இந்த நிலையில் பேடித்தனமாகக் கொழுவியும்,பெடியன்களும் பதிவிட்டு,நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.இதற்கு மேலால் இத்தகைய தலைமுறையால் என்னத்தைப் புதிதாகச் சிந்தித்திருக்க முடிந்தது?பெடியன்களின் பெயரால் சுவிஸ்,சிங்கப்ப+ர்,அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேடிகள் எழுதுவதற்கு வக்கற்று மற்றவர்களைக் கேலி பேசுவது ஒரு வகை மாபியத்தனத்தின் திமிர்தான்.இத்தகைய திமிரில் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது ஊரறிந்த விடையம்.சிறிரங்கன் அவர்கள் கொழவி குறித்து எழுதிய மேற்படி விடயம் பற்றிய சில எண்ணங்கள் இவை.
இதிலே பேடித்தனமாக கொழுவி என்ன எழுதினார் என்பதை அவர் தெளிவாக குறிப்பிட வில்லையாயினும், கொழுவியில் வெளியான அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும் என்ற பதிவு தொடர்பாகவே தனக்கேற்பட்ட சூட்டை இவ்வாறு தணித்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. பேடிகள், வக்கிரம், மாபியா, திமிர் இத்தகைய வார்த்தைகள் எல்லாமே அவருக்குள் கிளர்ந்தெழுந்த சூட்டின் வெளிப்படுத்தல்கள் தான்.
அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும் என்ற பதிவு, சிறிரங்கன் தனது பதிவில் ஏலவே எழுதிய அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற அவரது பதிவின் நீட்சிதான். தொடர்ச்சி தான். தழுவல் தான்.
இதில் எங்கிருந்து மன வக்கிரம் எழுகிறதோ, அல்லது எங்கு கொழுவிக்கு திமிர் பிடிக்கிறதோ தெரியவில்லை. அவ்வாறேதும் இருப்பின், அது அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற பதிவினை எழுதும் போது சிறிரங்கனுக்குள் இருந்த மன வக்கிரம், மற்றும் மாபியாத்தனம் ஆகியவற்றின் நீட்சியே பின்னர் அது தொடர்பான பதிலெழுதும் போதும் எனக்குள்ளும் எழுந்திருக்கும்.
அடுத்த பந்திக்குள் செல்வதற்கு முன் இந்த இடைச்செருகல் அவசியமாகிறது. சிறிரங்கன் அகரன் போன்ற பதிவர்களுக்கிடையிலும் இராயகரன் போன்ற பதிவர்களுக்கிடையில் என்னளவில் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இராயகரனின் எழுத்துக்களில் நேர்மை இருக்கும். வாசிக்கும் போது அதனை புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் மற்றவர்கள் தாம் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கும் வரை காத்திருந்து நடந்ததும் அது பற்றி காரசாரமாக எழுதுகிறவர்களாகத் தான் தோன்றுகிறார்கள். இதோ கிழக்கில் புலிகளுக்கு, அல்லது ஒட்டு மொத்தமாகவே புலிகளுக்கு இராணுவத் தோல்வி ஏற்பட்டு விடும் என்பதனை முன் கூட்டியே இவர்கள் தீர்மானித்த பிறகு மிகுந்த மன உற்சாகத்துடன் எழுதித் தள்ள காத்திருக்கும் இவர்கள் இது போலவே இன்னும் நிறைய விடயங்களில் ஒன்று படுகிறார்கள்.
