Friday, September 12, 2008

பாரிஸ் திவா பகிரங்க மன்னிப்புக் கேட்கிறார்..

சற்றேனும் எஞ்சியிருக்கும் சிறிதளவு மனித நாகரீகத் தன்மையற்றும் வக்கிர புத்தியை நகைச்சுவையென்னும் பெயரில் ஓங்காளித்து வாந்தியெடுத்தும் பதிவு வெளியான ஆரம்பத்திலேயே அதனை பலர் சுட்டிக்காட்டிய போதிலும் குறைந்த பட்ச நேர்மைத் தன்மையின்றி தொடர்ந்தும் பலமணி நேரமாக பதிவைப் பேணியும் என அடிப்படை புரிந்துணர்வு கிஞ்சித்தும் அற்ற நிலையில் பதிவொன்றினை இன்று காலை இட்டு தமிழ்மணத்தில் இணைத்திருந்த பதிவர் பாரிஸ் திவா பதிவர்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பினை கோரி நிற்கிறார்.

கொழுவிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தனது ஆர்வக் கோளாறு நிதானமிழந்தமை குறித்து அவர் விரிவாக எழுதியிருக்கிறார். தவிரவும் சூடான இடுகைக்கொன்றான மேட்டராகவே அவ் இடுகையைத் தான் கருதியது குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பினை அவர் கோருகின்றார். தனது பதிவிலேயே இவ் மன்னிப்பைக் கோர இடங்கொடுக்காத ஈகோ குறித்தும் அவர் கவலையுறுகின்றார்.

மூளையில் சீழ்வடியும் தன் புத்தி சார் குற்றத்தை அவர் ஏற்றுக் கொண்டு தொடர்ந்தும் பதிவுலகில் இயங்க அனுமதியை கோரி நிற்பதாகவும் எழுதியிருக்கிறார்.

21 comments:

ஜோ / Joe said...

//தனது பதிவிலேயே இவ் மன்னிப்பைக் கோர இடங்கொடுக்காத ஈகோ குறித்தும் அவர் கவலையுறுகின்றார்//

அப்போ அதுக்கு பேர் 'பகிரங்க' மன்னிப்பு அல்ல.

கோவி.கண்ணன் said...

//"பாரிஸ் திவா பகிரங்க மன்னிப்புக் கேட்கிறார்.."//

அந்த தலைப்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன், திறந்து பார்க்கவே இல்லை. திறந்து பார்க்காமல் விட்டு இருக்க வேண்டியது பதிவர்கள் அதைச் சூடாக்கி இருக்கிறார்கள், பாரிஸ் திவா மட்டுமல்ல, ஆர்வக் கோளாரால் அந்த பதிவை திறந்து படித்தவர்களும் மூளையில் சீழ் வடியும் புத்தியனர் தான்.

:(

அவர் தனது செயலுக்கு வருந்துவது போலவே கண்டன பின்னூட்டம் போட்டவர்கள் தவிர்த்து ஆர்வமாக படித்தவர்களும் தங்களுக்குள்ளே வெட்கப் பட வேண்டிய ஒன்று.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தவறை உணர்ந்தால் மன்னிப்பு தவறில்லை .//
இத்துடன் சேர்த்து ...
நியூ மரலாஜி,ராசிகள் மோதிரம் பற்றி எழுதினால் ,மோசடி காரர் கள்,என பதிவிடும் சில மூத்த பதிவர்கள்,கண்டபடி நாகரீகமற்ற முறையில் குடி பழக்கம் பற்றி அனுபவித்து பதிவு போடு பவர்களையும்,கண்டபடி பின்னூட்டம் இடுபவர்களையும் மன்னித்து விடலாம்.

Anonymous said...

பாரிஸ் திவா கேப்பில தமிழ்மணத்திலே சைக்கள் இங்கே ஓசையின்றி ஓட்டலாமா?

Tamil Short Film said...

I expected this.

யோசிப்பவர் said...

பதிவு மட்டும் அவர் வலைத்தளத்திள் போட்டுவிட்டு,மன்னிப்பு மட்டும் எதற்கு மறைவாக மடலில் கேட்க வேண்டும்?

வால்பையன் said...

