Saturday, January 06, 2007

வக்கிரம் பிடித்த கொழுவி - சிறீரங்கன்

இந்த நிலையில் பேடித்தனமாகக் கொழுவியும்,பெடியன்களும் பதிவிட்டு,நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.இதற்கு மேலால் இத்தகைய தலைமுறையால் என்னத்தைப் புதிதாகச் சிந்தித்திருக்க முடிந்தது?பெடியன்களின் பெயரால் சுவிஸ்,சிங்கப்ப+ர்,அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேடிகள் எழுதுவதற்கு வக்கற்று மற்றவர்களைக் கேலி பேசுவது ஒரு வகை மாபியத்தனத்தின் திமிர்தான்.இத்தகைய திமிரில் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது ஊரறிந்த விடையம்.

சிறிரங்கன் அவர்கள் கொழவி குறித்து எழுதிய மேற்படி விடயம் பற்றிய சில எண்ணங்கள் இவை.
இதிலே பேடித்தனமாக கொழுவி என்ன எழுதினார் என்பதை அவர் தெளிவாக குறிப்பிட வில்லையாயினும், கொழுவியில் வெளியான அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும் என்ற பதிவு தொடர்பாகவே தனக்கேற்பட்ட சூட்டை இவ்வாறு தணித்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. பேடிகள், வக்கிரம், மாபியா, திமிர் இத்தகைய வார்த்தைகள் எல்லாமே அவருக்குள் கிளர்ந்தெழுந்த சூட்டின் வெளிப்படுத்தல்கள் தான்.

அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும் என்ற பதிவு, சிறிரங்கன் தனது பதிவில் ஏலவே எழுதிய அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற அவரது பதிவின் நீட்சிதான். தொடர்ச்சி தான். தழுவல் தான்.

இதில் எங்கிருந்து மன வக்கிரம் எழுகிறதோ, அல்லது எங்கு கொழுவிக்கு திமிர் பிடிக்கிறதோ தெரியவில்லை. அவ்வாறேதும் இருப்பின், அது அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற பதிவினை எழுதும் போது சிறிரங்கனுக்குள் இருந்த மன வக்கிரம், மற்றும் மாபியாத்தனம் ஆகியவற்றின் நீட்சியே பின்னர் அது தொடர்பான பதிலெழுதும் போதும் எனக்குள்ளும் எழுந்திருக்கும்.

அடுத்த பந்திக்குள் செல்வதற்கு முன் இந்த இடைச்செருகல் அவசியமாகிறது. சிறிரங்கன் அகரன் போன்ற பதிவர்களுக்கிடையிலும் இராயகரன் போன்ற பதிவர்களுக்கிடையில் என்னளவில் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இராயகரனின் எழுத்துக்களில் நேர்மை இருக்கும். வாசிக்கும் போது அதனை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் மற்றவர்கள் தாம் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கும் வரை காத்திருந்து நடந்ததும் அது பற்றி காரசாரமாக எழுதுகிறவர்களாகத் தான் தோன்றுகிறார்கள். இதோ கிழக்கில் புலிகளுக்கு, அல்லது ஒட்டு மொத்தமாகவே புலிகளுக்கு இராணுவத் தோல்வி ஏற்பட்டு விடும் என்பதனை முன் கூட்டியே இவர்கள் தீர்மானித்த பிறகு மிகுந்த மன உற்சாகத்துடன் எழுதித் தள்ள காத்திருக்கும் இவர்கள் இது போலவே இன்னும் நிறைய விடயங்களில் ஒன்று படுகிறார்கள்.

சிறிரங்கன் ஆரம்பம் முதலே குழப்பான கருத்துக்களை அந்த, அந்த நேரத்து உணர்ச்சிகளுக்கு அமைய எழுதிவருபவர் என்பது நான் எனக்குள் தீர்மானித்து விட்ட ஒன்று. குறிப்பாக சில காலங்களுக்கு முன்னர் புலிகளின் தொண்டரடிப்பொடிகள் சிலரின் இணையத்தில் வெளிவந்த அவருடைய படத்துடனான ஒரு செய்தியை மட்டும் (அது மன உளைச்சலைத் தரக்கூடிய செய்தியே என்பதில் மறுப்பேதும் இல்லை) வைத்துக் கொண்டு மிக அழகாக திரைக்கதை அமைத்து தன் மீதான நேரடிக் கொலை மிரட்டல் நாடகத்தினை அரங்கேற்றியவர். கூடவே ஜேர்மனியில் உள்ள இணைய மையங்களில் தனது புகைப்படத்துடன் கூடிய நோட்டிஸ் அச்சடித்து விநியோகிக்கப்படுவதாக வேறு கூறியவர்.

அது போலவே பொடியன்கள் என்ற இலக்கற்ற பதிவொன்றின் தொடக்கத்தில், அது ஈபிடிபி என்னும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினது என்றும், இதய வீணைக் காரரின் வலை, என்றும் டக்ளசின் பதிவு என்றும் பயமுறுத்திய அதே சிறிரங்கன் தான் இப்போது அதற்கு வேறு முகவர்களை நியமித்திருக்கிறார்.

(சிறிரங்கன் ஜனநாயகம் கருணா பரமுவேலன் நிர்மாணம் என பல்வகை பதிவுகளின் சொந்தக்காரர் ஆயினும் அதில் ஏதும் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் அவை அனைத்துமே அவரது சொந்தக் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. )

அவருக்குள் இயல்பாக எழும் உணர்ச்சிகளை சில சமயங்களில் வார்த்தைகளாக அவர் ஆக்கி விடுவது சில சமயங்களில் அவரை தெளிவாக இனம் காட்டும். அவ்வாறான ஒரு பதிவை இங்கு படியுங்கள்

இத்தனைக்குப் பிறகும் சிறிரங்கன் பிரபாகரனை மோடன், முட்டாள் என்பதையோ அல்லது அன்ரன் பாலசிங்கத்தை தனது எரிந்த வார்த்தைகளால் நாற்றமடிக்க அர்ச்சிப்பதையோ நான் எந்த வித கோப தாப எழுச்சி உணர்ச்சிகளும் அற்று வாசிக்கிறேன்.

ஆனால் அவ்வாறு எழுதுவதற்கு அவருக்கு உள்ள அதே சுதந்திரத்தையும் உரிமையையும் நானும் கொண்டிருக்கிறேன். அவ்வாறே நானும் எழுதுவேன். ஆனால் அப்போது மட்டும் அவர் ஓடிவந்து உது வக்கிரம், மாபியா தனம், திமிர் என்று சொல்வது மீளவும் அவரைத்தான் முகமுரித்துக் காட்டுகிறது.

