அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்குக் கிழக்கில் நடைபெற்றுவரும் அசம்பாவிதங்கள் அதிகரித்துவருகிறது.
இவ்வளவுநாளும் கிழக்குப் பகுதிதான் சிக்கல் நிறைந்ததாய் இருந்துவந்தது. இருதரப்பிலும் மாறிமாறி கொலைகள் நிகழ்ந்துவந்தன. இப்போது அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது.
கைக்குண்டுத் தாக்குதல்களாக இருந்துவந்தவை இன்று கண்ணிவெடித்தாக்குதலாக மாறியுள்ளதுடன் இராணுவத்தினர் கொல்லப்பட்டுமுள்ளனர். 3 தினங்களுக்கு முன் இரு இளைஞர்கள் (இராணுவப் புலனாய்வுத் துறையால் என்று மக்கள் சொல்கிறார்கள்) சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நிலைமை கடுமையானது. மக்கள் வீதிகளை அடைத்துப் போராட்டம் நடத்தினர். தென்மராட்சியில் இராணுவ வாகனத் தொடரணி மறித்து திருப்பி அனுப்பப்பட்டது.
பின் கடந்த 3 நாட்களில் தென்மராட்சி, வடமராட்சியில் சில கைக்குண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன. சில இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர். இன்று கோண்டாவிலில் உழவுஇயந்திரத்தில் சென்ற இராணுவத்தினர் கண்ணிவெடியில் சிக்கியுள்ளனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் குறைந்தது 3 பேர் காயமடைந்துள்ளனர்.
நிற்க, திருகோணமலையில் தமிழர் - முஸ்லீம் தரப்பில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான அச்சம் நிலவுவதாக அறியப்படுகிறது.
நிலைமை வரவர மோசமடைகிறதென்றே படுகிறது. இதுபற்றி போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவிக்கையில்,
"There is a real danger that these disturbances and hostilities can spread and result in an irreparable deterioration of security
9 comments:
மேலே வந்த இரண்டு கோமாளிப் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
அவை ஜனநாயகத்தின் பதிவில் இடப்பட்ட பின்னூட்டங்களின் நகல்கள். அவை இப்பதிவுக்குச் சம்பந்தமில்லையாதலால் அழிக்கப்பட்டன.
------------------------------
நிற்க, இன்றும் யாழ்ப்பாணத்தில் ஒரு கண்ணிவெடித்தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இது அண்மையில் யாழில் நடந்த இரண்டாவது கண்ணிவெடித்தாக்குதலாகும்.
இதைவிட கிழக்கில் புலிகளின் பகுதிக்குள் தாக்குதல் நடந்தவந்த ஒட்டுப்படைகள் மீதான புலிகளின் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். கருணா படை என்ற பெயரில் இயங்கிவந்த ஆயுதக்குழுவின் முக்கியமான நால்வரே இதில் கொல்லப்பட்டவர்கள். மேலும் இருவர் சரணடைந்துள்ளனர். கிழக்குப்பகுதியில் அண்மையில் நடந்த முஸ்லீம்கள் கொலைக்குத் தாமே காரணமென்பதை அவர்கள் சொல்லியுள்ளனர். இனியபாரதி என்ற பெயரில் இயங்கிவந்த கருணாகுழுவைச் சேர்ந்தவரே இவற்றுக்குக் காரமென்றும், இன்றைய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுவிட்டாரென்றும் அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்.
இது கருத்துச்சுதந்திர மீறல் இல்லையா?
நான் பார்பதற்கு முதல் நீர் எப்படி அகற்றலாம். பின்னர் என்ன கருத்தாம், சுதந்திரமாம், ஜனநாயகக் காவலராம், எல்லாம் ஊருக்குத்தான் உபதேசம் உணக்கில்லையடி கண்னே,
உன்னோடயெல்லாம் ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் கதைக்க ஏலாது. உனக்கு அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்க ஒரு அருகதையும் இல்லை.
ஜேர்மனியில இருக்க முடியாமக் கிடக்கோ உனக்கு.
எனக்குத் தெரியும் உனக்கு என்னைவிட வயசு கூடத்தான். ஆனா உனக்குரிய மரியாதையைத் தர நான் தயாரில்லை.
என்னை உனக்குத் தெரியுமோ தெரியாது. ஆனா உன்னை எனக்கு நல்லாத் தெரியும்.
ஒழுங்கா ஒரு கருத்தை எழுதத் தெரியாத உனக்கு எங்கயேன் கழிக்கப்பட்ட மலங்களை அள்ளியந்து கொட்டத்தான் தெரியும். அதுகள யாழ் களத்தோட வைச்சுக்கொள். வெளிய கொண்டந்து நாறடிக்காத.
உனக்கு நான் மேல எழுதின பதிவுகூட தெரியேல. அதில என்ன சொல்லப்படுதெண்டும் விளங்கிற புத்தி உனக்கில்லை. பிறகென்ன பெரிய படிப்பும் தொழிலும் வேண்டிக்கிடக்கு உனக்கு?
"பெண்கள் வாற இடத்தில முலை பற்றிக் கதைக்கிறாங்கள்" எண்டு ஒப்பாரி வைக்கிற நீ, இங்க என்னவாம் எழுதிறாய்? முடிஞ்சா தனிமடல் போடு. உனக்கு வடிவா விளங்கப்படுத்திறன்.
கருத்துச்சுதந்திரம் இவருக்குத்தான் உண்டு, இவர்தான் கதைக்லாம் இவர் கதைக்கக்கூடாது, என்று ஏதாவது சட்ட வரம்புகள் இருக்கோ? சத்தியமா எனக்குத்தெரியாது. எங்க இருக்கு எண்டு சொன்னால் நானும்பாப்பந்தானே.
இது உன்னைப்பாத்து நான் கேக்கவேண்டிய கேள்வி. நீ ஆர் மற்றாக்களை எழுதாதே எண்டு தடுக்க? நீ ஆர் எச்சரிக்கை விட?
பிறகு நல்லபிள்ளை மாதிரி வந்து வேசம் போடுறாய்.
Post a Comment