//நாகரீகமற்ற முறையில் குடி பழக்கம் பற்றி அனுபவித்து பதிவு போடு பவர்களையும்//

சதிஷ்குமார்
"குடிபழக்கம்"
நீங்களே குறிப்பிட்டுளீர்கள் அது ஒரு பழக்கம் என்று,
கேரக்டரையும், கேபிட்டையும் குழப்பி கொள்ளாதீர்கள்.
ஒருவர் மனதில் இருக்கும் விசயங்களை தான் எழுத்தாக வடிக்கிறார்.
அது சந்தனமாகவும் இருக்கலாம், சாக்கடையாகவும் இருக்கலாம்.
பாரிஸ் திவாவின் பதிவு இரண்டாவது வகையாக கூட இருக்கலாம்.
அதை கண்டித்தலும் தவறில்லை, முகம் சுளிக்க வைக்கும் எழுத்துக்கள் கண்டிக்க தக்கவைகள் தான், இதில் எந்த வகையில் குடித்தல் பற்றி எழுதுவதும், மூட நம்பிக்கைகளை சாடுவதும் உங்களுக்கு முகம் சுளிக்கவைக்கிறது.

உங்களுடைய எழுத்துகளில் இருந்து நீங்கள் ரொம்ப நல்லவர் என்ற எண்ணம் உங்களுக்குள் ஓடி கொண்டிருக்கிறது. அதை வைத்து நாங்கள் எதுவும் செய்ய போவதில்லை, எங்களுக்கு நல்லவன் போல் நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
குடிப்பது என்னுடைய பழக்கம், அதில் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருந்தால் நானே எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன், அதுவல்லாது மன்னிக்கலாம் என்ற வார்த்தையை உபயோகிக்க நீங்கள் யார்? நீதிபதியா?

முதலில் அந்த வார்த்தையை திரும்ப பெற்று கொள்ளுங்கள்,
விவாதம் கருத்துகளில் மட்டும் இருக்கவேண்டும்.
நான் என்ன குடிக்கிறேன்! என்ன கலர் ஜட்டி போடுகிறேன் என்று பார்த்து அதையும் ஒரு விஷயம் ஆக்க வேண்டிய அவசியமில்லை

சூடாக இருக்கிறேன் உடனடியாக பதில் தேவை

-/பெயரிலி. said...

பாரிஸ் திவா போட்ட பதிவிலே என்ன பிழை?

அஃது அவருடைய கருத்துச்சுதந்திரம். ஒளிவு மறைவாகப் பேசவேண்டிய விசயமா செக்சு?

என்னய்யா? லூசுல விடுங்கப்பா?


2009 இல் தமிழ்மணம்
இத விட்டீங்க இல்லே?


இதுல பின்னூட்டம் என்ன ஏதென்று பார்க்காம அடுத்த சைட்டு என்ன சொல்லுதுன்னு கேக்காம சூப்பரா இளையகவி, வெண்பூ, மங்களூர் சிவான்னு அதர்ம அடி போடுற ஆளையும் வாங்குற ஆளையும் வெச்சுப்போட்டீங்க இல்லே?


அப்போ மட்டும் உங்க எழவு கல்லாச்சாரகாவாலித்தனம் எங்கே போச்சு? கல்லாச்சாரரவுடித்தனமே அசல் தனமென்று நின்றீர்களே? அது ஜோக்கு சோக்கு. Hypocritics!

அவர் நகைச்சுவை/நையாண்டி என்று வகை பிரித்திருப்பாரே? take it easy.

தூ! வெக்கமா இல்லே?


பிகு: பாரிஸ் திவா போட்ட இடுகையை நான் பார்க்கவில்லை. பதிவுகளிலே பார்த்துத்தான் கருத்தினைக் கூற வேண்டுமா? அடிக்கிற இடத்திலே அடிக்கிறவனையும் வாங்கிறவனையும் பார்த்து கூடவே சைட்டாலே தமிழ்மணத்தையும் அடிச்சாத்தான் நிம்மதி.

;-))))

Anonymous said...

//-/பெயரிலி. said...
பாரிஸ் திவா போட்ட பதிவிலே என்ன பிழை?

அஃது அவருடைய கருத்துச்சுதந்திரம். ஒளிவு மறைவாகப் பேசவேண்டிய விசயமா செக்சு?//

antha pathivil kuripita pathivarin peyaruku pathil peyarili matrum avar manaivi peyar inthaalum ivar ippadi thaan solli irupara?

