Sunday, January 28, 2007

கொழுவியோடே கொழுவலா?

இண்டைக்குக் கதை சொல்லப்போறன். அதுவும் மூண்டு கதைகள்.
கதைகள் எண்ட உடன 'கற்பனை' எண்டு நினைக்காதையுங்கோ. எல்லாம் உண்மைகள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"கொழுவிக்கு மண்டைக்க ஒண்டுமில்லை"
"கொழுவிற இடம் தெரியாமல் கொழுவினால் இதுதான் நடக்கும்"
[என்ன நடந்ததெண்டு எனக்கும் விளங்கேல;-)]

மேற்கோளிடப்பட்ட வசனங்களை ஒருத்தர் எழுதியிருக்கிறார்.
இவருக்கும் கொழுவிக்கும் அந்த இடத்தில எந்தப்பிரச்சினையும் நடக்கேல. ஆனா சரியான இடத்தில பூந்து தக்கநேரத்தில கொழுவிக்கு ஒரு குத்து விட்டிருக்கிறார் பாருங்கோ...
அதுக்கு என்ன காரணம்?
கொழுவிக்குக் குத்த தருணம் பாத்திருக்கிற அளவுக்கு என்ன நடந்தது?
அந்த இடத்தில வாசிக்கிற ஆக்களுக்கு சம்பந்தமில்லாமல் இவனேன் கொழுவியோட கொழுவிறான் எண்டு தோன்றியதா?
நானும் யோசிக்கிறன். முடிஞ்சால் நீங்களும் கண்டு பிடியுங்கோ பாப்பம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்மணத் திரட்டியில் பின்னூட்டங்களைத் திரட்டும் வசதியைப் பெற வேண்டுமாயின் வலைப்பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்பட வேண்டும் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டு இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த அறிவித்தல் வருவதற்கு முன்னரே கொழுவி பின்னூட்ட மட்டுறுத்தலைச் சிலகாலம் செய்ய வேண்டியிருந்தது. அது ஏன்?

முன்னர் சில வலைப்பதிவுகளில் சகட்டுமேனிக்கு தூசணங்கள் பின்னூட்டமாக இடப்படும். இதைச்சிலர் தமது அரசியல் நோக்கங்களுக்குப் பாவித்தனர். பாதிக்கப்படும் நிலையிலிருப்பவர் மகிழ்ச்சியடையும் நிலைகூட இருந்தது.

இப்படிப்படியாக இருந்துவரும் காலத்திலே,
தூசணம் கொட்டிவிட்டுச் சொல்லும் ஓர் அனாமதேயத்துடன் கொழுவி பொருதும் நிலை தற்செயலாக வந்துவிட்டது. பொருதிய கொழுவிக்கு உடனேயே புரிந்தது இது ஒரு கழண்ட கேஸ் என்று. எந்த அரசியலுமின்றி ஆங்காங்கே துப்பிவிட்டுச் செல்வதே அந்த விசரின் வேலையென்று விளங்கிவிட்டது. கொழுவியை மிகத்தீவிரமான புலியெதிர்ப்பாளன்/ள் எண்டு சொல்லியது.
விசருகளோடு சண்டைபிடித்தால் நாமும் விசர்ப்பட்டம் வாங்கிவிடுவோமோ என்ற பயத்தில் கொழுவி பின்வாங்கினாலும் அந்த விசர் விடுவதாக இல்லை.
கொழுவியின் பதிவுகளுக்கும் தூசணப்பின்னூட்டங்கள் வரத் தொடங்கின. ஆனால் மற்றவரைப் போல் அவற்றை வைத்து அரசியற்பிழைப்பு நடத்தும் கேவல எண்ணம் கொழுவிக்கில்லை. [ஏற்கனவே யாரோ எழுதிய ஆபாசப்பின்னூட்டத்துக்காக தமிழ்மணத் திரட்டியிலிருந்து தூக்கப்பட்டவன் கொழுவி.;-(]எனவே பின்னூட்ட மட்டுறுத்தல் உடனடியாகவே செயற்பாட்டுக்கு வந்தது கொழுவியின் வலைப்பதிவில். அந்த விசரும் கொஞ்சநாள் விடாமல் துப்பிவிட்டு களைத்து ஓய்ந்துவிட்டது.

இதுதான் கொழுவி மட்டுறுத்தற் கட்டாயத்துக்கு முன்பே பின்னூட்டம் மட்டுறுத்திய கதை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில கோமாளிகள் இருக்கிறார்கள். தம்மீது வெளிச்சம் விழவும், தானும் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளவும் புலிக்கு வால்பிடிக்கும் கூட்டமது. புலத்தில் பெருமளவுக்கு இக்கூட்டம் இருக்கிறது. போராட்டம் பற்றி தகவல் பூர்வமாகவோ - அறிவுபூர்வமாகவோ - தர்க்கபூர்வமாகவோ ஒரு கோதாரியும் தெரியாதவர்கள், புலிக்கு வால்பிடிப்பதால் தாம் பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இயல்பில் என்ன இருக்கிறதென்ற விளக்கமின்றி கற்பனையில் புரட்டுக்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
வால்பிடிப்பதிற்கூட தாம்தான் முன்னுக்கு நிற்கவேண்டுமென்று நினைப்பவர்கள். எங்கே தமதிடம் போய்விடுமோ என்ற அச்சத்தில் மற்றவால்பிடிகளைத் தள்ளிவைக்க, முடிந்தால் துரோகியாக்கிவிடவும் நினைப்பவர்கள்.

இக்கோமாளிக் கூட்டத்துக்கும் கொழுவிக்கும் கூட கொழுவலுண்டு.

