Friday, December 29, 2006

இந்தியா அமெரிக்காவின் மாநிலமாக

ஜடாயுவின் ஒரு பதிவினை இன்னு தான் பார்க்க நேர்ந்தது. அதில் இடம் பெற்றிருந்த ஒரு பின்னூட்டம் இலங்கையில் கொழுந்து விட்டெரியும் தமிழர் பிரச்சனைக்கு இது வரை சொன்ன சாத்வீக ஆத்வீக சமாதானத் தீர்வுகள் அனைத்திலும் ரொம்ப (நகை)ச் சுவையானது.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது. தனிக்காட்டு ராஜாவாக இருக்க விரும்பு ராஜப§க்ஷ, ஈழத்தலைவர்களுக்கு அது உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம்.


ஆனால், இலங்கையில் இருக்கும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் அதுதான் நல்லது.

இன்றில்லையேல் இன்னும் சில வருடங்களில் அதுதான் நடக்கும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது.

எட.. இப்பிடியொரு தீர்வு இவ்வளவு நாளும் எங்கடை தலைவர்மாருக்கும் எங்களுக்கும் தெரியாமல்ப் போட்டுதே. இதில மிகப் பெரும் பகிடி என்னெண்டால் அப்படி நாங்கள் மாநிலமா இணைஞ்ச பிறகு அதைப் பாத்து நேபாளம் பூட்டான் நாடுகளும் இந்தியாவோடு வந்து இணைவினமாம். பச்சையாச் சொன்னா உது அந்தக் காலச் சோழ சேர பாண்டியரின் நாடு பிடிக்கும் எண்ணத்தின்ர மிச்ச சொச்ச எண்ணம் தான்.

இதைப் படித்த உடனை எனக்கும் சில தீர்வுகள் தோன்றியது.
இந்தியாவில் வறுமை ஒரு முக்கிய பிரச்சனை. இதிலிருந்து விடுபட இந்திய மக்கள் தங்களை அமெரிக்காவுடன் இணைக்கச் சொல்லி கேட்கலாமே..Green Card ம் இலகுவாக கிடைக்கும். அவ்வளவும் ஏன் அடிமையாயிருந்தால் என்ன குறைஞ்சா போயிடுவம்.. இங்கிலாந்துக்கு கீழையே தொடர்ந்தும் இருந்திருந்தால் எல்லா வசதிகளும் கொண்ட (உண்மையாகவே) ஊழல் அற்ற ஆட்சியொன்று கிடைத்திருக்குமே..

இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இந்தியா இலங்கை சிங்கப்பூர் அவுஸ்திரேலியா முதலான எல்லா நாடுகளும் அமெரிக்காவோடு இணைந்தால் நாடுகளுக்கு இடையில் ஒரு பிரச்சனையும் வராது. உலகத்துக்கு ஒரு நாடு உண்மையில நல்ல விசயம் தான். முதலில இந்தியா போய் இணைந்தால் வறுமைப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காணலாம். அதனைப் பார்த்து நேபாளம் பாகிஸ்தான் முதலிய நாடுகளும் அமெரிக்காவோடு இணைய முன்வரும்.

ஆகக் குறைந்தது காஸ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காவது இந்தியா பாகிஸ்தானின் 15 மாநிலங்களானால் அது நல்ல ஒரு தீர்வைத் தரும்.

இறுதியாக

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இந்தக் கேள்வியின் படி கட்டாயமான ஒரு சூழ்நிலை வருமென்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோமே.. கண்டிப்பாக இந்தியாவுடன் தான் இணைந்து கொள்ள வேண்டுமா..?
அவுஸ்திரேலியாவுடன் இணையலாமே..

12 comments:

Anonymous said...

ஏன் நீங்கள் இப்படியான பதிவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் அருகதை கொடுத்து மற்றவர்கள் வாசிக்கும் விதமாக வாய்ப்பினைக் கொடுக்கும்விதத்திலே இப்படியான பதிவிடுகின்றீர்கள்?

