Tuesday, July 15, 2008

ஓசை செல்லா கண்டுபிடிக்கப்பட்டார்.

அண்ணாச்சி ஓசை செல்லாவைக் காணாது பல பதிவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாச்சி நசுக்கிடமாமல் தமிழ்மணத்தில் இவ்வளவு நாளும் உலாவி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தான் திரட்டியை விட்டு விலத்திப் போகிறேனென அறைகூவல்(?) விடுத்துப் போனவர் (அந்தாள் ஏதோ தான்தான் கலகம் செய்து போனதாகத்தான் நாங்கள் நம்பிக் கொண்டிருந்தம், இப்ப பாத்தா திரட்டி கலைச்சதைத்தான் அந்தாள் அப்பிடிச் சொல்லியிருக்கு எண்ட மாதிரிக் கதை போகுது... முந்தியொருக்கா இப்பிடி நாடகம் போடேக்க அண்ணை போகாதைங்கோ எண்டு அழுது ஓலமிட்ட மாதிரி இந்தமுறை ஏன் ஒருத்தரும் அந்தாளைப் பிடிச்சு இழுத்து நிப்பாட்டேல எண்டு அப்பவே ஒரு சந்தேகம் இருந்ததுதான்.) அதன்பின் தமிழ்மணம் திரட்டியில் இணைந்திருக்கும் வலைப்பதிவுகளில் எழுதுவதில்லையென நம்பியிருந்தோம்.

ஆனால் அண்மையில் அண்ணாச்சி வெளிப்பட்டுவிட்டார். ஓசை செல்லா தனக்கு அனுப்பிய கடிதம் என்ற முன்னுரையோடு ஓசை செல்லாவின் கடிதத்தை 'தமிழரசி அல்லது Unsettled Woman' என்ற பெயரில் 'தமிழ்மணத்தில்' தனது வலைப்பதிவை இணைத்திருக்கும் ஒருவர் வெளியிட்டிருந்தார்.
பிறகு பார்த்தால் தான்தான் ஓசை செல்லா என அவரே ஒப்புக்கொள்ளும்படி ஆகிவிட்டது.

அந்தக் கூத்தை நீங்களும் பாருங்கள். (பின்னூட்டங்கள் சிலவேளை அழிக்கப்படலாம். அதற்கென்ன? படங்களைப் போட்டால் போச்சு).

தமிழ்மணம் + திரட்டி அரசியலும் திரட்டாத அரசியலும்!

ஏம்பா யாரோ முன்பு மேட்ரிக்ஸ் பற்றியெல்லாம் கதைச்ச மாதிரிக் கிடக்கு...

கலகங்கள் பலவகை; அதில் இதுவும் ஒருவகை.

வாழ்க அண்ணாச்சி! வளர்க அவர் புகழ்!!

-அண்ணாச்சி இரசிகர் மன்றம்
-தென் துருவம்.
++++++++++++++++++++++++++++++

Voice on Wings அவர்களுக்கு ஓர் அறிவுரை.
நீங்கள் புரட்சி செய்கிறீர்களோ புடலங்காய் பிடுங்குகிறீர்களோ, அவற்றைப் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான், உங்களைப் புரட்சியாளராக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

++++++++++++++++++++++++++++++
முன்பொருமுறை தமிழ்மணத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பட்டை நாமம் போட்ட செயல், தற்போது அண்ணாச்சி ஒசை செல்லா சாடிக்கொண்டிருக்கும் திரட்டிக்குப் போஸ்டர் ஒட்டும் புத்தியினின்று வேறுபட்டதா இல்லையா என்பதை யாராவது புண்ணியவான் விளக்குவீர்களா?

15 comments:

செந்தழல் ரவி said...

அண்செட்டில்டு உமனோடு செட்டிலாகலாம் என்று நீரும் ஜொள்ளினீரோ :)))

ஓசை செல்லா said...

எவன் செத்தாலும் கொண்டாடனுமே நம்ம! அடி தூள் கிழப்பு!

வளர்மதி said...