புலிகள் தொடர்பான முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று அவர்கள் மீதான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாத போது வேறு வழிகளில் கேள்வியை நிறுத்துவது என்பது. அதுவே சிறிரங்கனிடமும் உள்ளது. அடிப்படையில் அனைவரிடமும் உள்ளது.

அன்ரன் பாலசிங்கத்தை கிண்டலடிக்க அவர் பயன்படுத்திய அதே வார்த்தைகளை அதே வசனங்களை அவர் மீது பிரயோகித்தவுடன் பொறுக்க முடியாமல் பொங்கியெழும் அவரைத்தான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் வார்த்தைகளாகப் பார்த்தோம்.

அவர் தொடர்ந்தும் பிரபாகரனைப் பற்றியும் பாலசிங்கத்தைப் பற்றியும் இன்னும் எல்லோர் பற்றியும் தொடர்ந்து எழுத வேண்டும் . ஏனெனில் எமக்கும் எழுத நிறைய இருக்கிறது.

சிறிரங்கன் எழுதிய அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற பதிவை வாசித்த பின்னர் இதோ அவர் எழுதிய அவரது சொந்த வார்த்தைகளையும் வாசியுங்கள்.
நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.

13 comments:

Anonymous said...

கொழுவி,வணக்கம்!

என்னைப்பற்றிய உங்கள் கோஷ்டிகளின் எந்தப் பதிவுக்கும் நான் பதிலளிப்பதில்லை என்ற முடிவோடிருக்கிறேன்.எனினும,; உம்மைப் பேடியென்றெழுதியது பற்றியும்,நீர் என்னைக் குறித்து- புலிகளின் கள நிலைவரம் பற்றிய பார்வை¨யுயும் வைத்தெழுதியது பற்றி, நான் சில வற்றைச் சொல்வது அவசியம்.


முதலில் பேடியென்று உம்மை கடிந்தது ஏன்?


நீர் சுட்டியது போன்ற என்னைக் குறித்த உமது எதிர் எழுத்துக்கல்ல!


அதை நான் உண்மையில் எதிர்க்கவில்லை.

அதில் நீர் குறித்த எதையும் தவறாக எடுக்கவில்லை.நீர் போடும் பதிவுகளை முதலில் வாசித்து உமது சகோதரத்துவக் கண்ணோட்டத்தை விரும்புவது வழமை.ஆனால் உம்மைக் கடிந்தது எதனால்?

நீரே கிண்டலாக எழுதிய பின்னு}ட்டுக்காகவே!

கூகிள் கணக்கிற்கு நான் மாறிய பின்,பதிவினில் பல தவறுகள் நேர்ந்தன.


அது குறித்தெழுதியதைப் பெடியன்களின் பதிவினில் வந்த நையாண்டியைக் காரணம் காட்டிப் புலிகள் அழித்ததாகக் கிண்டல் செய்தீர்.இதனால் எனக்கு உம்மையும் திட்ட மனம்கூடியது.எனவே திட்டினேன்!


அடுத்துப் புலிகள் என்னைத் தேடுவது குறித்து...

நீர் நெடுகக் கிண்டல் போடுகிறீர்


.அது குறித்து உமக்கு என்ன தெரியும்?

அல்லது எவரிடம் விசாரித்தீர்?


உமக்கு ஏதாவது தெரியுமா?

கடந்த மேதினத்தில் எனக்கும் புலிப்பொறுப்பாளர் சங்கருக்குமிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தின் பின்பு,அவர்களால் பதியப்பட்ட "எட்டப்பா"டொட்.கொம் எனது புகைப்படத்தைப் போட்டு,என்னைத் துரோகியாக்கியது ஊரறிந்தது.அதன் பின்பு,வூப்பெற்றாலில் இருக்கும் ஸ்ரீரங்கனை கிவுல்ஸ்பேர்க்கிலிருக்கும் தமிழர்கள் இன்ரநெற் கபேயில் நகல் எடுத்து வைக்கப்பட்ட எனது படத்தோடான எட்டப்பர்(ஓபர்கவுசன் புலிப் பொறுப்பாளிரின் பதிவு)இணையத்தின் எழுத்தோடு,என்னிடமே வந்து,"அண்ணே உங்களையும் இப்படிப் போட்டுள்ளான் உண்மையா"வென வினவியவர்கள் பலர்.

அவர்களுள் என்னோடு வேலை செய்த கிவுள்ஸ்பேர்க் பொய்யாமணியும் ஒருவர்.

அதைவிட கிவுள்ஸ்பேர்க் பொறுப்பாளர் சங்கர் என்னைத் தேடியதும்,என் சகலனிடம்-அவர் தொழில் புரியம் தொழிற்சாலையில் தனது பரிவாரங்களுடாக எச்சரிக்கை-தண்டனையென்று வாக்கு வாதப்பட்டதும் உண்மை.அதைவிட இந்தச் சங்கர் இன்றோ மக்களிடம் பெற்ற நிதியினை மோசடி செய்து, தலை மறைவாகிய இன்றைய கதையும் எமக்குத் தெரியும்.அது போலவே எட்டப்பர்.கொம் நெருடலாக மாறி, இன்னும் சொறியிற வேலையும் தெரியும்.இது குறித்து வடிவாக உமது இயக்கத் தொடர்பூடாக் விசாரித்து, எழுதும்.

இல்லையேல் என்னிடம் வரவும்

.நாம் உங்கள் புலிப் பொறுப்பாளர்களோடு சந்தித்து உண்மையைக் கதைப்போம்-அறிவோம்.இதைவிட்டு, திரைக் கதை எழுதியதென்று இட்டுக் கட்டாதேயும்.இதைத் தெளிவுறுத் தெரிவேண்டுமாக இருந்தால் நீர் என்னோடு தொடர்பு கொண்டு,ஜேர்மனிக்கு வாரும்,புலிகளைச் சந்திப்போம்.இதைவிட்டுக் கேவலப்படுத்த முனைவது அறிவுடையதாகத் தெரியவில்லை!இந்த விஷயமாக நான் எவருடனும் ஓபகவுசன் புலிப் பொறுப்பாளர் குறித்தும்,அவருடன் நான்பட்ட வாக்குவாதம் குறித்தும்-அந்தச் சங்கரை வைத்தே விவாதிகத் தயாராக இருக்கிறேன்.நான் மெளனமாக இருப்பது இந்தபு; புலிப் பிரச்சனையை மறப்பதற்கே!உமக்கு அது அவலாக இருந்தால் வாரும் பல உண்மைகளை அவர்களுடாகவே கதைத்துத் தெரிந்து கொள்வோம்.இதைவிட்டு,சுவிசிலிருந்து கொண்டு,கை நீட்டும் வேலையைச் செய்தீர் நண்ப!