Anonymous said...

தங்களது இந்த பதிவு யாரோ எழுதியதிற்கு இந்தியாவை மதிப்பு குறைவாக பேசுவது நன்றாக இல்லை, இலங்கை எந்த விதத்திலும் இந்தியாவுடன் ஒப்பிடும் அளவில் இல்லை என்பது உலகறிந்த உண்மை. நான் ஆணவத்தில் சொல்லவில்லை, உண்மை நிலை அதுதான். இந்தியாவின் வறுமையைப் பற்றியோ, இந்தியாவின் அமைதியைப் பற்றியோ, காஷ்மீர் பிரச்சனையைப் பற்றியோ பேச இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கிஞ்சித்தும் தகுதி இல்லை. சற்று காரமாக இருந்தால் மன்னிக்க....

Barath said...

அனானி உங்கள் வார்த்தைகளில் தவறில்லை.

Anonymous said...

// இந்தியாவின் வறுமையைப் பற்றியோ, இந்தியாவின் அமைதியைப் பற்றியோ, காஷ்மீர் பிரச்சனையைப் பற்றியோ பேச இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கிஞ்சித்தும் தகுதி இல்லை. //
அப்போ இலங்கையை இந்தியாவோடு இணைக்கச் சொல்லிப் பேசுவதற்கு மட்டும் இந்தியர்களுக்கு தகுதி இருக்கா? உம்மை விட மிகச் சிரிய நாடான ஜப்பானை இணைக்கச் சொல்லிக் கேட்கிறது தானே.. இலங்கைன்னவுடனே எளக்காரமாக்கும்...

இலங்கைத் தமிழர்கள் அப்படி ஏதாவது ஒரு நாட்டுடுடன் இணைய வேண்டுமென்றால், தமிழைக் கிட்டத் தட்ட கொலை செய்து காணாமால் போக்கிவிட்ட இந்தியாவுடன் இணையாமல் மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்த்ரேலியா என்று மற்ற நாடுகளைப் பார்த்துக் கொண்டு போவது மேல்!!

வன்னியன் said...

கொழுவி,
இதுபோன்ற வடிகட்டின முட்டாள்களின் பதிவுகளுக்கும் கருத்துக்களுக்கும் பதிலெழுதுவதும் பதிற்பதிவு போடுவதும் அதைவிட கடைந்தெடுத்த முட்டாள்தனம்.
இந்தக் கோமாளிகளின் பதிவுகளையும் கருத்துக்களையும் ஏன் எதிர்க்கவில்லையென்று ஒருவர் என் பதிவில் குறைபட்டிருந்தார். என்னத்தைச் சொல்ல?
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் ஜடாயு போன்றவர்கள் சொன்னதைவிடவும் 'சிறந்த' தீர்வுகள் பெடியங்கள் வலைப்பதிவில் ஏற்கனவே வந்திருந்தன. அவற்றையும் வாசித்தால் நன்று.

குழலி / Kuzhali said...

//இதைப் படித்த உடனை எனக்கும் சில தீர்வுகள் தோன்றியது.
இந்தியாவில் வறுமை ஒரு முக்கிய பிரச்சனை. இதிலிருந்து விடுபட இந்திய மக்கள் தங்களை அமெரிக்காவுடன் இணைக்கச் சொல்லி கேட்கலாமே..Green Card ம் இலகுவாக கிடைக்கும். அவ்வளவும் ஏன் அடிமையாயிருந்தால் என்ன குறைஞ்சா போயிடுவம்.. இங்கிலாந்துக்கு கீழையே தொடர்ந்தும் இருந்திருந்தால் எல்லா வசதிகளும் கொண்ட (உண்மையாகவே) ஊழல் அற்ற ஆட்சியொன்று கிடைத்திருக்குமே..
//
கொழுவி நல்லா சொன்னிங்க போங்க, ஏற்கனவே ஒரு முறை செல்வனின் பதிவில் தேசபக்தி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியபோது இதையேத்தான் நானும் சொன்னேன், ஒத்துக்க மாட்டேன்னுடாங்கப்பா.... அப்போ என்னமோ சுயம், தேசன், இந்தியன் லொட்டு லொசுக்குனு என்னென்னமோ பேசினாங்கப்பா

Anonymous said...