பாரிஸ் திவா said...

நான் காலையில் போட்ட பதிவுக்காக அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்கின்றேன். போதுமா?

-/பெயரிலி. said...

/antha pathivil kuripita pathivarin peyaruku pathil peyarili matrum avar manaivi peyar inthaalum ivar ippadi thaan solli irupara?/
இதுவரை காலமும் தென்குமரி வடவேங்கடம் இடைப்பட்ட ஆரிய திராவிடத்தமிழர்கள் பெயரிலிக்கு இப்படியேதும் சொல்லாமத்தானே இருந்தீர்கள்? இனிமேலே சொல்வதற்கு? ;-)

Anyway, been played for a long time a Michael Dukakis with a Kitty Dukakis for SOME of the Indian Tamil Arya+Dravida bloggers. you do not have to reat the stupid question again.

நான் சொல்வதெல்லாம், இன்னிக்கு அடிச்சுக்குங்க; நாளைக்கு அணைச்சுக்குங்க. அதுக்கு எதுக்குங்க proxy ஒண்ணு கல்லாச்சார காவல்தெய்வம் அய்யனாரா நீங்க ரெண்டு பார்ட்டியும் மொத்துறதுக்கு?

ஒரு நாளைக்கு காமத்தைத் திறந்து பேச விடு என்று குத்துவது; அடுத்த நாள், இப்படியா பச்சையா பேசவிட்டீங்க என்று கத்துவது. ஆக, ஒங்களுக்கு மைலேஜ் வந்தா அவ்ளோவும் போதும்.

செந்தழல் ரவி said...

யோவ் யாருய்யா இந்த பாரீஸ் திவா ?

Anonymous said...

கலாச்சார காவலர்களை எதிர்க்கும், கலாச்சார ரவுடி சுகுணா திவாகர் எங்கே சென்றார் என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்,

இங்ஙனம்.
சுகுணா திவாகர் ரசிகர் நற்பணி மன்றம்,
வாஷிங்கடன் கிளை

குசும்பன் said...

சரியாக சொல்லி இருக்கிறார் ஜோ.

Arun as Butterfly said...

இந்தியாவும் விடுதலைபுலிகளும்

சென்ற வாரம் வழக்கம் போல விடுதலை புலிகளுக்கும் சிங்கள் ராணுவத்திற்க்கும் நடந்த சண்டையில் இரண்டு இந்தியர்கள் காயமாம் .

இலங்கை பிரச்சனை என்பது இடியாப்ப சிக்கல்களை விட மிக மிக சிக்கலானது. கூடவே அங்கு நடக்கும் போராட்டம் அல்லது வன்முறை யாருக்காக என்பதும் படு படு குழப்பமானது..


தமிழ் மக்களுக்காகவா??

அப்ப ஏன் இந்தியாவில் இருந்து பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து செல்லபட்ட கூலி தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து அந்நாட்டின் அந்நிய செலாவாணியை உயர்த்தினார்களே..அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா???

அப்போது எல்லாம் ஏன் சண்டை வரவில்லை??


அந்த தேயிலை தொழிளார்கள் நிலை அடிமைக்கு கீழான நிலை..அவர்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது ..ஓட்டுரிமை உட்பட.

அவர்களை சில பேரை தந்திரமாக இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப இலங்கை அரசாங்கம் முடிவு செய்த போது அதற்க்கு ஒத்து ஓதியது இந்த யாழ்பாண தமிழர்களே ...அல்லது இவர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள்..

இன்று கூட மலையக தமிழர்கள் என்று அழைக்க படும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று தெரியவில்லை..

தமிழ் ஈழம் உருவானால் யாழ்பாண தமிழர்களுக்கு நிகரான மக்கள் தொகையில் இருக்கும் இவர்கள் கதி என்ன??


இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் தோன்றியத்ற்க்கு காரணம் என்வென்றால் இட ஒதுக்கீடு என்ற அரசின் நிலை...அதை நேரம் கிடைத்தாம் பின் பேசலாம்..

ராஜீவ் படுகொலை.. பத்மநாபா முதல் அமிர்ந்தலிங்கம் வரை கொன்ற மாவீரர்கள் இவர்கள்..

