இது தொடர்பாக அனுரா பண்டாரநாயக்க கூறியுள்ளதாவது:
சிறிலங்கா பிரதமர் பதவியை எனக்கு மகிந்த ராஜபக்ச அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் நடைமுறையை உணர்ந்தவன். முட்டாள் அல்ல.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எனது பெயர்தான் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறிலங்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக கட்சியின் மத்தியக் குழு பரிந்துரைத்த நபர் அல்லாத வேறு நபருக்கு பிரதமர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீண்டும் மத்தியக் குழுவில்தான் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை.
ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக நியமித்ததில் எனக்கு வருத்தம் இல்லை. யாராக இருந்தாலும் பிரதமர் என்பவர் பயனற்றவர். வாகன வசதிகளோடு ஆடம்பரமாகச் சென்று திறப்பு விழாக்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்லத்தான் அந்தப் பதவி பயன்படும். அந்த வகையான பதவியை நான் விரும்பவில்லை. அதிகாரத்துடன் இயங்கக் கூடிய பதவிதான் நான் விரும்புவது.
எனக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நான் செயற்படவில்லை. கம்பஹாவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த வெற்றி பெறுவார் என்று அவரிடம் உறுதியளித்திருந்தேன். அதுதான் நடந்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளும் சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுக்களும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுதான் மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தில் என்னை முழுமையாக ஈடுபட விடாமல் தடுத்தது.
ஒருகாலத்தில் ஜே.வி.பி.யை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைத்தது நான் தான். ஆனால் அவர்கள் எப்போதே ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலக முடிவெடுத்தார்களோ அப்போதே தனக்கும் ஜே.வி.பிக்குமான உறவு முறிந்துபோய்விட்டது.
சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு சந்திரிகா மீண்டும் வருவாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அது தொடர்பில் முன்பு என்னோடு கதைத்திருக்கிறார். பின்னர் அது குறித்து கதைப்பதில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் வரைதான அவருடன் தொடர்பில் இருந்தேன். அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ளவில்லை. சாதாரணமாக தொலைபேசியில் பேசுவதை சந்திரிகா தவிர்ப்பார். அது பாதுகாப்பற்றது என்றும் கருதுபவர் அவர். அதனால் அவரை நேரில்தான் சந்திக்க வேண்டும். அவரைச் சந்திப்பதற்கு காத்திருக்க வேண்டும்.
தென்னிலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை இனப்பிரச்சனை தொடர்பாக பெறுவதை விட அரசாங்கம் முதலில் தனது கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். தென்னிலங்கையின் லங்கா சம சமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இனப்பிரச்சனை தொடர்பான கொள்கைகள் நல்ல முற்போக்கானவை என்றார் அனுரா பண்டாரநாயக்க.
---------------------------------------
பிரதமர் பதிவி கிடைத்திருந்தால் கடைசிப்பத்தியல்
சொல்லப்பட்டவை எப்படியிருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
---------------------------------------
நன்றி:- புதினம்.
4 comments:
dai koluvee naya
sonthama eeluuthuu copy and paste saiiyathea
கொழுவி,வணக்கம்!இங்கே நீங்களிட்ட படங்களைப் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன்.எப்போதாவது இதைப் பயன்படுத்துவேன்.அதற்குத் தங்கள் அனுமதி தேவை.இந்தப் பதிவுக்கும் செய்திக்கும் நன்றி.
ஹஹஹஹஹ....
சிறிரங்கன் அண்ணோய்,
நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. இதன் இணைய முகவரியை எடுத்துவைத்தாலே போதுமானது. படங்கள் பாவிக்க எனது அனுமதி தேவையில்லை. இவை என்னுடையவையல்ல.
ஆனால் சந்தர்ப்பமொன்றுக்குக் காத்திருக்கிறீர்களென்பது மட்டும் புரிகிறது.
நடத்துங்கோ. நீங்கள் எங்கே பாவிக்கப்போகிறீர்களென்று தெரியவில்லை. ஆனால் அனுராவின் கூற்றுக்கு நான் பாவித்த தலைப்பும் படங்களும் கச்சிதமான பொருத்தமென்பதில் உங்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.
Post a Comment