Monday, May 21, 2007

திரைக் கதை, கதை வசனம் எழுத ஆட்கள் தேவை

உளவுத் துறை கொடுக்கும் கதைக் கருவிற்கு ஏற்ப திரைக் கதை மற்றும் கதை வசனம் எழுத சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப் படுகின்றன. இதுவரை காலமும் காவல்துறை மற்றும் உளவுப் பிரிவினர் உதவியுடனேயே கதை மற்றும் வசனம் என்பவை எழுதப் பட்டு வந்தன. ஆனால் அவை மிக மட்டமான மோசமான படைப்புக்களாக இருந்தமையால் மக்களால் உடனுக்குடன் புறக்கணிக்கப் பட்டு விட்டன. எனினும் அவை மிகச் சிறந்த காமெடிப் படைப்புக்கள் என்பதை மறுக்க வியலாது என்பதே பொதுவாக பொதுஜனத்தின் கருத்து. ஆகையால் இனிமேல் மருந்துக்கும் காமெடியற்ற கதைகளே வேண்டுமென தீர்மானித்திருப்பதாலும் காமெடியற்று எவ்வாறு கதையெழுதுவது என காவல்த்துறை மற்றும் உளவுத்துறை நிபுணப் பெருந்தகைகள் செய்வதறியாது யோசிப்பதாலும் கதை வசனம் முதலியவற்றை வெளியிடங்களில் இருந்து பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்புவோர் கொண்டிருக்க வேண்டிய தகமைகள்

உங்கள் கதைகளில் கண்டிப்பாக சிறுவர்களோ சிறுமிகளோ இடம்பெறக் கூடாது. அப்படி இருந்தாலும் அவாகள் இடையில் கொல்லப் பட்டுவிட்டதாய் அமைய வேண்டும்.

பெரும்பாலும் கடலும் கடல்சார்ந்த மீனவ மக்களின் வாழ்க்கையைச் சார்ந்ததாக கதைகள் அமைந்திருக்க வேண்டும். அப்பாவி மக்களின் முதுகில் ஏறியே நாம் நமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முடியும்

படகிற்காக கடத்தல் மீன் குழம்பிற்காக கடத்தல் வலைக்காக கடத்தல் வாளை மீனுக்காக கடத்தல் போன்று எந்த வித காமெடியும் கதையில் இருக்கக் கூடாது. (விமானமே ஓடுறாங்க.. படகுக்காகவா கடத்தினாங்க என்று சென்ற முறை ரொம்ப கேலி பேசி மனசை புண்படுத்திட்டாங்க)

கதை எழுதுபவருக்கு மன்னார் எங்குள்ளது முல்லைத் தீவு எங்குள்ளது பாக்கு நீரிணையின் ஆழ அகலங்கள் புலிகளிடம் என்ன மாதிரியான படகுகள் உள்ளன போன்ற தகவல்களுடன் மாலை தீவு எங்குள்ளது அந்தமான் தீவு எங்குள்ளது பிஜித் தீவு எங்குள்ளது போன்ற தகவல்களும் கண்டிப்பாக சொந்தமாகத் தெரிந்திருக்க வேண்டும். (நம்மிடம் இவை பற்றித் தெரிந்தவர் யாருமில்லையென்பதனால் எந்த வித உதவியும் செய்து தர முடியாது )

விண்ணப்ப தாரிகளுக்கு ஈழத்தமிழில் பரீட்சயம் இருப்பது எதிர்பார்க்கப் படுகிறது.

சிங்கள இராணுவ கடற்படையினருடனான காட்சிகளும் இடம்பெறுமாயினும் அவை கதையில் இடம் பெறப் போவதில்லை என்பதால் உங்களுக்கு சிங்களம் தெரிந்திருக்கத் தேவையில்லை.

உங்கள் கதை தெரிவு செய்யப்பட்டு பின்னர் அது 5 வயதுச் சிறுவன் ஒருவனிடம் படித்துக் காட்டப் படும். அவன் கதை முழுவதையும் சிரிக்காமல் கேட்டால் உங்களுக்கு வாய்ப்பு நிச்சயம் தரப்படும். நிறையக் கதைகளை எதிர்காலத்தில் எடுக்க இருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்டவாகளுக்கு வாய்ப்புத் தரப்படும்.

8 comments:

நளாயினி said...

"உங்கள் கதை தெரிவு செய்யப்பட்டு பின்னர் அது 5 வயதுச் சிறுவன் ஒருவனிடம் படித்துக் காட்டப் படும். அவன் கதை முழுவதையும் சிரிக்காமல் கேட்டால் உங்களுக்கு வாய்ப்பு நிச்சயம் தரப்படும்."

good.
அடடாh..! எப்பிடி இப்பிடி எல்லாம் அறிவு ஊற்றெடுத்த பாயுதோ. நல்லாவே நிறைய சிந்திக்கிறீங்கள். நிறைய சிரிச்சன்.

Anonymous said...

படத்துக்கு விமர்சனம் கதை எழுதுகிறவரோ அவரின் சமையலறைத்தோசைகளோ மட்டுமே எழுதலாம் என்பதையும் சேருங்கள்

thevan said...

றொம்ப சுவாரஸ்யமான தகவல்தான் கொழுவி! இருந்தாலும் இப்படி கோவணமே உரியிற அளவுக்கு றோவை பரிகாசம் பண்ணுறது அவளவு நல்லாவே இல்ல ஒரு வல்லரசு என்ற கருணணயாவது காட்டக்கூடாதா?
அதுவேற பாவம் தன் சக்திக்கு எட்டாத விடயங்களை செய்யப் போய் இப்படியே குட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறதென்பது அதுக்கு தலை எழுத்தாய் வேறு போச்சுதப்பா.

