Wednesday, July 16, 2008

தோழருக்கு, தோழர் எழுதிக் கொள்வது என்னவெனில்..

தோழருக்கு வணக்கம். இந்தகடிதம் மிக முக்கியமானது. இதில் இருக்கும் விடயங்களை வெளியே சொல்லாதீர்கள். உங்கள் மீது நம்பிக்கையிருப்பதால் சொல்லத் தொடங்குகிறேன். (ஸ்ராட்..மீயூசிக்..)

தோழர்.. சென்ற வருடம் கணபதித்தெய்யோ கோவிலில் நான் புரட்சி செய்தது நினைவிருக்கிறதா.. (இல்லையா.. என்ன தோழர்.. ?) வரலாற்றில் அதை பிரஞ்சுப் புரட்சி என்றல்லவா கொண்டாடுவார்கள் என நான் நம்பினேன் :(

அந்தக் கோவிலில் எவரும் கும்பிடக் கூடாதென ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தேன். இப்போது கோவிலில் எவரும் கும்பிட முடியாதபடி நடந்து விட்டது. அதனால் நான் ஒரு பெரிய இக்கட்டிலில் இருக்கிறேன். அந்தக் கோயிலை இடிக்கப் போகிறார்கள். ஆமாம் தோழர் .. கட்டடம் காலாவதியாகி விட்டதால் முனிசிபல்காரர்கள் கட்டடத்தை இடிக்கப் போகிறார்கள். கோவில் இடம் மாறப் போகிறது. தோழர் நான் வழக்குப் பதிவு செய்ததாலேயே கட்டடம் காலாவதியாகியது என சொல்ல முடியாதா..? இப்படி கட்டடம் காலாவதியானதால் நான் கொலை கூட செய்யப் படலாம் தோழர். ஒருவேளை அப்படி நடந்தால் நீங்களாவது உலகத்திற்கு தைரியமாக நான் சொன்ன விடயங்களை தெரிவிக்க வேண்டும். எனக்கு நம்பிக்கையான ஆட்கள் யாரும் இல்லை. இப்பொழுதெல்லாம் நான் மிக தெளிவாகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மெளனமாகவும் இருக்கிறேன்.


இன்னொரு சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது. கூகுள் வீடியோவில் தமிழில் தேடினால் புலிகள் சம்பந்தப்பட்ட விடயங்களே அதிகம் வருகிறது. கூகுள் இயக்க ஆட்களின் கட்டுப்பாட்டில் இருக்கிருகிறது. கூகுளை இயக்க.. அது ஆட்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டுமா தோழர்? கூகுள் முதலாளி ஒரு இயக்க ஆள். அவரது அதிகாரத்தை உடைத்தெறிவோம் தோழர். ஆனால் தோழர் எத்தனை காலத்திற்கு நாம் கேள்விகளை அதிகாரத்தை நோக்கி கேட்டுக் கொண்டிருப்பது? போரடிக்கவில்லையா..

கூகுள் அமெரிக்காவில் இயங்குவதால் நான் ஒரு வழக்கு பதிவு செய்யலாம் என நினைக்கிறேன் தோழர்.

தோழர் நான் புதியதாக ஒரு தட்டியை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றேன். பெயர் புரட்சி. யார் எந்தப் புரட்சியை வேண்டுமானாலும் செய்யட்டும். அதனை பெரிதாக ஒரு போஸ்டரில் எழுதி எனது தட்டியில் ஒட்டுவோம். இதுதான் மரண அடி. இனி எழவியலாத அடி. எழும்பி நடக்க இயலாத அடி. நம் தோழர்களும் தமது புரட்சிப் போஸ்டர்களை கொண்டு வந்து தட்டியில் மாட்டட்டும். புரட்சி பொங்கி வழியட்டும். ஆனால் ஒன்று.. தோழர்.. காமம் என்பதிலும் பகுத்தரிவு மிக முக்கியம் தோழர்.

12 comments:

Anonymous said...

என்ன தோழர் வெளியில் சொல்ல வேண்டாம் என்றல்லவா இவ்வளவு கதையும் சொன்னேன். நம்பிக்கையை காப்பாற்றத் தெரியவில்லையே..

Anonymous said...