இந்திய படைகளை பின்னால் இருந்து தாக்கிய கோழை புலிகள்..

சரி உங்களை தினமும் எவனோ ஒருவன் யார் என்ற முகம் தெரியாமல் சொல்லி கொள்ளாமல் பின்னால் இருந்து உங்களின் நடு மண்டையில் கல் எரிந்தால் என்ன செய்வீர்கள்??

காக்க போன ரானுவத்தை எதிரிகளாக ஆக்கிய மிக பெருமை இந்த புலிகளுக்கு உண்டு. பின்னால் இருந்து தாக்குவது வீரமாம்.. அதுவும் தற்கொலை படை எல்லாம் வீர காவியவாம்

பிரபாகரன் மகன் அலல்து மகளை எல்லாம் இப்படி தற்கொலை படை ஆக விட வேண்டியது தானே.. ஏன் அவர்களுக்கு மட்டும் லண்டனில் சொகுசு வாழ்க்கை??


சரி அப்ப என்னதான் முடிவு??

விடுதலைபுலிகளை அழிக்க யாராலும் முடியாது....உலக தமிழ் அகதிகளின் எண்ணிக்கை பெருக பெருக அவர்கள் பலம் பெருக தான் செய்யும்.. கூடவே நார்வே ஒத்தாசை செய்த கதை நினைவுக்கு வருகிறது. ஒஸ்லோவில் சட்டம் ஒழுங்கு நிலை படு மோசம்

காரணம் யார் .. நம்ம இலங்கை தமிழ் காரர்கள் தான்..

சரி இந்த பிரச்சனை தீர்ந்தா அப்படியே எல்லா அகதி என்று சொல்லி வந்தவங்களை எல்லாம் அனுப்பி வைத்து விடலாம் என்ற தன் உள் நாட்டு குழப்பத்தில் தான் நார்வே உதவிக்கு வந்தது..

பணக்கார அகதிங்க எல்லாம் ஐரோப்பாவுக்கு தான் போறாங்க..ஏழை அகதிங்க இந்தியாவிற்க்கு வராங்க..

ஏங்க சார் ..ஏன் சார் அகதி என்பது உயிர் பிழைக்க தஞ்சம் கேட்பது.. ஏன் உங்க ஆளுங்க எல்லாம் பணக்கார நாடுகளுக்கே உயிரி பிட்சை கேட்க்கறீங்க??? இணையங்களில் சம்ம டக்கரா தமிழ் புலின்னு கலக்கிறீங்க..

ஏங்க அகதின்னு ஓடுறீங்க உங்களூக்கு ஏன் பணக்கார நாட்டுக்கு ஓடுறீங்க,,சோமாலியா எத்தியோப்பியாவிக்கு எல்லாம் அகதியா போக வேண்டியது தானே??இந்த போரை காட்டி புலம் பெயறந்தவர்கள்.. அதாவது வேலை தேடி வெளிநாட்ட்க்கு குறுக்கு வழியில் சென்றவர்கள் இருக்கும் வரை இந்த போர் ஒயாது..

இந்தியாவின் நிலை என்ன?


தமிழ் நாட்டின் தென் பகுதியில்

கல்பாக்கம், கூடங்குளம் தொடங்கி திருவனந்தபுரம் வரை பல நாட்டின் முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களை எல்லாம் அன்னிய நாட்டு அரசுகள் வேவு பார்க்க அனுமதிக்க கூடாது. கூடவும் இந்த இடங்களில் அந்நிய நாடுகளின் பார்வையும் பட கூடாது..

விடுதலைபுலிகளும் சிங்கள் ரானுவமும் இரு தரப்பும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை..

சிங்கள் தரப்பு தொடர்பாக நமக்கு ஏற்கனவே தெரியும்

விடுதலைபுலிகள் தரப்பும் அப்படியே

அவர்களின் தமிழ் துரோக கொலைகள் எல்லாம் நமக்கு தொடர்பில்லாது விட்டு விடுவோம்..

நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியர்கள் வந்தேறிகள் என்று சொன்ன அந்த ஆண்டன் பாலசிங்கதின் வார்தைகளை மறக்க முடியுமா?

மலையக தமிழர்கள் எல்லாரும் யாழ்பாணத்திரின் அடிமைகள் என்று இன்று வரை சொல்லும் யாழ்பாண வாசி தமிழர்களின் நடப்பை திருத்த முடிய்மா?

