Monday, July 21, 2008

சார்க்கை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம்

ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கை:

பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.

சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது.

சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத் தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.

செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.

உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.

தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.

இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.

மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்

Wednesday, July 16, 2008

தோழருக்கு, தோழர் எழுதிக் கொள்வது என்னவெனில்..

தோழருக்கு வணக்கம். இந்தகடிதம் மிக முக்கியமானது. இதில் இருக்கும் விடயங்களை வெளியே சொல்லாதீர்கள். உங்கள் மீது நம்பிக்கையிருப்பதால் சொல்லத் தொடங்குகிறேன். (ஸ்ராட்..மீயூசிக்..)

தோழர்.. சென்ற வருடம் கணபதித்தெய்யோ கோவிலில் நான் புரட்சி செய்தது நினைவிருக்கிறதா.. (இல்லையா.. என்ன தோழர்.. ?) வரலாற்றில் அதை பிரஞ்சுப் புரட்சி என்றல்லவா கொண்டாடுவார்கள் என நான் நம்பினேன் :(

அந்தக் கோவிலில் எவரும் கும்பிடக் கூடாதென ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தேன். இப்போது கோவிலில் எவரும் கும்பிட முடியாதபடி நடந்து விட்டது. அதனால் நான் ஒரு பெரிய இக்கட்டிலில் இருக்கிறேன். அந்தக் கோயிலை இடிக்கப் போகிறார்கள். ஆமாம் தோழர் .. கட்டடம் காலாவதியாகி விட்டதால் முனிசிபல்காரர்கள் கட்டடத்தை இடிக்கப் போகிறார்கள். கோவில் இடம் மாறப் போகிறது. தோழர் நான் வழக்குப் பதிவு செய்ததாலேயே கட்டடம் காலாவதியாகியது என சொல்ல முடியாதா..? இப்படி கட்டடம் காலாவதியானதால் நான் கொலை கூட செய்யப் படலாம் தோழர். ஒருவேளை அப்படி நடந்தால் நீங்களாவது உலகத்திற்கு தைரியமாக நான் சொன்ன விடயங்களை தெரிவிக்க வேண்டும். எனக்கு நம்பிக்கையான ஆட்கள் யாரும் இல்லை. இப்பொழுதெல்லாம் நான் மிக தெளிவாகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மெளனமாகவும் இருக்கிறேன்.


இன்னொரு சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது. கூகுள் வீடியோவில் தமிழில் தேடினால் புலிகள் சம்பந்தப்பட்ட விடயங்களே அதிகம் வருகிறது. கூகுள் இயக்க ஆட்களின் கட்டுப்பாட்டில் இருக்கிருகிறது. கூகுளை இயக்க.. அது ஆட்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டுமா தோழர்? கூகுள் முதலாளி ஒரு இயக்க ஆள். அவரது அதிகாரத்தை உடைத்தெறிவோம் தோழர். ஆனால் தோழர் எத்தனை காலத்திற்கு நாம் கேள்விகளை அதிகாரத்தை நோக்கி கேட்டுக் கொண்டிருப்பது? போரடிக்கவில்லையா..

கூகுள் அமெரிக்காவில் இயங்குவதால் நான் ஒரு வழக்கு பதிவு செய்யலாம் என நினைக்கிறேன் தோழர்.

தோழர் நான் புதியதாக ஒரு தட்டியை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றேன். பெயர் புரட்சி. யார் எந்தப் புரட்சியை வேண்டுமானாலும் செய்யட்டும். அதனை பெரிதாக ஒரு போஸ்டரில் எழுதி எனது தட்டியில் ஒட்டுவோம். இதுதான் மரண அடி. இனி எழவியலாத அடி. எழும்பி நடக்க இயலாத அடி. நம் தோழர்களும் தமது புரட்சிப் போஸ்டர்களை கொண்டு வந்து தட்டியில் மாட்டட்டும். புரட்சி பொங்கி வழியட்டும். ஆனால் ஒன்று.. தோழர்.. காமம் என்பதிலும் பகுத்தரிவு மிக முக்கியம் தோழர்.

Tuesday, July 15, 2008

ஓசை செல்லா கண்டுபிடிக்கப்பட்டார்.

