Thursday, February 23, 2006

சங்கிலிப் பதிவு.. நானும் சொல்லவா?

ஆஹா.. மறுபடியும் என்னை யாரும் அழைக்க வில்லை. புத்தக மீமீ போலவே! அதுக்காக விட்டுட முடியுமா? இது நம்ம வீட்டுக் கல்யாணம் மாதிரி! அழைப்பெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன். அதனாலை..

எனக்கு பிடித்த நான்கு விடயங்கள்:
1) கொழுவுதல்
2) தழுவுதல்
3) சாப்பிடுதல்
4) தூங்குதல்

(--தூங்குதலுக்கு பிறகு மறுபடியும் கொழுவுதல், தழுவுதலைப் படிக்க வேண்டாம்--)

அடிக்கடி செல்லும் இடங்கள்
1) குசினி (குசினி சோறு போடுகிறது என்பது என்னளவில் இரண்டு அர்த்தப்படும்.குசினி என்றால் சமையலறை எனப்படும்)
2) கள்ளுக்கொட்டில்
3)மலசல கூடம் (அதனால் நான்காவதாக..)
4) கிணற்றடி

வசித்த நான்கு இடங்கள்
உதுதானே வேண்டாமெண்டிறது.

அடிக்கடி உண்ணும் உணவுகள்
1) பாண்
2) வறுத்த விசுக்கோத்து
3)ஆட்டுக்கால் விசுக்கோத்து
4) ரோஸ் பாண்

விரும்பும் 4 வலைப்பதிவர்கள்..

1) என்றும் நம்பர் 1: பாலச்சந்தர் கணேசன்-
2) ஈழபாரதி
3) எஸ் பாலபாரதி (அன்பே சிவம் பற்றின அவரின் பதிவுக்காக)
4) கொழுவி

பிடித்த 4 திரைப்படங்கள்
1) சந்திரமுகி - 325 தடவை பார்த்து விட்டேன்
2) பாபா - ஒரு தடவை கூட பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை
3) சிவாஜி - 365 தடவைகள் பார்ப்பேன் - (எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லையென்பதற்கும் இதற்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை)
4) ஜக்குபாய் -

9 comments:

Chandravathanaa said...

ஆட்டுக்கால் விசுக்கோத்து...?

ஜெ. ராம்கி said...

//பிடித்த 4 திரைப்படங்கள்

'மசாலா' படமா பார்த்து தொலையாதீர்! 'புளி' தலைவர் உங்களை 'சாம்பாரா'க்கிடுவார்!

கொழுவி said...

அடடே!
வாங்கோ ரசனி ராம்கி சாரு,
செய்யாத தடையைச் செய்ததாகப் பொய்சொல்லி (அல்லது யாரோ சொன்ன பொய்யை நம்பி) பாபாவுக்கும் சந்திரமுகிக்கும் விளம்பரம் செய்த மனநிலையிலேயே இன்னும் இருக்கிறீர் போல.
'புளி'த்தலைவர் தடைசெய்ததால்தான் பாபா தோற்றதென்றோ,
அவர் தடை செய்யாததால்தான் சந்திரமுகி வென்றதென்றோ 'கதை' விடாமலிருந்தாற் சரி.

எந்த 'மசாலாவும்' இல்லாததால்தானே நானே இதுகள விரும்பிப் பாக்கிறன். (படத்திலில்லையா என் மண்டைக்குளில்லையா என்று ஆராய்ச்சி தேவையில்லை.)
பிறகேன் மசாலாப்படங்களைப் பார்க்க வேண்டாமென்ற அறிவுறுத்தலென்று தெரியவில்லை.

சந்திரவதனா,
இனி நானெங்க ஆட்டுக்கால் விசுக்கோத்து எடுத்து செருமனிக்கு அனுப்பிறது?

ஜெ. ராம்கி said...

//'புளி'த்தலைவர் தடைசெய்ததால்தான் பாபா தோற்றதென்றோ,

:-) :-) :-)

Chandravathanaa said...

இனி நானெங்க ஆட்டுக்கால் விசுக்கோத்து எடுத்து செருமனிக்கு அனுப்பிறது?

எப்பிடியாவது பார்த்து அனுப்பி வையுங்கோ.

- யெஸ்.பாலபாரதி said...

மன்னிக்கனும் கொழுவி.. நீங்களும் என்னை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் நபராகிப்போனது இன்றுதான் தெரிந்தது... சீக்கிரத்தில் வரேன்.
:(

ஜெ. ராம்கி said...

