'கப்டன்' எனச் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்துக்கு சினிமாச் செய்திகளை வெளியிடும் இணையத்தளமொன்று துரோகமி'ளை'த்துள்ளது.
சினிசெளத் என்ற இவ்விணையத் தளத்தில் நடிகர்களின் புகைப்படங்கள் இருக்கும் பகுதியில் 'கப்டனின்' பெயர் 'சாயாசிங்' என்று எழுதப்பட்டுள்ளது.
சாயாசிங் என்பவர் நடிகை என்று தெரிந்திருந்தும் 'கப்டனின்' படத்துக்கு அவர்பெயரைப் பயன்படுத்தியதில் நிச்சயம் ஏதாவது உள்நோக்கம் இருக்க வேண்டும்.
வீரமிக்க, அஞ்சாநெஞ்சன் விஜயகாந்துக்கு பெண்ணின் பெயரைப் போடுவதூடாக என்ன சொல்ல வருகிறார்கள்?
இதன்பின் ஆழமான அரசியற்சதியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
இதையெதிர்த்து கடும் போராட்டம் நடத்த எண்ணியுள்ளோம்.
விரைவில் அதற்கான அறிவித்தல்கள் வரும்.
இதேவேளை, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு எதுவுமே செய்யாமல் 'ஜல்லி'யடித்துக்கொண்டிருக்கும் "மதுரைத் தருமி"யையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் 'தருமி'யென்ற பெயரென்னத்துக்கு?
'சிறை சென்ற செம்மல்' தருமியா இப்படி?
'மதுரைத் தமிழ'னின் மானம் காக்க
மீண்டுமொரு போருக்கு தருமியை அழைக்கிறோம்.
14 comments:
தே.மு.தி.க. மாவட்ட தலைவருக்கு தர்ம அடி -3 கார்கள் சேதம் காரை ரிவர்ஸ் எடுத்து தப்பினார் விஜயகாந்த்
ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தேசிய முற்போக்கு திராவிட கழக விருதுநகர் மாவட்ட தலைவர் தாமோதர கண்ணனை அடித்து உதைத்தனர். இக்கட்சியை சேர்ந்த கிராம தொண்டர்கள் கல்வீசி தாக்கியதில் 3 கார்கள் சேதம் அடைந்தன. இதைப் பார்த்த விஜயகாந்த் சினிமா காட்சி போல் காரை வேகமாக பின் னோக்கி ஒட்டிச் சென்று தப்பினார்.
திருவில்லிபுத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பல இடங்களில் பேசினார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விஜயகாந்த் மேல தொட்டிய பட்டி கிராமம் வழியாக பல கிராமங்களுக்கு செல்ல வந்தார். மேல தொட்டிய பட்டி ஊருக்குள் வராமல் மெயின் ரோடு வழியாக் செல்ல முயன்ற விஜயகாந்த் வாகனத்தை அவரது கட்சியினர் டிராக்டரை வைத்து மறித்தனர். ஊருக்குள் வருமாறு விஜயகாந்தை அழைத் தனர். அவர் ஏற்கனவே மூடு அவுட்டாகி இருந்ததால் வர முடியாது என்று கூறிவிட்டார்.
நிர்வாகிகள் கிராம மக்களை கடுமையான வார்த் தைகளால் திட்டினர். ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மாவட்ட தலைவர் தாமோதர கண்ணனை சரமாரியாக கம்பால் அடித்தனர். விஜயகாந்த் சினிமா போல் தனது காரை பின்னோக்கி மிக வேகமாக ஓட்டிச் சென்று தப்பி ஓடினார்.
கிராமத்து கட்சியினர் சரமாரியாக கற்கள் கம்பு கட்டைகளை வீசி அடித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் ராஜா கார் உள்பட விஜய காந்துடன் வந்த 3 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கட்சி கொடி பேனர் டிஜிட்டல் கட் அவுட்-களை உடைத்து கிழித்து தீ வைத்தனர். என்ன நடந்தது என்றுகூட தெரியாமல் விஜயகாந்த் கார் மின்னல் வேகத்தில் பறந்தது. இது அவரது கட்சியினரை மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது.
dinakaran.com
விரைவில் எதிர்பாருங்கள்
ஆண்சிங்கம் விசயகாந்துக்கு பெண் பெயர் வைத்ததன் பின்னாலுள்ள உள்குத்து அர்சியல் பாகம் I, பாகம் II
கொழுவி - :-))
முகமூடி - =)))
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஜயகாந்த் ஊருக்குள் வராததால் தொண்டர்கள் அவர் வந்த வேன் மீது கல் வீசினார்கள்.
சுற்று பயணம்
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3-வது நாளாக சுற்று பயணம் செய்தார். ராஜ பாளையம் பகுதியில் சுற்று பயணத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 9.10 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தார்.
அப்போது மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் ராமராஜ், மாவட்ட தலைவர் தாமோதரக்கண்ணன், மாவட்ட செயலாளர் வைரமுனி மற்றும் ஒன்றிய, மாவட்ட, நிர்வாகி கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதனையத்து மாரியம்மன் கோவில் முன்பு விஜயகாந்த் பேசினார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் ரோட்டில் உள்ள நூற் பாலை முன்பு வைத்து கட்சி நிர்வாகிகள் விஜயகாந்தக்கு வர வேற்பு கொடுத்தனர். அங்கு திறந்த வேனில் நின்றவாரே பேசினார்.