அடுத்து, என்ன சொல்கிறீர்?"சிறிரங்கன் அகரன் போன்ற பதிவர்களுக்கிடையிலும் இராயகரன் போன்ற பதிவர்களுக்கிடையில் என்னளவில் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இராயகரனின் எழுத்துக்களில் நேர்மை இருக்கும். வாசிக்கும் போது அதனை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் மற்றவர்கள் தாம் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கும் வரை காத்திருந்து நடந்ததும் அது பற்றி காரசாரமாக எழுதுகிறவர்களாகத் தான் தோன்றுகிறார்கள். இதோ கிழக்கில் புலிகளுக்குஇ அல்லது ஒட்டு மொத்தமாகவே புலிகளுக்கு இராணுவத் தோல்வி ஏற்பட்டு விடும் என்பதனை முன் கூட்டியே இவர்கள் தீர்மானித்த பிறகு மிகுந்த மன உற்சாகத்துடன் எழுதித் தள்ள காத்திருக்கும் இவர்கள் இது போலவே இன்னும் நிறைய விடயங்களில் ஒன்று படுகிறார்கள்."

இங்கே மடத்தனமாகத் தனி நபரான என்னைப் புலிகளுக்கு மீண்டும் கை நீட்டும் காரியத்தில் ஈடுபடுகிறீர்.


கிழக்கில் புலிகளுக்குத் தோல்வி வந்தால்,அதையொட்டி மகிழ்வது இலங்கையரசுக்குக் காவடி தூக்கும் புலிகளுக்கு(கருணா குழு)மற்றும் இயக்கங்களுக்கு உகந்ததாக இருக்கலாம்.எனக்கல்ல.என்னையும் இதில் இணைக்கும் உமது நரித்தனமான நயவஞ்சக எழுத்தை இத்துடன் நிறுத்தும்.இது மற்றவனுக்குப் பொட்டிட முனையும் கைங்காரியம்!


எனது எழுத்துகளுக்கும் அகரனுக்கும் இணைப்பிட முனைந்த உமக்கு எழுத்துகளின் பரிணாமம் புரியாதிருப்பதுதாம் காரணமா அல்லது தீர்த்துக் கட்டுவது நோக்கா?


இன்னும் கொஞ்சம்:பிரபாகரனோ அல்லது பாலசிங்கமோ தனிப்பட்டவர்களாக இருக்கும்போது நமக்கு விமர்சிக்க அவசியம் இருக்காது.அவர்கள் இருவரும் தமிழர்களின் இதுநாள் வரையான அனைத்து அழிவுகளுக்கும் பொறுப்பான அரசியலில் தலைவர்களாக இருப்பதால் அதை நாம் விமர்சிப்போம்.மக்களைக் கொல்பவுர்களை மோடன் எண்டுதாம் கூறுகிறோம்.ஆனால் அவர்களை அழித்துக் கொன்றிடவேண்டுமென்று கூறவில்லை!அவர்களோ மக்களைக் கொல்வதில் தேச நலன் என்றும்,துரோகியென்றும் கதைவிட்டு வருவது நமக்குப் புரிந்ததுதாம்.

நாரதர் said...

வணக்கம் கொழுவி,

சிறி ரங்கன் பொடிச்சியின் பத்வில் நான் எழுதியவற்றிற்கு என்னை நோக்கிப் பல கேள்விகளைக் கேட்டிருந்தார்.அவற்றிற்கு நான் பெடிச்சியின் பதிவில் பின்னூட்டம் இட்டேன் அவை அங்கே இதுவரை பெடிச்சியினால் பிரசுரிக்கப்படவில்லை.உங்களது மேற் கூறிய பதிவிக்கும் இந்தப் பின்னூட்டங்கள் பொருந்தும்,என்பதால் இவற்றை இங்கே பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பெடிச்சியின் பதிவிற்கான சுட்டி இங்கே,http://peddai.net/?p=107

பெடிச்சி முதலில் மன்னிக்கவும், என்னை நோக்கி பல கேள்விகள் சிரி ரங்கனால் ,எழுப்பப் பட்டுள்ளதால் இதை இங்கே எழுத வேண்டி இருக்கிறது.

சிரி ரங்கன் ,

உமது புலம்பல்களில் எதுவுமே நான் கேட்ட ‘உமது தீர்வு’ பற்றி ஒன்றுமே இல்லையே? நான் புலிகள் என்ன செய்கிறார்கள் , அவர்களின் தீர்வு பற்றியா கேட்டேன்? உமது தீர்வு என்ன? அதற்காக நீர் என்னத்தை செய்துள்ளீர்.

நீர் டாக்குத்தர் கருணானந்தம் என்று ஏபிசிடி எழுதினதைப் பற்றியோ, என்னைக் கொல்லப் போறாங்கள் நான் இனிப் பதிவிட மாட்டன் என்று அனுதாபமும் ஆரவாரமும் செய்ததைப் பற்றி நான் கேட்கவில்லை.போர் வேண்டாம் புலிகள் வேண்டாம் என்றால் ஏன் நீங்கள் உங்கள் ‘தீர்வை’ முன் வைத்து ஒரு இயக்கத்தைக் கட்ட இயலாது? அப்படி நீங்கள் யுத்தம் அற்ற மக்களைப் பலி கொல்ளாத ஒரு தீர்வை மக்கள் முன் வைத்து , ஒரு அமைப்பை நிறுவி தமிழருக்கு ஒரு தீர்வை வழங்குவீர்கள் என்றால் மக்கள் உங்கள் பக்கம் தானே? மக்கள் சக்தி மிகப் பெரிய சக்தி அல்லவா? ஏன் உங்களால் பின் நூட்டக் கயமைகளுக்கு அப்பால் எவரையுமே ,உங்கள் கருதுக்களுக்கு ஏற்றதாக ஒன்று படுத்தி அமைப்பாக்க முடியவில்லை? ஏன் உங்கள் சொந்த வாழ்க்கையைப் பாத்துக் கொண்டு உங்கள் சொந்த நலங்களைப் பார்த்துக்கொண்டு, கரீபயனுக்கு கொலிடே போய்க் கொண்டு ,பொழுதுபோக்குக்காக உங்கள் ஞானத் தனத்தை மட்டுமே முன் நிறுத்திக் காட்ட போலியான கவலைகளையும் உனர்வுகளையும் வெளிக்காட்டுகிறீர்கள்.இது ஒரு போலியானதாக உங்களுக்குப் படவில்லையா? போலியானவ்ர்களை நம்பி எவர் வருவார்? நீங்கள் முதலில் உங்கள் சொல்லிலும், செயலிலும் நேர்மையானவரா?