நல்லா அந்தப்பதிவை பாருங்கள் , இந்திய தேசிய உணர்வுள்ளவர்களும் ஈழ ஆதரவு மனநிலையுடனே இருக்கிறோம் , திராவிட குஞ்சுகளுடன் சேர்ந்து தேவையிலாமல் இந்தியாவை கிண்டடடித்து ....... தேவையா ?

theevu said...

//இலங்கைத் தமிழர்கள் அப்படி ஏதாவது ஒரு நாட்டுடுடன் இணைய வேண்டுமென்றால், தமிழைக் கிட்டத் தட்ட கொலை செய்து காணாமால் போக்கிவிட்ட இந்தியாவுடன் இணையாமல் மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்த்ரேலியா என்று மற்ற நாடுகளைப் பார்த்துக் கொண்டு போவது மேல்!! //



இந்தியாவுடன் இணைந்தால் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏதாவது வருமானம் கிடைக்குமல்லவா?கலர் டீவிஅப்படீஇப்படீன்னு..
அவுஸ்திரேலியாக்காரங்கள் தருவாங்களா:)


//தமிழைக் கிட்டத் தட்ட கொலை செய்து காணாமால் போக்கிவிட்ட இந்தியாவுடன் //

சென்னைக்கு வெளியே தமிழ் நன்றாகத்தானிருக்கிறது.யாரோ ஒரு வலைப்பதிவர் திருநெல்வேலித் தமிழ் கொங்குத்தமிழ் என சில சொற்பதங்களை தொகுத்து வலைப்பதிவில் வெளியிட்டிருந்தார் .அதில் பல சென்னைக்காரருக்கு புரியாத ஆனால் நமக்கு பரிச்சயமான, நாம் அன்றாடம் பாவிக்கும் சொற்தொடர்களே...

விக்ரமாதித்யன் கவிதைகள் வாசித்தாலே யாரோ யாழ்ப்பாணத்தான் எழுதியதோ என்று கூட சில சமயம் சந்தேகம் வரும்.அப்படி எமது தமிழ் அதிலிருக்கும்.

சென்னையை தாண்டுங்கள் .சென்னைக்கு வெளியே தமிழ் நன்றாகத்தானிருக்கிறது.

Anonymous said...

சூப்பர்டா சாமி. இந்துத்துவா வெறியர்களும் சியோனிச வெறியர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாம். அடேய்ங்கப்பா. ஈழத்தமிழருக்கும் அவுங்களோட சார்பா காலம் காலமா பேசுற தமிழ் திராவிடர்களையும் பிரிக்க இப்புடியுமாடா ஆடுவாங்க ஆட்டம்? ஏஞ்சாமி போயி சரித்திரத்த திரும்பி பாருங்கய்யா. வெற்றி போல முட்டாய் திங்குற முட்டாப்பசங்களுக்கு இது ஒண்ணுமே புர்யதில்லே. பார்ப்பான் பாப்பான்னு சொல்லுவாங்கய்யா. ஏங்கய்யா ஜடாயு, சமுத்ரா, வஜ்ரா, கல்காரி சிவா இவனுங்களா ஈழத்தமிழ்சகோரனுங்களை காப்பாத்துவானுங்கய்யா? கண்ணை தொறங்கையா.