பின்னர் அவர் மேலதொட்டிய பட்டி, பிள்ளையார்நத்தம் சென்று வத்திராயிருப்பு செல்வதாக இருந்தது. ஆனால் இரவு அதிக நேரம் ஆகி விட்டதால் மேல தொட்டியபட்டி, பிள்ளையார் நத்தம் செல்லாமல் வத்தி ராயிருப்பு செல்ல வேனை திருப் பினர். இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் தலை வரே எங்க ஊருக்குள் வர வேண்டும், இல்லையென்றால் வேனை விடமாட்டோம் என ஆக்ரோஷமாக பேசி வேனை சுற்றி நின்று கொண்டனர்.
சிலர் வேனின் முன்பு படுத்து மறியல் செய்தனர். நேரம் ஆகி விட்டதால் வரமுடியவில்லை என்று விஜயகாந்த் கூறியும், அவர்கள் நகரவில்லை. இதனால் வேனை பின் நோக்கி நகர்த்தி வேனை வேகமாக எடுத்து சென்றனர்.
கல்வீச்சு
இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் விஜயகாந்தின் கண் எதிரே கொடி கம்பங்கள், போஸ்டர்களை கிழித்து எரிந்தனர். மேலும் அங்கு கட்டப்பட்டு இருந்த 100க்கும் மேற்பட்ட டிïப் லைட்டுகளை அடித்து நொறுக்கினார்கள். விஜயகாந்தின் வேன் பின்னால் சரமாறியாக கற்களால் தாக்கினார்கள். இதற்கிடையில் விஜயகாந்தின் பின்னால் வந்த ஒன்றிய செயலாளர் ராஜா காரை பொது மக்கள் சுற்றி முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டனர். விஜய காந்த் வேன் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினத்தந்தி
மேலும் தகவல்கலுக்கு இங்கே சொடுக்கவும். http://www.tamilcinema.com/cinenews/galatta/galatta10.asp
ஒரு சிறு தவற்றினால் (அதுபோல்தான் உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்; அதுவே 'எங்கள்' குறிக்கோள்!)எவ்வளவு மைலேஜ் எங்கள் காப்டனுக்குக் கிடைத்துவிட்டது என்பது இப்போது உங்களுக்குப் புரியும் என்ற எண்ணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் இந்த நேரத்தில், இது போன்ற சலசலப்புகளுக்கெல்லாம் காப்டனோ, அவரின் பின்னாலுள்ள தொண்டர்குழுவோ அசைந்துவிடும் என்று நினைப்போருக்கு நான் நினைவுறுத்த ஆசைப்படுவதெல்லாம் இது வீண் ஆசை என்ற ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லிக்கொண்டு.........
கொழுவி, மேலேயுள்ள பின்னூட்டங்களில் தவறான ஒன்று இருக்கிறதே அதை நீக்கினால் நன்றாக இருக்காதா; நீக்கிவிடுங்களேன். please
வருங்கால (அது எப்போங்க வரும்) முதல்வனுக்குப் பெண் பெயரா? தெலுங்கு எனது தாய்மொலி தான் என்றாலும் தமில் தான் நான் கர்ஜித்த முதல் மொலி என்ற தென்"பாண்டி"(கண்ணு செவந்திடும் பாண்டிங்கோ இது) சிங்கத்துக்கு வடக்கத்தியப் பெண் பெயரா...
koluvi cinesouth adikkadi
parpengal pola irukke..? athuvum
picture gallery ellam thavaramal
parkireenga enru puriyuthu..
விஜயகாந்த் மிகவும் கண்ணியமானவர்.
மிக பண்பாடானவர் (இன்று அவர் மனைவிதான் தெய்வம் என்று சொன்னதாக படித்து மகிழ்ந்தேன்)
நேர்மையானவர்.
இரட்டை வேழம் போடாதவர்.
இந்த நான்கு விஷயங்களிலும் அவர் இந்த தமிழக அரசியல்வாதிகள் எனும் குட்டையில் ஊறும் எருமைகளுக்கு மாறானவர்.
மேலும், கடவுள் பக்தி கொண்டவர். பாவம் பழிக்கு அஞ்சுபவர். பகுத்தறிவு என்று சொல்லி, பதுக்கும் அறிவு நிரம்பிய மற்றவர்களிடம் இருந்து வேறு பட்டவர்.
இக்காரணங்களினால், அவர் ஆட்சி அமையவேண்டும் என்று பல்லாயிரக்காணவர்களைப் போல நானும் ஆசைப்படுகிறேன்.
அவர் நல்ல ஆட்சி கொடுப்பாரா? அவர் அரசியல் சாக்கடையில் ஊறினபின் மாறுவாரா? என்பதெல்லாம் இப்போது பிரச்னையில்லை.
தங்கள் அவருக்கு கொடுக்கும் ஆதரவு பதிவுகளுக்கு மிக்க நன்றி. மக்களுக்கு உண்மை தெரிய இப்பதிவுகள் மிக உதவும்.
நன்றி
விஜயகாந்தின் அரசியல்
திரைப்படங்களில் சாதிகளைச் சாதிச்சங்கங்களை எதிர்க்கும் கதாநாயகனாகத் தன்னைக் காட்டிவந்த விஜயகாந். இப்போது சாதி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரமென்று முத்தாக உதிர்க்கின்றார். தனது சுயநல அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என நினைக்கும் இவர் மற்ற அரசியல்வாதிகளைக் கிண்டலடிப்பதுதான் நகைச்சுவை. தான் அரசியலுக்கு வந்தால் இலஞ்சத்தை ஒளிப்பேன் என்பவர் நாளை அரசியலுக்கு வந்தபின் அதற்கும் ஏதாவது சொல்லுவார். இப்படியான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்
test
Post a Comment