யாழ்க் களத்தில் நீங்கள் கருத்துக்களை மட்டுறுத்த முடியாது.வேறு பெயர்களில் வந்து உங்களுக்கு நீங்களே பின்னூட்டம் இடமுடியாது.கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

உமது கேள்விகளுக்கு ஒரே பதில் தமிழர்களுக்கான தீர்வை மக்கள் முன் வைத்து மக்களாதரவுடன் இயங்கும் ஒரே இயக்கம் விடுதலைப் புலிகளே.எவரும் எவ்வளவும் போலியாக எழுதலாம்,எவனொருவன் தான் முன் வைக்கும் தீர்வுக்காக தனது உயிரை வாழ்வை அர்ப்பணிக்கிறானோ அவனே உண்மையான மனித நேயன்.அவர்களுக்கே நான் எனது ஆதரவைக் கொடுக்கமுடியும்.தமிழ் மக்களும் அவ்வாறே.உண்மையும்,நீதியும்,அ��
�முமே ஈற்றில் வெல்லும்.போலிகளை நம்பி எவரும் பின் வரமாட்டார்கள்.போலித்தனமான உள்ளத்தை உருக்கும் வெற்று வார்த்தைகள் மக்கள் துயரை நீக்கா.தீர்வை முன் மொழிந்து அதன் பாற்பட்டு தம்மை அர்ப்பணித்து உழைப்பவர் பின்னாலையே மக்கள் அணிதிரள்வர்.வெற்று எழுதுக்களால், சோடனையான வார்த்தைகளால், சொற் சிலம்பங்களால் தம்மை முன் நிறுதுபவர்களை விட, தமது செய்கையால்,தியாகத்தால் மக்களின் துயர் தீர தம்மை அர்ப்பணிப்பவர்களே உண்மையான மனித உரிமைப் போராளிகள்.

//***யுத்தத்தால்****, முழு இலங்கையுமே வறுமைக் கோட்டுக்குக் கீழ் மக்களைத் தள்ளி,அவர்களைச் சாகடிக்கும் போது,அந்த மக்கள் தமது இருப்புக்காகவும்,தமது உழைப்பை நியாயமாகத் தமது நலனுக்கான தேசியப் பொருளாதாரத்தை கட்டியொழுப்புவதற்கும்,அதைப் பாதுகாக்கவும் ஆளும் சிங்கள-தமிழ் அந்நியக் கைக்கூலித் தரகு முதலாளிய வர்க்கத்துக்கெதிராகப் போராடித் தமது தேசத்தைக் கட்டியெழுப்புவதே ****தீர்வு*****.//

ஆகவே 'உமது தீர்வு' என்று ஒன்றும் கிடையாது.மேல நீரே எழுதி இருப்பதின் படி ***யுத்தத்தால்*** தான் மக்களுக்குத் ****தீர்வு**** வரும்.பிறகென்ன நீரும், புலிகளும், நானும் சொல்வதைத் தானே கூறி உள்ளீர்.இதில் வேறு கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது?

Anonymous said...

//...போர் வேண்டாம் புலிகள் வேண்டாம் என்றால் ஏன் நீங்கள் உங்கள் ‘தீர்வை’ முன் வைத்து ஒரு இயக்கத்தைக் கட்ட இயலாது? அப்படி நீங்கள் யுத்தம் அற்ற மக்களைப் பலி கொல்ளாத ஒரு தீர்வை மக்கள் முன் வைத்து இ ஒரு அமைப்பை நிறுவி தமிழருக்கு ஒரு தீர்வை வழங்குவீர்கள் என்றால் மக்கள் உங்கள் பக்கம் தானே? மக்கள் சக்தி மிகப் பெரிய சக்தி அல்லவா? ஏன் உங்களால் பின் நூட்டக் கயமைகளுக்கு அப்பால் எவரையுமே இஉங்கள் கருதுக்களுக்கு ஏற்றதாக ஒன்று படுத்தி அமைப்பாக்க முடியவில்லை? //மழைவிட்டும் தூவானம் விலகியபாடில்லை!என்றபோதும் நான் இந்த நாரதரை நினைத்து மிகவும் பரிதாபப் படுகிறேன்!வெறும் அப்பாவித்தனமான கருத்துக்களைக் காவிக்கொண்டு,இவ்வகைப் பின்னூட்டம் எழுதினால் எவரொருவர் அதைப் பிரசுரிப்பார்?

உண்மையில் நீங்கள் என் கருத்தாடலுக்குரிய கருத்துக்களைக் கொண்டிருப்பவரில்லை!வெறுமனவே புலிப்பாட்டுப்பாடும் நேசறிப் பிள்ளையாகக் கருத்தாட முனையும்போது, எனது நேரமே வீணடிக்கப்படுகிறது!உங்களைத் தத்துவார்த்தத் தளத்தில் எதிர் கொள்வதற்கும் உங்களின் சமூக விஞ்ஞானப் புரிதல்...


என்ன செய்யலாம்?


மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,இதன் வாயிலாக ஆதிக்கம் அடைந்த வர்க்கம் ஆதிக்கம் இழந்த வர்க்கத்தை ஒடுக்கும்போது,அந்த வர்க்கம் செய்ய முனையும் போராட்டம்...கட்சி கட்டுவது,மக்கள் சமுதாயத்தில் வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்கள்,அந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள்,கருத்தியல் தளங்கள்,வன்முறைசார் கருத்தியல் வடிவம்,மற்றும் வன் முறை சாராக் கருத்தியல் தளம்,இவற்றைக் காத்து,நிர்வாகித்து வரும் அரசு,அமைப்பாண்மையுடைய இயக்கம்,அதன் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கம,; இவை குறித்தெல்லாம் நாரதர் படிக்க வேண்டும்.அதன் பின்பு நாம் கட்சி கட்டுவது,அதற்கு எந்த நாய்கள் தடையாக இருக்கின்றன,மக்களை அத்தகைய நிலைக்குச் செல்லாதபடி எந்தக் குரங்குகள் தடுத்துக் கொலை செய்கின்றன என்பதெல்லாம் புரியும்.