வடக்கியத்தானை நம்பாதே ( வடக்கித்தியான் - > தமிழ்நாடு ) என்று இன்று வரை சொல்லும் இந்த முதுகில் குத்தும் இலங்கை தமிழர்களை இன்னம் ஒரு முறை நம்பி மோசம் போகலாமா?


சரி அப்ப ராடார்?

ராடார் என்பது ஆள் கொள்ளும் இயந்த்ரம் இல்லை.. வானில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் ஒரு கருவி..

அப்ப அந்த இரண்டு இந்தியர்??

அந்த ராடர்களை அங்கு இருக்கு ஆட்களுக்கு கற்று தர சென்றவர்கள்..

சரி ராடாரை இந்தியா கொடுக்காமல் இருந்தால்?

சீனா கொடுத்துஇருக்கும்.. கூடவே நம் சென்னை வரை எல்லா ஏரியாவையும் அந்த ராடார் வழியாக சொல்லி கொள்ளாமல் கண்காணிப்பார்கள்?

அப்ப என்ன தான் சொல்ல வர?

என்னை பொருத்தவரை நான் முதலில் இந்தியன்..

அதுக்கு அப்புறம் தான் இந்த அல்லைகைகள்..

இவனுங்க கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா ....


இலங்கை பிரச்சனை என்பது எந்த தீர்வும் அற்றது. கண்டுக்காம போ.. அவங்க இரண்டு தரப்பும் சண்டையை ஒரு நாளைக்கும் நிறுத்தாது.. இதில் தமிழ் தமிழர்ன்னு உன்னை நீயே குழப்பிகிட்டா அதற்க்கு யாரும் பொறுப்பில்லை..

SanJai said...

//இதுல பின்னூட்டம் என்ன ஏதென்று பார்க்காம அடுத்த சைட்டு என்ன சொல்லுதுன்னு கேக்காம சூப்பரா இளையகவி, வெண்பூ, மங்களூர் சிவான்னு அதர்ம அடி போடுற ஆளையும் வாங்குற ஆளையும் வெச்சுப்போட்டீங்க இல்லே?//

யாராவது இதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லுங்களேன் .. :((
------
ஜோ சொல்வது சரிதான்...

SanJai said...

////-/பெயரிலி. said...
பாரிஸ் திவா போட்ட பதிவிலே என்ன பிழை?

அஃது அவருடைய கருத்துச்சுதந்திரம். ஒளிவு மறைவாகப் பேசவேண்டிய விசயமா செக்சு?///

ராசா பெயரிலி.. செக்குசு வேணும்னா ஒளிவு மறைவில்லாம பேசறதா இருகக்லாம்.. அடுத்தவன் அந்தரங்கத்தை ஒளிவுமறைவா கூட பேசக் கூடாது...

//அவர் நகைச்சுவை/நையாண்டி என்று வகை பிரித்திருப்பாரே? take it easy.

தூ! வெக்கமா இல்லே?//

உங்க நகைச்சுவை உணர்வுக்கு ஒரு எல்லை இல்லையா? த்தூத்தெறி...

-/பெயரிலி. said...

சஞ்செய்

ஓசைதான் நல்லாக் கேக்குதே.

யேண்டாப்பா ஒங்களுங்களெல்லாம் மூளைய யூசு பண்ணி வஞ்சப்புகழ்ச்சியா சிரிக்கத்தெரியாதா? யோவ், போய் பாருய்யா பின்குறிப்பா என்ன எழுதீருக்கேன்னு. சில முண்டங்க எழுதுரத பேர பாத்து நானும் வாசிக்கிரதுல்ல. ஆனா, பின்னூட்ட ஜால்ரா, அதர்ம அடிவேணூன்னா குடுக்குறேன். என்ன தப்பு, உங்க ஜோட்டாளிங்க பண்ற அதே காரியந்தானே?