Unsettled Woman ஓசைச் செல்லாதான் போலிருக்கிறது. இப்போதுதான் வாசித்துப் பார்த்தேன். பெயரிலிக்கு பதில் சொல்லும் போக்கில், திடீரென்று Unsettled Woman - ற்கும் ஓசைச் செல்லாவின் பின்னூட்டங்களுக்கும் வித்தியாசம் மறைந்துவிடுகிறது :)

நல்ல கூத்துதான் ...

Voice on Wings said...

கலகத்தில் கலங்கி போயிருக்கேன் :)

//Voice on Wings அவர்களுக்கு ஓர் அறிவுரை.
நீங்கள் புரட்சி செய்கிறீர்களோ புடலங்காய் பிடுங்குகிறீர்களோ, அவற்றைப் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான், உங்களைப் புரட்சியாளராக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.//

இந்தத் தவறை இப்போதுதான் உணர்ந்து கொள்கிறேன். விரைவில் சரி செய்து விடுகிறேன் :)

Anonymous said...

என்ன ஓசை செல்லா காணமபோனாரா?

Anonymous said...

என்ன ஓசை சென்றபின்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டாரா?

மோகன் கந்தசாமி said...

என்னது காலாட்டினா தெலுங்கரசி பெயரில் இயங்குவது ஒரு பிரபல பதிவரா? என்னடா இது தமிழ்மணத்திற்கு வந்த சோதனை!

Voice on Wings said...

ஒன்றுமே செய்யாமல் போஸ்டர் அடிப்பது என்பது குறித்தும் தாங்கள் தயை கூர்ந்து அறிவுரை வழங்க வேண்டும்.

கழுவி said...

ஏட்டுப் புரட்சியெல்லாம் இப்பிடித்தாம்பா.கண்டுக்காத, சூடான ஏரியாவுக்க இடுகை வந்திச்சு ஆனா புன்னூட்டம் ஒன்னேயும் கானேல்லையே ? :(

கொழுவி said...

இது எப்ப.. ? anyway
பெயரிலிதான் கொழுவி கொண்டோடி பெயர்களில் எழுதுவதாக லக்கி லுக் சொல்லியிருக்கிறார். இதுக்காகவே உண்மையை சொல்லும் காலம் நெருங்கிவிட்டது..

இன்னுமாடா இந்த ஊரு எங்களை நம்புது :(

குழவி said...

//உண்மையை சொல்லும் காலம் நெருங்கிவிட்டது../

சொல்லுவிங்கடா சொல்லுவிங்க.. :)

King... said...

ஓசை செல்லா...said...

///எவன் செத்தாலும் கொண்டாடனுமே நம்ம! அடி தூள் கிழப்பு!///


!!!!;)
வாழ்க இணைய தமிழ் சூழல்...!

கொண்டோடி said...

//பெயரிலிதான் கொழுவி கொண்டோடி பெயர்களில் எழுதுவதாக லக்கி லுக் சொல்லியிருக்கிறார்.//

அப்பிடியோ???
உதில என்ன பெரிய ஆச்சரியமிருக்கு. கொண்டோ எழுதின பின்னூட்டத்திலயோ 'கொண்டை' கண்டுபிடிச்ச ஆக்களெல்லே?

முந்தி பெயரிலிதான் சூரமணி எண்டு வரவனையார் விட்டார் ஒரு வண்டில். இப்ப லக்கிலுக்.

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் அல்லது காகத்துக்குக் கனவிலயும் பீ கிண்டிற நினைப்பு எண்ட மாதிரி உடன அவன்தான் இவன், இவன்தான் அவன் எண்டு அள்ளிவிட வேண்டியதுதான் உவையின்ர வேலை.

எனக்கென்ன ஆச்சரியமெண்டா, உந்தக் கோஸ்டி எப்பிடி 'சல்மா' கண்டுபிடிப்புக்களைச் செய்தது எண்டது தான்?

ஓ... அது பாலபாரதியாரின் வேலை மட்டும்தானோ?

கொண்டோடி said...

