Sunday, January 28, 2007

புளொக்கரை எச்சரிக்கிறேன்

புளொக்கர் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்துதாம். வலுக்கட்டாயமாக அலற அலற ஆட்களைப் பிடிச்சுத் தன்ர புது புளொக்கரில சேர்க்கிறதாம். என்னதான் நடந்தாலும் புது புளொக்கர் பக்கம் போகவே மாட்டம் எண்டிருந்த ஒரு சிலரை கதறக் கதறத் தூக்கி புது புளொக்கரில ஏத்தினதாக் கேள்வி. அதுவும் பெரிய பெரிய தலையளாப் பாத்துத்தான் உந்தப் பதிவர் பிடி வேலை நடக்குது. உதை நான் கடுமையாக் கண்டிக்கிறன்.

என்னை ஒருபோதும் வலுக் கட்டாயமாக அவர்களால் புது புளொக்கரில் தள்ள முடியாது என எச்சரிக்கிறேன்.

ஏனெனில் மனப்பூர்வமாக சுய அறிவோடு நானே இதோ இந்த நிமிடம் முதல் மாறி விட்டேன். புதுப் புளொக்கர் வாழ்க

20 comments:

கொழுவி said...

வேறென்ன.. சோதனை தான்..

குமரன் (Kumaran) said...

ரொம்பத் தான் சோதனை பண்றீங்க. :-)

new கொழுவி said...

அட.. எந்த சேதாரமும் இல்லாமல் மாறியிருக்கின்..
இதுவும் நான் தான்.

நான் தான்.. said...

ஒலிவாங்கிப் பரிசோதனை.. 3

கானா பிரபா said...

பச்ச மண்ணு என்னய கதறக் கதறக் கூட்டீட்டுப் போய்ட்டாங்க (வடிவேலு மாணியில்)

செல்லி said...

சரியா பயந்திட்டன்.உப்பிடியும் ஆக்களைப் பயப்பிடுத்தலாமோ?

வெற்றி said...

/*புளொக்கர் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்துதாம். வலுக்கட்டாயமாக அலற அலற ஆட்களைப் பிடிச்சுத் தன்ர புது புளொக்கரில சேர்க்கிறதாம். என்னதான் நடந்தாலும் புது புளொக்கர் பக்கம் போகவே மாட்டம் எண்டிருந்த ஒரு சிலரை கதறக் கதறத் தூக்கி புது புளொக்கரில ஏத்தினதாக் கேள்வி. */

ஐயா, கொழுவி, வலுக்கட்டாய ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவன் நான். அதுவும் சும்மாவே, படுத்த படுக்கேலை இருந்து அள்ளிக்கொண்டு போட்டாங்களடாப்பா:)) நேற்றுச் சனிக்கிழமை காலை அப்பாவிமாதிரி வந்து என்ரை Blogger account க்குள்ள போக முயற்சி செய்ததுதான் எனக்கு ஞாபகம். பிறகு என்னை அறியாமலே நான் புது Blogger க்குள்ளை நிக்கிறன். இது கொஞ்சம் கூடச் சரியில்லை. எங்களுக்கு விருப்பமில்லையெண்டால் சும்மா விட வேண்டியது தானே?! அதுக்கு உப்பிடியே படுக்கையோடை அள்ளிக் கொண்டு போறது?!

பாதிக்கப்பட்ட என் போன்றோர்க்காக குரல் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

ஏன் எங்கடை அண்ணன் சிறீரங்கன் இந்தப் பாசிசத்தை எதிர்த்து எங்களுக்காகப் பதிவு போடேல்லை?
அவருக்கு நாங்கள் மக்கள் மாதிரித் தெரியேல்லையோ?

கோவி.கண்ணன் said...

புது ப்ளாக்கர் கொழவியையும் கொட்டிடுச்சா ?

வாழ்க வளர்க ! பல நூறுபதிவுகளாக்கி...
:))

வடுவூர் குமார் said...

பிரச்சனையே இல்லாமல் மாறினேன்.
புகைப்படம் ஏத்துவது இப்போது மிக சுலபமாகிவிட்டது.
"Template" இழப்பு இருந்தது, அதற்கு தகுந்தார் போல் கொஞ்சம் மாற்றவேண்டியுள்ளது.

Anonymous said...