ஒங்களுக்கு பொண்ணுங்கள அம்மணமா வுடவேணுமுன்னா, பின்னவீனத்துவம், கல்லாச்சாரரவுடித்தனமுன்னு tag கலாய்ச்சுப் போட்டுக்குவீங்க. ஒங்களுக்கு திடீர்ன்னூ, இணையப்பொண்ணுங்க கிட்ட பாதுகாவலருன்னு பட்டம் வேணுமுன்னா, கலாச்ச்சாரகாவலாளிங்க ஆயிடுவீங்க. இந்த மங்களூரு, வெண்பூ ஜோட்டாளிங்க ஒம்மோட பெயரிலி பதிவுல என்னை குத்துறபோது, நா எழுதுனது பத்தி ஏதாச்சும் வாசிச்சுகிட்டு திட்டிருக்கனும். இல்லே, ஒமக்கு ஜால்ரா போடறுதான் போட்டனுங்க. இன்னிக்கும் அதெ மாதிரி போயி திவாகரு பையன திட்றதுதானே? ஒங்க ஜோட்டாளி பாரிசு திவாகரு பண்றதுக்கு எதுக்குய்யா தமிழ்மணத்துல தமிழச்சி வாலு உமக்கும் இளைய கவிக்கும் காண்டு?


நீரெல்லாரும் தூத்தேரின்னு திட்டுரீரு பாரும்.

now get another 5-min f(l)ame with your monologue

SanJai said...

//ஒங்க ஜோட்டாளி பாரிசு திவாகரு பண்றதுக்கு எதுக்குய்யா தமிழ்மணத்துல தமிழச்சி வாலு உமக்கும் இளைய கவிக்கும் காண்டு?
//
யோவ் லூசு.. பாரிசு திவாகரு என் ஜோட்டளினு உன்கிட்ட எவன்யா சொன்னான்? இந்த மேட்டர்ல நான் எங்கய்யா தமிழ்மணத்தை இழுத்தேன்? இப்போவும் என்னோட கருத்து " இது போன்ற பதிவுகளுக்கு தமிழ்மணம் மட்டுமில்லை.. வேறு எந்த திரட்டியையும் குறை சொல்வது அல்லது பொறுப்பேற்க சொல்வது நியாயமில்லை" என்பது தான்.. நான் தமிழச்சி வாலா?.. ஒடம்பு எப்டி இருக்கு ராசா?

சம்பந்தமே இல்லாம பின்னூட்டம் போடறதெ உனக்கு பொழப்பா போச்சி.. கர்மம்.. உன் பித்தலாட்டத்தை நான் பதிவா போடும் போது அதை மறுக்கக் கூட யோக்கியதை இல்லாத நீ.. இங்க வந்து வாந்தி எடுக்கிறையா?..

//இந்த மங்களூரு, வெண்பூ ஜோட்டாளிங்க ஒம்மோட பெயரிலி பதிவுல என்னை குத்துறபோது, நா எழுதுனது பத்தி ஏதாச்சும் வாசிச்சுகிட்டு திட்டிருக்கனும்//

நீ எழுதினதை தான் நான் பதிவா போட்டிருக்கேனே.. அந்த கர்மத்தை வாசிச்சிட்டு தானே உன் மூஞ்சில காரித் துப்பினாங்க..உன் யோக்கியதைய அப்போவே சொல்லி நீ நல்லவன்னு நிரூபிக்கறது தானே? அப்போ ஓடி ஒளிஞ்சிட்டு இப்போ என்ன வியாக்கியாணம்? போய் வேலைய பாரு போ.. வந்துட்டான்.

SanJai said...

//ஓசைதான் நல்லாக் கேக்குதே.//
உனக்கு இதை சொல்லலைனா தூக்கம் வராதா? இப்டி உளறிக் கொட்றது நீ.. ஆனா எனக்கு சுயமா மூளை யூஸ் பண்ண தெரியாதானு கேக்கற.. கொடுமைடா சாமி. :))

-/பெயரிலி. said...

தம்பி கொழுவி
கொசுத்தொல்லை தாங்கேலாமக் கிடக்கு. வலைக்குள்ளாலையே வந்து காதுக்குள்ளை ட்ர்ருது. கொசுவர்த்திச்சுருள், காய்ந்தவேப்பிலை ஏதாச்சும் கிடைச்சால், இங்கை இல்லாட்டி என்ரை பதிவிலை பின்னூட்டப்பெட்டிக்குள்ளை போடுங்கோவன். தேவைப்படேக்குள்ளை பாவிச்சுக்கொள்ளலாம்.

மெத்தப் பெரிய உபகாரம்

Joy kind