இவை என்னுடைய கற்பனைகள் ஆகும். ஆயினும் எப்போதாவது காமடி டைம்ஸ் ஆப்பு (Of) இந்தியாவில் வெளிவர இருக்கும் சிரத்தையுடன் சிலரால் எடுத்து தமிழ்ப்படுத்த இருக்கும் கட்டுரையின் தமிழ் வடிவம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய புதல்வரும் கடந்த வருடம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவருமான பாலச்சந்திரன் தற்போது 12 வயதை அடைகிறார்.
கடந்த முறை நாங்கள் சொன்ன நம்பத்தகுந்த செய்தியின் படி (நாங்கள் சொன்னா நீங்கள் நம்பத்தான் வேண்டும்) விமானத் தொழில்நுட்பம் படித்து முடித்து திரும்பியிருக்கும் பிரபாகரனின் மூத்த புதல்வர் சாள்ஸ் அன்ரனிக்கும் பாலச்சந்திரனுக்கும் இடையில் முறுகல்கள் தோன்றுவதாக சிங்கப்பூரில் இயங்கும் பெயர் குறிப்பிடத் தெரியாத அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
பாலச்சந்திரன் தனது சகோதரனிடம் விதம் விதமான விமானங்களை பேப்பரில் செய்து தருமாறு கேட்டதாகவும் அதற்கு சாள்ஸ் மறுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இந்த விவகாரம் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனிக்கு ஆதரவாகவும் பாலச்சந்திரனுக்கு ஆதரவாகவும் பல உயர் மட்டத் தளபதிகள் கருத்து தெரிவித்து வருவதால் புலிகள் பிளவு படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
7 comments:
ha ha ! ithu ithu ithu nach pathivu!
Mokkaikal pala vitham, athil ithu oru vitham.
Good one.
சென்ற பின்னூட்டத்தில் சபேஸ் சொன்னது ://
மொக்கைகள் பலவிதம் அதில் இது ஒரு விதம் //
இது ஒரு விதம் என்றால்.. அப்போ அது ????
ப்திவை மூடுங்கள்.
நீங்க தமிழ்ப்படுத்தினால் நம்ப மாட்மேன். அவரு தமிழில தந்தால் தான் நம்புவேன். (இது தான் ஒரிஜினல் யாழ்ப்பாணத்து பேச்சு வழக்குத் தமிழ். அது இல்லை :)
மாலன் சொல்லாமல் இதை நம்பமாட்டேன். இப்போது புலிகள் பற்றித் தினமலரில் வந்த செய்தியை மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி.
//மாலன் சொல்லாமல் இதை நம்பமாட்டேன். இப்போது புலிகள் பற்றித் தினமலரில் வந்த செய்தியை மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி.//
தினமலரில் தமிழில் தானே செய்தி வெளியிடுவார்கள் அதை ஏன் மாலன் மொழி பெயர்க்கவேண்டும். ஓ சாரி சாரி மறந்துவிட்டேன் மாலன் தன் கற்பனையையும் எழுதவேண்டும் அல்லவா?
Post a Comment