Thursday, September 21, 2006

புலிகளுக்கு சீனா இராணுவ உதவி

தலைவர் மீசை வைச்சா அதுக்கொரு இராணுவ காரணமும் மீசையெடுத்தா அதுக்குகொரு அரசியல் காரணமும் மண்டைதீவைப் பிடிச்சால் அதுக்கொரு இராணுவ காரணமும் அதே மண்டை தீவை விட்டுப்போட்டு வந்தால் அதுக்கும் ஒரு அரசியல் காரணமும் சொல்லுற அளவுக்கு எங்கடை எல்லாச் சனமும் அறிவும் ஆற்றலும் பெற்றிருக்கினம் எண்டதை நினைக்க சந்தோசமாக்கிடக்கு. எல்லாம் எங்கடை தமிழ் ஊடகங்களின்ரை புண்ணியத்தில தானே எண்ட உண்மை தெரிய தமிழ் ஊடகங்கள் மேலையும் ஒரு நன்மதிப்பு உருவாகுது.

நானும அப்பிடித்தான். எனக்கும் உந்த ஆய்வுகள் அரசியல் வியாக்கியானங்கள் செய்யிறதெண்டால் சரியான ஆசை. இப்ப சீனா புலிகளுக்கு உதவி செய்யிறதையும் அது ஏன் உதவி செய்யுது எண்டதையும் அதுக்கு பின்னாலை இருக்கிற பிராந்திய நலன்களையும் விரிவா உங்களுக்கு சொல்ல இருக்கிறன்.

முதலில இந்தப் படத்தைப் பாருங்கோ. இதில புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் திரு சு ப தமிழ்ச்செல்வன் ஒரு ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். இதைப் பாத்த உடனை சிலர் அரசியல்ப் பிரிவைச் சேந்தவரே ஆயுதம் தூக்கிட்டார். இனி புலிகள் தரப்பில சமாதானம் எண்ட பேச்சுக்கே இடமில்லை எண்டு அறிவு பூர்வமா முடிவெடுப்பினம். அதுவும் தமிழ்நாட்டில வாற உந்த ராணி தேவி மாதிரியான புத்தகங்கள் இப்பிடியும் தலைபெழுதலாம் - ஆயுதம் ஏந்தினார் புலிகளின் அரசியல்த்துறை தலைவர். புலிகள் தரப்பில் இனி பேச்சுக்கு இடமில்லை

Photobucket - Video and Image Hosting

இந்தப்படத்தில தமிழ்ச்செல்வன் வைச்சிருக்கிற ஆயுதம் என்ன வகையைச்சோந்தது.. இதை முதலில ஆராய்வம். இது PF-89, a portable 80mm light anti-tank weapon அதாவது இது ஒரு டாங்கி எதிர்ப்பு ஆயுதம். சோவியத்தின்ர RPG -7 வகைக்கு மாற்றீடாக செய்யப்பட்டிருக்கெண்டு ஒரு தகவல் சொல்லுது. இதைப்பற்றி இன்னும் தேடுவம் எண்டு வெளிக்கிட எனக்குக் கிடைத்தது இந்தப்படம்.

Photobucket - Video and Image Hosting

படத்தில பாருங்கோ.. சீன எழுத்தில ஏதோ எழுதிக்கிடக்கு. இதுதான் என்ரை ஆராய்ச்சியை மேலும் தூண்டினது. இது சீன ஆயுத வகைதான் எண்டதை உறுதிப்படுத்தினது இந்த தளம். அது மட்டுமில்லை.. இன்னும் ஆச்சரியத்தை தந்த தகவல் என்னெண்டால் இந்த வகை ஆயுதம் இந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதிச் செய்தியின் படி அத் திகதிக்கு கிட்டவா அறிமுகப்படுத்தியிருக்கிறது சீன இராணுவம்

March 1, 2006: The Chinese army has begun issuing the PF-89, a portable 80mm light anti-tank weapon, to replace obsolete Soviet-era RPG-7 type weapons
ஆக.. இந்த வருட ஆரம்பத்தில அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆயுதம் வருட முடிவிற்குள் புலிகளிடம் வந்தது எப்படி?

ஆம் சீனா.. புலிகளுக்கு இராணுவ உதவிகளை வழங்குகிறது. இப்போது இதன் பின்னணிகளைப்பார்ப்போம்.

ஆசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவிடம் பகைத்துக்கொண்ட புலிகள் அந்த உறவினை இனி ஒட்ட முடியாது என்று கருதுகின்றனர். இந்நிலையில் 2020 களில் உலக வல்லரசாக வருவதற்குரிய வகையில் இரகசியமாய் செயற்படும் சீனாவுடன் உறவுகளைப் பேண புலிகள் விரும்புகின்றனர். இதன் மூலம் வல்லரசு ஒன்றின் ஆதரவும் துணையும் அவர்களுக்கு கிடைக்கிறது.

சிறிலங்கா இந்திய ஆதரவு நிலையினை எடுத்ததாகவே சீனா கருதுகிறது. ஆகவே அந்த நாட்டின் அரசுக்கு எதிராகப் போராடும் புலிகளுக்கு ஆதரவு நிலையினை எடுத்துள்ளது.

இனி இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம்.

அமெரிக்காவும் பாகிஸ்தானும் சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவி வழங்குவது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் என்பதால் முன்பொருமுறை யாரோ ஒருவர் இந்தியாவே சிறீலங்காவிற்கு ஆயுத உதவிகள் வழங்க வேண்டும் என வலைப்பதிவில் சொல்லியிருந்தார்.
அதே போலவே புலிகளுக்கு சீனா உதவி வழங்குவது என்பதும் இந்திய இறையாண்மையை பாதிக்கின்றமையால் இந்தியா அந்த உதவியினை தடுத்து விட்டு தானே புலிகளுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்.

இந்த நேரத்தில் ... பிராந்தியமாவது வல்லரசாவது.. காசிருந்தா எங்கை குடுத்தும் ஆயுதம் வாங்கலாம் எண்ட உண்மை எனக்கு உறைக்க.. அது புலிகளால் முடியும் என்பதும் தெரிய வர.. என்னுடைய ஆய்வை இத்துடன் முடிக்கிறேன்.

அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து றொக்கெட் லோஞ்சர்கள் ஆந்திராவுக்கு போகாமல் இராமேஸ்வரப்பக்கம் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கற்பனையுடன்..

21 comments:

Thirumozhian said...

இன்னாபா இது. ஒன்னியும் பிரீலியே. கலாய்க்கிரீங்களா இல்ல உண்மையச் சொல்றீங்களா? எது எப்படியோ, புலிகள் என்னிக்கும் தோக்கக்கூடாது. அதுக்கு யாருகிட்ட இருந்து ஆதரவு கெடச்சாலும் சரி. இந்தியா எதிர்த்தாலும் எதிர்க்கலைன்னாலும் தமிழ்நாடு என்னிக்கும் ஆதரவு தான் தரும்

Anonymous said...

ஆயுதத்திலிருக்கும் மொழிக்குறிப்பை
வைத்து ஒரு முடிவுக்கு வரமுடியாது
இது என் அனுபவம்.
பல வருடங்களுக்குமுன் நான் லெபனானில் வேலைபார்த்த வேளையில்
ஒரு நாள் தெருவில் நடந்து போகையில்
என்னை அள்ளிபோட்டு கொண்டுபோய்
ஆயுதங்களை இறக்கவைத்தனர் (என்னுடன் பல இந்தியரும் இருந்தனர்)
அந்த ஆயுதங்களில் குறிக்கப்பட்டுருந்தது
maiden euthopia என ஒரு வேளை
உணவுக்கே அட்ல்டியடிக்கும் நாட்டில்
ஆயுதம் தயரிக்கிறார்களா.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதம்
பாக்கிஸ்தானுக்கு வந்து அங்கு அவர்கள்
நாட்டின் முத்திரை குத்தப்பட்டு வேறு
ஒரு நாட்டுக்கு விற்கப்படும்
இலங்கையில் யப்பானிய உரிதிப்பாகங்களை வாங்கமுடியும் அதே
தயாரிப்பான இந்தியாவின் கள்ள போலி
தயாரிப்புகளையும் வாங்கமுடியும்.

CAPitalZ said...