Voice on Wings,

புரட்சிக்குப் போஸ்டர் அடிப்பது தொடர்பாக சயந்தன் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். அதில போஸ்டர் அடிக்கிறதுக்காக புரட்சியாளர்கள் படமெடுக்கச் சண்டைபிடிக்கிற சம்பவம் தொடக்கம் நிறைய விசயங்கள் வரும்.

இப்ப நடக்கிற சம்பவங்களைப் பாத்தியளெண்டால், கருத்துரிமைக்காக ஓங்கிக் குரல் குடுக்க வேணும். நாலு இடுகைகள் எழுதவேணும், பத்திடத்தில பின்னூட்டங்கள் போட வேணும். ஆனா அதுகளுக்கு விளக்கமளிச்சு நிர்வாகத்தில ஒருத்தன் பின்னூட்டமிட்டால் அதை ஒளிச்சு வைக்க வேணும் அல்லது ஒழிச்சுப் போட வேணும். வெளியிட்டால் பிறகெப்படி நாலிடுகைளும் பத்துப் பின்னூட்டங்களும் இடலாம்?

தனது குறிப்பிட்ட சேவையைப் பெறுவோருக்கு பின்னூட்ட மட்டுறுத்தலை திரட்டி கட்டாயப்படுத்தியபோது அதை எதிர்த்து நீங்கள் எழுதியவைகள், செய்தவைகள் (இவற்றைப் புரட்சியென்று நாம் சொல்லி உங்கள் செயற்பாடுகளைக் கேவலப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் புரட்சியென்பது வலைப்பதிவுகளில் அவ்வளவு கேவலமான சொல்லாகிவிட்டது) இன்றுவரை மாறாமல் அதே நிலைப்பாட்டில் இருப்பது என்பது தொடர்பில் உங்களில் எமக்கு மரியாதையுண்டு.

ஆனால் நீங்கள் செய்திருக்க வேண்டியது, குறைந்தபட்சம் ஒரு பட்டையாவது உங்கள் வலைப்பதிவில் போட்டு விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும். கிழமைக்கொருதடவை ஒரே இடுகையைத் திரும்பத்திரும்ப தமிழ்மணத்தையெதிர்த்து வெளியிட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அந்தக் கட்டாயத்தை நீக்கியபிறகும் பட்டையும் இடுகையும் தொடர்ந்து இருக்க வேண்டும், இப்போது பலர் செய்து கொண்டிருப்பதைப் போல.

முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது, எல்லோரையும் தோழர் என்றே அழைக்க வேண்டும். தமிழின் வசன அமைப்புக்களைக்கூடப் புறந்தள்ளி இச்சொல்லை இயலுமானவரை எல்லா வசனத்திலும் செருக வேண்டும். 'தோழர் சொல்லுங்கள் தோழர்' என்பதைப்போல.
அட எழுத்துப்பிழைகூடப் பார்க்கத் தேவையில்லை; தோளர், தேளர், தோலர் என்று எழுதினாற்கூட "ஓகே". அதன்பின் நீங்கள் புரட்சியாளரே.

ஏற்கனவே புரட்சியாளராக மற்றோரால் அடையாளங்காணப்பட்டவர்களோடு நெருக்கமான தொடர்பைப் பேண வேண்டும். புகைப்படங்கள் எடுத்து வலைப்பதிவில் போடலாம். அவர்கள் எழுதும் எந்த இடுகைக்கும் சென்று முதல் ஆளாக ஆமாம் சாமிப் பின்னூட்டமொன்று போட்டு வைத்துவிடுங்கள். 'தற்காலப் பெரியார்' என அழைக்கப்படும் தமிழச்சியின் வலைப்பதிவு இதற்குச் சிறந்தவோர் இடம்.

அட, இதையே தனிப்பதிவாகப் போட்டுவிடலாம்.

கொழுவி said...

அட, இதையே தனிப்பதிவாகப் போட்டுவிடலாம்.//
வேண்டாம்யா.. அடக்கி வாசிக்க சொல்லி ஆர்டர்.. மற்றது தமிழச்சி பதிவை சுட்டிக் காட்டியுள்ளீர். மரண அடி வாங்கத் தயாராக இருக்கவும்.