கருமூர்த்தி ஏனுங்கய்யா ஒங்களோட ஒரிஜினல் பேர்லயும் டூ மெனி அனானிமஸ் பேர்லயும் நீங்க ஈழசகோதரனுக்கு எதிரா ஆடின ஆட்டத்துல சவுத் ஆபிரிக்கா டீமே தோத்துடுமேய்யா? இன்னிக்கு எந்த மூஞ்சியோடே இந்த போல்டு போடு போடுறீங்கைய்யா? பொழச்சுங்குவீங்கய்யா. இன்னிக்கே நேத்திக்கா வெத்துற கட்சியோட நீங்க, உங்க அப்பன், பாட்டன், முப்பாட்டன்னு சாய்ஞ்சு நின்னு ஆடிட்டு இருக்கீங்க? தூக்கி அடிங்கய்யா டபுள் செஞ்சுரி.

Anonymous said...

ஐயா,

ஏற்கனவே இந்து - முஸ்லிம், பார்ப்பனன் - பெரியார்தாசன் என்று பலபல சண்டைகள் தமிழ்மணத்தில் அரங்கேறுகிறது. இதில், இப்படி ஒரு பிரச்சனையை ஏன் இழுக்கின்றீர்கள்.

போர் நீங்கிய உலகம் காண்போம் வாருங்கள்.

Santhosh said...

//கொழுவி நல்லா சொன்னிங்க போங்க, ஏற்கனவே ஒரு முறை செல்வனின் பதிவில் தேசபக்தி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியபோது இதையேத்தான் நானும் சொன்னேன், ஒத்துக்க மாட்டேன்னுடாங்கப்பா.... அப்போ என்னமோ சுயம், தேசன், இந்தியன் லொட்டு லொசுக்குனு என்னென்னமோ பேசினாங்கப்பா//
குழலி,
சரி இதுக்கும் தேச பக்திக்கும் என்ன சம்மந்தம்? வறுமை, பசி இல்லாத நாட்டைத்தான் நீங்க நேசிப்பீர்கள் என்றால் அப்படி இரு இடமே இல்லை உலகத்தில். நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா எங்க அம்மாக்கு உடம்பு சரியில்லை அதனால எனக்கு பக்கத்து ஊட்டு அம்மாதான் புடிக்கும் அப்படிங்கிற மாதிரி இல்ல இருக்கு. இந்தியாவை பத்தி யாராவது எதையாவது சொல்லிடக்கூடாதே உடனே ஜல்லி அடிச்சிட்டு வந்துடுவிங்களே பாருங்க இந்தியா இம்முட்டு கேவலமா இருக்குன்னு. யாராவது கேட்டாங்களா என்ன எங்க இந்தியாவை நேசிங்கன்னு போங்க சார் வேலையை பாத்துகிட்டு எங்களுக்கு தெரியும் எப்படி எங்க நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று. எங்களுக்கு தெரியாதா என்ன நம்ம ஆளுங்களுக்கு சிங்கப்பூரில் என்ன மரியாதை என்று ? அவனுங்க செருப்பால அடிச்சாலும் அதை சிரிச்சிகிட்டே ஹிஹி.. என்ன வாழ்க்கை என்ன வாழ்க்கை இந்தியாவுல வருமா இந்த வாழ்க்கை அப்படின்னு சொல்லிகிட்டு.

Anonymous said...

கொழுவி..

ஈழத்தமிழர் பிரச்னைக்கு ஆதரவு தரவேண்டும் என்று தமிழகத் தலைவர்களையும் தமிழர்களையும் துணைக்கழைக்கிறார்கள். கோபம் வரும்போது, இலங்கை மீதான தாய்நாட்டுப் பாசம் பீறிடுகிறது. இதேத் தாய்நாட்டுப் பாசத்தை சிங்களக் கட்சிகளிடம் காண்பித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தங்களுக்கு வேண்டியதைச் செய்து கொண்டிருக்கலாமே. இத்தனையாண்டு போர் தேவைப்பட்டிருக்காது. இத்தனை லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள். சுயபரிசோதனை தற்போது தேவைப்படுகிறது. தேசிய நீரோட்டத்திற்கு மீண்டும் திரும்ப முடியுமா என்று சுயபரிசோதனை செய்ய நேரம் வந்து விட்டது.