ஸ்ஸ்ஸ்.. ஒரு வழியா புடிச்சாச்சு!

http://www.hindu.com/2003/10/13/stories/2003101303011200.htm

LTTE bans Boys

By V.S. Sambandan



COLOMBO Oct. 12. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) has banned the controversial Tamil film, Boys, in rebel-held Sri Lanka, for ``crude sexuality'' and ``imparting false values'' among youngsters.

The movie, which ran to packed houses in the first couple of weeks in Colombo, was ruled by the LTTE's `film review committee' as one that ``dissipated Tamil youth from value traditions, particularly education'', according to informed Tamil commentators. While the screening of the film has been barred in rebel-held Vanni, censored versions were permitted in Tamil-majority areas such as Batticaloa. In addition to what is considered ``crude sexuality'' portrayed in the movie, the overall objection ``is that the movie belongs to a genre that promotes false goals'' and the larger theme that ``there is nothing more to life than the pursuit of love''.

Before the ban on Boys, the rebels banned Baba, starring Rajnikanth, for being ``steeped in superstition''. Earlier, another Tamil movie, Kannathil Mutthamittal, which centred on the island's separatist conflict, was severely criticised but not banned. The criticism of that movie was also linked to previous creations by its director, Mani Rathnam, such as Iruvar, based on Tamil Nadu's Dravidian politics, and Uyire, a love story based on the Kashmiri conflict.

According to sources, films by Tamil actor-producer, Kamal Haasan, and Bengali director, Satyajit Ray, are popular. For instance, Anbe Sivam, which starred the former, was widely welcomed. Apart from ``crude sexuality'', the LTTE considers Boys as a movie that casts a ``class slur''. Specifically, the rebels consider a scene set near a women's college — in which a fair-skinned boy speaks in English to a dark-skinned youth, who does not know the language — objectionable.

Another scene in which the hero of the film is shown walking naked in a crowded road was considered as one that ``played up the genre of boys doing anything to win a girl''. Some sections of the soundtrack were censored before the film was permitted in Batticaloa after a two-day ban. "I haven't yet watched the movie. I am told it is objectionable. May be one of these days I will go to the town and check it out,'' a Tamil youth told The Hindu in Batticaloa.

கொழுவி said...

ரசனி ராம்கி,
நீங்கள் இப்படி இந்துவோடு வருவீர்களென்று நினைக்கவில்லை.
boys தடை செய்யப்பட்டதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் பாபா தடைசெய்யப்பட்டதென்ற செய்தி தான் மறுக்கப்படுகிறது. நீங்கள் இந்துச் செய்தியை நம்பித்தான் இவ்வளவு நாளும் அதைக் கதைத்தீர்களென்றால் சொல்வதற்கு ஏதுமில்லை.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாபா தடை செய்யப்படவில்லை என்பதற்கு வலைப்பதிவர்கள் சிலரே சாட்சி, நானுட்பட. இந்து எப்படி இச்செய்தியைப் பெற்றதென்று தெரியாது. நேரடி சாட்சியாக என்னால் சொல்லக்கூடியது பாபா தொடர்பில் இந்துவின் செய்து பொய் என்பதே.

ஒன்றில் கிளிநொச்சியோ முல்லைத்தீவோ புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இல்லாதிருக்க வேண்டும். அல்லது இந்து பொய் சொல்லியிருக்க வேண்டும். அல்லது நானும் இன்னும் சிலரும் பொய் சொல்ல வேண்டும்.

எது எப்படியோ, பாபாவைத் தடை செய்வதா இல்லையா என்று விவாதிக்குமளவுக்குக்கூட அன்றைய நிலை இருக்கவில்லை. அந்த நேரத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்தவர்களுக்கு, பாபாவுக்குத் தடையா அனுமதியா என்பது காலைத் தேநீருக்குக் கூடப் பெறுமதியில்லாத விசயம்.

"புலிகளால் தடை செய்யப்பட்டது" என்ற வாசகமே இன்று விற்பனைக்கான ஓர் உத்தியாகிப்போய்விட்டது.

ஜெ. ராம்கி said...

Thanks for your confirmation.

//ஒன்றில் கிளிநொச்சியோ முல்லைத்தீவோ புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இல்லாதிருக்க வேண்டும். அல்லது இந்து பொய் சொல்லியிருக்க வேண்டும்.

May be.

//எது எப்படியோ, பாபாவைத் தடை செய்வதா இல்லையா என்று விவாதிக்குமளவுக்குக்கூட அன்றைய நிலை இருக்கவில்லை. அந்த

Yes. Agreed.

//"புலிகளால் தடை செய்யப்பட்டது" என்ற வாசகமே இன்று விற்பனைக்கான ஓர் உத்தியாகிப்போய்விட்டது.

:-) நினைப்பு தான் பொழைப்பை கெடுக்குது!