அண்ணாச்சி ஓசை செல்லாவைக் காணாது பல பதிவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாச்சி நசுக்கிடமாமல் தமிழ்மணத்தில் இவ்வளவு நாளும் உலாவி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தான் திரட்டியை விட்டு விலத்திப் போகிறேனென அறைகூவல்(?) விடுத்துப் போனவர் (அந்தாள் ஏதோ தான்தான் கலகம் செய்து போனதாகத்தான் நாங்கள் நம்பிக் கொண்டிருந்தம், இப்ப பாத்தா திரட்டி கலைச்சதைத்தான் அந்தாள் அப்பிடிச் சொல்லியிருக்கு எண்ட மாதிரிக் கதை போகுது... முந்தியொருக்கா இப்பிடி நாடகம் போடேக்க அண்ணை போகாதைங்கோ எண்டு அழுது ஓலமிட்ட மாதிரி இந்தமுறை ஏன் ஒருத்தரும் அந்தாளைப் பிடிச்சு இழுத்து நிப்பாட்டேல எண்டு அப்பவே ஒரு சந்தேகம் இருந்ததுதான்.) அதன்பின் தமிழ்மணம் திரட்டியில் இணைந்திருக்கும் வலைப்பதிவுகளில் எழுதுவதில்லையென நம்பியிருந்தோம்.

ஆனால் அண்மையில் அண்ணாச்சி வெளிப்பட்டுவிட்டார். ஓசை செல்லா தனக்கு அனுப்பிய கடிதம் என்ற முன்னுரையோடு ஓசை செல்லாவின் கடிதத்தை 'தமிழரசி அல்லது Unsettled Woman' என்ற பெயரில் 'தமிழ்மணத்தில்' தனது வலைப்பதிவை இணைத்திருக்கும் ஒருவர் வெளியிட்டிருந்தார்.
பிறகு பார்த்தால் தான்தான் ஓசை செல்லா என அவரே ஒப்புக்கொள்ளும்படி ஆகிவிட்டது.

அந்தக் கூத்தை நீங்களும் பாருங்கள். (பின்னூட்டங்கள் சிலவேளை அழிக்கப்படலாம். அதற்கென்ன? படங்களைப் போட்டால் போச்சு).

தமிழ்மணம் + திரட்டி அரசியலும் திரட்டாத அரசியலும்!

ஏம்பா யாரோ முன்பு மேட்ரிக்ஸ் பற்றியெல்லாம் கதைச்ச மாதிரிக் கிடக்கு...

கலகங்கள் பலவகை; அதில் இதுவும் ஒருவகை.

வாழ்க அண்ணாச்சி! வளர்க அவர் புகழ்!!

-அண்ணாச்சி இரசிகர் மன்றம்
-தென் துருவம்.
++++++++++++++++++++++++++++++

Voice on Wings அவர்களுக்கு ஓர் அறிவுரை.
நீங்கள் புரட்சி செய்கிறீர்களோ புடலங்காய் பிடுங்குகிறீர்களோ, அவற்றைப் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான், உங்களைப் புரட்சியாளராக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

++++++++++++++++++++++++++++++
முன்பொருமுறை தமிழ்மணத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பட்டை நாமம் போட்ட செயல், தற்போது அண்ணாச்சி ஒசை செல்லா சாடிக்கொண்டிருக்கும் திரட்டிக்குப் போஸ்டர் ஒட்டும் புத்தியினின்று வேறுபட்டதா இல்லையா என்பதை யாராவது புண்ணியவான் விளக்குவீர்களா?

Thursday, July 10, 2008

ச்சீ....க்கதைகள் அறுபத்தொன்பது

1.) இத் தலைப்பின் காப்புரிமையை நான் பெற்றிருக்கின்றேன்.

2.) தமிழ்மணத்தின் தலைப்புத் த(ணி)னிக்கையின் தொழில் நுட்பம் என்ன?

3.) குசேலன் படம் வெளியாகி அடுத்த இரண்டு வாரங்களில் தமிழ்மணம் மீளவும் அமைதியான பிறகு கதைகள் தொடரும்.

4.) குசேலன் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு விமர்சனம் எழுதுபவர்களின் தலைப்பு பதிவு எல்லாவற்றையுமே.. ***** ****** என வருமாறு ஆவன செய்த நிர்வாகத்தை வேண்டுகிறேன்.