இதன் பிறகே ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடரலாம்.


இல்லையேல் நான் உங்களுக்குச் சமூக விஞ்ஞான அரிவரிப் பாடம்தாம் நடாத்த வேண்டும்.அதற்கு நான் விரும்ப வில்லை.பேசாமல் இரயாகரனின் தமிழரங்கம் போய் கொஞ்சம் பொறுமையோடு வாசித்து இவற்றைப் புரியவும்.இல்லையேல் உங்களைப் போன்றவர்களுக்காக நாம் சமூக விஞ்ஞானப் பாடம் நடாத்தும் ஒரு வடிவத்தைக் காணவேண்டும்.


எந்தவொரு தனிமனிதரும் மக்களுக்கான புரட்சிக் கட்சியைக் கட்டுவதில்லை.அதை மக்களே ஒரு கட்டத்தில் நிறைவேற்றுவார்கள்.இந் நிலையையெட்ட மக்களைக் கட்டிப் போட்டிருக்கும் ஒரு நாசகார வன்முறை ஜந்திரம் இப்போதைக்கு விடப் போவதில்லை.எனினும், மக்கள் இந்த இருண்ட சூழலை மிக விரைவில் உடைப்பார்கள்.


//ஏன் உங்கள் சொந்த வாழ்க்கையைப் பாத்துக் கொண்டு உங்கள் சொந்த நலங்களைப் பார்த்துக்கொண்டுஇ கரீபயனுக்கு கொலிடே போய்க் கொண்டு இபொழுதுபோக்குக்காக உங்கள் ஞானத் தனத்தை மட்டுமே முன் நிறுத்திக் காட்ட போலியான கவலைகளையும் உனர்வுகளையும் வெளிக்காட்டுகிறீர்கள்.இது ஒரு போலியானதாக உங்களுக்குப் படவில்லையா? போலியானவ்ர்களை நம்பி எவர் வருவார்? நீங்கள் முதலில் உங்கள் சொல்லிலும்இ செயலிலும் நேர்மையானவரா?//இந்தக் கேள்விக்கு நாம் நேர்மையானவர்கள் என்று யாருக்குப் பிரகடனப் படுத்த வேண்டும்?நாம் மக்களுக்கே கட்டுப் பட்டவர்கள்.


மக்கள் மத்தியில் நாம் நேர்மையானவர்களாவென்பதை எமது செயற்பாடு உறுதி செய்யும்.அடுத்து கரிபியனுக்குக் கொலிடே போவது...என்ன நாரதரே இப்படி மடக்கிறீர்கள்?உங்கள் வலி புரிகிறது!


இதை ஈழத்தில் போருக்கு முகம் கொடுக்கும் ஒரு ஜீவன் கேட்டால் நான் பதிலளிக்க முடியாது.காரணம் குருதி சிந்தும் என் தேசத்தின் பிரஜை நான்.எனினும் ஜந்திரத்தோடு ஜந்திரமாக உடலுழைக்கும் நாம்,அப்படியொரு ஊருலா போகாது போனால் இயங்க முடியாது!எமக்கு இதுவிடையமாகக் குற்றவுணர்வு உண்டு.உண்மையான மக்கள் போராட்டாம் இலங்கையில் மலர்திருந்தால் நாம் இந்தக் கேள்விக்குள் இடம் பெற்றிருக்கமாட்டோம்.நமது மக்களோடு தோள் சேர்ந்திருப்போம்.

Anonymous said...

//எந்தவொரு தனிமனிதரும் மக்களுக்கான புரட்சிக் கட்சியைக் கட்டுவதில்லை.அதை மக்களே ஒரு கட்டத்தில் நிறைவேற்றுவார்கள்.//

அதே மக்களையே பின்னர் சிலர் பாசிச வாதிகளென்பர்.
இன்றைய புலியெதிர்ப்பாளர்கள் எல்லோருமே கவனித்துப் பார்த்தால் புலிகளால் கலைக்கப்ட்ட முன்னைய நாள் இயக்கங்களைச் சேர்ந்தவரே

கூகுள் முதலாளி said...

//அது குறித்தெழுதியதைப் பெடியன்களின் பதிவினில் வந்த நையாண்டியைக் காரணம் காட்டிப் புலிகள் அழித்ததாகக் கிண்டல் செய்தீர்//

பார்த்தீர்களா புலிகளுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை.

merlkkaaran said...

வணக்கம்,தம்பிமாரே சும்மா சொறிந்துகொண்டிராமல். ஏதாவது உருப் படியாகச் செய்யுங்கோ.
தினம் தினம் செத்துப்போற சனத்தைப் பற்றிய எந்தக் கவலையுமற்று ஒரு மக்கள் கூட்டத்தின் வாழ்வியல் போராட்டம்குறித்த புரிதலும் அற்று குளிரூட்டப் பட்ட அறைகளுக்குள் சூடன காப்பியை சுவைத்தபடி எழுதிக்கொண்டிருக்கும் உங்களிடம் என்ன தீர்வு இருகிறது????
சிறிரங்கனுக்கும் கொழுவிக்கும் கையில அயுதம் இருந்தா நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது இந்த மாதிரி விழல்த்தனமான உரையாடல்களைப் பாக்கிறபோது புரிகிறது

நாரதர் said...

Sri Rangan said...
//மழைவிட்டும் தூவானம் விலகியபாடில்லை!என்றபோதும் நான் இந்த நாரதரை நினைத்து மிகவும் பரிதாபப் படுகிறேன்!வெறும் அப்பாவித்தனமான கருத்துக்களைக் காவிக்கொண்டு,இவ்வகைப் பின்னூட்டம் எழுதினால் எவரொருவர் அதைப் பிரசுரிப்பார்?//

தமது கருத்துக்களயே முன் நிறுத்த முயலுபவர்கள் பக்கச்சார்பான கருத்துச் சுதந்திரத்தையே கொண்டிருப்பர்.பொடிச்சியும் அவ்வாறே நீர் என்னை நோக்கி எழுப்பிய கேள்விகளுக்கு நான் அழித்த பதிலை அவர் பிரசுரிக்கவில்லை.இதில் இருந்து அவரின் பக்கச்சார்பு வெளிப்பட்டது.தனிப்பட்ட ரீதியாகக் கருத்து கூறாமல் நாரதருக்கு ஒன்றும் தெரியாது எங்கிற ரீதியான தாக்குதலையே மேற் கொண்டிருந்தீர்.இங்கேயும் அப்படித் தான். நான் யார் எனக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பது எதுவுமே உமக்குத் தெரியாது.கருத்துக்கள் பற்றிக் கருத்தாடாது 'நாரதர்' என்பவர் பற்றி நிர் எழுதுவது உமது கருத்து நிலை வறட்சியே ஆகும்.

