Saturday, September 03, 2005

காணாமற் போனோர் பட்டியல்

தமிழ்வலைப்பதிவுக் கூட்டத்தில் அண்மைக்காலத்திற் காணாமற்போனோரின் பட்டியலொன்றை இங்கே வெளியிடுகிறேன்.
இவர்களைக் கண்டுபிடிப்பவர்கள் எனக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சன்மானம் பேசித் தீர்க்கப்படும்.

சிப்பிக்குள் முத்து. (முத்தெடுக்கப் போயிருப்பாரோ?)
அல்வாசிட்டி விஜய் (அல்வா குடுத்திட்டாரோ?)
மரம் (யாராவது தறித்துவிட்டார்களோ?)
பெடியன்கள்(உள்ளே போட்டுவிட்டார்களோ?)

இவர்களைத் திரும்பி வரச்சொல்லி ஆராவது கண்ணீர்க் கவிதைகள் எழுதியனுப்பலாம்.
எனக்குக் கவித வராதுங்கோ.

இவர்களைவிட இன்னும் பலர் காணாமற்போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
கூட்டாகத் தேடுவோம்.

4 comments:

This is NOT uknowwho said...

கொழுவி, உங்க பதிவை பெடியன்கள் முடக்கியதாக கூறப்பட்ட காலகட்டத்திலே நான் அதற்கு ஒரு கண்டண அறிக்கை தயார் செய்த நிலையிலை உங்களுக்கும் பெடியன்களுக்கும் ஏதோ ஒட்டுறவு இருப்பதாக சொல்லப்பட்டது... அது உண்மையா?

வீ. எம் said...

Simple and Sweet ! :)

comments ellam super kozhuvi

கொழுவி said...

கருத்துக்கு நன்றி NOT uknowwho மற்றும் வி.எம்.
NOT uknowwho,
பெடியன்களை நையாண்டி செய்து முதன்முதலிற் பதிவு போட்டவனே நான்தான். அதனால்தான் என்னைத் தடைசெய்ததாகச் சொல்லப்பட்டது.
ஆனால் 3 நாட்கள் இத்தளம் வேலை செய்யவில்லையென்பது உண்மைதான். அதைவைத்து சிறிரங்கன் கூட வேறொரு பதிவில் கவலைப்பட்டிருந்தார்.
இதுவரை பெடியன்களுக்கும் எனக்கும் கூட்டு இல்லை. ஆனால் எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கலாமா என்று யோசிக்கிறோம்.

வி.எம்,
பதிலுக்கு நன்றி. என்னத்தைத்தான் எழுதியும் இன்னும் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லையே.
பாவம். திருவிழாவிற் தொலைந்த குழந்தைகளாக எங்கே அலைந்து கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

அப்டிப்போடு... said...

அட கொழுவி., எங்களையெல்லாம் தேடியிருக்கிறீர்கள் நன்றி.

//மரம் (யாராவது தறித்துவிட்டார்களோ?)//

நம்மளத் தறிக்க முடியுமா?., அப்படியேயானாலும் நாங்க தறிக்கத் தறிக்க தழைப்போமில்ல?.