தற்போது தமிழ்மணத்திரட்டியில் பின்னூட்டம் திரட்டும் வசதியைப் பெற விரும்புவோர் கட்டாயம் செய்ய வேண்டிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மட்டுறுத்தற் செயன்முறை பற்றிய பதிவிது.
இவ்விதியை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்வதோடு வரவேற்கிறேன். இது கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இதிலெல்லாம் வாதம் செய்யவும் பின்னூட்டச் சண்டை பிடிக்கவும் என்ன இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. பெரிய தலைகள் கூட இச்சண்டையிற் பங்கேற்பதைப் பார்க்கும் போது எனக்கு ஒரேயொரு காரணம் மட்டுமே புரிகிறது.
அப்படி மட்டுறுத்தல் செய்யாதவர்கள் பின்னூட்டம் திரட்டப்படும் வசதியை மட்டுமே இழக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் தாம்தூம் என்று குதிப்பவர்களையிட்டு எனக்குக் கருத்தில்லை.
இப்போது இப்பதிவு ஏனென்றால்:
இந்தப் பிரச்சினையை, பின்னூட்டங்கள் அதிகம் பெறுவதற்காக சகவலைப்பதிவர்கள் பயன்படுத்தும்போது நானேன் தனித்து நிற்கவேண்டுமென்ற தெளிவில் எழுதப்பட்டதே இப்பதிவு.
சந்தடி சாக்கில் தங்கள் பதிவுக்கு அதிக பின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடும், பார்வையிடப்பட்ட எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கோடும் சக வலைப்பதிவாளர்கள் ஆடும் கூத்தைப் பார்த்தபின் எனக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. நானும் இதைப்பயன்படுத்தி அதிக பின்னூட்டங்களையும் பெறவும், என்பதிவு பார்வையிடப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்கவும் வாசகர்கள் அருள்புரிய வேண்டும்.
பேர் போன சில புத்திசீவிப் பதிவாளர்களே இந்த "அற்பமான" வேலையைச் செய்யும்போது நான் மட்டுமேன் ஒதுங்க வேண்டும்?
ஆகவே சனங்களே,
முகம்பாராது, பேர் பாராது, மற்ற பதிவாளர்களின் பதிவிலிட்டதுபோல் என் பதிவிலும் அதிகப் பின்னூட்டங்கள் இடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
45 comments:
உள்ளேன் ஐயா!
//முகம்பாராது, பேர் பாராது, மற்ற பதிவாளர்களின் பதிவிலிட்டதுபோல் என் பதிவிலும் அதிகப் பின்னூட்டங்கள் இடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்//
இட்டேன்:-)
இட்டேன்:-)
3
4 இட்டேன்:-)
5 இட்டேன்:-)
6 இட்டேன்:-)
7 இட்டேன்:-)
8 இட்டேன்:-)
9 இட்டேன்:-)
10 இட்டேன்:-)
10 பத்தாவதை நானே இட்டேன்..
(இருந்தாலும் இது பத்துப்பாட்டில் சேராது! :) )
ப்ரசன்ட் சார்
ஏனுங்க google காரன் அதிக பின்னூட்டத்திற்கு ஏதும் மேலே போட்டு தர்றானா?:)
-theevu-
>>ஏனுங்க google காரன் அதிக பின்னூட்டத்திற்கு ஏதும் மேலே போட்டு தர்றானா?:)>>
ஐயா தீவாரே!
இதை என்னட்ட ஏன் கேக்கிறீர். இதைவைத்து வியாபாரம் செய்யிறவையிட்டையெல்லோ கேக்க வேணும். அவன் குடுக்கிறானோ இல்லையோ தெரியாது. ஆனா இந்த மட்டுறுத்தலை வைச்சு இவ்வளவு குதிக்கேக்க ஏதோ விசயம் இருக்கத்தான் வேணும்போல கிடக்கு. அப்பிடி கூகுள்க்காரன் ஏதாவது தாறானெண்டா அதை இந்தக் கொழுவிக்குத் தெரிவிக்கும்படி "தலை"களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பின்னூட்டமிட்ட மற்றவர்களுக்கும் நன்றி.
நிலைமையைப் பொறுத்து, (எதிர்பார்த்தளவு பின்னூட்டங்கள் வராத பட்சத்தில்) ___ பாணியில் தனித்தனியாக ஒவ்வொருவருக்கம் நன்றி சொல்வதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும்.