//உண்மையில் நீங்கள் என் கருத்தாடலுக்குரிய கருத்துக்களைக் கொண்டிருப்பவரில்லை!வெறுமனவே புலிப்பாட்டுப்பாடும் நேசறிப் பிள்ளையாகக் கருத்தாட முனையும்போது, எனது நேரமே வீணடிக்கப்படுகிறது!உங்களைத் தத்துவார்த்தத் தளத்தில் எதிர் கொள்வதற்கும் உங்களின் சமூக விஞ்ஞானப் புரிதல்...//

இப்படி ஏகப்பட்ட புலுடாக்களைக் கண்டவன்,உங்களால் கருத்தாட முடியாது என்று சொல்லுங்கள்,தத்துவார்தத் தளம் என்பதெல்லாம் தாம் பேசுவது என்ன என்று புரிந்து கொண்டு பேசுவோர் சொல்ல வேண்டியவை.


// இவை குறித்தெல்லாம் நாரதர் படிக்க வேண்டும்.அதன் பின்பு நாம் கட்சி கட்டுவது,அதற்கு எந்த நாய்கள் தடையாக இருக்கின்றன,மக்களை அத்தகைய நிலைக்குச் செல்லாதபடி எந்தக் குரங்குகள் தடுத்துக் கொலை செய்கின்றன என்பதெல்லாம் புரியும்.//

நாரதர் இவை குறித்து எல்லாம் ஏற்கனவே படித்து விட்டார், வெறும் சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் உளறுவதால் உமக்கு இவை பற்றி விளங்கி விட்டது என்று அர்த்தம் அல்ல.உமக்கான விளக்கம் கருத்தாடலில் இருந்து தான் பிறக்கும்.


//இதன் பிறகே ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடரலாம்.//

ஏன் இப்போதே தொடரலாமே?


//இல்லையேல் நான் உங்களுக்குச் சமூக விஞ்ஞான அரிவரிப் பாடம்தாம் நடாத்த வேண்டும்.அதற்கு நான் விரும்ப வில்லை.பேசாமல் இரயாகரனின் தமிழரங்கம் போய் கொஞ்சம் பொறுமையோடு வாசித்து இவற்றைப் புரியவும்.//

இவற்றைப் புரிய நான் இராயாகரனின் தமிழ் அரங்க்ம் போக வேண்டியதில்லை, விசுவானந்த தேவன் காலத்தில் இருந்தே இவை பற்றிப் படித்து வந்திருக்கிறேன்.

//இல்லையேல் உங்களைப் போன்றவர்களுக்காக நாம் சமூக விஞ்ஞானப் பாடம் நடாத்தும் ஒரு வடிவத்தைக் காணவேண்டும்.//

நீரா பாடம் எடுப்பதா? ஏன் எனக்கும் உம்மைப் போல் மரை கழரவோ?


//எந்தவொரு தனிமனிதரும் மக்களுக்கான புரட்சிக் கட்சியைக் கட்டுவதில்லை.அதை மக்களே ஒரு கட்டத்தில் நிறைவேற்றுவார்கள்.//

தனி மனிதர்கள் தான் மக்கள், மக்கள் என்பது எங்கோ ஆகாயத்தில் இருந்து வந்த கற்பனைகள் இல்லை. நிசத்தில் வாழும் தனி மனிதர்கள் தான் மக்கள்.உம்மைப் பொறுத்த வரை யரோ மக்கள் என்பவர்கள் கட்சியை ஆரம்பிப்பார்கள்.அதுவரை நீர் இப்படியே பொழுதுபோக்கா எழுதிக் கொண்டிருப்பீர்.ஆனால் அவர்கள் தனிமனிதர்கள் இல்லை நல்லது பிறகு...

//இந் நிலையையெட்ட மக்களைக் கட்டிப் போட்டிருக்கும் ஒரு நாசகார வன்முறை ஜந்திரம் இப்போதைக்கு விடப் போவதில்லை.எனினும், மக்கள் இந்த இருண்ட சூழலை மிக விரைவில் உடைப்பார்கள்.//

நல்லது உடைக்கட்டும் நல்ல விசயம்.மக்களின் நலனில் அக்கறை அற்று நீர் புலத்தில் இருந்து தின்று,குடித்து,இப்படியே பொழுதைப்போக்கா தெரிச்ச வசனங்களை எழுதிக் கொண்டிருப்பீர் நல்லது...


//இந்தக் கேள்விக்கு நாம் நேர்மையானவர்கள் என்று யாருக்குப் பிரகடனப் படுத்த வேண்டும்?//

ஒருத்தருக்கும் இல்லை, நீர் நேர்மையானவர் இல்லை என்பதை கருத்தாடல் நிறுவி உள்ளது.அதற்கான மறுப்பை நீர் வழங்காத நிலையில் அல்லது வழங்க முடியாத நிலையில் உமது எழுத்தில் இருக்கும் போலித் தனம் அம்பலப்படும்,அவ்வளவே.

//நாம் மக்களுக்கே கட்டுப் பட்டவர்கள்.//

உங்க நாம் என்பது யாரை? அது நீர் என்னும் தனி மனிதனா? இல்லை வேற யாராவது இருக்கினமா? மேலும் மக்கள் என்பது யாரை அவை எங்க இருக்கினம்?மக்கள் தானே கட்டுக்களை தாங்களாகவே உடைக்கப் போகினம் ,இடையில நீங்கள் எதற்கு?