நீங்கள் கானா பிரபா அண்ணாவை சொல்றிங்க போல...ஹி ஹி ஹி

நாமக்கல் சிபி said...

அது சரி! :))

பொன்ஸ்~~Poorna said...

நீங்களும் புது பிளாக்கரிலே கொழுவிட்டீங்களா? :)))

[சரியா பயன்படுத்தியிருக்கேனா? :)]

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

:-))))))))))))))))))

இதுக்குத் தானா...?

கொழுவி said...

துயாம்மா, வாங்கோ.
'மண்டைக்க ஒண்டுமில்லாத' எங்கட பக்கமெல்லாம் வந்திருக்கிறியள். நன்றி.

அதென்ன கானாபிரபா அண்ணா எண்டு பாசமாச் சொல்லிறியள்?
நீங்கள் வால்பிடிச்சுக்கொண்டிருக்கிற ஜேர்மன் தலையின்ர சொற்படி 'காட்டுப் பிரபா' எண்டெல்லோ சொல்ல வேணும்?
உங்கட தல கோவிக்காதோ?

Anonymous said...

என் பெயரில் வந்த கருத்தை பார்த்த பின்பும், வாருங்கள் என்று வரவேற்றதற்கு நன்றி.

நான் எழுதுவதாயின் என்னுடைய ப்ளொக்கர் ஊடாக எழுதுவேன்.

தயவு செய்து அப்படி ப்ளொக்கர் ஊடாக வராத கருத்துக்களை அனுமதிக்காதீர்கள். அவை நான் எழுதுவதில்லை.

பொதுவாகவே இப்படியான விடயங்களில் நான் எப்பொழுதும் கலந்து கொள்வதில்லை.

இதை பற்றியோ, அல்லது நான் இப்படியான தரம் குறைந்த கருத்துக்களை எழுதுவேனா என்று கானா பிரபா அண்ணாவையே கேட்டு அறிந்து கொள்ளலாம்.

இப்படி எழுதப்பட்டிருப்பதை இப்பொழுது தான் ஒரு நண்பர் மூலம் அறிந்தேன்.

உங்களை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால் இந்த கருத்தை விட்டு செல்கிறேன்.

நன்றி

கானா பிரபா said...

ஐசே கொழுவி

ஆட்டைக்கடிச்சு மாட்டக்கடிச்சு, இப்ப தூயாவோட என்ன தனகல்?
தூயாவின்ர பெயரைப் பயன்படுத்தி வாற விஷமத்தனமான பின்னூட்டத்தை நம்பாதையும்.

(எங்க கொழுவலாம் எண்டு திரியிறான்கள் ;-)))

மதி கந்தசாமி (Mathy) said...

பிரபா & வெற்றி: இங்க ஒரு முஸ்பாத்தியக் கவனியுங்க.

//© கொழுவி proudly powered by Blogger.// வாம். பதிவின்ர அடிப்பக்கத்தில நாங்க யாரும் கவனிக்க மாட்டமெண்டிர தைரியத்தில இப்படி எழுதிக்கொழுவ வேண்டியது.

தலைப்பை மட்டும், உவங்கள் ப்ளொக்கர் காரங்களுக்கு விளங்காதெண்ட தைரியத்தில தமிழில 'புளொக்கரை எச்சரிக்கிறேன்' எண்டு வீரதீரமா அறிக்கை விடவேண்டியது.

இதைக் கொஞ்சம் விசாரியுங்கப்பா..

நான், நாளைக்கு வந்து பாக்கிறன்.

கொழுவி: வாழ்த்துக்களப்பா.(அதையும் சொல்லி வைப்பம்! காலங்கெட்டுக்கிடக்குது..)

-மதி

சின்னக்குட்டி said...

கொழுவி ...கொழுவ ஆள் கிடைக்க இல்லேயே... வீணாய் அந்த சின்ன பிள்ளையோட போறியள்... வழமையாக கொழுவுற ஸ்ரீ-----ன் எங்கை போட்டார்

கானா பிரபா said...

பார்த்தீரே கொழுவி,
மதி சொல்லீட்டுப் போனதை?
சும்மா எங்களோடையும் அந்த அண்ணை ஒருத்தரோட தான் வீரம் உமக்கு ;-)

Anonymous said...

என்ன கொழுவி.. எல்லாப் பக்கத்தாலும் போட்டுத் தாக்கிறாங்க..