ஐயா சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவுடனான போரில் தான் புலிகளுக்கு
மிகச் சோதனையான காலம். தலைவர் நினைத்திருந்தால் பாகிஸ்தானுடனோ, (அ) சீனாவுடனோ
உதவி கேட்டு நவீன ஆயுதங்களைப் பெற்று இந்திய இராணுவத்திற்கு ஒரு சாத்து சாத்தி
இருக்கலாம். ஒரே ஒரு விமான எதிர்ப்பு ஆயுதம் உதவியாக பெற்றிருந்தாலே அன்று
இந்திய விமானங்களும் கெலிகொப்றர்களும் வீழ்த்தப்பட்டிருக்கும். கீழ்மட்டத்
தளபதிகளுக்கு தலைவர் சொன்ன பதிலை இங்கே கீழே இடுகிறேன். நன்றி "உலகத்தமிழர்"
பத்திரிகை

"இந்தியாவிற்கு எதிராகப் போராடுவதற்கு என்றால், பாகிஸ்தானும், சீனாவும்
விழுந்தடித்துகொண்டு எங்களுக்கு ஆயுதங்களை அள்ளி இறைப்பார்கள் அதில் எந்தவிதச்
சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த விடயத்தில் நான் தமிழ்நாட்டைப் பார்க்கின்றேன்.
அவர்கள் எமக்கு காண்பித்த அன்பைப் பார்க்கின்றேன். நீங்கள் கூறும் இந்த
நாடுகளை தமிழ் நாட்டுத் தமிழர்களும் தமது எதிரிகளாகத் தான் பார்க்கின்றார்கள்.
நீங்கள் கூறுவது போன்று, நாங்கள் இந்த நாடுகளிடம் இருந்து இலகுவாக உதவிகளைப்
பெற்று, இந்தியாவிற்கு எதிராக போராடிவிடலாம். ஆனால் நான் எமது அடுத்த
தலைமுறைகளைப் பற்றி யோசிக்கின்றேன். எங்களது பிள்ளைகளும், தமிழ் நாட்டுத்
தமிழர்களது பிள்ளைகளும் எதிர் காலத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம்
இந்தியத் தமிழர்களின் எதிரிகளிடம் உதவிபெற்று இந்தியாவிற்கு எதிராப் போரடினால்
நம் இரண்டு தரப்பினரது எதிகாலச் சந்ததியினரிடயே இந்தக் கறை இருந்து கொண்டே
இருக்கும்"

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

Anonymous said...

குசும்பு

Anonymous said...

நல்ல நகைச்சுவைப் பதிவு விழுந்து விழுந்து சிரித்தேன் ஸ்ரீலன்கா அரசுக்கு தான் சீனா உதவி செய்கிறதென்பது கொழுவிக்கு தெரியவில்லை.

கொழுவி said...

இந்த நேரத்தில் ... பிராந்தியமாவது வல்லரசாவது.. காசிருந்தா எங்கை குடுத்தும் ஆயுதம் வாங்கலாம் எண்ட உண்மை எனக்கு உறைக்க.. அது புலிகளால் முடியும் என்பதும் தெரிய வர.. என்னுடைய ஆய்வை இத்துடன் முடிக்கிறேன்.

ஐயாக்களே.. இப்பிடி நான் எழுதினதையும் சேத்து வாசியுங்கோ.. ஒருத்தருக்கும் விளங்க வில்லைப்போல

மு. மயூரன் said...

சீனா ஆயுதம் கொடுத்ததோ, பூனா ஆயுதம் கொடுத்ததோ என்னவோ,

இந்த பதிவை நீங்கள் தமிழ்மணத்தில் இட்டமைக்கான பின்னணிமட்டும் எனக்கு மிக மிக தெளிவா விளங்கிட்டுது.

ஏதோ எம்மாலான முயற்சி. பார்க்கலாம் கொழுவி.

குறிப்பு: தற்போது பதிவு .com இல் இருக்கும் தமிழிழ தனியரசு, திருநாவுக்கரசுவின் பேட்டி ஆகியவற்றை பார்க்கும்படி வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

www.pathivu.com

theevu said...