//மக்கள் மத்தியில் நாம் நேர்மையானவர்களாவென்பதை எமது செயற்பாடு உறுதி செய்யும்.//

உங்கள் செயற்பாடு, தனிமனித செயற்பாடு தான் ஒண்டும் இல்லை எண்டு மேல சொல்லிப் போட்டியள் தானே.மக்கள் தானே கட்சி அமைக்கப் போகினம்,கட்டுக்களை உடைக்கப் போகினம்.இதில பிறகு உங்கட செயற்பாடுகள் எதற்கு? நீங்கள் யார்? மக்களுக்கு நீங்கள் எத்ற்கு?//அடுத்து கரிபியனுக்குக் கொலிடே போவது...
என்ன நாரதரே இப்படி மடக்கிறீர்கள்?//

உங்களைச் சொல்ல வில்லை,கரீபியனுகுப் போனவைக்குத் தான் அது .கொலிடே போறதை நான் தவறென்று சொல்ல வில்லை.கப்பாச்சினோக் குடிச்சுக் கொண்டு மக்களின் சோகம் பற்றி அளக்கும் போலித் தனமானவர்களின் நிலையையே அங்க சுட்டிக் காட்டினேன்.செயற்பாடுகள் அற்ற வெற்று வார்த்தைகள் அர்த்தம் அற்றவை.//இதை ஈழத்தில் போருக்கு முகம் கொடுக்கும் ஒரு ஜீவன் கேட்டால் நான் பதிலளிக்க முடியாது.காரணம் குருதி சிந்தும் என் தேசத்தின் பிரஜை நான்.எனினும் ஜந்திரத்தோடு ஜந்திரமாக உடலுழைக்கும் நாம்,அப்படியொரு ஊருலா போகாது போனால் இயங்க முடியாது!எமக்கு இதுவிடையமாகக் குற்றவுணர்வு உண்டு.உண்மையான மக்கள் போராட்டாம் இலங்கையில் மலர்திருந்தால் நாம் இந்தக் கேள்விக்குள் இடம் பெற்றிருக்கமாட்டோம்.நமது மக்களோடு தோள் சேர்ந்திருப்போம்.//

ஏன் மக்கள் உங்களைக் கண்டு கொல்ளவில்லை? உண்மையான போராட்டம் ஏன் மலர வில்லை?
போராட்டம், போராடாது எவ்வாறு மலரும்?அது தான் முதலிலையே சொல்லி விட்டீர்களே மக்கள் கட்டியமைப்பார்கள் என்று ,அது தான் அவர்கள் உங்களுக்குக் கஸ்ட்டத்தைக் குடுக்காம தாங்களாகவே கட்டி அமைத்துள்ளார்கள்.அது தான் விடுதலைப் புலிகள் இயக்கம்.

நீங்கள் தோள் சேர்க்காம உங்க இருந்து இப்படி பொழுது பொக்குக்குக்கு பாசிசம்,சோசலிசம்,பொருள் முதல்வாதம்,விஞ்ஞான சோசலிசம் என்று வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் எழுதிக் கொண்டு உங்களை நீங்களே மார்க்ஸிசப் பண்டிதர் என்று கனவு காணுங்கோ.

ஒருவன் மார்க்கிஸத்தில் உள்ள சொற்களை உமிழ்வதால் மாத்திரம் ஒரு மார்கிஸிஸ்ட்டாவதில்லை.
தான் ஆதர்சிக்கும் சித்தாந்ததின் பாற்பட்டு செயற்படும் போது தான் அவன் உண்மையான மனிதன் ஆகிறான்.நீர் செய்வது மோசடி என்பது உலகம் முழுக்கத் தெரின்ச்ச விசயம்.

கொண்டோடி said...

நாரதரே,
நீர் நல்ல பகிடிக்காரன்.

யாழ்.களம் ஒரு கருத்துக்களமெண்டு நம்பிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிற உம்மை என்ன சொல்லிறது? அதுக்குள்ள மற்றாக்களை அங்க வாதிட வரச்சொல்லி அழைப்பு வேற.
உவையள் அங்க வந்து பாத்துட்டு இன்னும் புலிவால்பிடிகளைப் போட்டுக் கிழிக்கவோ?
பொல்லுக் குடுத்து அடிவாங்கிறதெண்டுறது உதைத்தான்.

ஈழநாதன்(Eelanathan) said...

சந்தடி சாக்கிலை சிறீரங்கன் பொடியங்கள் என்று பதிவிடும் பேடிகள் சுவிஸ்,சிங்கப்பூர்,அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள் என்னும்போது சிங்கப்பூரில் இருந்து பதிபவர்களில் ஈழத்தவன் நான் ஒருவனே என்ற அடிப்படையில் அவர் என்னையே சுட்டுவதாகக் கொள்கிறேன்.

சிறீரங்கன் சிங்கப்பூர்ப் பக்கம் ஒருக்கால் வாங்கோவன் யார் பேடியென்று காட்டுறன்.

Anonymous said...

ஊடகச்சமரை இத்துடன் நிறுத்திக் கொண்டு ஈழமண்ணில் துன்புறும் மக்களுக்காகச் சிந்திக்கவும் செயலாற்றவும் முனையுங்கள். அதுவே ஈழமண்ணில் நீங்கள் பிறந்ததற்காக செய்யும் கைம்மாறு ஆகும்.

thuyawan said...

/////மழைவிட்டும் தூவானம் விலகியபாடில்லை!என்றபோதும் நான் இந்த நாரதரை நினைத்து மிகவும் பரிதாபப் படுகிறேன்!வெறும் அப்பாவித்தனமான கருத்துக்களைக் காவிக்கொண்டு,இவ்வகைப் பின்னூட்டம் எழுதினால் எவரொருவர் அதைப் பிரசுரிப்பார்?///////
வெறுமனே புலியெதிர்ப்பை மட்டுமே கொண்டிருக்கும் சிறிரங்கனின் கருத்து மட்டும் ஆக்கபூர்வம் என்று அவர் கருதிக் கொள்வது நகைப்புக்கிடமானது. இப்படித் தங்களை மேதாவிகள் என்றும் புத்திசாலிகள் என்றும், இப்பவும் நினைத்துக் கொண்டிருப்பதால் தங்களின் எதற்கும் உதவாத கருத்துக்களை நியாயப்படுத்தி ஒரு வட்டத்தினுள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.////உண்மையில் நீங்கள் என் கருத்தாடலுக்குரிய கருத்துக்களைக் கொண்டிருப்பவரில்லை!வெறுமனவே புலிப்பாட்டுப்பாடும் நேசறிப் பிள்ளையாகக் கருத்தாட முனையும்போது, எனது நேரமே வீணடிக்கப்படுகிறது!உங்களைத் தத்துவார்த்தத் தளத்தில் எதிர் கொள்வதற்கும் உங்களின் சமூக விஞ்ஞானப் புரிதல்...////


புலியெதிர்ப்பிற்காக சிங்கள தேசம் செய்கின்ற கொலைகளையும் காட்டுமிராண்டித் தனங்களையும் கண்டிக்காத அல்லது, கண்டு கொள்ளாது விடுகின்ற பிழைப்பை செய்து கொண்டு மற்றவர்கள் குறித்து இவர் கதைக்கின்றாராம். உமது நேரம் வீணடிக்கும் என்ற கவலை வந்தால் தொடர்ந்து புலியெதிர்ப்புக் கொட்டும் போது நேரம் வீணடிக்கப்படுவதில்லையா? பதில் எழுத வக்கில்லை என்றால் உப்படித் தான் சலாய்ப்புச் செய்ய வேண்டி வரும்.