தனியாக நன்றி சொல்ல ஆரம்பித்தவுடன் என்னுடைய அட்சர லட்சம் மொழிகள் கிடைக்கும்.
தங்கள் பதிலுக்கும் நன்றிக்கும் முன்கூட்டிய நன்றிகள்.
உள்ளேன் ஐயா!
17
காசா பணமா !!!
உள்ளேன் ஐயா
18
காசா பணமா !!!
உள்ளேன் ஐயா
19
காசா பணமா !!!
உள்ளேன் ஐயா
20
காசா பணமா !!!
உள்ளேன் ஐயா
21
காசா பணமா !!!
உள்ளேன் ஐயா
22
காசா பணமா !!!
உள்ளேன் ஐயா
23
காசா பணமா !!!
அடப்பாவிகளா? இந்த மாதிரி எல்லாம் பதிவைப் போட்டு நட்சத்திர வாரத்துல கூட என் பதிவுக்கு யாரும் வராம பண்ணிட்டீங்களேடா? நல்லா இருப்பீங்களா? வயிறு எரியுது....
சாதாரண நாட்களுக்குத் தான் யாரும் வர்றதில்லை. பின்னூட்டமும் போடறதில்லை. இந்த வாரம் மட்டுமாவது கலக்கிப் போடலாம்ன்னு ப்ளான்ல இருந்தேன். மண்ணள்ளிப் போட்டீங்களே...
நல்லா இருங்க....
இங்க வந்தவங்க எல்லாம் மரியாதையா என்னோட பதிவுக்கும் வந்து படிச்சுப் பின்னூட்டம் போட்டுறுங்க. இல்லாட்டி நடக்கிறதே வேற. ஆமாம். சொல்லிட்டேன்.
:-)))))))))))))))))))))))))))))))))))))))))
உள்ளேன் ஐயா
24
காசா பணமா !!!
//___ பாணியில் தனித்தனியாக ஒவ்வொருவருக்கம் நன்றி சொல்வதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும். //
யாரு பாணின்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க தல. எங்களுக்கெல்லாம் தெரியாதுல்ல.
:-)
உள்ளேன் ஐயா
25 i தொட்டது கார்த்திக் கார்த்திக் கார்த்திக் கார்த்திக் கார்த்திக்
காசா பணமா !!!
நானும் பின்னூட்டம் இட்டேன்.
எனக்குப் புரியவில்லை _பாணி.
:))
இங்குவந்து மனம் வருந்திச் சென்ற குமரனின் துக்கத்தை உணர்ந்து கொண்டோம்.
ஆகவே இங்கே வந்து பின்னூட்டமிட்டுச் சென்ற அனைவரும் குமரனின் பதிவுக்கும் சென்று ஒரு பின்னூட்டமாவது இட்டுச் செல்லும்படி அன்பாகப் பணிக்கப்படுகிறீர்கள். அதுவும் நட்சத்திர வாரம் முடியும் நாளைக்குள் சென்று பின்னூட்டமிட வேண்டும்.
தவறும் பட்சத்தில் இப்பதிவில் நீங்களிட்ட பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டுவிடுமென்று தாழ்மையாக மிரட்டப்படுகிறீர்கள்.
--------------------------------------
ஏனையவர்களுக்கும் ஏனைய கேள்விகளுக்கும் பின்பு பதிலளிக்கிறேன்.
என்ன மஸ்ட் டூ மருமகனே நலமா? பின்னூட்டம் பெற இப்படியும் வழி இருக்கிறதா? நானும் கற்றுக் கொள்கிறேன்.
"//___ பாணியில் தனித்தனியாக ஒவ்வொருவருக்கம் நன்றி சொல்வதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும். //
யாரு பாணின்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க தல. எங்களுக்கெல்லாம் தெரியாதுல்ல.
:-)"
அது யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆசையில் நானும் இருக்கிறேன். ஹி ஹி ஹி.
இப்பின்னூட்டமும் என்னுடைய வழமையான தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதுக்கும் பின்னூட்டம் போடாட்டிக்கு பிறகு மரியாதை இல்லை :)
ஐயா கொழுவி அவர்களே,
உங்களின் இந்த நேன்மையான வெளிப்பாட்டை பாராட்டுகிறேன் !!!
என் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு :-)
இந்தப் பிரச்சினை குறித்து பலரும் பதிவு போடுவதே, பெரும்பாலும் விளம்பரம் வேண்டியே !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
நானும்!
இன்னோரு ஊட்டம் இந்த பின்னூட்டம்.
ராம்கி,
சிறிதரன்,
10 பின்னூட்டங்களிட்ட உஷா,
இளவஞ்சி,
சுதர்சன் கோபால்,
தீவு,
ஆகியோருக்கு நன்றி.
பொஸ்டன் பாலா,
9 பின்னூட்டம் போட்ட கார்த்திக் ஜெயந், (போட்டது தான் போட்டீர்கள் இன்னுமொண்டு போட்டு பத்தாக்கியிருக்கக்கூடாதா?)
பொஸ்டன் பாலா,
9 பின்னூட்டம் போட்ட கார்த்திக் ஜெயந், (போட்டது தான் போட்டீர்கள் இன்னுமொண்டு போட்டு பத்தாக்கியிருக்கக்கூடாதா?)
ஆகியோருக்கு நன்றி.
கமலியான் பச்சோந்தி,
குழைக்காட்டான்,
டோண்டு
அன்றென்றும் அன்புடன் பாலா
ஆகியோருக்கும் நன்றி.
>>>>இந்தப் பிரச்சினை குறித்து பலரும் பதிவு போடுவதே, பெரும்பாலும் விளம்பரம் வேண்டியே !!!:>>>>>
என்றென்றும் அன்புடன் பாலா,
நீங்கள் சொன்ன கருத்துத்தான் என்னுடையதும்.
அதை நான் வெளிப்படையாகச் சொல்லிச் செய்தேன். ஆனால் பலர் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் செய்கிறார்கள்.
இதுகூட ஒரு கலகம்தான்.
பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் போதே இடையில் வந்து இரு பின்னூட்டங்களை இட்டுச்சென்ற சமுத்திராவுக்கும் நன்றி.
பலர் "யாரின் பாணியில்" என்று கேட்டிருந்தீர்கள்.
கொஞ்ச நாட்களின் முன்னென்றால் சொல்லியிருப்பேன்.
இப்போது அக்காச்சி திருந்தி விட்டாராம் என்று கேள்வி.
ஆகவே பெயரைச் சொல்லி வேண்டிக்கட்ட நான் தயாரில்லை.
ஆனாலும் உங்களுக்கெல்லாம் தெரிந்திருந்தும் என்னை ஆபத்தில் மாட்டிவிடத் துடிக்கும் உங்கள் கரிசனைக்கு என் மனமார்ந்த நன்றி.
//ஆனாலும் உங்களுக்கெல்லாம் தெரிந்திருந்தும் என்னை ஆபத்தில் மாட்டிவிடத் துடிக்கும் உங்கள் கரிசனைக்கு என் மனமார்ந்த நன்றி//
அப்படியானால், நிங்கள் அதை பற்றி பேசாமல் அல்லவா இருக்க வேண்டும்?
எதை/யாரை பற்றி எழுதினாலும் அதை தைரியமாக சொல்லும் துனிச்சல் இல்லாவிட்டால் எதற்காக அதை பற்றி எழுதவேண்டும்?
//எதை/யாரை பற்றி எழுதினாலும் அதை தைரியமாக சொல்லும் துனிச்சல் இல்லாவிட்டால் எதற்காக அதை பற்றி எழுதவேண்டும்?//
;-)
கொழுவி அண்ணா, இங்கு வரும் எல்லாரையும் நம்ம வீட்டுக்கும் போய் ஒரு பின்னூட்டமாவது போடச் சொல்லிப் பணித்ததற்கு மிக்க நன்றி. ஆனால் என்ன செய்ய? நீங்கள் எவ்வளவு தாழ்மையுடன் மிரட்டினாலும் டோண்டு சாரையும் சமுத்ரா அண்ணனையும் தவிர வேற யாரும் வந்த மாதிரித் தெரியலையே?! உங்கள் செல்வாக்கு அவ்வளவு தானா? ரொம்ப வருத்தமாக இருக்கிறது. :-(
என்ன இது சமுத்திராவ போய் அன்னா கின்னான்னு சொல்லிகிட்டு.
அவங்க அவங்க வயச குறைக்க என்ன என்ன பன்றாங்ன்னு பாரு!
;-)
Post a Comment