// கீழ்மட்டத்
தளபதிகளுக்கு தலைவர் சொன்ன பதிலை இங்கே கீழே இடுகிறேன். நன்றி "உலகத்தமிழர்"
பத்திரிகை

"இந்தியாவிற்கு எதிராகப் போராடுவதற்கு என்றால், பாகிஸ்தானும், சீனாவும்
விழுந்தடித்துகொண்டு எங்களுக்கு ஆயுதங்களை அள்ளி இறைப்பார்கள் அதில் எந்தவிதச்
சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த விடயத்தில் நான் தமிழ்நாட்டைப் பார்க்கின்றேன்.
அவர்கள் எமக்கு காண்பித்த அன்பைப் பார்க்கின்றேன். நீங்கள் கூறும் இந்த
நாடுகளை தமிழ் நாட்டுத் தமிழர்களும் தமது எதிரிகளாகத் தான் பார்க்கின்றார்கள்.
நீங்கள் கூறுவது போன்று, நாங்கள் இந்த நாடுகளிடம் இருந்து இலகுவாக உதவிகளைப்
பெற்று, இந்தியாவிற்கு எதிராக போராடிவிடலாம். ஆனால் நான் எமது அடுத்த
தலைமுறைகளைப் பற்றி யோசிக்கின்றேன். எங்களது பிள்ளைகளும், தமிழ் நாட்டுத்
தமிழர்களது பிள்ளைகளும் எதிர் காலத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம்
இந்தியத் தமிழர்களின் எதிரிகளிடம் உதவிபெற்று இந்தியாவிற்கு எதிராப் போரடினால்
நம் இரண்டு தரப்பினரது எதிகாலச் சந்ததியினரிடயே இந்தக் கறை இருந்து கொண்டே
இருக்கும்" //

ithuthaan uNmai

Anonymous said...

//இந்த பதிவை நீங்கள் தமிழ்மணத்தில் இட்டமைக்கான பின்னணிமட்டும் எனக்கு மிக மிக தெளிவா விளங்கிட்டுது.//
அதை எங்களுக்கும் சொல்லுறது..

காசைக் குடுத்தால் சீனாவும் ஆயுதம் விக்கும்.. பூனாவும் விக்கும்.. பிராந்தியமாவது.. மண்ணாவது.. எல்லாம் Business

Anonymous said...

//காசை கொடுத்தால் சீனாவும் ஆயுதம்
விற்கும்..பூனாவும் விற்கும்//

இப்படிபோனால் வல்லரசுகளின் ஆயுத
விற்பனையும் அவர்களின் சுகபோக
வாழ்க்கையும் இரண்டே நாளில்
ஓட்டாண்டியாகிப்போகும்

ஏழைநாடுகள் வாங்கும் கடனை ஆயுத
விற்பனை நாடுகள் எப்படி அறுவடை
செய்வது.புலிகள் நோர்வையிடமிருந்து
பொறும் நிதியை எப்படி அறுவடை
செய்வது என்பதற்கும் ஒரு கணக்கு
வைத்திருப்பார்கள்.

Anonymous said...

//இந்திய இராணுவத்திற்கு ஒரு சாத்து சாத்தி
இருக்கலாம்//
எப்பிடிப்பா இப்படியெல்லாம்..

Anonymous said...

அப்ப புலியளுக்கு சைனா வெப்பன் குடுத்தால் இடதுசாரி இந்து ராம் புலியை ஆதரித்து எழுதப்போராரோ

திருவடியான் said...

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆயுதச் சந்தையில் சீனாவும் தற்போது இறங்கி விட்டதாக அறிய முடிகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் கஞ்சிக்கு வழியில்லாத மக்கள் எல்லாம் கையில் ஒரு கலானிஷ்கோவ் வைத்துக் கொண்டிருக்கும்போது, அது எங்கே தயாரிக்கப்பட்டிருக்கும் என்ன விலைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும், யார் யார் அதில் லாபமடைந்திருப்பார்கள், என்று எனக்கு நினைக்கத் தோணும். லார்ட்ஸ் ஆப் வார் என்ற ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்த்தபின் அதற்கு எனக்கு ஒரு மாதிரியாக விளக்கம் கிடைத்தது.

கவலை வேண்டாம். வருங்காலத்தில் இந்தியத் தமிழனும் ஈழத்தமிழனும் சேர்ந்து இதை விட மிகப் பெரிய ஆயுதச் சந்தை வியாபாரியாக மாறக் கூடிய சகல சாத்தியங்களும் தெரிகிறது.