நேசறிப் பி்ளைகளுக்கு பதில் எழுதுவது போல நினைப்பதால் தான் என்னவோ உங்களைப் போன்ற புலம்பல்தாரிகளுக்கு புலிகள் பதில் எழுதுவதோ, கண்டு கொள்வதோ இல்லை போலும்.

////என்ன செய்யலாம்?////
என்ன செய்ய? பதில் வராவிட்டால் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு கருத்தை இழுத்து புலிக்காச்சல் பிடித்து புலியெதிர்ப்பு பாட வேண்டியது தானே!


////மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,இதன் வாயிலாக ஆதிக்கம் அடைந்த வர்க்கம் ஆதிக்கம் இழந்த வர்க்கத்தை ஒடுக்கும்போது,அந்த வர்க்கம் செய்ய முனையும் போராட்டம்...கட்சி கட்டுவது,மக்கள் சமுதாயத்தில் வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்கள்,அந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள்,கருத்தியல் தளங்கள்,வன்முறைசார் கருத்தியல் வடிவம்,மற்றும் வன் முறை சாராக் கருத்தியல் தளம்,இவற்றைக் காத்து,நிர்வாகித்து வரும் அரசு,அமைப்பாண்மையுடைய இயக்கம்,அதன் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கம,; இவை குறித்தெல்லாம் நாரதர் படிக்க வேண்டும்.அதன் பின்பு நாம் கட்சி கட்டுவது,அதற்கு எந்த நாய்கள் தடையாக இருக்கின்றன,மக்களை அத்தகைய நிலைக்குச் செல்லாதபடி எந்தக் குரங்குகள் தடுத்துக் கொலை செய்கின்றன என்பதெல்லாம் புரியும்////

அண்ணாய். நீங்கள் தான் இதைப் படிக்க வேண்டும். சிங்கள அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அதன் அநீதிகளையும் தட்டிக் கேட்க போராட வெளிக்கிடும் போது சிங்கள அடிவருடி ராஜன் கூல் கூடச் சேர்ந்து கொண்டு அரசின் ஆதரவாளராகச் செயற்பட முனையும்போது சிந்தித்திருக்க வேண்டும். இப்படியான தடைகளைச் செய்த நாய்கள் நீங்கள் தான் என்பதை புரி்ந்து கொள்வீராக. சிங்களத்து வெறியர்கள் கொலை செய்கின்றபோது அதற்கு எந்தக் குரங்குகள் ஒத்து ஓதுகின்றன என்பதையும் சிந்தித்து கொள்ள வேண்டும்.


////எந்தவொரு தனிமனிதரும் மக்களுக்கான புரட்சிக் கட்சியைக் கட்டுவதில்லை.அதை மக்களே ஒரு கட்டத்தில் நிறைவேற்றுவார்கள்.இந் நிலையையெட்ட மக்களைக் கட்டிப் போட்டிருக்கும் ஒரு நாசகார வன்முறை ஜந்திரம் இப்போதைக்கு விடப் போவதில்லை.எனினும், மக்கள் இந்த இருண்ட சூழலை மிக விரைவில் உடைப்பார்கள்.////

எந்த ஒரு மக்கள் கூட்டத்திற்கும் தலைமைத்துவம் இல்லாமல் சாதித்தது கிடையாது. அது தான் வரலாற்று நிகழ்வுகள். உங்களின் கருத்து சும்மா வெறும் புலம்பல். வெறுமனே ஒரு தனிமனிதனால் போராட்டத்தைக் கொண்டு செல்ல முடியாது என்பதும், அதற்கு ஒட்டுமொத்த மக்கள் ஆதரவு இன்றியும் செயற்பட முடியாது என்பதையும், ஒரு 5 பேரைக் கூட்டி புலியெதிர்பபைக் காட்டமுடியாத உங்களின் மேதாவித்தனத்துக்கு புரியாதது கேவலம் தான். என்ன செய்ய யாழ்பல்கலைக்கழகத்தி்ல் படித்தவன் என்று அதன் பெயரையும் சேர்த்து இழிவாக்குவது தான் அதிகபட்ச உம் பணி.

இருண்டசூழல் எது என்று மக்களுக்குத் தெரியும். நீர் இருண்ட இடத்தில் இருந்து கனவு காண்பதை முதலில் நிறுத்தும்.

////இந்தக் கேள்விக்கு நாம் நேர்மையானவர்கள் என்று யாருக்குப் பிரகடனப் படுத்த வேண்டும்? நாம் மக்களுக்கே கட்டுப் பட்டவர்கள். மக்கள் மத்தியில் நாம் நேர்மையானவர்களாவென்பதை எமது செயற்பாடு உறுதி செய்யும். அடுத்து கரிபியனுக்குக் கொலிடே போவது...////

இந்த இணையத்தளத்தைத் தவிர உம்மை வேறு யாருக்குத் தெரியும்? அதன் பின்னர் தான் மக்கள் உம் நேர்மையைப் பற்றிச் சிந்திப்பார்கள். நாரதர் கேட்ட " மக்களுக்கான உங்களின் செயற்பாடு என்ன?" கேள்விக்கு பதில் அளிக்கத் தெரியாமல் திணறும் நீர் மக்களுக்கு உம் செயற்பாடு தெரியும் என்பது எவ்வகையில் என்பது புரியாத வேடிக்கை. வார்த்தைகளைக் குலைந்து எழுதுவன் மூலம் கருத்தாளனகாக தமிழ் மணத்தினுள் குப்பை கொட்ட டிந்த இவ்வளவு காலம் குறித்தும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அவ்வாறு மக்களிடம் பிரபல்யப்படுத்த வேண்டுமனால் புலிகளையே நாடுங்கள். என்னைப் புலி கொல்லப் போகுது. என்னை படம் போடுறாங்கள். மனுசி வயரைக் கழட்டியும், எழுதுறன் என்று பீலா விட்டு பிரபல்யப்படுத்திக் கொள்ளலாம்.

கொழுவி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

சிறிரங்கன் பற்றி இன்னொரு பதிவு இங்கே கிளிக்கி படியுங்கள்