இதுதான் மரண அடி. இனி எழவியலாத அடி. எழும்பி நடக்க இயலாத அடி.//

கொஞ்சம் சும்மா இரனடி.. :))

Anonymous said...

இது நல்ல புனைவு

Anonymous said...

அதனால் நான் ஒரு பெரிய இக்கட்டிலில் இருக்கிறேன்.//

ராசா.. அது இக்கட்டிலில் இல்லை
இக்கட்டில்

King... said...

///இன்னொரு சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது. கூகுள் வீடியோவில் தமிழில் தேடினால் புலிகள் சம்பந்தப்பட்ட விடயங்களே அதிகம் வருகிறது. கூகுள் இயக்க ஆட்களின் கட்டுப்பாட்டில் இருக்கிருகிறது. கூகுளை இயக்க.. அது ஆட்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டுமா தோழர்? கூகுள் முதலாளி ஒரு இயக்க ஆள். அவரது அதிகாரத்தை உடைத்தெறிவோம் தோழர். ஆனால் தோழர் எத்தனை காலத்திற்கு நாம் கேள்விகளை அதிகாரத்தை நோக்கி கேட்டுக் கொண்டிருப்பது? போரடிக்கவில்லையா..///

கேள்வி கேட்கிற அல்லது உமது மாற்று கருத்தை சொல்கிற அதிகாரம் உமக்கு எப்ப தரப்பட்டது!!!???
நீர் எப்பொழுதாவது அதிகாரத்தை சென்றடையும் கேள்விகளை கேட்டிருக்கிறீரா...;)

King... said...

///கூகுள் அமெரிக்காவில் இயங்குவதால் நான் ஒரு வழக்கு பதிவு செய்யலாம் என நினைக்கிறேன் தோழர்.///

அப்ப எங்க இயங்கினால் வழக்குப்போட முடியாதெண்டு நீர் நினைக்கிறீர்...

King... said...

///தோழர் நான் புதியதாக ஒரு தட்டியை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றேன். பெயர் புரட்சி. யார் எந்தப் புரட்சியை வேண்டுமானாலும் செய்யட்டும். அதனை பெரிதாக ஒரு போஸ்டரில் எழுதி எனது தட்டியில் ஒட்டுவோம்.///

என்ன புரட்சியை வேணுமெண்டாலும் செய்யுங்கோ ஆனா நல்லா இருந்தா சரி தமிழும் தமிழனும் இணையத்திலையெண்டாலும்...

King... said...

///புரட்சி பொங்கி வழியட்டும். ஆனால் ஒன்று.. தோழர்.. காமம் என்பதிலும் பகுத்தரிவு மிக முக்கியம் தோழர்.///

நீர் சொன்னா அது சரியாத்தான் இருக்கும்...;)

கொழுவி said...

நீர் எப்பொழுதாவது அதிகாரத்தை சென்றடையும் கேள்விகளை கேட்டிருக்கிறீரா...;)//

உம்மட பூடக கேள்வி புரியுது அரசே.. உதுக்கு விடை என்னென்டால்..

ஓம்.. பதிலும் வாங்கியிருக்கிறேன் என்பதுதான்

இந்த பதிலின் மூலம் அதிகாரம் ஒண்டிருக்கென்பதை நான் ஏற்றுக்கொள்கிறானா என்று கேட்டால்.. ஓம்.. அது இருக்கெண்டு சொல்ல ஒரு தயக்கமும் இல்லை.

கொழுவி said...

ராசா.. அது இக்கட்டிலில் இல்லை
இக்கட்டில்//

நன்றி டோலர்

கொண்டோடி said...

//காமம் என்பதிலும் பகுத்தரிவு மிக முக்கியம் தோழர்.//

உந்த 'பகுத்தரிவு' எண்டதில ஏதாவது உட்குத்து வைச்சிருக்கிறீரோ?

உந்த டோளர் மார் எழுதுறது உப்பிடித்தான். 'மண்டைக்கணம்' எண்ட கணப்பொழுதைக் கண்டுபிடிச்ச ஆக்களெல்லே?

அப்புச்சி said...

இன்னும் விரிவாக எழுதி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.சுவராசியமாக எழுதுகிறீர்கள்

அப்புச்சி