என்றுமில்லாத என்று சொல்ல முடியாதவாறான ஒரு இக்கட்டான நெருக்கடி நிலையில் ஈழத்தமிழர்களின் போராட்டம் சிக்கி நிற்பதானது ஈழ அபிமானிகள் அனைவரையும் குழப்பத்திலும், மனச்சோர்விலும், ஒரு விரக்தி நிலையிலும் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.
இந்த ஒருவருட காலமாகவே யுத்தமொன்றே தீர்வாகுமெனவும், புலிகள் காலவரையொன்றைச் சொல்லி போரினை ஆரம்பிக்க வேண்டும் எனவும் எழுதிய, பேசிய, ஆயினும், யுத்தத்திற்கு வெளியில் வாழ்கின்ற சிலர், தற்போது தமிழ்த்தேசியம் பலவீனமடைந்து விட்டதாயும், வேறொரு போராட்ட வடிவம் குறித்துச் சிந்திக்க வேண்டியவர்களாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இன்னும் சிலர், இந்த ஒருவருட காலமாக புலிகளின் யுத்தத்தை எதிர்பார்த்து ஏமாந்து போனதாய் சொல்கிறார்கள். பலர் இதனை ஒரு மானப் பிரச்சனையாக நோக்குகின்றனர்.
இவர்களில் பலர் யுத்தத்திற்கு வெளியில் வாழ்கின்றவர்கள். ஒவ்வொரு தடவையும் புலிகளின் தோல்விகளின் போதெல்லாம் இவர்களிடம் ஏற்படும் சலிப்பானது, இவர்களின் குத்தகைக்கார மனநிலையைச் சொல்கிறது. நிலத்தை குத்தகைக்கு கொடுத்து விட்டு வெளியிலிருந்து விளைச்சலை எதிர்பார்ப்பவராயும், எதிர் பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லையெனில் குத்தகைக்கு கொடுத்தவன் மேல் சினப்பவர் போலவும் இவர்களை உருவகித்துக் கொள்ளலாம். அல்லது ஒப்பந்த காரராயும் நோக்கலாம்.
இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இவர்களை இத்தகையை ஒரு மனநிலையில் வளர்த்து விட்ட பெருமை புலத்தில் இயங்கும் தமிழ் ஊடகங்களையும் சாரும். புலிகள் என்பவர்கள் எமக்கு வெற்றிச் செய்திகளை மட்டுமே தரவேண்டுமென்ற இவர்களது எதிர்பார்ப்பு சரிவுறும் போதெல்லாம் சலித்துக்கொள்வதும், சினப்படுவதும் இவர்களின் இயல்பாகி விடுகிறது.
இன்னொரு வகையினர் ஈழப்போரின் பலவீனம் இதுவென வாதிட்டு இதற்கான காரணங்களை ஆதி முதல் விளக்குபவர்கள். ஈழப்போர் எப்போதெல்லாம் பின்னடைகிறதோ அப்போதெல்லாம் இவர்கள் எழுச்சியுறுவர்.
உண்மையில் ஈழப்போரின் இன்றைய நிலை என்ன?
பலரும் சொல்வது போல அரசியல் ரீதியாக இன்றைய திகதியில் பெரிதாக எதனையும் சாதித்து விடவில்லைத்தான். அல்லது தமிழரின் அரசியல் ரீதியான செயற்பாட்டிற்கான நேர் விளைவுகள் எதுவும் நடந்து விட வில்லைத்தான். இங்கே அரசியல் ரீதியான செயற்பாடென்பது இலங்கை அரசுடனானதாகவோ அல்லது இலங்கைக்குள் உட்பட்டதாகவோ அல்லாமல் சர்வதேசம் நோக்கிய செயற்பாடுகள் என அர்த்தப்படுகின்றன. இலங்கையின் உண்மையான கண்காணிப்பாளர்களாக மாறி விட்ட அமெரிக்கா யப்பான் இணைத்தலைமை நாடுகள் நோர்வே ஆகியவற்றுடனான நேரடித் தொடர்பொன்றை புலிகள் பெற்றுக்கொண்டமையானது அரசியல் ரீதியாக எந்தப் பலாபலனையும் தரவில்லை. மாறாக அவ்வாறு ஏற்பட்டுவிட்ட தொடர்புகளே புலிகளைக் கட்டி வைக்கும் கயிறுகளாகவும் மாறிவிட்டன.
இது தவிர வெளிநாடுகளில் தமிழர்கள் நடாத்துகின்ற பேரணிகள், ஊர்வலங்கள் உலக செவிகளில் உறைத்ததாகவோ ,அல்லது கண்டுகொள்ளப்பட்டதாகவோ இல்லை. இதனை இன்னொரு வகையில் சொல்லப்போனால் தமிழர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதினாலும், கவனமெடுப்பதனாலும் உலகத்திற்கு எந்தவகையிலும் தனிப்பட்ட விதத்தில் அரசியல், பொருளாதார இலாபங்கள் கிடைக்கப் போவதில்லை. ஆக இது தமிழர்களின் தவறாகாது.
