Friday, May 09, 2008

ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?

என்னுடன் நேருக்கு நேர் சண்டை போட தயாரா? என்று விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுக்கு இலங்கை அதிபர் ராஜ பக்சே வினோதமான சவால் விடுத்துள்ளார்.

இலங்கையில் கிழக்கு மாகாண சபை கவுன்சிலுக்கான தேர்தல்கள் வரும் 10ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Imageஅம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் என்ற இடத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதிபர் மகிந்த ராஜபக்சே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சிங்கள மொழியில் அவர் பேசியதாவது:-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அப்பாவி பொதுமக்களையும், மந்திரிகளையும், எம்.பி.க்களையும் குறி வைத்து கொன்று வருகிறார். அவர், இதுபோன்று கொலைகளில் ஈடுபடாமல் என்னுடன் நேருக்கு நேராக சண்டை போட தயாரா?.

தீவிரவாதத்தின் பிடியில் இருந்து கிழக்குப் பகுதியை எனது அரசு விடுவித்து உள்ளது. இதுபோல வடக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்குவோம். வடக்குப் பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண கவுன்சிலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அமைதி முயற்சியை சீர்குலைத்தவர்கள் யார் என்று கிழக்குப் பகுதி மக்களுக்கு நன்கு தெரியும். மக்கள் பிரார்த்தனை செய்யக் கூட விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. ஒரு மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 160க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்து விட்டனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிகளுக்கோ அல்லது பல்கலைக்கழகங்களுக்கோ செல்ல முடியவில்லை.

தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சியில் இருந்தும், அமைதியை ஏற்படுத்தும் பயணத்தில் இருந்தும் அரசு ஒருபோதும் பின்வாங்காது.

இவ்வாறு ராஜபக்சே பேசினார்.

4 comments:

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

ஒண்டிக்கொண்டி என்னோட நொண்டிகோடு ஆட ராஜ்பக்சே தயரா?
:)))))))

ஜெகதீசன் said...

2008ன் சிறந்த கோமாளி ராஜ்பக்சே..... :)

Anonymous said...

போன வருசமோ முதல் வருசமோ தெரியாது தலைவா் மாவீரா் நாள் பேச்சில் ராஜபகசவிற்கு" உங்கள் சிந்தனையை நாம் நன்கு அறிவோம் ”என்றார்
அது இதைதத்தானோ? :)

-Theevu--

Anonymous said...

//தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சியில் இருந்தும், அமைதியை ஏற்படுத்தும் பயணத்தில் இருந்தும் அரசு ஒருபோதும் பின்வாங்காது.//

தன்னை "துட்டைக்கைமுனு" வாக கற்பிதம் செய்கிறார் போலும்.

பாவம் மனிதன்