கொழுவிக்குக் கொழுவிற இடம் தெரியாதெண்டு சொல்லிறது ஒருபக்கமிருக்கட்டும்; கொழுவியோட கொழுவிறதாலதானோ என்னவோ மேற்சொன்ன கோமாளிக்கூட்டத்துக்கும் கோழுவிற இடம் தெரியாமலிருக்கு.

5 comments:

raaman nayar said...

அடிபடுறியளோ? சகோதர யுத்தத்தை வெளிநாடுகளுக்கு போயும் விடமாட்டியளோ....என்னமோ செய்ய்யுங்கோ...

அவதானி said...

கொழுவிக்கு மண்டைக்கை சரக்கில்லை அந்தக் கிழவியை விடுங்க பிருந்தன். ஈழைத் தமிழர்கள் என்று ஆரூரன் சொன்னதுதான் சரி. அதுகள் மனநோயாளிகள். தமிழும் ஒழுங்காத் தெரியாது. தனக்குத்தெரியாதது தமிழ் இல்லை என்று தவிலடிப்பார்கள். அவர்கள் பெயரைப் பார்த்தாலே தெரியுமே ஆட்டுக்குட்டி, கிழவி ..

நிறைகுடம் தளம்பாது பிருந்தன்
//

தூயா, அது ஆட்டுக்குட்டியில்லை சின்னப்புட்டி

அந்தக் கூட்டத்திலை ஒருத்தர் கானா பாடுறாராம்.. பெயர் என்ன தெரியுமோ? காட்டுப் பிரபா

ஒருவேளை இவர் பாடினால் காட்டிலை இருக்கிற காகம் எல்லாம் கரையுமோ? வில்லுப்பாட்டு கேட்ட காதுக்கு உவற்றை காட்டுப்பாட்டு கேட்க முடியாது, என்னை விடுங்கோ தூயா.

மேலை உள்ள எல்லா பின்னூட்டங்களையும் தன்ர பதிவில அனுமதித்தவர்கள்.. இப்ப பின்னூட்டங்களில யாரையும் தாக்கி எழுத வேணாம் எண்டு வேண்டு கோள் விடுக்கினம். சாதாரணமா எழுதுற பின்னூட்டங்களையே விடுவதில்லை.

எல்லாம் தமிழ்மணத்தின்ர அதிரடி நடவடிக்கைகளால் வந்த ஞானம்தான். ஏனெண்டால் அந்தப் பதிவையே தமிழ்மணம் திரட்டாது என்று அறிவிச்சாச்சுத் தானே

Anonymous said...

அவதானி, என் பெயரில் வேறு யாரோ எழுதி இருக்கின்றார்கள் இக்கருத்தை. நான் எழுதுவதாயின் என் ப்ளொக்கர் ஊடாக எழுதுவேன். இப்படியான அசிங்கங்களை அனுமதிக்க வேண்டாம் என வலைப்பூ உரிமையாளரை கேட்டு கொள்கிறேன்.
நன்றி

பிருந்தன் said...

அவதானிக்கும், கொழுவிக்கும்.
நண்பரே,
முதலில் பிருந்தன் என்றபெயரில் வந்திருக்கும் பின்னூட்டம் நிச்சயமாக இது என்னுடையது அல்ல,நான் எப்போதும் எனது புளக்கர் அக்கவுண்டால்தான் பின்னூட்டமிடுவேன், :o காட்டமான பின்னூட்டமென்றால் அனானியாகத்தான் பின்னூட்டமிடுவேன். :lol: நான் இது வரை இதை கவனிக்கவில்லை கவனத்துக்கு கொண்டு வந்த நண்பருக்கு நன்றிகள். இந்த செயல் ஒரு ஒட்டுகுழுவின் வாலாகத்தான் இருக்கமுடியும். எனது மறுப்பை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் ஒரு லாயிக் இடிக்கிறது, நான் பின்னூட்டமிடாதபோது தூயா எப்படி எனது பெயரை விழித்து பின்னூட்டம் போடமுடியும், தூயாவின் பின்னூட்டத்துக்கு முன்னர் எனது பின்னூட்டம் வந்திருந்தால் லாயிக் பொருந்தி இருக்கும், தூயாவின் பின் வந்தபின்னூட்டத்துக்கு முன் போட்ட பின்னூட்டத்தில் தூயாவால் எப்படி என்னை விழிக்க முடியும்? இதன் உண்மைத்தண்மையை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரு பின்னூட்டங்களும் ஒருவரால்தான் போடப்பட்டிருக்கிறது. என்துதான் எனது கருத்து.மவனே நீ மாட்டினா சுண்ணாம்புதான்.

இந்த இரு பினூட்டங்களும் ஊண்ர்வுகளில் இடப்பட்டிருகிறது, அதை வதானி இங்கு கொண்டுவந்து ஒட்டி இருக்கிறார். ஊணர்வுக்கு பின்னூட்டம் வருவது குறைவென்றால் அனானியாக வந்து அவரே இட்டு நிரப்பலாம்தானே எதுக்கு எமது பெயர்களை பயன்படுத்தவேண்டும்?

புரிதலுக்கு நன்றிகள்.

சின்னக்குட்டி said...

நான் இவ்வளவு நாளும் நினைக்கே இல்லை கொழுவிக்கு மண்டைக்கை சரக்கில்லை இல்லை.. என்று ஆனால் இப்பத்தான் நினைக்கிறன்..இல்லை என்று அந்த புலத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளை புளக் எழுதிறதை ஊக்குவிக்கிறதை விட்டுட்டு... யாரோ உணர்வில்லாதவன்கள் பின்னூட்டத்திற்க்கு பெயரில்லை என்றோ கொழுவி வைக்கிறதுக்கென்றோ பயன் படுத்தினால் நீங்களும் தூக்கி பிடிக்கிறியளே..,