சிறிரங்கன் ஆரம்பம் முதலே குழப்பான கருத்துக்களை அந்த, அந்த நேரத்து உணர்ச்சிகளுக்கு அமைய எழுதிவருபவர் என்பது நான் எனக்குள் தீர்மானித்து விட்ட ஒன்று. குறிப்பாக சில காலங்களுக்கு முன்னர் புலிகளின் தொண்டரடிப்பொடிகள் சிலரின் இணையத்தில் வெளிவந்த அவருடைய படத்துடனான ஒரு செய்தியை மட்டும் (அது மன உளைச்சலைத் தரக்கூடிய செய்தியே என்பதில் மறுப்பேதும் இல்லை) வைத்துக் கொண்டு மிக அழகாக திரைக்கதை அமைத்து தன் மீதான நேரடிக் கொலை மிரட்டல் நாடகத்தினை அரங்கேற்றியவர். கூடவே ஜேர்மனியில் உள்ள இணைய மையங்களில் தனது புகைப்படத்துடன் கூடிய நோட்டிஸ் அச்சடித்து விநியோகிக்கப்படுவதாக வேறு கூறியவர்.
அது போலவே பொடியன்கள் என்ற இலக்கற்ற பதிவொன்றின் தொடக்கத்தில், அது ஈபிடிபி என்னும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினது என்றும், இதய வீணைக் காரரின் வலை, என்றும் டக்ளசின் பதிவு என்றும் பயமுறுத்திய அதே சிறிரங்கன் தான் இப்போது அதற்கு வேறு முகவர்களை நியமித்திருக்கிறார்.
(சிறிரங்கன் ஜனநாயகம் கருணா பரமுவேலன் நிர்மாணம் என பல்வகை பதிவுகளின் சொந்தக்காரர் ஆயினும் அதில் ஏதும் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் அவை அனைத்துமே அவரது சொந்தக் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. )
அவருக்குள் இயல்பாக எழும் உணர்ச்சிகளை சில சமயங்களில் வார்த்தைகளாக அவர் ஆக்கி விடுவது சில சமயங்களில் அவரை தெளிவாக இனம் காட்டும். அவ்வாறான ஒரு பதிவை
இங்கு படியுங்கள்இத்தனைக்குப் பிறகும் சிறிரங்கன் பிரபாகரனை மோடன், முட்டாள் என்பதையோ அல்லது அன்ரன் பாலசிங்கத்தை தனது எரிந்த வார்த்தைகளால் நாற்றமடிக்க அர்ச்சிப்பதையோ நான் எந்த வித கோப தாப எழுச்சி உணர்ச்சிகளும் அற்று வாசிக்கிறேன்.
ஆனால் அவ்வாறு எழுதுவதற்கு அவருக்கு உள்ள அதே சுதந்திரத்தையும் உரிமையையும் நானும் கொண்டிருக்கிறேன். அவ்வாறே நானும் எழுதுவேன். ஆனால் அப்போது மட்டும் அவர் ஓடிவந்து உது வக்கிரம், மாபியா தனம், திமிர் என்று சொல்வது மீளவும் அவரைத்தான் முகமுரித்துக் காட்டுகிறது.
புலிகள் தொடர்பான முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று அவர்கள் மீதான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாத போது வேறு வழிகளில் கேள்வியை நிறுத்துவது என்பது. அதுவே சிறிரங்கனிடமும் உள்ளது. அடிப்படையில் அனைவரிடமும் உள்ளது.
அன்ரன் பாலசிங்கத்தை கிண்டலடிக்க அவர் பயன்படுத்திய அதே வார்த்தைகளை அதே வசனங்களை அவர் மீது பிரயோகித்தவுடன் பொறுக்க முடியாமல் பொங்கியெழும் அவரைத்தான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் வார்த்தைகளாகப் பார்த்தோம்.
அவர் தொடர்ந்தும் பிரபாகரனைப் பற்றியும் பாலசிங்கத்தைப் பற்றியும் இன்னும் எல்லோர் பற்றியும் தொடர்ந்து எழுத வேண்டும் . ஏனெனில் எமக்கும் எழுத நிறைய இருக்கிறது.
சிறிரங்கன் எழுதிய அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற பதிவை வாசித்த பின்னர் இதோ அவர் எழுதிய அவரது சொந்த வார்த்தைகளையும் வாசியுங்கள்.
நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.