Anonymous said...

அப்போ பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தான் இலங்கையில சண்டையெண்டு சொல்லுங்க.. பாகி - சிறிலங்காவிற்கு. சீனா புலிகளுக்கு
இந்தியா என்ன நடுநிலைமையா..

வரவனையான் said...

// கீழ்மட்டத்
தளபதிகளுக்கு தலைவர் சொன்ன பதிலை இங்கே கீழே இடுகிறேன். நன்றி "உலகத்தமிழர்"
பத்திரிகை

"இந்தியாவிற்கு எதிராகப் போராடுவதற்கு என்றால், பாகிஸ்தானும், சீனாவும்
விழுந்தடித்துகொண்டு எங்களுக்கு ஆயுதங்களை அள்ளி இறைப்பார்கள் அதில் எந்தவிதச்
சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த விடயத்தில் நான் தமிழ்நாட்டைப் பார்க்கின்றேன்.
அவர்கள் எமக்கு காண்பித்த அன்பைப் பார்க்கின்றேன். நீங்கள் கூறும் இந்த
நாடுகளை தமிழ் நாட்டுத் தமிழர்களும் தமது எதிரிகளாகத் தான் பார்க்கின்றார்கள்.
நீங்கள் கூறுவது போன்று, நாங்கள் இந்த நாடுகளிடம் இருந்து இலகுவாக உதவிகளைப்
பெற்று, இந்தியாவிற்கு எதிராக போராடிவிடலாம். ஆனால் நான் எமது அடுத்த
தலைமுறைகளைப் பற்றி யோசிக்கின்றேன். எங்களது பிள்ளைகளும், தமிழ் நாட்டுத்
தமிழர்களது பிள்ளைகளும் எதிர் காலத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம்
இந்தியத் தமிழர்களின் எதிரிகளிடம் உதவிபெற்று இந்தியாவிற்கு எதிராப் போரடினால்
நம் இரண்டு தரப்பினரது எதிகாலச் சந்ததியினரிடயே இந்தக் கறை இருந்து கொண்டே
இருக்கும்" //

எவ்வளவு தொலைநோக்கான சிந்தனை.சத்தியமான வார்த்தைகள்

Anonymous said...

something is inside of this post

Anonymous said...

படங்களும் தரப்பட்ட சுட்டிகளும் தகவல்கள் உண்மை என்கிறன. இப்ப பிரச்சனை சீனாவிடம் பணம் கொடுத்து வாங்கினார்களா.. அல்லது இலவசமாக பெற்றார்கள் என்பதா..
இலவசமாக பெற்றால்.. இந்தியா யோசிக்க வேண்டும்.

Anonymous said...

aha.. funny analysis

கொழுவி said...

Thirumozhian,
அனானி,
CAPitalZ,

வருகைக்கு நன்றி.
கப்பிட்டல்,
பொருத்தமான இடத்தில் குறிப்பைத் தந்ததுக்கு நன்றி.

கொழுவி said...

லோலன், மயூரன், தீவு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மயூரன்,
//இந்த பதிவை நீங்கள் தமிழ்மணத்தில் இட்டமைக்கான பின்னணிமட்டும் எனக்கு மிக மிக தெளிவா விளங்கிட்டுது.//

எனக்கே என்ன பின்னணி எண்டு விளங்கேல.
நீங்கள் சொன்ன திருநாவுக்கரசரின்ர செவ்வி பாத்தன்.
ஆனா அண்மைக்காலங்களில நடக்கிறதைப் பாத்தா இன்னும் அவையள் பழைய கறளிலயே இருக்கிற மாதிரிக்கிடக்கு.
ம். பாப்பம் என்ன நடக்குதெண்டு.

Anonymous said...

//நண்பர் கொழுவியின் அசாத்திய கற்பனை மற்றும் கதைபுனையும் திறமையைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது//

என்ன கற்பனையோ.. அதெப்படி சீன இராணுவம் வெளியிட்ட ஆயுதம் 6 மாதங்களில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரிடமு வந்தது..

கொழுவி சொல்வது உண்மையானதாக இருந்தால் சீனாவும் புலிகளும் சேர்ந்து இந்தியாவின்ரை இறைமைக்கு பங்கம் விளைவிக்க போகிறார்கள்..