Anonymous said...

படகில் ஏறிய புலிகள் நாம் சாப்பிடுவதற்காக வைத்திருந்த பழைய சாதத்தையும் ஊறுகாய்த் துண்டையும் ருசி பார்த்தனர். பிறகு அதை தமக்குத் தரும் படி கேட்டனர். அதை மறுத்த நாம் எமக்கு சாப்பாடு இல்லையென சொன்னபோது ரத்த உறவு தானே நீங்கள் எமக்கு ஒரு பிடி பழஞ்சாதம் தர முடியாதா என கோபத்துடன் கேட்டனர். பிறகு இந்தப் பழஞ்சாதத்தை எப்படிச் செய்வதென் கேட்டனர். இன்றைய சோறு நாளைக்குப் பழஞ்சாதமாகும் என நாம் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். அதை நம்ப முடியாது நீங்கள் எங்களோடு வந்து அதை செய்து தாருங்கள் என எங்களை கூட்டிச் சொன்றனர்.

அங்கே சமையலறையில் பிரபாகரனின் படம் இருந்தது. அதை வைத்து புலிகள் தான் எம்மைக் கடத்தினர் என்பதை நாம் அறிந்து கொண்டோம். பிறகு சமையலறையில் இருந்த சட்டாலைட் போன் மூலம் முகர்ஜித் தாத்தாக்கு போனைப் போட்டு கதைத்தோம்.


அண்ணே இந்தக் கதை ஓகேவா..?

விலாங்கு மீன் said...

ஒரு வாளை மீன் பாட்டு நான் பாடவா?

Anonymous said...

//இன்றைய சோறு நாளைக்குப் பழஞ்சாதமாகும் என நாம் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். அதை நம்ப முடியாது நீங்கள் எங்களோடு வந்து அதை செய்து தாருங்கள் என எங்களை கூட்டிச் சொன்றனர். //
very well said.
i think you can consider yourself becoming a director,writer, or even RAW agent.

thevan said...

At 8:59 AM, Anonymous said…
படகில் ஏறிய புலிகள் நாம் சாப்பிடுவதற்காக வைத்திருந்த பழைய சாதத்தையும் ஊறுகாய்த் துண்டையும் ருசி பார்த்தனர். பிறகு அதை தமக்குத் தரும் படி கேட்டனர். அதை மறுத்த நாம் எமக்கு சாப்பாடு இல்லையென சொன்னபோது ரத்த உறவு தானே நீங்கள் எமக்கு ஒரு பிடி பழஞ்சாதம் தர முடியாதா என கோபத்துடன் கேட்டனர். பிறகு இந்தப் பழஞ்சாதத்தை எப்படிச் செய்வதென் கேட்டனர். இன்றைய சோறு நாளைக்குப் பழஞ்சாதமாகும் என நாம் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். அதை நம்ப முடியாது நீங்கள் எங்களோடு வந்து அதை செய்து தாருங்கள் என எங்களை கூட்டிச் சொன்றனர்.

அங்கே சமையலறையில் பிரபாகரனின் படம் இருந்தது. அதை வைத்து புலிகள் தான் எம்மைக் கடத்தினர் என்பதை நாம் அறிந்து கொண்டோம். பிறகு சமையலறையில் இருந்த சட்டாலைட் போன் மூலம் முகர்ஜித் தாத்தாக்கு போனைப் போட்டு கதைத்தோம்.


அண்ணே இந்தக் கதை ஓகேவா..?
------------------------------------------------------
கொஞ்சம் கற்பனை உதவி பண்ணடுமா கோவிகாதீர்கள் அண்ணை,
அப்போது வானத்தில் விமானப் பறப்பின் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது எம்மை தடுத்து வைத்திருந்தவர்கள் எமக்கு முன்னால் தமக்குள் பேசுகிறார்கள், “ கட்டுனாயக்காவில் குண்டு போட்ட எமதுவிமனமே அது” என, வேறும் தருகிறேன் உதவி.
எமக்கு முன்னால் மிகவும் பெரியவகையான ஆயுதம் ஒன்றை துடைத்துக் கொண்டு அவர்களுக்குள் கதைத்துக் கொள்றார்கள், “ இதனால்த்தான் கிபிரை சுட்டு வீழ்த்தினோம்? வேறும் சில
ஒரு சிறிய அறைக்குள் அறை நிறைந்த வாள்கள் இரத்த வாடையுடன் குவிந்து கிடந்தன அதுக்கு அருகில் போனவுடன் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் ஆவி எம்மோடு கதைத்துக் கொண்டிருப்பது போன்ற ஒர் உணர்வு எம் அனைவருக்கும் தோன்றியது.
அண்ணை மறக்காதீர்கள் உங்கள் கதை வெற்றி அடைந்தால் பரிசுப் பணத்தில் பாதி எனக்கும் சொந்தம்

Anonymous said...

பிறகு எங்களை விடுதலை செய்வதற்காகன இடத்தை தாம் விமானத்தில் சென்று பார்த்து வருவதாகக் கூறினர். விமானங்களை வைத்திருக்கும் நீங்கள் வெறும் படகுக்காகவா எங்களை கடத்தீனாகள் என நாம் கேட்டோம். அதற்கு கோபத்தோடு உப்பிடி அறிவார்ந்த கேள்விகளை கேட்கக் கூடாது என புலிகள் மிரட்டினார்கள்.