அதுதவிர இலங்கை அரசுடன் அரசியல் ரீதியாக பேசி தீர்வுகளைப் பெறலாம் என எவராவது எழுதின், பேசின் அவர்களைப் பற்றி இரண்டு வாக்கியமாவது எழுதுவது விசர் வேலை.
அரசியல் நிலையில் சார் விளைவெதனையும் பெறாத நிலையில் இராணுவ நிலையில் தமிழர் தரப்பு பலவீனப்பட்டு விட்டதா?
அண்மைய சம்பூர் மாவிலாறு தவிர வடபகுதி போர்முனைகளில் புலிகளின் பின்வாங்கல்கள் அவர்களது இராணுவ ரீதியான பலவீனத்தை உணர்த்துகிறதா?
புலிகள் இதுவரை படைகளுக்கெதிராக வலிந்த பாரிய தாக்குதல்கள் எதனையும் என் செய்ய வில்லை.?
5 comments:
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது ஈழ தமிழ்களில் மரபுச்சார் குணங்கள்....
உணவு கொடுத்தவனை தற்கொலை படைவிட்டு கொல்லுவது புலிகள் வேலை...
உங்களுக்கு தான் வேறவேலை யில்லை இதுல இந்திய தமிழ்களை ஏன் அய்யா இழுக்கிரீர்கள்...
ராஜீவை கொன்ற ஈழதமிழ் இனம் அழிகிறதோ அன்றுதான் உலகம் அமைதி பெறும்.....
//உணவு கொடுத்தவனை தற்கொலை படைவிட்டு கொல்லுவது புலிகள் வேலை... //
ஆமாம் அது புலிகளின் வேலை. அதே போல உணவைக் கொடுத்து விட்டுக் கோராமாக வன்புணர்ந்து கொல்லுவது 87 - 90 கால இந்திய இராணுவத்தின் வேலை.
புலிப்படை என்பது இப்போது தமிழர்களின் தேசிய கோரிக்கைக்கான அரசியல் ஆயுதமே.
ராணுவ வெற்றிகளும் தோல்விகளும், ராஜதந்ந்திர அசைவுகளே.
மாற்று வழிப்பாதைபற்றி சிந்ந்திக்கவேண்டியிருப்பதாய் எழும் கருத்துக்கள், இராணுவப்பலவீனம் நேர்ந்ந்துவிட்டது என்ற மனநிலையிலிருந்ந்து எழுவதில்லை. அரசியல் பலவீனம் கண்கூடாய் பார்க்க முடியுமான அளவுக்கு வந்துவிட்டதால் எழுபவை.
அரசியல் பலவீனம் என்பதில் முக்கிய பகுதியாக இருப்பது மக்களுக்கு இருக்கும் குழப்பகரமான அரசியல் பார்வையும் நிலைப்பாடும்.
இந்ந்த குழப்பகரமான சூழலுக்குள் மந்ந்தைகளாக மக்களை தள்ளிய பெரும்பணியினை விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுத இயக்கங்களே செய்தன.
இராணுவ வெற்றிி போதையினுள் ஆழ்ந்ந்து மகிழ மக்களை பழக்கியவர்கள் விடுதலைப்புலிகளே.
விதைத்ததை அறுக்கத்தானே வேண்டும்?
குத்தகை மனநிலை பற்றி நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் உண்மை.
புலத்திலிருந்து இயங்கும் நிதர்சனம் உள்ளிட்ட தளங்கள் இந்த குத்தகை மனநிலைக்கு நல்ல உதாரணங்கள்.
உங்கள் நண்பர்களிடம், தெரிந்தவர்களிடம் இரண்டு கேள்விகள் கேளுங்கள்.
விடைகளை தொகுத்து பாருங்கள். தமிழர்கள் அரசியல் ரீதியாக ஏன், எவ்வளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்று புரியும்.
கேள்வி 1 - தமிழீழம் ஏன் தேவை?
கேள்வி 2 - அடுத்ததாய் தமிழர் எடுக்கவேண்டிய நகர்வு என்ன?
புலிகள் தோல்வியடைந்தவுடன் விழுந்தடித்துக் கொண்டு இராணுவத் தோல்வி காணும் புலிகள் என்றவாறாக ஆய்வுகளையும் அறுவைகளையும் காரணா காரியங்களையும் சொல்லும் இராயகரன் போன்றொர் புலிகள் இராணவ வெற்றி பெற்ற சந்தர்ப்பங்களில் ஏன் அது பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதில்லை.
//புலிகள் தோல்வியடைந்தவுடன் விழுந்தடித்துக் கொண்டு இராணுவத் தோல்வி காணும் புலிகள் என்றவாறாக ஆய்வுகளையும் அறுவைகளையும் காரணா காரியங்களையும் சொல்லும் இராயகரன் போன்றொர் புலிகள் இராணவ வெற்றி பெற்ற சந்தர்ப்பங்களில் ஏன் அது பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதில்லை. //
ஆருக்குத் தெரியும்?
Post a Comment