எல்லாரும் அமோகமாப் படம் காட்டிக்கொண்டிருக்கிறாங்கள்.
உந்த நேரத்தில நான் பேசாமக்கிடந்தா வலைப்பதிவுகளிலயிருந்து அடிச்சுக் கலைச்சுப் போடுவாங்களோ எண்டு பயந்து போனன்.
உடன என்ர கமராவ எடுத்துக்கொண்டு ஓடினன், ஓடினன், ஓடினன்.
வாத்துக்களைக் காணுமட்டும் ஓடினன்.
கடசியல இதுகள் தான் அகப்பட்டிச்சு.
அப்பாடி ஒருமாதிரிப் பொருத்தமான படங்கள் போட்டாச்சு.
சின்னவனின்ர போட்டியில பங்குபற்றிற தகுதி இந்தப் படங்களுக்கிருந்தா இதுகளைச் சேத்துக் கொள்ளலாம்.
ஒருபடத்தில மட்டும் வேற ஆக்கள் நிக்கினம்.
அவயளக் கணக்கில எடுக்காதையுங்கோ.
அவசரத்தில எடுத்த படங்கள்.
கொஞ்சம் அப்பிடியிப்பிடித்தான் இருக்கும்.
சலிச்சுக் கொள்ளாதையுங்கோ.
தமிழ்ப்பதிவுகள்
8 comments:
படங்கள் நன்றாக வந்துள்ளன.
கொழுவி, உங்க படங்கள் சூப்பர்...அதைவிட உங்க தமிழ் சூப்பரோ சூப்பர்!
கொழுவி,இந்த வாத்துக்களை எங்கே பிடித்திர்கள்?எல்லாம் நம்ம நிறத்தோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கிறது!
நன்றி கார்த்திக், வி.எம். மற்றும் சிறிரங்கன்.
இது என்ர வீட்டுக்குக் கிட்டவாயிருக்கிற ஒரு பூங்காவில எடுத்தது.
இதுக்கு மேல இடத்தப் பற்றின தகவலுகள் தர ஏலாது (பாதுகாப்புக் காரணங்களுக்காக)
எனக்கும் உந்தக் கறுப்புகளில ஒரு வாரப்பாடு. நீங்கள் சொன்னமாதிரி எங்கட நிறத்துக்குக் கிட்டவாயிருக்கிறது தானோ?
அவசரத்தில எடுத்த படங்கள். எனக்குத் திருப்தியில்ல.
//உங்க தமிழ் சூப்பரோ சூப்பர்//
வி.எம். தமிழின்ர சிறப்பைக் கூட 'சூப்பர்' எண்டுதான் சொல்லவேண்டிக்கிடக்கு.
நான் சும்மா பகிடிக்கு. பிறகு என்ர பதிவில தூயதமிழ் தேடாதையுங்கோ.
தமிழகத்தின் பார்ப்பன நாய்களுக்கு வக்காலத்து வாங்க வந்த இலங்கை அகதியே,
உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது. உங்கள் படங்களும் நன்று.
ச.திருமலை.
koluvi ungalauku pon mudayadum vaathu kathai theriuma?
தெரியும் சினேகிதி.
அதை எதுக்குக் கேக்கிறியள்?
ஏதோ என்ர பக்கமும் உங்கள மாதிரிச் சீமாட்டியள் வந்து பாத்திருக்கிறயள்.
Post a Comment