனத்தையும் கொடுத்துள்ளது. இந்திய தரகு முதாலாளித்துவம் ஏனைய மூன்றாம்; உலக நாடுகளிலுள்ள தரகு முதலாளித்துவத்தை விட சற்று வித்தியாசமான இயல்புகளை, இதன் அடிப்படையிலேயே கொண்டுள்ளது. ஏகாத்பத்தியங்களுக்க்கு இடையிலான உள்முரண்பாடுகளை தனது நலங்களுக்கு சாதகமாக இந்திய தரகு முதலாளித்துவம் பாவித்துக்கொள்கிறது. எந்த ஏகாதிபத்தியம் இந்திய தரகு முதலாளித்துவத்தின் நலன்கட்டுபடுத்த முயல்கிறதோ, தரகு முதலாளித்துவம் இன்னோரு ஏகாதிபத்தியத்துடன் குறித்த ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக உறவை வளர்த்துக்கொள்கிறது. இது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஓரு சுயாதீனம் இருப்பதைப் போன்று வெளித்தோன்றல் ஒன்றை கொடுக்கின்றதே ஒழிய உண்மையில் இந்தஆளும் வர்க்கம் இந்திய தேசியத்திற்கு எதிரானதே! இந்தியாவிற்கு இருக்கின்ற இந்த சுயதீனத்தின் அடிப்படையில் இருந்து எழுகின்ற பிராந்திய வல்லரசு மனேபாவமும், தெற்காசியாவின் மொத்த நலனுக்கும் எதிரானது. இதுவே எமது கருத்து!

80 கோடி மக்களின் வாழ்வுடன் விளையாடியவர்கள் நேருபரம்பரையினர். தமிழகத்தில் பிரிவினைவாதம் வளர காரணமானக இருந்தவர்கள். தெலுங்கான மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்கியவர்கள் கஷ்மீர் மக்களை யுத்தநிலைக்கு தள்ளியவர்கள் பஞசாப்பில் காங்கிரஸ் என்றாலே காறி உமிழ்கின்ற அளவுக்கு காங்கிரசின் தேசியத்தன்மை வளர்ந்து உள்ளது அசாமில் தோன்றிவுள்ள பதட்டநிலை வடகிழக்கிந்தியாவில் தோன்றியுள்ள பிரிவினைவாதப் போக்கு இவற்றை எல்லாம் நோக்கும் போது, இந்திய தேசியம் என்றால் என்னவென்று கேட்கத்தோன்றுகிறது? தென்;கிழக்கு ஆசியாவில் பாக்கிஸ்தானுடன் மூன்று யுத்தத்தை நடாத்தியது.சீனாவுடன் யுத்தம் நடத்தி தோழ்வியை கண்டது.பங்களாதேசத்தினை சூறையாடியது. ஈழமக்களை கொன்று குதறியது. பூட்டான் மீது ஏற்படுத்தும் நெருக்கடி. நேபாளத்திற்கு எதிரான பொருளாதர தடை இதையெல்லாம் நோக்கும்போது தென்கிழக்காசியாவில் இந்திய விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட ஒரு பேட்டை ரவுடியாக பரிணமிப்பதை பார்க்கலாம்.

எமது கட்டுரையில் தென்கிழக்காசியா விடுதலையை நோக்கி.... என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பாக ஈழவிடுதலைப் போராட்டம் என்பது உலகப்புரட்சியின் ஒரு பகுதியே. இது உடனடித்தேவையாக தென்கிழக்காசிய விடுதலையுடன் தவிர்க்க முடியாமல் பினைக்கப்பட்டுள்ளது.
;
எந்த அடிப்படையில் பிரச்சனையைத்தீர்பது என்பது குறித்த உங்கள் கருத்து தொடர்பான சகல பிரச்சனைகளுமே ஆழமான கருத்து விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய உடனடிப்பிரச்சனைகளாகும்.

-ஆசிரியர் குழு-
பி.இரயாகரன்

Anonymous said...

அவங்கள் வலு பக்குவமா கதைச்சு நிப்பாட்டிப் போட்டாங்கள். நீ அதை நம்பி ஏமாந்து போயிட்டியே!